ஞாயிறு, 17 மே, 2020

பிக் நியூஸ் 17/05/2020 !

பிக் நியூஸ் 17/05/2020 !

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் பொது முடக்கத்தை மே 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது :பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரிப்பு.

பொது இடங்கள் பணியிடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.
தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,எச்சில் துப்பக்கூடாது - மத்திய அரசு.

அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது - மத்திய உள்துறை அமைச்சகம்.

கர்ப்பிணிகள் , 65 வயதுக்கு மேற்பட்டோர் , 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சகம்.

விமானம், ரயில் சேவை, திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட விதித்த தடை தொடரும் - மத்திய உள்துறை அமைச்சகம்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூட தடை நீட்டிப்பு - மத்திய உள்துறை அமைச்சகம்.

முடிதிருத்தும் கடைகள் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்.
சிவப்பு மண்டலங்களிலும் சலூன்களை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் - மத்திய அரசு.

பேருந்து சேவைகளை அனுமதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம்.

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பேருந்து செல்ல நிபந்தனையுடன் அனுமதிக்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம்.

ஹோட்டல்கள், மதுபான கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீடிக்கிறது - மத்திய உள்துறை அமைச்சகம்.

மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு தடை ஏதும் இல்லை - மத்திய உள்துறை அமைச்சகம்.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம்; தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி - மத்திய உள்துறை அமைச்சகம்.

நிறுவனங்கள் இயன்ற அளவு பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் - மத்திய அரசு.

நீச்சல் குளங்கள், பூங்காக்கள், மதுபான கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீட்டிப்பு - மத்திய அரசு.

அனுமதிக்கப்பட்ட கடைகளில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை; தனிமனித இடைவெளி அவசியம் - மத்திய அரசு.

உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை நீட்டிப்பு டோர் டெலிவரி செய்ய அனுமதி - மத்திய அரசு.

தற்போதைக்கு டிக்கெட் முன்பதிவு இல்லை - ஏர் இந்தியா நிறுவனம்.

கேரள மாநிலத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - முதல்வர் பினராயி விஜயன்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 74 லிருந்து 78 ஆக அதிகரிப்பு.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் கடந்த 14 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று பதிவாகாத நிலையில் 46 பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது - சென்னை மாநகராட்சி.

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் - தமிழக முதல்வர் பழனிசாமி.

25 மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு இ-பாஸ் தேவையில்லை.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்றுவர போக்குவரத்து அனுமதி - முதல்வர் பழனிசாமி.

அரசுப் பணிகளுக்காக பேருந்தில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே செல்ல அனுமதி - தமிழக அரசு.

தனியார் தொழிற்சாலை பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே செல்ல அனுமதி - தமிழக அரசு.

வேன்களில் 7 பேர், பெரிய வகை கார்களில் 3 பேர், சிறிய கார்களில் 2 பேர் செல்ல அனுமதி - தமிழக அரசு.

சென்னை நீங்கலாக 100 நபர்களுக்கு குறைவாக உள்ள தொழிற்சாலைகள் முழு பணியாளர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை - தமிழக முதல்வர்.

பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை சிறப்பு ரயில் மூலம் படிப்படியாக அழைத்துவரவும் நடவடிக்கை - தமிழக முதல்வர்.

+2 விடைத்தாள் திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு அளிக்கப்படுகிறது - தமிழக முதல்வர் பழனிசாமி.

12 மாவட்டங்களில் திரையரங்குகள், ஜிம், கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியங்கள் செயல்பட தடை.
திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போதுள்ள நடைமுறைகள் தொடரும் - தமிழக முதல்வர் பழனிசாமி.

100 நாள் வேலைத்திட்டத்தில் 100 சதவிகித பணியாளர்களை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி.

தமிழகத்தில் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர டாக்ஸி, ஆட்டோவுக்கு அனுமதி - தபிழக முதல்வர் பழனிசாமி.

தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தத் தளர்வும் கிடையாது - தமிழக அரசு.

கொரோனா பாதிப்பால் ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பெண்கள் உயிரிழப்பு.

சிவப்பு மண்டல பகுதிகளிலும் நாளை முதல் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படும் - மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சய் பட்டாச்சாரியா.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் சிறை கைதிகள் 7,200க்கும் மேற்பட்டோர் விடுதலை.

ஆம்பன் புயல் நாளை வடக்கு ஒடிசாவில் கரை கடக்கிறது.

திங்கள், 4 மே, 2020

பக்தர்களின்றி நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்

பக்தர்களின்றி நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்

இந்துசமய அறநிலையத்துறை இணையதளம், யூடியூப், ஃபேஸ்புக் நேரலை மற்றும் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்ட திருக்கல்யாண நிகழ்வை வீடுகளில் இருந்தே பார்த்த பக்தர்கள், மீனாட்சி, சுந்தரேஸ்வரரை வணங்கினர்.


மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்வு பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. எனினும், பக்தர்கள் காணும் வகையில் சமூகவலைதளங்களில் நேரலை செய்யப்பட்டது.


மதுரையே குலுங்கும் அளவிற்கு நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு தனிச் சிறப்பு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், திருக்கல்யாண நிகழ்வை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் பாண்டிய நாட்டை நோக்கி படையெடுப்பர்.
திருக்கல்யாணத்திற்கு, மீனாட்சியின் உடன்பிறப்பான கள்ளழகர் அழகர் மலையில் இருந்து மதுரை வந்து, ஆற்றில் இறங்குவதை காண, வைகையில் மக்கள் வெள்ளம் கரைபுரளும்.


வருடமெல்லாம் உழைத்துக் களைத்த மக்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் விழாவான சித்திரை திருவிழா, கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.


ஆனால், மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் திருக்கல்யாண நிகழ்வு நடைபெறும் என்றும் அது நேரலையில் ஒளிபரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.


இதில் சிவாச்சாரியார்கள், மங்கள வாத்தியக் கலைஞர்கள், பாதுகாப்புப் பணிக்காக 3 போலீசார் உள்பட 42 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.


சன்னதியின் முதல் பிரகாரத்தில் உள்ள சேத்தி மண்டபத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வர் கல்யாண கோலத்தில் எழுந்தருளினர். வழக்கத்திற்கு மாறாக முதல்முறையாக பக்தர்களின் ஆரவாரமின்றி திருக்கல்யாணம் நடைபெற்றது.


இந்துசமய அறநிலையத்துறை இணையதளம், யூடியூப், ஃபேஸ்புக் நேரலை மற்றும் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்ட திருக்கல்யாண நிகழ்வை வீடுகளில் இருந்தே பார்த்த பக்தர்கள், மீனாட்சி, சுந்தரேஸ்வரரை வணங்கினர்.

வெள்ளி, 1 மே, 2020

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை


கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை.

*பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*

*சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் - மத்திய அரசு.*

*தமிழகம: சிவப்பு, பச்சை, ஆரஞ்ச்*

*தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.*


*🟥சிவப்பு நிற மண்டலங்கள்:*

1. சென்னை

2. மதுரை

3. நாமக்கல்

4. தஞ்சாவூர்

5. செங்கல்பட்டு

6. திருவள்ளூர்

7. திருப்பூர்

8. ராணிப்பேட்டை

9. விருதுநகர்

10. திருவாரூர்

11. வேலூர்

12.காஞ்சிபுரம்

*🟧ஆரஞ்சு நிற மண்டலங்கள்:*

1. தேனி

2. தென்காசி

3. நாகப்பட்டினம்

4. திண்டுக்கல்

5. விழுப்புரம்

6. கோவை

7. கடலூர்

8. சேலம்

9. கரூர்

10.தூத்துக்குடி

11. திருச்சிராப்பள்ளி

12. திருப்பத்தூர்

13. கன்னியாகுமரி

14. திருவண்ணாமலை

15. ராமநாதபுரம்

16. திருநெல்வேலி

17. நீலகிரி

18. சிவகங்கை

19. பெரம்பலூர்

20. கள்ளக்குறிச்சி

21. அரியலூர்

22. ஈரோடு

23. புதுக்கோட்டை

24. தருமபுரி

*🟩பச்சை நிற மண்டலங்கள்:*

1. கிருஷ்ணகிரி

.இந்தியா முழுவதும் உள்ள பகுதிகள்




    *STAY HOME 🏡 STAY SAFE*

     *●❯────────────────❮●*

.      

விரிவான தகவல்: கட்டுப்பாடுகள் என்னென்ன?

 விரிவான தகவல்: கட்டுப்பாடுகள் என்னென்ன?

இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.

சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்.

முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது.

மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.

பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது.

நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை நடத்துவதற்கு அனுமதி.

கிராமப்பகுதிகளில் அனைத்து வகையான சிறு கடைகளையும் திறப்பதற்கு அனுமதி.

தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுடன் நகர்புறங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்- மத்திய அரசு.

சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும்.

ஏணைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும்- மத்திய அரசு.

சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்.

சிவப்பு மண்டலங்களில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி- மத்திய அரசு.

கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்.

மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.

4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம்- மத்திய அரசு.

பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை.

பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துங்களை இயக்க அனுமதி- மத்திய அரசு.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவும் 2 வாரம் தடை நீட்டிப்பு; சரக்கு வாகனங்கள் இயங்கலாம்; எந்த மாநில அரசும் தடை செய்யக் கூடாது- மத்திய அரசு.