சனி, 28 மார்ச், 2020

மாண்புமிகு பிரதமர் மோடிஜியின் அரசு அறிவிப்பு

மாண்புமிகு பிரதமர் மோடிஜியின் அரசு அறிவிப்பு

*உடனடியாக உதவி தேவைப்படும் ஏழைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர்களுக்கு 1,70,000 கோடி ஒதுக்கீடு*

*யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவிகள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும்*

*மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு*

*5 கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்*

*வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக 3 மாதத்திற்க்கு வழங்கப்படும்*


*இந்த திட்டங்களின் அடிப்படையில், பொருட்கள் 2 தவணையாக வழங்கப்படும்*

*விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்*

*விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும்*


*முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்*


*100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு*

*விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்*

*20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும்*

*உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும்*

*மகளிர் குழுக்களுக்கு தீன் தயாள் திட்டத்தின் கீழ், ரூ.20 லட்சம் கடன் வழங்கப்படும்*

*முறைசார் தொழிலாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வைப்பு தொகையை அரசே வழங்கும்*


*இதன் கீழ் 31 ஆயிரம் கோடி நிதியை, 3.5 கோடி பதிவு செய்யப்பட்ட கட்டட தொழிலாளர்களுக்காக, மாநில அரசுகள் பயன்படுத்தலாம்.*

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள 9 முக்கிய அறிவிப்புகள்!



மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள 9 முக்கிய அறிவிப்புகள்!

*கரோனா தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.*

*► மத்திய அரசின் 'கிஷன் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 2000 ரூபாய் தற்போது உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.*

*► ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும்.3 கோடி பேர் இதில் பயன்பெறுவர்.*

*► ஜன் தன் யோஜனா கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு தலா ரூ.500 வழங்கப்படும். இதன் மூலமாக 20 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள்.*

*► உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கு 3 மாதத்திற்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். 8.3 கோடி பெண்கள் பயன்பெறுவர்.*

*► மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கும் 7 கோடி குடும்பப் பெண்களுக்கு இதுவரை 10 லட்சம் உதவி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இது 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.*

*► வருங்கால வைப்பு நிதி காப்பீட்டுத் தொகையை(24%) அடுத்த 3 மாதத்திற்கு அரசே செலுத்தும்.*

*► பி.எப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள 70% தொகையை எடுத்துக்கொள்ள முடியும். இதில் மாத வருமானம் ரூ. 15,000 க்கு குறைவாக இருக்கும் 90% பணியாளர்கள் அடங்குவர்.*

*► கட்டடத் தொழிலாளர்களுக்கு நல நிதியில் இருந்து அவர்களுக்குத் தேவையான உதவித்தொகையை மாநில அரசு வழங்கும்.*

வெள்ளி, 27 மார்ச், 2020

நம்ம ஊர்ல இலவசம்னு சொன்னால் விஷத்தைகூட எடுத்து ஒளிச்சி வெச்சிப்பாங்க



நம்ம ஊர்ல இலவசம்னு சொன்னால் விஷத்தைகூட எடுத்து ஒளிச்சி வெச்சிப்பாங்க.......


 *3 மாசத்துக்கு இலவச கேஸ்-ன்னு சொல்லிட்டாங்க.. கருப்பு சந்தையும், இடைத்தரகர்களும் நடுவுல லாபம் அடைஞ்சிக்கிட்டு யாருக்கு போய் சேரணுமோ அவங்களுக்கு அந்த நிவாரணம் போய் சேராதோ அப்படிங்கிற ஒரு பயம் எனக்கு இருக்கு..*


*சில விஷயங்களை முறைப்படுத்தாமல், டமால், டிமீல் என மத்திய அரசு தடாலடி அறிவிப்புகளை வெளியிடுவது சரியல்ல..*


*இப்போது அவதிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க முதலில் வழி செய்ய வேண்டும்" என்று நடிகை கஸ்தூரி உருக்கமான ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.*


 *நடிகை கஸ்தூரி.. நல்ல அறிவாளி.. எந்த டாப்பிக் என்றாலும் சரளமாக அதே சமயம் விஷயங்களுடன் தரவுகளை தரக்கூடியவர்..*


 *இவரது தமிழ் உச்சரிப்பே தனி ஸ்பெஷல்.. சமூக நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் ஆனாலும் சரி, தனக்கு மனதில் பட்டதை படக்கென்று வெளிப்படுத்துபவர்*


*ஒரு நடிகை என்பதையும் தாண்டி, தன்னை சமூக செயற்பாட்டாளருமாக தன்னை விழைத்து கொண்டவர்..*


*நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்தும், அது சம்பந்தமாக கருத்தை பதிவிட்டும் வருபவர்...*


*இவரது துணிச்சலுக்கு ஏராளமான ஆதரவுகள் வந்தாலும் சில எதிர்ப்புகளும் வரவே செய்யும்.. ஆனால் அந்த எதிர்ப்பையும் தனது பதிலடி ட்வீட்களால் திணறடிப்பார் கஸ்தூரி!*


 *இந்நிலையில் நேற்று ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 3 மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் அறிவிப்பு பற்றினதுதான்..*


*திட்டமிடப்படாத அறிவிப்புகளுக்கு இது ஒரு உதாரணம்... இலவசமோ இல்லையோ எல்லா குடும்பத்திற்கும் மாசம் ஒரு சிலிண்டர் கட்டுப்பாடு செய்திருக்கலாம்... ஏற்கனவே கேஸ் ஏஜென்சிகள் சிலிண்டர்களை புக் செய்தால் அதை உரிய நேரத்தில் வழங்காமல் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்" என்று பதிவிட்டிருந்தார். ராகுல்காந்தி உட்பட பலரே நிதியமைச்சரின் அறிவிப்புகளை பாராட்டி கொண்டிருக்கும் வேளையில், கஸ்தூரி மட்டும் ஏன் இப்படி ஒரு பதிவை போட்டார்?*


*குறிப்பாக இலவச கேஸ் அறிவிப்பு குறித்த அவரது கருத்து என்ன என்பது குறித்து ஒன் இந்தியா தமிழ் அவரிடமே கேட்டோம்..*


*அப்போது விரிவான பதிலை நமக்கு அளித்த பேட்டிதான் இது: "*


*நிதியமைச்சர் நிவாரண திட்டங்கள் எல்லாம் அறிவிச்சிருக்காங்க.. அதை எல்லாம் நான் பாராட்டறேன்.. ஆனால் இவை சம்பந்தமாக எதுவும் ஆலோசிக்காமல் வெறும் அறிவிப்புகளை மட்டும் அறிவிச்சிட்டாங்களோன்னு எனக்கு ஒரு ஐயப்பாடு இருக்கு.. எல்லாரும் வீட்டிலேயே இருங்க.. எல்லாம் வீடு தேடி வரும்.. வீடு தேடி மருந்து வரும் அப்படின்னு சொல்றது ஈசி.. ஆனால் செய்யறது கஷ்டம்.இன்னொன்னு, வீடு இருக்கிறவங்களுக்கு எல்லாம் வீடு தேடி வரும்.. வீடே இல்லாமல் அங்கங்க நிறைய பேர் புலம்பெயர்ந்த பணியாளர்கள்தான் இருக்காங்க.. இன்னைக்கு தமிழ்நாட்டிலேயே பார்த்தீங்கன்னா வடக்கத்திகாரர்கள்தான் நிறைய பேர் லேபரா இருக்காங்க..*


*இந்த மாதிரி இவங்க ஒரு இடத்திலயும், குடும்பம் ஒரு இடத்திலயும் இருக்கும்போது அவங்களுக்கான ஏற்பாடுகள் என்ன?*


*அப்படிங்கறதுக்கு ஒரு தெளிவு கிடைச்சா நல்லா இருக்கும். அரசாங்கம் எல்லாமே யோசிச்சுதான் செஞ்சிருப்பாங்க.. நமக்குதான் சொல்லலை அப்படின்னு இருந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.. ஆனால் இதுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்த மத்திய அரசு கொடுத்த அறிவிப்புக்கும், அது நடைமுறையில் எப்படி செயல்பட்டது என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கறதால இந்த கேள்வியை நான் முன்வைக்கறேன்.*


 *மத்தபடி நிதியமைச்சர் அறிவித்த எல்லா அறிவிப்புகளையும் நான் வரவேற்கிறேன்.. அது சரியாக, சொன்னபடி நடைமுறைப்படுத்தப்பட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்.. ஆனால் எனக்கு பெரிய டவுட் இருக்கு.. குறிப்பாக கேஸ் சிலிண்டர் அறிவிப்பு.. 3 மாசத்துக்கு இலவச கேஸ்-ன்னு சொல்லிட்டாங்க.. ஆனால் நம்ம ஊர்ல இலவசம்னு சொன்னால் தேவையோ இல்லையோ, விஷத்தைகூட எடுத்து ஒளிச்சி வெச்சிப்பாங்க.. அது ஒரு மனித இயல்பு.. எதையாவது இப்படி ஃப்ரீ தந்துட்டால், அது கருப்பு சந்தையும், இடைத்தரகர்களும் நடுவுல லாபம் அடைஞ்சிக்கிட்டு யாருக்கு போய் சேரணுமோ அவங்களுக்கு அந்த நிவாரணம் போய் சேராதோ அப்படிங்கிற ஒரு பயம் எனக்கு இருக்கு...*


*எனக்கு மட்டுமில்லை, நிறைய பேர் மனசிலயும் இந்த சந்தேகம் இருக்கு. இந்த அறிவிப்பு வந்த உடனேயே என்னுடைய கியாஸ் ஏஜென்சிக்கு போன் பண்ணி கேட்டேன்.. அங்கே நடுத்தர வர்க்க மக்கள் எல்லாருமே ஆபீஸ் வாசல்ல வந்து நிக்கறாங்களாம்.. புக்கிங் ஒன்னுக்கு ரெண்டா குடுக்கறாங்களாம். எதுக்கோ வாங்கி 2 வெச்சிக்கிடுவோமே அப்படிங்கிற பீதியில புக்கிங் பண்றாங்களாம். கொஞ்சம் வெயிட் பண்றவங்ககூட புக்கிங்-கில் இப்பவே போடுறாங்களாம்.. அந்த ஆபீஸ்லயும் ஆட்கள் இல்லாமல் பாதி ஸ்டாப்ஸ்தான் இருக்காங்க.. கடமை உணர்ச்சியோட எல்லாருமே வந்துட்டு இருந்தாலும், டெலிவரி பண்ற தினக்கூலிகளை அவங்களால அரேஞ் பண்ண முடியல.வண்டிகளுக்கு பெர்மிட் வாங்க முடியல.. நிறைய தடைகளோடுதான் அவங்க தங்களுடைய சர்வீஸ்களை செய்துட்டு இருக்காங்க.. என்கிட்ட சொல்றாங்க, "கஷ்டமாதாங்க இருக்கு...*


*எங்களுக்கு டிமாண்ட் டபுள் ஆகி போச்சு.. எங்களுடைய வேகம் பாதியா போச்சு.. கண்ணை கட்டுதுங்கிற மாதிரி என்கிட்ட சொன்னாங்க.. எல்லாத்தையுமே பீதியிலதான் வாங்கணும் அப்படிங்கிற இடத்துல கொண்டு போய் மக்களை விடகூடாது.. தெலுங்கானா மாநிலத்தில பார்க்கிறோம்... டெல்லியில பார்க்கிறோம், ஹாஸ்டல்கள், கல்லூரி மாணவர்கள் அங்கங்கே விடுதிகளில் அடைபட்டு இருக்காங்க.. இதனால் எங்கியாவது வெளியே போயிட மாட்டோமா அப்படின்னு கூட்டம் கூட்டமா கூடறாங்க.. அதுக்கெல்லாம் ஒரு வழியை முதல்ல பண்ண வேணாமா? உதாரணத்துக்கு, ஒரு காலேஜில் சமையலுக்கு ஆள் இல்லை.. அவன் என்ன பண்ணுவான்? ஆள் இருந்தால்தானே சாப்பாடு போடுவான்? ஆள் வரலைன்னா என்ன பண்ண முடியும்? முதல்ல பொருட்கள் கிடைக்கணும்.. அந்த மாதிரி சில விஷயங்களை வந்து முறைப்படுத்தாமல், டமால், டிமீல் என தடாலடி அறிவிப்பு தந்துட்டா எப்படி? இன்னைக்கு ஆந்திரா-தெலுங்கானா பார்டர்ல தள்ளுமுள்ளு ஆயிடுச்சு. டெல்லியில இருந்து அவங்கவங்க பெங்காலுக்கும், உத்திரபிரதேசத்துக்கும் நடந்து போய்ட்டு இருக்காங்க. வேற வழியில்லை.. பிழைக்க வந்த இடத்திலேயே இருந்தால் பட்டினியால சாவோம் அப்படிங்கிற நிலைமையில இருக்கிறவங்க, அங்கேயே இருக்கிறதை யோசிப்பாங்களா? இல்லை குழந்தைங்களை பசியாற்ற யோசிப்பாங்களா, அந்த மாதிரி கட்டாயங்களில் நிறைய பேர் தள்ளப்பட்டிருக்காங்க.. அவங்களுக்கான நிவாரணத்தை உடனடியா செய்யணும்.. இதை சொல்லும்போது தமிழகத்தில் உள்ள நடைமுறையையும் நான் சொல்லி என் வாழ்த்தை தெரிவிக்கணும்னு நினைக்கிறேன்.இப்படி தமிழகத்துக்கு வெளியில இருந்து வந்து இங்கே மாட்டிக்கிட்ட பணியாட்களை, தினக்கூலி ஆட்களை ஆங்காங்கே பள்ளிக்கூடங்களில், அரசு பள்ளி கூட வளாகங்களில் கேம்ப் போட்டு தங்க வைச்சிருக்காங்க.. 17 கேம்ப் போட்டிருக்காங்க.. அவங்களுக்கு வேலை, தேவையான சாப்பாடு, தினமும் ஸ்கிரீனிங், பண்ணிக்கிட்டு இருக்காங்க.. இந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்தியா முழுக்க இல்லை.. அது மாநில அரசாங்கங்களின் பொறுப்பு என்பதுடன் சேர்த்து, மத்திய அரசாங்கத்தின் பொறுப்பும் இதுல இருக்கு!!" என்று ஆணித்தரமான தன் கருத்துக்களை நம்மிடம் வைத்தார் கஸ்தூரி!!

திங்கள், 23 மார்ச், 2020

மாவட்ட வாரியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது


மாவட்ட வாரியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பட்டியலைப் பார்க்கும் போது பகீரென்று இருக்கிறது.

நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர அதிகம் வாய்ப்பிருக்கிறது. நாம் ரொம்ப அலட்சியமாக இருக்கிறோம் என்றுதான் தோன்றுகிறது.

கவனமாக இருங்க ......


144 தடை தமிழக அரசு அறிப்பாணைகள்

தமிழக அரசு அறிப்பாணைகள்:

1. அனைத்து அத்தியாவசய கடைகள் திறந்து இருக்கும்

2. நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி

3. அனைத்து அரசு அலுவலகங்கள் மூடல்

4.பெட்ரோல் பங்க் திறந்து இருக்கும்

5. திட்டமிடப்பட்ட திருமணம் நடத்தலாம்

6, டாஸ்மாக், மால், தனியார் தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடல்

7. ரேஷன்கடைகள் திறந்து இருக்கும்

8. 5 பேருக்கு மேல் கூட தடை

9. பிளஸ் 1 தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

10, சிலிண்டர் விநியோகம் செய்யலாம்.

11. ஆவின் பால் நிலையம் திறந்து இருக்கும்.

12. பிளஸ் 2 தேர்வு  திட்டமிட்டப்படி நடைபெறும்

13, அனைத்து வழிபடு தலங்கள் மூடப்படும்

13. பேருந்துகள் இயங்காது

14. உணவங்கள், டீக்கடைகள் நிபந்தனையுடன் அனுமதி

15. மருந்தகங்கள் திறந்து இருக்கும்

16. ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பணி தொடரலாம்.

17.  அரசு பணியில் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதி

18. ஓட்டலில் அமர்ந்து சாப்பிட தடை

19. மரண ஊர்திக்கு தடை இல்லை

20. அம்மா உணவங்கள் திறந்து இருக்கும்

திங்கள், 16 மார்ச், 2020

: சுற்றுலா பயணிகள் தங்கும் இடம் அனைத்தும் மூடப்பட வேண்டும்

#Breaking : சுற்றுலா பயணிகள் தங்கும் இடம் அனைத்தும் மூடப்பட வேண்டும்

* கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்

* கொரோனா பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

* மார்ச் 31ம் தேதி வரை மாநாடு, ஊர்வலம், கருத்தரங்கு நடத்த தடை

* டாஸ்மாக் பார்கள், கேளிக்கை விடுதிகளை 31ம் தேதி வரை மூடி வைக்கவும் உத்தரவு

* பொது இடங்களில் கூடுவதை, அடுத்த 14 நாட்களுக்கு பொது மக்கள் தவிர்க்க வேண்டும்

* தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும்

* 31ம் தேதி வரை பல்கலைக் கழகங்களும் செயல்படாது

* திட்டமிட்டபடி 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்

* அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும்

* மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த கல்லூரிகள் அனைத்தும் தொடர்ந்து இயங்கும்

* அங்கன்வாடி மைய குழந்தைகளின் உணவை, வீட்டிற்கு சென்று ஊழியர்கள் வழங்க வேண்டும்

* ஏற்கனவே திட்டமிட்டதை தவிர, திருமண மண்டபங்களில் புதிதாக நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது

* தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும்

* பிற மாநிலங்களில் இருந்து பேருந்தில் வருபவர்களும் இனி சோதனை செய்யப்படுவார்கள்
#EdappadiPalaniswami | #CoronaAlert

ஞாயிறு, 8 மார்ச், 2020

கொரோனா வைரஸ் பற்றிய ஓர் பார்வை..!

கொரோனா வைரஸ் பற்றிய ஓர் பார்வை..!

01. கொரோனா வைரஸ் கிருமி அளவில் பெரிய ஒன்று.. ஏறக்குறைய அது 400-500 மைக்ரான் அளவில் இருப்பதால்,
அதனை எந்த சாதாரண துணி முகமூடியாலும் தடுக்கவியலும்.
ஆகவே அதற்கு தனியாக Mask என போலி விளம்பரங்களை நம்பி மோசம் போக வேண்டாம்.

02. இந்தக் கிருமி காற்றில் பரவாது. ஆனால் நிலப்பரப்பின் மூலம் பரவும்.

03. கொரானா வைரஸ் உலோகங்களின் மேல்பரப்பில் 12 மணிநேரம் வரை வாழும். எனவே உலோகப் பொருட்களை கையால் தொடுபவர்கள் உடனே கைகளை சோப்பினால் நன்கு கழுவுவதே போதுமானதாகும்.

04. இந்த கிருமி துணிகளின் மீது 9மணி நேரம் வரை வாழும். எனவே துணிகளை நன்கு துவைத்து 2மணி நேரம் வரை வெயிலில் உலர்த்தவும்..

05. இந்த வைரஸ் 26-27° டிகிரி வெப்பத்தில் வாழும் தன்மையற்றது.. எனவே இந்தியா போன்ற வெப்பமண்டல தேசங்களில் இக் கிருமிகள் பரவும் வாய்ப்பு மிக குறைவே.. ஒருவேளை இவற்றின் பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள விரும்பினால், சூரிய ஒளியில் சிறிதுநேரம் நடக்கவும், சூடான தண்ணீரை அருந்தினாலும் போதும்.

06. எக்காரணம் கொண்டும் குளிர்ச்சியான உணவுகளை உண்ணாதீர்கள்.. ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பொருட்களை தவிர்க்கவும்..!

07. தொண்டை வறட்சியும்,அதன் தொடர்ச்சியுமே இந் நோயின் அறிகுறி.. எனவே தொண்டை வறண்டு விடாமல், சூடான உப்பு கலந்த தண்ணீரால் கொப்பளிப்பதும், அதனால் கல்லீரலுக்கு இந்த வைரஸ் பரவாமலும் தவிர்க்க முடியும்

*மேற்கண்ட தற்காப்பு முறைகள் கொரோனா வைரஸில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள UNICEF வழங்கியுள்ள ஆலோசனைகளாகும்...!*