திங்கள், 18 பிப்ரவரி, 2019

அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது..ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ


அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது..* *ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ!

டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதிட்ட அந்த 45 நிமிடம்தான், இந்த வழக்கின் தீர்ப்பையே மொத்தமாக புரட்டிப்போட்டு இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க முடியாது, தமிழக அரசின் முடிவு சரிதான், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு பலரும் ஆதரவு அளித்து இருக்கின்றனர்.

இந்த வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதிட்டது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் மட்டுமில்லாமல் தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வைகோ இந்த வழக்கில் தீவிரமாக வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


*மூடல்*

தூத்துக்குடியில் கடும் எதிர்ப்பிற்கு இடையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் ஒரு மனுதாரராக வைகோ தரப்பும் வாதம் செய்தது. பல முக்கிய ஆதாரங்களை வைகோ தரப்பு இதில் அளித்தது.

*ஆனால் தீர்ப்பு*

ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வைகோவும் இன்னொரு மனுதாரராக மனுதாக்கல் செய்தார்.

*சுவாரசியம்*
*மிக சுவாரசியம்*

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக வைகோ சேர்த்துக் கொள்ளப்பட்டதே சுவாரசியமான விஷயம் ஆகும். உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிங்க்டன் பாலி நாரிமன், வைகோவை இதில் மனுதாரராக சேர்ந்து கொண்டது ஒரு சுவாரசியமான நிகழ்வாகும். வைகோவின் மனுவை பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிங்க்டன் பாலி நாரிமன் வைகோவை பார்த்து சில கேள்விகளை எழுப்பினார். அதில்,

*நீதிபதி ரோஹிங்க்டன்:* நீங்கள் யார்?

*வைகோ:* நான் வைகோ.

*நீதிபதி ரோஹிங்க்டன்:* நான் அதை கேட்கவில்லை, இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

*வைகோ:* ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளேன்.


*நீதிபதி ரோஹிங்க்டன்:* சரி, உங்களுக்காக யார் வாதிட போவது.

*வைகோ:* நான்தான் இதில் மனுதாரர், எனக்காக நானே வாதாட போகிறேன், என்று வைகோ கூறினார். அதன்பின் வைகோவின் மனுவும் நேரடியாக, உடனடியாக இதில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

 
*மோசம்*

என்ன நடக்க இருந்தது
இந்த வழக்கின் விசாரணையின் போது, வைகோ வாதம் வருவதற்கு முன்பே உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக பேசியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு அளிக்க வேண்டும். ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பராமரிப்பு பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதனால் கடைசியில் தீர்ப்பும் கூட ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

*வைகோ கோபம்*

ஆனால் நீதிமன்றத்தில் அப்போதே வைகோ கோபமாக எழுந்து பேசினார், இது தவறான முடிவு. இதை ஏற்க முடியாது. நான் இன்னும் என்னுடைய தரப்பு வாதங்களை வைக்கவில்லை. நான் பேசிய பின் இந்த முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு 45 நிமிடம் பேச அனுமதி வேண்டும் என்றார். இதனால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, வைகோ பேச இன்னொரு நாள் அனுமதி அளிக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டிற்கு மின் இணைப்பு அளிக்கும் உத்தரவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

*வைகோ 45 நிமிடம்*

அதன்பின் வைகோ செய்த வாதம்தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடாமல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விசாரணையில் சரியாக அவர் சொன்னது போலவே 45 நிமிடங்கள் பேசினார். அதில் அவர் பேசிய சில விஷயங்கள்,
1. திருப்பூர் சாயப்பட்டறை வழக்கு. நொய்யல் ஆறு வழக்கு, வேலூர் தோல் தொழிற்சாலை வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறினார்.
2. நீர்நிலைகள் மாசாவதை ஆதாரங்களுடன் சமர்பித்தார்.
3. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எதை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை என்பதை பட்டியலிட்டார்.
4. விசாரணை கமிட்டி அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுமதி கிடையாது. ஆலை குறித்து விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையை ஏற்க கூடாது, என்றார்.
5. தமிழக அரசு இதில் முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறினார்.

இப்படி 20க்கும் மேற்பட்ட புகார்களை அந்த 45 நிமிடம் வைகோ பட்டியலிட்டார்.

நன்றி ஒன் இந்தியா Oneindia

சனி, 16 பிப்ரவரி, 2019

இதை எழுத கிட்ட தட்ட ஒரு நாள் ஆகிவிட்டது , கண்டிப்பாக நிறைய விடுபட்டு இருக்கும் , முடிந்தவரை திரட்டி இருக்கிறேன்

இதை எழுத கிட்ட தட்ட ஒரு நாள் ஆகிவிட்டது , கண்டிப்பாக நிறைய விடுபட்டு இருக்கும் , முடிந்தவரை திரட்டி இருக்கிறேன்

இதை போல 60 வருடம் ஆண்டவர்கள் பட்டியல் தரட்டும் ,இந்த 5  ஆண்டுகளுடன்  compare பண்ணி பார்த்து விடுவோம்

1.தமிழக மீனவர் சுடப்படவில்லை,
2.இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் இல்லை,
3.ஆளில்லாத ரயில்வே கேட் இல்லை,
4.மின்சாரம் இல்லாத கிராமம் இல்லை,
5.16 மணி நேர மின் தடை இல்லவே இல்லை,
6.5 வருடமாக ஊழல் இல்லை,
7. விலைவாசி உயர்வு இல்லை,
8. 17 விதமான வரிகள் இல்லை,
9.போலி சிலிண்டர் இல்லை,
10. போலி ஆசிரியர்கள் இல்லை, இன்னும் பல இல்லைகள்
11.நக்சல் தொந்தரவு குறைந்தது,
12.தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லை தாண்டுவதற்கு உயிருடன் இல்லை,
13.ரயில் விபத்துக்கள் குறைவு,
14.சாலைகள் அமைப்பது வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு,
15. நீர்வழி சாலைகள் அமைப்பு,
16.கங்கை சுத்தமானது,
17. கும்ப மேளா அருமையாக நெரிசல் இல்லாமல் நடக்கிறது,
18.பாக்கிஸ்தான் பணத்துக்கு பல நாடுகளிடம் கையேந்துகிறது,
19. வீடு கட்ட கடன் சுலபமாக குறைந்த வட்டியில் கிடைக்கிறது,
20 மருந்துகள் விலை மிக  குறைவு,
21. இதய வால்வு, செயற்கை மூட்டு போன்றவை விலை மிக குறைவு, 22.மருத்துவ காப்பீடு 5 லட்சத்திற்கு,
23.5+4.5 லட்சம் வரை வருமான வரி இல்லை,
24. பயிர் காப்பீடு, பயிர்களுக்கான குறைந்த பட்ச விலை 1.5 மடங்காக அதிகரிப்பு,
25. இதுவரை இல்லாத அளவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வட கிழக்கு மாநிலங்களுக்கு விமான மற்றும் நெடுச்சாலை இணைப்புகள்,
26. தமிழ்நாட்டுக்கு AIIMS, மற்றும்
27.நாடு முழுவதும்,. பல புதிய IIT மற்றும்  IIM கள்,
28.கோதாவரி- காவிரி இணைப்பு,
29.காவிரி ஆணையம் அமைப்பு,
30.பெரியார் அணை நீர் இருப்பு உயரம் அதிகரிப்பு,
31. 2 ஆண்டுகளில் APJ கலாமுக்கு நினைவிடம் அமைப்பு,
32. முகம் தெரியாத பலருக்கு பத்ம விருதுகள்,
33. கந்து வட்டியில் இருந்து விடுபட வங்கியில் மூன்ற  கடன் திட்டங்கள்,
34.மோடியின் தொகுதியான காசியின் சுத்தம்,
35.அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின்  உயர்வை கட்டுக்குள் வைத்து இருப்பது,
36.இந்திய ரூபாயில் வெளிநாடுகளுடன் கச்சா எண்ணெய் வணிகம்,
37.வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு,
38.உலகத்தின் 5 வது பெரிய பொருளாதரமாக வளர்ச்சி,
39. ஊழல் நாடுகள் பட்டியலில் முன்னேற்றம்,
40.தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் முன்னேற்றம்,
41. GDP கிட்ட தட்ட 8 சதவீதம்,
42.OROP அமல்படுத்தியது,
43.பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்து இருப்பது,
44.அனைத்து ஊழல் வாதிகளையும் ஒன்று சேர்த்து இருப்பது,
45.ஆயுத பேரத்தில் இடைத்தரகர்களை ஒழித்தது,
46.உள்நாட்டில் ஆயுத, ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவிப்பது,
47.இடைத்தரகர்களை நாடு கடத்தி கொண்டு வருவது,
48.சுவிஸ் வங்கியில் விபரங்களை பெற்றது,
49.தினமும் 18 முதல்  20 மணி நேரம் உழைப்பது,
50.தமிழ்நாட்டுக்கு Defence corridor அமைத்து கொடுப்பது,
51.8 வழி சாலை,
52.அனைத்து நாடுகளிடமும் நட்பு பாராட்டுவது,
53.இலங்கை தமிழ் பகுதிக்கு சென்றது,
54.அங்கே ஆட்சி மாற்றம் ஏற்பட செய்தது,
55.இலங்கை தமிழர்க்கு வீடு கட்டி கொடுத்தது,
56.கள்ள நோட்டை ஒழித்தது,
57. NEET மூலம் ஏழையும் மருத்துவம் படிக்க வழி செய்தது,
58 .GST   மூலம் விலைவாசி கட்டுக்குள் வைத்து
59. நோ.2 வியாபாரத்தை படி படியாக ஒழித்து வருவது,
60.பணமதிப்பு இழப்பு  கொண்டு வந்தது,
61.ஏழைகளுக்கு 10 %இட ஒதுக்கீடு
62..ராணுவத்துக்கு நவீன தளவாடங்கள்,
63.குண்டு துளைக்காத ஆடைகள்,
64.புதிய ஹெலிகாப்டர்கள்,
65.புதிய விமானங்கள்,
66.ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள்,
67.குண்டு துளைக்காத தலை கவசங்கள்,
68.ரயில் 18 , 180 km வேகத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில்,
69.ஜப்பான் உடன்  இணைந்து புல்லட் ரயில் திட்டம்,
70.அனைவருக்கும் இன்டர்நெட் இணைப்பு, கிராமங்கள் வரை,
71.பல பாலங்கள் மற்றும் குகை பாதைகள் மூலம் நேர, பண விரையம் தவிர்ப்பு,
72.மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் நீக்கம்
73.இதனால் லஞ்சம் தவிர்ப்பு,
74.நாட்கணக்கில் தாமதம் தவிர்ப்பு,
75.ஓட்டுனர்களுக்கு வருடத்திற்கு 100 நாள் சேமிப்பு,
76.தேய்மானம் குறைவு,எரிபொருள் சேமிப்பு,
77.28 % gst இல் 10 க்கும் குறைவான பொருட்கள்,
78.அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் 12 % உள்,
79.5 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள்,
80.அனைத்து அரசாங்க உதவியும்  நேரடியாக வங்கியில் செலுத்துவதால் பல ஆயிரம் கோடி சேமிப்பு,
81.பங்கு சந்தை உயர்வு,
82.தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கிட்ட தட்ட 100 %கழிப்பறை வசதி
83.மக்களின் சுகாதாரம் மேம்பட்டது,நோய்கள் குறைந்தது,
84.காஷ்மீரில் மாவட்டங்கள் தீவிரவாதம் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டது
85.எதிர் கட்சியின் முலாயம் சிங் மீண்டும் மோடியின் ஆட்சி வேண்டும் பாராட்டினார், பல பன்னாட்டு அமைப்புகளும் ,உலக தலைவர்களும் ,பல உள்நாட்டு நற்பெயர் கொண்ட தொழில் அமைப்புகளின் தலைவர்களும் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்றுதான் சொல்கின்றனர்
86.Insolvency சட்டத்தில் மாற்றம் மூலம் பல பெரிய கடன்கள் வசூல்,
87.இலங்கையில் தூக்கில் இருந்து தமிழக மீனவர்கள் மீட்பு
88.வெளியுறவு துறை மூலம் பல நன்மைகள்,அப்படி ஒரு துறையில் இப்படி எல்லாம் செயல்படமுடியும் என்று காட்டினார்கள்
89.பல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல வகையில் எதிர்பாராத மீட்பு பணிகள்,பாஸ்போர்ட் சேவைகள்,விசா சேவைகள்,இன்னல்களில் இருந்த்து மீட்பு
90.பாஸ்போர்ட் வாங்கும் வழிகள் எளித்தாக்கப்பட்டது
91.விண்வெளி இஸ்ரோ மூலம் பல செயற்கை கோள்கள் ஏவப்பட்டது
92.இந்தியாவின் எல்லைகள் எப்போதும் கண்காணிக்கப்பட்டது
93.இந்தியா எல்லையில் ஊடுருவலை தடுக்க நவீன கண்காணிப்பு வேலிகள் அமைப்பு
94.பங்களாதேஷ் உடனான பல ஆண்டு எல்லை பிரச்சனைக்கு தீர்வு
95.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் மற்ற தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்று கொடுக்க மறுத்து கூட்டணியை இழந்தது
96.சீனாவை விட அந்நிய முதலீட்டில் முன்னணி வகிப்பது
97.தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் ஸ்மார்ட் நகரங்கள்
98.தமிழ்நாட்டுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு
99.18 % இருந்த உணவக வரியை 5% ஆக்கியது
100.காங்கிரஸ் வாங்கிய கடனை வட்டியுடன் 200000  கோடி திருப்பி செலுத்தியது
101.சிறு குறு விவசாயிகளுக்கு  வருடம் 6000  ரூபாய்  உதவித்தொகை
102 .கணக்கு காண்பிக்காத 1000  கணக்கான NGO  உரிமங்கள் ரத்து
103 .லட்சக்கணக்கான ஷெல் கம்பெனிகள் அழிப்பு
104 .59  நிமிடத்தில் 10000000  வரை கடன் திட்டம்
105 .கட்டற்று இருந்த மத மாற்றம் இப்போது கட்டுக்குள் இருக்கிறது
106 .VVIP கார்களில் பொருத்தப்பட்ட சிவப்பு விளக்குகள் அகற்றம்
107 .கிட்ட தட்ட அனைவருக்கும் வாங்கி கணக்கு (குறைந்த பட்ச தொகை தேவை இல்லாதது )
108 .தனி நபர் வருமானம் 1 .17 லட்சமாக அதிகரிப்பு
109 .பினாமி சொத்து சட்டம்
110 .உள்நாட்டு பாதுகாப்பில் ௦ பொது மக்கள் உயிரிழப்பு என்ற சாதனை
111 .மத கலவரங்கள் கட்டுக்குள்
112 .முத்தலாக் தடை சட்டம் , மற்ற கட்சிகள் ஒத்துழைப்பு இல்லை
113 .தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரில் ரயில் பாதை அமைக்க அனுமதி
114 .LED விளக்குகளின் விலை மிக குறைவு
115 .உபயோகப்படுத்தாத பல விமான நிலையங்கள் மீண்டும் போக்குவரத்தில் இணைப்பு
116 UDAN  திட்டத்தில் விமான கட்டணம் குறைப்பு
117 .அமைச்சரவை சகாக்கள் யார் மீதும் குற்ற சாட்டு இல்லை
118 .  பெண்களுக்கு அமைச்சரைவயில் முக்கிய பதவிகள் ,
119 .சூரிய மின் உற்பத்தியில் சாதனை
120 .நிலக்கரி இறக்குமதி குறைக்கப்பட்டு ,உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு
121 . மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு எப்பபோதும் நல்ல நிலையில்
122 .திருக்குறள் நாடு முழுவதும் பாடத்திட்டத்தில் இணைப்பு
123 .மீன் வளத்துக்கு தனி அமைச்சரவை
124 .ரயில் பயண கட்டணம் ஏற்றப்படவில்லை
125 .தமிழ் நாட்டில் கோவை -பெங்களூரு இரண்டு அடுக்கு ரயில் ,மதுரை சென்னை பகல் நேர ரயில் போன்ற பல ரயில்கள்
126 17  வருடமாக விடுமுறை எடுக்காத ஒரே தலைவர்
127 வெளி நாட்டு பயணத்தின் போது ஜால்ரா போடும் பத்திரிக்கையாளர்களை அழைத்து செல்லாத ஒரே தலைவர்
128 .வெளிநாட்டு பயணங்களில் விமானத்திலேயே உறங்கி நேரத்தையும் செலவையும் குறைத்தது
129 .விவசாயி விற்பனையில் படிப்படியாக இடைத்தரகர் ஒழிப்பு E - NAM  திட்டம் 
130 .திருப்பூருக்கு பல ஆண்டாக கேட்ட ESI மருத்துவமனை
131 பல அரசாங்க மருத்துவ மனைகள் தரம் உயர்வு
132 சென்னை விமான நிலைய விரிவாக்கம்
133 கோவை விமான நிலைய விரிவாக்கம் ,நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாக அறிகிறேன்
134 கோவைக்கு வெளி சுற்று வட்ட சாலை
135 முந்த்ர திட்டத்தில் கடந்த 7  தேதி வரை 15,73,78,344 கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன
136 மின்னணு பண  பரிவர்த்தனை ஊக்குவிப்பு ,BHIM  செயலி அறிமுகம்
137 மாஸ்டர், விசா   அட்டைகளுக்கு இணையாக RUPAY  அட்டை ஊக்குவிப்பு
138 .மிக முக்கியமாக பாக்கிஸ்தான் மற்றும் பர்மா வில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக துல்லிய தாக்குதல் (surgical strike )
139 .சிறுபான்மையினர் பாதுகாப்பு
140 GST யில் 40  லட்சம் வரை விற்று முதல் உள்ளவர்க்கு விலக்கு
141 முறை சாரா(un  organised  sector  )  தொழில் செய்யும் தொழிலாளர்க்கும் ஓய்வூதிய திட்டம்
142 பெண் தொழில் முனைவோர் அதிக ஊக்குவிப்பு
143 தட்டுப்பாடு இல்லாத உர விநியோகம்
144 UREA வில் வேப்பை எண்ணெய் கலந்து தவறான உபயோகம் தவிர்ப்பு
145 இதுவரை அமைக்கப்படாத NATIONAL WAR MEMORIAL  டெல்லியில் அமைப்பு
146 குடும்பத்தில் ஒருவர் கூட அரசியல் பதவியிலோ ,அரசாங்க பதவியிலோ இல்லை , அரசாங்க வேலையில் கூட மிகவும் குறைந்த அந்தஸ்தில் இருப்பதாக அறிகிறேன்
147 இந்தியா ரயில்வே ரயில் பெட்டி தொழிற்சாலை 17 வருடமாக தயாரித்த பெட்டிகளின் அளவை கடந்த 2  ஆண்டுகளில் கடந்து உள்ளது
148 . Tax free Gratuity limit increase to 20 Lakhs from 10 Lakhs
149 பெண்களுக்கு 26  வாரங்கள் பேறு கால விடுப்பு
150 ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக வடிவமைப்பு
151 உலக அளவில் 2  வது மிக பெரிய எக்கு உற்பத்தியாளர் என்ற அந்தஸ்து
152 ஈரானில் சப்பார் துறைமுகம்
153 சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றம்
154 உலகத்தில் பெரிய சிலையாக சர்தர் வல்லபாய் படேல் சிலை அமைப்பு
155 மனித உரிமை கவுன்சில் தேர்தலில் 193  ஓட்டுக்கு 188  வாங்கி வெற்றி
156 அண்ணா பல்கலைக்கழகம் வேந்தர் போன்றவைகளில்  சூரப்பா போன்ற கல்வியாளர்கள் நியமனம்
157 L & T  மூலம் HOWITZER  பீரங்கிகள் உற்பத்தி செய்து ராணுவத்தில் இணைப்பு
158 எந்த மிரட்டலுக்கும் பயப்படாத அரசாங்கம் ,உதாரணம் ௧.தங்க நகை உற்பத்தியாளர் கடை அடைப்பு  2 .லாரிகள் வேலை நிறுத்தம் 3 அய்யாக்கண்ணுவின் உள்நோக்கம் கொண்ட ஆடை அவிழ்த்து போராட்டம்
159 ஹாஹாஹா மறந்துட்டேன் தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு !!!!
160 தீவிரவாதம் இல்லா நாடு என்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வு ,பல வேலை வாய்ப்புகள்  பெருக்கம்
161  காடுகளின் பரப்பு 10  ஆயிரம் சதுர கிலோமீட்டர் க்கு மேல் அதிகரிப்பு
162 பரோடாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் ஆஸ்திரேலியா ஏற்றுமதி
163 சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று பாகுபாடு இல்லாத திட்டங்கள் மற்றும் வளர்ச்சி

செய்ததை மட்டுமே எழுதி இருக்கிறேன்,விடுப்பட்டதை சொன்னால் சேர்க்கிறேன்,

நீ ஏன் செய்யவில்லை என்று கேட்கவில்லை,செய்ததை சொல்லியிருக்கிறேன் ,நெகடிவ் அரசியல் செய்ய விரும்பவில்லை நல்லதை சொல்லுவோம்

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் : தமிழ்நாட்டில் மொத்த கருவுறு விகிதம் 1.6 ஆக குறைவு....


2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் : தமிழ்நாட்டில் மொத்த கருவுறு விகிதம் 1.6 ஆக குறைவு....

சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 6 முறையும், ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட் இதுவாகும். அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக பட்ஜெட்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-29-ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்;

* விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்

* தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.1,42,267 ஆக உயர்வு

* மக்கள் பங்களிப்புடன் ஏரிகளை புணரமைக்க ரூ.300 கோடி

* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு

* புதுமை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

* நடப்பாண்டில் வரி வருவாய் 14 சதவீதம் அதிகரிக்கும் என எதிரப்பார்ப்பு

* நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,315 கோடி

* நகராட்சித்துறை, குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ஒதுக்கீடு

* 2018-19-ல் தமிழக அரசு வாங்கிய 44,066.82 கோடி

* தமிழக அரசின் கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடியாக உயர்வு

* 2019-20-ல் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டம்

* கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம்

* சென்னையில் ஆற்றோரம் வசிப்போருக்கு 38,000 வீடுகள் கட்ட திட்டம்

* உலக வங்கி உதவியுடன் 4,647 கோடி ரூபாயில் வீடுகள் கட்டப்படும்

* மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் ரூ.22,815 கோடி


* அரசின் நிதி பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

* ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டப்படும்

* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

* கஜா புயல் நிவாரணமாக ரூ.2,361.41 கோடி வழங்கப்பட்டு்ளது

* ஜெர்மன் வங்கி உதவியுடன் 2,000 பேட்டரி பேருந்துகள் வாங்கி இயக்கப்படும்

* சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் முதல்கட்டமாக 500 பேருந்துகள்

* சென்னை மெட்ரோ ரயில் மாதவரம் - கோயம்ேபடு - சோழிங்கநல்லூர் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவி

* மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்

* கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவக்கப்படும்

* ரூ.2,000 கோடியில் சென்னையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்

* அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு ரூ.1000 ஒதுக்கீடு

* ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்

* ரூ.2,350 கோடியில் 500 மெகாவாட் கடலாடி, மிக உய்ய சூரிய பூங்கா திட்டம்

* முதியோர் உதவித்தொகை, இலவச வேட்டி, வேலை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு

* ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

* ஸ்ரீபெரும்புதூர் ஒரத்தூரில் அடையாறு உபநதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்

* குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்று படுகை மறு சீரமைக்கப்படும்

* சிதம்பரம் வட்டம் பேரம்பட்டு அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு நீரொழுங்கி கட்டப்படும்

* பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைக்கப்படும்

* நில ஆதாரங்களை முறையாக திறம்பட பயன்படுத்த மாநில நலப்பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்படும்

* ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா

* தேசிய ஊராக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.349.4 கோடி ஒதுக்கீடு

* வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.5 கோடி ஒதுக்கீடு

* ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க  ரூ.172 கோடி ஒதுக்கீடு

* வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,031.5 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1,142 கோடி ஒதுக்கீடு

* தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 7,896-ல் இருந்து 5,198 ஆக குறைப்பு

* 2019-20-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 2,000 சூரிய பம்ப் செட்டுகள் வழகங்ப்படும்

* ரயில்வே மேம்பால பணிகளுக்கு வரும் ஆண்டில் ரூ.726.6 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டுகளுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு

* பள்ளி கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு

* தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு

* பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது

* இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு

* நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு

* ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்க ரூ.2,791 கோடி ஒதுக்கீடு

* முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு

* மத்திய அரசின் திட்டங்களில் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டது

* நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததால் மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகரிப்பு

* சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 9,975 பேர் பணியமர்த்தப்படுவர்

* வேளாண்துறைக்கு ரூ.10,550 கோடி நிதி ஒதுக்கப்படும்

* பயிர்க்கடன் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு

* கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.1,252 கோடி ஒதுக்கீடு

* பால் வளத்துறைக்கு ரூ.258 கோடி ஒதுக்கீடு

* மீனவளத்துறைக்கு ரூ.928 கோடி ஒதுக்கீடு

* உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

* ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.18,273 கோடி ஒதுக்கீடு

* 20,000 பசுமை வீடுகள் கட்டுவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு

* கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கே.பரமத்தியில் 282 குடியிருப்புகளுக்கு குடிநீர் திட்டம்

* பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.235 கோடி ஒதுக்கீடு

* நீர் ஆதார அமைப்புகளின் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.811.6 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டு பட்ஜெட்டில் பாசனத்துறைக்கு ரூ.5,984 கோடி ஒதுக்கீடு

* கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.1,200 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டில் 1.97 லட்சம் வீடுகள் கட்ட பட்ஜெட்டில் ரூ.266.16 கோடி ஒதுக்கீடு

* 1986 கி.மீ. பஞ்சாயத்து சாலைகள் ரூ.1,142 கோடியில் மேம்படுத்தப்படும்

* அண்ணா பல்கலை கழகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு விரைவில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

* தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ 400 கோடி ஒதுக்கீடு

* மத்திய , மாநில அரசு பங்களிப்புடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தரப்படும்.

* காவிரி பாசன பகுதிகளில் பருவ நிலை மாற்ற தழுவல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது

* கிராமப்புற ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகளை கட்ட 2276.14 கோடி மாநில அரசின் பங்காக ஒதுக்கீடு

* சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கிக் கடன் கோரப்பட்டுள்ளது

* ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும்

* 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும்

* ஏழை மக்கள் எளிதில் வாங்கும் வகையில் விரைவில் குடியிருப்பு கொள்கை அறிவிக்கப்படும்

* மாநில நில பயன்பாட்டு கொள்கை விரைவில் உருவாக்கப்படும்

* முதல்கட்டமாக கோவை, மதுரை, மண்டலங்களில் அமல்படுத்தப்படும்

* அண்ணாமலை பல்கலை கழகத்துக்கு ரூ.250 கோடி நல்கை தொகை வழங்கப்படும்

* உள்கட்டமைப்பை மேம்படுத்த அண்ணா பல்கலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

* மருத்து காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.1,363 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாட்டில் மொத்த கருவுறு விகிதம் 1.6 ஆக குறைந்துள்ளது

* முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.959 கோடி ஒதுக்கீடு

* அனைவருக்கு கல்வித்திட்டம் இடைநிலை கல்வி இயக்கத்துக்கு மத்திய அரசு நிதி தரவில்லை

* மத்திய அரசு ரூ.3,201 கோடி வழங்கவில்லை என்று பட்ஜெட்டில் ஓ.பி.எஸ். புகார்

* பல்கலை கழகங்களுக்கு தொகுப்பு நல்கை தொகை வழங்க ரூ.538 கோடி ஒதுக்கீடு

* தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு

* மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறைக்கு ரூ.12,564 கோடி ஒதுக்கீடு

* மாணவ, மாணவிகள் பயண கட்டண சலுகைக்காக ரூ.766 கோடி ஒதுக்கீடு

* போக்குவரத்துறைக்கு ரூ.1,298 கோடி ஒதுக்கீடு

* 2023-க்குள் சூரிய சக்தி மூலம் 9,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம்

* விவசாயிகள் மற்றும் இதர மின் நுகர்வோருக்கு மின்மானியம் வழங்க ரூ.8,118 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாடு சுகாதாரத்துறை சீரமைப்பு என்ற புதிய திட்டத்திற்கு ரூ.2,686 கோடி ஒதுக்கீடு

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

2019 - இடைக்கால மத்திய பட்ஜெட்


2019 - இடைக்கால மத்திய பட்ஜெட்


*வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு*

*வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேருக்கு பலன்*

*நிலையான கழிவு 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்வு*

*ரூ.2 கோடி வரையிலான வருவாய்க்கு நீண்டகால மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு- பியூஷ் கோயல்*

*டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வருவாய்க்கு இனி வரி இல்லை*

*இனிமேல் வீட்டுக்கடனுக்கான வட்டிசலுகை 2வீடுகளாக உயர்த்தப்படும்*

*இதுவரை ஒரு வீட்டுக்கடனுக்கான வட்டிக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டது*

*வீட்டு வாடகைக்கான வரி விலக்கு 1,80000 ரூபாயிலிருந்து 2,40000 ரூபாயாக அதிகரிப்பு*

*பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் பியூஷ் கோயல்*

*பட்ஜெட் தாக்கலையடுத்து நாடாளுமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு*