புதன், 31 அக்டோபர், 2018

இந்தியாவும் தேசப்பிதா அன்னை இந்திரா காந்தி அவர்கள் குடும்பமும் வேறெல்ல...


இந்தியாவும் தேசப்பிதா அன்னை இந்திரா காந்தி அவர்கள் குடும்பமும் வேறெல்ல...

 *எனக்கு நீங்கள் சான்று கொடுக்காதீர்கள்; உங்களைவிட இந்து மதத்தை நான் நன்றாக அறிந்தவன்’: பாஜகவை விளாசிய ராகுல் காந்தி* *அவர்கள்* 

நான் கோயிலுக்குச் செல்வதற்கு பாஜக எனக்குச் சான்று அளிக்கத் தேவையில்லை. பாஜகவைக் காட்டிலும் இந்து மதத்தை நன்றாக, தெளிவாக நான் அறிந்தவன். ஒவ்வொரு மதத்தையும் மதிக்கத் தெரிந்த தேசியவாதத் தலைவர் நான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவைக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய காட்சி
நான் கோயிலுக்குச் செல்வதற்கு பாஜக எனக்குச் சான்று அளிக்கத் தேவையில்லை. பாஜகவைக் காட்டிலும் இந்து மதத்தை நன்றாக, தெளிவாக நான் அறிந்தவன். ஒவ்வொரு மதத்தையும் மதிக்கத் தெரிந்த தேசியவாதத் தலைவர் நான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவைக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் மாதம் 27-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2 நாள் பயணமாக மத்தியப்பிரதேச மாநிலம் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உஜ்ஜெயின் நகரில் உள்ள மகாகாளீஸ்வர் கோயிலில் ராகுல் காந்தி நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது பாரம்பரிய உடை அணிந்திருந்தார். இதை பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்துத்துவா என்பது பேஷனாகிவிட்டது, இந்துக்களைத் திசைதிருப்புகிறார் ராகுல் காந்தி, ராகுல் காந்தி எந்தக் கோத்திரத்தை சேர்ந்தவர் என்பதைக் கூற வேண்டும் என்று பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பித்ரா கடுமையாகப் பேசி இருந்தார்.

இதற்குப் பதில் அளித்து ராகுல் காந்தி இன்று இந்தூரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் இந்துத்துவா தலைவர் இல்லை. ஆனால், நான் தேசியவாதத் தலைவர். ஒவ்வொரு மதத்தையும் மதிக்கத் தெரிந்த தேசியவாதத் தலைவர். நான் ஒவ்வொரு மதத்தின், ஒவ்வொரு சாதியின், மொழியின, சமூகத்தின் தலைவர்.

நான் கேட்கிறேன், நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தையும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் குத்தகைக்கு எடுத்து இருக்கிறார்களா, அல்லது அவர்களுக்குச் சொந்தமானதா. மோடியும், அமித் ஷா மட்டும்தான் கோயில்களுக்குச் செல்ல கான்ட்ராக்ட் எடுத்து இருக்கிறீர்களா?

பாஜக தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் கூட  எந்த மாநிலத்தின் கோயிலுக்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் பாரம்பரிய, கோயிலின் பாரம்பரிய உடை அணிந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இதைப்பற்றி பாஜக ஒன்றுமே பேசுவதில்லை.

ஆனால், கமல் நாத், ஜோதிர்தியா சிந்தியா, நான் கோயில் மரபுப்படி ஆடைகள் அணிந்தால், நாங்கள் இந்துத்துவத்தில் பேன்சி ஆடைகளை அணிந்து செல்கிறோம் என்கிறார்கள்.

நான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய நினைத்தால் நான் நிச்சயம் கோயிலுக்குச் செல்வேன். நான் கோயிலுக்குச்செல்ல பாஜகவின் சான்று தேவையில்லை. இந்து மதத்தைப் பற்றி பாஜகவைக் காட்டிலும் நான் நன்றாக அறிந்தவன்.




நான் கோயிலுக்கு மட்டுமல்ல, மசூதிகள், குருதுவாராக்கள், தேவாலயங்கள் என அனைத்து மதவழிபாடு தலங்களையும் மதிக்கிறேன், செல்கிறேன்.

இந்துத்துவா என்றால் என்ன என்பதையும், உண்மையான இந்துமதம் என்றால் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்துமதம் என்பது பரந்துபட்டது, முற்போக்குவாத, சுதந்திர சிந்தனை கொண்ட, அன்பையும், அனைவரிடமும் மதிப்புடன் நடத்தும் சகிப்புத்தன்மை கொண்டதாகும்.

ஆனால் பாஜகவின் இந்துத்துவா கொள்கை என்பது, வெறுப்பு, பாதுகாப்பின்மை, கோபம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்துத்துவாவின் உரிமையாளர் பாஜக. ஆனால், உண்மையான இந்து மதத்துக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால்,அது பரந்துபட்ட சிறந்த அம்சம். எந்த ஒரு கூட்டமும், குழுவும் இந்து மதம் தங்களுக்கு சொந்தம் என்று கூற முடியாது. எங்கள் கட்சி உண்மையான இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைக்கிறோம், இந்துத்துவா மீது நம்பிக்கை இல்லை.


குஜராத் தேர்தல் நடந்தபோது நான் கோயிலுக்கு சென்றேன். அப்போது, நான் செல்வதைப் பார்த்து, பாஜகவினர் நான் எப்படி கோயிலுக்கு செல்லலாம் என்று சிந்தித்தார்கள், பேசினார்கள். நான் இதற்கு முன் கோயிலுக்குச் சென்று இருக்கிறேன், அயோதித்துக்கும் சென்று இருக்கிறோம்.

மோடி அரசு பொய்களை வாக்குறுதியாக அளித்துதான் ஆட்சிக்கு வந்தது. ஊழலை ஒழிப்பேன், நல்லகாலம் வரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறு
காங் தலைவர்  ராகுல் காந்தி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக