ஞாயிறு, 27 அக்டோபர், 2019

4 நாள், 60 மணி நேரம், பல அடிகள்! - ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீண்ட நம்பிக்கை குழந்தைகள்


4 நாள், 60 மணி நேரம், பல அடிகள்! - ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீண்ட நம்பிக்கை குழந்தைகள்

போர்வெல் இயந்திரங்களால் பூமியைத் துளைத்து போடப்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு ஒரே ஒரு பெயர்தான்... குழந்தை விழுங்கிக் கிணறுகள்! சுமார் 200 அடியில் தொடங்கி 1,000 அடி வரை தண்ணீரைத் தேடி பூமியில் துளையிடுகிறார்கள். தண்ணீர் இல்லையென்றால், மூடாமல் அப்படியே கைவிடப்படும் ஆழ்துளைக் கிணறுகள்தான் குழந்தைகளுக்கு ஆபத்தாக மாறுகின்றன.

திருச்சி குழந்தைதிருச்சி குழந்தை
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதுவரை பல குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவங்கள் பல நடந்துள்ளன. தற்போது, இதேபோன்ற ஒரு சம்பவம் மொத்த தமிழகத்தையும் அதிரவைத்துள்ளது. திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலாராணி தம்பதியின் இரண்டு வயது மகன் சுர்ஜித், நேற்று மாலை 5:30 மணிக்கு தன் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

சிறுவனை மீட்கும் பணி, கடந்த 15 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துவருகிறது. தீயணைப்புப் படையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் பிரத்யேக இயந்திரங்கள் கொண்டு குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகள் தொடர்கின்றன. சம்பவ இடத்துக்கு தேசிய மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். 70 அடி ஆழத்தில் உள்ள குழந்தை விரைவில் மீட்கப்படும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, இதற்கு முன்னதாகப் பல குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் 100 அடிகளுக்கும் கீழே விழுந்து, அவர்கள் வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

திருச்சி குழந்தைதிருச்சி குழந்தை
2012 செப்டம்பர் 30 - கிருஷ்ணகிரி குழந்தை குணா!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அகலக்கோட்டை ஊராட்சிக்குட்பட்டது மந்தையூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் - பத்மா தம்பதியின் மகன், இரண்டு வயதான குணா. இந்தத் தம்பதிக்கு சொந்தமான நிலத்தில் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

அதில் தண்ணீர் வராததால் குழியை மூடாமல் அப்படியே திறந்தபடி விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் விளையாடச் சென்ற குழந்தை குணா தவறி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளார். சுமார் 20 அடி தூரத்தில் பாறைகளுக்கு இடையே குழந்தை குணா சிக்கிக்கொண்டான். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அருகில் குழி தோண்டி குழந்தையை மீட்க முடிவுசெய்தனர்.

ஓசூர்ஓசூர்
2 ஜே.சி.பி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, சிறுவன் குணா விழுந்த ஆழ்துளைக் கிணறு அருகில் 2 குழிகள் வெட்டப்பட்டன. இவ்வாறு 20 அடி ஆழத்திற்கு இரண்டு புறமும் குழிகள் வெட்டப்பட்டன. அதன்பிறகு, சிறுவன் விழுந்த இடத்தின் அருகில் மண்சுவரில் துளையிட்டு, 4 அடி ஆழத்திலிருந்த குழந்தை கயிறு மூலம் உயிருடன் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. மீட்புப் பணிகள் சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்றது.

2018 ஆகஸ்ட் 1- பீகார் சன்னோ

2018-ம் ஆண்டி ஆகஸ்ட் 1-ம் தேதி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது சன்னோ என்ற பெண்குழந்தை, அதிகாலை 4 மணிக்கு தன் வீட்டுக்கு அருகிலிருந்த 165 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. குழந்தை 45 அடி ஆழத்தில் சேறு நிறைந்த பகுதியில் சிக்கிக்கொண்டது. மீட்புப் படையினர், தேசிய பேரிடர் படையினர், ராணுவம் போன்ற பலரின் இடைவிடாத முயற்சியால் சுமார் 30 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

பீகார்பீகார்
2018 செப்டம்பர் 23 - நாகை சிவதர்ஷினி

நாகை, வேதாரண்யம் அருகே உள்ள புதுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவதர்ஷினி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை, தன் பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கு குடிநீருக்காகத் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டது. 15 அடி ஆழம் தோண்டப்பட்ட அந்தக் கிணற்றில் பிற்பகல் பணியாளர் உணவு உண்ணச் சென்ற நேரத்தில் குழந்தை விழுந்துள்ளது. இதையடுத்து மீட்புப் படையினரின் உதவியுடன் சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு குழந்தை சிவதர்ஷினி உயிருடன் மீட்கப்பட்டது.

2019 ஜூன் 10 - பஞ்சாப் ஃபதேவெர் சிங்

பஞ்சாப் மாநிலம் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது ஃபதேவெர் சிங். இந்தக் குழந்தை தன் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருக்கும்போது அங்கு துணியால் மூடப்பட்டிருந்த 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். விழும்போது 20 அடியிலிருந்த குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்துக்குச் சென்றுள்ளான்.

பஞ்சாப்பஞ்சாப்
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர், பேரிடர் பேராண்மைக் குழுவினர், ராணுவப் படையினர் அனைவரும் இணைந்து சுமார் நான்கு நாள்கள், அதாவது 106 மணி நேர நீண்ட தொடர் போராட்டத்துக்குப் பிறகு, குழந்தையை உயிருடன் மீட்டனர். பின்னர், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துவிட்டது.

தமிழகம் - 60 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டவர்!

2014-ம் ஆண்டு, சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு, திடீரெனச் சரிந்துவிழுந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நன்கு நாள்களுக்கும் மேலாக நீடித்தது. 400-க்கும் மேற்பட்டர்கள், பத்து குழுக்களாக இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மவுலிவாக்கம்மவுலிவாக்கம்
ஆக்சிஜன் வழங்க முடியாத அந்த இடிபாடுகளில் சிக்கிய பலர், சுமார் 60 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். தமிழகத்தில் நடந்த இந்த மீட்புப் பணி அதிக கவனம் பெற்றது.

இதற்கு முன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகள், கடுமையான இடிபாடுகளில் சிக்கியவர்கள் எனப் பலர், பல மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நம்பிக்கை திருச்சி சிறுவன் சுர்ஜித்தையும் நிச்சயம் காப்பாற்றும்!


#Surjith #சுஜித்  #SaveSujith

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக