திங்கள், 29 ஏப்ரல், 2019

கற்காலம் முதல் கலர்ஃபுல் காலம் வரை காசு, பணம், துட்டு, மணி கண்காட்சி திருச்சியில் உலகப் பணத்தாள்கள் கண்காட்சி 2019 ஜீன் 14, 15,16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.


கற்காலம் முதல் கலர்ஃபுல் காலம் வரை காசு, பணம், துட்டு, மணி கண்காட்சி

திருச்சியில் உலகப் பணத்தாள்கள் கண்காட்சி 2019 ஜீன் 14, 15,16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.


பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உலகப் பணத்தாள்கள் வரலாற்றினை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் கற்காலம் முதல் கலர்ஃபுல் காலம் வரை காசு, துட்டு , மணி என பணத்தின் பரிமாண வளர்ச்சியினை உலகப் பணத்தாள்கள் , நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் பழம் பொருட்கள் கண்காட்சி மூலம் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், பெமினா ஹோட்டல் அருகே உள்ள ஸ்ரீநிவாசா ஹாலில் 2019 ஜுன் 14 ,15 , 16 தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியினை நடத்துகிறது. பார்வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம்.

காசு, பணத்தாள்கள், காசோலை, வரைவோலை, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, பண வடிவ மற்ற பிட்காய்ன்கள் என பணம் பல வடிவமாற்றங்களில் பயன்பாட்டில் உள்ளது.

கற்காலத்தில் பணம் என்ற வார்த்தை இல்லை. பண்டமாற்று முறை தான் இருந்தது. தற்போதும் பழைய துணிக்கு பாத்திரங்கள் வழங்கும் பண்டமாற்று முறை உள்ளது குறிப்பிடத்தக்கது

பழங்காலத்தில் குன்றிமணி, சோழினைக் கூட நாணயங்கலாக பயன் படுத்தி உள்ளனர். இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இருந்து முத்திரை காசுகள் புழக்கத்தில் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சங்க காலத்தில் தென்னிந்தியாவை ஆண்ட அரசர்களான சேரர், சோழர், பாண்டியர் தங்கள் சின்னங்களான வில், மீன், புலி உள்ளிட்டவற்றை முத்திரைக் காசாக அச்சிட்டனர். சங்க காலத்திற்கு பின் தமிழ் எழுத்துக்களுடன் பல்லவர் காலத்து காசுகளும் அதன் பின் வெளிவந்த காசுகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

அர்ஜென்டினா, அர்மேனியா, ஆஸ்டிரியா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பல்கேரியா, பஹ்ரைன், புரூனே, போஸ்னியா , பகாமாஸ், பங்களாதேஷ், பூட்டான், பெல்ஜியம் , பிரேசில், பர்படாஸ், செக்கோஸ்லோவாகியா, கேமன் தீவு, சைனா, கேப் வெர்டி, கனடா, சைப்ரஸ், கோஸ்டோரிகா, செக் குடியரசு , டென்மார்க், கிழக்கு கரீபியன் தீவு, இங்கிலாந்து, ஜெர்மணி, எத்தியோப்பியா, எகிப்து, பல்க் தீவு, பின்லாந்து, பிரான்ஸ், பிஜு தீவு, கேம்பியா, கிரீஸ், ஜெர்சினி, ஹாங்காங், ஹோண்டுராஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இந்தோனேசியா, ஈராக், இஸ்ரேல், இத்தாலி, ஈரான், ஐஸ்லாந்து, ஜப்பான் , ஜமைக்கா , ஜோர்டான், ஜெர்சி, கஜஹஸ்திஸ்தான், குவைத் , லெபனான், லித்துவேனியா , முராக்கோ, மெக்சிகோ, மாலதீவு, மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, ஓமன், போர்ச்சிகல், பனாமா , பிலிப்பைன்ஸ், கத்தார், ரஷ்யா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, சிரியா, தாய்லாந்து, உகாண்டா உள்ளிட்ட 200 உலக நாடுகளின் பணத்தாள்கள் , நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அதன் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாராம் குறித்து எடுத்துரைக்கின்றனர்.

நாணயக் கண்காட்சியில் பிரிட்டிஷ் இந்தியா நாணயங்களில் வில்லியம் IV (1830-1837) , ராணி விட்டோரியா (1834-1901) , எட்வர்டு VII (1901-1910), ஜார்ஜ் V (1911-1936) , ஜார்ஜ் VI (1936- 1947), உள்ளிட்ட ஆண்டுகளில் வெளியான 1/12, 1/2 , 1, 2, 4,8 அணா, பைஸ், காலணா, ஓட்டை ஒரு பைசா, அரையனா உள்ளிட்ட மதிப்பிலான செம்பு, வெள்ளி, பித்தளை, நிக்கல் உள்ளிட்ட உலோகங்களில் வட்டம், சதுரம், அறுகோண வடிவங்களில் உள்ள நாணயங்கள் காட்சி படுத்தப்படுகின்றன.

குடியரசு இந்தியா பொது பயன்பாடு நாணயங்களும், நினைவார்த்த நாணயங்களும் காட்சிப்படுத்தப் படுகின்றன.

சோமாலியா நாட்டில் வெளியிட்ட கிடார் இசைக்கருவி, கார், விலங்குகள் வடிவிலான நாணயங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன.

மலேசிய நாடு வெளியிட்ட உலகிலேயே பெரிய பணத்தாள் காட்சிப்படுத்தப் படுகின்றன.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகர், பொருளாளர் அப்துல்அஜீஸ், முகமது சுபேர், பாண்டி, கமலக்கண்ணன், சந்திரசேகரன் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்துள்ளனர்.

பள்ளி, கல்லூரி, ஆய்வு மாணவர்கள், பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழம் பொருட்கள் சேகரிப்போர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழங்காலப் பொருட்கள் சேகரிப்பாளர்கள் தங்களது சேகரிப்பினை காட்சிப்படுத்தி விளக்க உள்ளார்கள் என திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

சனி, 27 ஏப்ரல், 2019

திடீரென கசிந்த நடிகை கஸ்தூரியின் நிர்வாணப் படங்கள்!





திடீரென கசிந்த நடிகை கஸ்தூரியின் நிர்வாணப் படங்கள்!

நடிகை கஸ்தூரியின் அரைநிர்வாண படங்களை இணையத்தில் உலா வருகின்றன. ஒரு குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு கஸ்தூரி நிற்பது போல இந்தப் புகைப்படங்கள் உள்ளன.



சென்னையின் மிஸ் மெட்ராஸாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

 இந்நிலையில் ஒரு குழந்தையுடன் கஸ்தூரி டாப்லெஸ் தோற்றத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள், இப்போது வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

’எ பியூட்டிஃபுல் பாடி ப்ராஜெக்ட்’ என்ற திட்டத்திற்காகத்தான் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

இந்த படங்களின் மூலம் பெண்கள் மத்தியில் கர்ப காலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே கஸ்தூரி தனது அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்தது திருப்பூர்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்தது திருப்பூர்


*சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்*

*மாணவிகள் 93.64 சதவிகித தேர்ச்சியும், மாணவர்கள் 88.57 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இது மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவிகித அளவில் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 95.23 சதவிகித அளவில் தேர்ச்சி பெற்று 2-ம் இடமும், பெரம்பலூர் 95.15 சதவிகித அளவில் தேர்ச்சி பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,281 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது*

*அரசு பள்ளி 84.76 சதவிகிதம் தேர்ச்சி*

*பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 84.76 சதவிகதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் குமரி மாவட்ட அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 92.64% பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது*

*கணிதத்தில் அதிக பேர் தேர்ச்சி*

*இயற்பியல் பாடத்தில் 93.89 சதவிகித பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கணித பாடப்பிரிவில் 96.25 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கணிணி அறிவியலில் 95.27 சதவிகிதமும், கணக்கு பதிவியலில் 92.41 சதவிகிதமும், மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வரலாறு - 86.59%, பொருளியல் - 92.22%, மனையியல் - 93.89%, நர்சிங் - 92.57%, புவியியல் - 89.41% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 92.12%, ஆங்கிலத்தில் 93.83%, இயற்பியல் - 93.89%, வேதியியல் - 94.88%, உயிரியல் - 96.05%, தாவரவியல் - 89.98%, விலங்கியல் - 89.44%, வணிகவியல் - 91.23%, கணக்குப்பதிவியல் - 92.41% தேர்ச்சி பெற்றுள்ளனர்*

*மறுகூட்டலுக்கான விண்ணப்பம்*

*விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்கம்  தெரிவித்துள்ளது*

*ஜுன் 6-ம் தேதி முதல் துணைத்தேர்வு*

*தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜுன் 6-ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது*

*2404 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி*

*பிளஸ் 2 தேர்வு எழுதிய 2697 மாற்று திறனாளிகளில் 2404 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்*

*நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்*

*நாளை முதல் 26-ம் தேதி வரை மாணவர்கள் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 24-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது*

*மாவட்ட வாரியான தேர்ச்சி விவரம்;-*

1. திருப்பூர் - 95.37%
2. ஈரோடு - 95.23%
3. பெரம்பலூர் - 95.15%
4. கோயம்புத்தூர் - 95.01%
5. நாமக்கல் - 94.97%
6. கன்னியாகுமாரி - 94.81%
7. விருதுநகர் - 94.44%
8. திருநெல்வேலி - 94.41%
9. தூத்துக்குடி - 94.23%
10. கரூர் - 94.07%
11. சிவகங்கை - 93.81%
12. மதுரை - 93.64%
13..திருச்சிராப்பள்ளி - 93.56%
14. சென்னை - 92.56%
15. தேனி - 92.54%
16. ராமநாதபுரம் - 92.30%
17. புதுச்சேரி - 91.22%
18 தஞ்சாவூர் - 91.05%
19. நீலகிரி - 90.87%
20. திண்டுக்கல் - 90.79%
21. சேலம் - 90.64%
22. புதுக்கோட்டை - 90.01%
23. காஞ்சிபுரம் - 89.90%
24. அரியலூர் - 89.68%
25. தருமபுரி - 89.62%
26. திருவள்ளூர் - 89.49%
27. கடலூர் - 88.45%
28. திருவண்ணாமலை - 88.03%
29. நாகப்பட்டினம் - 87.45%
30. கிருஷ்ணகிரி - 86.79%
31. திருவாரூர் - 86.52%
32. விழுப்பரம் - 85.85
33. வேலூர் - 85.47%
34. காரைக்கால் - 84.47%

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சில முக்கிய அறிவிப்புகள் :

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சில முக்கிய அறிவிப்புகள் :

1. தொழில், சேவை, வேலைவாய்ப்புக்கு புதிய அமைச்சகம்

2. அரசு தேர்வுகளுக்கு கட்டணங்கள் ரத்து

3. புதிய தொழில் முனைவோருக்கு உதவ Enterprise support agency

4. வருமான வரி மற்றும் இதர வரி வசூல் நிறுவனங்களின் அதிகாரங்கள் குறைக்கப்படும்

5. நகர்புற குடிசை வாழ்மக்களை அப்புறப்படுத்த இயலாத படி புதிய சட்டம்

6. நகர் புற குடிசை வாழ் மக்களுக்கு மின்சாரம், குடிநீ்ர், கழிவுநீர் அகற்றம் வழங்க புதிய சட்டம்

7. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 3.0 அமல். நூறு நாள் பணி உறுதி 150 நாளாக உயர்வு

8. வாழ்விட உரிமை சட்டம் (right to homestead act)

9. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 87, 98 ஆகிய விதிகளின் படி சங்கம் அமைக்கவும், ஊதியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தவும் உரிமை

10. சாலை ஓர வியாபாரிகளை காக்கும் சட்டம் 2014 ஐ அமல்படுத்துதல்

11. பயிர் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி

12. பயிர் கடன் தொடர்பான வழக்குகள் சிவில் பிரச்சனை மட்டுமே. கிரிமினல் பிரச்சனை அல்ல

13. வனவாழ் உரிமை சட்டம் 2013 ல் திருத்தம்

14. ESMA சட்டத்தில் திருத்தம்.

15. ரிசர்வ் வங்கிக்கு முழு தனி அதிகாரம்

16. மூன்று வருடங்களக்கு புதிய தொழல்களுக்கு வரி ரத்து

17. வருடம் 72,000 ரூபாய் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு (NYAY)

18. பெண்களுக்கு மத்திய அரசு பணி, போலீஸ் மற்றும் சட்டமன்றம், நாடாளமன்றங்களில் 33% இட ஒதுக்கீடு

19. போலி செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் மீது நடவடிக்கை எடுக்க புதிய விதிகள்

20. மதங்களுக்குள் முரண்பாட்டை தவிர்க்க அனைத்து மத தலைவர்கள் அடங்கிய சமரச குழு அமைப்பு

21. அரசு திட்டங்களை அமல்படுத்தும் போது SC/ST/OBC மக்களுக்கு உரிய பங்கீட்டை உறுதி செய்ய Anti discriminatory law

22. வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து

23. பாண்டிச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து

24. புது டெல்லி கவர்னரின் அதிகாரங்கள் குறைப்பு

25. பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட கல்வி தகுதி ஏதுமில்லை

26. நீதித்துறையில் அனைத்து நிலைகளிலும் SC/ST/OBC பங்கீடு உறுதி செய்ய வழிவகை.

27. தேதிய நீதித்துறை கமிசன் (NJC) அமைப்பு, அதன் வழியே புதிய நிதிபதிகள் தேர்வு (கொலிஜியம் முறை ஒழிப்பு)

28. மூன்றுவருடங்களுக்கு குறைவான தண்டனை பெறும் வழக்குகளில் மூன்று மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள விசாரணை கைதிகள் உடனடியாக விடுவிப்பு

29. ஏழு வருடங்களுக்கு குறைவான தண்டனை பெறும் வழக்குகளில் ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள விசாரணை கைதிகள் உடனடியாக விடுவிப்பு

30. சிறார் திருமணத்தை தடுக்கும் வகையில் கட்டாய திருமண பதிவு

31. Equal opportunity commission

32. இருநூறு பாயிண்ட் முறை இட ஒதுக்கீடு தொடரும்

33. SC/ST/OBC இட ஒதுக்கீட்டின் back log பணியிடங்கள் 12 மாதங்களுக்குள் நிரப்பபடும்

34. பஞ்சமி நிலங்கள் மீட்க்கபடும்

35. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி

36. தனியார் கல்வி நிறுவனங்களில் OBC/SC/ST இட ஒதுக்கீடு

37. காஷ்மீரில் மக்கள் வாழும் இடங்களில் ராணுவ குறைப்பு

38. மனித உரிமைகளின் பொருட்டு காஷ்மீர் ராணுவ சிறப்பு சட்டத்தில திருத்தம்

39. காஷ்மீர் மாணவர்கள், வியாபாரிகளின் மீதான தாக்குதல்கள் தடுக்கப்படும்

40. மத மொழி சிறுபாண்மையினரின் அனைத்து உரிமைகளும் காப்பாற்றபடும்

41. அனைவருக்கும் சுகாதார உரிமை சட்டம் (right to health)

42. சுகாதார நிதி ஒதுக்கீடு GDP யில் 3%

43. கூட்டுதாக்குதல், கொலை (lynching) ஆகியவற்றுக்கு எதிராக சட்டம்

44. இலவச அனைவருக்குமான சுகாதார உறுதி

45. LGBTQIA+ உரிமைகளுக்கு சட்டம்

46. நீட் தேர்வு தேவையில்லை எனும் மாநிலங்களுக்கு ரத்து

47. ஆதார் கட்டாயமில்லை

48. எல்லா குழந்தைகளுக்கும் நோய் தடுப்பூசி உறுதி

49. தனியுரிமை பாதுகாப்பு சட்டம் (personal data protection)

50. Fake news களுக்கு எதிராக நடவடிக்கை

51. Sc/st/obc களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு

52. கைகளால் மலம் அள்ளும் தொழில் முற்றிலும் ஒழிப்பு