வியாழன், 28 நவம்பர், 2019

ஆல் இண்டியா ரேடியோ .. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி ..



ஆல் இண்டியா ரேடியோ .. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி ..

இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரின் இன்முகம் காண்போமே .. !

வயது 84

இந்த உலகில் அழகால் அறியப்படுபவர்களுக்கு இணையாக குரலால் அறியப்பட்டு, அழியாப் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.

இப்படித் தமது குரலால் புகழ் பெற்றவர்களில் முக்கியமான ஒருவரைத் தேடி கண்டடைந்தோம்.



அவர் தான் அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான “கலைமாமணி’ சரோஜ் நாராயண சுவாமி.

சென்ற தலைமுறை தமிழர்கள், தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை இவரது கம்பீரமான குரலுக்காகவும், உச்சரிப்புக்காகவும் விரும்பிக் கேட்டிருக்கிறார்கள்.

இப்போது மும்பையில் வசிக்கும் சரோஜ் நாராயணசுவாமி இந்த 82 வயதிலும் முதுமையின் சுவடுகள் எதுவும் முகத்தில் தெரியாமலும், அதே கம்பீரமான குரலுடனும் பேசுகிறார்.

அவர் நம்மிடம் பகிர்ந்ததைக் கேளுங்கள்

“என்னுடைய முன்னோர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

ஆனால் நான் பிறந்து வளர்ந்து பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தது எல்லாம் மும்பையில் தான்.

எனக்கு மும்பை ஜென்மபூமி.

தில்லி கர்மபூமி.

அதாவது நான் பிறந்தது மும்பை என்றாலும் சம்பாதித்து புகழ் பெற்றது எல்லாம் தில்லியில்.

நான் அகில இந்திய வானொலிக்கு வருவதற்கு முன்பு யூகோ வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த வங்கியும் அகில இந்திய வானொலிக்கு அருகிலேயே இருந்தது.


பின்னர் அகில இந்திய வானொலியில் தேர்வுகள் எழுதிப் பணிக்குச் சேர்ந்தேன்.

பல்வேறு மாநில மொழிகளில் வரும் செய்தி அறிக்கைகளில், நான் தமிழ்ச் செய்தி வாசிப்பாளரானேன்.

படிப்படியாக முன்னேறி, செய்திப் பிரிவில் உயர்ந்த பதவிகளை அடைந்தேன்.

செய்தி வாசிப்பில் உச்சரிப்பு என்பது ஆத்மாவைப் போன்றது.

எனக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் உச்சரிப்பை உற்றுக் கவனித்து தவறு இருந்தால் திருத்துவேன்.

செய்தி வாசிப்பாளருக்கு ஒரு மொழியியல் அறிஞரைப் போல மொழியைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும்.

செய்தி வாசிப்பில் பிறநாட்டு வார்த்தைகள் வந்தால், அந்தநாட்டு தூதரகத்தையோ, கலாசார மையத்தையோ தொடர்பு கொண்டு அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்த பின்னர் தான் செய்தியில் பயன்படுத்துவேன். உச்சரிப்பில் தவறு வந்து விடக்கூடாதே என்பதற்காகத் தான் இந்த முயற்சி.

செய்தி வாசிப்பாளர்க்கு ஆங்கிலம், ஹிந்தியிலிருந்து பிராந்திய மொழியில் மொழி பெயர்க்க வேண்டும்.



அதிகாலை 5.30க்கு செய்தி என்றால் 3.30க்கே மொழி பெயர்ப்பு செய்வதற்காக வந்து விடுவேன்.

கடும் குளிரும், கடும் வெப்பமும் நிலவும் தில்லியில் எனது குரல் எந்தவிதத்திலும் பாதிக்காதது எனது அதிர்ஷ்டமே.

வானொலி நிலையத்திலுள்ள திரைப்பிரிவிலும் நான் வாய்ஸ் தந்துள்ளேன்.

மொரார்ஜிதேசாய், இந்திராகாந்தி, பி.வி.நரசிம்மராவ் போன்ற பாரத பிரதமர்கள், முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமனையும் நேர்காணல் செய்திருக்கிறேன்.

இந்திரா காந்தி என்னைக் கவர்ந்த பெண்மணி.

ஒரு பிரதம மந்திரியாக மட்டும் இல்லாமல் இந்திராவை ஒரு சகோதரி போல நினைத்தேன்.

அன்னை இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட நாளன்று மாலை தகன நிகழ்ச்சிகளை, நான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு படித்தேன்.

அந்தக் காலத்தில் கேபினட்டில் இருந்த ஒரே “ஆண்மகன்’ இந்திராகாந்தி என்பேன்.

எனது பிள்ளைகளின் அனைவரது அரவணைப்பிலும் அன்பிலும் மனநிம்மதியாக இருக்கிறேன்.



ஓய்வு நேரங்களில் டி.வி. பார்க்கிறேன். குறிப்பாக செய்தியைக் கவனிக்கிறேன்.

சில பேர் உச்சரிப்பில் தவறு செய்கிறார்கள். ழ, ல, ள, வித்தியாசம் பலருக்குத் தெரியாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

தமிழ் தனியார் பண்பலைகளைக் கேட்டதில்லை.

பேசத் தெரிந்தால் போதும், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

நம் நாட்டில் ரேடியோ ஒலிபரப்புக்கென்று ஒரு பாரம்பரியம் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனக்கு கடந்த 2008ம் ஆண்டு கலைமாமணி விருது, கலைஞர் கையால் கிடைத்தது.

நான் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தை.

நான் வாழ்வதும், உங்களுடன் பேசிக் கொண்டிருப்பதும் பாபா தந்த அருள் தான்.’ ஆல்.
Thanks winmeen.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வெள்ளி, 22 நவம்பர், 2019

இளவரசி டயானாவின் ஃபேவரைட் உடை ரூ.3.24 கோடிக்கு ஏலம் விடப்படுகிறது *அப்படி என்ன ஸ்பெஷல் அந்த உடையில், அதைப் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு*



இளவரசி டயானாவின் ஃபேவரைட் உடை ரூ.3.24 கோடிக்கு ஏலம் விடப்படுகிறது

*அப்படி என்ன ஸ்பெஷல் அந்த உடையில், அதைப் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு*


*தனது நற்பண்புகளால் உலக மக்களின் கவனத்தை வென்றவர் இளவரசி டயானா. அவர் அணிந்த நீலநிற வெல்வெட் கவுன், விரைவில் ஏலத்திற்கு வரப்போகிறது.*


 *1985ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ட்ரவோல்ட்டாவுடன் இணைந்து இந்த ஸ்பெஷல் கவுனை உடுத்து டயானா நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது*


*இங்கிலாந்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் டயானாவின் நற்செயல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அந்த வரிசையில், \'சாட்டர்டே நைட் ஃபீவர் (Saturday night fever) இசைக்கு நடனமாடி, பல ஹாலிவுட் பிரபலங்களை ஈர்த்தார் அவர்*



*இவரின் இந்த பார்ட்டி நடனம், அமெரிக்காவைத் தாண்டி உலகெங்கிலும் பிரபலமானது. \'இந்த நிகழ்வு, ஃபேரிடேல் காட்சிபோல உள்ளது என்று உற்சாகமாய்ப் பகிர்ந்தார், டயானாவுடன் இணைந்து நடனமாடிய ட்ரவோல்ட்டா. அதற்கு முக்கியக் காரணம், அவர் அணிந்திருந்த \'இளவரசி\' உடைதான்.டயானாவின் மனத்திற்கு நெருக்கமான இந்த கவுனை முதல்முதலில் 1986ஆம் ஆண்டு ஆஸ்திரிய பயணத்தின்போது அணிந்தார். பிறகு 1991ஆம் ஆண்டு, ராயல் ஒபேரா மாளிகைக்குச் சென்றபோது அணிந்திருக்கிறார். 1997ஆம் ஆண்டு, அவரின் சொந்த உருவப்படம் வரைவதற்காக டயானா தேர்ந்தெடுத்தது இந்த வெல்வெட் கவுனைத்தான்.\r\nஇப்படி நான்கு முக்கிய நிகழ்ச்சிகளில் உடுத்திருந்த இந்த அழகிய உடையை, டயானா இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன், நிதி திரட்டுவதற்காக அவரே ஏலத்திற்குக் கொடுத்திருக்கிறார்.ஃப்ளோரிடாவைச் சேர்ந்த தொழிலதிபரான மவ்ரின் டங்கெல், இந்தக் கவுனை 92 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்குப் பெற்றார். அதை மவ்ரின், 2011ஆம் ஆண்டுவரை வைத்திருந்தார். பிறகு, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் 2 கோடியே 22 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். இதைத் தொடர்ந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் கெர்ரி டெய்லர் ஏலத்திற்காக, நீல வண்ண உடை தயாராக உள்ளது. டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள இந்த ஏலத்தின் தொடக்க விலை 3 கோடியே 24 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத் தக்கது.*

செவ்வாய், 19 நவம்பர், 2019

சிறுத்தைகளால் கலக்கத்தில் காயத்திரி..! டிவிட்டர் கணக்கு முடக்கம்.


  சிறுத்தைகளால் கலக்கத்தில் காயத்திரி..! டிவிட்டர் கணக்கு முடக்கம்.

இந்து மதவழிபாட்டு தளங்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்க வேண்டும் என்று டிவிட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணியினர் செருப்புகளை வீசி போராட்டம் நடத்தினர். இதற்கிடையே காயத்ரி ரகுராமின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தன்னுடன் நடனமாடிய நடிகரின் தோளில் அனாசயமாக தனது காலை தூக்கிபோட்டு தனது நடன திறமையை காட்டியதால் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை காயத்திரி ரகுராம்.

போதிய படவாய்ப்புகள் இல்லாததால் நடிகை காயத்திரிரகுராம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோவிலாக இருக்கும் என்று மேடையில் பேசி இருந்தார்.

மேலும் இந்து கோவில்கள், இந்து மத கடவுள்களை தொடர்ந்து விமர்சிக்கும் விதமாக திருமாவளவன் பேசி வருவதாக கூறி ட்விட்டரில் எதிர் கருத்து பதிவு செய்தார் நடிகை காயத்திரி ரகுராம். அதில் இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் என்று காயத்ரி ரகுராம் குறிப்பிட்டிருந்தார்.

இந்து கோவில்கள் குறித்த பேச்சுக்கு திருமாவளவன் வருத்தம் தெரிவித்து அறிக்கைவிட்ட போது , நடிப்பு பத்தல கிளிசரின் போட்டுக்கங்க என்று மற்றொரு பதிவை வெளியிட்டார் காயத்ரி ரகுராம்.

இதனால் காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தரப்பில் இருந்து காயத்திரிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விசிக மகளிரணியினர் காயத்திரி வீட்டை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போலீசார் தடுத்து நிறுத்தியதால் மகளிரணியை சேர்ந்தவர்கள் தங்கள் காலில் கிடந்த செருப்பை கழற்றி வீசி காயத்திரிக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தனக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்துவதால் தான் பயந்துவிடப்போவதில்லை என்றும் அந்த கட்சியினர் தனக்கு எதிராக எவ்வளவு கீழ்நிலைக்கும் செல்வார்கள் என்று தனக்கு தெரியும் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

மேலும் தான் பின்பற்றும் இந்து மதத்திற்காக தனது உயிரையும் கொடுக்க தயார் என்று கூறிய காயத்திரி, நவம்பர் 27 ந்தேதி காலை 10 மணிக்கு மெரீனாவிற்கு தனியாளாக தான் வருவதாகவும் துணிவிருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தன்னை அங்கு வந்து எதிர்கொள்ளட்டும் என்றும் பகிரங்க சவால் விடுத்துள்ளார். 

இந்த நிலையில் காயத்திரி ரகுராமின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதற்கிடையே டெல்லியில் இருந்து பேஸ்புக் நேரலையில் தங்கள் கட்சியினருடன் பேசிய திருமாவளவன், விரல் கொண்டு நசுக்கும் எறும்பை வேல் கொண்டு தாக்கலாமா ? என்றும் பெண்களை வைத்து தொழில் செய்து, ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ள தற்குறிகளுக்கு என்ன தெரியும் என்றும் அவிழ்த்து போட்டும் ஆடைகளை அகற்றியும் நடிப்பது அவர்களுக்கு தொழில் எனவே அவர்களுக்கு எதிராக போராடுவது வீண் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

திங்கள், 18 நவம்பர், 2019

உச்ச நீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராகிறார்.தமிழகத்தை சேர்ந்த நீதிபதி பானுமதி


*உச்ச நீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராகிறார்.தமிழகத்தை சேர்ந்த நீதிபதி பானுமதி*

ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கொலீஜியத்தின் ஒரு உறுப்பினர் பதவி காலியானது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் நீதிபதி ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

செவ்வாய், 12 நவம்பர், 2019

மக்கள் மேல் கரிசனம் கொள்ளும் முதல்வரும்....முதல்வரை நேசிக்கும் மக்களும் உண்மையான மக்களாட்சியின் பண்பு....!



முதல்வர் நெகிழ்ந்த தருணம்...காலையில் முதல்வர் தனது அலுவலகத்திற்கு வரும் போது, பார்வையாளர்கள் பகுதியில், விசேஷமாக ஒரு பார்வையாளர் தன்னைச் சந்திக்க காத்திருப்பதைக் கண்டார்....

அவரை உடனே சந்திக்கவும் செய்தார்....

அவர், ஆலத்தூரைச் சேர்ந்த பிரணவ் என்னும் இரு கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளி இளைஞர்...

தனது தாய் மற்றும் தந்தையாருடன் முதல்வரைச் சந்திக்க வந்திருந்தார்....

தன்னுடன் வந்த தனது
பெற்றோரைக் காண்பித்து இவர்கள் தான் எனது கைகள் என்று கூறி ஒரு களங்கமற்ற சிரிப்பை உதிர்க்கிறார்....

காலாலேயே முதல்வரின் கையைக் குலுக்குகிறார்....

ஒரு உறையை தனது காலாலேயே முதல்வரிடம் கொடுக்கிறார்...முதல்வரும் குனிந்து அதை வாங்கியவாறு, என்னவென்று வினவ...

பிரணவ், "நான் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு கிடைத்த தொகை தான் இது....இதை முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு தரவே, நான் உங்களை சந்திக்க இங்கு வந்தேன்", என்று கூற...

முதல்வர் நெகிழ்ந்து போனார்....

"எனக்கு உங்களுடன் ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும் தோழர்!" என்ற தனது ஆசையை தயக்கத்துடன் கூறிய பிரணவுடன் ஒரு செல்ஃபியை எடுக்க முதல்வர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்...

பிரணவ் தானே தனது காலாலேயே முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்....

மக்கள் மேல் கரிசனம் கொள்ளும் முதல்வரும்....முதல்வரை நேசிக்கும் மக்களும் உண்மையான மக்களாட்சியின் பண்பு....!

பிரணவ் ஒரு B.Com பட்டதாரி என்பதும், பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு தன்னை தயார் செய்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்...

சனி, 9 நவம்பர், 2019

ஒரே நாளில் பிறந்த 4 சகோதரிகள்… ஒரே நாளில் திருமணம்… தாய் நெகிழ்ச்சி


ஒரே நாளில் பிறந்த 4 சகோதரிகள்… ஒரே நாளில் திருமணம்… தாய் நெகிழ்ச்சி…

கேரளாவில் ஒரே நாளில் பிறந்த 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 5 பேருக்கும், குருவாயூரிலுள்ள ஸ்ரீகிருஷ்ணா கோவிலில் வரும் ஏப்ரல் 26, 2020 அன்று திருமணம் நடைபெறவுள்ளது.


சகோதரிகள் உத்ராஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா மற்றும் சகோதரன் உத்ராஜன் ஆகிய 5 பேரும் 1995 நவம்பர் 18 அன்று பிறந்தனர்.
வியாபாரியான அவரது தந்தை, அவர்களுக்கு ஒரே மாதிரியான உடை, பை, குடை போன்றவற்றை கடைகளில் வாங்க சிரமப்பட்டார். உடமைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என அவரது தந்தை விரும்பினார்.
இந்நிலையில், அவரது மனைவிக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டபோது, குடும்பம் ஒன்றன் பின் ஒன்றாக பணப்பிரச்சனையில் சிக்கியதால் குழந்தைகள் பிறந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கணவர் 2004இல் தற்கொலை செய்துகொண்டார்.

 இந்த சோகத்தில் மூழ்கிய அவரது மனைவி, தனது 5 குழந்தைகளை வளர்த்து படிக்க வைக்க விரும்பினார்.
தற்போது, அந்த குழந்தைகளுக்கு 24 வயது. ஒரு மகள் ஆடை வடிவமைப்பாளர், 2 பேர் மயக்க மருந்து வல்லுநர்கள், மற்றவர் ஆன்லைன் எழுத்தாளர். அவர்களின் சகோதரர் உத்ராஜன் ஒரு டெக்னீசியனாக இருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி கிளையில் நான்காம் வகுப்பு ஊழியராக பணிபுரியாற்றி வரும் அந்தப் பெண்மணி கூறும்போது, எனது கணவர் உயிருடன் இருந்தபோது, 5 பேருக்கும் சம வாய்ப்பும் சிகிச்சையும் கிடைக்க வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில், என் பிள்ளைகளுக்கு ஒரே நாளில் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தேன் என தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 8 நவம்பர், 2019

அயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்!



அயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்!

 அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?
டெல்லி: அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில் முஸ்லிம்கள் தங்களுக்கே இடம் சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்கவில்லை என கூறிய உச்சநீதிமன்றம் அவர்களது மனுக்களை ரத்து செய்தது.


அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூஷன், எஸ் ஏ நசீர் ஆகியோர் தீர்ப்பை வழங்கினர்.


இதையொட்டி இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தீர்ப்பின் நகலை ரஞ்சன் கோகாய் வாசிப்பதற்கு முன்னர் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் தீர்ப்பை வாசித்தார். அவர் கூறுகையில் முஸ்லீம் அமைப்புகள் சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க தவறிவிட்டது. எனவே இந்த இடம் ராமர் ஜென்ம பூமிக்கே சொந்தம் என்றார்.



இந்த தீர்ப்பில் ரஞ்சன்கோகாய் முன் வைத்த முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்:

ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறுபிரிவினர் மறுக்க முடியாது
மசூதியில் கடந்த 1949-ஆம் ஆண்டு சிலைகள் வைக்கப்பட்டன
பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது
தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது
தொல்லியல் துறை ஆதாரங்கள் எல்லாம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.
பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை
பாபர் மசூதிக்கு கீழ் கண்டறியப்பட்ட கட்டடங்கள் இஸ்லாமியர்களுடையது அல்ல
சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை
நிலத்தின் உரிமை நம்பிக்கையின் அடிப்படையில் உறுதி செய்ய இயலாது
சர்ச்சைக்குரிய இடம் ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கே சொந்தமானது
இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும்
அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்
வஃக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய, உத்தர பிரதேச மாநில அரசுகளுக்கு உத்தரவு
சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும்
அயோத்தில் கோவில் கட்ட 3 மாதங்களில் மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
சர்ச்சைக்குரிய இடமான அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கினர்.
ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நன்றி ஒன் இந்தியா.

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்களுக்கு லட்டு பிரசாதம்.



இன்று முதல் மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்களுக்கு லட்டு பிரசாதம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பில், பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை, தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம், இன்று(நவ.,8) காலை துவக்கி வைத்தார்.

மதுரையில், உலக புகழ் பெற்ற, சுந்தரேசுவரர் - மீனாட்சி கோவில் உள்ளது. தினமும், ஏராளமான பக்தர்கள், இக்கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இலவசமாக லட்டு பிரசாதம் வழங்குவது குறித்து, தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன்படி, நடப்பாண்டு தீபாவளி முதல், லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கட்டமைப்பு வசதிகள் முடிவடையாமல் இருந்ததால், திட்டமிட்ட படி வழங்கவில்லை.

தற்போது லட்டு தயாரிக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகள் முழுமையடைந்துள்ளன. இதையடுத்து, முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம், மீனாட்சி அம்மன் கோவிலில், இலவச லட்டு பிரசாதம் வழங்குவதை, இன்று காலை துவக்கி வைத்தார். இன்று முதல், மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு வரும் பக்தர்களுக்கு, கூடல்குமாரர் சன்னிதி முன் லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

புதன், 6 நவம்பர், 2019

M.Phil/Ph.D முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியீடு எப்போது?

M.Phil/Ph.D முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியீடு எப்போது?

தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு எம்பில்., பிஎச்டி., முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியிட, உய ர்கல்வித்துறை தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 95க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 120க்கும் அதிகமான அரசு உதவிபெறும் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.


அரசு கல்லூரி பேராசிரியர்கள் எம்பில்., பிஎச்டி., ேபான்ற ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வது கூடுதல் தகுதியாக பார்க்கப்பட்டது. இதனால், அதுபோன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே அரசு கல்லூரியில் சேர்வதற்கான கல்வித்தகுதியாக, மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி அல்லது பி.எச்டி., முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கல்வித் தகுதியாகவே பி.எச்டி., உள்ளதால், தனியாக அதற்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) தெரிவித்தது. இது கடந்த 2016ம் ஆண்டின் 7வது ஊதியக்குழு பரிந்துரையிலேயே அமல்படுத்தப்பட்டது. இதனால், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், கல்லூரி பேராசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டது.


இதனால் பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற யூஜிசி, நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியத்தை வழங்க உத்தரவிட்டது. இதனை ஏற்று, பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கல்லூரி பேராசியர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதற்கான ஆணையினை வெளியிட தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144