சனி, 8 ஜூலை, 2017

மதி செய்திகள் 9am -9-7-2017-sunday.

மதி செய்திகள் 9am -9-7-2017-sunday.

♈தமிழகம் கலவர பூமியாகும்- அமைச்சர் பொன். ராதா பகிரங்க மிரட்டல்

♈*ஆன்டனி நெல்சன்*  என்னும் 24 வயது சகோதர்க்கு *சிறுநீரக மாற்று  அறுவைசிகிச்சை* செய்ய வேண்டுமாம்.அறுவை சிகிச்சை செய்வதற்கு *B POSITIVE* இரத்தம் *4 UNIT* தேவைப்படுகிறது ..தயவு செய்து *கோவை*   சுற்றுப்பகுதியில் உள்ள .*B POSITIVE* நண்பர்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்ய வேண்டுகிறோம்..இடம் :: அபிராமி  மருத்துவமனை, சுந்தாரபுரம் கோவை.நாள் :: 10.07.2017

மாலை 05.00 மணிக்குள் தொடர்புக்கு :7373535954 ::சிகரங்கள்

♈  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திவ்ய தரிசனம் எனப்படும் மலைப்பாதை பக்தர்களுக்கான தரிசனம் வார இறுதிகளில் ரத்து செய்யப்படும் திட்டத்தை நேற்று முதல் அமலுக்கு வந்தது

♈  சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தேதி விரைவில் வெளியாகக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன

♈  திருவள்ளூர் : 600 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல்

♈மேட்டூர் அணை நீர் வரத்து 37 கன அடியில் இருந்து 1912 கனஅடியாக அதிகரிப்பு

♈ராமநாதபுரம்: 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

♈திருச்சி: 3 வது நாளாக மணல் குவாரி முற்றுகை

♈ஊட்டி: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

♈4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

♈இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

♈இன்று வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்

♈மதுரையில் இன்று ‛ஹேப்பி ஸ்டிரீட் ஜாலி சண்டே'

♈கோவை : இலங்கை அகதிகள் - இந்து முன்ணணி தலைவர்கள் மோதல்

♈  தமிழகத்தில் 2000 முதல் 2017ம் ஆண்டு வரை 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டதாக விவசாயிகள் சங்கத்தினர்தெரிவித்தனர்

♈ அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10 ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், விளையாட்டு பயிற்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது

♈  ''தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் குறித்து, 'மொபைல் ஆப்' மூலம்,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர், குழந்தைசாமி கூறினார்

♈   தமிழக அளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சுயம்வரம்,மதுரையில், வரும், 13ல் நடக்கிறது. தேர்வாகும் ஜோடிகளுக்கு சென்னையில்,ஆக., 20ல், இலவச திருமணம் தடபுடலாக நடக்கிறது

♈ 'அரசு கட்டடங்களின் பராமரிப்பு சரியில்லை' என, பொதுப்பணித் துறைக்கு,பல்வேறு துறை உயர் அதிகாரிகள், கடிதம் மூலம் புகார் தெரிவித்து வருகின்றனர்

♈ அடுத்தடுத்த விபத்துகளை தொடர்ந்து, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உட்பட, வி.ஐ.பி.,க்களின் ஹெலிகாப்டர் பயணத்தை, மஹாராஷ்டிர அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

♈பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.05 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.19 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 9) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது

♈ ஓசூரில் டி.வி.எஸ் நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

♈ திருப்பூர்: ஒரு கோடிமதிப்புள்ள செல்லாத ரூ.500 ,ரூ.1,000 நோட்டுக்களை வைத்திருந்ததாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

♈ தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலத்தில், பூமிக்கு அடியில் பதித்த கச்சா எண்ணெய் குழாயில் கடந்த30ம் தேதி கசிவு ஏற்பட்டது. இதற்கு எதிராக போராட்டம் நடத்திய 10 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்கக்கோரி கடந்த 1ம் தேதி முதல் கதிராமங்கலத்தில் கடையடைப்பு நடந்து வருகிறது. இது, நேற்று 8வது நாளாக தொடர்ந்தது

♈இன்று (ஞாயிறு) :அரசு விடுமுறை என்பதால் சட்டப்பேரவை கூட்டம் இல்லை. நாளை காலை 10 மணிக்கு வழக்கம்போல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். அதைத்தொடர்ந்து,வருவாய்த் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு பதில் அளித்து,வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவார்

♈ கதிராமங்கலத்தில் 8வது நாளாக கடையடைப்பு போராட்டம்

♈ காசிமேடு மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. அதில்,ஆந்திர மாநிலத்தில் உள்ள பொன்னான்குடி மீனவ கிராமத்தில் ரவுடி போல் செயல்படும் 2பேர் மீனவர்களை தாக்கி, படகுகள்,வலைகளை பறித்து செல்கின்றனர். மேலும்,கடந்த வாரம் மாயமான காசிமேடு மீனவர்கள் என்ன ஆனார்கள் என இதுவரை தெரியவில்லை. இதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, மீனவர்களை மீட்டு சென்னைக்கு கொண்டு வரவேண்டும். இதுபோன்ற பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், போராட்டம் நடத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

♈  மாட்டுக்கறி கொண்டுசென்றதாக ஜூனைத் கான் என்ற சிறுவன், டெல்லியில் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்

♈  திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவிலில் பொக்கிஷம் உள்ள பி ரகசிய அறையை திறப்பதற்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது


♈  12pm -9-7-2017-sunday*  ♈

♈இத்தாலியில் நடைபெறும் ஃபியட் 500 காரின் 60வது பிறந்தநாளை குறிக்கும் பேரணி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபியட் 500 கார் ஆர்வலர்கள் ஐரோப்பா முழுவதிலிருந்து வருகை புரிந்துள்ளனர்

♈  ஒவ்வொரு செல்லிலும் புற்றுநோய் பரவுவதை துல்லியமாக விடியோவில் படம் பிடித்துள்ளனர் ஜப்பான் குழுவினர்.இந்த வீடியோவில், இயல்பான உடல் திசுக்கள் பச்சை நிறமாகவும் புற்றுநோய் திசுக்கள் அடர் சிவப்பு நிறமாகவும் காட்டப்பட்டுள்ளது.அந்த ஆபத்தான முறையை விளக்க இந்த தொழில்நுட்பம் பயன்படும் என டோக்கியோ பல்கலைக்கழகத்தின் குழு மற்றும் ரிகென் க்வாண்டிடேடிவ் உயிரியல் மையத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.எலியின் மீது இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.உடல் முழுவதும் புற்றுநோய் பரவும் ஆபத்தான நிலையை `மெடாசிஸ்` என்பர்.புற்றுநோய் பரவுவதற்கு முன் அதனை குணப்படுத்துவது எளிதாகும்.புற்றுநோய் கட்டி வளர வேண்டும் எனவே அது உடைந்து துண்டுகளாகி ரத்த ஒட்டத்தோடு சென்று புதிய திசுக்களை தாக்குகிறது.புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்த ஆழ்ந்த புரிதல் அதன் சிகிச்சைக்கான புதிய யோசனைகளுக்கு வழிவகுக்கும்

♈  செய்திகளின் உண்மை நிலையை ஆராய கூகுள் ஒரு பிரத்யேக கருவி ஒன்றை தொடங்கியுள்ளது.அது உண்மை நிலையை சரி பார்க்கும் இணையதளங்களிலிருந்து முடிவுகளை உங்கள் பக்கத்தின் முதலில் தேடல் முடிவாக தரும்.அதன் மூலம் நீங்கள் தேடும் செய்தி உண்மையா இல்லையா என்பதை அறியலாம்.எடுத்துக்காட்டாக, "டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளார்" என்பதை நீங்கள் தேடினால், Politifact எனும் உண்மையை சரிபார்க்கும் இணைய தளத்தின் செய்திகளே முதல் இரு முடிவுகளாக வரும்.இரணடாவது இணைப்பில், கூறப்பட்டது என்ன என்பதையும், யார் அதைக் கூறினார் என்பதையும் அது குறித்த உண்மை-சோதனை முடிவுகளையும் ஒரே நேரத்தில் காணலாம்

♈  பருவநிலை மாற்றம் தொடர்பாக எட்டப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவதை ஜி-20 குழுவில் உள்ள பிற 19 நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதே நேரத்தில், தாங்கள் பாரிஸ் உடன்பாட்டை செயல்படுத்துவதை முன்னெடுத்துச்செல்வது என்ற உறுதிமொழியை புதுப்பித்துக் கொண்டனர்

♈ பல்வேறு எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வட கொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா - தென் கொரியா கூட்டுப்படைகள் பிரமாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட்டன

♈ஆயுதம் வழங்குவதால் ஏற்படுகிற ஆபத்தைத் தனது நாடு சந்திக்கத் தயாராக இருக்கிறது'' என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்

♈ மும்பை பாந்த்ராவில் குடிநீர் குழாய் உடைந்ததில் தமிழர்களின் உடைமைகள் சேதமடைந்துள்ளதால் அரசின் உதவியை நாடியுள்ளனர்

♈புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட அமைச்சரிடம் முறையீடு செய்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை  சந்தித்து புதுக்கோட்டையில் நெடுவாசல் மக்கள் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து முதல்வரை நெடுவாசல் மக்கள் சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்

♈ மீனவர்கள் மீதான அபராத மசோதாவை இலங்கை திரும்ப பெறவேண்டும்: ஜி.கே வாசன்

♈திண்டுக்கல்-சிறுமலை சாலையில் மதுக்கடை அருகே 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இளைஞர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

♈கல்விக்காக பல சாதனைகள் செய்தவர் காமராஜர்: ஸ்டாலின்

♈ஏழை, எளியோருக்கு உதவுவதே மோடியின் நோக்கம்: வெங்கையா நாயுடு

♈காஞ்சிபுரத்தில் ரவுடி ஸ்ரீதர் மகன் சந்தோஷிடம் போலீசார் விசாரணை

♈ஜூலை 14-ந்தேதி ரிலீசுக்கு வரிசை கட்டும் 6 படங்கள்

♈நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டு பணியாளர் மரணம்

♈புதுச்சேரியில் விசாரணை கைதி தப்பியோட்டம்

♈தேர்தலை சந்திக்க அதிமுக அரசு தயாராக உள்ளது : அமைச்சர் கடம்பூர் ராஜூ

♈மேட்டூரில் 600 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்

♈உசிலம்பட்டியில் எம்.எல்.ஏ., வீடு முற்றுகை

♈மேற்கு வங்கத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்து வணிகர்கள் தங்களது வியாபாரத்தை மீண்டும் துவங்க முஸ்லிம் சமுதாயத்தினர் உதவி செய்துள்ளனர்

♈புதுச்சேரியில் பிரேதங்கள் எரியூட்டுதல், அடக்கம் செய்வது குறித்து முறையான பதிவுகள் தேவை. மின்தகன மேடை குறித்து வரும் புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கேட்டுக் கொண்டுள்ளார்

♈  பால்கலப்படம் செய்வோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கடிதம் எழுதி உள்ளனர்.
அதில், நடப்புக் கூட்ட தொடரிலேயே பால் கலப்பட சிறப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆவின் நிறுவனத்துடன் முகவர்களுக்கு நேரிடையான வர்த்தக தொடர்புகளை வழங்க வேண்டும். ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை ஒரு லிட்டருக்கு ரூ 5 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்

♈ இந்தியாவிலேயே முதல்முறையாக ஆமதாபாத்தை உலகப் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது

♈  இந்து சமய அறநிலையத்துறை வடபழனி வேங்கீஸ்வரர் கோவில் குளத்தின் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அப்புறப்படுத்த பிறப்பித்த  உயர்நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துமா அல்லது தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதித்து கிடப்பிலேயே வைக்குமா???






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக