வெள்ளி, 7 ஜூலை, 2017

குழம்பி போன கூகுள்



குழம்பி போன கூகுள்

சவுத் இந்தியன் மசாலா என்று தேடினால் நடிகைகள் போட்டோக்களையும், நார்த் இந்தியன் மசாலா என்று தேடினால், மசாலா பொருட்களையும் கூகுள் காண்பிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மனிதனால் முடியாத பல சந்தேகங்களுக்கு கூட நொடியில் விடை கொடுக்கும் , தவறான தகவல்களை காண்பித்து தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. South Indian masala என்று கூகுளில் டைப் செய்தால் முழுக்க நடிகைகளின் படங்களை காண்பிக்கிறது. அதுவே, North Indian masala என்று டைப் செய்தால் பட்டர் சிக்கன், சாட் மசாலா மற்றும் பல்வேறு மசாலா பொருட்களின் படங்களை காண்பிக்கிறது. கூகுளுக்கு ஏன் இந்த குழப்பம் என அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் கூகுளை வறுத்தெடுத்து வருகின்றனர்.

தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, படங்களை அப்லோடு செய்யும்போது, தென் இந்திய நெட்டிசன்கள், அதில், மசாலா என்ற 'டேக்'கை சேர்த்துவிடுகிறார்கள். தவறான கீவேர்டு உபயோகப்படுத்தியதால் இது போன்ற செயல் நிகழ்ந்துள்ளது. இந்த பிரச்னையை சரி செய்ய, எங்கள் டெக்னிக்கல் டீம் வேலை செய்து வருகிறது. விரைவில் சரிப்படுத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக