செவ்வாய், 31 டிசம்பர், 2019

2020 ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு

2020 ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு


01. ஆங்கில புத்தாண்டு -01.01.2020- புதன்

02. பொங்கல் -15.01.2020- புதன்

03. திருவள்ளுவர் தினம் -16.01.2020- வியாழன்

04. உழவர் திருநாள் -17.01.2020 -வெள்ளி

05. குடியரசு தினம் -26.01.2020- ஞாயிறு

06. தெலுங்கு வருடப்பிறப்பு- 25.03.2020 -புதன்

07. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு -01.04.2020 -புதன்

08. மகாவீர் ஜெயந்தி- 06.04.2020- திங்கள்

09. புனித வெற்றி- 10.04.2020- வெள்ளி

10. தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்- 14.04.2020 - செவ்வாய்

11. மேதினம் - 01.05.2020- வெள்ளி

12. ரம்ஜான் - 25.05-2020- திங்கள்

13. பக்ரீத்-01.08.2020- திங்கள்

14. கிருஷ்ண ஜெயந்தி- 11.08.2020- செவ்வாய்

15. சுதந்திர தினம் - 15.08.2020- சனி

16. விநாயகர் சதுர்த்தி - 22.08.2020- சனி

17. மொகரம் - 30.08.2020 -ஞாயிறு

18. காந்தி ஜெயந்தி - 02.10.2020 - வெள்ளி

19. ஆயுத பூஜை-25.10.2020- ஞாயிறு

20. விஜயதசமி- 26.10.2020- திங்கள்

21.மிலாது நபி-30.10.2020- வெள்ளி

22. தீபாவளி- 14.11.2020- சனி

23. கிறிஸ்துமஸ் - 25.12.2020- வெள்ளி

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

போலியோ சொட்டு மருந்து தினம் அறிவிப்பு


போலியோ சொட்டு மருந்து தினம் அறிவிப்பு...

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 2020-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டிலும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டதால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சொட்டு மருந்து வழங்கும் புதிய நடைமுறை இப்போது செயல்படுத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 2020-ம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து தினம் வருகிற ஜனவரி 19-ம் தேதியில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் இதேபோல் 72 லட்சம் குழந்தைகள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த பணி தமிழகத்தில் மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும். இதற்கான பணிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். கடைசியாக இந்த 2019-ம் ஆண்டில் மார்ச் 10-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது...

வெள்ளி, 20 டிசம்பர், 2019

2020 TNPSC Annual Planner வெளியீடு!!


2020 TNPSC Annual Planner வெளியீடு!!

✍ தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

✍ தற்போது 2020-ம் ஆண்டிற்கான உத்தேச தேர்வு அட்டவணை, TNPSC தேர்வாணையத்தின் அதிகாரப்பு%2Bர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

✍ TNPSC தேர்வர்கள் பல்வேறு தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்துகொள்ள, இந்த அட்டவணை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

✍ 2019ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளும், 2020ஆம் ஆண்டில் புதிதாக 23 தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

✍ இக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேர்வுகளின் முடிவுகளும் உரிய காலத்தில் வெளியிடப்படும் என TNPSC தேர்வாணையம் கூறியுள்ளது.


வியாழன், 19 டிசம்பர், 2019

குடியுரிமை சட்டம் என்றால் என்ன?

*குடியுரிமை சட்டம் என்றால் என்ன?*

NRC, CAA என விதவிதமான Abbreviations மூலம் பாஜக நிறைவேற்றும் சட்டங்கள் வெளிநாட்டிலிருந்து எல்லைத் தாண்டும் முஸ்லிம் அகதிகளை மட்டும் ஏற்காது என்பது தவறான புரிதல்

இந்த சட்டங்களை இந்தியா முழுவதும் அமல்படுத்தினால் என் பாட்டன், முப்பாட்டான் காலத்திலிருந்து என்னிடம் சரியான சான்றுகள் இருக்க வேண்டும், இல்லை என்றால் இந்த *சிவகுமார்* தன் சொந்த நாட்டிலேயே அகதி ஆவான்.

இலங்கையிலிருந்து தப்பி வந்த ஈழத்தமிழனின் வாரிசு இவன் என்று எளிதாக சொல்லிவிடலாம். சொல்லிவிட்டு ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் அடைத்துவிடலாம்.

சிவகுமாரிடம் எல்லாமும் இருக்கிறது என்றாலும் தப்பிக்க முடியாது. யாரோ ஒருவர், இந்த சிவகுமார் மீது சந்தேகம் உள்ளது என்று எந்த ஆதாரமுமின்றி அரசிடம் மேல் முறையீடு செய்யலாம். புகார் மட்டுமே போதும், ஆதாரம் தேவையில்லை.

அதை குடியுரிமை அரசுப் பணியாளர்கள் கணக்கில் எடுத்து, சிவகுமாருக்கு குடியுரிமை வழங்காமல், ஒரு மாதத்திற்குள் மீண்டும் நிரூபிக்கச் சொல்வார்கள். அப்போது நிரூபித்தால் மட்டுமே சிவகுமாருக்கு குடியுரிமை உறுதியாகும்.

இல்லையென்றால் சிவகுமாருக்கு ரேசன் கார்டு கிடையாது, அரசு வேலை கிடையாது, ஓட்டு கிடையாது, எந்த பள்ளியிலும் சிவகுமாரின் குழந்தைகளை சேர்க்க முடியாது.

இது தான் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த, மாநில அடிமை அதிமுக அரசு ஆதரித்த குடியுரிமை கொடுங்கோன்மை சட்டம்.

அது எப்படி? சிவகுமார் முஸ்லீம் இல்லையே, என்ன பிரச்சனை அவனுக்கு என்ற கேள்வி வரும்.

காரணம் ரொம்ப சிம்பிள்...

சிவகுமார் ஒரு தமிழன்.

நாமெல்லாம் இந்துக்கள் தானே என்பது உங்களின் வெகுளித்தனமான நம்பிக்கை மட்டுமே. நீங்கள் நம்புவதால் அது உண்மை ஆகிவிடாது. .

உண்மையான Agmark, ISO Certified இந்துக்கள் யார் என்பது இந்த சட்டம் கொண்டு வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

வெளிநாடுகளில் சென்று சிவகுமார் குடியுரிமை பெற பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் போதும்.

ஆனால் இந்தியாவில் நான் இந்தியாவின் குடிமகன் என்று நிரூபிக்க இவை மட்டும் பத்தாது, என் முன்னோர்கள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இங்கு தான் இருந்தார்கள் என்பதற்கான ஆவணத்தை நான் தான் சமர்பிக்க வேண்டும்.

புதிய சட்டத்தின் படி, இந்த பிரச்சனை தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மட்டும்தான். இந்துக்களுக்கு இந்த சிக்கல் இல்லை. அப்படி தான் அந்த சட்டம் இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் கவனமாக தவிர்த்திருக்கிறது.

தமிழர்களும் இஸ்லாமியர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்று நிரூபிக்க 70 வருடங்களுக்கு முந்தைய ஆவணத்தைக் காட்டி நிரூபிக்க வேண்டியது அந்தந்த தனித்த இஸ்லாமியனின், தமிழனின் பொறுப்பு ஆகிவிட்டது.

அதெல்லாம் இல்லை...இல்லவே இல்லை. நிச்சயமாக இது முஸ்லீம்களுக்கான பிரச்சனை என்று மட்டுமே உங்களிடம் சொல்லுவார்கள்.

இந்தியாவில் முஸ்லீம்கள் மக்கள் தொகை 20 - 25 கோடி,

தமிழர்கள் 6 - 7 கோடி மட்டுமே.

இன்று, 25 கோடி இஸ்லாமியர்களை ஒரு சட்டத்தின் மூலம் தெருவில் நிறுத்தியவர்களுக்கு,

நாளை 7 கோடி தமிழர்களை தெருவில் நிறுத்த எவ்வளவு நேரமாகும்?

இது இஸ்லாமியர்களை தமிழர்களை மட்டுமே பாதிக்கும் என்றும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

இன்று அவர்கள் கையில் எடுத்திருப்பது ஒரு கொலை வாள். அது என்று வேண்டுமானாலும் யாரை நோக்கி வேண்டுமானாலும் திரும்பும்.

*Demonetisation ஞாபகம் இருக்கா?*

லட்சத்தில் ஒருத்தன் கருப்பு பணம் வைச்சிருப்பான், அவனை பிடிக்கிறேன்னு சொல்லி ஒட்டு மொத்த நாட்டையே சீரழித்தார்கள். கடைசியில் கருப்பு பணம் கிடைக்கலை, கொஞ்ச, நஞ்ச வெள்ளை பணம் வச்சிருந்தவன் போண்டியானது தான் மிச்சம்.

நாம நள்ளிரவில் நடுத்தெருவில் நின்றோம்

நாய் மாதிரி 4000 ரூபாய்க்கு அலைஞ்சோம்

அதே தான் இப்பவும் நடக்கும்...

கோடியில் ஒருத்தன் அகதியா வந்திருப்பான், அவனை கண்டுபிடிக்கிறேன், பழிவாங்குறேன்னு சொல்லி நம்மை உயிரை வாங்குவானுங்க.

அவ்வளவு தான் நடக்கும்!

இதை ஷேர் செய்ய நீ தமிழனாகவாே, இஸ்லாமியனாகவாே இருக்க வேண்டிய அவசியமே இல்லை, மனிதனாக இருந்தால் போதும்.

நன்றி - அ.சிவகுமார்

புதன், 18 டிசம்பர், 2019

2019 ஓர் கண்ணோட்டம்



விடைபெறும் 2019👋 கடந்து வந்த பாதை😎 நினைவுக்கூறுவோம்🎈 இன்று முதல்...
2019 ஓர் கண்ணோட்டம்...


🎉2019ஆம் ஆண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ளது...!!

🎉இந்த ஆண்டில் எவ்வளவோ விஷயங்களை கடந்து வந்திருப்போம்..!!

🎈சென்ற வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் சற்று அதிக அனுபவம் சிலருக்கு கிடைத்திருக்கும்.

🎈சிலர் புதிய அனுபவங்களை கற்று இருப்பார்கள்.

🎈சிலருக்கு இந்த வருடம் திருப்பமான வருடமாக அமைந்திருக்கும்.

🎈சிலர் இந்த வருடத்தில் பல ஏமாற்றங்களை கூட கண்டிருக்கலாம்.

🎈சிலர் இந்த வருடத்தில் பல இழப்புகளை கூட சந்தித்திருக்கலாம்.

🎈சிலர் இந்த வருடத்தில் வாழ்க்கையை பற்றி புரிந்திருக்கலாம்.

🎈சிலர் இந்த வருடத்தில் கோபத்தை குறைக்க கற்று கொண்டிருப்பார்கள்.

🎈சிலர் இந்த வருடத்தில் பொறுமையை கொண்டிருப்பார்கள்.

🎈சிலர் இந்த வருடத்தில் நன்றாக சமைக்க கற்று கொண்டிருப்பார்கள்.

🎉இதுபோல் இன்னும் பல விஷயங்கள் சிலருக்கு நடந்திருக்கும்... சிலருக்கு நடந்து கொண்டே இருக்கும். வெற்றியோ, தோல்வியோ எது நடந்தாலும் முயற்சியை மட்டும் கைவிடாமல் இருந்தால் வரவிருக்கும் புத்தாண்டு நிச்சயம் சிறப்பாக அமையும்.

🎉2019ஆம் ஆண்டில் நம் வாழ்வில் எத்தனையோ விஷயங்கள் மறக்க முடியாமல் இருக்கும். அதுபோல்தான் 2019ல் பல்வேறு நிகழ்வுகள் நடந்திருக்கும். அதாவது...

தமிழகத்தில் உதயமான 5 புதிய மாவட்டங்கள்😎

பாராளுமன்ற தேர்தல்👈

விக்ரம் லேண்டர்🌎

புல்வாமா தாக்குதல்💣

டிரெண்டான நேசமணி😄

அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்த உலக கோப்பை கிரிக்கெட்🌐

ஆழ்துளைக்கிணறு... சுஜித் உயிரிழப்பு😢

அமேசான் காட்டுத்தீ🔥

அத்திவரதர் தரிசனம்🙏
🎉இதுபோல் இன்னும் பல நிகழ்வுகளை நாம் கடந்து வந்துள்ளோம். 2019ஆம் ஆண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ளது. 2019ஆம் ஆண்டு முடியலாம். நாம் கண்ட நிகழ்வுகளை மறக்க முடியுமா?

😍2020ஆம் ஆண்டு நம்மை வரவேற்க தயாராக உள்ளது.🙏

👋2019ஆம் ஆண்டு நமக்கு குட்-பை சொல்ல தயாராகி கொண்டு வருகிறது.👋


செவ்வாய், 3 டிசம்பர், 2019

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கவனிக்கவேண்டியது

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கவனிக்கவேண்டியது.

*வேட்பு மனுத் தாக்கலின் போது :*

*கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுபவர்* மனுக்கள் வாங்குவது, கொடுப்பது, சமர்ப்பிப்பது எல்லாமே உங்கள் பஞ்சாயத்து அலுவலகத்திலேயே நடைபெறும். தேர்தல் அலுவலர் உங்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து உங்கள் மனுக்களைப் பெற்றுக் கொள்வார். நீங்கள் கவனிக்க வேண்டியது, *உங்கள் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட ஏதோ ஒரு வார்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் போதுமானது. நீங்கள் போட்டியிடும் வார்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும் எனக் கட்டாயம் இல்லை.* ஆனால் உங்களை முன்மொழிபவர் மற்றும் வழிமொழிபவர் ஆகியோரின் பெயர் சம்பந்தப்பட்ட வார்டு வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டியது கட்டாயம்.

*பஞ்சாயத்துத் தலைவருக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள்* தங்களுக்கான மனுக்களைப் பெறுவது, சமர்ப்பிப்பது எல்லாமே சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அதாவது யூனியன் ஆபீஸில் தான் இருக்கும். தேர்தல் அலுவலர் யார் என்ற விவரம் ஒன்றிய அலுவலகம் சென்றால் தெரிந்துகொள்ளலாம்.
ஒன்றிய அலுவலகத்தில் அவர்கள் தெரிவிக்கும் தொகையை (தோராயமாக ரூபாய் 100) செலுத்தி உங்கள் ஊராட்சி வாக்காளர் பட்டியலைப் பெற்றுக் கொள்ளவும். இணையதளத்திலும் வாக்காளர் பட்டியல் இருப்பதால் கட்டாயம் உங்கள் ஊராட்சி வாக்காளர் பட்டியலை வைத்துக் கொள்ளவும்.

*உங்கள் பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரும், அதேபோல உங்களை முன்மொழிபவர் வழிமொழிபவர் ஆகியோரின் பெயரும்
 இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.*

தற்போது பயன்படுத்தப்படும் வேட்புமனுவை ஒன்றிய அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும்.

*வேட்புமனு படிவத்தோடு உறுதிமொழி பத்திரமும் சமர்ப்பிக்க வேண்டும்.* பொதுவாக 20 ரூபாய் பத்திரத்தில் உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். தற்போது அது மாறி இருக்கலாம். இப்போது எந்த விலைக்குப் பத்திரம் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிந்து பின் பயன்படுத்தவும். *நீங்கள் வாங்கும் பத்திரம் தேர்தல் அறிவிக்கை வந்த தேதிக்குப் பிறகு வாங்கினால் நல்லது. அதாவது ஆறாம் தேதி(06.12.2019) அன்று முதல் நீங்கள் பத்திரம் வாங்கி பயன்படுத்தலாம்.*

*வேட்புமனுவையும் உறுதிமொழிப் பத்திரத்தையும் முழுவதுமாக தட்டச்சு செய்து (கம்ப்யூட்டரில் டைப் செய்து) பயன்படுத்தவும். கையில் எழுதுவதைத் தவிர்க்கவும்.*

*உறுதிமொழி பத்திரத்தில் குற்ற வழக்குகள் விவரம் மற்றும் சொத்து விவரம் ஆகியவற்றைக் கவனமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.*  குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தால்
தண்டனை வழங்கி தங்கள் மீது தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டால் போதுமானது. இதற்கென ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

அதேபோன்று *தங்களின் முழுமையான சொத்து விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.* நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் தங்கள் தாய், தந்தையர் பெயரில் உள்ள சொத்துக்களையும் தங்கள் மீது உள்ள சொத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் திருமணமான ஆணாக இருந்தால் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் உள்ள சொத்து விவரங்களையும், தங்கள் பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும். அதேபோல நீங்கள் திருமணமான பெண்ணாக இருந்தால் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகள் மீது உள்ள சொத்து விவரங்களையும் தங்கள் மீது உள்ள சொத்து விவரங்களையும் தவறாமல் குறிப்பிட வேண்டும். ஆனால் *இதற்கென சொத்து பத்திரம் போன்ற பிற ஆவணங்களை இணைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.*