முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை* !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் பூங்குன்றன் அவருக்கு உதவியாளராக இருந்தார். ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமானதாக கருதப்படும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு அவர் இயக்குநராகவும் இருந்து வருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பூங்குன்றனுக்கு அ.தி.மு.கவினரிடையே செல்வாக்கு அதிகமாக இருந்தது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அளிக்கும் புகார்கள் இவரைத் தாண்டியே ஜெயலலிதாவுக்கு செல்ல முடியும் என்ற சூழல் இருந்தது. தற்போது வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பூங்குன்றனிடம் விசாரணை நடத்திவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டெல்லியிலுள்ள வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் வைத்து நடைபெறும் இந்த விசாரணையில் அவரது பெயரில் இருக்கும் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக