வியாழன், 27 செப்டம்பர், 2018

மதி செய்திகள் 28/9/18

மதி செய்திகள் 28/9/18


சென்னையில் நேற்று 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இன்றும் இரண்டாவது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்

2016-ல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் : புதிய வீடியோவை வெளியிட்டது மத்திய அரசு

வெப்பச்சலனத்தால் இன்று மழை பெய்யும்; அக்டோபர் 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோவை : காவலருக்கு அரிவாள்வெட்டு

தமிழகத்தில் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பது தொடர் பாக வரும் அக்டோபர் 1-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது இனிமேல் குற்ற வழக்குப் பதிவு செய்ய மாநில உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி.,யும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை திமுக புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது. சென்னையில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக கலந்து கொள்ள வேண்டும். அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் ஸ்டாலின், அழைப்பை ஏற்று விழாவில் கலந்து கொள்ள வேண்டும். கருணாநிதி - எம்ஜிஆர் இடையேயான நட்பை ஸ்டாலின் மறந்து விடக்கூடாது. அதிமுக.,வை எம்ஜிஆர் உருவாக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சியை பிடித்திருக்கும் என்றார்.

முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்.,26 ம் தேதி கோவை மாவட்டம் போரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ., கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

சேலம்: கணவன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த புதுமணப்பெண் திருமணமான 3 நாளிலேயே வெளியேறினார். காதல் மனைவியின் பிரிவு தாங்காமல் புதுமாப்பிள்ளையோ கிணற்றில் குதித்து தற்கொலையே செய்து கொண்டார்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத்தில் அமைக்கப்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டதாகும். இது இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரையே அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 4 ஆயிரத்து 399 இடங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜாமின் கேட்டு கருணாஸ் மனுத்தாக்கல்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 20,241 கனஅடியில் இருந்து 23,064 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 22,000 கனஅடியில் இருந்து 24,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 104.36 அடியாகவும், நீர்இருப்பு 70.608 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

2018 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் சுமார் 26.1 லட்சம் கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கின்றன. மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் மொத்தக் கடன் தொகையில் 40 சதவிகிதக் கடனை வாங்கியுள்ளன.

மாலத்தீவு புதிய அதிபராக பதவியேற்கும் சோலீயின் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

ஐநா பொதுசபை கூட்டத்தின் போது டிரம்பை சந்தித்து பேசியதாகவும், பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம் என கூறியதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பேட்டியளித்ததற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் தனக்கு இருந்த பங்குகளை டெண்டுல்கர் சமீபத்தில் விற்ற நிலையில், அதனை நடிகர் மோகன்லால் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக