சனி, 8 ஜூலை, 2017

மதி செய்திகள் 3.30pm -8-7-2017-saturday..



மதி செய்திகள் 3.30pm -8-7-2017-saturday..

♈"ரத்தக் கண்ணீர்" வடிக்கும் 3 வயது சிறுமி... மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடும் தந்தை .ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத்தை சேர்ந்த 3 வயது சிறுமிக்கு கண்ணீருடன் ரத்தம் கலந்து வரும் நோய்க்கு ஆளாகியுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
♈ஸ்பைஸ் ஜெட் விமானம் விட்ட புகை காரணமாக இன்டிகோ விமான பயணிகள் பயணித்த பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற இந்த விபத்து குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேற்று மாலை சுமார் 5மணியளவில் டெல்லியிலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக, ஏர்போர்ட் பஸ் மூலம் பயணிகள் விமானத்திற்கு பயணித்தனர். அதேநேரம், டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் எஸ்ஜி-253 விமானம், பார்க்கிங் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது 'ஜெட் பிளாஸ்ட்' செய்துள்ளது அந்த விமானம், ஜெட் பிளாஸ்ட் என்பது, அதிவேகமாக புகையை வெளியேற்றும் ஒரு செயல்முறை. விமானங்கள் டேக்-ஆப் ஆகும்போது இதுபோல பெரும் உந்துதல் அதற்கு தேவைப்படும் என்பதால் ஜெட் பிளாஸ்ட் செய்யப்படும். அப்போது அருகே ஏதேனும் வாகனங்கள் நின்றால் அதை தூக்கி எறிந்திவிடும் அளவுக்கு புகை வெளியே வரும்.இப்படி ஜெட் பிளாஸ்ட் ஆன நிலையில், அதன் தாக்கத்தால் இண்டிகோ விமான பயணிகள் பயணித்த பஸ்சின் வலது முன்பக்க கண்ணாடி, வலதுபக்க ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன
♈தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக கலெக்டர்களாக நீடிக்கும் அதிகாரிகளால்,கொதிப்பில் உள்ளனர் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். கலெக்டர் பதவிக்காக 46 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பதவியை வழங்க, அரசு தயாராக இல்லை எனக் கொதிக்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்
♈குமரி மாவட்டத்தில் உள்ள குளத்தில் மணல் எடுக்க லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வருவாய் ஆய்வாளரை லஞ்சஒழிப்பு துறை கைது செய்தது.

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்

♈புதுக்கோட்டையில் சிக்கிய 1200 போலி மதுபாட்டில்கள்!

♈ஜி-20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் வன்முறையாக வெடித்தது, 200போலீசார் காயம்

♈எருமை கன்றுகளை எடுத்துச்சென்றதாக ஆறு பேருக்கு டெல்லியில் அடி உதை

♈மே.வங்கத்தில் கலவரம்: பா.ஜ., மீது மம்தா குற்றச்சாட்டு

♈இந்திய துணை தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

♈தேவையில்லாமல் இந்தியா செல்ல வேண்டாம்: சீனா எச்சரிக்கை

♈ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி

♈மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்ட தாவூத் கூட்டாளி கைது

♈ஹரிந்தர் பால் சாந்து சாம்பியன்

♈சென்னையில் ரூ. 6,402 கோடியில் மோனோ ரயில் திட்டம்: தமிழக அரசு

♈ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், கேரளாவில் ஒரு கிலோ கறிக்கோழியின் விலை, 150 ரூபாய் என எகிறி விட்டது. எனவே, ஒரு கிலோ, 87 ரூபாய் என்ற விலைக்கு மேல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில அரசு எச்சரித்துள்ளது

♈' ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை என்பது திட்டமிட்டு எடுக்கப்பட்டது,''என முன்னாள் மத்திய பொருளாதார விவகார துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்
♈  தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் மட்டுமல்ல மேலும் பல தீவிரவாத அமைப்புகள் மையம் கொண்டுள்ளன என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

♈🇮🇳   சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குட்டையில் மூழ்கிய நிலையில் 2மாணவிகள் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது

♈🇮🇳   போதை பொருள் கொடுத்து கொள்ளையடித்த கணவன் மற்றும் மனைவி திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த்ரெட்டி, உஷாஸ்ரீநம்பி இருவரும் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஐதராபாத்தில் கிரண் மற்றும் அவரது மனைவி ஜெகதீஷ்க்கு போதை பொருள் கொடுத்து கடத்தியது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳   அனைத்து அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன பேருந்துகளில் வை-ஃபை வசதி வழங்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஜி.விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார். கழிப்பிட வசதியுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் இரவு நேர நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளில் பயணிகளுக்கு ஏ.சி.யுடன் படுக்கை வசதியும் வழங்கப்படும்

♈🇮🇳   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தானியில் டெங்கு காய்ச்சலால் சிறுமி மைனுகா(8) உயிரிழந்துள்ளார். அந்தியூர்,பவானி, அம்மாபேட்டையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

♈🇮🇳   தலித் மக்களுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்க்கிறது: திருமாவளவன் வலியுறுத்தல்

♈🇮🇳   லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்.பி., விஸ்வேஸ்வரய்யா,மயிலாப்பூர் சரக துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராஜேந்திர குமார், அதே பிரிவில் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்பிசிஐடி டிஎஸ்பி கவிகுமார், ராயப்பேட்டை சரக துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். வண்டலூர் டிஎஸ்பி முகிலன் காஞ்சிபுரம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பக டிஎஸ்பி ஜான் சுந்தர், கோயம்பேடு சரக துணை கமிஷனராக நியமித்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

♈🇮🇳  மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சையைச் சேர்ந்த அமல்ராஜ் (73), ஜாக்குலின் (45) ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர், மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்

♈🇮🇳   நிலத்தடி நீர் பாதிக்கப்படவில்லை என்றால் சாதம் நிறம் மாற என்ன காரணம் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கதிராமங்கலத்தில் நிறம் மாறும் உணவு குறித்து விஞ்ஞானி விளக்கம் அளிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே தட்டத்தை வெவ்வேறு பெயரில் மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துகிறது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

♈  7.30pm -8-7-2017-saturday*  ♈🇮🇳

♈ *தாம்பரம் அருகே மணிமங்கலம் பெட்ரோல் பங்க் ஊழியர் சுந்தரம்(30)  என்பவரை, 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டிவிட்டு ரூ 12 ஆயிரத்துடன் பணப்பையை கொள்ளையடுத்து சென்றுள்ளனர். சேலையூர் சப் இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 6 பேரை போலிசார் தேடி வருகின்றனர்.*  ப்ளீஸ் செக்

♈  பிரிண்ட் மீடியா மீது கொரில்லா தாக்குதல் நடத்தியவரை சென்னை சிசிபி போலீஸ் கைது செய்தது...அந்த நபர் ஆனந்த்.தூத்துக்குடியைச் சேர்ந்த இவர் இன்போசிஸில் பணியாற்றி விட்டு திருட்டுத்தனமாக தமிழ், ஆங்கில நாளிதழ்களை, தமிழ் வார இதழ்களை இண்டர்நெட் வழியாக திருடி, Magnet. Com என்ற பெயரில் மாதம் லட்சமாக லட்சமாக கொள்ளையடித்தவர்.மேலும் விவரத்திற்கு...சென்னை மத்திய குற்றப்பிரிவு ஏ.சி. ரவிசேகர், இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோரிடம் பெறலாம்

♈   ஈஸ்வரனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் -வீதியில் வாழ்ந்த நரிக்குரவ குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் அம்பத்தூர் - இன்ஸ்பெக்டர் விஜய ராகவன்! குவியும் பாராட்டுக்கள்!அம்பத்தூர் பாலத்திற்கு அடியில் இருப்பிடமின்றி வாழ்ந்து வரும் நகரிக்குரவ மக்களின் குழந்தைகளை அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜய ராகவன் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.காவல் துறை வாகனத்திலேயே நரிக்குர பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து சென்று பிறகு பள்ளி முடிந்ததும் அவர்களது இருப்பிடித்திற்கு காவல்துறை வாகனத்திலேயே அழைத்து வந்து விடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நரக்குரவ பெண் தெரிவித்துள்ளார்.எங்கள் பிள்ளைகளும் நாளை படித்து பெரியாளாக வருவார்கள் என பெருமிதத்தோடு தெரிவித்து காவல் துறை ஆய்வாளர் விஜய ராகவன் ஐயா விற்கு நரிக்குரவ பெண்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என பல கனவுகளோடு காவல் துறை பணியில் சேருபவர்களில் ஐயா விஜய ராகவன் அவர்கள் ஒருவர் என்பதை அவரின் இந்த மனித நேயச் செயல் எடுத்துக் காட்டுகின்றார்!Forwarded news

♈ *மூத்த வீரர்களும் முன்னாள் வீரர்களும் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி**இன்னும் சில நாட்களில் நமது குணியமுத்தூரின் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விலகி இருக்கும்  அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டினுள் வருவதற்காகவும் ,நண்பர்களை மீண்டும் சந்திப்பதற்கான நிகழ்வினை நடத்தவும் மாபெரும் கிரிக்கெட் போட்டியினை RED ROSE CRICKET CLUB BALL BREAKER'S TEAM L.S.CRICKET CLUB SIGMA FURN இணைந்து நடத்த உள்ளது.தொடர்புக்கு ஆ. செல்வக்குமார் Captain -Red rose cricket club -9894010626-இல. ரகு வீரமணி-Wise captain - Red rose cricket club-9486057107-ஆ. ரவி(எ) ஜெயச்சந்திரன்-வழிகாட்டி - red rose cricket club-9790351444-நாகமாணிக்கம்-Captain - ball breakers cricket team-8608309876-ஆனந்த்-Captain - L.S cricket club-9894907198

♈ ஆசிய தடகளம் சாம்பியன்ஷிப்: தடை தாண்டுதலில் இந்திய வீராங்கனை சுதா தங்கம் வென்றார்

♈  கோவை: தென்னம்பாளையத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு ஏற்பட்டது. விடுதி உரிமையாளர் செல்குமார் துப்பாக்கியால் சுட்டதில் காவலாளி தேவராஜ் காயமடைந்துள்ளார். தேவராஜ் முதுகில் பாய்ந்த குண்டை கத்தி மூலம் செல்வகுமார் அகற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலியால் துடித்த தேவராஜ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

♈  விவசாயிகள் அடுத்தகட்ட போராட்டத்திற்கு சென்றால் தான் பலன் கிடைக்கும் என்று நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார். போராடும் முறையில் மாற்றம் வராவிட்டால் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று கொலை விளையும் நிலம் ஆவணப்பட வெளியீடு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசினார்

♈   சேலம்: விரகனூர் இன்ஸ்பெக்டர் , எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

 ♈    ஒரே நாளில் மக்கள் நீதிமன்றத்தில் 1.12லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

♈   புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்தும்பொருட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள  தேர்வுக்கூடத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் ச. செந்திவேல்முருகன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் எம்.தமிழ்ச்செல்வன், மாவட்ட தேர்வுத்திட்ட அமைப்பாளர் கே. திராவிடச்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு தக்கஆலோசனைகள் வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து பாட வாரியாக வல்லுனர் குழுவினர்  கலந்துகொண்டு 10-ம் வகுப்பு மாணவர்களை அரசுப்பொதுத்தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற வைப்பது பற்றியும், அதிக மதிப்பெண் பெற வைப்பது குறித்தும் விரிவாகவும், விளக்கமாகவும் ஆசிரியர்களுக்கு எடுத்துக்கூறினார்கள். இரண்டு நாள் நடைபெற்ற பயிற்சியில் முதல்நாளான 7-07-2017(வெள்ளிக்கிழமை) அன்று கணிதம்,அறிவியல், ஆங்கிலம், ஆகிய பாடங்களுக்கும், இரண்டாம் நாளான 08-07-2017(சனிக்கிழமை) அன்று சமூக அறிவியல், தமிழ் ஆகிய பாடங்களுக்கும் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை கல்வி மாவட்டங்களை சேர்ந்த3000 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

♈  9.30pm -8-7-2017-saturday*  ♈

♈பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது. ரஷ்ய அதிபர் புடின், டிரம்ப்பிடம் பத்திரிக்கையாளர்களை நோக்கி இவர்கள் தானே உங்களை காயப்படுத்தியவர்கள் என்று கேட்டார்.அதற்கு டிரம்ப் சரியாக சொன்னீர்கள்,ஆமாம் இவர்கள் தான் என்னை காயப்படுத்தினார்கள் என்று கூறினார்.இவர்கள் இதை சத்தமாக பேசவில்லை என்றாலும், அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்கள் காதில் விழும் படி பேசினர்.ஏனெனில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபகாலமாக அமெரிக்க ஊடகங்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார். அமெரிக்க ஊடகங்களுக்கும், டிரம்புக்கும் மோதல் போக்கு நிலவு வருகிறது. அது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கண்டனப் பதிவுகளை பதிவேற்றம் செய்து வருகிறார். அதன் காரணமாகவே டிரம்ப்பிடம்,புடின் இது போன்ற கேள்வியை கேட்டதாக கூறப்படுகிறது

♈அந்தமானில் வசிக்கும் ஜாரவா பழங்குடி இன மக்களை காட்டும் வீடியோ காட்சிகளை அகற்றும்படி யூ டியூப் இணையதளத்துக்கு இந்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது

♈ இந்தியா நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் தீவிரவாத தலைவர் ஒருவரின் முதலாமாண்டு நினைவஞ்சலியின் போது மோதல் வெடித்தது.கற்களை வீசி தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பதிலடி தரும் விதமாக பாதுகாப்பு படைகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன

♈  கொழும்பு, தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய மிருக காட்சி சாலையை இரவு நேரத்தில் மக்கள் காட்சிக்காக திறந்து வைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்

♈   ஆந்திர மாநிலம் கடப்பா வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 6 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஸிப்பேட்டையில் செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு செம்மரம் வெட்டி கடத்தியவர்களை கைது செய்தது. கடத்தலுக்கு பயன்படுத்திய உ.பி பதிவெண் கொண்ட காரையும் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

♈ சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரியாசுதீன் என்பவருக்கு ராஜஸ்தான் போலீஸ் நோட்டீஸ் விடுத்துள்ளது. ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப்பிரிவு சம்மன் விடுத்துள்ளது. ஜூலை 15ம் தேதி ஜெய்பூரில் கூடுதல் டி.ஜி.பி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது

♈ அரசு முறைப்பயணம் முடிந்தது: நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி

♈ஆசிய தடகளம்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

♈ அடுத்த ஜி-20 மாநாடு அர்ஜென்டினாவில் நடைபெறும்

♈ துாத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

♈ லோக் ஆயுக்தா ஏன் அமைக்கப்பட வில்லை :ஸ்டாலின்

♈ மே.வங்கம் : பா.ஜ., திரிணமுல் மோதலில் ஒருவர் பலி

♈ திரை உலக கலைஞர்களுக்கு பாலசந்தர் ஒரு ஆசிரியர்: வைரமுத்து

♈ உளுந்தூர் பேட்டை அரசு பள்ளியில் தீ விபத்து

♈  ஐ.ஏ.எஸ்  சகாயம் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இதில் வீணாக கூடிய இளைஞர்களின் சக்தியை நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். தலைமை பண்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.மணல் உள்ளிட்ட இயற்கை வளம் கொள்ளை போவதை தடுக்க வேண்டும். அரசு அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். கிரானைட் முறைகேடு குறித்து எனது மனசாட்சிபடி விசாரணை செய்து அதன் அறிக்கையை கோர்ட்டுக்கும், அரசுக்கும் வழங்கிவிட்டேன். இனி நீதிமன்றம், அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக