ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

பிக்பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகா!











பிக்பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகா!*


பிக்பாஸ் இரண்டாவது சீசன் 100 நாட்களைக் கடந்து விட்டது. ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜய லட்சுமி ஆகிய நான்கு பேர் இறுதிப் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் ரித்விகா டைட்டிலை வெல்ல வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பு. அதே வேளையில், ஐஸ்வர்யாவுக்காக ட்விட்டரில் வாக்கு சேகரிக்கும் யுக்தியையும் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் முன்னெடுத்தனர்.

நேற்றுடன் பிக்பாஸின் வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. ரித்விகாவிற்கு தான் அதிக வாக்குகள் கிடைத்ததென்பதையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடக்கும் செட்டில் இருந்து வெளியே வந்த ஒருவர், பிக்பாஸ் இரண்டாம் சீசனின் டைட்டிலை ரித்விகா வென்றிருப்பதாக, தெரிவித்திருக்கிறார்.

டாஸ்க்குகள், வேலைகள் ஆகியவற்றை சரிவர செய்யாவிட்டாலும், நீதி, நேர்மை, நியாயத்தின்படி செயல்பட்ட ரித்விகா வென்றிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இன்று டிரெண்டாக இருக்கும் Book my show-ன் சுவாரஸ்ய கதை !!



இன்று டிரெண்டாக இருக்கும் Book my show-ன் சுவாரஸ்ய கதை !!

⭐ ஆஷிஷ்-ன் நிறுவனம், நெருக்கடியான நிலைமையில் இருந்து மீள இரண்டே வழிகள் தான் இருந்தது. ஒன்று டிரளiநௌள-ஐ மொத்தமாக முடிவுக்கு கொண்டு வருவது, இல்லையென்றால் தான் வைத்திருந்த மொத்த சேமிப்புகளையும் இதில் முதலீடு செய்து முதலிலிருந்து ஆரம்பிப்பது. இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் ஆஷிஷ் தனது நம்பிக்கையை கைவிடாமல் துணிச்சலுடன் திரும்பவும் சில மாற்றங்களுடன் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

⭐ ஒரு நல்ல தொழிலதிபருக்கு உண்டான அடிப்படை உந்துதலால், ஏற்கனவே செய்த தவறுகளை மாற்றிக்கொண்டார். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் மூன்று பேரும் தனது கம்பெனியை திரும்பவும் கையில் எடுத்து செயல்படுத்த ஆரம்பித்தனர். .உழஅ-ல் இருந்த நெருக்கடிகள் குறைந்ததும் இவர்களது டிரளiநௌள நல்ல நிலைமைக்கு வர ஆரம்பித்தது.

⭐ அதேசமயத்தில் ஊசநனவை உயசனஇ னுநடிவை உயசன வசதிகளும் பெருக ஆரம்பித்தது. அதேபோல் இன்டர்நெட் வசதியும் பெருவாரியாக வளர்ந்து ஒரு திடமான அமைப்பாக மாறியது. 2002 முதல் 2004ஆம் ஆண்டுக்குள் பல்வேறு அமைப்புகள் (அரடவipடநஒ) கொண்ட திரையரங்குகள் அதிகம் உருவாகின. எனவே, ஆஷிஷ் ரூ கோ இந்த திரையரங்குகளுக்கு யுரவழஅயவiஉ வiஉமநவiபெ ளழகவறயசந-ஐ செய்து கொடுத்தனர். இது ஒரு நல்ல தொழில் மாதிரியாக அவர்களுக்கு அமைந்தது.

⭐ இவர்களது டிரளiநௌள நன்கு வளர ஆரம்பித்து 2007ஆம் ஆண்டு இவர்களது கம்பெனியின் மதிப்பீடு 24 கோடியாக கணிக்கப்பட்டது. அந்த ஆண்டே நெட்வொர்க் 18 கம்பெனி ஆஷிஷ் கம்பெனியின் மீது 14.5 கோடி முதலீடு செய்தது. இதனால் டிரளiநௌள-ல் 60மூ பங்குகள் அவர்களுக்கு கிடைத்தது. சரியான சமயம் பார்த்து டிக்கெட்டிங் டிரளiநௌள-ஐ தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து டீழழம அல ளாழற-ஐ மீண்டும் திறந்தனர்.

⭐ ஆனால், இந்தமுறை மிகவும் சிக்கனமாக டிரளiநௌள-ஐ முன்னேற்றி கொண்டு சென்றனர்;. சிறிது காலத்தில் டீழழம அல ளாழற எல்லா ஊர்களிலும் பிரபலமடைந்தது. சரியான நேரத்தில் திட்டமிட்டு செயல்படுத்தியதால் டீழழம அல ளாழற-ன் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. மேலும் மலேசியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் இந்த டிரளiநௌள-ஐ பரவ செய்தனர். இதனால் டீழழம அல ளாழற உலகளவில் வரவேற்பை பெற்றது.

⭐ இதைத்தொடர்ந்து குழசஅரடய 1இ ஐPடுஇ யுசைஉநட ஊhநnயெi ழுpநnஇ ளுரிநச குiபாவ டுநயம போன்ற நிகழ்ச்சிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்றனர். இன்றைக்கு இந்த கம்பெனியின் மதிப்பீடு ரூ.3000 கோடிக்கும் மேல் உள்ளது. இத்துடன் இதன் வளர்ச்சி நிற்காமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.

⭐ ஆஷிஷ் தனது வாழ்க்கையில் பல தோல்விகளை கண்டாலும் தொழிலதிபர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். ஒவ்வொரு முறை கீழே விழும்போதும் தோல்வியை கண்டு துவளாமல், திரும்பவும் எழுந்து நிற்க வேண்டும் என்ற மனதைரியமும், விடாமுயற்சியும் தான் அவரை மென்மேலும் வளரச் செய்தது.

⭐ ஒரு 24 வயது இளைஞன் பெரிய கனவுகளுடன் தொடங்கிய ஒரு டிரளiநௌள தான் இந்த டீழழம அல ளாழற. அந்த வகையில் தற்போது டீழழம அல ளாழற உலகளவில் பிரபலமடைந்துள்ளது என்பது பிரமிக்கத்தக்க விஷயமே!!
வெற்றி, விடாமுயற்சி மற்றும் புத்திசாலித்தனமான நுண்ணறிவு இப்படி எல்லாவற்றிற்கும் உதாரணமாக கருதப்படுபவர் றுயசசநn நுனறயசன டீரககநவவ. இவர் இந்த உலகம் வியக்கும் வகையில் என்ன செய்தார்? என்பதை நாளை முதல் பார்க்கலாம்.

மதி நியூஸ் 28/09/18

மதி நியூஸ்  28/09/18 !

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிப்பது குறித்த கர்நாடக அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி.

நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது.சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் - உச்சநீதிமன்றம்.

சபரிமலை குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் - தேவசம் போர்டு.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது - திமுக தலைவர் ஸ்டாலின்.

பெண்களை கடவுளாக வழிபடும் நாட்டில் சில கோயில்களில் தடை விதிப்பது சரியல்ல கடவுளை வணங்குவதில் ஆண் , பெண் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவுக்கு கால்களில் இருந்து இதயத்துக்கு செல்லும் நாளங்களில் சோதனை செய்ததாக அப்பலோ மருத்துவர் மீரா வாக்குமூலம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.நாடாளுமன்றம், சட்டமன்றம் இதை பின்பற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் என நம்புகிறேன் - கனிமொழி எம்பி

மருத்துவர் மீராவின் வாக்குமூலத்தால், ஜெயலலிதாவுக்கு கால்கள் இல்லை என்ற வதந்தி பொய் என தெரியவந்துள்ளது.

ஆந்திராவில் தமிழக லாரி ஓட்டுனர்கள் மீது ஆந்திர போலீசார் தாக்குதல் - மன வேதனையில் காட்பாடியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜேந்திரன் லாரியிலேயே தூக்கிட்டு தற்கொலை.

ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.தமிழகத்தில் 8 கோடிக்கு மேல் மக்கள் தொகை அதிகமாக உள்ளது; ஆனால், வாக்காளர்கள் 5.82 கோடி பேர்தான் உள்ளனர் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் - திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு.

பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க கோரிய வழக்கு: 7 நாட்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த விவகாரம்: பேராசிரியை நிர்மலா தேவி, முருகனின் ஜாமின் கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

சபரிமலை விவகாரம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மதுரை ஆதீனம் வரவேற்பு.

நாகை : கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த செறுதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் : காயமடைந்த மீனவர்களுக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

அதிமுக 40 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றிபெறும் - கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் போன்ற அதிகாரிகளுக்கு அரசு விருது வழங்க வேண்டும். நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் - மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வாகனங்களை அனுப்ப தனியார் பள்ளி, கல்லூரிகளை தமிழக அரசு மிரட்டுவதா ? - பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் மீண்டும் காலநீட்டிப்பு கேட்க முடிவு செய்துள்ளது.

பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதால் ஆண்களின் பிரம்மச்சரிய விரதம் பாதிக்கப்படும் - சுகி சிவம்.

தீபாவளி பண்டிகைக்கு 22,000 பேருந்துகள் இயக்கப்படும்.சென்னையில் இருந்து நவ.3,4,5 தேதிகளில் 12,000 பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர்

நாடாளுமன்ற தேர்தல் குறித்து திருச்சியில் 9 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை.

பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின் 2ம் ஆண்டு வெற்றி தினம் - துல்லிய தாக்குதலில் பங்கேற்ற ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர்.

எஸ்எஸ்எல்சி , பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு துணை தேர்வு ரத்து : தமிழக அரசு அரசாணை வெளியீடு.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முக.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் - தம்பிதுரை எம்பி.

ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை அடைத்து அனைத்து மருந்து வணிகர்கள் சங்கம் போராட்டம்.

சென்னை : சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில், இன்று 2-வது நாளாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை.

தமிழக முதலமைச்சரையும் , காவல்துறையையும் அவதூறாக பேசிய வழக்கில் எம்எல்ஏ கருணாசுக்கு ஜாமின் - சென்னை எழும்பூர் நீதிமன்றம்.

செப்.26ல் கோவை பேரூரில் நடந்த திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ்.பாரதி மீது வழக்கு பதிவு.

தமிழகத்தில் மத்திய அரசின் கழிவறை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது வருத்தம் தருகிறது : தமிழிசை.

நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் 3 இடங்களில் மண்சரிவு ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்.

ஐபிஎல் போராட்ட வழக்கில் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் எம்எல்ஏ கருணாஸ் மனு தாக்கல்.

திருவாரூர் : மகிழஞ்சேரியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு - நன்னிலம் போலீசார் விசாரணை.

ஐயப்பனின் புனிதத்தை கெடுக்கும் வகையில் தீர்ப்பு உள்ளது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் - அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் கட்சி.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

பெரியார் நினைவு சமத்துவபுரங்களை சீர் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்.

காந்திஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு.

சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் வலிப்பு நோய்க்கு தவறுதலாக மருந்து தந்ததில் சிறுமி லத்திகா உயிரிழப்பு.

2008ல் திருவண்ணாமலையில் சுடுகாட்டுக்கு பாதை கேட்டு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்த வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.

கோவை : சாந்திமேடு அருகே நேற்றிரவு சாலையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட, அன்னூர் காவல் நிலைய காவலர் வெங்கடேஷ்குமாருக்கு கத்திக்குத்து - மருத்துவமனையில் அனுமதி.

திருவள்ளுர்: பொன்னேரி ரயில்வே சுரங்கப்பாதையில் அஜித் என்ற இளைஞர் கை துண்டிக்கப்பட்ட நிலையில் வெட்டிக்கொலை.

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

ரஷியாவில் நர மாமிசத்துக்கு அடிமையான ஒரு பெண், 18 ஆண்டுகளில் 30 பேரை கொன்று சமைத்து சாப்பிட்டிருக்கிறாள். கணவனை, அவனது காதலியை கொல்ல வைத்து சமைத்து சாப்பிட்டபோது போலீசிடம் சிக்கினாள்.


ரஷியாவில் நர மாமிசத்துக்கு அடிமையான ஒரு பெண், 18 ஆண்டுகளில் 30 பேரை கொன்று சமைத்து சாப்பிட்டிருக்கிறாள். கணவனை, அவனது காதலியை கொல்ல வைத்து சமைத்து சாப்பிட்டபோது போலீசிடம் சிக்கினாள்.

நர மாமிச அடிமை

ரஷியாவில் கிரசனோடர் நகரை சேர்ந்தவர் டிமிட்ரி (வயது 35). இவர் காச நோயாளி. இவரது மனைவி நாடலியா (43). இவள், நர மாமிச அடிமை ஆவாள்.

நாடலியாவுக்கு நர மாமிசம் என்றால் கொள்ளை இஷ்டம். கணவரின் துணையோடு மனிதர்களை கொன்று நர மாமிசத்தை விதவிதமாக சமைத்து சாப்பிடுவாள். கணவனையும் சாப்பிட வைப்பாள்.

கணவனின் காதலி

காச நோயாளியான டிமிட்ரிக்கு ஒரு காதலி. அவளது பெயர் எலினா.

டிமிட்ரியும், எலினாவும் ஒன்றாக சுற்றித்திரிவது உண்டு. இது நாடலியாவுக்கு எரிச்சலைத் தந்தது. பொறாமையையும் ஏற்படுத்தியது.

இவ்வளவுக்கும், நாடலியாவும், எலினாவும் ஒன்றாக மது குடிக்கும் வழக்கம் கொண்டிருந்தவர்கள். ஒரு முறை இதில் இருவருக்கும் இடையே பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் ஒரு கட்டத்தில் கணவரோடு சுற்றித்திரிகிற காதலி எலினாவைவும் கொன்று சமைத்து சாப்பிடும் ஆசை நாடலியாவுக்கு வந்தது. தன் ஆசையை கணவரிடம் தெரிவித்தாள்.

காதலியை கொன்ற கணவன்

கணவனோ மனைவி சொல்லைத் தட்ட முடியாத நிலையில் இருந்தான்.

காதலி எலினாவை செல்போனில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இடத்தில் தான் காத்திருப்பதாகவும், அங்கு வந்து சேருமாறும் அழைப்பு விடுத்தான். காதலன் தன்னை கொன்று, மனைவிக்கு பரிசளிக்கப்போகிறான் என்பது தெரியாத அந்தப் பேதைப்பெண், காதலனை சந்திக்க ஆசை ஆசையாய் வந்தாள்.

அவளிடம் சிறிது நேரம் காதலாகப் பேசிக்கொண்டிருந்த டிமிட்ரி, தனது பையில் ரகசியமாக வைத்திருந்த கத்தியை எடுத்து காதலியின் நெஞ்சில் மாறி, மாறி குத்தினான். இதில் அவள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானாள்.

சிக்கினாள்

உடனே டிமிட்ரி அங்கு தனது மனைவி நாடலியாவை வரவழைத்தான். அவள் வந்து, கொல்லப்பட்ட எலினாவின் உடலை துண்டு துண்டாக வெட்டினாள். உடலுறுப்புகளுடன் ‘செல்பி’ படமும் எடுத்துக்கொண்டாள். தனக்கு விருப்பமான எலினாவின் உடல் பாகங்களை எடுத்துக் கொண்டு அவள், கணவனுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

வீட்டில் வந்து சில பாகங்களை உடனே சமைத்து சாப்பிட்டாள். மீதி பாகங்களை பாட்டில்களில் போட்டு, இன்னொரு நாள் சமைத்து சாப்பிடுவதற்காக குளிர்பதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்தாள்.

இதற்கு மத்தியில் எலினா கொலை செய்யப்பட்டது போலீசுக்கு தெரிய வந்தது.

டிமிட்ரியை பிடித்து விசாரித்தபோது, அவர் தன் மனைவி நாடலியாவுக்காகத்தான் காதலி எலினாவை கொலை செய்ததாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நாடலியாவை போலீசார் கைது செய்து விசாரித்தால், அந்த படுபாவிப்பெண் 18 ஆண்டுகளாக 30 பேரை கொன்று நர மாமிசம் சமைத்து சாப்பிட்டதை ஒப்புக்கொண்டாள்.

ரஷியாவை உலுக்கியது

டிமிட்ரியும், நாடலியாவும் சேர்ந்து ‘டேட்டிங்’ இணையதளங்களைப் பார்த்து ஆண்களையும், பெண்களையும் ஆசை வார்த்தை கூறி வரவழைத்து பின்னர் கொன்று சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

நாடலியாவை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவளது கணவன் டிமிட்ரி காச நோயாளி என்பதால் அவரிடம் இருந்து அந்த நோய் தங்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளதால் பின்னர் விசாரிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ரஷிய நாட்டையே உலுக்கி உள்ளது.

இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது!" - `நமக்கு நாமே’ ஐடியா சொல்லும் இளைஞர்



இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது!" - `நமக்கு நாமே’ ஐடியா சொல்லும் இளைஞர்

``வருங்காலத்தில் சாப்பிட நல்ல சாப்பாடு கிடைக்கும். எல்லோரும் பயணிக்கவும் சொந்த கார் இருக்கும். ஆனால், பருக சொட்டு நீர் கிடைக்காது" என்று அபாயச் சங்கை ஊதத் தொடங்கியிருக்கிறார்கள் உலகளாவிய சூழலியாளர்கள். அதற்கு, அச்சாரம் சொல்லும்விதமாக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் மக்கள் வெளியேறும் கொடுமை நடக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலை வரும் காலம் வெகுதூரமில்லை. இந்நிலையில், ``மழைநீரைச் சேமித்தால் பத்து வருடங்கள் வரை அதை வைத்துப் பருகலாம். இங்கே ஏற்படவிருக்கும் குடிநீர்ப் பஞ்சத்தைத் தடுக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி" என்று அடித்துச் சொல்கிறார் கருப்பசாமி. நம்மாழ்வாரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான இவர், சிவகாசியில் உள்ள தனது வீட்டில் மழைநீர் சேகரிப்பைச் செய்திருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நம்மாழ்வார் துயில் கொள்ளும் வானகத்துக்கு வந்த கருப்பசாமியைச் சந்தித்துப் பேசினோம்.

`` `இயற்கை ஒருபோதும் தவறு செய்வதுமில்லை. தன் கடமையைச் செய்யத் தவறுவதுமில்லை. மனிதர்கள்தாம் இயற்கைக்கு எதிராகத்
கருப்பசாமி
தொடர்ந்து செயல்பட்டு, பின்பு பிரச்னை வரும்போது இயற்கைமீது குறைசொல்லும் தவற்றைச் செய்கிறார்கள்'ன்னு அய்யா நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அதனால்தான், நான் அவரை முதன்முறையாகச் சந்தித்த 2009 ம் வருடத்திலிருந்து இயற்கையை விட்டு விலகாத, இயற்கையைச் சிதைக்காத வாழ்வை வாழ்ந்து வருகிறேன். விருதுநகர் மாவட்டம், சிவகாசிதான் எனக்குச் சொந்த ஊர். வருங்காலத்தின் மிகப்பெரிய பிரச்னையா உலகம் முழுக்க ஏற்படவிருப்பது தண்ணீர்ப் பிரச்னைதான். அதனால்தான், எனது வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பைக் கட்டமைத்துள்ளேன். 2013 ம் ஆண்டு சிவகாசியில் வானகம் மற்றும் தேன்கனி, இயற்கை வாழ்வியல் அமைப்பினர் ஒருங்கிணைப்பில் நம்மாழ்வார் ஐயா தலைமையில் இயற்கை வாழ்வியல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் திருவாரூர் `மழைநீர்' வரதராஜன் ஐயா அவர்களும் கலந்துகொண்டார். அப்போது அவர் வீட்டின் மேற்கூரையில் பெய்யும் மழைநீரைச் சேகரிப்பது குறித்து தனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்தார்.

அப்போது அவர், `தண்ணீர்ப் பிரச்னை என்று சொல்வது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லா தண்ணீரைக் கொடுத்திருக்கிறது; கொடுத்துக்கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் பொறுமை இல்லை. இது மட்டும்தான் இப்போதைய பிரச்னை' என்றார் வரதராஜன். எனக்குச் சுருக்கென்று உறைத்தது. எவ்வளவு பெரிய உண்மை. அதோடு அவர், `வெளிக்காற்றும், வெப்பமும் உள்ளே செல்லாமல் இருந்தால்10 ஆண்டுகளானாலும் இந்தத் தண்ணீர் கெட்டுப்போகாது'ன்னு சொன்னார். அப்போதே நான் வீடு கட்டும்போது, மழைநீர் சேகரிப்பு அமைப்பை அமைக்கணும்னு முடிவு பண்ணினேன். எல்லோரையும் மழைநீர் அமைப்பை அமைக்கச் சொல்லி வலியுறுத்தத் தொடங்கினேன். ஏனென்றால், தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டிய நிலைமை வரும் என்று 20 வருடங்களுக்கு முன்பு யாரேனும் நினைத்துப் பார்த்திருப்போமா?. மழை நீர் சேகரிப்புதான் இதற்குச் சரியான மாற்று. சில ஆயிரங்கள் செலவழித்து மழை நீரைச் சேகரித்தால், வருங்காலத் தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச்சென்ற பெரும் மனத் திருப்தி கிடைக்கும்.

கேப்டவுன் வெறும் ஆரம்பம் மட்டும்தான். உலகின் பல பெரு நகரங்களும் இந்த நிலைக்குச் சில வருடங்களில் வரும். இந்தத் தகவல் பலரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இனி இயற்கையை அழிப்பதைத் நிறுத்திவிட்டு, மழைநீரை முறையாகப் பயன்படுத்தி இயற்கைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான், நான் சிவகாசியில் கட்டியுள்ள வீட்டில் மழைநீர் சேமிப்பு அமைப்பை அமைத்து முடித்துள்ளேன். 7000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அமைப்பு இது. சிறிதளவும் காற்று புகாதவாறு அமைத்துள்ளதால், பத்து வருடங்கள் கூட இதில் சேமிக்கப்படும் தண்ணீர் கெட்டுப் போகாது.

எங்கள் வீட்டில் செய்துள்ள அளவின் அடிப்படையைப் பகிர்கிறேன். வீட்டின் மேற்கூரையின் அளவைப் பொறுத்து, ஒரு வருடத்துக்கு வீட்டுக்குத் தேவையான மழைநீரைச் சேகரிப்பதற்கான பெரிய கொள்ளளவு தொட்டிகள் தயாரித்துக்கொள்ளவும். பின்னர்..

1. வடிகட்டிக்கான தொட்டியை, 4 முதல் 5 தட்டுகள் ( சல்லடையைத் தாங்கும் தாங்கிகள் வைக்க ) இருக்குமாறு செய்து கொள்ளவும். அதன் உயரம் குறைந்தது 1 அடியாக இருக்க வேண்டும்.

2. அதன்பின், துருப்பிடிக்காத சல்லடையை ( பிளாஸ்டிக்) வைத்து, அதன் மேல் வடிகட்டி வலை ஒன்று ( பிளாஸ்டிக் கொசுவலை அல்லது நைலான் சல்லடை) வைத்துக் கொள்ளவும்.

3. அதன் மேல் சிரட்டைக்கரித் துண்டுகளை (Activated Carbon) குறைந்தது 4 அங்குலம் அளவுக்கு இட்டு நிரப்பிக் கொள்ளவும்.

4. பின் அடுத்த தட்டில் மறுபடியும் சல்லடையை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து மறுபடியும் 4 அங்குலம் அளவுக்குக் கூழாங்கற்கள், ஜல்லிக் கற்கள் வைத்து நிரப்பவும்.

5. அதன் பின் அடுத்த தட்டில் மறுபடியும் சல்லடையை வைத்து அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து மறுபடியும் 4 அங்குலம் அளவுக்கு ஆற்று மண் வைத்து நிரப்பவும்.

6. கடைசித் தட்டில் சல்லடையை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து விட்டால் முடிந்தது வேலை.

7. அதன் மேல் மழை நீர் வரும் குழாயைச் சிறு சிறு துவாரங்கள் இருக்குமாறு தயார் செய்யவும். இதன் மூலம் தண்ணீரின் வேகம் அதிகரித்தால், தண்ணீர் ஓரிடத்தில் விழுந்து மண் அரிப்பு ஏற்படாமல், பரவலாகத் தண்ணீர் வந்து வடிகட்டப்படும்.

8. வெளிக்காற்றும், வெப்பமும் உள்ளே செல்லாமல் மழைநீர் சேமிக்கப்படும் தொட்டியை வடிவமைத்தோமேயானால், 10 ஆண்டுகளானாலும் இந்தத் தண்ணீர் கெட்டுப்போகாது.

இந்த முறையில்,தண்ணீர்ப் பற்றாக்குறையை நமக்கு நாமே செலவில்லாமல் தீர்த்து, ஆரோக்கியமான குடிநீரை நம் எதிர்கால சந்ததிகளுக்கு உறுதிப்படுத்துவோம். இனி நம்மாழ்வார் ஐயா கூறியபடி, தண்ணீரை நிலத்தில் தேடாமல் வானத்தில் தேடுவோம்.

அதுதான், எதிர்காலத்தில் மிரட்டவிருக்கிற குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரே வழி. வீட்டுக்கு வீடு இந்த அமைப்பை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று முடித்தார்.

#வாழ்த்துக்கள்

பரியேறும்பெருமாள்



#பரியேறும்பெருமாள்
நெல்லை மண்ணின் யதார்த்த படைப்பு! திரைக்காவியம் வெள்ளிவிழா காண வாழ்த்துக்கள்.

இயக்குனர் ராமின் உதவி இயக்குனராகதான் மாரி செல்வராஜ் எனக்கு அறிமுகம்.

தாமிரபரணி நதியில் கொல்லப்படாமல் மாரி தப்பிப்பிழைத்த கதையை படித்தப்பிறகு  மாரி செல்வராஜ் ( Mari Selvaraj )  உறுதியாக  வெற்றி பெறுவார் என்று நம்பினேன்.

நேற்று பரியேறும் பெருமாள் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்து முடித்ததும்.. மாரி இயக்குனராக வெற்றி பெற்றுவிட்டார் என்பது உறுதியானது.   ஏனெனில் படம் முழுக்க அத்தனை உணர்வுகளும் அரசியலும் காட்சி மொழியும் நிறைந்திருந்தது.

தனித்துவமான இயக்குனர் ராமின் பட்டறையில் இருந்து வெளி வந்திருக்கும் மாரி தன் குருவின் பெயரை காப்பாற்றியிருக்கிறார். 

தமிழ் சினிமாவுக்குள் சலசலப்பை உண்டு பண்ண நுழைந்திருக்கும் கதாநாயகன் ( முற்போக்கு போராளிகள் உட்பட பலருக்கும் வில்லன்.. ;) ) பா.ரஞ்சித் அவர்களால் மட்டுமே பரியேறும் பெருமாள்களின் கதைகள் திரைப்படமாக உயிர்பெறும் சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது.

டாட்டா சுமோக்கள் பறக்காத.. நெல்லை மக்களின் எதார்த்தமான வாழ்வியலை பதிவு செய்திருக்கும் முதல் மக்களின் சினிமா பரியேறும் பெருமாள்.

பலரும் பட விமர்சனம் எழுதுவார்கள். நாம் படம் பேசும் அரசியலை பார்ப்போம்.

கருப்பி என்ற நாய் கொல்லப்படும் காட்சி கொடுக்கும்   அதிர்ச்சியில் இருந்து ஆரம்பிக்கும் கதை, நாயகன் கதிர் நெல்லை சட்டக்கல்லூரிக்குள் நுழைந்ததும் விறுவிறுப்பாகிறது.

சட்டக்கல்லூரிக்குள் நுழைந்த முதல்நாள் பிரின்ஸிபலிடம்,   ``படிச்சு டாக்டர் ஆவேன்” என்று கதிர் சொல்வதில் ஆரம்பிக்கிறது அரசியல். இப்படி படம் நெடுக அப்ளாஸ் அள்ளும் வசனங்கள் பல இருக்கின்றன.

நம் கல்வி கூடங்கள் எப்படி சாதியால் இயக்கப்படுகிறது என்பதை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் மாரி. என்னதான் நாம் சாதி மறுப்பு பேசினாலும் கள நிலவரம் வேறு.

கல்லூரியில் வேறு சமூகத்தைச்சேர்ந்த மாணவியாக வரும் ஜோ, பரியனுடன் நட்பாக பழகுகிறார். வெகுளித்தனமாக வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாம் பரியன் குறித்து பேசுகிறார்.

இதனால் பரியன் பல பின் விளைவுகளை சந்திக்கிறார். அதில் திவ்யா இளவரசன் கோகுல்ராஜ் கவுசல்யா சங்கர் என அனைவரது முகமும் நம் மனதிற்குள் வருகிறது.   இறுதியில் பரியன் கதை  என்னவானது என்பதை திரையில் காண்க.

பரியனாக வரும் கதிர், ஜோ ஆனந்தி, சாதிக்காக கொலை செய்வதையே கடமையாக வைத்திருக்கும்
பெரியவர் வெங்கடேஷ் , பரியன் அப்பாவாக வரும்
நடன கலைஞர் தங்கராஜ் , ஜோவின் அப்பா மாரிமுத்து, மற்றும் துணை கதாப்பாத்திர நடிகர்கள் புளியங்குளம்  ஊர்மக்கள் உட்பட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

யோகி பாபு காட்டில் மழைதான். இந்த படத்தின் இறுக்கம் யோகி வரும் காட்சியில் எல்லாம் தளர்ந்து புன்னகைக்க வைக்கிறது. ஒளிப்பதிவு இசை எடிட்டிங் அனைத்தும் சிறப்பு.

உண்மையை சொல்ல வேண்டுமானால் பாடல் வெளியானபோது என்னை ஈர்க்க வில்லை. ஆனால் திரையில் படக்காட்சிகளுக்கு நடுவே பார்க்கும்போது அவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. வாழ்த்துகள் சந்தோஷ் நாராயணன்.

அப்புறம் அந்த கருப்பியை சொல்லாவிட்டால் இந்த பதிவு நிறைவடையாது. அவ்வளவு அழகு மட்டுமல்ல.. இறுதி காட்சியில் வந்து தன் நாக்கால் படத்தின் போக்கையே மாற்றுகிறாள். அதுவும் அந்த தண்டவாள காட்சிகள் செம குறியீடு .

படத்தில் மாரியின் புத்திசாலித்தனமாக நான் ரொம்ப ரசித்தது.. ஒரு இடத்தில் கூட பரியன் அந்த பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லவே இல்லை.

படம் முழுக்க.. ``டேய் வீரா.. எங்கடா போன.. ”என்று முத்தழகு போல்  நம்மை மாரி கதற விடுவாரோ என்று பதட்டமாகதான் படம் பார்த்தேன்..

ஆனால் மாரி அந்த அவநம்பிக்கையை போக்கி தன் திரைமொழியால்  நம்பிக்கையை விதைத்திருக்கிறார்..

இன்று  அந்த நம்பிக்கைதான் அவசியமானது.

இறுதியாக..

சாதி ஒழிப்பு என்பது சாதியால் ஒடுக்குமுறைக்குள்ளாகுபவர்களின் எழுச்சியினால் வர வேண்டியதை விட..

சாதியால் ஒடுக்குபவர்களின் குற்ற உணர்ச்சியால் வர வேண்டும் என்பதே முக்கியம்.. 

அதை இறுதி காட்சியில் வரும் மாரியின் இரண்டு கண்ணாடி டீ கிளாஸ்கள் உண்டு பண்ணியிருக்கின்றன..

சந்தேகமே வேண்டாம்.. உங்கள் பெருமாள் பரியேறி பறப்பார்.

இயக்குனர் மாரி செல்வராஜுக்கும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துக்கும் வாழ்த்துகள்..!

-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
27-9-18

வியாழன், 27 செப்டம்பர், 2018

மதி செய்திகள் 28/9/18

மதி செய்திகள் 28/9/18


சென்னையில் நேற்று 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இன்றும் இரண்டாவது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்

2016-ல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் : புதிய வீடியோவை வெளியிட்டது மத்திய அரசு

வெப்பச்சலனத்தால் இன்று மழை பெய்யும்; அக்டோபர் 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோவை : காவலருக்கு அரிவாள்வெட்டு

தமிழகத்தில் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பது தொடர் பாக வரும் அக்டோபர் 1-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது இனிமேல் குற்ற வழக்குப் பதிவு செய்ய மாநில உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி.,யும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை திமுக புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது. சென்னையில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக கலந்து கொள்ள வேண்டும். அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் ஸ்டாலின், அழைப்பை ஏற்று விழாவில் கலந்து கொள்ள வேண்டும். கருணாநிதி - எம்ஜிஆர் இடையேயான நட்பை ஸ்டாலின் மறந்து விடக்கூடாது. அதிமுக.,வை எம்ஜிஆர் உருவாக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சியை பிடித்திருக்கும் என்றார்.

முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்.,26 ம் தேதி கோவை மாவட்டம் போரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ., கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

சேலம்: கணவன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த புதுமணப்பெண் திருமணமான 3 நாளிலேயே வெளியேறினார். காதல் மனைவியின் பிரிவு தாங்காமல் புதுமாப்பிள்ளையோ கிணற்றில் குதித்து தற்கொலையே செய்து கொண்டார்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத்தில் அமைக்கப்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டதாகும். இது இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரையே அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 4 ஆயிரத்து 399 இடங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜாமின் கேட்டு கருணாஸ் மனுத்தாக்கல்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 20,241 கனஅடியில் இருந்து 23,064 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 22,000 கனஅடியில் இருந்து 24,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 104.36 அடியாகவும், நீர்இருப்பு 70.608 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

2018 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் சுமார் 26.1 லட்சம் கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கின்றன. மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் மொத்தக் கடன் தொகையில் 40 சதவிகிதக் கடனை வாங்கியுள்ளன.

மாலத்தீவு புதிய அதிபராக பதவியேற்கும் சோலீயின் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

ஐநா பொதுசபை கூட்டத்தின் போது டிரம்பை சந்தித்து பேசியதாகவும், பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம் என கூறியதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பேட்டியளித்ததற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் தனக்கு இருந்த பங்குகளை டெண்டுல்கர் சமீபத்தில் விற்ற நிலையில், அதனை நடிகர் மோகன்லால் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மதி செய்திகள் 27/9/18

மதி செய்திகள் 27/9/18

பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருதினை அறிவித்து ஐ.நா., கவுரவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று காலை நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதி சுட்டுகொல்லப்பட்டான்.

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

அயோத்தி உள்பட 2 முக்கிய வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளிக்கிறது.

நிதி சிக்கலில் இருந்து காப்பாற்றிக் கொள்ள புதுச்சேரி அரசு போராடி வருவதாக அம்மாநில ஆளுநர் கிரண்பேடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை பாஜக எம்.எல்.ஏ. வீட்டிம் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

114-வது பிறந்தநாளை முன்னிட்டு சி.பா.ஆதித்தனார் சிலைக்கு இன்று தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்க

மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நேற்று, இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம், டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை - தேசிய சுகாதார அமைப்பு இடையே கையெழுத்தானது.

மேற்கு வங்க மாநிலம், தீனஜ்பூர் மாவட்டத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, போலீசாருடன் ஏற்பட்ட மோதலில், இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதை கண்டித்து, பா.ஜ., சார்பில், நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

அ.தி.மு.க. அரசை நானும் விமர்சனம் செய்து இருக்கிறேன். அதற்காக என் நாக்கையும் அறுப்பார்களா? என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

'கோல்டன் குளோப்' போட்டியில் பங்கேற்று, ஆஸ்திரேலியா அருகில் நடுக்கடலில் தத்தளித்த, இந்திய மாலுமி அபிலாஷ் டோமி, 39, மீட்கப்பட்டு, ஆம்ஸ்டர்டாம் தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, இந்திய கடற்படை கப்பல் சென்றுள்ளது

கடந்த, 18 ஆண்டுகளில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைந்து, பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கல்விச் செலவுக்காக, 37 அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கு, 120 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக, 'இந்தியாஸ்போரா' எனப்படும் லாப நோக்கில்லா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் நிதி உதவி; கேரள முதல்வர் கோரிக்கை

கேரள மாநிலம் கோட்டயத்தில், சிரியன் சர்ச்சை சேர்ந்த, இரண்டு பாதிரியார்கள் மற்றும் சர்ச் நிர்வாகிகள் சிலர், பா.ஜ.,வில் நேற்று இணைந்தனர். அவர்களை, மாநில, பா.ஜ., தலைவர், ஸ்ரீதரன் பிள்ளை வரவேற்றார்

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் நுழைய, அமெரிக்கர்களுக்கு, சீனா விசா மறுத்து வருகிறது. விசா வழங்க மறுக்கும் சீன அதிகாரிகளுக்கு, அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கும் மசோதா, அமெரிக்க பார்லியில் நிறைவேறியது.

ஐரோப்பிய நாடான, பிரான்சிடம் இருந்து, 58 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 ரபேல் போர் விமானம் வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், அனில் அம்பானியின், ஏ.டி.ஏ.ஜி., நிறுவனத்தை, இந்திய பங்குதாரராக சேர்த்துக் கொள்ளும்படி இந்திய அரசு கேட்டுக் கொண்டதாக, முன்னாள் பிரெஞ்சு அதிபர், ஹாலண்டே கூறினார்.
இது தொடர்பாக, பிரெஞ்சு அதிபர், இமானுவேல் மாக்ரோனிடம் கருத்து கேட்டபோது, ''ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தான போது, நான், அதிபர் பதவியில் இல்லை,'' என, தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி: விஷவாயு தாக்கி 2 பேர் பலி

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து நடத்தப்பட்ட அஸ்திரா ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது

ஆட்சியை பிடிக்க ராகுல் பகல் கனவு காணக் கூடாது என பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா தெரிவித்தார்.

இன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.28; டீசல் ரூ.78.49

புதன், 26 செப்டம்பர், 2018

இனிமேல் ஆதார்: எங்கு தேவை; தேவையில்லை- 10 முக்கிய தகவல்கள்

இனிமேல் ஆதார்: எங்கு தேவை; தேவையில்லை- 10 முக்கிய தகவல்கள்

ஆதார் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது, அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது, அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கூறியள்ளது.

இதைத்தொடர்ந்து ஆதார் தொடர்பான உத்தரவில் புதிய மாறுதல்கள் குறித்து பார்க்கலாம்:

1) எந்த ஒரு தனியார் நிறுவனங்களும் உங்கள் ஆதார் விவரங்களை கேட்கக்கூடாது

2) தனியார் நிறுவனங்களுக்கு தகவல்களை தர அனுமதி தரும் ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது.

3) மொபைல் போன் நிறுவனங்களுக்கு ஆதார் எண் தர வேண்டிய அவசியமில்லை.

4) வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டியதில்லை.

5) வங்கிகளுக்கு இனிமேல் ஆதார் எண் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

6) பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆதார் எண்ணை கேடக்கக் கூடாது.

7) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்.

8) பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்.

9) அரசு மானியம், உதவி பெற உங்களுக்கு தகுதி இருந்தால் ஆதார் எண்ணை காட்டி அதனை தடுக்க முடியாது.

10) தனிநபரின் தகவல்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

மதி செய்திகள் 26-09-18


மதி செய்திகள் 26-09-18

*☦🅾சென்னை ஆவடியில் மாணவருக்கு அரிவாள் வெட்டு*

_சென்னை: சென்னை ஆவடியில் பச்சையப்பன் கல்லூரி-பிரசிடன்சி கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அரிவாளால் வெட்டியதில் பிரசிடன்சி கல்லூரி மாணவர் முகேஷுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்._

*☦🅾 திருவள்ளூரில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் சகோதரர் கொலை*

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மேல்மணம்பேட்டில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் சகோதரர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் மீண்டும் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. வீட்டில் வைக்கப்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். வெங்கட்ராமு கொலையை கண்டித்து இன்று அதிகாலை 4 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

*☦🅾சென்னையில் 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது*


சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். லோகேஷ், பிரபு, தணிகாசலம், சஞ்சீவ்குமார், ராஜா மாறும் ரிஸ்வான் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர்.

*☦🅾ராமேஸ்வரத்தில் பக்தர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழிப்பறி*

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் போலீஸ் கண் முன்னே சுற்றுலா பயணிகளிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. அக்னி தீர்த்த கடல் பகுதியில் பக்தர்களிடம் 7 செல்போன், 4 ஏடிஎம் கார்டு மற்றும் பணத்தை வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.



*☦🅾சென்னை வளசரவாக்கத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் 30 சவரன் நகை கொள்ளை*

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 30 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். விஜயலட்சுமி வெளியூர் சென்றிருந்த நிலையில் ஒன்றரை லட்சம் ரொக்க பணத்தையும் 30 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*☦🅾வளர்ப்பு நாய் அடித்து கொலை : இலங்கை அகதி கைது*

வேளச்சேரி: வேளச்சேரி சாரதி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் செல்வி (33). அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்துகிறார். இவரது கணவர் ஜெகன்நாத் (36). சலவை கடை நடத்துகிறார். இவர்களுக்கு மேடவாக்கத்தில் சொந்தமாக வீடு உள்ளது. கடந்த 22ம் தேதி செல்வி  தனது வளர்ப்பு நாயை மேடவாக்கத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று இரவு 8 மணிக்கு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது கணவர்  ஜெகநாத், ‘எதற்காக நாயை புது வீட்டுக்கு அழைத்து சென்றாய்’’ என செல்வியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த செல்வி மயிலாப்பூரில் வசிக்கும் தனது தங்கை வீட்டுக்கு சென்று தங்கி உள்ளார். மறுநாள் காலையில் செல்வி வீட்டுக்கு வந்தபோது நாய் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி உடனே நாயை மீட்டு கால்நடை  மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நாய்  இறந்தது. புகாரின்பேரில், வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ஜெகநாதன் 10 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து வந்த அகதி என்பது தெரிந்தது. எனவே போலீசார் அவரை கைது செய்தனர்.

*☦🅾பேசாத குழந்தையை பேச வைப்பதாக நாடகம் - பரிகார பூஜை செய்து 20 சவரன் சுருட்டிய பூசாரி கைது*

_வேளச்சேரி: பள்ளிக்கரணையில் பேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக நாடகமாடி, 20 சவரன் நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் லதா ரமேஷ் (45). இவருக்கு மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மேடவாக்கம், புதுநகர், ஜெயப்பிரகாஷ் தெருவிலுள்ள வீரகாளியம்மன் கோயிலுக்கு லதா ரமேஷ் சாமி கும்பிடுவதற்கு வந்துள்ளார்.அப்போது அங்கிருந்த கோயில் நிர்வாகியும், பூசாரியுமான தினேஷ் (26) என்பவர், ‘‘உங்களது பெண் குழந்தை மற்றவர்களைபோல் பேசவும், எழுந்து நடக்கவும், சிறப்பு பூஜை செய்கிறேன்’’ என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய லதா ரமேஷ், ‘‘பூஜைக்கு என்ன தேவை?’’ என தினேஷிடம் கேட்டார். அதற்கு ‘‘உங்கள் வீட்டிலுள்ள அனைத்து நகைகளையும் கொண்டு வந்து, என்னிடம் கொடுங்கள். நான் அதை கோயிலில் வைத்து பூஜை செய்து அப்பொருட்களை ஒரு செம்பு பாத்திரத்தில் போட்டு கொடுப்பேன். அதை வீட்டுக்கு எடுத்து சென்று, திறந்து பார்க்காமல் வீட்டு பூஜையறையில் 90 நாட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்பூஜை, முடிவதற்குள் உங்களது குழந்தை பூரண குணமாகும்’’ என்று தினேஷ் கூறியுள்ளார்.இதையடுத்து லதா தனது வீட்டில் இருந்து 15 சவரன் நகையை எடுத்து வந்து பூசாரி தினேஷிடம் கொடுத்துள்ளார். அந்த நகைகளை பூஜை செய்து, லதாவிடம் ஒரு செம்பு பாத்திரத்தில் மீண்டும் தினேஷ் கொடுத்துள்ளார். அவர் பயபக்தியுடன் அந்த செம்பு பாத்திரத்தை வைத்து, 90 நாட்கள் பூஜை செய்தும் பெண் குழந்தை குணமடையவில்லை.இதனால் சந்தேகமடைந்த லதா செம்பு பாத்திரத்ைத திறந்து பார்த்தபோது, தங்க நகைகளுக்கு பதிலாக கருங்கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது நகையை திருப்பி தரும்படி லதா பலமுறை வலியுறுத்தியும், தினேஷ் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது.இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசில் நேற்று முன்தினம் லதா புகார் அளித்தார். புகாரின்பேரில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கெங்குராஜ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ், எஸ்ஐ இளங்கனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, பூசாரி தினேஷை பிடித்து தீவிரமாக விசாரித்தனர்.விசாரணையில் லதாவிடம் பரிகார பூஜை செய்வதாக நாடகமாடி 15 சவரன் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கோயில் பூசாரி தினேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 8 சவரன் பறிமுதல் செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்._

*☦🅾ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல் ; தாய், மகன் உட்பட 3 பேர் கைது*

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ₹10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தாய், மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த  எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அருகே நேற்று அதிகாலை ஆரம்பாக்கம் எஸ்ஐ ஜெயபிரகாஷ் தலைமையில்  போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது,  நெல்லூரில் இருந்து சென்னை வந்த  அரசு பேருந்தை மடக்கி சோதனை நடத்தினர். அதில், பயணித்த 2 பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் மீது  சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் அமர்ந்திருந்த சீட்டுக்கு கீழ்  பார்த்தபோது 3 பைகள் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது 24  பொட்டலங்களில் 44 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹10 லட்சம். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் பிடித்து விசாரித்தபோது, தஞ்சாவூரை சேர்ந்த  சரோஜா (45), இவரது மகன் ராஜி (20), மதுரையை சேர்ந்த பாண்டியம்மாள் (38) என்பது தெரியவந்தது.பிடிபட்டவர்களை திருவள்ளூர் காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.  இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும்  போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது


*☦🅾100 கிலோ குட்கா பறிமுதல் : மளிகை கடைக்காரர் கைது*


வேளச்சேரி: வேளச்சேரி காவல் நிலைய போலீசார் நேற்று வேளச்சேரி நேருநகரில் இருக்கும் மளிகைக் கடையை சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. எனவே கடை உரிமையாளர் முருகன் (42) என்பவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையில் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் குடோன் வாடகைக்கு எடுத்து புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தி, 100 கிலோ மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மாங்காடு போலீசார் நேற்று முன்தினம் இரவு மாங்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் குட்கா போதைப் பொருள் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் உள்ள மளிகை கடை ஒன்றில் அதிக அளவில் குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த கடைக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட முகமது முஸ்தபா (23) என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் அந்த கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் ₹80 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

*_☦🅾சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் செல்போன் திருடிய 7 வாலிபர்கள் கைது_*

🔥சென்னை: சென்னை புளியந்தோப்பு எம்.எஸ் முத்து நகரை சேர்ந்தவர் சூர்யா (20). ஆட்டுத்தொட்டி ஊழியர். நேற்று முன்தினம் காலை வேலை முடிந்து, வி.ஓ.சி நகர் சந்திப்பில் நடந்து வந்தார். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர் சூர்யாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போன் மற்றும் ₹2500 பணத்தை பறித்த கன்னிகாபுரம் நியூ காலனியை சேர்ந்த ரீகன் என்ற சந்தோஷ் குமார் (19) மற்றும் புளியந்தோப்பு கார்ப்பரேஷன் லேன் 4வது தெருவை சேர்ந்த கணேசன் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி முக்கிய குற்றவாளிகளான சபீர் கான் (21) மற்றும் அப்பு என்ற பிரதீப் (19) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும்,  இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என்று 20க்கும் மேற்பட்ட வழக்குகள்  நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.இவர்களிடம் இருந்து, 20 விலை உயர்ந்த செல்போன்கள், கத்தி மற்றும் 4 சவரன் செயின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

🔥 திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஈசான மூர்த்தி கோயில் தெரு வழியாக செல்போனில் பேசியபடி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது வயற்றில் கத்தியால் குத்திவிட்டு, செல்போனை பறித்த மணலியை சேர்ந்த அஜித் (19), திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரத்குமார் (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

🔥 வேப்பேரியைச் சேர்ந்த கிருஷ்ணா ரெட்டி (47) என்பவரிடம் செல்போனை பறித்த புரசைவாக்கம் சோலையம்மன் கோவில் தெருைவச் ேசர்ந்த அஜித்குமார் (19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.

🔥கொருக்குப்பேட்டையில், லாரி டிரைவரிடம் மாமூல் கேட்டு  மிரட்டியவர்களை தட்டிக்கேட்ட சூபர்வைசரிடம் ₹1000 பணம் பறித்த அதே பகுதி மணிமாறன்  (35), ஏழுமலை (32), மோகன் (39) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

🔥 மாங்காடு சீனிவாசநகரை சேர்ந்தவர் முரளி (25). இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்ல பைக்கில் சென்று கொண்டிருந்தார். வண்டி குன்றத்தூர் - குமணன்சாவடி செல்லும் சாலையில் மாங்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென முரளி பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

🔥 காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம், காந்தி சாலையை சேர்ந்தவர் வனிதா (22). இவரது கணவன் பாலாஜி (38). சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலாஜி சிறையில் இருந்துள்ளான். அப்போது வனிதாக்கும், அதேபகுதியை சேர்ந்த டிராவல்ஸ் அதிபரான கணபதி (28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை தொடர்ந்து வனிதா தலைமறைவானார். சிறையில் இருந்து வெளியே வந்த பாலாஜிக்கு, இருவரின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து வனிதாயின் தம்பி அஜீத் (19) மற்றும் பாலாஜி ஆகிய இருவரும், வனிதா இருக்கும் இடம் அறிந்து அங்கு அவரையும், அவரது கள்ளக்காதலன் கணபதியையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். புகாரின்பேரில், தலைமறைவாக இருந்த அஜீத்தை போலீசார் கைது செய்தனர்.

🔥வில்லிவாக்கம் சிட்கோ நகர் 18வது தெருவை சேர்ந்தவர் பத்ரி நாராயணன் (34). இந்து அமைப்பு நிர்வாகி. இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை உடைத்த வில்லிவாக்கம் சிட்கோ நகர் 56வது தெருவை சேர்ந்த காவலர் கிங்ஸ்லி ஜெயராஜ் (33), அயனாவரம் சோமசுந்தரம் 4வது தெருவை சேர்ந்த ஊர்காவல் படை வீரர் அகஸ்டின் (24), கீழ்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் (22), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

🔥 பள்ளிக்கரணை, நூக்கம்பாளையம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் செல்லையா. இவரது மனைவி லட்சுமி (56). கூலி தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு இருவருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த லட்சுமி நள்ளிரவு மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். ரூ.60 லட்சம் சொத்தை விற்க முயன்ற இருவர் கைதுநாகப்பட்டினம் மாவட்டம் தரங்கபாடியை சேர்ந்த ராமஜெயராமன் என்பவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ராமஜெயராமனுக்கு அம்பத்தூர் அடுத்த வட பெரும்பாக்கம் தணிகாசலம் நகரில் 2400 சதுர அடி காலி மனையை ஆள் மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயார் செய்து ₹60 லட்சம் மதிப்புள்ள அந்த சொத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் கொளத்தூர் செந்தில் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (49), புரசைவாக்கம் பழைய தாண்டவராயன் தெருவை சேர்ந்த திவாகரன் (39) ஆகிய 2 பேர் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


*☦🅾வாணியம்பாடியை தொடர்ந்து அதிரடி வேலூரில் பதுக்கிய 1.75 டன் குட்கா பறிமுதல்*

_வேலூர்:  வேலூரில் வாடகை வீட்டில் பதுக்கிய ₹6 லட்சம் மதிப்புள்ள 1.75 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வரப்படுவதாக வேலூர் மாவட்ட போலீசாருக்கு கடந்த 21ம் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆலங்காயம் போலீசார் வாணியம்பாடி  டோல்கேட் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர் அதில் தடைசெய்யப்பட்ட ₹8 லட்சம் மதிப்புள்ள குட்கா  இருப்பது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து,  டிரைவர் வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த பாபு(42), சுமேந்தர்(38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். லாரியின் பின்னால் பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த வாணியம்பாடி ரங்காராவ்(30) என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வேலூரில் வாடகைக்கு வீடு  எடுத்து குட்கா பதுக்கி வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் நேற்று முன்தினம் வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள  மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில்  பதுக்கி வைத்திருந்த ₹6 லட்சம் மதிப்புள்ள 1.75 டன் குட்காவை பறிமுதல் செய்தனர்.மேலும் ரங்காராவ் கொடுத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா ஏஜென்டாக செயல்பட்ட ஆரணி கார்த்திகேயன் தெருவை சேர்ந்த தினேஷ்(28) என்பவரை போலீசார் கைது  செய்துள்ளனர். குட்கா வழக்கில் தொடர்புடையவர்கள் பட்டியல் சங்கிலி போல தொடர்வதால் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட குட்கா டீலர்கள், ஏஜென்டுகள் கலக்கத்தில் உள்ளனர்._


*☦🅾13 பேருக்கு குண்டாஸ்*

சென்னை: சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சூளைமேட்டை சேர்ந்த ஜெயபால் (எ) இமான் (27), அதே பகுதியை சேர்ந்த குமரேசன் (36), செங்கல்பட்டு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த முகமது ஜான் (எ) சூளைமேடு ஜான், வரதராஜபேட்டையை சேர்ந்த பிரசாந்த் (31),  நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த ராஜா (28),  சூளைமேட்டை சேர்ந்த ராஜேஷ் (36), அதே பகுதியை சேர்ந்த ராஜி (39), பெரும்பாக்கத்தை சேர்ந்த சிவலிங்கம் (31), சூளை மேட்டை சேர்ந்த விஜயகுமார் (எ) குருசு (29), ராஜமங்கலத்தை சேர்ந்த தேவராஜ் (34), எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்த தேவராஜ் (34), தண்டையார்பேட்டை காந்தி நகரை சேர்ந்த தீனா என்கிற தீனா தயாளன் (29),  பெரியமேட்டை சேர்ந்த மணிகண்டன் (25) ஆகிய 13 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

*☦🅾வாலிபருக்கு 111 நாள் சிறை*

திருவொற்றியூர்: எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 9வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (25). இவர் மீது எண்ணூர் போலீஸ் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பிரமாண பத்திரத்தை   மீறி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், ராம்குமாரை 111  நாட்கள் சிறையில் அடைக்க மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் கலை செல்வன் உத்தரவிட்டார். இதையடுத்து, ராம்குமாரை போலீசார் கைது செய்தனர்.

*_☦🅾செல்போன் திருடியதாக கூறி மரத்தில் கட்டி வைத்து வாலிபர் அடித்து கொலை: வேலூர் அருகே பயங்கரம்_*

வேலூர்: கே.வி.குப்பம் அருகே செல்போன் திருடியதாக வாலிபரை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பூச்சிக்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (35). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதே ஊரை சேர்ந்த விமல் உட்பட அவரது நண்பர்கள் 3 பேர் வீட்டில் இருந்த  சங்கரை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள மாமரத்தில் கட்டி வைத்து செல்போன் திருடியதாககூறி அவரை சரமாரியாக கட்டையால் அடித்து உதைத்துள்ளனர். ஏற்கனவே சங்கர் நோயாளி என்பதால் அவரால் வலி தாங்க முடியாமல் கதறினார். ஒரு கட்டத்தில் சங்கர் மயங்கி கீழே சரிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த 4 பேரும், சங்கரை தோளில் தூக்கிக்கொண்டு அவரது வீட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கரின் தாய் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து சங்கரை பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக கே.வி.குப்பம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய விமல் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சடலத்தை கே.வி.குப்பம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீஸ் எல்லை பிரச்னைமேல்மாயில் பூச்சிக்கான்பேட்டையை சேர்ந்த ஒரு விவசாய நிலத்தில் உள்ள மாமரத்தில் சங்கரை கட்டி வைத்து அடித்துள்ளனர். அந்த இடம் பனமடங்கி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும். வீசிவிட்டு சென்ற வீடு கே.வி.குப்பம் காவல்நிலையத்துக்கு உட்பட்டது. இதனால் எல்லை பிரச்னை ஏற்பட்டது. இரு காவல் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், மாறி மாறி தங்களது காவல் நிலைய எல்லை இல்லை எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

*☦🅾சொத்தில் மகளுக்கு பங்கு தர சொன்னதால் தாயை வெட்டி கொன்ற மகன்*

துரைப்பாக்கம்: சென்னை பாலவாக்கத்தில் சொத்தில் மகளுக்கு பங்கு கொடுக்குமாறு சொன்னதால், ஆத்திரமடைந்த மகன் தாயை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர் காதை அறுத்து நகை பறித்து விட்டு தப்பியவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கம், மணியம்மை தெருவை சேர்ந்தவர் ராணியம்மாள் (64). கணவர் இறந்துவிட்டார். தம்பதிக்கு, 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 5 பேருக்கும் திருமணமாகிவிட்டது. 2 மகன்கள் பெங்களூருவிலும், 2 மகள்கள் சென்னையில் வசிக்கின்றனர். ராணியம்மாளின் கடைசி மகன் பர்னபாஸ் (47). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பரிமளாமேரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் தான் ராணியம்மாள் வசித்தார். ராணியம்மாள் வசித்த இடத்தை மகன் பர்னபாஸ், மகள் வேணி  ஆகியோரை பிரித்துக்கொள்ளுமாறு, கூறி உள்ளார். இதற்கு பர்னபாஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராணியம்மாள் வீட்டு கட்டிலில் தூங்கினார். நள்ளிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த பர்னபாஸ் திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாய் ராணியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில், அவருக்கு 18 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி சாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலையை மறைப்பதற்காக பர்னபாஸ் தாயின் காதை அறுத்து கம்மல் மற்றும் செயினை கழற்றினார். பின்னர் எதுவும் தெரியாதது போன்று மனைவியை எழுப்பி நகைகளை கொடுத்தார். நகையில் ரத்தக்கறை படிந்திருந்தால் அதிர்ச்சியடைந்து என்னவென்று கேட்டார். அதற்கு பர்னபாஸ், ‘‘இந்த இடத்தால் உனக்கு இனி எந்த பிரச்னையும் வராது’’’ என மட்டும் கூறிவிட்டு, வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். அதற்கு பிறகு தான் ராணியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து, பரிமளாதேவி கதறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக நீலாங்கரை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.  தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, ராயப்ேபட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கரை பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த பர்னபாசை கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

*☦🅾ஐடி ஊழியர் மனைவியை கடத்தியதாக வழக்கு அதிமுக மாஜி அமைச்சர் மகனுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்*

மதுரை: ஐடி ஊழியர் மனைவியை கடத்தி அடைத்து வைத்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் மகனுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  சென்னை, வேளச்சேரியை சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் விஜய் ராஜேஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது: என் மனைவி யாழினி (30). கடந்த 2011ல் எங்களுக்கு திருமணம் நடந்தது. 4 வயதில் இரட்டை ெபண் குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகு என் மனைவி படிக்க விரும்பினார். அவரது விருப்பப்படி சென்னை தரமணியில் உள்ள சட்டப்பள்ளியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.  படிக்க சென்றதும் அவருக்கு நண்பர்கள் அதிகமாயினர். அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. இதனால் எச்சரித்தேன். இதில் கோபித்துக் கொண்ட என் மனைவி வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். பிறகு சமாதானம் ஆகி சொந்த ஊரான தஞ்சைக்கு சென்றோம்.இதனிடையே அவருடன் படித்த, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயபாலின் மகன் ரத்தீஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தற்போது என் மனைவியை, ரத்தீஷ் தனது நண்பர் துணையுடன் கடத்தி சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். இதுகுறித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். இதையடுத்து முன்னாள் அமைச்சர் மகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், என் மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு என் மனைவியை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சை அனைத்து மகளிர் போலீசார், மனுதாரர் மனைவி யாழினி மற்றும் 2 குழந்தைகளை ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதிகள் தங்கள் அறையில் வைத்து, மனுதாரர் மற்றும் அவரது மனைவியிடம் தனித்தனியாக விசாரித்தனர். பின்னர் மனு குறித்து முன்னாள் அமைச்சரின் மகன் ரத்தீஷூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 9க்கு தள்ளி வைத்தனர். முன்னதாக தஞ்சை ஜேஎம் 1 கோர்ட்டில் நீதிபதி விஜய் அழகிரி முன், யாழினி நேற்று முன்தினம் ஆஜரானார்.

*☦🅾பாக்ராபேட்டை அருகே அதிரடி சோதனை : செம்மரம் கடத்திய 3 தமிழர்கள் கைது*

திருமலை: பாக்ராபேட்டை அருகே வனத்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் செம்மரம் கடத்திய தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது, அவர்களிடமிருந்த ₹1 கோடி மதிப்புள்ள 22 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவின் பாக்ராபேட்டை  வனச்சரகர் ரகுநாத் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, சியாமளா வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கொண்டு 20க்கும் மேற்பட்டோர் வந்து ெகாண்டிருந்தனர். இதைபார்த்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர். ஆனால் கடத்தல்காரர்கள் அவர்கள் கொண்டு வந்த செம்மரங்களை ஆங்காங்கே வீசிவிட்டு தப்பியோடினர். அவர்களில் 3பேரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் தாலுகா, வெள்ளிமலை ஊராட்சியை சேர்ந்த தங்கராஜ், தொரடிப்பட்டு ராஜ், சின்னதம்பி என தெரிந்தது. தொடர்ந்து அங்கிருந்த ₹1 கோடி மதிப்பு 658 கிலோ எடையுள்ள 22 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்த 3 பேரையும் பீலேரு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

*☦🅾போலீஸ் அதிகாரியின் மகள் லாரி ஏற்றி படுகொலை: சினிமா ஸ்டண்ட் மாஸ்டர், மகன் மீது புகார்*

சென்னை: சொத்து தகராறில் போலீஸ் அதிகாரியின் மகளை லாரி ஏற்றி கொலை செய்ததாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் அவரது மகன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சவுகார்பேட்டை, திருபள்ளி தெருவை சேர்ந்தவர் துளசிங்கம் (52). வடக்கு கடற்கரை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ. இவரது 2வது மகள் ரம்யா (28). நுங்கம்பாக்கத்தில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ரம்யா மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சென்ட்ரல் அருகே வந்தபோது திடீரென அவ்வழியாக வந்த மினி லாரி இவரது மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில், மொபட்டுடன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து, யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரம்யா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இது தொடர்பாக பட்டாபிராம் கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழனி (49) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ரம்யாவின் தந்தையும், சிறப்பு எஸ்ஐயுமான துளசிங்கம் யானைக்கவுனி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், எனது மாமானார் ரத்தினம், சினிமாவில் சண்டைகாட்சிகளை அமைத்து தரும் பயிற்சியாளராக இருக்கிறார். அவரது மகன் எத்திராஜ் ஆகியோர் சொத்து தகராறில் திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி என் மகளை கொலை செய்துள்ளனர். எனது மகள் சாவுக்கு 2 பேரும் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*☦🅾குட்கா வழக்கில் சிபிஐ மீண்டும் அதிரடி உணவுத்துறை அதிகாரி கைது: இதுவரை 6 பேர் சிறையிலடைப்பு*

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் மேலும் ஒரு அரசு அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும், குட்கா போதைப்பொருளை விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு கடந்த 2013ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், உத்தரவையும் மீறி,  குட்காவை தமிழகம் முழுவதும் தாராளமாக விற்பனை செய்ய அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை, மத்திய கலால் துறையை சேர்ந்த அதிகாரிகள் என பலருக்கு குட்கா தயாரிப்பாளர்கள் ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, கடந்த 5ம் தேதி சிபிஐ அதிகாரிகள் டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி, கட்டுக்கட்டாக ஆவணங்களை கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாக சிபிஐ, குட்கா தயாரிப்பாளரான மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ் மற்றும் குட்கா விற்பனை செய்யவும், தயாரிக்கவும் ஒத்துழைத்த மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை கடந்த 6ம் தேதி சிறையில் அடைத்தனர்.  பின்னர் சிபிஐ அதிகாரிகள், 5 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோர் சிபிஐயிடம் அனைத்து உண்மைகளையும் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் பட்டியலையும் சிபிஐயிடம் இருவரும் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.இதை தொடர்ந்து குட்கா தயாரிக்க சான்றிதழ் வழங்கி, குட்காவை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் மாதவராவ் உள்ளிட்டோருக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாக கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவரும், தற்போது சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவருமான சிவகுமார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரை சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி திருநீலபிரசாத் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, சிவகுமாரை வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் மற்ற 5 பேரின் நீதிமன்ற காவலும் அன்றுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது. குட்கா முறைகேடு வழக்கில் மேலும் ஒரு அரசு அதிகாரி கைது செய்யப்பட்டிப்பது அரசியல் வட்டாரத்திலும், அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிவகுமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி, பல நாட்களுக்கு பின்னர் அவரை கைது செய்துள்ளனர். எனவே அடுத்தடுத்து மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.  ஏற்கனவே 5 பேரை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதேபோல் சிவகுமாரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிவகுமார்தான், சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது, அவரே சிபிஐயால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடிகுட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு வக்கீல் வாதிடுகையில், பாண்டியன் மாதம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார். மேலும் அவர் 5 நட்சத்திர விடுதிகளில் தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. செந்தில் முருகனும் லஞ்சம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள். எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், இருவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். மேலும் சம்மன் அனுப்பினால், ஆஜராக தயாராக உள்ளனர் என்று வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


செவ்வாய், 25 செப்டம்பர், 2018

மதி நியூஸ் * 25/09/18 !


மதி நியூஸ் * 25/09/18 !

இலங்கை இறுதிப் போரில் வைகோ மூலம் பிரபாகரன் கொடுத்த கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை - தேனி கண்டன பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சு.

இலங்கை போரின்போது மனிதசங்கிலி, உண்ணாவிரதம் என திமுக கபட நாடகம் ஆடியது.இலங்கையில் நடந்த படுகொலைக்கு காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுதான் ஆயுதங்களை வழங்கியது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

திமுகவையும், காங்கிரஸையும் போர் குற்றவாளிகளாக அறிவிக்கவேண்டும் - ராசிபுரத்தில் அமைச்சர் தங்கமணி பேச்சு.

ஆர்கே.நகரில் டெபாசிட் இழந்த திமுக, ஆட்சியை பிடிக்க நினைப்பது மிகப்பெரிய ஜோக் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க முடியாது என சிபிஐ மறுப்பு : சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6000 கன அடியிலிருந்து 25000 கன அடியாக அதிகரிப்பு : கர்நாடக அணைகளில் இருந்து 6047 கன அடி நீர் ஒகேனக்கல்லுக்கு திறக்கப்படுகிறது.

இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முபாரக் என்பவருக்கு சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று, ஸ்டாலின் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு.

விஜயதசமி நாளில் 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி உத்தரவு.

எந்த ஆட்சியில் திட்டங்கள் அதிகம் வந்தது என்பது தொடர்பாக திமுகவோடு நேருக்கு நேர் விவாதிக்க தயார் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

இந்தியாவில் வாக்கு வங்கி அரசியல் என்பது சமூகத்திற்கு கரையான் போன்றது.
இஸ்லாமிய நாடுகளிலேயே முத்தலாக் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை : பிதாமர் மோடி.

புதுச்சேரி அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம் - சம்பளம் பிரச்சினை விவகாரத்தில் பொதுமேலாளருக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் போர்க்கொடி.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சலில் தமிழர்கள் சிக்கிதவிப்பு : ஓசூரை சேர்ந்த 21பேர், திருச்சியைசேர்ந்த 41பேர் தமிழகம் திரும்ப முடியாமல்தவிப்பு.

பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை காண முடியாது - முதலமைச்சர் பழனிசாமி.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும் - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

இலங்கையில் போர் நின்றுவிட்டதாக கருணாநிதியின் பொய்யான வாக்குறுதியை நம்பி வெளியே வந்த தமிழர்கள் கொல்லப்பட்டனர் - மதுரையில் அமைச்சர் உதயகுமார் பேச்சு.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் உத்தரவு- 18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் ஹெச்.ராஜா தரப்பு முறையீடு.

தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது, இருவரும் சாமி தரிசனத்திற்காக வந்தோம் - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு.

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் குறுக்கு விசாரணைக்கு ஜெவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பத்மாவதி , வெங்கட்ராமன் ஆஜராகியுள்ளனர்.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 1,800 மருத்துவர்கள், 4,000 செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர்.

திமுகவினர் என்னை கண்டு அஞ்சுகின்றனர் - அதிமுக கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி பேச்சு.

மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை கைது செய்யும் அரசு ஹெச்.ராஜாவை மட்டும் பாதுகாப்பது ஏன் ?தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களையும், நீதிமன்றத்தையும் அவதூறாக பேசியவர் ஹெச்.ராஜா : நல்லகண்ணு.

அரிவாள் வைத்திருப்பவர்களை பதறாமல் பிடிக்கலாம்; வெட்டுபவர்களைத்தான் முதலில் பிடிக்க வேண்டும் - நடிகர் கருணாஸ் கைது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புது விளக்கம்.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த ஆயுஷ்மான்பாரத் திட்டம் : 24 மணி நேரத்திற்குள் 1000 பேர் பயனடைந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம்.

உலக நன்மைக்காகவும், மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன் - தமிழக முதல்வர் பழனிசாமி.

மணிப்பூர் பல்கலைக் கழகத்தின் தற்காலிக துணைவேந்தரை கண்டித்து - மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

காரைக்குடி : குடிபோதையில் தொந்தரவு செய்ததால் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிச்சை என்ற தனது தந்தையை கல்லைப்போட்டு கொன்ற மகள் கற்பகவள்ளி கைது.

விருதுநகர்: சூலக்கரை பகுதியில் உள்ள முட் புதரிலிருந்து பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு.

திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பதில் 3 சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி.

கன்னியாகுமரி : வாட்ஸ் அப்பில் பெண்ணுடன் ஆபாசமாக பேசிய கருங்கல் காவல் ஆய்வாளர் பென்சாம் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.வீடியோ காலில் சீருடையில் பேசிய பென்சாம் மீது துறை ரீதியான சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு எதிரான இடைக்காலத் தடையை ரத்து செய்யக்கோரிய அமலாக்கத்துறையின் வழக்கு அக்.,8க்கு ஒத்திவைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

தேனி : பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.

கருணாஸை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய போலீசின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலை சந்தித்தார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

நெல்லை ஜங்சன்


நெல்லை  ஜங்சன்

நம் #நெல்லை மாநகரின் தவிர்க்க முடியாத அடையாளமாகவும், நகரின் இதயமாகவும் விளங்குவது ஜங்சன் பேருந்து நிலையம்.

நெல்லை மக்களால் ஜங்சன் என்றும் பழைய பஸ்டாண்ட் என்றும் அழைக்கப்படும் இந்த பேருந்து நிலையத்திற்கு பகுத்தறிவுப் பேரொளி பெரியாரின் பெயரை மாநகராட்சி நிர்வாகம் சூட்டியுள்ளது.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் இந்த பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நிறைவேற உள்ளது. 

பொலிவுறு நகரங்கள் (Smart City) திட்டத்தின் கீழ் இந்த பணியை நம் மாநகராட்சி நிர்வாகம் செய்யவுள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் துவங்கும் எனவும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை வேறு இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. 

வசதிகள்: 79 கோடியில் இந்த திட்டம்செயல்படுத்தப்படுகிறது. வாகன நிறுத்துமிடம், நவீன கடைகள், நகரும் படிக்கட்டுகள், பேருந்து புறப்பாடு பற்றிய அறிவிப்பு வசதிகள், நவீன இருக்கைகள் என பல வசதிகள் வரவுள்ளதால் நம் ஜங்சன் தலைகீழாக மாறப்போகிறது.

#நவீன #நெல்லையை காணத் தயாராவோம்.!

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

ரஜினியின் புதிய படத்திற்கு பெயர் ‘பேட்ட’ இன்று வெளியிடப்பட்டது


ரஜினியின் புதிய படத்திற்கு பெயர் ‘பேட்ட’ இன்று வெளியிடப்பட்டது
 

நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த சிலகாலமாக நடந்து வந்தது. பெயர் வைக்காமல் நடந்த அந்த படத்திற்கு இன்று(07.09.2018) ‘பேட்ட’ என்று பெயர் வைக்கப்பட்டு அறிவிக்கப்ப்பட்டது.
ரஜினிகாந்தின் 165-வது படமான இந்த திரைப்படத்தை கார்த்திக்சுப்புராஜ் இயக்குகிறார். சன் பிக்ஸர் தயாரிக்கிறது. நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ரஜினிக்கு மகனாக பாபிசிம்ஹாவும் கதாநாயகிகளாக சிம்ரன், திரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.


இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த படத்திற்கு ‘பேட்ட’ என்கிற பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த படம் வருகிற நவம்பர் 26-ம் தேதி வெளிவர இருக்கிறது.
கட்சியின் பெயரை அறிவிப்பார் என ரஜினியின் விசுவாசிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், புதிய படங்களின் பெயர்களை அறிவித்து கொண்டிருக்கிறாரே என்கிறார்கள் ரஜினியின் அரசியல் விசுவாசிகள்.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

நடப்பு (2018-19) கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.

நடப்பு (2018-19) கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.

 *# அட்டவணை வெளியிடப்படுகிறது*

*எஸ்.எஸ்.எல்.சி*

10-ந்தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்

11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்

12-ந்தேதி
 (புதன்கிழமை) ஆங்கிலம் முதல் தாள்

14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்

17-ந்தேதி (திங்கட்கிழமை) - கணிதம்

18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்பப்பாடம்

19-ந்தேதி (புதன்கிழமை) - அறிவியல்

22-ந்தேதி (சனிக்கிழமை) - சமூக அறிவியல்


*பிளஸ்-1*

10-ந்தேதி (திங்கட்கிழமை) - தமிழ்

11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

12-ந்தேதி (புதன்கிழமை) - தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அடிப்படை எலக்ட்ரிகல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் தலைமை பண்பு, டெக்ஸ்டைல் டெக்னாலஜி

17-ந்தேதி (திங்கட்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

19-ந்தேதி (புதன்கிழமை) - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயலாஜி, நியூட்ரிசன் மற்றும் டையட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங்(பொது), நர்சிங்(தொழில்முறை)

22-ந்தேதி (சனிக்கிழமை) - இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி


*பிளஸ்-2*

10-ந்தேதி (திங்கட்கிழமை) - தமிழ்

11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

12-ந்தேதி (புதன்கிழமை) - தகவல் தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசன் மற்றும் டையட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, வேளாண்மை பயிற்சிகள், நர்சிங்(தொழில்முறை), நர்சிங்(பொது)

17-ந்தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளாதாரம், பொது எந்திரவியல், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷின்ஸ் மற்றும் பயன்பாடுகள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி

19-ந்தேதி (புதன்கிழமை) - உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு

22-ந்தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணிக்கு முடிவடையும்

சனி, 1 செப்டம்பர், 2018

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை கிராமம்!


2021 தேர்தலில் இவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம்... இவர் தலைமையில் ஒவ்வொரு தொகுதியிலும் நேர்மையான நிர்வாகத்திறன் உள்ளவர்களை வேட்பாளர்களாக நிறுத்தலாம்...

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை கிராமம்!

ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசுகள் உட்பட மொத்தம் 43 நாடுகளின் பிரதிநிதிகளை தன்னை நோக்கி ஈர்த்திருக்கிறது தமிழகத்தின் ஓடந்துறை கிராமம். அது எப்படி ?
ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்து கோவை மாவட்டம், கோத்தகிரி மலையடிவாரத்தில் பவானி ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது. வாழைத் தோட்டங்களும் பாக்குத் தோப்புகளும் நிறைந்த பசுமையான பூமி. பெரும்பாலானோர் நகரத்தின் வாடையே அறியாத மலைவாழ் மக்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இவர்களது கிராம பஞ்சாயத்து செலுத்தியிருக்கும் மின் கட்டணம் சுமார் 1.20 கோடி ரூபாய் என்கிறார்கள்! இதில் அதிசயமான விஷயம் இந்த பஞ்சாயத்தின் சார்பாக ஆண்டுக்கு 6.75 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 67.50 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கிறார்கள். அதில் ஆண்டுக்கு 2.15 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில் 21.5 லட்சம் யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். அதன் மூலம் சுமார் ரூ. 65 லட்சம் வருவாய் கிடைத்திருக்கிறது. இப்போதும் இது தொடர்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், அந்த ஊரில் மின் உற்பத்தி நிலையம் என்று எதுவும் இல்லை. பின் எப்படி?
1996 தொடங்கி 2006 வரைக்கும் ஓடந்துறை பஞ்சாயத்து பொதுப் பஞ்சாயத்தாக இருந்திருக்கிறது. ஓடந்துறை கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் 1996 முதல் 2006 வரை முதல் பத்து வருடங்கள் சண்முகம். 2006-இல் அந்த பஞ்சாயத்தை பெண்களுக்காக ஒதுக்கியதும், சண்முகம் ஒதுங்கிக் கொள்ள, அவரது மனைவியான லிங்கம்மாளை தலைவியாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர் கிராம மக்கள். கடந்த பத்து ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவராக தொடர்பவர் லிங்கம்மாள் சண்முகம்.
கணவன், மனைவி இருவருமாக இந்த கிராமத்தில் செய்திருக்கும் புதுமைகள், சாதனைகள் பலரையும் இந்த கிராமத்திற்கு வரவழைத்திருக்கின்றன. ஒரு கிராமப் பஞ்சாயத்து தனது வரிகளை நூறு சதவீதம் வசூலித்தால் தமிழக அரசு அதற்கு இணையாக மூன்று மடங்கு ஊக்கத் தொகை வழங்குகிறது. இந்த சலுகைகள் குறித்து, ஊர் மக்களிடம் பேசி இருக்கிறார் லிங்கம்மாள். அரசுக்கு முழுமையாக வரி செலுத்த வேண்டிய அவசியத்தை விளக்கி இருக்கிறார்கள். சிறப்பு முகாம்கள் நடத்தி வீட்டு வரி, கடை வரி, குடிநீர் வரி, தொழில் வரி, வரைபட அங்கீகாரக் கட்டணம் என்று நூறு சதவீதம் வரியை வசூலித்தார். ரூ.20 ஆயிரமாக இருந்த வரி வருவாய் ரூ.1.75 லட்சமாக உயர்ந்தது. அதற்கு ஈடாக மும்மடங்கு ஊக்கத் தொகையாக தமிழக அரசு ரூ.5.25 லட்சம் கொடுத்திருக்கிறது. மறு ஆண்டு 3.5 லட்சம் வரி வசூலித்தார். அதே போன்று, தமிழக அரசிடமிருந்து ஈடாக 10.5 லட்சம் ஊக்கத் தொகை பெற்றார். சரி, இந்தத் தொகையை எல்லாம் என்ன செய்கிறார்கள்?
லிங்கம்மாள் சொல்கிறார்:
"எங்க கிராமத்துல யாரும் வெளியே வட்டிக்கு கடன் வாங்குறதில்லைங்க. கிராமத்துல இருக்குற ஒவ்வொரு வாக்காளருக்கும் கிராமப் பஞ்சாயத்தே கடன் வழங்குது. ஒரு ரூபா வட்டிங்க. கடன் பெறுவதற்கு ரெண்டு தகுதி வேணுமுங்க. தகுந்த காரணம் இருக்கோணும். பழைய பாக்கி இருக்கக் கூடாது. மருத்துவச் செலவு, பிரசவ செலவு, கல்விக் கட்டணம், சிறு கடை வைக்க கடன் தர்றோமுங்க. கல்யாணம், காது குத்து, நல்லது, கெட்டதுகளுக்கும் கடன் உண்டுங்க. ஆயிரம் ரூபாய் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கோம்'' என்கிறார். கொடுக்கும் தொகைக்கு எழுதி வாங்குவது கிடையாது. சரியான காரணமாக இருந்தால் உடனே பணம் தருகிறார்கள். பதிவேட்டில் தவணைத் தொகை வரவு வைக்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தத் திட்டத்தில் திரும்ப வராதகடன் என்கிற பேச்சுக்கே இதுவரை இடம் இல்லை. இங்கிருக்கும் பழங்குடியினர் காலம் காலமாக தனியார் தோட்டங்களில் கொத்தடிமைகள் போல இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கென நிரந்தர வசிப்பிடம் கிடையாது. அவர்களுக்கு தனியார் தோட்ட முதலாளிகளிடம் போராடி நிலத்தைப் பெற்று வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார் லிங்கம்மாள். தனியார் தோட்ட நிறுவனங்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக தரிசு நிலம் இருந்தால் அதனை அந்த கிராமப் பஞ்சாயத்து கையகப் படுத்திக் கொள்ளலாம் என்பது சட்டம். இதனை அறிந்த லிங்கம்மாள் ஆறு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். முதலாளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவற்றையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார் லிங்கம்மாள். அங்கு பழங்குடி இனத்தவருக்கு 250 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இவை தவிர வினோபாஜி நகரில், தமிழக அரசின் சார்பில் 101 பசுமை வீடுகள் சோலார் மின் தொழில்நுட்பத்துடன் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் 101 பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப் பட்டிருக்கும் தமிழகத்தின் ஒரே பஞ்சாயத்து ஓடந்துறை மட்டுமே.
இதிலும் ஒரு சிறப்பு உண்டு. தமிழகம் முழுவதுமே பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதில் பயன்பெற அடிப்படை தகுதியாக சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். இங்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்துடன் வீட்டை சொந்தமாக்கிக் கொடுத்திருக்கிறார் லிங்கம்மாள். இங்கே தமிழக அரசுக்கு சொந்தமான பூமிதான நிலம் 3.22 ஏக்கர் இருந்திருக்கிறது. வருவாய் துறையிடம் பேசியவர், கிராம சபை தீர்மானம் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கு அந்த நிலத்தை மாற்றியவர், அங்கு வீடுகளை கட்டியிருக்கிறார். ""கிராமத்துல இருக்குற மொத்தப் பேருக்குமே சொந்த வீடு இருக்கு. அதுல பாதி வீடுகள் சர்க்கார் வீடுங்க. வாடகை வீடுங்கிற கலாச்சாரமே இங்கே கெடையாதுங்க.''
இத்தோடு நிற்கவில்லை சாதனைகள். இந்த கிராமத்தில் நூறு சதவீதம் மாணவர்களும் கல்வி பெறுகிறார்கள். இடை நின்ற மாணவர் ஒருவர் கூட கிடையாது. மின்சாரத்தை மிச்சப்படுத்தும் சோலார் தெருவிளக்குகள், எல்.இ.டி. விளக்குகள் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் கிடைக்கிறது. தெருக்கள் தூய்மையாகப் பளிச்சிடுகின்றன. இதற்காக மத்திய, மாநில மற்றும் உலக நாடுகள் அளித்திருக்கும் விருதுகள் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தை அலங்கரிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அனைத்து கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களையும் திரட்டி இவர்கள் கிராமத்துக்கு அனுப்பியது.
அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் குறித்து லிங்கம்மாளும் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும் அவரது கணவருமான சண்முகமும் பாடம் எடுத்திருக்கிறார்கள். வாஷிங்டனிலிருந்து உலக வங்கி இயக்குநர் தலைமையிலான குழு ஒன்று ஓடந்துறையை ஆய்வு செய்திருக்கிறது. ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய வளர்ந்த நாடுகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூட இங்கே நேரில் வந்து பல விஷயங்களை பார்த்துச் சென்றிருக்கிறார்கள். மின்சார உற்பத்தி மற்றும் தொகுப்பு வீடுகளை பார்வையிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் அமைச்சர்கள் தங்கள் நாட்டில் இதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். சிக்கிம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் அரசு செயலர்கள் கூட ஓடந்துறையை வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள். சென்னை அண்ணா மேலாண்மையகத்தில் பேரூராட்சி தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றியிருக்கிறார் கிராமப் பஞ்சாயத்து தலைவர் லிங்கம்மாள். தமிழ்நாட்டின் ஒரு பெருமையான சின்னமாக விளங்குகிறது ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்து...!!!