திங்கள், 10 ஜூலை, 2017

Mathi News 6.30am -11-7-2017-tuesday...



Mathi News 6.30am -11-7-2017-tuesday...

♈  எம்பி, எம்எல்ஏக்களுக்கு அள்ளிக்கோ... மூத்த குடிமக்களுக்கு குறைச்சுக்கோ... ரயில்வே பகீர் திட்டம்-மானிய விலை சிலிண்டர் சேவையை வசதியானவர்கள் விட்டுக்கொடுக்க அரசு கோரியது போல், ரயில் பயணங்களில் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் கட்டணச் சலுகைகளை விட்டுக்கொடுக்குமாறு, விரைவில் மத்திய அரசு கோரிக்கைவிட உள்ளது. முதியவர்கள் மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் அரசு கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு பலதரப்பினரிடையேயும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
♈  பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைப்பதை எதிர்த்து ஜூலை 12-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 1 வரை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அகில இந்திய பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது

♈  சென்னை: புளியந்தோப்பு, ஜெஜெ நகர்,பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (எ) மாட்டு மணிமாறன் (24),பிரபல ரவுடி. நேற்று முன்தினம் காலை புளியந்தோப்பு போலீசார், அடிதடி வழக்கு சம்பந்தமாக மணிமாறனை கைது செய்தனர். பின்னர், மாஜிஸ்திரேட் வீட்டில் அவரை ஆஜர்படுத்திவிட்டு, இரவு  9 மணியளவில் புழல் சிறையில் அடைப்பதற்காக மாநகர பஸ்சில், 2 போலீசார் கொண்டு சென்றபோது அவர்களை தாக்கிவிட்டு மணிமாறன் தப்பினார். புகாரின்பேரில் புழல் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் புனித அந்தோணியார் நகர் 3வது தெருவில் பதுங்கியிருந்த மணிமாறனை கைது செய்தனர்

♈  வேளச்சேரி: மீஞ்சூர் நந்தியம்பாக்கம் ஆனந்தா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (20), பிகாம் பட்டதாரி. இவரது நண்பர் விக்னேஷ் (21). இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் 6 பேருடன் பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச் வந்துள்ளார். நேற்று மதியம் கடலில் 7 பேரும்  குளித்துள்ளனர். அப்போது, கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் மூழ்கி ஸ்ரீதர் மாயமானார். இதை பார்த்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.புகாரின் பேரில் சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்

♈  காஞ்சிபுரம் திருத்தேரியில் வசித்துவரும் கேரளாவை சேர்ந்த நந்து என்ற இளைஞரை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு காரில் கடைக்கு சென்ற நந்துவை 2 பேர் கடத்திச் சென்றதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது

♈  பீகாரில் மின்னல் தாக்குதல்: 2 நாளில் 32 பேர் பலி

♈  பெங்களூருக்கு கடத்தப்பட இருந்த ஆயிரத்து 100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்-வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில்

♈  அரியலூரில் வடமாநிலத்தை சேர்ந்த நகை கொள்ளையர்கள் கைது

♈  ரஷ்ய ராணுவத்தினர் 105-வது ஆண்டு நிகழ்த்திய விமான சாகசம்

♈  கலிபோர்னியாவில் சர்வதேச பைக் பந்தயத்தின் இரண்டாவது சுற்றில் அயர்லாந்து வீரர் வெற்றி

♈எதிர்கட்சிகள் டில்லியில் இன்று ஆலோசனை கூட்டம்

♈ ஸ்ரீவில்லிபுத்தூர்:விபத்தில் 26 பயணிகள் காயம்

♈ மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் திடீர் தீ

♈ யாத்திரிகள் தாக்குதல் பின்னணியில் லஷ்கர் - இ- தொய்பா -காயமடைந்த யாத்ரீகர்களுக்கு காஷ்மீர் முதல்வர் நேரில் ஆறுதல் -அமர்நாத்யாத்ரீகர்கள் மீது தாக்குதல்: காங்., தலைவர் சோனியா கண்டனம் -அமர்நாத்யாத்ரீகர்கள் மீது தாக்குதல்: அருண்ஜெட்லி கண்டனம் -பலியான 7 யாத்ரீகர்களும் குஜராத்தை சேர்ந்தவர்கள் -அமர்நாத்யாத்ரீகர்கள் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம் -அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்: மத்திய அரசு ஆலோசனை

♈ 'வங்கிகளிடம், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல்,பிரிட்டனுக்கு தப்பியோடிய, தொழிலதிபர் விஜய் மல்லையாவை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏன் ஆஜர்படுத்தவில்லை' என, மத்திய அரசிடம், சுப்ரீம் கோர்ட், கேள்வி எழுப்பியுள்ளது

♈ தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஜூலை-11ம் தேதி) 144 தடைஉத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது

♈ வங்கப்புலி என்றழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி சமீபத்தில் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார். மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ள மெட்ரோ ரயில் ஸ்டேசனிற்கு கங்குலி பெயர் வைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



♈ 12.30pm -11-7-2017-tuesday*

*இன்று காலை கடற்கரை சாலையில் உழைப்பாளர் ♈சிலை எதிரில் சற்று தள்ளி உள்ள பேருந்து நிலையம் அருகில் ஒரு ஆட்டோ யூ டர்ன் அடித்தது. முதல்வரின் வருகைக்காக பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து சார்ஜென்ட் ஒருவருக்கு  கோபம் வந்து உட்டாரு ஒரு அறை . அவரை முறைத்தபடியே ஆட்டோ ஓட்டுனர் சென்று விட்டார். எப்படி பட்ட கடமை உணர்ச்சி பாருங்க

♈திருவாரூர் : நீடாமங்கலம் அருகே நல்லிக்கோட்டையில் 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.குடிநீர் தொட்டியில் மணலுடன் கலந்த நீரை பெருகியதால் கிராம மக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது

♈நெடுவாசல் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது : அமைச்சர் எம்.சி.சம்பத்

♈தாம் இந்திரா காந்தியின் பேத்தி; சஞ்சய் காந்தியின் மகள் என டெல்லியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறார் 48 வயது பெண் பிரியா சிங் பால். இந்து சர்க்கார் படத்தில் என் தந்தை சஞ்சய் காந்தியை பற்றி தவறாக சித்தரித்துள்ளதாக 48வயதாக பிரியா சிங் பால் என்பவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பரபரப்பை கிளப்பியுள்ளார். தாம் குழந்தையாக இருந்த போதே தத்து கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் பின்னாளில்தான் சஞ்சய் காந்தி மகள் என தெரியவந்தது எனவும் பிரியா சிங் பால் கூறியுள்ளார். அத்துடன் தந்தை சஞ்சய் காந்தியை பற்றி இழிவாக இந்து சர்க்கார் படம் சித்தரித்துள்ளதால் இத்தனை ஆண்டுகாலமாக மறைத்த உண்மையை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கிறார் பிரியா சிங் பால். மேலும் தாம் டிஎன்ஏ பரிசோதனைக்கும் கூட தயார் எனவும் சவால் விடுத்திருக்கிறார் பிரியா சிங் பால்
♈அமெரிக்காவில் வாழும் இந்தியருக்கு 27ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனை நிறைவடைந்த பின் அவரை நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
♈சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏக்களுக்கு -சுவை மிகுந்த மீன் வழங்கப்படும்: ஜெயக்குமார்

♈இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் சர்க்கரை மீதான வரியை 10 சதவீதம் உயர்த்த மத்திய வருவாய்த்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

♈அமெரிக்கவில் உள்ள மிசிசிபி மாகாணத்தில் கேசி-130 ரக கடற்படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஆறு ஒன்றின் கடற்கரையை ஒட்டிய டெல்டா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் விமானம் சுக்கு நூறாக சிதறி தீப்பற்றி எரிந்தது. இதில் உயிரிழந்த 12 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விபத்துள்ளான விமானத்தில் 16 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

♈ வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சுரன்ஸ் தொகையை முழுமையாக வழங்கவில்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் அருகே குமராட்சியில் ஐசிஐசிஐ வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

♈கோவையில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த திருடன், அந்த வீட்டில் இருந்த நகை, பணம், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்தது மட்டுமின்றி பிரிட்ஜில் இருந்த ஸ்னாக்ஸ்,கூல்டிரிங்க்ஸ் ஆகியவற்றை சாவகாசமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

♈ சென்னை, போரூர் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் துவக்கி வைத்தனர்
♈  காஷ்மீர் கிளம்பினார் ராணுவ தளபதி பிபின் ராவத்

♈ துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் காந்தி?

♈ கோவை வேளாண் பல்கலையில் உயிரி தொழில்நுட்ப மையம்: முதல்வர்

♈ தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

♈ விவசாயிகளை பாதிக்கும் திட்டத்திற்கு அனுமதி கிடையாது: அமைச்சர்

♈ பெரியகுளத்தில் பொது மக்கள் வீடுகளில் கறுப்பு கொடி கட்டி போராட்டம்

♈ ராமேஸ்வரத்தில் கடல் அட்டைகள் பறிமுதல்: 10 பேருக்கு போலீசார் வலைவீச்சு

♈ உசிலம்பட்டியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

♈ உ.பி., சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

♈ ராஞ்சியில் பெரும் விமான விபத்து தவிர்ப்பு
♈  மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தராக செல்லதுரை நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையை சேர்ந்த லியோனி ஆண்டனிராஜ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்,செல்லதுரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இல்லை. அவர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக கவர்னர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை நாளை(ஜூலை 12)க்கு ஒத்திவைக்கப்பட்டது

♈  காவிரி நீர் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனையடுத்து கர்நாடகாவில், மாண்டியா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணை பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

♈  ஜிகா வைரஸ் காய்ச்சலால் உயிருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி தளி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது அமைச்சர் பதிலளித்துள்ளார்.தளியில் உள்ள அஞ்சட்டி கிராமத்தில் ஒருவருக்கு இருந்த ஜிகா வைரஸ் குணமாகிவிட்டது என்றும் ஜிகா யாருக்கும் பரவக்கூடாது என அந்த கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்

♈  ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரன் பரோல் குறித்து பரிசீலிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவு.


♈ 4pm -11-7-2017-tuesday*

♈*இன்று காலை கடற்கரை சாலையில் உழைப்பாளர் .

♈   வாழ்க்கையில் எவ்வளவுதான் கடமை உணர்வோடு இருந்தாலும்,கணக்கில் கோட்டை விட்டால் சிக்கல் தான். சென்னை பாரிமுனையில் கடற்கரை காவல் நிலையம் அருகில் முருகப்பா குழுமம் கார்னரில் நின்று பல வாகங்களை மடக்கி பல மணி நேரமாக சோதனை செய்தனர் போக்குவரத்து காவலர்கள். எல்லாம் முடிந்த பிறகு இரு போக்குவரத்து காவலர்கள் ஓய்வாக நடைபாதையில் அமர்ந்து ஒரு பேப்பரை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தனர். அநேகமாக எத்தனை வாகனங்களை பிடித்தோம் என்று சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டுமல்லவா. அதைதான் செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

♈ ""கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்யா அவர்களுக்கு பனிவான வணக்கம் அய்யா....

.கடந்த 8ந் தேதி திருமங்கலம் அரசு மருத்துவமனையில் செய்தி சேகரிக்கச் சென்ற தினகரன் நிருபர் கார்த்திகேயனை அடிக்க பாய்ந்த அரசு மருத்துவர் சாலமன் ராஜ் அதனை படம்பிடித்த Neயs 18 நிருபர் சிவக்குமாரை தாக்கியதுடன் கடுஞ்சொற்களால் சாடியுள்ளார். இவை அனைத்தும் அரசு தலைமை மருத்துவர் பூமிநாதன் மற்றும் 2 பெண் காவலர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இதனை தட்டிக் கேட்ட பொதுமக்களில் ஒருவரையும் சால்மன்ராஜ் அடிக்க பாய்ந்தார். இதனைத் தொடர்ந்து News 18 நிருபர் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தினர் சாலமன் ராஜ் மீது கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 தினங்களாகியும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதில் தினகரன் நிருபரும் புகார் அளித்தால் மேலும் இவ்வழக்கு பலம் பெற்றிருக்கும். ஆனால் தினகரன் நிருபர் புகார் அளிக்காத மர்மம் புரியவில்லை. மேலும் இது சம்பவத்தை நேரில் கண்ட தலைமை மருத்துவரையும், 2 பெண் காவலர்களையும் சாட்சியங்களாக சேர்த்திருக்க வேண்டும். காவல்துறையினர் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

இறந்த பெண் காவலர் விஜயகாந்தி அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து.....

கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் அனைவரும் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை நேரடியாக பிடித்தம் செய்து..... பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க..... மாவட்டத்தில் உள்ள அத்தனை காவலர்களிடமும் கருத்து கேட்க உத்தரவு பிறப்பித்த ""கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்யா அவர்களுக்கு பனிவான வணக்கம் அய்யா....

♈ சந்தியா ஐபிஎஸ்.. கேரள பெரும் புள்ளிகள் அத்தனை பேரும் இந்த பெயரை கேட்டாலே வியர்வை மழையில் நனைந்துவிடுகிறார்கள். அத்தனை வேகம், யாருக்கும் வளையாத தன்மை,குறியை தப்பாமல் பாய்ந்து பிடிக்கும், லாவகம்.. என இத்தனைக்கும் ஒரே பெயர் சந்தியா. மொத்தத்தில் கேரளாவில் சமூக விரோதிகளை வேட்டையாடும் காக்கிச் சட்டை சிங்கம். மாநிலத்தை உலுக்கும் எந்த ஒரு வழக்காக இருந்தாலும், எங்கே சந்தியா என்று தேடுகிறது காவல்துறை தலைமை. இப்போதெல்லாம்,பொதுமக்களே சந்தியாவைத்தான் விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று கொடி பிடிக்கும் நிலைக்கு போயுள்ளது கேரளம். இதற்காக வருங்காலங்களில் சேட்டன்கள்'ஹர்த்தால்' செய்தாலும் ஆச்சரியமில்லை

♈ இந்திய ராணுவவீரன் இறந்தாலும் பரவாயில்லை-சீனா தயாரிப்புக்களே இந்தியர்களுக்கு வேண்டும்-குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், எழுது பொருள்களான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல்,டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருள்களை சீனா தயாரித்து அவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதோடு அல்லாமல் நாம் பாரம்பரியமாக பயன்படுத்தும் விஷயங்களையும் நம்மை மறக்கடிக்க செய்கிறது சீனா. அதாவது டைனிங் டேபிளில் சூடான பொருள்களை வைக்கும் போது மரத்திலான பலகை கொண்டு அதன் மேல் வைப்போம்.இல்லாவிடில் துணியைக் கொண்டும், எவர்சில்வர் வளையம் கொண்டும் அதில் சூடான பாத்திரங்களை வைக்க பழகினோம். ஆனால் தற்போது சீனா அதிலும் புகுந்துவிட்டது. சூட்டை தாங்கும் விரிப்புகள் போல் உள்ள இந்த விரிப்புகள் கலர் கலராக விதவிதமான டிசைன்களில் சென்னையில் பல்வேறு கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் நாம் பாரம்பரியமாக பயன்படுத்தும் பொருள்களை மறந்து விட்டோம். சீன பொருள்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்
♈ ம.பி., மாநிலத்தில், அரசு உயர்நிலை பள்ளி கழிப்பறையில், பள்ளி முதல்வர் அறை செயல்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

♈ அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியானார்கள். அதேநேரத்தில் யாத்ரீகர்கள் சென்ற பஸ்சை ஓட்டி சென்ற டிரைவரால் 50க்கும் மேற்பட்டவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது

♈ தமிழக சட்டசபையில் இன்று (ஜூலை, 11) கால்நடை பராமரிப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், ' விலையில்லா ஆடுகள் திட்டம், 2016 டிசம்பர் முதல் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போதிய மழை பெய்ததும் மீண்டும் திட்டம் செயல்படுத்தப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது

♈ தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சொகுசுப்பார்கள் இயங்க அனுமதிகோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனியார் அமைப்புகள் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மாநில அரசுகள் தொடரும் வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்த்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

♈ பல்வேறு கருத்துக்களை கவனத்தில் கொள்ளாமல் காவிரி தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதிட்டுள்ளது

♈ ஈரோட்டில் மாட்டின ஆராய்ச்சி மையம்-சட்டசபையில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி

♈ உலகளவில் மிகப்பெரிய பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், 24 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகள் தேங்கி உள்ளன

♈ நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்,யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

♈மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்க மத்திய அரசின் பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நாடு முழுதும் நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது

♈சென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்க உதவி செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக வேலைபார்த்த முருகன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர். அவர் பாஸ்போர்ட்டை முறையாக சரிபார்க்காமல் அனுமதி தந்ததாக புகார் கூறப்பட்டது



சிங்கம்புணரியில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த புரவி எடுப்பு விழா

♈ தமிழக மீனவர் நலனில் மத்திய அரசு அக்கறை: தமிழிசை

♈ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சை புறக்கணித்த அதிமுக எம்.எல்.ஏ.,

♈ சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாட்டிலிருந்து மேலும் ஒரு பெட்டகம் மீட்பு

♈ மலையாள நடிகர் சங்கத்திலிருந்து திலீப் அதிரடி நீக்கம்

♈ அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் கண்டனம்

♈ ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்வா சின்னப்பாவுக்கு தமிழக மின்வாரியத்தில் பணி

♈ நாகையில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

♈ நாடு முழுதும் மாஞ்சா நூலுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை

♈ அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்: ஸ்டாலின், ஓவைசி கண்டனம்

♈இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமான, 'நகாய்' அதிகாரிகளுக்கு, 2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை, 6.7 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததை, அமெரிக்க நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இப்பிரச்னை குறித்து விசாரிக்கப்படும் என நகாய் அறிவித்துள்ளது

♈  தேசிய நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது கொடூர சம்பவங்கள் நடைபெறுவதால், அவற்றை தடுக்க மத்திய தொழிலக பாதுகாப்பு படையான சி.ஆர்.பி.எப்., வீரர்களை, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது
♈   பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. UIDPAN<12 digit aadhar no> என டைப் செய்து 567678 மற்றும்56161 என்ற எண்களுக்கு அனுப்பலாம் என அறிவித்துள்ளது
♈மதுரை, பழங்காநத்தம் பகுதியில் குடியிருப்பவர் வீரன். மாநகராட்சி சுகாதார ஆய்வாளராக பணிபுரிகிறார். இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் வருமான வரி அதிகாரி எனவும், சோதனை செய்ய வந்ததாகவும் கூறி வீட்டில் இருந்த 40 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

♈நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு வடமேற்கு தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இதனால் பீதியடைந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர்

♈சட்டசபையில் கால்நடை பராமரிப்பு கொள்கைவிளக்க குறிப்பில் இடம்பெற்ற தகவல்: இந்தியாவில், கோழி எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் உள்ளது. செம்மறி ஆடு எண்ணிக்கையில் 4வது இடத்திலும், வெள்ளாடு எண்ணிக்கையில் 7 வது இடத்திலும், பசு எண்ணிக்கையில் 13வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

♈ சிலிகுரி: மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமின் சில பகுதிகளை இணைத்து கம்தாபூர் தனி மாநிலம் கோரி நேற்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தால் வடகிழக்கு மாநில பயணிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினர்

♈ 5pm -11-7-2017-tuesday*

♈சென்னையில் தொலைந்து போன நாயை தேடும் போலீசார்

♈இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி

♈   தெய்வாத்தாள் என்னும் தாயிற்க்கு இரத்தம் மிக குறைவாக உள்ளதால் உடனடியாக இரத்தம் தேவை *இரத்த வகை*  0+*யுனிட்* 2 *மருத்துவமணை* குமரன் திருப்பூர் *நாள்*11/7/17 *நேரம்*மாலை 7:00தொடர்பு  எண் +919443729636 குமார் நன்பர்கள் உதவ வேண்டுகிறோம் சிகரங்கள் சண்முகம் –விஸ்வரூபம்

♈  *"அரிதான"* ரத்தவகையான *"A Negative" ரத்தம் உடனடியாக தேவை.*அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். எங்களது சங்கத்தின் *சட்ட ஆலோசகர்* திரு. *தனசேகர்* அவர்களின் நண்பர் திரு. *ஜோயல்* அவர்களின் *தாயார்* திருமதி. *சுடர்மணி கிரேஸ்* (வயது 63) அவர்களுக்கு *நாளை (12.07.2017)* சென்னை, *வடபழனி*யில் உள்ள *விஜயா மருத்துவமனை*யில்  *இருதய அறுவை சிகிச்சை* நடைபெற உள்ளது.அவருக்கு மிகவும் அரிதான ரத்தவகையான *"A Negative"* என்பதால் *அவ்வகை ரத்தம் கிடைத்தால் தான் இருதய அறுவை சிகிச்சை செய்ய முடியும்* என்கிற நிலை. அதுமட்டுமன்றி *தாமதிக்காமல் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம்* இருப்பதால் உடனடியாக *"A-'ve"*ரத்தம் தேவைப்படுகிறது.எனவே அவ்வகை அரிதான ரத்தவகை கொண்ட இரத்த தான ஆர்வலர்கள் உடனடியாக நண்பர் திரு. *ஜோயல்* அவர்களை *கீழ்க்காணும் தொலைபேசி எண்ணில்* தொடர்பு கொண்டு உடனடியாக *"குருதிக்கொடை"* வழங்கி ஒரு உயிரைக் காப்பாற்ற உதவ முன் வர வேண்டுகிறோம்.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள :-திரு. *ஜோயல். 97890 54626.*உறுதி செய்தது.*சு.ஆ.பொன்னுசாமி*(நிறுவனர் & மாநில தலைவர்)*தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்* - விஸ்வரூபம்

♈ சென்னையில் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு டிரான்ஸ்பர் போடப்பட்டு 14 நாட்களுக்கு மேலாகியும் ஒரு அசைவும் இல்லை. 70%மேல் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு டிரான்ஸ்பர் போடப்பட்டது. ஆனால் ஒருவர் கூட கமிஷனர் உத்தரவை மதிக்கவே இல்லை. அனைவரும் டிரான்ஸ்பர் போட்ட இடத்துக்கு போய் ரிப்போர்ட் போட்டுவிட்டு மீண்டும் பழைய ஸ்டேஷனுக்கே வந்து டூட்டி பார்க்கின்றனர். இதற்கு இன்ஸ்பெக்டர்கள் உடந்தை. இதற்கு காரணம் பல ஆண்டுகளாக லோக்கலில் அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள்,லோக்கல் ஆட்கள் , வியாபார நிறுவனங்களில் நெருக்கமாகி காசு பார்த்து பழகிவிட்டதுதானாம். மூன்று வருடத்திற்கு மேல் ஒரு இடத்தில் பணி செய்யக்கூடாது என்பதை மீறி பல ஆண்டுகளாக பணியில் நீடிப்பதும் இப்படித்தானாம். எந்த கமிஷனரும் இதை பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது கமிஷனர் நடவடிக்கை எடுத்தும் அவரையே ஏய்க்கும் வேலை நடக்கிறது. இதில் பல விஷயங்கள் டி.சி.விமலா மேடத்திற்கு தெரியும். சிறிய உதாரணம் திருவல்லிக்கேணி ஐ.எஸ். ஜெயராஜ் பத்தாண்டுகளாக திருவல்லிக்கேணியிலேயே இருக்கிறார். ஆனால் இவர் ஒன்றரை ஆண்டுதான் இங்கு பணியில் இருக்கிறார் என்று டி.சி மேடம் ரிப்போர்ட் போட்டு காப்பாற்றியதாக   ஜெயராஜ் திருவல்லிக்கேணியில் பத்திரிக்கையாளர்கள் தொடர்பு இருப்பதால் போகிறபோக்கில் எதையாவது சொல்லி விடுகிறார் என்று இதுவரை எந்த அதிகாரியும் அவரை கண்டு கொள்ளவில்லை.  அடுத்து அபிராமபுரம் ஐ.எஸ் குணா , இவர் 18 ஆண்டுகளாக அபிராமபுரத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார். இவரை மயிலாப்பூருக்கும் ,அங்குள்ள ராமச்சந்திரனை பட்டினப்பாக்கத்துக்கும் மாற்றியும் இதுவரை போகவில்லை. ஐஸ் ஹவுஸ் ஜெயகுமார் இவருக்கு டிரான்ஸ்ஃபர் போட்டும் போகவில்லை. இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு நீங்க இன்னைக்கு இருப்பீங்க நாளைக்கு போய்டுவீங்க வேலையை பாருங்க என்று அங்கேயே இருக்கிறாராம். இவர் லோக்கலில் திமுக பகுதி செயலாளர் காமராஜுக்கு எதிர் கோஷ்டியுடன் நெருக்கமானவராம். அடுத்து ஆயிரம் விளக்கு சேஷாச்சலம் இவரும் பல ஆண்டுகளாக அங்கேயே டூட்டி , மாற்றல் வந்தும் போகவில்லை. இதே போல் சூளைமேடு தனபால் இவருக்கும் மாற்றம் வந்து போகவில்லை. இவருக்கு கீழ் சூளைமேட்டில் 7 ஒரு நம்பர் லாட்டரி ஓடுகிறது. அசைக்க முடியாத மனிதராக இருக்கிறார். இப்படி சென்னை முழுதும் லிஸ்ட் நீளுகிறது. கமிஷனர் உத்தரவையே தூக்கி தூரம் போடும் அளவுக்கு இவர்களுக்கு கமிட்மெண்டும் , சில அதிகாரிகளின் ஆதரவும் உள்ளது. முக்கியமாக டிசி ஆதரவு. லெவல் 2 ஐ.எஸ் ப்ரமோஷன் வருவதை தடுக்கவும் இந்த ஏற்பாடாம்

♈ உலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது? அதன் அரசர் யார் என்று தெரியுமா? உலகின் சிறிய ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார். சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது தவோலாரா.இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான். ராஜாவின் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராக்கு சென்றால் அரசரை பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம். எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை சுலபமாகவே பார்த்துவிடலாம். ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர். சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டுபவரும் அவரே.180வது நிறுவன தினத்தை கொண்டாடும் தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறிய தீவாக இருப்பதால் அதை நாடு என்று சொல்வது வேடிக்கையானதாக தோன்றலாம்

♈  3 crore rupees  scam at Hosur BDO office, many Panchayat Asst suspended,  ???
♈ ரூ. 10க்கு ஆவின் பால் பாக்கெட்-225 மி.லி. பால் பாக்கெட் ரூ.10க்கு விற்க ஏற்பாடு-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டசபையில் அறிவிப்பு

♈ சசிகலா குடும்பமே மைனஸ்தான்... அவர்கள் ஒருபோதும் பிளஸ் ஆகவே முடியாது என கொங்கு அமைச்சர்களிடம் கிண்டலடித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி. எடப்பாடியின் ராஜகுருவாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார் ஆடிட்டர். அவரது ஆலோசனைப்படியே சசிகலா குடும்பத்தை எதிர்க்க துணிந்தார் எடப்பாடியார். இருப்பினும் ஆட்சியைக் காப்பாற்றும் வகையில் திவாகரனுடன் கை கோர்த்தார் எடப்பாடி. திவாகரன் எப்போதுமே நேரடி அரசியலில் இருந்தது இல்லை என்றாலும் அதிமுகவில் மறைமுக ஆதிக்கம் செலுத்தக் கூடியவராக இருந்திருக்கிறார். திவாகரனுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வந்தார் எடப்பாடி. ஆனால் ஆடிட்டர் தரப்போ,சசிகலா தரப்பை எதிர்ப்பதோடு நிற்காமல் மிரட்டியும் வைக்க வேண்டும் என அடுத்த ஆட்டத்துக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கிறார்.கொங்கு அமைச்சர்களுடன் விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி. அப்போது சசிகலா குடும்பமே மைனஸ்தான்.. மக்கள் அப்படித்தான் பார்க்கிறார்... மைனஸ்னு ஆகிட்டவங்க எப்படி பிளஸ் ஆக முடியும் என கலாய்த்திருக்கிறார் எடப்பாடியார் தவல்கள் கசிகின்றன .தி. மு.க முக்கிய புள்ளிகளுக்கு கமிஷன் கொடுக்க சொல்லியும் உள்ளார் எடப்பாடி , ஸ்டாலினும் அது பற்றி விசாரிக்கிறார் என்று தகவல்கள் வந்தன. ஸ்டாலின் தற்போது அந்த கமிஷன் விஷயம் குறித்து மேற்கொண்டு ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தகவல்கள் சொல்கின்றனர்  

♈ சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை தைவான் ஜனாதிபதி என்று அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தவறாகக் குறிப்பிடப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்கா மன்னிப்புக் கேட்டுள்ளது

♈ கோவில், மசூதி, தேவாலயங்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

♈ காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக வாதம் 15 நாட்களுக்கு நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது

♈ தேசிய நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்ற அனுமதி கோரி பலமாநில  அரசுகள் தொடந்த வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சண்டிகர் அரசுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மற்ற மாநிலங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள

♈ மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 15 சதவீதமும் வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. மேலும் தீர்ப்பு வெளியிடும் வரை எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

♈ சென்னையில்  ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.21,000  கீழ் சென்றது. ஆபரண  தங்கம் ஒரு  கிராம் ரூ,2623 க்கும்,ஒரு சவரன் ரூ.20,984 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

♈வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 31 புள்ளிகள் உயர்ந்து 31,747 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 15புள்ளிகள் உயர்ந்து 9,786 புள்ளிகளாக உள்ளது

♈சென்னை: நுங்கம்பாக்கத்தில் லட்சுமி என்ற துப்புரவுத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். லட்சுமி கொலை தொடர்பாக சீனு என்பவரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது

♈  ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெபான் - ஜெனின் என்ற தம்பதியர் ஒவ்வொரு நாடாக, வேன் மூலம் சுற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அவர்கள் சென்னை வந்துள்ளனர். கடந்த 8 ம் தேதி மாலை சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றனர். இருவரும் நாயை தங்களது வாகனத்தில் கட்டி வைத்திருந்தனர். திரும்பி வந்து பார்த்த போது அந்த நாயை காணவில்லை. இது தொடர்பாக இருவரும் மெரினா போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் நாயை தேடி வருகின்றனர்.தங்களை பாம்பிடமிருந்து காப்பாற்றிய அந்த நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ள அவர்கள்,வாட்ஸ் ஆப் மூலம் செய்தி பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த நாய் தனது கடை முன் உள்ளதாக டீக்கடை காரர் ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் நாயை புகைப்படும் எடுத்து ஸ்டெபானுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த நாய் தன்னுடையது அல்ல என கூறியுள்ளார். நேரில் வந்து நாயை அடையாளம் காட்டுமாறு போலீசார் கூறியுள்ளன


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக