செவ்வாய், 12 நவம்பர், 2019

மக்கள் மேல் கரிசனம் கொள்ளும் முதல்வரும்....முதல்வரை நேசிக்கும் மக்களும் உண்மையான மக்களாட்சியின் பண்பு....!



முதல்வர் நெகிழ்ந்த தருணம்...காலையில் முதல்வர் தனது அலுவலகத்திற்கு வரும் போது, பார்வையாளர்கள் பகுதியில், விசேஷமாக ஒரு பார்வையாளர் தன்னைச் சந்திக்க காத்திருப்பதைக் கண்டார்....

அவரை உடனே சந்திக்கவும் செய்தார்....

அவர், ஆலத்தூரைச் சேர்ந்த பிரணவ் என்னும் இரு கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளி இளைஞர்...

தனது தாய் மற்றும் தந்தையாருடன் முதல்வரைச் சந்திக்க வந்திருந்தார்....

தன்னுடன் வந்த தனது
பெற்றோரைக் காண்பித்து இவர்கள் தான் எனது கைகள் என்று கூறி ஒரு களங்கமற்ற சிரிப்பை உதிர்க்கிறார்....

காலாலேயே முதல்வரின் கையைக் குலுக்குகிறார்....

ஒரு உறையை தனது காலாலேயே முதல்வரிடம் கொடுக்கிறார்...முதல்வரும் குனிந்து அதை வாங்கியவாறு, என்னவென்று வினவ...

பிரணவ், "நான் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு கிடைத்த தொகை தான் இது....இதை முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு தரவே, நான் உங்களை சந்திக்க இங்கு வந்தேன்", என்று கூற...

முதல்வர் நெகிழ்ந்து போனார்....

"எனக்கு உங்களுடன் ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும் தோழர்!" என்ற தனது ஆசையை தயக்கத்துடன் கூறிய பிரணவுடன் ஒரு செல்ஃபியை எடுக்க முதல்வர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்...

பிரணவ் தானே தனது காலாலேயே முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்....

மக்கள் மேல் கரிசனம் கொள்ளும் முதல்வரும்....முதல்வரை நேசிக்கும் மக்களும் உண்மையான மக்களாட்சியின் பண்பு....!

பிரணவ் ஒரு B.Com பட்டதாரி என்பதும், பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு தன்னை தயார் செய்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக