துவைத்ததும் 'அயர்ன்' செய்யும் கருவி:
இந்தியர் அசத்தல்..
🥀துணியை துவைத்த உடன், அது காயும் வரை காத்திருக்க வேண்டாம்; உடனேயே, '
அயர்ன்' செய்யும் வகையில், 'டிரையர்' எனப்படும் துணியை உலர்த்தும், புதிய கருவியை வடிவமைத்துள்ளார், அமெரிக்க வாழ் இந்தியர்.
🥀அமெரிக்காவின் டென்னசியில் உள்ள ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர், இந்தியாவை பூர்வீகமாக உடைய விரால் படேல்.
🥀 *இவர், புதிய வகை டிரையரை வடிவமைத்து உள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:*
🥀 துணியை துவைக்கும் வாஷிங் மெஷினில், டிரையர் வசதி இருக்கும். ஆனால், அதில், மிக வேகமாக இயக்கப்படுவதுடன், சூட்டை ஏற்படுத்துவதன் மூலம், துணிகளுக்கு இடையே உள்ள தண்ணீர் வெளியேற்றப்படும்
🥀அதன் பின், அதை காய வைத்து, சிறிது நேரத்துக்கு பிறகே, அயர்ன் செய்ய முடியும்.ஆனால், நாங்கள் வடிவமைத்துள்ள, 'அல்ட்ராசோனிக் டிரையர்' மூலம், துவைத்த துணியை, நேரடியாக இதில் பயன்படுத்தலாம்.
🥀அது, துணிகளின் இழைகளுக்கு இடையே உள்ள தண்ணீரை உறிஞ்சி எடுத்து விடுகிறது.
🥀 வழக்கமான டிரையரில், சூட்டின் மூலம் தண்ணீர் ஆவியாக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
🥀ஆனால், புதிய டிரையரில், வெப்பம் இல்லாமலேயே தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. மேலும், அப்படியே அயர்ன் செய்து எடுத்து வைக்கலாம்;
🥀இது வழக்கமான டிரையரை விட, ஐந்து மடங்கு திறன் மேம்பட்டது.
🥀வழக்கமாக, துணியை துவைத்து, காயவைத்து, அயர்ன் செய்வது போன்றவற்றுக்கு ஆகும் நேரத்தில், பாதி நேரம் தான், இதற்கு தேவைப்படும்.
🥀 மின்சார செலவும் குறையும்.இந்த புதிய டிரையரை சந்தைப்படுத்தும் வகையிலும், குறைந்த விலையில் கிடைக்கும் வகையிலும், சிறு மாற்றங்களை செய்து வருகிறோம்.
🥀 அடுத்த, இரண்டு முதல், ஐந்து ஆண்டுகளுக்குள், இது விற்பனைக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக