புதன், 31 அக்டோபர், 2018

உலகின் உயரமான சிலை: இந்தியாவின் இரும்பு மனிதர் படேல் சிலையை திறந்து வைத்து மோடி புகழாரம்!



உலகின் உயரமான சிலை: இந்தியாவின் இரும்பு மனிதர் படேல் சிலையை திறந்து வைத்து மோடி புகழாரம்!
அரசியல் கண்ணோட்டத்துடன் இந்தச் சிலையை சிலர் பார்ப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் பெரிய குற்றம் செய்தது போல் விமர்சனம் செய்கின்றனர். நாட்டின் சிறந்த மற்றும் பெரிய தலைவரை பெருமைப்படுத்துவது குற்றமா? என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் நரேந்திர மோடி!
ஆமதாபாத் : உலகின் மிக உயரமான சிலை- 597 அடி உயரமுள்ள சிலையாக, குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் இரும்பு மனிதர் என ப்படும் சர்தார் வல்லப பாய் படேலின் உருவ சிலையை, பிரதமர், நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரான சர்தார் வல்லப பாய் படேல் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர், உள்துறை அமைச்சர் என இரண்டு பதவிகளை வகித்தவர். ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து நாடு சுதந்திரம் பெற்றதும், 500க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டவர் படேல். அதற்காக அவர் எடுத்த உறுதியான நடவடிக்கைகளுக்காக ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என வல்லபபாய் படேல் போற்றப் படுகிறார்.
வல்லபபாய் படேலை சிறுவயதிலேயே சர்தார் என சிறப்புப் பெயருடன் கிராம மக்கள் அழைத்தனர். அவரது நினைவாகவே சர்தார் சரோவர் அணை அமைக்கப் பட்டது. நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 2013இல் நர்மதை ஆற்றின் நடுவே உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில் 597 அடி உயரத்தில் சர்தார் வல்லப பாய் படேல் சிலை அமைக்கப்படும் என்று மோடியால் அறிவிக்கப் பட்டு, திட்டம் செயல்படுத்தப் பட்டது.
படேலுக்கு சிலை அமைக்கும் பணிகள் ரூ. 2,300 கோடி செலவில் முழுமை அடைந்தன. இதையடுத்து, வல்லபபாய் படேலின் பிறந்த தினமான இன்று அவரது சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! தேசத்தை ஒன்றிணைத்த படேலின் சிலை ‘ஒற்றுமை சிலை’ என பெயரிடப் பட்டது.
குஜராத்தில் நர்மதா நதியின் நடுவில் அமைந்துள்ளது சாது பேட் தீவு. இந்தத் தீவுக்குச் செல்ல 250 மீட்டர் நீள இணைப்புப் பாலம் உள்ளது. நாட்டிலுள்ள 7 லட்சம் கிராமங்களில் இருந்து விவசாய கருவிகள் சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து இரும்புகள் எடுக்கப்பட்டு சிலை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகள் 135 டன் இரும்பை நன்கொடையாக அளித்துள்ளனராம்.
சிலை உள்ள பகுதியில் 52 அறைகள் உள்ள கட்டடம், மூன்று நட்சத்திர ஓட்டல், அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்தார் படேலின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையிலான பொருட்கள்அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.
சிலையின் மேற்பகுதியில் சுமார் 200 பேர் நின்று பார்க்கும் வசதி உள்ளது. இங்கிருந்து சர்தார் சரோவர் அணை மற்றும் விந்திய சாத்பூரா மலைப்பகுதிகளை 200 கி.மீ., தொலைவுக்குப் பார்க்கலாம்!
இந்தச் சிலையின் மேலும் சில சிறப்பம்சங்கள்:
* நர்மதா அணை அருகே 3.2 கி.மீ., தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது சிலை. ரூ.2,389 கோடி செலவானதாம்.
* அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையை விட 3 மடங்கு உயரமானது!
* இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் படேலுக்கு நாடு முழுவதிலும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
* பத்மபூஷண் விருது பெற்ற ராம் வி.சுதர் சிற்ப கலைஞரால் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
* லார்சன் டூப்ரோ நிறுவனமும், குஜராத்தின் சர்தார் சரோவர் நர்மதா நிஜாம் லிமிடெட் நிறுவனமும் இணைந்து சிலையை உருவாக்கியுள்ளன. இதனை உருவாக்க, 250 பொறியாளர்கள், 3400 தொழிலாளர்கள் இணைந்து 33 மாதங்கள் பாடுபட்டுள்ளனர்.
* உலகின் மிக உயரமான சிலையாக தற்போது கருதப்படும் சீனாவின் புத்தர் கோயில் சிலையை விட உயரமானது படேலின் சிலை.
* 553 வெண்கல பகுதிகளுடன், ஒவ்வொரு பகுதியும் 10 முதல் 15 நுண்ணிய பகுதிகள் கொண்டதாக அமைந்துள்ளது! சர்வதேச நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த வெண்கல பகுதிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
* ஒரே நேரத்தில் 200 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் 153 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் 153 வது மீட்டர் உயரத்தில் இருந்து சர்தார் சரவோர் அணையை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
* அடிப்பாகத்தில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில், படேலின் வாழ்க்கை குறித்த 40,000 ஆவணங்கள், 2,000 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஆராய்ச்சி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று திறக்கப்பட்ட படேல் சிலையைக் காண தினமும் சுமார் 15 ஆயிரம் பார்வையாளர்கள் வருவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் நடைபெற்ற உலகின் மிக உயரமான படேலின் சிலை திறப்பு விழாவில் தமிழக அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.
182 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லப பாய் படேலின் சிலையை திறந்துவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!
முன்னதாக, சர்தார் வல்லபபாய் படேலின் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒற்றுமையின் அடையாளமாக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான 182 மீட்டர் உயரம் கொண்ட படேலின் சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி!

இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு தலை வணங்க வேண்டும். நாட்டிற்காக அயராது உழைத்தவர் படேல் என கூறியிருந்தார். மேலும், படேல் சிலை திறப்பு வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது என்று கூறினார் மோடி.
உலகின் மிக உயரமான சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்ட போது…

படேல் சிலையை திறந்து வைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். மிக உயரமான சிலை அமைக்கப்பட்டதன் மூலம் படேலுக்கு கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக்கக் கூடியது. அனைவரும் இந்த நிகழ்வை கொண்டாடுகின்றனர். இந்தியாவின் ஒற்றுமையை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. வரலாற்றில் மறக்க முடியாத நாள். இதனை வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது. இந்த நாளை ஒவவொரு இந்தியனும் மறக்க முடியாது.
குஜராத் மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் பெரிய திட்டத்துக்கு மக்கள் அளித்த ஆதரவு பெருமைப்பட வைக்கிறது. படேல் இளைஞர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். இந்தியா கடினமாக சூழலில் இருந்த போது உள்துறை அமைச்சர் ஆனார். நான் குஜராத் முதல்வராக இருந்த போது சிலை அமைக்கும் திட்டம் தொடங்கப் பட்டது. இதனை நான் பிரதமராக வந்து திறந்து வைப்பேன் என எதிர்பார்க்கவில்லை.
படேலின் முயற்சியால் இந்தியா ஒற்றுமையாக உள்ளது. புதிய மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கான வழியைக் காட்டியவர். இந்தச் சிலையை உருவாக்க இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று சேர்ந்து, உதவி செய்து பெரிய இயக்கமாக மாற்றினர்.
அந்த வகையில், விவசாயிகளுக்கு பெருமை சேர்ப்பதாக இந்தச் சிலை உள்ளது. புதிய இந்தியா மற்றும் பழங்குடியின மக்களின் தியாகத்தை பிரதிபலிப்பதாக இந்தச் சிலை உள்ளது. இதனை உருவாக்க பல திறமைசாலிகள் பணிபுரிந்துள்ளனர்.
அரசியல் கண்ணோட்டத்துடன் இந்தச் சிலையை சிலர் பார்ப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் பெரிய குற்றம் செய்தது போல் விமர்சனம் செய்கின்றனர். நாட்டின் சிறந்த மற்றும் பெரிய தலைவரை பெருமைப்படுத்துவது குற்றமா? என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் நரேந்திர மோடி!

உலகின் மிக உயரமான படேல் சிலை குஜராத்தில் இன்று திறப்பு!

உலகின் மிக உயரமான படேல் சிலை குஜராத்தில் இன்று திறப்பு!
 

உலகின் மிக உயரமான சிலையாக உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.



வல்லபாய் படேலின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலை குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது. ஒற்றுமை சிலை என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் அடையாளமாக பிரதமர் மண்ணையும் நர்மதா ஆற்று நீரையும் ஒரு கலசத்தில் ஊற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அந்த சிலைக்கு ஒரு மெய்நிகர் அபிஷேகம் செய்வதற்கான விசையை பிரதமர் அழுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.



இதன் பின்னர் ஒற்றுமை சுவருக்கு வரும் பிரதமர் அதை திறந்து வைப்பார். அதைத்தொடர்ந்து சிலையின் காலடியில் பிரதமர் சிறப்பு பிரார்த்தனை செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் பார்வையாளர் அரங்கத்தை பிரதமர் பார்வையிடுவார். இந்த திறப்பு விழாவையொட்டி இந்திய விமானப்படை விமானங்கள் பறப்பதுடன் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



தற்போது வரை உலகில் இருக்கும் உயரமான சிலை என்றால் அது சீனாவில் உள்ள புத்தர் சிலைதான். அதன் உயரம் 419 அடி. இனிமேல் உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலை என்றால், அது குஜராத்தில் திறந்து வைக்கப்பட உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைதான். படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி. சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் மட்டும் 190 அடி ஆகும்.
Thanks Puthiyathalaimurai

இந்தியாவும் தேசப்பிதா அன்னை இந்திரா காந்தி அவர்கள் குடும்பமும் வேறெல்ல...


இந்தியாவும் தேசப்பிதா அன்னை இந்திரா காந்தி அவர்கள் குடும்பமும் வேறெல்ல...

 *எனக்கு நீங்கள் சான்று கொடுக்காதீர்கள்; உங்களைவிட இந்து மதத்தை நான் நன்றாக அறிந்தவன்’: பாஜகவை விளாசிய ராகுல் காந்தி* *அவர்கள்* 

நான் கோயிலுக்குச் செல்வதற்கு பாஜக எனக்குச் சான்று அளிக்கத் தேவையில்லை. பாஜகவைக் காட்டிலும் இந்து மதத்தை நன்றாக, தெளிவாக நான் அறிந்தவன். ஒவ்வொரு மதத்தையும் மதிக்கத் தெரிந்த தேசியவாதத் தலைவர் நான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவைக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய காட்சி
நான் கோயிலுக்குச் செல்வதற்கு பாஜக எனக்குச் சான்று அளிக்கத் தேவையில்லை. பாஜகவைக் காட்டிலும் இந்து மதத்தை நன்றாக, தெளிவாக நான் அறிந்தவன். ஒவ்வொரு மதத்தையும் மதிக்கத் தெரிந்த தேசியவாதத் தலைவர் நான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவைக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் மாதம் 27-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2 நாள் பயணமாக மத்தியப்பிரதேச மாநிலம் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உஜ்ஜெயின் நகரில் உள்ள மகாகாளீஸ்வர் கோயிலில் ராகுல் காந்தி நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது பாரம்பரிய உடை அணிந்திருந்தார். இதை பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்துத்துவா என்பது பேஷனாகிவிட்டது, இந்துக்களைத் திசைதிருப்புகிறார் ராகுல் காந்தி, ராகுல் காந்தி எந்தக் கோத்திரத்தை சேர்ந்தவர் என்பதைக் கூற வேண்டும் என்று பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பித்ரா கடுமையாகப் பேசி இருந்தார்.

இதற்குப் பதில் அளித்து ராகுல் காந்தி இன்று இந்தூரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் இந்துத்துவா தலைவர் இல்லை. ஆனால், நான் தேசியவாதத் தலைவர். ஒவ்வொரு மதத்தையும் மதிக்கத் தெரிந்த தேசியவாதத் தலைவர். நான் ஒவ்வொரு மதத்தின், ஒவ்வொரு சாதியின், மொழியின, சமூகத்தின் தலைவர்.

நான் கேட்கிறேன், நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தையும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் குத்தகைக்கு எடுத்து இருக்கிறார்களா, அல்லது அவர்களுக்குச் சொந்தமானதா. மோடியும், அமித் ஷா மட்டும்தான் கோயில்களுக்குச் செல்ல கான்ட்ராக்ட் எடுத்து இருக்கிறீர்களா?

பாஜக தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் கூட  எந்த மாநிலத்தின் கோயிலுக்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் பாரம்பரிய, கோயிலின் பாரம்பரிய உடை அணிந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இதைப்பற்றி பாஜக ஒன்றுமே பேசுவதில்லை.

ஆனால், கமல் நாத், ஜோதிர்தியா சிந்தியா, நான் கோயில் மரபுப்படி ஆடைகள் அணிந்தால், நாங்கள் இந்துத்துவத்தில் பேன்சி ஆடைகளை அணிந்து செல்கிறோம் என்கிறார்கள்.

நான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய நினைத்தால் நான் நிச்சயம் கோயிலுக்குச் செல்வேன். நான் கோயிலுக்குச்செல்ல பாஜகவின் சான்று தேவையில்லை. இந்து மதத்தைப் பற்றி பாஜகவைக் காட்டிலும் நான் நன்றாக அறிந்தவன்.




நான் கோயிலுக்கு மட்டுமல்ல, மசூதிகள், குருதுவாராக்கள், தேவாலயங்கள் என அனைத்து மதவழிபாடு தலங்களையும் மதிக்கிறேன், செல்கிறேன்.

இந்துத்துவா என்றால் என்ன என்பதையும், உண்மையான இந்துமதம் என்றால் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்துமதம் என்பது பரந்துபட்டது, முற்போக்குவாத, சுதந்திர சிந்தனை கொண்ட, அன்பையும், அனைவரிடமும் மதிப்புடன் நடத்தும் சகிப்புத்தன்மை கொண்டதாகும்.

ஆனால் பாஜகவின் இந்துத்துவா கொள்கை என்பது, வெறுப்பு, பாதுகாப்பின்மை, கோபம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்துத்துவாவின் உரிமையாளர் பாஜக. ஆனால், உண்மையான இந்து மதத்துக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால்,அது பரந்துபட்ட சிறந்த அம்சம். எந்த ஒரு கூட்டமும், குழுவும் இந்து மதம் தங்களுக்கு சொந்தம் என்று கூற முடியாது. எங்கள் கட்சி உண்மையான இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைக்கிறோம், இந்துத்துவா மீது நம்பிக்கை இல்லை.


குஜராத் தேர்தல் நடந்தபோது நான் கோயிலுக்கு சென்றேன். அப்போது, நான் செல்வதைப் பார்த்து, பாஜகவினர் நான் எப்படி கோயிலுக்கு செல்லலாம் என்று சிந்தித்தார்கள், பேசினார்கள். நான் இதற்கு முன் கோயிலுக்குச் சென்று இருக்கிறேன், அயோதித்துக்கும் சென்று இருக்கிறோம்.

மோடி அரசு பொய்களை வாக்குறுதியாக அளித்துதான் ஆட்சிக்கு வந்தது. ஊழலை ஒழிப்பேன், நல்லகாலம் வரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறு
காங் தலைவர்  ராகுல் காந்தி பேசினார்.

உலகின் மிக உயரமான படேல் சிலை குஜராத்தில் இன்று திறப்பு.


உலகின் மிக உயரமான படேல் சிலை குஜராத்தில் இன்று திறப்பு.

உலகின் மிக உயரமான சிலையாக உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

வல்லபாய் படேலின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலை குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது. ஒற்றுமை சிலை என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் அடையாளமாக பிரதமர் மண்ணையும் நர்மதா ஆற்று நீரையும் ஒரு கலசத்தில் ஊற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அந்த சிலைக்கு ஒரு மெய்நிகர் அபிஷேகம் செய்வதற்கான விசையை பிரதமர் அழுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது வரை உலகில் இருக்கும் உயரமான சிலை என்றால் அது சீனாவில் உள்ள புத்தர் சிலைதான். அதன் உயரம் 419 அடி. இனிமேல் உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலை என்றால், அது குஜராத்தில் திறந்து வைக்கப்பட உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைதான். படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி. சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் மட்டும் 190 அடி ஆகும்.

செவ்வாய், 30 அக்டோபர், 2018

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்..?- நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்


மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்..?- நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்


கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி (வயது 46) கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சிறையில் இருந்த நிர்மலா தேவியை ஏப்ரல் 25-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து, விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை நிர்மலா தேவி நீண்ட நெடிய வாக்குமூலமாக அளித்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2003-ம் ஆண்டு எனது கணவர் சென்னையில் பணிபுரிந்தபோது, கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தோம். அப்போது, பக்கத்து வீட்டு பெண்ணுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

எனது உறவினர்கள், கணவர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கக்கூடாது என்று என்னை கண்டித்தனர். அதன்பிறகு, எனது கணவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் நெருக்கமாக பழக என்னை வற்புறுத்தினார். இதனால், எங்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம்.

அதன்பிறகு, 2008-ம் ஆண்டு எனது கணவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால், நான் குழந்தைகளுடன் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கினேன். அப்போது, எனது கணவர் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு எனது கணவர் வேலை பார்க்க சென்றார். அவருக்கு அந்த பணி பிடித்திருந்ததால் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.

நான் பணிபுரிந்த தேவாங்கர் கலை கல்லூரியின் நிர்வாக குழுவில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. 2011-ம் ஆண்டு எனது கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

நான் அவருடன் நெருக்கமாக பழகினேன். இது எனது கணவருக்கும் தெரியும். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த செல்போனை எனது கணவர் தான் வைத்திருந்தார். அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த தொடர்பால் அவருக்கு பணிபுரிந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு எனது கணவர் சரவண பாண்டியன், சவுதி அரேபியாவில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து, அங்கேயே நகராட்சி ஒப்பந்தபணிகளை எடுத்து செய்து வந்தார். அதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடும் பண நெருக்கடி உண்டானது. இந்த நேரத்தில், எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் நான் நெருங்கிப்பழக ஆரம்பித்தேன். அவர் எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்.

அதன்பிறகு, எனது கணவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து பார்த்தார். அதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால், எனக்கும், எனது கணவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை தீர்த்து வைக்க எனது கணவரின் நண்பர்கள் ராஜூ, ராமச்சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் சிலர் வந்தனர். அவர்களுடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை தெரிந்துகொண்டதால், எனது கல்லூரியில் வேலைபார்ப்பவர்கள் யாரும் என்னுடன் சரியாக பேசுவது கிடையாது. நானும் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன்.

இந்த சூழ்நிலையில், எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். இதனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி நான் சென்னை வந்துவிட்டேன். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மீண்டும் சந்தித்தேன். திருப்பதி, சென்னை என்று பல இடங்களுக்கு சென்றேன். 24 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.

அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்து வந்தோம். அதில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ராமநாதனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்து பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, உல்லாசமாக இருந்தோம். அருப்புக்கோட்டையில் நகைக்கடை அதிபர் ஒருவருடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்தேன்.

2016-ம் ஆண்டு நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது, அங்கு இருந்த அதிகாரியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். நான் 1992-1994-ம் ஆண்டுகளில் பானு சத்திரிய கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்த காலத்தில், வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் எனக்கு தெரியும். அவரது தொலைபேசி எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி பேசினேன். அன்று முதல் அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன்.

தற்போது, அவர் வெளி கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக வகுப்புகள் நடத்தி வருகிறார். நானும் அவரைப்போல் கவுரவ விரிவுரையாளராக ஆசைப்பட்டு, அவரிடம் உதவி கேட்டேன். இது தொடர்பாக, அடிக்கடி அவருடன் போனில் பேசுவேன். வாட்ஸ்-அப்பிலும் தகவல்களை பரிமாறிக்கொள்வேன். அப்போது, அவர் ஏதாவது கல்லூரிக்கு கவுரவ விரிவுரையாளராக சென்றால், அதை போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்புவார். அவர் 2017-ம் ஆண்டு 2 முறை எனது வீட்டிற்கு வந்து என்னுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் அதே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள முருகன் என்பவரை தொடர்புகொள்ளுமாறு எனக்கு அவரது செல்போன் எண்ணை கொடுத்தார். நானும் உடனே முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புத்தாக்கப் பயிற்சியில் சேர வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன்.

நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேவாங்கர் கலைக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை நான் திருத்திக்கொண்டிருந்தபோது முருகனிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அன்று அவர் அருப்புக்கோட்டைக்கு வந்திருப்பதாகவும், என்னை சந்திக்க முடியுமா? என்றும் கேட்டார். நானும் விடைத்தாள் திருத்தி முடித்தவுடன் மாலை 3 மணிக்கு மேல் காந்திநகர் பஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினேன். அவரும் அங்கு எனக்காக காத்திருந்தார். நான் காரில் சென்று அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது, என்னுடன் அவர் உல்லாசமாக இருந்தார்.

அதன்பிறகு, எனது மகளின் சடங்கு ஆல்பத்தை அவருக்கு காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு உன்னுடைய மகளும் வருவாளா? என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர், உங்கள் சொல்படி கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கின்ற கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கின்றார்களா? என்று என்னிடம் கேட்டார். அவர் கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்கத்தான் கேட்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதற்கு நான் எங்களது கல்லூரி நிலவரம் தற்போது சரியில்லை. இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்.

அதன்பிறகு, மார்ச் 7-ந் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ந் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.

அப்போது முருகன் என்னிடம், “என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று மீண்டும் கேட்டார். “நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்துவைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.

மார்ச் 12-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.

அங்கிருந்து புறப்பட்டபோது, நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கருப்பசாமி கூறியதால் அவருக்காக காத்திருந்தேன். அவர் வந்தவுடன் கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அங்கிருந்து புறப்பட்டபோது, கருப்பசாமி என்னிடம், அடுத்தவாரம் சென்னை செல்வதாகவும், அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார். நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார். அதன்பிறகு, அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன்.

முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் என்னிடம் தொடர்ந்து நேரிலும், போனிலும் கேட்டுக்கொண்டதால், மார்ச் 12-ந் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமாக பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இந்த விஷயத்தை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.

இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிர்மலா தேவி, தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் தெரிவித்துள்ளார். அது என்னவென்பது,


கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்புகொண்டு தவறான பாதைக்கு அழைத்த உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் 2-வது பகுதி வெளியிடப்படுகிறது. தொடர்ந்து, நிர்மலா தேவி கூறியதாவது:-

மார்ச் 13-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தங்குவதற்கு தேவையான உடைமைகளை நான் எடுத்துக்கொண்டு செல்லும்போது, அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு கவர்னர் வருவதை தெரிந்துகொண்டேன். கவர்னர் வருகையையொட்டி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சிக்கு நானும் சென்றிருந்தேன். அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முடித்துவிட்டு திரும்பிய கவர்னர் அறிவியல் கண்காட்சியை திறந்துவைக்க வந்தார்.

கவர்னரை முதன்முறையாக பார்க்கும் ஆவலில், கவர்னர் ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்துவைத்ததை எனது செல்போனில் வீடியோ எடுத்தேன். போட்டோக்களும் எடுத்துக்கொண்டேன். கவர்னர் வருகையின்போது எடுத்த வீடியோவை கணிதம் படித்த 3-ம் ஆண்டு மாணவிகள் மூவர், முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், எனது மகள் வைசாலி மற்றும் பேராசிரியர்கள் சிலருக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினேன். எனக்கு அதிகமான செல்வாக்கு இருப்பதாக மாணவிகள் நம்பி எனது பேச்சை கேட்பார்கள் என்று நினைத்தேன்.

மார்ச் 15-ந் தேதி மாலை 4.45 மணிக்கு மாணவிகள் 4 பேரும் ஒன்றாக பேசிவைத்துக்கொண்டு, ஒரே இடத்தில் இருந்தபடி ஒரு மாணவியின் செல்போனில் இருந்து எனக்கு பேசினார்கள். மாணவிகள் 4 பேரும் ஒரே இடத்தில் இருப்பதை உறுதிசெய்து கொண்ட நான், உடனே அந்த மாணவி போனுக்கு தொடர்புகொண்டு, ஸ்பீக்கரில் போடச் சொல்லி 4 மாணவிகளிடமும் ஒரே நேரத்தில் சுமார் 20 நிமிடங்கள் பேசி அவர்களை மூளைச்சலவை செய்தேன். அந்த உரையாடலில் பெரிய உயர் அதிகாரி என்று துணை வேந்தர், பதிவாளர் ஆகிய இருவரையும் எண்ணிக்கொண்டு யூகத்தின் அடிப்படையில் பேசினேன். வாய்ப்பு வருவதாக நான் சொல்லும்போது, பாடக் குறிப்பு தயாரிப்பதை மனதில் வைத்தே பேசினேன்.

உயர் அதிகாரி என்று நான் சொன்னது, துணை வேந்தர், பதிவாளர் மற்றும் தொலைதூர கல்வி இயக்குனர் ஆகியோருக்கு முருகன் நெருக்கமாக இருந்ததால், முருகன் மூலமாக எதையும் சாதிக்கலாம் என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். அடுத்து, “அவர்கள் கொஞ்சம் எதிர்பார்க்கிறார்கள்” என்று நான் சொன்னது, முருகன், கருப்பசாமி ஆகியோர் மாணவிகள் தான் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதைத்தான் அவ்வாறு சொன்னேன். பணத்தை உங்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்கி போட்டுவிடுவேன் என்றும், மாதாமாதம் சம்பளம் கொடுக்கிற மாதிரி உங்கள் வீட்டுக்கு பணம் வரும் என்று மாணவிகளிடம் நான் கூறியதற்கு, அவர்கள் உடன்பட்டு சம்மதித்தால் அதற்குரிய பணத்தை கொடுப்பதாக குறிப்பிட்டேன். ‘என்கிட்ட கேட்டுக்கொண்டே இருக்காங்க’ என்று கருப்பசாமியைத்தான் சொன்னேன். எனக்கு அவர்கள் சில உறுதியை கொடுத்திருக்கிறார்கள் என்பது, மாணவிகளை பற்றிய விவரம் வெளியே தெரியாது என்பதைக் குறிப்பிட்டு கூறினேன்.

அடுத்த வாரம் ஒரு முக்கியமான ‘அசைன்மெண்ட்’ இருக்கு என்று நான் சொன்னது, கருப்பசாமி அடுத்த வாரம் சென்னை செல்லும்போது தன்னுடன் கல்லூரி மாணவிகளை அனுப்ப ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டதை மனதில் வைத்து சொன்னேன். ‘கவர்னர் வரும் வீடியோவை அனுப்பியிருந்தேன் இல்ல, அப்ப சில விஷயங்கள் நடந்துச்சு. நடுவில் ஸ்கிரீன் இல்ல, கவர்னர் லெவல் கவர்னர் தாத்தா இல்ல’ என்று நான் கூறியதற்கு காரணம், எதார்த்தமாக கவர்னர் வருகையை நான் வீடியோ எடுத்து அனுப்பிய நிலையில், மாணவிகள் என்னை நம்பி சம்மதிப்பார்கள் என்று கூறினேன். ‘ரொம்ப பெரிய லெவல்ல எனக்கு ஆட்களை தெரியும் என கூறினால்தான் மாணவிகள் சம்மதிப்பார்கள்’ என அவ்வாறு கூறினேன்.

மாணவிகள் நான் கூறிய விஷயத்துக்கு சம்மதிக்கவில்லை. அதற்கு நான் உடனே பதில்கூற தேவையில்லை என்றும், நிதானமாக தங்களுக்குள் கலந்துபேசி, மார்ச் 17-ந் தேதிக்குள் முடிவு சொல்லுமாறு கூறினேன். அவர்களின் முடிவை தெரிந்துகொள்வதற்காக மாணவிகள் 4 பேருக்கும் தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தேன். அவர்களது பதிலில், அவர்களுக்கு இஷ்டமில்லை என்பதை தெரிந்துகொண்டேன். இதனால், நான் அவர்களிடம் இந்த விஷயம் தொடர்பாக இனி பேசமாட்டேன் என்றும், இந்த விவரத்தினை வெளியாட்கள் யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன்.

பின்னர், வழக்கம்போல் புத்தாக்கப் பயிற்சிக்கு சென்று வந்தேன். 20-ந் தேதி தேவாங்கர் கல்லூரி செயலாளரிடம் இருந்து எனக்கு கடிதம் ஒன்று ஆள்மூலம் வந்து சேர்ந்தது. அந்தக் கடிதத்தை பார்த்தபோது, புத்தாக்கப் பயிற்சியை முடித்துவிட்டு, உடனடியாக கல்லூரிக்கு வந்து அறிக்கை அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் உடனே செயலாளருக்கு போன் செய்து இதுகுறித்து கேட்டபோது, ‘நாளை கல்லூரிக்கு வாங்க, நேரில் பேசிக்கொள்ளலாம்’ என்று கூறிவிட்டார். உடனே நான் பல்கலைக்கழகத்தில் உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரியை நேரில் சந்தித்து விவரத்தை சொன்னேன். அதற்கு அவர், பயிற்சி முடிந்தால் மட்டுமே அனுப்ப முடியும் என்று கூறியதுடன், இது தொடர்பாக கல்லூரி செயலாளருக்கு கடிதம் ஒன்றை என்னிடம் எழுதிக் கொடுத்து அனுப்பினார்.

பின்னர், அங்கிருந்து நான் தங்கியிருக்கும் இடத்திற்கு புறப்பட்டபோது, அவருடைய காரில் என்னை ஏற்றிக்கொண்டு நான் தங்கியிருந்த இடத்தில் கொண்டுபோய்விட்டார். அப்போது, அவர் என்னுடைய அறைக்கு வந்தார். நாங்கள் இருவரும் அறையில் முத்தமிட்டுக் கொண்டோம். பின்னர், அங்கிருந்து மீண்டும் அவரது காரில் புறப்பட்டோம். பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகேயுள்ள பஸ் ஸ்டாப்பில் என்னை அவர் இறக்கிவிட்டுச் சென்றார். நான் அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டு அருப்புக்கோட்டைக்கு வந்துவிட்டேன்.

அன்று இரவே அவர் கொடுத்த கடிதத்தை எடுத்துக்கொண்டு தேவாங்கர் கல்லூரி செயலாளர் வீட்டிற்கு சென்றேன். அப்பொழுது அவரது குடும்பத்தினர் நாளை கல்லூரிக்கு சென்று பார்க்குமாறு கூறிவிட்டனர். மார்ச் 21-ந் தேதி காலை தேவாங்கர் கலை கல்லூரிக்கு சென்றுவிட்டதால் நான் புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. கல்லூரிக்கு சென்று செயலாளரை சந்தித்தபோது, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடும்படியும், செயலாளருக்கு அந்த அதிகாரி கொடுத்த கடிதத்தை தலைமைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு கணிதத்துறைக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.

நான் செய்முறை தேர்வு நடந்து கொண்டிருந்த கம்ப்யூட்டர் அறைக்கு சென்றுவிட்டேன். மதியம் 12 மணியளவில் அலுவலக உதவியாளர் என்னிடம் வந்து அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். அலுவலக தலைமைப் பொறுப்பாளரை நான் சந்தித்தபோது என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அலுவலக கடிதம் ஒன்றை கொடுத்தார். அதை பிரித்து பார்த்தபோது, என்னை பணியிடை நீக்கம் செய்திருந்தது தெரியவந்தது. என்ன காரணத்திற்காக என்னை பணியிடை நீக்கம் செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எனவே, கல்லூரியில் இருந்த பேராசிரியர்களிடம் இதுகுறித்து கேட்டுப்பார்த்தேன். யாரும் காரணம் சொல்லவில்லை. உடனே நான் செயலாளரை சென்று பார்த்தபோது, கல்லூரி கமிட்டி முன்பு விசாரணை வரும்போது உங்கள் விளக்கத்தை கொடுக்கலாம் என்று கூறினார்.

அந்த ஆணையில் நான் அருப்புக்கோட்டையை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், என்னுடைய உடைமைகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து எடுத்து வருவதற்காக செயலாளரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு பல்கலைக்கழகம் வந்து பெண் அதிகாரி ஒருவரை சந்தித்து பணியிடை நீக்க ஆணையை காண்பித்தேன். பின்பு இதுசம்பந்தமாக முருகனையும் சந்தித்து உதவி கேட்டேன். அவரும் அனைத்துவித உதவிகளையும் செய்வதாக கூறினார். ஆனால், என்ன காரணத்திற்காக என்னை பணியிடை நீக்கம் செய்தார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது.

இந்த நிலையில், மனிதவள மேம்பாட்டு அதிகாரியை சந்தித்து அவரிடம் அந்தக் கடிதத்தை காண்பித்தேன். கடிதத்தில், பணியிடை நீக்கத்திற்கான காரணம் குறித்து குறிப்பிடப்படாததால் என்னை தொடர்ந்து பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுமாறு கூறினார். மேலும், கல்லூரி நிர்வாகத்தை சந்தித்து காரணம் மற்றும் விளக்கத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு, அதற்கு ஏற்றார்போல் செயல்படுமாறு எனக்கு அவர் ஆலோசனை வழங்கினார். அடுத்த 2 நாட்கள் அங்கேயே தங்கி பயிற்சியை தொடர்ந்தேன்.

அப்போது, எனது கணவரின் நண்பருக்கு போன் செய்து, சஸ்பெண்டு செய்யப்பட்ட தகவலை சொன்னேன். அவர் எனது கணவரிடம் போன் செய்து, கல்லூரி செயலாளரிடம் சஸ்பெண்டுக்கான காரணம் குறித்து கேட்கச் சொன்னார். எனது கணவரும் அங்கு சென்று காரணம் கேட்டபோது, கணிதத்துறையை சேர்ந்த மாணவிகள் 4 பேர் ஒரு ஒலிப்பதிவு நாடாவை கொடுத்து என் மீது புகார் மனு அளித்ததால், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கல்லூரி செயலாளர் கூறியுள்ளார். இதை என்னிடம் கணவரின் நண்பர் போன் மூலம் தெரிவித்தார்.

நான் இந்தத் தகவலை முருகனிடம் போனில் தெரிவித்தபோது, அவர் கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறினார். மனிதவள மேம்பாட்டு அதிகாரி எனக்கு போன் செய்தார். அப்போது, என்னை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை சொன்னேன். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகள் வேண்டும் என்று தொடர்ந்து கேட்டதால்தான், நான் இவ்வாறு பேசி மாட்டிக்கொண்டேன் என்றும் அவரிடம் சொன்னேன். அப்போது அவர் யாருக்காக கேட்டார்கள் என்று என்னிடம் கேட்டார். நான் உயர் அதிகாரிகள் என்று மட்டும் கூறினேன். பிறகு அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டேன்.

மார்ச் 30-ந் தேதி வக்கீல் பாபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் எனக்கு போன் செய்து திருத்தணி சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கொடைக்கானல் வருவதாகவும், அவருக்காக என்னை அங்கு வரச் சொன்னார். நானும் பாபுவின் ஜூனியர் வக்கீல் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் காரில் புறப்பட்டு கொடைக்கானல் சென்றேன். போகும்போது, ராஜேஷ் என்னிடம் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். கொடைக்கானலில் ஒரு ஓட்டலில் 2 அறைகள் முன்பதிவு செய்திருந்தார்கள். ஓட்டல் பெயர் எனக்கு தெரியவில்லை. அடுத்தநாள் முழுவதும் நான் திருத்தணி சரணவன் மற்றும் பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.

ஏப்ரல் 1-ந் தேதி என் செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் வாரப் பத்திரிகை ஒன்றில் இருந்து பேசுவதாகவும், மாணவிகளுடன் நான் பேசிய ஆடியோ பதிவு குறித்து பேச வேண்டும் என்றும் கூறினார். இதைக்கேட்டு நான் பதறிப்போய் பல்கலைக்கழக அதிகாரிக்கு போனில் இந்த தகவலை சொன்னேன். அப்போது அவர் என்னிடம், இந்த முருகனுக்கும், கருப்பசாமிக்கும் ‘சப்ளையிங் சர்வீஸ்’ செய்வதே வேலை என்றும், துணைவேந்தர் அல்லது பதிவாளருக்குத்தான் ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கலாம் என்றும் கூறினார்.

ஏப்ரல் 6-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று நான் முருகனை நேரில் சந்தித்தேன். அப்போது அவருடன் கருப்பசாமி, அவரது நண்பர் ராஜபாண்டியன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் உடன் இருந்தனர். நான் வாரப் பத்திரிகை நிருபர் போன் செய்த விவரத்தை சொன்னேன். அதற்கு முருகன், ‘எதுனாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்’ என்று கூறினார். நான் முருகனிடம் துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் சொல்லி எங்கள் கல்லூரி செயலாளரிடம் பேச சொல்லச் சொன்னேன். அதற்கு முருகன் ‘சொல்கிறேன்’ என்று சொன்னார். மேலும், நான் வேலை பார்த்த கல்லூரியில் இந்த விஷயம் குறித்து அவர் விசாரித்ததாகவும், கல்லூரியில் இருந்து என்னை பணிநீக்கம் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

நான் ஏற்கனவே கொடைக்கானல் சென்றபோது, வக்கீல் ராஜேஷ் என்பவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக நான் தெரிந்துகொண்டதை முருகனிடம் சொல்லி கல்லூரி மாணவிகளின் விவரம் கேட்டு சொல்லவா என்று கேட்டேன். அதற்கு அவர், தற்போது சூழ்நிலை சரியில்லை என்று கூறி மறுத்துவிட்டார். அதைக்கேட்ட பின்னர், மனிதவள மேம்பாட்டு அதிகாரியை நேரில் சந்தித்தேன். அவரிடம் என்னுடைய பணியிடை நீக்கம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ஏற்கனவே பலமுறை என்னிடம் போனில் கூறியதுபோல, முருகன் மூலமாக பதிவாளர் மற்றும் துணைவேந்தரிடம் சிபாரிசு செய்யச் சொல்லுமாறு மறுபடியும் கூறினார். பின்னர் என்னுடைய காரில் அவரை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விருதுநகர் நோக்கி சென்றபோது, 4 வழிச்சாலையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, இருவரும் காரிலேயே உடலுறவு கொண்டோம். இந்த பிரச்சினை முடிந்தவுடன் நாம் இருவரும் எங்கேயாவது வெளியே செல்லலாம் என்று நான்கூற, அதற்கு அவர் கொடைக்கானல் போகலாம் என்றார். அவரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்டுவிட்டு, அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டேன்.

ஏப்ரல் 8-ந் தேதி மதியம் நான் மாணவிகளுடன் பேசிய ஆடியோ பதிவு வாரப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த தகவல் எனக்கு தெரியவந்தது. பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போவதால், இதுகுறித்து முருகனிடம் பேசலாம் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செல்ல முடிவெடுத்து பல்கலைக்கழக அதிகாரிக்கு ஏப்ரல் 10-ந் தேதி காலை எஸ்.எம்.எஸ். செய்தேன். அவர் சாயங்காலம் எல்லோரும் கிளம்பிய பிறகு வாருங்கள் என்று எனக்கு போன் செய்து கூறினார். அதன்படி, மாலை 6 மணிக்கு பல்கலைக்கழகம் வந்து முருகனை சந்தித்து பேசினேன். அவருடைய கார் டிரைவர் அப்போது அங்கிருந்தார்.



முருகன் என்னைப் பார்த்து, “ஏம்மா இங்க வந்தீங்க. பல்கலைக்கழகத்தில் யாராவது பார்த்தா, இப்ப உங்களை எல்லாருக்கும் தெரியுமே” என்று சொல்லி காளவாசல் அருகில் உள்ள ஒரு பேக்கரி கடை அருகே காத்திருக்க சொன்னார். ஆனால், அங்கு கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், நான் அங்கு செல்லாமல், காளவாசல் போகும் வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு காத்திருந்தேன். அப்போது முருகன் எனக்கு போன் செய்து மாட்டுத்தாவணி அருகே வரச்சொன்னார். நான் அங்கு கிளம்பி சென்று கொண்டிருந்தபோது, முருகன் மறுபடியும் போன் செய்து மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அருகேயுள்ள பாலத்திற்கு வரச்சொன்னார். நான் அங்கு சென்றபிறகு முருகனும் அங்கு வந்தார். ‘என்னை எப்படியாவது இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று நான் அவரிடம் சொன்னேன்.

அதற்கு அவர், ‘கருப்பசாமியால் நீங்களும், நானும் இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். நான் இப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். என்னை இந்த பிரச்சினையில் இழுத்துவிட்டுவிடாதீர்கள். ஏற்கனவே, துணைவேந்தருக்கும், பதிவாளருக்கும் நிறைய பணம் செலவு பண்ணிட்டேன். உங்க பொண்ணுக்கு இந்த வருடம் கல்விக் கட்டணம் கட்ட ரூ.5 லட்சம் தருகிறேன்’ என்று சொன்னார். நான் உடனே ‘இப்ப அவசரமாக ரூ.1 லட்சம் கொடுங்கள்’ என்று கேட்டேன். அவரும் கையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை என்னிடம் கொடுத்தார். வேறு ஏதாவது பல்கலைக்கழகத்தில் எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் சொன்னார்.

அதன்பிறகு, நான் அங்கேயே நின்றபடி, பல்கலைக்கழக அதிகாரிக்கு போன் செய்து அவரை வரச்சொன்னேன். அவரும் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தார். நான் அவரது காரில் ஏறிக்கொண்டேன். அப்போது, முருகனை சந்தித்தது குறித்தும், அவர் எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருவதாக கூறியதையும் அவரிடம் கூறினேன். பிறகு அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டேன்.

அங்கு இருந்தபடி, கருப்பசாமியை போனில் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் என்னுடைய எண்ணை ‘பிளாக்’ செய்துவிட்டார். ஏப்ரல் 14-ந் தேதி அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன், பதில் இல்லை. பின்னர், முருகனுக்கு போன் செய்து நிலைமை மோசமாவதை கூறி உதவி செய்யுமாறு கேட்டேன். பிறகு 15 மற்றும் 16-ந் தேதிகளில் முருகனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். ஆனால் பதில் இல்லை. ஏப்ரல் 12-ந் தேதி முருகனின் நண்பர் ராஜபாண்டியனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எஸ்.எம்.எஸ். அனுப்பி, முருகனிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம் பெற்றுத்தருமாறு கூறினேன். அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. 14 மற்றும் 15-ந் தேதிகளில் மாணவிகள் 4 பேருக்கும் தொடர்ச்சியாக எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அவர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை.

ஏப்ரல் 16-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு எனது தாயார் வசிக்கும் தெருவை சேர்ந்த ஒருவரின் மைத்துனர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மற்றொருவருடன் என்னை வந்து சந்தித்து, 2 சமூக ஆர்வலர்கள் என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார்கள். நானும் சரி என்று அவர்களை சந்திக்க வரச்சொன்னேன். ஆறுமுகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும், அவருடன் மற்றொருவரும் என்னை வந்து சந்தித்து, கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடைபெறுவதாகவும் என்னை கைது செய்ய எந்த நேரத்திலும் போலீஸ் வரலாம் என்றும் கூறினார்கள். மேலும், நான் விருப்பப்பட்டால் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக கூறியதன்பேரில், நான் அதற்கு சரி என்று கூறியதால், அவர்கள் 5 நிமிடத்தில் வருவதாக கூறிச் சென்றார்கள்.

அவர்கள் வெளியே சென்றவுடன் ராஜாவிடம் இருந்து எனக்கு போன் வந்தது. போலீஸ் என் வீட்டிற்கு வருவதாக தகவல் சொன்னார். நான் உடனே வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு, உள்ளே இருந்தபடி ராஜா மற்றும் ஆறுமுகத்துக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என்னை கைது செய்து அழைத்து சென்றார்.

நான் சிறையில் இருந்தபோது என்னை யாரும் பார்க்க வரவில்லை. எனக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகிய யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. நான் அவர்களிடம் நேரிலோ, போனிலோ பேசியது இல்லை. அறிவியல் கண்காட்சியை திறந்துவைக்க வந்தபோதுதான் கவர்னரை நான் நேரில் பார்த்தேன். அதற்கு முன்பாக அவரை தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்கிறேன். மேலும், நான் இந்த மாணவிகளை தவிர இதற்கு முன் வேறு எந்த கல்லூரி மாணவியையும் இத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு அழைத்தது இல்லை.

இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நிர்மலா தேவி கூறியுள்ளார்.  

அரசு விடுமுறைகள் 2019 .

அரசு விடுமுறைகள் 2019 .

*1. ஆங்கில புத்தாண்டு -* *01.01.2019- செவ்வாய்*

*2. பொங்கல் -* *15.01.2019- செவ்வாய்*

*3. திருவள்ளுவர் தினம் - 16.01.2019 - புதன்*

*4. உழவர் திருநாள் - 17.01.2019- வியாழன்*

*5. குடியரசு தினம் - 26.01.2019 -சனி*

*6. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு*
*வங்கிகள் ) 01.04.2019- திங்கள்*

*7. தெலுங்கு வருடப் பிறப்பு -06.04.2019-சனி*

*8. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2019- ஞாயிறு*

*9. மகாவீர் ஜெயந்தி - 17.04.2019- புதன்*

*10 புனித வெள்ளி - 19.04.2019- வெள்ளி*

*11. மே தினம் - 01.05.2019 - புதன்*

*12. ரம்ஜான் - 05.06.2019- புதன்*

*13. பக்ரீத் -12.08.2019- திங்கள்*

*14.சுதந்திர தினம் - 15.08.2019- வியாழன்*

*15. கிருஷ்ண ஜெயந்தி -23.08.2019 வெள்ளி*

*16. விநாயகர் சதுர்த்தி - 02.09.2019 - திங்கள்*

*17.மொகரம் 10.09.2019- செவ்வாய்*

*18. காந்தி ஜெயந்தி - 02.10.2019 - புதன்*

*19. ஆயுத பூஜை - 07.10.2019- திங்கள்*

*20. விஜயதசமி - 08.10.2019- செவ்வாய்*

*21. தீபாவளி- 27.10.2019- ஞாயிறு*

*22. மீலாதுன் நபி -10.11.2019- ஞாயிறு*

*23. கிறிஸ்துமஸ் -25.12.2019- புதன்*

புதன், 17 அக்டோபர், 2018

அம்பானி, அதானி வாங்கிய கடன்கள் பற்றிய விபரங்க கீழே!!!


அம்பானி, அதானி வாங்கிய கடன்கள் பற்றிய விபரங்க கீழே!!!

கொஞ்சமாவது மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் _

நேரு 
16ஆண்டுகள் 286 நாள்கள்

இந்திரா_காந்தி
15 ஆண்டுகள் 350 நாள்கள்

ராஜீவ்காந்தி
5 ஆண்டுகள் 35 நாள்கள்

மன்மோகன்சிங்
10ஆண்டுகள் 4 நாள்கள்

கிட்டதட்ட 51 ஆண்டுகள் பிரதமராக இருந்து உள்ளனர் -

இவர்கள் செய்த தப்பு எல்லாத்துக்கும் காரணம் எப்படி மோடியாக இருக்க முடியும்?-

எதற்கெடுத்தாலும் மோடி, மோடி என்று அலறுவது எதற்கு ?

ஒரு திருடன் தான் பிடிபடாமல் தப்பிக்க திருடனைப் பிடி, திருடனைப் பிடி என்று கூவிக்கொண்டே ஓடினானாம் _

அது போல இத்துனை வருடங்களாக நம் நாட்டை ஆண்டு பல வகைகளில் நாசம் செய்த காங்கிரஸும் அதன் கூட்டாளிகளும், தாங்கள் திருடியதையும், கொள்ளையடித்ததையும், மூடிமறைக்க -
மோடி, மோடி, என்று மூச்சிறைக்கக் கத்துகின்றன -

மோடியை அகற்ற எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றனர் இந்த தேசதுரோக கும்பல்கள் -

அந்த வரிசையில் இவர்களால் பரப்பப்பட்டு அப்பாவி மக்களை நம்ப வைக்கப்பட்ட பொய்தான் கார்பரேட்டுகளுக்கு மோடி அரசு லட்சக்கணக்கான கோடிகளை வாரி இறைத்து விட்டு அதைத் தள்ளுபடியும் செய்துவிட்டது என்பது -

ஆனால், உண்மை நிலை என்பது வேறு -

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 60 ஆண்டுகளாக வங்கிகளால் தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் 2008 வரை வெறும் 18 லட்சம் கோடிகள் -

ஆனால், 2008 முதல் 2014 - வரை வெறும் ஆறு ஆண்டுகளில் கொடுத்தது 52 லட்சம் கோடிகள் -

இதை நேற்று முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராஜனே ஒப்புக் கொண்டுள்ளார் -

அதுவும், சோனியா, மன்மோகன், சிதம்பரம் போன்றோரின் அறிவுறுத்தலின் பேரில் தரப்பட்டதாக -

நிஜமாகவே இந்தக் கேடுகெட்டவன்களை நினைத்துப் பார்த்தால் இரத்தம் கொதிக்கிறது -

நமது நாட்டில் காங்கிரஸ் தலைமையிலானா ஆட்சியின் போது வங்கிகளால் பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்ட சில பெரிய கடன்களின் விபரங்களைப் பார்ப்போம் -

1)முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 101,303 கோடி ரூபாய் கடன் உள்ளது -

2)கடந்த ஒரு ஆண்டாகத் தட்டு தடுமாறி இயங்கி வரும் பூஷன் ஸ்டீல் நிறுவனம் 46,262.23 கடன் உள்ளது. இந்தக் கடனை பல் வேறு வங்கிகள் இந்த நிறுவனத்திற்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது -

3)உலோகங்கள் மற்றும் சுரங்க நிறுவனமான வேதாந்த லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது -
இந்த நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 36,557.28 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது -

4)ஜேஎஸ்டல்யூ ஸ்டீல் நிறுவனம் _
இந்த நிறுவனத்திற்கு 32,696.57 கோடி ரூபாய் கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது -

5)ஐந்தாவது இடத்திலும் ஸ்டீல் நிறுவனமே உள்ளது. ரத்தன் டாடா தலைமையிலான டாடா குழுமத்திற்குச் சொந்தமான டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு இன்று வரை 30,209.04 கோடி ரூபாய் கடன் உள்ளது -
 6)அதானி பவர் நிறுவனத்திற்கு மட்டும் இன்றைய தேதி வரை 25,274.19 கடன் உள்ளது -

7)அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு 26,557.00 கோடி ரூபாய் கடன் உள்ளது -

8)ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்திற்கு இன்றைய தேதியில் 24,163.34 கோடி ரூபாய் கடன் இருக்கிறது -

9)அலுமினிய மற்றும் செப்புத் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்க்கு 22,621.93 கோடி ரூபாய் கடன் உள்ளது -

10)டெக்ஸ்டைல்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனமான அலோக் இன்டஸ்ட்ரீஸ்க்கு நாட்டின் முக்கிய வங்கிகள் 22,346.01 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது -

11)இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனமான விடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 19,511.56 கோடி ரூபாய் கடன் உள்ளது -

12)டாடா குழுமத்தின் மற்றோறு அங்கமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று வரை 19,511.56 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது -

13)ஷிப்பிங் மற்றும் கட்டுமான துறை நிறுவனமான அதான் போர்ட்ஸ் குஜராத்தின் மிக முக்கியமான சிறப்புப் பொருளாதார மையங்களை எல்லாம் கட்டமைத்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இன்றையே தேதி வரை 18,694.46 கோடி ரூபாய் கடன் உள்ளது -

14)ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் _ இந்நிறுவனம் சுமார் 18,263.85 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் தொகையை நிலுவையில் வைத்துள்ளது.

15)இந்திய டெலிகாம் துறையில் டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் இன்றைய நிலைக்குச் சுமார் 14,283.26 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது. சமீபத்தில் இதன் வர்த்தகத்தை ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்றது குறிப்பிடத்தக்கது -

16)டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா பவர் 12,739.84 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது -

17)அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனமும் 12,600 கோடி ரூபாய் அளவிலான கடனை வங்கிகளுக்குத் திருப்பி அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது -

இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கெல்லாம் இந்தக் கடன்களை வாரி வழங்கியவர்கள் யார் தெரியுமா?
சாட்ஷாத் இன்று மோடி, மோடி என்று கூவுகிறார்களே அதே காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் தான் -

அது மட்டுமல்ல 2014 வரை நமது நாட்டின் மீது இவர்கள் வாங்கி வைத்திருந்த கடன் மட்டும் 60 லட்சம் கோடி -

ஆனால், மோடி அவர்களின் நான்காண்டு ஆட்சியில்...

எந்த ஒரு தனி மனிதனுக்கும் , கார்ப்பரேட்டுகளுக்கும் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி இறைத்து விடவில்லை -

மாறாக, தனது முத்ரா திட்டத்தின் கீழ் 12 கோடி எளிய மக்களுக்கு தொழில் துவங்க கடன் அளித்துள்ளது -
(இதில் கடன் பெற்றவர்களில் பாஸிச பாஜக என்று கூவும் தமிழர்கள் தான் இந்தியாவிலேயே முதலிடம்) -

இப்பொழுது கூறுங்கள் எது சிறந்த ஆட்சி என்று _

மன்மோகன் அரசால் வாரி இறைக்கப்பட்ட கடன்களை தீவிரமாக வசூலிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்த பொழுதுதான் -

காங்கிரஸ் களவானி அதிகாரிகள் துனையுடன் மல்லையா, நீரவ் மோடி போன்ற பலர் வெளிநாடுகளுக்கு ஓடிச் சென்று தஞ்சம் புகுந்து கொண்டனர் -

இன்னும் 29,000 பேர் மீது வெளிநாடு தப்பிச் சென்று விடாமல் தடை போட்டு விசாரனை நடத்தி வருகிறது நமது மோடி அரசு -

கடன்களை கண்டிப்பாக திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும் என்ற நிலையை இன்று கொண்டு வந்தது மோடி அரசு -

அதனால் தான், அம்பானி சென்ற வருடம் 40,000 கோடி ரூபாயை திரும்பச் செலுத்தினார் -

இவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது மோடி அரசை அகற்றிவிட்டால் தப்பித்து விடலாம் என்பதுதான் -

அதற்காகத்தான் மோடிக்கு எதிராக அத்தனை திருடர்களும் கரம் கோர்த்து வருகிறார்கள் -

பொய்களைத் தொடர்ந்து பரப்பி வென்றுவிடத் துடிக்கிறார்கள் -

அப்பாவிப் பொதுமக்களும் இவர்கள் கூறுவதை ஆராய்ந்து பார்க்க வழி இல்லாமல் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் -

நாம் எப்படியாவது மோடி அரசின் நல்ல நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும் -

வரும் தேர்தலில் மோடி அவர்கள் வெற்றி பெற்று தனது சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் தான் பாரதம் உலகின் குருவாகும் -

பாரத மாதா வாழ்க -

தாமிரபரணி புஷ்கரம் -பொய்யும் புரட்டும்

தாமிரபரணி புஷ்கரம் -பொய்யும் புரட்டும் – கார்த்திக் புகழேந்தி!
October 13, 2018 0

“என் பெயர் அமிர்தவர்சினி”

முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி காலமானார்!
சி.பி.ஐ விசாரணை வளையத்தில் முதல்வர்:பதவி விலகச் சொல்வாரா மோடி?

சமீபமாக திருநெல்வேலி குறித்து உறவினர்கள், நண்பர்கள் யாரிடமேனும் பேச்செடுத்தால், மறுவார்த்தையே “ஓ.. உங்க ஊரில் ‘தாமிரபணி மகா புஷ்கரணி’ ரொம்ப பேமஸாச்சே? ஊருக்குப் போறீங்களா புஷ்கரணிக்கு?” என்று தான் தொடர்கிறார்கள்.

அது என்ன புஷ்கரணி- புஷ்கரம் ?

இந்தியாவில் தென்கோடியில் தாமிரபரணி துவங்கி, சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா, ராபி, பியாஜ், ஜீலம், சென்னாப் என வற்றாத நதிகள் வெகுசில உண்டு. இவற்றில், சிந்து, கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரை, பிராணகிதா போன்ற ஆறுகளைப் புண்ணிய தீர்த்தங்கள் என புராணங்கள் வாயிலாகவும், மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நீராடி, மலர்த்தூவி, தீபாராதனை காட்டி, வழிபடுகிற சடங்கிற்கு புஷ்கரம் என்று பெயர் சூட்டி வழங்குகின்றார்கள்.

ஆறுகளை வழிபடுவது இந்த நிலத்தின் தொன்மம். ‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் தாமிரபரணி’ என்பது வழக்கு. திருநெல்வேலியின் பூர்வாங்கம் தாமிரபரணியின் படித்துறைகளில் பொதிந்து கிடக்கிறது. ஆறும் ஊறும் கலந்துகிடக்கிற மக்களை இன்றும் நீங்கள் அங்குசென்றால் கண்ணாரக் கண்டடைய முடியும். மேல் தட்டு கீழ்தட்டு என்ற பாகுபாடுகள் எதையும் தனக்குள் கொள்ளாமல் அநேக மக்களின் அன்றாடப் பாடுகளுக்குள் கலந்துகிடக்கிற நதி அது.

அப்பேர்பட்ட தாமிரபரணிக்கு 144 ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்கர விழா நடைபெற இருக்கிறது. ஆனால், இன்று சொல்லப்படும் 144 ஆண்டுகளுக்கு முந்தைய, விருச்சிகத்தில் இருந்து கடகத்திற்கு இடம்பெயரும் நாட்களில் நடைபெறும் ‘தாமிரபரணி புஷ்கரம்’ எனும் இந்து மதக் கட்டுக் கதைகள் உண்மையானதா?

தாமிரபரணியில் இந்தப் புஷ்கர நிகழ்வை ஏற்பாடு செய்ய முன்னின்று உழைப்பவர்கள் காஞ்சி காமகோடி பீடத்து நிர்வாகிகள். இவர்கள்தான் “இந்த 144 ஆண்டுக்குப் பிறகு” என்ற போலி வரலாற்றைத் தாமிரபரணி ஆற்றின் மீது கட்டமைப்பவர்கள். கிமு. ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இயங்குகிற மடம் தங்களுடையது என்று காஞ்சி மடத்தின் தோற்றக்கதையிலே அடித்து விடுகிற இவர்களுக்கு இந்தக் காலகட்டப் பிரச்சனை ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இது 2018ம் ஆண்டு. இவர்களின் கணைக்குப்படி, 144 ஆண்டுகளுக்கு முன் புஷ்கரம் நடைபெற்றது என்றால் 1874ம் ஆண்டில் அப்படி ஓர் நிகழ்வு நடைபெற்றிருக்க வேண்டும். சற்றும் முன் அல்லது பின்னாக 1870 முதல் 1875 வரையிலான திருநெல்வேலி வரலாற்றைச் சரியாக அமர்ந்து வாசித்தால் இவர்களது முழுப் புரட்டும் பொய்யும் அம்பலம் ஏறிவிடும்.

1870ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை திருநெல்வேலி ஜில்லாவில் ஆக்டிங் கலெக்டராக இருந்தவர் ஜே.ஆர்.அற்புத நாத். அவரையடுத்து மாவட்ட கலெக்ட்டராகப் பொறுப்பேற்ற ஆர்.கே.பக்கிள் 16 நவம்பர் 1870 முதல் 27 பிப்ரவரி 1874 வரை திருநெல்வேலி மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்தவர். பின், நிர்வாக காரணங்களுக்காக அதே ஆண்டில் மட்டும் டபிள்யு.ஏ.ஹெப்பள், டபிள்யு.எச்.காமின் இருவரும் ஆக்டிங் கலெக்டராக மாற்றி மாற்றிப் பொறுப்பேற்றனர்.

1875 அக்டோபரில் 5ம் தேதியில் ஒருநாள் கலெக்டராக இருந்த ஹெப்பள்-க்குப் பிறகு, ஜே.பி.பென்னிங்டன் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரின் நேரடிப் அதிகாரத்திற்கு வருவதற்காக அடுத்த 13 நாட்களும் திருநெல்வேலி கலெக்டர் இல்லாத மாவட்டமாகவே இயங்கியது. 18 அக்டோபர் 1875ல் ஏ.ஜே.ஸ்டூவர்ட் மீண்டும் ஆக்டிங் கலெக்டராக வந்தபோதும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பு சீரான நிலைக்குத் திரும்பவில்லை.

மேற்சொன்ன மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எவருடைய குறிப்புகளிலும் தாமிரபரணி ஆற்றில் இப்படி ஒரு விழா நடைபெற்றதற்கான அறிவிப்புகளோ அல்லது அனுமதி வழங்கின குறிப்புகளோ கிடையாது. மாறாக, 1869, 1874, 1877 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே மூன்று தடவை தாமிரபரணியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, கரைகள் உடைந்தன.

1869-74ம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலியின் ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், ஆத்தூர் தென்பகுதிகள் அளவிட முடியாத பாதிப்புகளைச் சந்தித்தன. 77ல் கொற்கை, கோரம்பள்ளம் நீர்த்தேக்கங்கள் உடைந்து விழுந்தன. 1868 முதல் 74 வரையிலான ஆண்டுகளைத் தாமிரபரணியின் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்திய ஆண்டுகள் என்றே வருணிக்கிறது கெஸட்ஸ் ஆஃப் திருநெல்வேலி வால்யூம் ஒன்று.

அதில் 1874ம் ஆண்டின் வெள்ளச்சேதம் பற்றிய குறிப்பு ஒன்று, “நவம்பர் 24ம் நாள் பாளையங்கோட்டை திரும்பவும் ஒரு பெரு வெள்ளத்துக்குத் தயாராகிவிட்டது. 1869ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இது மூன்று அடி தான் குறைவு. திருநெல்வேலி கிருஷ்ணப்பேரி தேக்கங்கள் நிறைந்துவிட்டன. நயினார்குளம் நிரம்பி வழிந்து பயமுறுத்துகிறது. நெல்லையும் பாளையங்கோட்டையும் ஒன்றிலிருந்து ஒன்று முழுமையாகத் துண்டிக்கப் பட்டிருக்கின்றன. இடைப்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகளும், மக்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.” என்று தெரிவிக்கிறது.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் தான் தாமிரபரணி மகா புஷ்கரம் நடைபெற்றதாகக் காஞ்சி காமகோடி பீடம் தன் பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறது.

சரி மாவட்ட கெஸட் தான் பொய் சொல்லுகிறது என்றால், அதே காலகட்டத்தில் காஞ்சி பீடத்தில் ஆறாவது மடாதிபதியாகப் பொறுப்புக்கு வந்த சுதர்சன மகா தேவேந்திர சரசுவதி (1851லிருந்து 1891)யாவது உண்மையைச் சொல்லி இருக்கலாம். ஆனால் அவர், கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்த காரணத்தால் மடத்தின் கணக்குகளைக் கண்காணித்து வந்த அவரது சித்தப்பா கணபதி சாஸ்திரியால், தஞ்சை மன்னரின் உதவியோடு சிறை வைக்கப்பட்டது துவங்கி சிறையில் உண்ணாநோன்பிருந்தது வரைக்கும் அவரது அத்தனை கதையும் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது. அதில் காஞ்சி பீடத்தினரால், தாமிரபரணியில் மகா புஷ்கரம் நடைபெற்றதாக எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. ஏன்? உண்மையில் அப்படியோர் நிகழ்வு நடந்திருந்தால் தானே?

விவரங்கள் இப்படி இருக்க இவர்கள் எப்படி 144 ஆண்டுகள் முந்தைய புனித அடையாளத்தைத் தாமிரபரணி மீது புகுத்த முயல்கிறார்கள்? ஏன்? இங்கே தான் மதவாத விஷ்வ இந்து பரிஷத் உட்பட்ட அனைத்து காவி அடையாளங்களின் கரங்கள் வேலை செய்யத் துவங்குகின்றன. இவர்கள் முதலில் பொய்யை உண்மையென அறிவிப்பார்கள். அனைத்து பிராமணிய ஊடகங்களும் அவர்களுக்கு உறுதுணையாக மேற்படி பொய்யை உண்மை உண்மை என்று அறைகூவும். பிறகு மக்கள் வாய்மொழியில் இது நிஜம் தான் போல என்ற நம்பிக்கை உருவாகத் துவங்கும்.

இந்த மகா புஷ்கர நிகழ்விற்காக நதியின் கரைகளையும், துறைகளையும் கோயில் சாலைகளையும் புனரமைக்க மக்கள் வரிப்பணம் தான் செலவிடப்படும் என்றாலும் இவர்களது கைங்கரியத்தால் தங்களது மத அடையாளங்களை மக்களின் தொன்மங்களுக்குள் விசமமாகப் புகுத்தத் துவங்குவார்கள். எளிய மக்களின் அடையாளமாக விளங்கும் நாட்டார் தெய்வங்களை, ஆற்றங்கரைப் பள்ளிவாசல்களை, தேவாலயங்களை, எளிய மக்களின் இயற்கை வழிபாடுகளை அடையாளமிழக்கச் செய்து, அவற்றுக்கு காவிநிறம் பூசுவார்கள். எங்கள் அய்யனார் கோயில்களில் பின்னே நவக்கிரகங்கள் புகுந்ததெப்படி?

தாமிரபரணி ஆற்றங்கரை உலகின் தொன்மையான நாகரிக வெளி. ஆதிச்சநல்லூர் அதன் கண்டெடுக்கப்பட்ட எச்சம். அங்கே காவி மத அடையாளத்தின் பெயரால் தங்கள் அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் பிராமணியச் சிந்தனையின் யுக்தியை, அதன் முன்பின்னுள்ள சக்திகள் எளிய மக்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியோடு பொருத்தி விளையாட்டுக் காண்பிக்கின்றன.

நம் மக்களிடம் இதுகுறித்து எதிர்க்கருத்தைச் சொன்னால், “என்னம்ன்னாலும் நம்மூருக்கு நல்லதுதான்ல செய்தான்” என்பார்கள். அவர்களிடம் விளங்கச் சொல்லிப் புரியவைப்பதில் சங்கடம்தான் எஞ்சும். ஊரின், நகரத்தின், தேசத்தின் முக்கியமான அடையாளங்கள் மீது கல்லெறிந்து, அந்த சலசலப்பிலே தங்களை வளர்க்கத் துடிக்கும் புத்திசீவிகள் காவிகள். கங்கை முதல் கன்னியாகுமரி வரை அவர்கள் அதைத்தான் செய்தார்கள் செய்வார்கள்.

தாமிரபரணி ஆறும், திருநெல்வேலி ஊரும் நம்முடையது. எனில், இந்தப் பொய்யும் புரட்டு செய்து கொண்டாடும் விழா யாருக்கானது. யாரோ ஒருத்தனாவது எதிர்த்து எழுதியதாக இருக்கட்டும் என்று இதை எழுதுகிறேன். இந்த மகா புஷ்கரம் குறித்து எழுதச் சொல்லிக் கேட்ட நண்பன் பிரகாஷ்க்கு நன்றி.

-கார்த்திக் புகழேந்தி.
12-10-2018

#thamiraparani_pushkaram #pushkaram #தாமிரபரணி_புஷ்கரம் #புனித_நீராடல்

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

சங்கர் IAS அகாடமியின் CEO மற்றும் Founder. சங்கர் தூக்கிட்டு தற்கொலை.

சங்கர் IAS அகாடமியின் CEO மற்றும் Founder. சங்கர் தூக்கிட்டு தற்கொலை.

வாழ்க்கை தான் எத்துணை விசித்திரமானது என்பதற்கான இன்றைய உதாரணம்...

நான் சங்கர் ஆனது எப்படி?

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் வந்த கட்டுரை..
------------------------------

நல்லாக்கவுண்டம்பாளையத்தில் நானும் என் தாத்தாவும் பார்க்காத, விளையாடாத தோப்பு எதுவும் இல்லை. பேரன் மீது அளவற்ற பாசம். என்னைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி ஒவ்வொரு தோப்பாக அழைத்துச் செல்வார்.என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த தாத்தா, ராகிங் குற்றத்துக்காக நான்

கல்லூரியில் இருந்து ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது, கலங்கிப்போனார். திறமையைவிட ஒழுக்கமே பெரிது எனப் போதித்த தாத்தா, மன உளைச்சலின் உச்சத்தில் என்னுடன் ஒரு வார்த்தையும் பேசாமல் தன் உயிரைப் போக்கிக்கொண்டார். வாழ்க் கையை-யும் உலகத்தையும் புரியவைக்கத் தன் உயிரைத் தந்த தாத்தா ரெங்கையா கவுண்டரின் அன்புக்கு என் அத்தனை வெற்றிகளும் சமர்ப்பணம்!''.

நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் சங்கர். சென்னை-யின் முன்னணி ஐ.ஏ.எஸ்., அகாடமிகளில் சங்கரு-டையதும் ஒன்று. கடந்த வருடம் தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 96 பேர்களில் 36 பேர் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள். வருடம் ஒன்றுக்கு 300-க்கும் அதிகமானவர்களை சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயார் செய்து அனுப்புகிறார். திருச்செங்கோடு பக்கம் ஓர் உள்ளடங்கிய கிராமத்தில் பிறந்து, முதல் தலைமுறைக் கல்வி பெற்ற சங்கர், இப்போது ஒவ்வொரு வருடமும் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்--களை உருவாக்குகிறார். ஆனால், இவர் நான்கு முறை சிவில் சர்வீஸ் எழுதி தோல்விகளைத் தழுவியவர் என்பதுதான் ஆச்சர்யம்!

"ஊத்தங்கரையில்தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். ஐந்து பாடங்களிலும் சேர்த்து நான் எடுத்த மதிப்பெண்கள் மொத்தமே 32-தான். பருத்திக் காட்டில் வேலை பார்த்து என்னைப் படிக்க வைத்த என் அப்பா, 'நீ படிக்க லாயக்கு இல்லை' என்று, நல்லாக்கவுண்டம்பாளையத்தில் இருந்த என் தாத்தா வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அங்கு ஒரு வருடம் தறி வேலை பார்த்தேன். அடுத்த வருடம் நல்லசமுத்திரம் பள்ளியில் சேர்க்கப்பட்ட போது, முதல் நாளே இங்கிலீஷ் வாத்தியார் என்னைப் புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னார். தட்டுத் தடுமாறிப் படித்து முடித்ததும் நான் நன்றாகப் படித்ததாகச் சொல்லி, ஒரு சாக்லேட் பரிசு அளித்தார். நான் முதன்முதலாகப் பாராட்டின் சுவையைருசித்தேன்.

விளைவு... 10-ம் வகுப்பில் நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். ப்ளஸ் டூ முடித்து கல்லூரியில் சேர வேண்டும். ஆனால், இன்றைய இளைஞர்கள் பலரைப்போல டைரக்டர் கனவு என்னைஆட்டிப் படைத்தது. 'இம்ப்ரூவ்மென்ட் எழுதுகிறேன்' என்ற பெயரில், தியேட்டர் தியேட்டராகச் சென்று சினிமா பார்க்கத் தொடங்கினேன். அப்புறம் பரீட்சையில் என்ன இம்ப்ரூவ்மென்ட் வரும்? ஏற்கெனவே எடுத்ததைவிடக் குறைவான மதிப் பெண்கள்தான் வந்தன.

கல்லூரியில் பி.எஸ்ஸி., அக்ரி சேர்ந்தேன். அந்த வயதின் குறும்பு, வைஷ்ணவி என்ற பெண்ணை நான் ராகிங் செய்ய, அது பெரிய பிரச்னை ஆனது. ஒரு வருட காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். என் தாத்தா இறந்தது அப்போது தான.

என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணிய தாத்தாவின் மரணத்தைத் தொடர்ந்து, ஒரு வருடம் கழித்து அதே கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்தேன். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் இரண்டாம் வருடத்துக்குப் போயிருந்தனர். அப்போது என்னிடம், படிக்க வேண்டும்... எதையாவது அடைய வேண்டும் என்ற வெறி மட்டுமே மிச்சம் இருந்தது. காலத்தின்விளையாட்டில் எந்தப் பெண்ணை நான் ராகிங் செய்தேன் என்று கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டேனோ, அதே வைஷ்ணவியுடன் எனக்குக் காதல்.

கல்லூரி முடித்தபோது மறுபடியும் சினிமா ஆசை. அப்பா ஒயின் ஷாப்பில் வேலை பார்க்க... நான் ஒன்றரை வருட காலம் சினிமாக் கனவுடன் சென்னையில் சுற்றிக்கொண்டு இருந்தேன். அப்போது என்னைப் பார்த்த உறவினர் ஒருவர், 'இப்படியே வீணாப்போகப் போறியா? ஞான ராஜசேகரன்னு ஓரு ஐ.ஏ.எஸ்., இருக்கார். இப்பவும் அவர் அரசு அதிகாரிதான். ஆனா 'மோகமுள்'னு நல்ல படம் இயக்கலையா? நீயும் படிச்சு நல்ல நிலைமைக்கு வா. அப்புறமா சினிமா பண்ணு' என்று சொன்ன வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தன.

எம்.எஸ்ஸி., அக்ரி படிக்க என்ட்ரன்ஸ் எழுதினேன். அரசு ஃபெல்லோஷிப்புடன் ஹரியானாவில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை முடித்ததும் 'அப்படியே சிவில் சர்வீஸ் எழுதலாம்' என்று டெல்லிக்குக் கிளம்பினேன். வீட்டில் மிகக்கடுமையான வறுமை. 'ஆயிரம் ரூவா சம்பளத்துலயாவது ஒரு வேலைக்குச் சேர்' என்று அப்பா நெருக்கினார். 'சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க' என்று இந்தப் பக்கம் வைஷ்ணவி நெருக்கினாள். ஆனால், எதையும்விட முடியவில்லை. என் சிரமம் அறிந்த வைஷ்ணவி டெல்லிக்கு வந்து, வேலைபார்த்துக் கொண்டே என்னைப் படிக்கவைத்தாள். 2001, 2002 இரண்டு வருடங்களும் நான் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி இறுதிக் கட்டம் வரை போனாலும் வெற்றி கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில்தான் என் அப்பா தேவராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார்

வாழ்வில் இதன் பிறகு நான் தோற்பதற்கு எதுவும் இல்லை. மனம் சமன்பட்டு இருந்தது. ஐ.ஏ.எஸ்., தேர்வில் மூன்றாவது, நான்காவதுமுறை யாகவும் தோல்விகள். இந்தப் பக்கம் திருமணத் துக்கான நெருக்கடி. ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில், இத்தனை வருட காலம் சிவில் சர்வீஸ் தேர்வில் கிடைத்த அனுபவத்தைவைத்து, ஓரு அகாடமி தொடங்கலாம் என்று திட்டமிட்டேன். என் அம்மா தான் சேர்த்துவைத்திருந்த 720 ரூபாய் பணத்தைத் தன் பங்காகக் கொடுத்தார். அண்ணா நகரில் 36 மாணவர்களுடன் முதல் வருடம் அகாடமி ஆரம்பித்தது. இப்போது வருடம் ஒன்றுக்கு 300-க்கும் அதிகமானவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறேன். என்னைப் படிக்கவைத்த என் மனைவியை இப்போது ஐ.ஐ.டி-யில் பி.ஹெச்டி., படிக்கவைத்துக் கொண்டு இருக்கிறேன்.

என்னுடன் படித்தவர்கள், என்னிடம் படித்தவர்கள் எத்தனையோ பேர் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது பெருமையாகவும், பொறாமையாகவும் இருக்கும். அரசு அலுவலகங்களுக்குச் செல்ல நேர்கையில் அங்குள்ள அதிகாரிகளைப் பார்க்கும்போது, மனது லேசாகவலிக்கத்தான் செய்யும். ஆனாலும், நான் ஜெயித்திருந்தால், நான் மட்டும்தான் ஐ.ஏ.எஸ்., ஆகியிருப்பேன். தோற்றதினால் இன்று பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன். என் தோல்விகள் எனும் படிக்கட்டுகளில்தான் இத்தனை வெற்றியாளர்கள்!'' - அனுபவத்தின்
 வார்த்தைகளை அழுத்தி உச்சரிக்கிறார் சங்கர்!

வெள்ளி, 5 அக்டோபர், 2018

சுற்றுலா சென்ற இடத்தில் உற்சாகமாக இளம்பெண்ணின் மஜாஜ் , மறுநாள் காத்திருந்த பேரதிர்ச்சி, ஆடிபோன குடும்பத்தார்கள்.!



சுற்றுலா சென்ற இடத்தில் உற்சாகமாக இளம்பெண்ணின் மஜாஜ் , மறுநாள் காத்திருந்த பேரதிர்ச்சி, ஆடிபோன குடும்பத்தார்கள்.!

இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர், உடல் மசாஜ் செய்த மறுநாள் உடல் முழுவதும் சிகப்பு நிறத்திலான கோடுகள் விழுந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் மாத்தேவ், இவர் தன்னுடைய மனைவி கேண்டிஸ் ரைஸோன் மற்றும் அவருடைய சகோதரியுடன் இந்தோனேசியாவிற்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் .
அங்கு நீண்ட நாட்களகாவே முதுகுவலி இருப்பதாக கூறி வந்த மாத்தேவ் வலி குறையும் என எண்ணி மசாஜ் செய்ய சென்றுள்ளார்.
அங்கு மசாஜ் செய்யும் இளம்பெண் மாத்தேவிற்கு 'ரெட் டிராகன் ' மசாஜ் செய்யலாமா என கேட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து மாத்தேவிற்கு எதுவும் தெரியாத நிலையில் கேண்டிஸ் என்னுடைய கணவர் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்வார் என ஆர்வக்கோளாறில் தெரிவித்துள்ளார்.
இந்த வகை மஜாஜ் குவா ஷா என்று அழைக்கப்படுகிறது.இது தசை திசுக்களிலிருந்து அசுத்தங்களை வெளியேற்ற செய்யப்படுகிறது 
அதன்படி அவருக்கு மசாஜ் முடிந்த மறுநாள் மாத்தேவின் கழுத்து பகுதியில் இருந்து முதுகு முழுவதும் சிகப்பு நிறத்திலான கோடுகள் விழுந்துள்ளது . இதனால் குடும்பமே பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஆனால் நாட்கள் ஆக அந்த சிவப்பு இரத்த கோடுகள் மறைந்து விட்டது 

ரெட் அலர்ட் என்றால் என்ன?



ரெட் அலர்ட் என்றால் என்ன?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே கேரள மழை வெள்ளத்தின் போது ரெட் அலர்ட் என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்னர், மீண்டும் கேரளாவை சேர்ந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில், தற்பொழுது, தமிழகத்தில் வரும் 7ம் தேதி அனேக இடங்களில் மிக அதிகமான மழை பெய்யும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
தற்பொழுது வானிலை மையங்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தையான ரெட் அலர்ட் என்றால் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.
அடுத்த 5 நாட்களில் வானிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது போல் அறியும்பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். அந்த எச்சரிக்கையானது பச்சை எச்சரிக்கை (Green Alert ), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) , ஆம்பர் எச்சரிக்கை ( Amber Alert) மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) என மொத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
பச்சை எச்சரிக்கை கொடுக்கப்பட்டால், மக்கள் அச்சப்படத்தேவையில்லை. ஏனெனில், மழை பொழிவதற்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படும் வகையில் வானிலை இருக்கும் பட்சத்தில் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அப்பொழுது, பயணம் செய்வதை மக்கள் தவிர்க்கவேண்டும்.
மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்படும். அதாவது, மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு முதலிய மக்களின் இயல்பு வாழக்கையினை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது.
எனவே ரெட் அலர்ட் பற்றி தெரிந்துகொண்டு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் மக்கள் இருக்கவேண்டும் .