செவ்வாய், 29 அக்டோபர், 2019

மூடப்படாத ஆழ்துளைகளை எளிதில் மூட உள்ள வழி

மூடப்படாத ஆழ்துளைகளை எளிதில் மூட உள்ள வழி..

முதலாவது..

கலெக்டருக்கு தகவல் கொடுங்க.. அப்பதான் இவ்ளோ இருக்கானு அவருக்கும் தெரியும். உடனடியா மூட நடவடிக்கை எடுப்பார். கலெக்டர் நம்பர் கீழே உள்ளது..

ரெண்டாவது..

அம்மா அழைப்பு மையம் மூலம் புகார் கொடுங்க - எண் 1100

பேஸ்புக்கல படம் பிடிச்சி போடுறதுக்கு முன்னால இதை பண்ணீருங்க.. ப்ளீஸ்..

எல்லா வகையான புகார்களுக்கும் ஆட்சியரின் எண்களை பயன்படுத்தலாம்! வாட்சப் வசதியும் அந்த எண்ணில் இருப்பதால் அதன் மூலமும் புகார் செய்யலாம்!

----------------

அனைத்து மாவட்ட ஆட்சியர் எண்கள் .

.

சென்னை - 9444131000
திருவள்ளூர் -9444132000
காஞ்சிபுரம் - 9444134000
வேலூர் - 9444135000
திருவண்ணாமலை - 9444137000
விழுப்புரம் - 9444138000
கடலூர் - 9444139000
தருமபுரி - 9444161000
கிருஷ்ணகிரி - 9444162000
நாமக்கல் - 9444163000
சேலம் - 9444164000
நீலகிரி - 9444166000
ஈரோடு - 9444167000
கோவை - 9444168000
திண்டுக்கல் - 9444169000
மதுரை -9444171000
தேனி - 9444172000
கரூர் - 9444173000
திருச்சி .-9444174000
பெரம்பலூர் - 9444175000
நாகபட்டிணம் - 9444176000
திருவாரூர் - 9444178000
தஞ்சாவூர் - 9444179000
புதுகோட்டை - 9444181000
சிவகங்கை - 9444182000
ராமநாதபுரம_9444183000
விருதுநகர் - 9444184000
நெல்லை - 9444185000
தூத்துக்குடி - 9444186000
கன்னியாகுமரி - 9444188000

SMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..!' - இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை

SMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..!' - இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை


ஆப்பிளின் iMessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பில் பல வருடங்களாகத் தயாராகி வந்த மெசேஜிங் முறை RCS. டெலிகாம் நிறுவனங்கள் ஒத்துழைப்புக்காகக் காத்திருந்து காத்திருந்து ஒருவழியாக இந்தச் சேவையை மக்கள் உபயோகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் நிறுவனம். தற்போதைக்கு டெலிகாம் நிறுவனங்கள் உதவியில்லாமல் மாற்றுவழியில் இந்தச் சேவையை இந்தியாவில் செயல்படுத்தியிருக்கிறது கூகுள்.

அதென்ன RCS மெசேஜிங்?

வருகிறது RCS மெசேஜிங்
இப்போதைய SMS சேவைகள் பல வருடங்களுக்கு (1992) முன்பு அறிமுகப்படுத்தப்பட்டவை. தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவிட்டாலும் இது மட்டும் பெரிய அளவில் மாறவே இல்லை. அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள்தான். அதே எழுத்து வடிவம்தான். போட்டோ, வீடியோ அனுப்பும் வண்ணம் வந்த MMS சேவையும் பெரியளவில் இன்று பயன்பாட்டில் இல்லை. இதற்குத்தான் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்கள் வந்துவிட்டனவே. சொல்லப்போனால் வங்கி, ஷாப்பிங் போன்ற வணிகரீதியான சேவைகளுக்கு மட்டும்தான் இந்த SMS சேவைகள் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதுவும் OTP-க்காகத்தான். இது SMS மூலம் வருமானம் பார்த்துவந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கே பெரிய அடி. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்ட சேவைதான் RCS எனப்படும் Rich Communication Service. இதில் SMS போல எழுத்துகள் மட்டும் இருக்காது. படங்கள், வீடியோக்கள் ஷேர் செய்யலாம்; க்ரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், QR கோடு என இன்னும் பல வசதிகள் இருக்கும். இவை அனைத்தும் உங்கள் மெசேஜ் ஆப்பிலேயே இருக்கும் இதற்கு டேட்டா சேவையைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

இது குறித்து இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்

ஏற்கெனவே Allo, Hangouts என்று மெசேஜிங் தொடர்பான சேவைகளை அறிமுகப்படுத்தி தோல்வியைக் கண்ட கூகுள் பல தடைகளைக் கடந்து இந்த RCS சேவை இறுதியாகக் கொடுக்கத்தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை enable செய்ய உங்கள் கூகுள் Messages ஆப்பின் Settings பகுதிக்குச் செல்லுங்கள் அதில் General பிரிவுக்குச் சென்று Chat Features சென்று Enable Chat Features என்ற ஆப்ஷனைத் தேர்வுசெய்யவும்.

தற்போது சில மொபைல்களில் மட்டும்தான் இதற்கான சப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இது அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 28 அக்டோபர், 2019

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித் உயிரிழந்த‌தாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித் உயிரிழந்த‌தாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

திருச்சி

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித் உயிரிழந்த‌தாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில்  விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80  மணி நேரமாக நடைபெற்று வந்தது.

ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்ந்தன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வந்தது.

ஆழ்துளை கிணறு அருகே  தோண்டப்பட்ட பள்ளத்தில் தீயணைப்பு படை வீரர் ஏணி மூலம் இறங்கி பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்தார். குழந்தை மீட்புப்பணி நடக்கும் இடத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.  மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இருந்து இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அவரது கை சிதைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்த‌தாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். குழந்தை சுஜித் உயிர் பிழைக்க தமிழகமே பிரார்த்தனை செய்த நிலையில், சுஜித் உயிரிழந்தது தமிழகத்தையே சோக கடலில் மூழ்கச் செய்துள்ளது.

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

சீமானுக்கு விடுதலைப்புலிகள் கடும் எச்சரிக்கை !

*சீமானுக்கு விடுதலைப்புலிகள் கடும் எச்சரிக்கை* !

*குமுதம்_ரிப்போர்ட்டர் - 29.10.2019 - பக்கம் 48.ல் செய்தி.*

புலிகள் விசயத்தில் தேவையில்லாத கருத்துக்களை பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் !

விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் நெடியவன் சீமானை எச்சரித்ததால் சீமான் கட்சிப்.

இது குறித்து 29.10.2019 தேதியிட்ட
#குமுதம்_ரிப்போட்டரில்_வந்துள்ள_செய்தி :

ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசிய விவகாரம் சீமானுக்கு சிக்கலாகிக்கொண்டே வருகிறது

சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாலா ?

இது வேறு விவகாரம் அதாவது விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறதாம் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் நெடியவன் இதுதொடர்பாக சீமானை தொடர்புகொண்டு கடுமையாக எச்சரிக்கை செய்தாராம். #உங்களுக்கும்_விடுதலைப்புலிகளுக்கும்_என்ன_சம்பந்தம்? தேவையில்லாமல் புலிகளைப் பற்றி நீங்கள் ஏன் பரப்புரை செய்து வருகிறீர்கள்? எங்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக்கொண்டு இப்படி எங்களுக்கு தேவையில்லாத சிக்கல்களை உண்டாக்க வேண்டாம்.மும்பையில் நீங்கள் யாரை சந்தித்துவிட்டு இப்படி பேசினீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு திரும்பியதிலிருந்து ஆமைக்கறி ஏகே 48 என நீங்கள் பேசிய சர்ச்சை பேச்சுக்கள் எல்லாமே புலிகளுக்கு எதிரானது.
எனவே இனிமேல் நீங்கள் புலிகள் விஷயத்தில் தேவையில்லாத கருத்துக்களை பேசக் கூடாது மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தாராம்.

இதற்கு சீமான் ரியாக்சன் ?

அதனால்தான் தற்போது விடுதலைப்புலிகள் விவகாரத்தில் கப்சிப் ஆகி இருக்கிறார் என்கிறார்கள்.

4 நாள், 60 மணி நேரம், பல அடிகள்! - ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீண்ட நம்பிக்கை குழந்தைகள்


4 நாள், 60 மணி நேரம், பல அடிகள்! - ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீண்ட நம்பிக்கை குழந்தைகள்

போர்வெல் இயந்திரங்களால் பூமியைத் துளைத்து போடப்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு ஒரே ஒரு பெயர்தான்... குழந்தை விழுங்கிக் கிணறுகள்! சுமார் 200 அடியில் தொடங்கி 1,000 அடி வரை தண்ணீரைத் தேடி பூமியில் துளையிடுகிறார்கள். தண்ணீர் இல்லையென்றால், மூடாமல் அப்படியே கைவிடப்படும் ஆழ்துளைக் கிணறுகள்தான் குழந்தைகளுக்கு ஆபத்தாக மாறுகின்றன.

திருச்சி குழந்தைதிருச்சி குழந்தை
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதுவரை பல குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவங்கள் பல நடந்துள்ளன. தற்போது, இதேபோன்ற ஒரு சம்பவம் மொத்த தமிழகத்தையும் அதிரவைத்துள்ளது. திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலாராணி தம்பதியின் இரண்டு வயது மகன் சுர்ஜித், நேற்று மாலை 5:30 மணிக்கு தன் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

சிறுவனை மீட்கும் பணி, கடந்த 15 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துவருகிறது. தீயணைப்புப் படையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் பிரத்யேக இயந்திரங்கள் கொண்டு குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகள் தொடர்கின்றன. சம்பவ இடத்துக்கு தேசிய மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். 70 அடி ஆழத்தில் உள்ள குழந்தை விரைவில் மீட்கப்படும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, இதற்கு முன்னதாகப் பல குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் 100 அடிகளுக்கும் கீழே விழுந்து, அவர்கள் வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

திருச்சி குழந்தைதிருச்சி குழந்தை
2012 செப்டம்பர் 30 - கிருஷ்ணகிரி குழந்தை குணா!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அகலக்கோட்டை ஊராட்சிக்குட்பட்டது மந்தையூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் - பத்மா தம்பதியின் மகன், இரண்டு வயதான குணா. இந்தத் தம்பதிக்கு சொந்தமான நிலத்தில் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

அதில் தண்ணீர் வராததால் குழியை மூடாமல் அப்படியே திறந்தபடி விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் விளையாடச் சென்ற குழந்தை குணா தவறி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளார். சுமார் 20 அடி தூரத்தில் பாறைகளுக்கு இடையே குழந்தை குணா சிக்கிக்கொண்டான். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அருகில் குழி தோண்டி குழந்தையை மீட்க முடிவுசெய்தனர்.

ஓசூர்ஓசூர்
2 ஜே.சி.பி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, சிறுவன் குணா விழுந்த ஆழ்துளைக் கிணறு அருகில் 2 குழிகள் வெட்டப்பட்டன. இவ்வாறு 20 அடி ஆழத்திற்கு இரண்டு புறமும் குழிகள் வெட்டப்பட்டன. அதன்பிறகு, சிறுவன் விழுந்த இடத்தின் அருகில் மண்சுவரில் துளையிட்டு, 4 அடி ஆழத்திலிருந்த குழந்தை கயிறு மூலம் உயிருடன் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. மீட்புப் பணிகள் சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்றது.

2018 ஆகஸ்ட் 1- பீகார் சன்னோ

2018-ம் ஆண்டி ஆகஸ்ட் 1-ம் தேதி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது சன்னோ என்ற பெண்குழந்தை, அதிகாலை 4 மணிக்கு தன் வீட்டுக்கு அருகிலிருந்த 165 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. குழந்தை 45 அடி ஆழத்தில் சேறு நிறைந்த பகுதியில் சிக்கிக்கொண்டது. மீட்புப் படையினர், தேசிய பேரிடர் படையினர், ராணுவம் போன்ற பலரின் இடைவிடாத முயற்சியால் சுமார் 30 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

பீகார்பீகார்
2018 செப்டம்பர் 23 - நாகை சிவதர்ஷினி

நாகை, வேதாரண்யம் அருகே உள்ள புதுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவதர்ஷினி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை, தன் பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கு குடிநீருக்காகத் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டது. 15 அடி ஆழம் தோண்டப்பட்ட அந்தக் கிணற்றில் பிற்பகல் பணியாளர் உணவு உண்ணச் சென்ற நேரத்தில் குழந்தை விழுந்துள்ளது. இதையடுத்து மீட்புப் படையினரின் உதவியுடன் சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு குழந்தை சிவதர்ஷினி உயிருடன் மீட்கப்பட்டது.

2019 ஜூன் 10 - பஞ்சாப் ஃபதேவெர் சிங்

பஞ்சாப் மாநிலம் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது ஃபதேவெர் சிங். இந்தக் குழந்தை தன் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருக்கும்போது அங்கு துணியால் மூடப்பட்டிருந்த 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். விழும்போது 20 அடியிலிருந்த குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்துக்குச் சென்றுள்ளான்.

பஞ்சாப்பஞ்சாப்
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர், பேரிடர் பேராண்மைக் குழுவினர், ராணுவப் படையினர் அனைவரும் இணைந்து சுமார் நான்கு நாள்கள், அதாவது 106 மணி நேர நீண்ட தொடர் போராட்டத்துக்குப் பிறகு, குழந்தையை உயிருடன் மீட்டனர். பின்னர், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துவிட்டது.

தமிழகம் - 60 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டவர்!

2014-ம் ஆண்டு, சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு, திடீரெனச் சரிந்துவிழுந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நன்கு நாள்களுக்கும் மேலாக நீடித்தது. 400-க்கும் மேற்பட்டர்கள், பத்து குழுக்களாக இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மவுலிவாக்கம்மவுலிவாக்கம்
ஆக்சிஜன் வழங்க முடியாத அந்த இடிபாடுகளில் சிக்கிய பலர், சுமார் 60 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். தமிழகத்தில் நடந்த இந்த மீட்புப் பணி அதிக கவனம் பெற்றது.

இதற்கு முன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகள், கடுமையான இடிபாடுகளில் சிக்கியவர்கள் எனப் பலர், பல மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நம்பிக்கை திருச்சி சிறுவன் சுர்ஜித்தையும் நிச்சயம் காப்பாற்றும்!


#Surjith #சுஜித்  #SaveSujith

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

திங்கள், 14 அக்டோபர், 2019

#மறக்க_முடியாத_ஹிந்துக்களின்_படுகொலையும்_ஹிந்து_பெண்களுக்கு_நேர்ந்த_அவலமும்.

#மறக்க_முடியாத_ஹிந்துக்களின்_படுகொலையும்_ஹிந்து_பெண்களுக்கு_நேர்ந்த_அவலமும்.

நோகாளி மாவட்டம் 19 லட்சம் முஸ்லிம்களையும் வெறும் 9 லட்சம் ஹிந்துக்களையும் கொண்டது. ஆகஸ்ட் மாதம் "Direct Action day"விற்கு பிறகு கிழக்கு வங்களாத்தில் ஹிந்துக்களை இனப்படுகொலை செய்ய ஒக்டோபர் 10 ஹிந்துக்கள் நவராத்திரி பூஜையில் முழ்கியிருந்த வேளையில் அரங்கேறியது தான் இந்த கலவரம். இதை ஹிந்துக்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை , ஆனால் இந்த நாளில் தான் கலவரம் செய்யவேண்டும் என்று முன்கூட்டிய திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

- இந்தக் கலவரத்தில் சுமார் 2 லட்சம் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.

- ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் மதம் மாற்றப்பட்டனர்.

- 2 ஆயிரத்துக்கு அதிகமான ஹிந்து பெண்கள் இஸ்லாமியர்களால் கற்பழிக்கப்பட்டனர்.

- ஹிந்து பெண்களை வீட்டில் நுழைந்து தூக்கி கொண்டு போய், ஒவ்வொரு இஸ்லாமியர்கள் வீட்டில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த கொடுமையில் பல ஹிந்து பெண்கள் அங்கயே இறந்தனர், பல பெண்கள் நடைபிணங்கள் ஆயினர்.

- 13 வயது பெண்களில் இருந்து கற்பழித்தவனுக்கோ இல்லை ஏற்கனவே திருமணம் செய்தவனுக்கோ , மெளல்விகளின் மூலம் திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.

- தம் பெண்கள் மானம் இழப்பதை விட மாதம் மாறி திருமணம் செய்வதால் அவளது மானம் காக்கப்படும் என்று பல தந்தைமார்கள் தனது மகளை திருமணம் செய்து வைத்தனர்.

- பல ஹிந்து ஆண்கள் தங்களது சகோதரிகளின் மானம் காக்க சண்டையிட்டு வீரமரணம் அடைந்தனர்.

- மதம் மாறிய ஹிந்துகள் அதை நிரூபிக்க அவர்களிடம் பசுக்களை மற்ற கால்நடைகளை வெட்டி நிரூபிக்க கூறினார்கள்.

- நடுநிலை இஸ்லாமியர்களால் கூட அவர்களது வீட்டில் ஹிந்துகளுக்கு 5 நாளிற்க்கு மேல் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை மாறாக அவர்களும் மதம் மாறவே கூறினார்கள்.

- ஹிந்து பெண்களுக்கு நடந்த அவலங்களில், விதவை பெண்கள் கூட விதிவிலக்கல்ல.

- ஹிந்துகள் தப்பித்து கல்கத்தாவிற்க்கு செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டது. கல்கத்தாவில் இருந்து நவராத்திரி பூஜைக்கு வந்த ஹிந்துக்களுக்கும் இந்த அவலம் நடந்தது.

- இரவில் மௌல்வியுடன் ஆயுதங்களுடன் வந்து இஸ்லாமிற்க்கு மாறவில்லை என்றால் இங்கயே இறக்க நேரிடும் என்று பலரை மதம் மாற்றினர்.

- பல கோவில்கள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

- பல தாய்மார்கள் தங்களின் மகளை எப்படியாவது மீட்டு தருமாறு காந்திக்கு கடிதம் எழுதினர்.

-ஹிந்துகள் தாக்கப்படும் வரையில் வேடிக்கை பார்த்த காந்தி , ஹிந்துகள் திருப்பி தாக்கியபோது அமைதியாக இருக்கும்படி கூறினார்.

- காந்தி அங்கே அதன் பிறகு செல்லும்போது வழியெங்கும் கிடக்கும் ஹந்துகளின் பிணங்கள் மேலே தான் ஏறி சென்றார்.

- வீதியில் கிடக்கும் ஹிந்துக்களின் பிணங்களுக்கு மேல் கழுகுகள் சுற்றிக்கொண்டிருந்தது.


இன்னும் சொல்ல முடியாத பல அவலங்கள் ஹிந்துகளுக்கு நடந்தது. குறிப்பாக பெண்களின் நிலைமையை யாராலும் கண்களில் ரத்தம் வராமல் விவரிக்க முடியாது.

இன்று அந்த மாவட்டம் பங்களாதேஷில் உள்ளது. இன்றும் அந்த கொடுமைகள் ஹிந்துகளுக்கு அங்கே நிகழ்கிறது.

குறிப்பு : அந்த மாவட்டத்தில் இந்த கொடுமைகள் நேர்ந்தது நடுநிலை ஹிந்துக்களுக்கும் தான்.

உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு கண்தானத்திற்காக அழைப்பிதழ் அச்சிட்டு அசத்திய திருச்சி தம்பதியினர்



உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு கண்தானத்திற்காக அழைப்பிதழ் அச்சிட்டு அசத்திய திருச்சி தம்பதியினர்

உலக சுகாதார அமைப்பின் 2002 அறிக்கையின் படி, உலகில் உள்ள 45 மில்லியன் கண் பார்வையற்றோரில் 80 விழுக்காட்டினர் 50 வயதிற்கும் அதிகமானோர் ஆவர். கண் பார்வையற்றோரில் 90 சதவீதமானோர் வறிய நாடுகளில் வாழ்கின்றனர். மேலும், கண் பார்வையின்மைக்கு முக்கியமான காரணிகளான கண் புரை நோய், கண் அழுத்த நோய் போன்றவற்றுக்கு இலகுவாகவும், மலிவாகவும் சிகிச்சை அளிக்க முடியும். பன்னாட்டு அரிமா சங்கங்கள் கண் பார்வையின்மையைத் தவிர்க்க உதவும் சில பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து முதன் முதலாக 1998, அக்டோபர் 8 ஆம் நாள் உலக கண்ணொளி நாளைக் கடைப்பிடித்தது. இந்த நிகழ்வு பின்னர் உலக சுகாதார அமைப்பின் விசன் 2020 என்ற பன்னாட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதங்களில் இரண்டாவது வியாழக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் மற்றும் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்

மண்ணுக்குள் புதைப்பதை மனிதனுள் விதைப்போம் என அழைப்பிதழ் அச்சடித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்கள். அழைப்பிதழில் எண்ணற்ற உடன்பிறவா சகோதர சகோதரிகள் கண் தானத்திற்காக காத்திருக்கிறார்கள். ஒருவர் தன் வாழ்நாளிற்குப் பிறகு தனது கண்ணை தானமாக அளிப்பதன் மூலம் எண்ணற்ற பார்வையிழந்த சகோதர சகோதரிகள் யாருக்கேனும் இருவர் வாழ்வில் பார்வை அளிக்க முடியும். தன் வாழ்நாளிற்குப் பிறகு எரிக்கவோ, புதைக்கவோ போகிற உடலிலிருந்து கண்களை எடுத்து பார்வையற்றோருக்கு பொருத்தும் போது உயிர் பிரிந்தாலும் உலகை பார்க்க தன் விழி பயன்படும் வகையில் அமையும். ஒரு வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கண் தானம் வழங்கலாம். விழி வெண்படல பாதிப்பினால் பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை வழங்க கண் தானம் உதவும் . தானம் ஒன்றாக இருந்தாலும் இரண்டு நபர்களுக்கு பார்வை வழங்க இயலும். அவர்களுக்கு மனித சமுதாயத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் கண் தானம் செய்வோர் என்கிற வரணும் கார்னியா எனப்படும் விழி வெண்படலத்தில் பாதிப்பால் பார்வை இழப்பிற்கு ஆளான கண் தேவைப்படுவோர் என்கிற வரனும் இணைந்து பார்வையற்றோருக்கு பார்வை வழங்க இருக்கின்றனர். கண் தானம் வழங்க விரும்பும் நாட்டின் நலன் காக்கும் நல்லோர்களும், அறிஞர்களும், பொதுமக்களும், மகளிர்களும், இளைஞர்களும், திருநங்கையர்களும், கல்லூரி தோழர்களும், தோழியரும் மற்றும் சுற்றமும் நட்பும் தன் சுய விருப்பப்படி தன் வாழ்நாளிற்கு பிறகு பார்வையற்ற சகோதர சகோதரிகளுக்கு யாருக்கேனும் தனது விழிகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்து தனது உறுதிமொழியை நிறைவேற்ற தன்னுடைய குடும்பத்தினரை நியமிப்போம். இறந்தவுடன் கண் வங்கி மருத்துவருக்கு தகவல் தெரிவித்தால் இருப்பிடத்திற்கு வந்து கண்களை தானமாக பெற்றுக் கொள்வார்கள். தானமாகப் பெறப்பட்ட கண்களை பெற்ற கண் வங்கிகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கண்கள் முழுமையாகவோ அல்லது கருவிழியை மட்டும் பிரித்து குளிர்சாதன பெட்டியில் 4 டிகிரி செல்சியஸில் பாதுகாக்கப்பட்டு தானமாக பெறப்பட்ட கண்களை அதிகபட்சமாக 48 முதல் 72 மணி நேரம் வரை பாதுகாத்து பார்வைக்காக காத்திருப்போருக்கு தகவல் தெரிவித்து 24 மணி நேரத்தில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள். எச்ஐவி /எய்ட்ஸ் வெறிநாய்க்கடி, கல்லீரல் ஒவ்வாமை, தொற்றுநோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் கண்களை தானமாக வழங்க இயலாது என்று அழைப்பிதழ் அச்சடித்து உள்ளார்கள் அவ்வண்ணமே கோரும் விஜயகுமார் தங்கள் அன்புள்ள வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் என அழைப்பிதழ் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கி வருவது நூதனமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

வியாழன், 10 அக்டோபர், 2019

இனி இலவசம் கிடையாது - ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா !

இனி இலவசம் கிடையாது - ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா !


செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை ஒரு காலத்தில் ஏர்டெல், வோடோஃபோன், பிஎஸ்என்எல், ஏர்செல் போன்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கோலோச்சி வந்தன. ஆனால், எப்போது இவர்களுக்கு போட்டியாக ஜியோ சிம் கார்டு களத்தில் இறங்கியதோ, அப்போதே மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் சரிவு தொடங்கிவிட்டது. ஏனெனில், இணையதள சேவையை இலவசமாக அள்ளிக் கொடுத்தது ஜியோ. வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம். அதனால், ஏராளமானோர் ஜியோ சிம் வாங்கினர்.

                   


ஏற்கெனவே ஒரு சிம் வைத்திருந்த போதும் கூடுதலாக ஜியோ சிம் வாங்கி பயன்படுத்தினர். அதாவது இன்கம்மிங் கால்களுக்கு ஏற்கெனவே வைத்திருந்த சிம் கார்டுகளையும், அவுட் கோயிங் கால்களுக்கு ஜியோ சிம்மையும் பயன்படுத்தினார்கள். இதுதான், மற்ற நெட்வொர்க்களுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணி சரிவை ஏற்படுத்தியது. இதில், நஷ்டத்தை தாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் சேவையை நிறுத்திக் கொண்டது.

                               


ஏற்கெனவே ஜியோவின் வருகையால் சரிவை சந்தித்து வந்த மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு, ‘ரிங்’ ஆகும் நேரத்தை ஜியோ குறைத்தத்து கோபத்தை மூட்டியது. ரிங் ஆகும் நேரத்தை குறைத்ததால் மற்ற நெட்வொர்க் கால்கள் மிஸ்டு கால் ஆக மாறி ஜியோ வாடிக்கையாளர் அவுட் கோயிங் செய்யும் நிலை உருவாகும்.

ஜியோவில் இருந்து இன் கம்மிங் கால் வந்தால் அதனை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் 6 பைசா கொடுக்க வேண்டியிருக்கும். இதுகுறித்து, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான ட்ராய் இடம் அவர்கள் புகார் அளித்தனார். அந்த புகாரின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு ட்ராய் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.                       


இந்நிலையில், ஒரு போன் காலுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. ட்ராய் நிறுவனத்தின் வலுக்கட்டாயமான அறிவுறுத்தலை அடுத்து ஜியோ இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, ஜியோ சிம் கார்டில் இருந்து மற்றொரு ஜியோ சிம்மிற்கு போன் செய்தாலோ, லேன் லைண்ட்க்கு போன் செய்தாலோ இந்த கட்டணம் கிடையாது. அதேபோல், வாட்ஸ் அப், பேஸ்டைம் உள்ளிட்ட கால்களுக்கும் கட்டணம் கிடையாது. வழக்கம் போல் மற்ற நெட்வொர்கில் இருந்து வரும் கால்கள் இலவசம்தான்.

                   

இருப்பினும், வாய்ஸ் கால்க்கு செலுத்தும் இந்த கட்டணத்திற்கு இணையாக டேட்டா இலவசமாக வழங்கப்படும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது

திங்கள், 7 அக்டோபர், 2019

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் 4 முறை தனிப்பட்ட சந்திப்புகளுடன் 7 மணி நேரத்தை ஒன்றாகச் செலவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன


பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் 4 முறை தனிப்பட்ட சந்திப்புகளுடன் 7 மணி நேரத்தை ஒன்றாகச் செலவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை வரும் ஸி ஜின்பிங் கிண்டியில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் தங்குகிறார்.

 மறுநாள் 12ம் தேதி பிற்பகல் அவர் மாமல்லபுரத்திற்குச் செல்கிறார். அங்கு மோடியும் ஜின்பிங்கும் அர்ச்சுனன் தபசு, பஞ்சரதம் மற்றும் குகைக் கோயில்களைப் பார்வையிடுகின்றனர். தொடர்ந்து குகைக் கோயிலில் நடக்கும் கலாச்சார நிகழ்வுகளை பார்வையிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தையில், அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய ராணுவம் மேற்கொள்ளும் ராணுவ ஒத்திகை தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 75 நிமிடங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. பின்னர் இரு தலைவர்களும் மீண்டும் சென்னை வந்து தங்குகின்றனர்.
3ம் நாளில் மோடியும், ஸி ஜின்பிங்கும் மீண்டும் மாமல்லபுரம் செல்லும் அவர்கள் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் சுமார் 40 நிமிடங்கள் தனியாக சந்தித்துப் பேசுகின்றனர். தொடர்ந்து உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மதிய உணவுக்குப் பின்னர் இரு தலைவர்களும் அதே விடுதியில் மீண்டும் சந்தித்துப் பேச உள்ளனர். இந்த நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் ஸி ஜின்பிங் சென்னை சென்று அங்கிருந்து பெய்ஜிங் புறப்பட்டுச் செல்கிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது டோக்லாம் பிரச்னை, காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.