ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

மதி நியூஸ் 28/09/18

மதி நியூஸ்  28/09/18 !

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிப்பது குறித்த கர்நாடக அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி.

நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது.சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் - உச்சநீதிமன்றம்.

சபரிமலை குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் - தேவசம் போர்டு.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது - திமுக தலைவர் ஸ்டாலின்.

பெண்களை கடவுளாக வழிபடும் நாட்டில் சில கோயில்களில் தடை விதிப்பது சரியல்ல கடவுளை வணங்குவதில் ஆண் , பெண் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவுக்கு கால்களில் இருந்து இதயத்துக்கு செல்லும் நாளங்களில் சோதனை செய்ததாக அப்பலோ மருத்துவர் மீரா வாக்குமூலம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.நாடாளுமன்றம், சட்டமன்றம் இதை பின்பற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் என நம்புகிறேன் - கனிமொழி எம்பி

மருத்துவர் மீராவின் வாக்குமூலத்தால், ஜெயலலிதாவுக்கு கால்கள் இல்லை என்ற வதந்தி பொய் என தெரியவந்துள்ளது.

ஆந்திராவில் தமிழக லாரி ஓட்டுனர்கள் மீது ஆந்திர போலீசார் தாக்குதல் - மன வேதனையில் காட்பாடியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜேந்திரன் லாரியிலேயே தூக்கிட்டு தற்கொலை.

ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.தமிழகத்தில் 8 கோடிக்கு மேல் மக்கள் தொகை அதிகமாக உள்ளது; ஆனால், வாக்காளர்கள் 5.82 கோடி பேர்தான் உள்ளனர் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் - திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு.

பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க கோரிய வழக்கு: 7 நாட்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த விவகாரம்: பேராசிரியை நிர்மலா தேவி, முருகனின் ஜாமின் கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

சபரிமலை விவகாரம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மதுரை ஆதீனம் வரவேற்பு.

நாகை : கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த செறுதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் : காயமடைந்த மீனவர்களுக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

அதிமுக 40 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றிபெறும் - கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் போன்ற அதிகாரிகளுக்கு அரசு விருது வழங்க வேண்டும். நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் - மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வாகனங்களை அனுப்ப தனியார் பள்ளி, கல்லூரிகளை தமிழக அரசு மிரட்டுவதா ? - பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் மீண்டும் காலநீட்டிப்பு கேட்க முடிவு செய்துள்ளது.

பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதால் ஆண்களின் பிரம்மச்சரிய விரதம் பாதிக்கப்படும் - சுகி சிவம்.

தீபாவளி பண்டிகைக்கு 22,000 பேருந்துகள் இயக்கப்படும்.சென்னையில் இருந்து நவ.3,4,5 தேதிகளில் 12,000 பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர்

நாடாளுமன்ற தேர்தல் குறித்து திருச்சியில் 9 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை.

பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின் 2ம் ஆண்டு வெற்றி தினம் - துல்லிய தாக்குதலில் பங்கேற்ற ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர்.

எஸ்எஸ்எல்சி , பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு துணை தேர்வு ரத்து : தமிழக அரசு அரசாணை வெளியீடு.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முக.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் - தம்பிதுரை எம்பி.

ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை அடைத்து அனைத்து மருந்து வணிகர்கள் சங்கம் போராட்டம்.

சென்னை : சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில், இன்று 2-வது நாளாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை.

தமிழக முதலமைச்சரையும் , காவல்துறையையும் அவதூறாக பேசிய வழக்கில் எம்எல்ஏ கருணாசுக்கு ஜாமின் - சென்னை எழும்பூர் நீதிமன்றம்.

செப்.26ல் கோவை பேரூரில் நடந்த திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ்.பாரதி மீது வழக்கு பதிவு.

தமிழகத்தில் மத்திய அரசின் கழிவறை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது வருத்தம் தருகிறது : தமிழிசை.

நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் 3 இடங்களில் மண்சரிவு ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்.

ஐபிஎல் போராட்ட வழக்கில் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் எம்எல்ஏ கருணாஸ் மனு தாக்கல்.

திருவாரூர் : மகிழஞ்சேரியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு - நன்னிலம் போலீசார் விசாரணை.

ஐயப்பனின் புனிதத்தை கெடுக்கும் வகையில் தீர்ப்பு உள்ளது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் - அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் கட்சி.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

பெரியார் நினைவு சமத்துவபுரங்களை சீர் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்.

காந்திஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு.

சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் வலிப்பு நோய்க்கு தவறுதலாக மருந்து தந்ததில் சிறுமி லத்திகா உயிரிழப்பு.

2008ல் திருவண்ணாமலையில் சுடுகாட்டுக்கு பாதை கேட்டு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்த வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.

கோவை : சாந்திமேடு அருகே நேற்றிரவு சாலையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட, அன்னூர் காவல் நிலைய காவலர் வெங்கடேஷ்குமாருக்கு கத்திக்குத்து - மருத்துவமனையில் அனுமதி.

திருவள்ளுர்: பொன்னேரி ரயில்வே சுரங்கப்பாதையில் அஜித் என்ற இளைஞர் கை துண்டிக்கப்பட்ட நிலையில் வெட்டிக்கொலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக