ஞாயிறு, 14 ஜூன், 2020

செய்யும் தொழிலே தெய்வம்


செய்யும் தொழிலே தெய்வம்

 பெயர் : ஜெயந்தி (ப்ராமணப் பெண்)
அப்பா : பட்டு குருக்கள் (சிவன் கோயில் அர்ச்சகர்)
படிப்பு : MA
வேலை : மின்மயானத்தில் பிணம் எரிப்பு
(குறிப்பு : தொடர்ந்து, பிணவாடையோ அல்லது பிணம்எரியும் புகையையோ சுவாசித்தால், மிகஅதிகமான மறதி நோய் ஏற்படும். மேலும் வாழ்நாட்கள் குறையும்)

அர்ச்சகரோ, வெட்டியானோ... அவங்கவங்களுக்கு கிடைச்ச, வாய்ச்ச வேலைகள இயல்பா அவங்கவங்க செஞ்சுட்டுதான் இருக்காங்க. ஆனா சில வேலவெட்டி இல்லாத ஓசிச்சோத்து தெருநாய்கள்தான், வேலைல பேதம்பிரிச்சு... பிரச்சனைய உண்டு பண்றாங்க. 'அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கணும்' ன்னு, போராடுன குரூப்பு... 'அனைத்து சாதியினரையும் வெட்டியான் ஆக்கணும்' ன்னு, போராடுமா ? போராட்டம் பண்ணி அர்ச்சகர் வேலை வாங்குனா... கோயில் சொத்தையும், உண்டியலையும் ஆட்டைய போடலாம். போராட்டம் பண்ணி  வெட்டியான் வேலை வாங்குனா... நெத்திக் காசும், வாய்கரிசியும்தான் மிஞ்சும் !!!

 பயத்துக்கு சவால் விடும் ஜெயந்தி..

பிராமண இன பெண் பிணத்தை எரிக்கிறார்..

நாமக்கல் அருகே கூலிப்பட்டி கிராமத்துல பிறந்தவ நான். அப்பா பட்டுகுருக்கள், சிவன் கோயில் அர்ச்சகர். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க.

நான்தான் கடைசிங்கிறதால, அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம். எம்.ஏ முடிச்ச நேரத்துல வேற ஜாதியைச் சேர்ந்த வாசுதேவனைக் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

 எங்கம்மா, அக்கா எல்லோரும் என்னை ஒதுக்க, அப்பா மட்டும் எதிர்க்கல. கணவர் வீட்டுல என்னை ஏத்துக்கிட்டாங்க. எனக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்தன..

என் அப்பா திடீர்னு இறந்துட்டாரு. அவரை அடக்கம் பண்ணும்போது, பெண்ணா இருந்தாலும் நான் அங்கே இருந்தேன். அப்போ ஓர் உடலா இல்லாம, தெய்வமாதான் தெரிஞ்சாரு எங்கப்பா.

 நான் தையல் வேலை கத்துக்கிட்டு, அதை செய்திட்டிருந்தேன். தையல் மெஷினை மிதிக்க மிதிக்க வயித்துவலி அதிகமாக...

 டாக்டர், வயித்துல ரெண்டரை கிலோ கட்டி இருக்கிறதா சொன்னாங்க. சீரியஸான நிலையில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனேன்.

உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எங்கப்பாதான் தெய்வமா இருந்து அறுவை சிகிச்சையில் என்னைக் காப்பாத்திக் கொடுத்தார்.

வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் என்ற குடும்பச் சூழலில்தான், நாலு வருஷத்துக்கு முன்ன இந்த மின்மயானத்துல தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வந்தேன்.

இடிபாடுகளாவும், மண்டை ஓடு, எலும்புகளாவும் இருந்த இடத்தை, நானும், மலர்னு ஒரு பெண்ணும் சேர்ந்து மூணே மாசத்துல பச்சைப்பசேல் தோட்டமா மாத்தினோம்.

சில மாசங்கள்ல, சிதையூட்டிட்டு இருந்த ஆண்கள் வேலையை விட்டுப் போக, நான் அந்த வேலையைச் செய்றேன்னு நிர்வாகத்துக்கிட்ட கேட்டேன். ‘உன்னோட கணவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா வேலை தர்றோம்'னு சொல்லிட்டாங்க.

வீட்டுல எல்லாரையும் சம்மதிக்க வெச்சு இந்த வேலையில சேர்ந்தேன். என்னோட பணி நேர்த்தியைப் பார்த்து, ஒரே வருஷத்துக்குள்ள, என்னையே இந்த மின்மயானததுக்கு மேனேஜர் ஆக்கிச்சு நிர்வாகம்’’ என்ற ஜெயந்தி, தொடர்ந்தார்.

‘‘இறந்தவங்களோட உறவினர்களை எல்லாம் வெளிய அனுப்பிட்டு, நான், எனக்கு உதவியா மலர்னு ரெண்டு பொம் பளைங்க மட்டும், டிராலியில உடலை வைக்கிறதுல இருந்து, கடைசி வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்தாலும், கொஞ்சம்கூட பயந்ததில்ல. அதுக்காக சிதையூட்டும் வேலை சுலபமானதும் இல்ல.

இயற்கை மரணம் எய்தினவங்களை சிதையூட்டும் போது, 45 நிமிஷத்துல சாம்பலை எடுத்திடலாம்.

ஆனா, போஸ்ட் மார்ட்டம் பண்ணின உடலா இருந்தா, சிதையூட்டின கொஞ்ச நேரத்துலயே, சூட்டுல எல்லா உறுப்புகளும் தனியா சிதறி விழும்.

 அதை எல்லாம் மறுபடியும் எடுத்து, மரக்கட்டை மேல போடணும். சிரமமான அந்த வேலைகளை, தைரியமா பண்ணியிருக்கேன்.

ஒரு நாளில் அதிகபட்சமா 9 உடல்கள் வரை, பின்னிரவு வரைகூட இருந்து சிதையூட்டி இருக்கேன். அநாதைப் பிணங்களை இலவசமா சிதையூட்டுவேன்.

 சின்ன வயசுல, பக்கத்துல யாராச்சும் முட்டை சாப்பிட்டாகூட மூக்கை மூடிக்குவேன்.

இப்போ பிண வாடை பழகிப் போச்சு. அதான் வாழ்க்கை!’’ என்ற ஜெயந்தியின் கண்களிலும் படர்கிறது சிரிப்பு.

ஞாயிறு, 7 ஜூன், 2020

Covid 19 Spreading up Quickly In India


Covid 19 Spreading up Quickly In India

March 05.         30  Cases
March15.         114 Cases
March 25.        657 Cases
March 31.      1397Cases
April 05.          4289 Cases
April 10.         7600. Cases
April 20.        18539 Cases
April 30.        34863 Cases
May 05.         42836 Cases
May 06.         46524 Cases
May 07.          49854 Cases
May 08.          52952 Cases
May 09.          56342 Cases
May 10.           59662 Cases
May 11.            67152  Cases
May 12.           70756  Cases
May 13.           74281   Cases
May 14.           78003  Cases
May 15.           81970.  Cases
May 16.           85940  Cases
May 17.            90927  Cases
May. 18.           96129  Cases
May. 19.          101139  Cases
May. 20.          105750 Cases
May. 21.           112359 Cases
May. 22.          118376  Cases
May. 23.          125101.  Cases
May. 24.          131868. Cases
May. 25.          138845. Cases
May. 26.          145380. Cases
May. 27.           151767.  Cases
May. 28.          158333. Cases
May. 29.          165799. Cases
May. 30.          173763. Cases
May. 31.           182143. Cases
June  1.            190535. Cases
June  2.           198706. Cases
June 3.            207615. Cases
June 4.            216919. Cases
June 5.            226770. Cases
With this speed it will be
16 lakh up to end of this month

*VERY IMPORTANT*

🔆Please Do not leave home to buy anything, because the worst time is starting.

🔆As per studies
The horrible thing that happened in Italy was that this *CONTAGIOUS WEEK* which was ignored there and so thousands of cases came up together.

*HUMBLE REQUEST*
🔅DON'T VISIT ANYONE  🔅DON'T MEET ANYONE, 🔅DON'T EVEN VISIT CLOSE FAMILY, AS THIS IS NOT ONLY FOR YOUR SAFETY BUT YOUR LOVED ONES TOO.
🔅As This time you will be at the PEAK STAGE OF TRANSITION.

PLEASE .!!

*Send this message to all your relatives and friends*

புத்துயிர் பெற்ற ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம்


 புத்துயிர் பெற்ற ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம்.

 *தென்காசி* மாவட்டத்தின் வறண்ட பகுதிகளில் ஒன்றாக விளங்கும் கீழப்பாவூர், கடையம், ஆலங்குளம் ஒன்றிய பகுதிகள் பயன்பெறும் வகையில் ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நபார்டு வங்கி மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 66 ஆண்டு கால மக்களின் கனவு நனவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தென்காசி  மாவட்டத்தில் விவசாயத்திற்கு மிகவும் பிரசித்திப் பெற்ற பகுதி கீழப்பாவூர் ஒன்றியம். இதன் வடபகுதிகளான கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, குலசேகரப்பட்டி, மேலப்பாவூர், சடையப்புரம், கருமடையூர், மூலக்கரையூர், சாலைப்புதூர், மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, அருணாப்பேரி, நாகல்குளம், ராஜபாண்டி, வெள்ளகால், கழுநீர்குளம், மேலபட்டமுடையார்புரம், அடைக்கலப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் நெல், மிளகாய், தக்காளி, சிறிய வெங்காயம், பல்லாரி, வெண்டைக்காய், சுரைக்காய், அவரைக்காய், பூசணிக்காய், தடியங்காய் உட்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்த பகுதிகளுக்கு மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான புளியரை, கண்ணுப்புளிமெட்டு, செங்கோட்டை பகுதியில் இருந்து சிற்றாறு மூலம் மேலப்பாவூர், கீழப்பாவூர் பெரியகுளம், அருணாப்பேரி, நாகல்குளம் மற்றும் சாலைப்புதூர் கடம்பன்குளத்துக்கு தண்ணீர் வருகிறது. இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.
இதேபோல் ராமநதி மூலம் கடையம், மந்தியூர், கோவிந்தபேரி, பாப்பாங்குளம், பொட்டல்புதூர், மாதாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களுக்கும், கடனாநதி மூலம் ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், மன்னார்கோவில், பிரம்மதேசம், சிவசைலம், கருத்தப்பிள்ளையூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களுக்கும் பாசன வசதி பெறுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நநாடகா, ஆந்திரா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. கீழப்பாவூர் ஒன்றியத்தின் வடபகுதியில் விவசாயம் செழித்தாலும், அதன் நடுப்பகுதி மற்றும் கடையம், ஆலங்குளம் ஒன்றியத்தின் ஒரு பகுதிகளுக்குட்பட்ட குத்தாலப்பேரிகுளம், நாராயணப்பேரி குளம், சென்னெல்தாகுளம், புதுக்குளம், நாராயணப்பேரி முடித்தான்குளம், பத்மநாதப்பேரிகுளம், புங்கன்குளம், கைக்கொண்டார்குளம், வெள்ளாளன்புதுக்குளம், மைலப்புரம் ஆலந்தாகுளம், தெற்கு மடத்தூர் வடக்கு மற்றும் தெற்கு குளங்கள், பண்டாரகுளம் உள்ளிட்ட 15 குளங்கள் தண்ணீர் பெருகாமல் வறண்டே காணப்படுகின்றன.
இதன் காரணமாக திப்பணம்பட்டி, கல்லூரணி, சிவநாடானூர், நாட்டார்பட்டி, ஆவுடையானூர், அரியப்புரம், சென்நெல்தாபுதுக்குளம், பூவனூர், சிவநாடானூர், மைலப்புரம், வெங்கடாம்பட்டி, சின்னநாடானூர், தெற்கு மடத்தூர், வெய்க்காலிபட்டி, கரிசலூர் உட்பட  100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாயத்தை கைவிட்டு வேலை தேடி வெளியூருக்கு சென்று விட்டனர். பலரும், விவசாய நிலங்களை கிடைத்த விலைக்கு விற்கும் அவலத்துக்கு தள்ளப்பட்டனர். ஒரு சில விவசாயிகள்  கிணற்று தண்ணீர் மூலம் நெல், பல்லாரி, தக்காளி,  மிளகாய், வெ ண்டை, சிறிய வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பல்வேறு இன்னல்களுக்கு இடையே மகசூல் எடுக்கின்றனர். இந்நிலை தற்போதல்ல... கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. மேலும் அரியப்புரம், ஆவுடையானூர், திப்பணம்பட்டி, சென்னெல்தாபுதுக்குளம், நாட்டார்பட்டி, கொண்டலூர், பூவனூர், சிவநாடானூர், மைலப்புரம், வெங்கடாம்பட்டி, சின்னநாடானூர், தெற்கு மடத்தூர், பொட்டல்புதூர், வெய்க்காலிபட்டி, கரிசலூர், பாவூர்சத்திரம் செட்டியூர் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
இந்த பகுதியில் உள்ள குளங்களை நிரப்புவதற்கும், கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் ராமநதி - ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு. இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென விவசாயிகளும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2005ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நெல்லையில் நடந்த விழாவில் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் ரூ.3.64 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். ஆனாலும் இத்திட்டம் கிடப்பில் ேபாடப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு கீழப்பாவூர் மற்றும் கடையம் ஒன்றிய பகுதி விவசாயிகளை கொண்ட ராமநதி மேல்மட்ட கால்வாய் போராட்டக்குழு உருவாக்கப்பட்டு, பாவூர்சத்திரத்தில் மாபெரும் விவசாயிகள் மாநாட்டை  நடத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால் இத்திட்டம் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வேகத்தை ஏற்படுத்தியது. மேலும் இத்திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி சட்டசபையில் அப்போதைய தென்காசி எம்எல்ஏ சரத்குமாரும் தொடர்ந்து வலியுறுத்தினார்.
இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரின் உத்தரவுப்படி தலைமை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இத்திட்டத்திற்கு ரூ.42 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று ஒப்புதலை பெற்றனர். இத்திட்டத்தின் அவசியத்தை உணர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2015 செப்.25ம் தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் ராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் ரூ.42 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.கடந்த 2015 டிச.22ம் தேதி இதற்காக அரசாணை வெளியிடப்பட்டு அதன் பின் ஆய்வு பணிக்காக ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்து மண் பரிசோதனை, கால்வாய் செல்லும் பாதையில் தனியார் மற்றும் அரசு நிலங்கள் எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்பது போன்ற பணிகள் 2016ம் ஆண்டு நிறைவு பெற்று வரைவு திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
ஆனால் வழக்கம்போல் பைல்கள் தேங்கிக் கிடந்தன. இதையடுத்து தற்போதைய தென்காசி எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் இத்திட்டத்தின் அவசியம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து 2017-2018ம் ஆண்டுகளில் நிலம் கையகப்படுத்துவதற்கான கால்வாய் செல்லும் பாதைகள் உள்ள தனியார் நிலங்களில் நில அளவை பணிகள் நிறைவுற்று 80% நிலம் உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. இந்நிலங்களை கையகப்படுத்துவதற்கான நிர்வாக ஒப்புதல் பெறும் கோப்பு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு அதில் பலமுறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக நிர்வாக ஒப்புதல் பெறும் கோப்பு தற்போது நிதி துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. நிர்வாக ஒப்புதல் கிடைத்தவுடன் நிலங்கள் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கால்வாய் வெட்டும் பணிக்கான மதிப்பீடு திருத்தி அமைக்கப்பட்டு முன்பு 42 கோடி என்று இருந்த மதிப்பீடு தற்போது 41.08 கோடியாக மறுமதிப்பீடு செய்து இந்த கோப்பு அரசின் பரிந்துரையுடன் நபார்டு வங்கியின் ஒப்புதலுக்கு கடந்த 2019 ஜூலை மாதம் அனுப்பப்பட்டது. விவசாயத்தின் முக்கியத்துவம் கருதி நபார்டு வங்கி இத்திட்டத்தை மேற்கொள்ள நிதியுதவி வழங்க முடிவு செய்து அறிவித்தது. இதையடுத்து ராமநதி - ஜம்புநதி பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில்  இத்திட்டத்திற்கு ரூ.41.50 கோடி ஒதுக்கீடு கடந்த 26.2.2020ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 66 ஆண்டுகால கனவு திட்டம் விரைவில் தொடங்கும் என்பதால் இப்பகுதி விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..! தாராளமாக மக்கள் பார்க்கலாம்! நீதிமன்றம் கொடுத்த அனுமதி!


சசிகலா புஷ்பா அதிமுக கட்சியில் ராஜ்யசபா எம்பியாக இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து அந்த கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் தற்போது இணைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பாவின் ஒருசில அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா இம்மாதிரியான புகைப்படங்கள் என்னுடைய பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவே பரப்பப்பட்டு வருகிறது. ஒரு சிலர் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் தான் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபகாலமாகவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தொடர்ந்த இந்த வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சஹாய் எண்ட்லா அவர்கள் வெளியிட்டிருக்கிறார். அதாவது மாண்புமிகு நீதிபதி வெளியிட்டுள்ள அந்த தீர்ப்பில், மனுதாரர் சசிகலா புஷ்பாவின் அந்தரங்கம் என்பது எது? மக்கள் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என்று அறியக் கூடிய உரிமை பொதுமக்களுக்கு உண்டு என்பதை அலசி ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது. 

மக்களின் பிரதிநிதியாக கருதப்படும் அவர் யாரை சந்திக்கிறார் என்று மக்கள் அறிந்து கொள்வது என்பது நியாயம்தான். தன் கட்சியோடு சம்பந்தப்படாத மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த ஆண் ஒருவருடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் சந்தித்து பழகக்கூடியதைப்பற்றி அறிந்து கொள்வதற்கான முழு உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது என்று நீதிபதி கூறியிருக்கிறார். இந்த சந்திப்பு பொது நலனுக்காக என்று கூறவும் முடியாது அதே சமயத்தில் பொதுநலனுக்காகத்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்றும் சசிகலா தரப்பு வாதிடவும் இல்லை. 

ஆகையால் பேஸ்புக், யூட்யூபில் வெளிவந்திருக்கும் புகைப்படங்களை நீக்குவதற்காக தொடரப்பட்ட வழக்கில் இந்த புகைப்படங்களை நீக்கவோ அல்லது பார்ப்பதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளையோ விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளார். மேலும் புகைப்படத்தை நீக்குவதற்கான உத்தரவையும் ஃபேஸ்புக் , கூகுள் மற்றும் யூட்யூப் ஆகிய நிறுவனத்திற்கு வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். ஆகையால் இது குறித்து தொடரப்பட்ட சசிகலாவின் வழக்கு நீதிபதிகள் தள்ளுபடி செய்யப்பட்டது மேலும் பேஸ்புக் நிறுவனத்திற்கு இரண்டு லட்சமும் யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு தலா ஒரு லட்சமும் அபராதம் அளிக்குமாறு சசிகலா புஷ்பா இருக்கு உத்தரவிட்டுள்ளனர். 

புதன், 3 ஜூன், 2020

'தினத்தந்தி' குழுமம் ஹலோ எப்எம் ‘தி இந்து குழுமம்’ கலைஞர் தொலைகாட்சி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூஸ் 18 தமிழ்நாடு மற்றும் சில ஊடகங்களைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் மற்றும் மக்கள் தொலைகாட்சியிலும் அடாவடியாக ஊழியர்கள் அநியாய பணிநீக்கம்சம்பளக்குறைப்பு! விகடனை தொடர்ந்து வேந்தர் தொலைகாட்சியில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அநியாய பணிநீக்கம்! கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை வஞ்சிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து குரல்கொடுப்போம்!


'தினத்தந்தி' குழுமம் ஹலோ எப்எம் ‘தி இந்து குழுமம்’ கலைஞர் தொலைகாட்சி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூஸ் 18 தமிழ்நாடு மற்றும் சில ஊடகங்களைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் மற்றும் மக்கள் தொலைகாட்சியிலும் அடாவடியாக
ஊழியர்கள் அநியாய பணிநீக்கம்,சம்பளக்குறைப்பு! விகடனை தொடர்ந்து வேந்தர் தொலைகாட்சியில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அநியாய பணிநீக்கம்! கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை வஞ்சிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து குரல்கொடுப்போம்!


கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதை தொடர்ந்து, நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் சம்பள பிடித்தம் செய்யக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகமும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகமும் அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளன. தமிழக அரசும் நிறுவனங்களுக்கு இதே வேண்டுகோளை விடுத்துள்ளது.

ஆனால், மத்திய மாநில அரசுகளின் இந்த உத்தரவையும், வேண்டுகோளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் ஏறக்குறைய அனைத்து ஊடக நிறுவனங்களும் சம்பளக்குறைப்பை செய்துவருகின்றன. ஒரு சில நிறுவனங்கள் இதுவரை தொழிலாளர்கள் செய்த பணியை மதிக்காமல், அவர்களுடைய எதிர்காலத்தை கருத்தில்கொள்ளாமல் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய, திமுகவின் ஊதுகுழலான கலைஞர் தொலைகாட்சி,  கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் 40 சதவீதம் வரை ஊதிய குறைப்பு செய்துள்ளது. தன்னை கம்யூனிஸ்ட்டு என்றும் தொழிலாளர்களின் தோழன் என்றும் காட்டிக்கொள்ளும் என்.ராம் தலைமையிலான இந்து குழுமமும் 30 சதவீதம் வரை சம்பள குறைப்பு செய்துள்ளது. இதேபோல், சம்பளத்தை குறைத்ததுடன், 176 தொழிலாளர்களை ஒரே இரவில் ஈவு இரக்கமின்றி பணிநீக்கம் செய்துள்ளது விகடன் நிர்வாகம். தொழிலாளர் இயக்கத்தை தோற்றுவித்த காரல் மார்க்சும் எங்கள் கட்சியின் முன்னோடிகளில் ஒருவர் என்று கூறிக்கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சி, அதன் சார்பாக நடத்தப்படும் மக்கள் தொலைகாட்சியில் அநியாயமாக 50 சதவீதம் சம்பளகுறைப்பை அமுல்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னோடி பத்திரிகைநிறுவனமான தினத்தந்தி, தனது ஹலோ எப்எம் ரேடியோவிலும், தொலைகாட்சியிலும் பணியாற்றும் சுமார் 100 பேரை சட்டத்திற்குப் புறம்பாக பணிநீக்கம் செய்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரான அம்பானியால் நடத்தப்படும் நியூஸ் 18 குழுமம் கொஞ்சமும் நியாயமின்றி 10 சதவீதம் சம்பளத்தை குறைத்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய கல்வி குழுமமான எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கோடீஸ்வரர் பாரிவேந்தரால் நடத்தப்படும் வேந்தர் தொலைகாட்சி 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை இரக்கமின்றி வேலை நீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் அதிகம்பேரால் வாசிக்கப்படும் ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா, சம்பளகுறைப்பு மற்றும் ஆட்குறைப்பு செய்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியும் இணைந்துள்ளது. கடந்த 8 மாதங்களாக தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வந்த நியூஸ் 7 தமிழ் நிறுவனம் தற்போது திடீரென்று, ஆபிஸ் பாய் முதல் ஆசிரியர் வரை அனைவருக்கும் 15 சதவீதம் சம்பளத்தை குறைத்துள்ளது. இப்போதும், அந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளபாக்கி வைத்துள்ளது.

சம்பள குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள். தொழிலாளர்களின் வியர்வையும், ரத்தமுமே இன்று அவர்கள் பணத்தில் புரள்வதற்கும், படோபடமாக வாழ்வதற்கும் காரணமாகும். ஆனால் அந்த நன்றியை மறந்த அவர்கள், தொழிலாளர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட அநியாயத்தை செய்துவருகின்றனர்.

இதுவரை உலகம் கண்டிராதவகையில், கொரோனா என்ற பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஆனால், இப்படிப்பட்ட சூழலிலும், சிறிய அளவு லாபம் குறைவதைக்கூட முதலாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அத்துடன் தொழிலாளர்களின் உழைப்பால் தாங்கள் சேர்த்து வைத்த சொத்தின் ஒரு சிறு பகுதியைக்கூட இதுபோன்ற அவசரகாலத்தில் செலவழிக்க அவர்களுக்கு மனமில்லை. மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தாலும் அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பிணத்தை அடக்கம் செய்வதில் அவர்கள் லாபம் பார்க்க துணிவார்கள் என்பதையே இது உணர்த்துகிறது.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு குடும்பம் இருப்பதோ, அந்த குடும்பத்தில் பாலுக்காக ஏங்கும் ஒரு குழந்தை இருப்பதோ, அந்த தொழிலாளியின் சம்பளம்தான் அந்த குழந்தையின் பசியை போக்கும் என்பதோ இந்த முலாளிகளுக்கு தெரியாதா என்ன? இவை அனனைத்தையும் தெரிந்துகொண்டுதான், சிறிதளவு லாபத்தைக் குறைத்துக்கொள்ளகூட அவர்கள் தயாராக இல்லை.

ஒரு நிறுவனத்தில் தொடங்கிய சம்பள குறைப்பு தற்போது அனைத்து நிறுவனங்களுக்கும் பரவியுள்ளது. ஒரு நிறுவனத்தில் தொடங்கிய ஆட்குறைப்பை தற்போது மற்ற நிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இதை இப்படியே விட்டால் மனசாட்சியை கழற்றிவைத்துவிட்டு இன்னும் பல கொடுமைகளை செய்யத்துணியும் இந்த நிறுவனங்கள்.

ஆகவே, பத்திரிகைதுறையில் பணியாற்றும் அனைவரும் ஒருங்கிணைந்து நமக்கு எதிராக தொடுக்கப்படும் இந்த அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய தருணம் இது.

இந்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள சட்டமீறல் தொடர்பாக, பேரிடர் மேலாண்மைச்சட்டம், தொழில் தகராறு சட்டம் மற்றும் குறைந்தபட்ச ஊதிய சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக புகார் அனுப்பப்பட்டது. இந்த புகாரை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை, மாநில தொழிலாளர் நலத்துறைக்கு கடந்த 28.05.2020 அன்று உத்தரவிட்டுள்ளது.

ஆகவே, மத்திய தொழிலாளர் நலத்துறையின் உத்தரவின்படி,  மாநில தொழிலாளர் நலத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

சம்பள குறைப்பு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், அநியாய பணிநீக்கத்தை உடனே நிறுத்த வேண்டும் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்றும் அனைவரும் அமைப்பாக திரண்டு நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும் என்று அழைக்கிறோம்.

கொள்ளை நோயிலும், கொள்ளை லாபத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் இந்த நிறுவனங்களின் இந்த அநியாயத்தை எதிர்த்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், அனைத்து பத்திரிகையாளர்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து தளங்களிலும் போராடும் என்று உறுதியளிக்கிறோம்.