வெள்ளி, 14 ஜூலை, 2017

கற்றது B.E civil



கற்றது B.E civil
--------------------------
என் மூளைக்கு எட்டியவரை தென்பட்ட ஓட்டைகள் இவை.

ஒரு ஷாப் கீப்பரின் ஆரம்ப சம்பளம் 8000.
ஒரு டீக்கடையில் வேலை பார்க்கும் ஹெல்பர் சிறுவனுக்கு நாளொன்று 300 ... ஆக 9000...
என் தம்பியுடன் படித்தவன் படிப்பை தொடரமுடியாமல் சென்னையில் ஒரு டீக்கடையில் வேலை பார்க்கிறாரான். ஒருநாள் என்னிடம் என் சம்பளத்தை கேட்டுவிட்டு நல்லா வேள மாமா நான் படிக்கல என்று பெருமிதம் கொள்கிறான் அவனுக்கு சம்பளம் 9000. சாப்பாடு ரூம் வசதியுடன்..
என் இந்த நிலமைக்கு யார் காரணம்?

மார்க்கெட் டல்லா இருக்கு என்பவர்கள் ஒரு கோடி மதிப்புள்ள ப்ராஜெக்டை 75000 க்கு விற்கிறார்களா?
கொத்தனார்-600 to 650
ஹெல்பர் (M.C)-400 to 450
சித்தாள்-300 to 350
ப்ளம்பர்-500
கார்பெண்டர்-550
பெயிண்டர்-500
பொருளாதார அடிப்படையில்+விலைவாசி அடிப்படையில் ஏறுகிறது இவர்களின் கூலி.
எங்களின் கதி மட்டும் இப்படி!!"

சிவில் சைட் இன்ஜினியர்-8000/30 --266/per day
ஆக , ஒரு கொத்தனாரின் சம்பளம் வாங்க குறைந்த பட்சம் நான்காண்டு காத்திருக்க வேண்டும்.
எதன் அடிப்படையில் இந்த ஊதிய நிர்ணயம்?
அந்த 8000 என்பதும் ஓரளவு மனம் உள்ளவர்கள் தந்தால்தான் உண்டு.
5000 க்கெல்லாம் வேலை பார்க்கிறார்கள் B.E பட்டதாரி.
எங்களுக்கான அரசு ஊதிய நிர்ணயம் என்ன????

வேலை கற்று கொள்ள வேண்டுமென்கிறார்கள். பிறகு என்ன மயிருக்கு நான்காண்டு தொழில்நுட்ப கல்வி.
தியரிகளை தேர்வுக்கு பயன்படுத்த மட்டுமா?.
நான் படித்த பாடத்திட்டத்தில் எந்த இடத்திலும் ஒரு கனமீட்டருக்கு 500 செங்கல் ஆகும் என்று படித்ததில்லை.
ஒரு கொத்தனார் நாளொன்றுக்கு 750 செங்கல் பயண்படுத்தியிருக்க வேண்டுமென சொல்லவில்லை.
ஆக எங்களுக்கு வேலை தெரியாதது யார் குற்றம்??
இந்த கல்விமுறை... முன்னோக்கி ஓடும் எங்கள் மூளையை ஓடவிடாமல் கயிறு கட்டி இழுக்கிறது.முயல் போன்ற மூளையை ஆமையாக்குகிறது என்பது நிதர்சனம்.

O.T பார்க்கும் தொழிலாலிக்கு கூலி உண்டு. சைட் இன்ஜினியருக்கு???
உடனே எனக்கெல்லாம் எவ்வளவு சம்பளம் தந்தார்கள் தெரியுமா என்று சீனியர் கேட்பார்கள்.
நீங்கள் வந்த போது சென்னையில் ரூம் மாத வாடகை எவ்வளவு?
ஒரு இட்லியின் விலை என்ன?
அப்படியும் உனக்கு கம்மியாக கொடுத்திருந்தால் என்ன மயித்துக்கு அடிபணிந்தாய்?
அன்று நீ அடிபணிந்தாய் என்பதற்காகத்தானே எங்களையும் அடிபணியச்சொல்கிறார்கள்? ?
அடிமாட்டு விலைக்கு அடிமையாக்கப்படுகிறோம்.
அட்ஜஸ்மெண்ட் மைண்ட் என்பது எங்கள் தலமுறையில் குறைந்து வருகிறது.
அதே அளவு திறமைகள் கூடி வருகிறது.
----------------
ஆக ஒரு ஃப்ரெஷருக்கான அடிப்படை சம்பளம் 12000 வேண்டும்.
-------------
அடித்தட்டு நிலையில் இருந்து வரும் ஒரு பட்டதாரி சுமந்து வரும் கடமைகள் எத்தனை???
அப்பா கடன், அம்மா மருத்துவ செலவு, தம்பி படிப்பு, தங்கை திருமணம், வீட்டு கடன், கல்விக் கடன் இத்யாதி இத்யாதி..ஒரு வேளை அவன் காதலித்திருந்தால் அந்த காதலின் கதி????
காதலையெல்லாமா கணக்கில் எடுத்துக்கொளவது என்ற தர்க்கத்துக்கு வந்தால் நீங்கள் ஒரு மிருகம்.
இப்படி நம் நாட்டு சிஸ்டம் மனிதநேயமற்ற மிருகம் போல இயங்குகிறது.
யதார்த்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு கணக்கிட்டால் என்றோ வல்லரசாகி இருக்கலாம்...

இன்ஜினியரிங்க் படித்தால் ஒன்று பணக்காரனாக இருக்க வேண்டும் இல்லையெனில் சிபாரசு பின்னணி இருக்க வேண்டும். என்ற நிலமை வந்து விட்டது....

நன்றி யாரோ ஒருவருக்கு...!!

1 கருத்து: