மதி செய்திகளின் இன்றைய பரபரப்பு செய்திகள் 05/07/17 !
தமிழக அரசின் ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் உமாபாரதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையரை நியமிப்பதில் சரியான நடைமுறைகளை பின்பற்றாதது ஏன் ? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 8 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
நியாவிலை கடைகளில் அனைத்து கட்சிகளும் ஆய்வு நடத்த அமைச்சர் மகாராஜ் ஒத்துக்கொள்வரா என எதிர்க்கட்சி தலைவர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.
இரட்டை வரி விதிப்பு முறை குறித்து தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - அபிராமி ராமநாதன்.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த சபாநாயகர் தனபால் வீடு திரும்பினார்.
சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.13 கோடி ஒதுக்கீடு - தமிழக முதல்வர்.
விவசாயிகள் இடம்பெயர்வதை தடுக்க உயர் நவீன வேளாண்மையை மேற்கொள்ள தமிழக அரசு திட்டம்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் தொழிலதிபர் விஜய்மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து நேற்று மும்பை சென்றிருந்தார் தினகரன்.மும்பையில் இருந்து டிடிவி தினகரன் பெங்களூரு பயணம்.பெங்களூர் சிறையிலுள்ள சசிகலாவை சந்தித்து பேச திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போலோ மருத்துவமனையில் எமன் உயிரை கேட்டவுடன் இல்லை என்று சொல்லாமல் ஜெயலலிதா உயிரை கொடுத்துவிட்டார் - அதிமுக எம்எல்ஏ ராமசந்திரன்.
திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்.
ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை வரி குறித்து சரியான முடிவு வரும்வரை படம் தயாரிக்க மாட்டோம் : லைகா நிறுவனம்.
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்கள் மூவர்நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.
நியமன எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்தது செல்லாது : நாராயணசாமி.
அதிமுகவை பொருத்தவரை சசிகலா அணி மட்டுமே; சட்டம் - ஒழுங்கு தொடர்பாக முதல்வரை சந்திப்பேன்: சுப்பிரமணியன் சுவாமி.
தேர்தலை சந்திக்க தயாரா என பேரவையில் திமுக கொறடா சக்கரபாணி கேட்டதற்கு தற்போதைய சூழலில் ஆட்சியை கலைத்துவிட்டு யாரும் தேர்தலை சந்திக்கும் நிலையில் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
தேர்தலில் ஓபிஎஸ் அணியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி அளித்துள்ளார்.
ஆர்.கே நகர் தேர்தலில் டி.டி.வி. தினகரன் போட்டியிடக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
மாவட்டங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கான தடை நீட்டிப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை : 5 மாவட்டங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, கரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நெல்லையில் நடந்த நியமனத்துக்கு தடை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் பெண்களால் அடித்துக் கொலை.
பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஆந்திராவில் எம்பி , எம்எல்ஏக்களிடம் ஆதரவு திரட்டினார்.
அரசியலுக்கு வந்தால் ரஜினிக்குத்தான் ஆபத்து தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் புலியாக இருந்தாலும் டெல்லிக்கு சென்றால் பூனைக்குட்டிதான் : சுப்பிரமணியன் சுவாமி.
தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடைவிதிப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன்.
ஜம்மு - காஷ்மீர் : அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக 7ஆவது யாத்திரை குழு புறப்பட்டது.
யூனியன் பிரதேச சட்டவிதிகளின்படி நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்துள்ளது . நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடைமுறைகள் பின்பற்றப்பட்டது : கிரண்பேடி.
கியூபாவில் மீண்டும் காதல் விடுதிகளைத் திறக்க முடிவு.
திருவள்ளூர் : வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.
கன்னியாகுமரி : கடல்சீற்றம் காரணமாக மேற்கு கடற்கரை சாலை- தேங்காய்பட்டினம் பகுதியில் சாலை துண்டிப்பு.
துபாயில் இருந்து அமெரிக்கா செல்பவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லலாம்: எமிரேட் விமான நிறுவனம் அறிவிப்பு.
செங்குன்றம் பாடியநல்லூரில் பிரபல ரவுடி வெட்டி கொலை போலீசார் விசாரணை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக