புதன், 26 செப்டம்பர், 2018

மதி செய்திகள் 26-09-18


மதி செய்திகள் 26-09-18

*☦🅾சென்னை ஆவடியில் மாணவருக்கு அரிவாள் வெட்டு*

_சென்னை: சென்னை ஆவடியில் பச்சையப்பன் கல்லூரி-பிரசிடன்சி கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அரிவாளால் வெட்டியதில் பிரசிடன்சி கல்லூரி மாணவர் முகேஷுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்._

*☦🅾 திருவள்ளூரில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் சகோதரர் கொலை*

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மேல்மணம்பேட்டில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் சகோதரர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் மீண்டும் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. வீட்டில் வைக்கப்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். வெங்கட்ராமு கொலையை கண்டித்து இன்று அதிகாலை 4 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

*☦🅾சென்னையில் 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது*


சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். லோகேஷ், பிரபு, தணிகாசலம், சஞ்சீவ்குமார், ராஜா மாறும் ரிஸ்வான் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர்.

*☦🅾ராமேஸ்வரத்தில் பக்தர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழிப்பறி*

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் போலீஸ் கண் முன்னே சுற்றுலா பயணிகளிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. அக்னி தீர்த்த கடல் பகுதியில் பக்தர்களிடம் 7 செல்போன், 4 ஏடிஎம் கார்டு மற்றும் பணத்தை வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.



*☦🅾சென்னை வளசரவாக்கத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் 30 சவரன் நகை கொள்ளை*

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 30 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். விஜயலட்சுமி வெளியூர் சென்றிருந்த நிலையில் ஒன்றரை லட்சம் ரொக்க பணத்தையும் 30 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*☦🅾வளர்ப்பு நாய் அடித்து கொலை : இலங்கை அகதி கைது*

வேளச்சேரி: வேளச்சேரி சாரதி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் செல்வி (33). அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்துகிறார். இவரது கணவர் ஜெகன்நாத் (36). சலவை கடை நடத்துகிறார். இவர்களுக்கு மேடவாக்கத்தில் சொந்தமாக வீடு உள்ளது. கடந்த 22ம் தேதி செல்வி  தனது வளர்ப்பு நாயை மேடவாக்கத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று இரவு 8 மணிக்கு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது கணவர்  ஜெகநாத், ‘எதற்காக நாயை புது வீட்டுக்கு அழைத்து சென்றாய்’’ என செல்வியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த செல்வி மயிலாப்பூரில் வசிக்கும் தனது தங்கை வீட்டுக்கு சென்று தங்கி உள்ளார். மறுநாள் காலையில் செல்வி வீட்டுக்கு வந்தபோது நாய் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி உடனே நாயை மீட்டு கால்நடை  மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நாய்  இறந்தது. புகாரின்பேரில், வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ஜெகநாதன் 10 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து வந்த அகதி என்பது தெரிந்தது. எனவே போலீசார் அவரை கைது செய்தனர்.

*☦🅾பேசாத குழந்தையை பேச வைப்பதாக நாடகம் - பரிகார பூஜை செய்து 20 சவரன் சுருட்டிய பூசாரி கைது*

_வேளச்சேரி: பள்ளிக்கரணையில் பேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக நாடகமாடி, 20 சவரன் நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் லதா ரமேஷ் (45). இவருக்கு மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மேடவாக்கம், புதுநகர், ஜெயப்பிரகாஷ் தெருவிலுள்ள வீரகாளியம்மன் கோயிலுக்கு லதா ரமேஷ் சாமி கும்பிடுவதற்கு வந்துள்ளார்.அப்போது அங்கிருந்த கோயில் நிர்வாகியும், பூசாரியுமான தினேஷ் (26) என்பவர், ‘‘உங்களது பெண் குழந்தை மற்றவர்களைபோல் பேசவும், எழுந்து நடக்கவும், சிறப்பு பூஜை செய்கிறேன்’’ என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய லதா ரமேஷ், ‘‘பூஜைக்கு என்ன தேவை?’’ என தினேஷிடம் கேட்டார். அதற்கு ‘‘உங்கள் வீட்டிலுள்ள அனைத்து நகைகளையும் கொண்டு வந்து, என்னிடம் கொடுங்கள். நான் அதை கோயிலில் வைத்து பூஜை செய்து அப்பொருட்களை ஒரு செம்பு பாத்திரத்தில் போட்டு கொடுப்பேன். அதை வீட்டுக்கு எடுத்து சென்று, திறந்து பார்க்காமல் வீட்டு பூஜையறையில் 90 நாட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்பூஜை, முடிவதற்குள் உங்களது குழந்தை பூரண குணமாகும்’’ என்று தினேஷ் கூறியுள்ளார்.இதையடுத்து லதா தனது வீட்டில் இருந்து 15 சவரன் நகையை எடுத்து வந்து பூசாரி தினேஷிடம் கொடுத்துள்ளார். அந்த நகைகளை பூஜை செய்து, லதாவிடம் ஒரு செம்பு பாத்திரத்தில் மீண்டும் தினேஷ் கொடுத்துள்ளார். அவர் பயபக்தியுடன் அந்த செம்பு பாத்திரத்தை வைத்து, 90 நாட்கள் பூஜை செய்தும் பெண் குழந்தை குணமடையவில்லை.இதனால் சந்தேகமடைந்த லதா செம்பு பாத்திரத்ைத திறந்து பார்த்தபோது, தங்க நகைகளுக்கு பதிலாக கருங்கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது நகையை திருப்பி தரும்படி லதா பலமுறை வலியுறுத்தியும், தினேஷ் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது.இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசில் நேற்று முன்தினம் லதா புகார் அளித்தார். புகாரின்பேரில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கெங்குராஜ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ், எஸ்ஐ இளங்கனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, பூசாரி தினேஷை பிடித்து தீவிரமாக விசாரித்தனர்.விசாரணையில் லதாவிடம் பரிகார பூஜை செய்வதாக நாடகமாடி 15 சவரன் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கோயில் பூசாரி தினேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 8 சவரன் பறிமுதல் செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்._

*☦🅾ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல் ; தாய், மகன் உட்பட 3 பேர் கைது*

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ₹10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தாய், மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த  எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அருகே நேற்று அதிகாலை ஆரம்பாக்கம் எஸ்ஐ ஜெயபிரகாஷ் தலைமையில்  போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது,  நெல்லூரில் இருந்து சென்னை வந்த  அரசு பேருந்தை மடக்கி சோதனை நடத்தினர். அதில், பயணித்த 2 பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் மீது  சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் அமர்ந்திருந்த சீட்டுக்கு கீழ்  பார்த்தபோது 3 பைகள் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது 24  பொட்டலங்களில் 44 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹10 லட்சம். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் பிடித்து விசாரித்தபோது, தஞ்சாவூரை சேர்ந்த  சரோஜா (45), இவரது மகன் ராஜி (20), மதுரையை சேர்ந்த பாண்டியம்மாள் (38) என்பது தெரியவந்தது.பிடிபட்டவர்களை திருவள்ளூர் காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.  இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும்  போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது


*☦🅾100 கிலோ குட்கா பறிமுதல் : மளிகை கடைக்காரர் கைது*


வேளச்சேரி: வேளச்சேரி காவல் நிலைய போலீசார் நேற்று வேளச்சேரி நேருநகரில் இருக்கும் மளிகைக் கடையை சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. எனவே கடை உரிமையாளர் முருகன் (42) என்பவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையில் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் குடோன் வாடகைக்கு எடுத்து புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தி, 100 கிலோ மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மாங்காடு போலீசார் நேற்று முன்தினம் இரவு மாங்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் குட்கா போதைப் பொருள் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் உள்ள மளிகை கடை ஒன்றில் அதிக அளவில் குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த கடைக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட முகமது முஸ்தபா (23) என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் அந்த கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் ₹80 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

*_☦🅾சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் செல்போன் திருடிய 7 வாலிபர்கள் கைது_*

🔥சென்னை: சென்னை புளியந்தோப்பு எம்.எஸ் முத்து நகரை சேர்ந்தவர் சூர்யா (20). ஆட்டுத்தொட்டி ஊழியர். நேற்று முன்தினம் காலை வேலை முடிந்து, வி.ஓ.சி நகர் சந்திப்பில் நடந்து வந்தார். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர் சூர்யாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போன் மற்றும் ₹2500 பணத்தை பறித்த கன்னிகாபுரம் நியூ காலனியை சேர்ந்த ரீகன் என்ற சந்தோஷ் குமார் (19) மற்றும் புளியந்தோப்பு கார்ப்பரேஷன் லேன் 4வது தெருவை சேர்ந்த கணேசன் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி முக்கிய குற்றவாளிகளான சபீர் கான் (21) மற்றும் அப்பு என்ற பிரதீப் (19) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும்,  இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என்று 20க்கும் மேற்பட்ட வழக்குகள்  நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.இவர்களிடம் இருந்து, 20 விலை உயர்ந்த செல்போன்கள், கத்தி மற்றும் 4 சவரன் செயின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

🔥 திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஈசான மூர்த்தி கோயில் தெரு வழியாக செல்போனில் பேசியபடி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது வயற்றில் கத்தியால் குத்திவிட்டு, செல்போனை பறித்த மணலியை சேர்ந்த அஜித் (19), திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரத்குமார் (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

🔥 வேப்பேரியைச் சேர்ந்த கிருஷ்ணா ரெட்டி (47) என்பவரிடம் செல்போனை பறித்த புரசைவாக்கம் சோலையம்மன் கோவில் தெருைவச் ேசர்ந்த அஜித்குமார் (19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.

🔥கொருக்குப்பேட்டையில், லாரி டிரைவரிடம் மாமூல் கேட்டு  மிரட்டியவர்களை தட்டிக்கேட்ட சூபர்வைசரிடம் ₹1000 பணம் பறித்த அதே பகுதி மணிமாறன்  (35), ஏழுமலை (32), மோகன் (39) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

🔥 மாங்காடு சீனிவாசநகரை சேர்ந்தவர் முரளி (25). இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்ல பைக்கில் சென்று கொண்டிருந்தார். வண்டி குன்றத்தூர் - குமணன்சாவடி செல்லும் சாலையில் மாங்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென முரளி பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

🔥 காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம், காந்தி சாலையை சேர்ந்தவர் வனிதா (22). இவரது கணவன் பாலாஜி (38). சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலாஜி சிறையில் இருந்துள்ளான். அப்போது வனிதாக்கும், அதேபகுதியை சேர்ந்த டிராவல்ஸ் அதிபரான கணபதி (28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை தொடர்ந்து வனிதா தலைமறைவானார். சிறையில் இருந்து வெளியே வந்த பாலாஜிக்கு, இருவரின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து வனிதாயின் தம்பி அஜீத் (19) மற்றும் பாலாஜி ஆகிய இருவரும், வனிதா இருக்கும் இடம் அறிந்து அங்கு அவரையும், அவரது கள்ளக்காதலன் கணபதியையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். புகாரின்பேரில், தலைமறைவாக இருந்த அஜீத்தை போலீசார் கைது செய்தனர்.

🔥வில்லிவாக்கம் சிட்கோ நகர் 18வது தெருவை சேர்ந்தவர் பத்ரி நாராயணன் (34). இந்து அமைப்பு நிர்வாகி. இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை உடைத்த வில்லிவாக்கம் சிட்கோ நகர் 56வது தெருவை சேர்ந்த காவலர் கிங்ஸ்லி ஜெயராஜ் (33), அயனாவரம் சோமசுந்தரம் 4வது தெருவை சேர்ந்த ஊர்காவல் படை வீரர் அகஸ்டின் (24), கீழ்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் (22), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

🔥 பள்ளிக்கரணை, நூக்கம்பாளையம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் செல்லையா. இவரது மனைவி லட்சுமி (56). கூலி தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு இருவருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த லட்சுமி நள்ளிரவு மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். ரூ.60 லட்சம் சொத்தை விற்க முயன்ற இருவர் கைதுநாகப்பட்டினம் மாவட்டம் தரங்கபாடியை சேர்ந்த ராமஜெயராமன் என்பவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ராமஜெயராமனுக்கு அம்பத்தூர் அடுத்த வட பெரும்பாக்கம் தணிகாசலம் நகரில் 2400 சதுர அடி காலி மனையை ஆள் மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயார் செய்து ₹60 லட்சம் மதிப்புள்ள அந்த சொத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் கொளத்தூர் செந்தில் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (49), புரசைவாக்கம் பழைய தாண்டவராயன் தெருவை சேர்ந்த திவாகரன் (39) ஆகிய 2 பேர் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


*☦🅾வாணியம்பாடியை தொடர்ந்து அதிரடி வேலூரில் பதுக்கிய 1.75 டன் குட்கா பறிமுதல்*

_வேலூர்:  வேலூரில் வாடகை வீட்டில் பதுக்கிய ₹6 லட்சம் மதிப்புள்ள 1.75 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வரப்படுவதாக வேலூர் மாவட்ட போலீசாருக்கு கடந்த 21ம் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆலங்காயம் போலீசார் வாணியம்பாடி  டோல்கேட் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர் அதில் தடைசெய்யப்பட்ட ₹8 லட்சம் மதிப்புள்ள குட்கா  இருப்பது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து,  டிரைவர் வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த பாபு(42), சுமேந்தர்(38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். லாரியின் பின்னால் பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த வாணியம்பாடி ரங்காராவ்(30) என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வேலூரில் வாடகைக்கு வீடு  எடுத்து குட்கா பதுக்கி வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் நேற்று முன்தினம் வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள  மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில்  பதுக்கி வைத்திருந்த ₹6 லட்சம் மதிப்புள்ள 1.75 டன் குட்காவை பறிமுதல் செய்தனர்.மேலும் ரங்காராவ் கொடுத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா ஏஜென்டாக செயல்பட்ட ஆரணி கார்த்திகேயன் தெருவை சேர்ந்த தினேஷ்(28) என்பவரை போலீசார் கைது  செய்துள்ளனர். குட்கா வழக்கில் தொடர்புடையவர்கள் பட்டியல் சங்கிலி போல தொடர்வதால் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட குட்கா டீலர்கள், ஏஜென்டுகள் கலக்கத்தில் உள்ளனர்._


*☦🅾13 பேருக்கு குண்டாஸ்*

சென்னை: சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சூளைமேட்டை சேர்ந்த ஜெயபால் (எ) இமான் (27), அதே பகுதியை சேர்ந்த குமரேசன் (36), செங்கல்பட்டு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த முகமது ஜான் (எ) சூளைமேடு ஜான், வரதராஜபேட்டையை சேர்ந்த பிரசாந்த் (31),  நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த ராஜா (28),  சூளைமேட்டை சேர்ந்த ராஜேஷ் (36), அதே பகுதியை சேர்ந்த ராஜி (39), பெரும்பாக்கத்தை சேர்ந்த சிவலிங்கம் (31), சூளை மேட்டை சேர்ந்த விஜயகுமார் (எ) குருசு (29), ராஜமங்கலத்தை சேர்ந்த தேவராஜ் (34), எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்த தேவராஜ் (34), தண்டையார்பேட்டை காந்தி நகரை சேர்ந்த தீனா என்கிற தீனா தயாளன் (29),  பெரியமேட்டை சேர்ந்த மணிகண்டன் (25) ஆகிய 13 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

*☦🅾வாலிபருக்கு 111 நாள் சிறை*

திருவொற்றியூர்: எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 9வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (25). இவர் மீது எண்ணூர் போலீஸ் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பிரமாண பத்திரத்தை   மீறி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், ராம்குமாரை 111  நாட்கள் சிறையில் அடைக்க மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் கலை செல்வன் உத்தரவிட்டார். இதையடுத்து, ராம்குமாரை போலீசார் கைது செய்தனர்.

*_☦🅾செல்போன் திருடியதாக கூறி மரத்தில் கட்டி வைத்து வாலிபர் அடித்து கொலை: வேலூர் அருகே பயங்கரம்_*

வேலூர்: கே.வி.குப்பம் அருகே செல்போன் திருடியதாக வாலிபரை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பூச்சிக்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (35). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதே ஊரை சேர்ந்த விமல் உட்பட அவரது நண்பர்கள் 3 பேர் வீட்டில் இருந்த  சங்கரை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள மாமரத்தில் கட்டி வைத்து செல்போன் திருடியதாககூறி அவரை சரமாரியாக கட்டையால் அடித்து உதைத்துள்ளனர். ஏற்கனவே சங்கர் நோயாளி என்பதால் அவரால் வலி தாங்க முடியாமல் கதறினார். ஒரு கட்டத்தில் சங்கர் மயங்கி கீழே சரிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த 4 பேரும், சங்கரை தோளில் தூக்கிக்கொண்டு அவரது வீட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கரின் தாய் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து சங்கரை பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக கே.வி.குப்பம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய விமல் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சடலத்தை கே.வி.குப்பம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீஸ் எல்லை பிரச்னைமேல்மாயில் பூச்சிக்கான்பேட்டையை சேர்ந்த ஒரு விவசாய நிலத்தில் உள்ள மாமரத்தில் சங்கரை கட்டி வைத்து அடித்துள்ளனர். அந்த இடம் பனமடங்கி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும். வீசிவிட்டு சென்ற வீடு கே.வி.குப்பம் காவல்நிலையத்துக்கு உட்பட்டது. இதனால் எல்லை பிரச்னை ஏற்பட்டது. இரு காவல் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், மாறி மாறி தங்களது காவல் நிலைய எல்லை இல்லை எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

*☦🅾சொத்தில் மகளுக்கு பங்கு தர சொன்னதால் தாயை வெட்டி கொன்ற மகன்*

துரைப்பாக்கம்: சென்னை பாலவாக்கத்தில் சொத்தில் மகளுக்கு பங்கு கொடுக்குமாறு சொன்னதால், ஆத்திரமடைந்த மகன் தாயை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர் காதை அறுத்து நகை பறித்து விட்டு தப்பியவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கம், மணியம்மை தெருவை சேர்ந்தவர் ராணியம்மாள் (64). கணவர் இறந்துவிட்டார். தம்பதிக்கு, 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 5 பேருக்கும் திருமணமாகிவிட்டது. 2 மகன்கள் பெங்களூருவிலும், 2 மகள்கள் சென்னையில் வசிக்கின்றனர். ராணியம்மாளின் கடைசி மகன் பர்னபாஸ் (47). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பரிமளாமேரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் தான் ராணியம்மாள் வசித்தார். ராணியம்மாள் வசித்த இடத்தை மகன் பர்னபாஸ், மகள் வேணி  ஆகியோரை பிரித்துக்கொள்ளுமாறு, கூறி உள்ளார். இதற்கு பர்னபாஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராணியம்மாள் வீட்டு கட்டிலில் தூங்கினார். நள்ளிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த பர்னபாஸ் திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாய் ராணியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில், அவருக்கு 18 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி சாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலையை மறைப்பதற்காக பர்னபாஸ் தாயின் காதை அறுத்து கம்மல் மற்றும் செயினை கழற்றினார். பின்னர் எதுவும் தெரியாதது போன்று மனைவியை எழுப்பி நகைகளை கொடுத்தார். நகையில் ரத்தக்கறை படிந்திருந்தால் அதிர்ச்சியடைந்து என்னவென்று கேட்டார். அதற்கு பர்னபாஸ், ‘‘இந்த இடத்தால் உனக்கு இனி எந்த பிரச்னையும் வராது’’’ என மட்டும் கூறிவிட்டு, வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். அதற்கு பிறகு தான் ராணியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து, பரிமளாதேவி கதறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக நீலாங்கரை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.  தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, ராயப்ேபட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கரை பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த பர்னபாசை கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

*☦🅾ஐடி ஊழியர் மனைவியை கடத்தியதாக வழக்கு அதிமுக மாஜி அமைச்சர் மகனுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்*

மதுரை: ஐடி ஊழியர் மனைவியை கடத்தி அடைத்து வைத்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் மகனுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  சென்னை, வேளச்சேரியை சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் விஜய் ராஜேஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது: என் மனைவி யாழினி (30). கடந்த 2011ல் எங்களுக்கு திருமணம் நடந்தது. 4 வயதில் இரட்டை ெபண் குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகு என் மனைவி படிக்க விரும்பினார். அவரது விருப்பப்படி சென்னை தரமணியில் உள்ள சட்டப்பள்ளியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.  படிக்க சென்றதும் அவருக்கு நண்பர்கள் அதிகமாயினர். அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. இதனால் எச்சரித்தேன். இதில் கோபித்துக் கொண்ட என் மனைவி வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். பிறகு சமாதானம் ஆகி சொந்த ஊரான தஞ்சைக்கு சென்றோம்.இதனிடையே அவருடன் படித்த, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயபாலின் மகன் ரத்தீஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தற்போது என் மனைவியை, ரத்தீஷ் தனது நண்பர் துணையுடன் கடத்தி சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். இதுகுறித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். இதையடுத்து முன்னாள் அமைச்சர் மகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், என் மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு என் மனைவியை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சை அனைத்து மகளிர் போலீசார், மனுதாரர் மனைவி யாழினி மற்றும் 2 குழந்தைகளை ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதிகள் தங்கள் அறையில் வைத்து, மனுதாரர் மற்றும் அவரது மனைவியிடம் தனித்தனியாக விசாரித்தனர். பின்னர் மனு குறித்து முன்னாள் அமைச்சரின் மகன் ரத்தீஷூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 9க்கு தள்ளி வைத்தனர். முன்னதாக தஞ்சை ஜேஎம் 1 கோர்ட்டில் நீதிபதி விஜய் அழகிரி முன், யாழினி நேற்று முன்தினம் ஆஜரானார்.

*☦🅾பாக்ராபேட்டை அருகே அதிரடி சோதனை : செம்மரம் கடத்திய 3 தமிழர்கள் கைது*

திருமலை: பாக்ராபேட்டை அருகே வனத்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் செம்மரம் கடத்திய தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது, அவர்களிடமிருந்த ₹1 கோடி மதிப்புள்ள 22 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவின் பாக்ராபேட்டை  வனச்சரகர் ரகுநாத் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, சியாமளா வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கொண்டு 20க்கும் மேற்பட்டோர் வந்து ெகாண்டிருந்தனர். இதைபார்த்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர். ஆனால் கடத்தல்காரர்கள் அவர்கள் கொண்டு வந்த செம்மரங்களை ஆங்காங்கே வீசிவிட்டு தப்பியோடினர். அவர்களில் 3பேரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் தாலுகா, வெள்ளிமலை ஊராட்சியை சேர்ந்த தங்கராஜ், தொரடிப்பட்டு ராஜ், சின்னதம்பி என தெரிந்தது. தொடர்ந்து அங்கிருந்த ₹1 கோடி மதிப்பு 658 கிலோ எடையுள்ள 22 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்த 3 பேரையும் பீலேரு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

*☦🅾போலீஸ் அதிகாரியின் மகள் லாரி ஏற்றி படுகொலை: சினிமா ஸ்டண்ட் மாஸ்டர், மகன் மீது புகார்*

சென்னை: சொத்து தகராறில் போலீஸ் அதிகாரியின் மகளை லாரி ஏற்றி கொலை செய்ததாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் அவரது மகன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சவுகார்பேட்டை, திருபள்ளி தெருவை சேர்ந்தவர் துளசிங்கம் (52). வடக்கு கடற்கரை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ. இவரது 2வது மகள் ரம்யா (28). நுங்கம்பாக்கத்தில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ரம்யா மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சென்ட்ரல் அருகே வந்தபோது திடீரென அவ்வழியாக வந்த மினி லாரி இவரது மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில், மொபட்டுடன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து, யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரம்யா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இது தொடர்பாக பட்டாபிராம் கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழனி (49) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ரம்யாவின் தந்தையும், சிறப்பு எஸ்ஐயுமான துளசிங்கம் யானைக்கவுனி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், எனது மாமானார் ரத்தினம், சினிமாவில் சண்டைகாட்சிகளை அமைத்து தரும் பயிற்சியாளராக இருக்கிறார். அவரது மகன் எத்திராஜ் ஆகியோர் சொத்து தகராறில் திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி என் மகளை கொலை செய்துள்ளனர். எனது மகள் சாவுக்கு 2 பேரும் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*☦🅾குட்கா வழக்கில் சிபிஐ மீண்டும் அதிரடி உணவுத்துறை அதிகாரி கைது: இதுவரை 6 பேர் சிறையிலடைப்பு*

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் மேலும் ஒரு அரசு அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும், குட்கா போதைப்பொருளை விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு கடந்த 2013ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், உத்தரவையும் மீறி,  குட்காவை தமிழகம் முழுவதும் தாராளமாக விற்பனை செய்ய அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை, மத்திய கலால் துறையை சேர்ந்த அதிகாரிகள் என பலருக்கு குட்கா தயாரிப்பாளர்கள் ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, கடந்த 5ம் தேதி சிபிஐ அதிகாரிகள் டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி, கட்டுக்கட்டாக ஆவணங்களை கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாக சிபிஐ, குட்கா தயாரிப்பாளரான மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ் மற்றும் குட்கா விற்பனை செய்யவும், தயாரிக்கவும் ஒத்துழைத்த மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை கடந்த 6ம் தேதி சிறையில் அடைத்தனர்.  பின்னர் சிபிஐ அதிகாரிகள், 5 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோர் சிபிஐயிடம் அனைத்து உண்மைகளையும் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் பட்டியலையும் சிபிஐயிடம் இருவரும் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.இதை தொடர்ந்து குட்கா தயாரிக்க சான்றிதழ் வழங்கி, குட்காவை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் மாதவராவ் உள்ளிட்டோருக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாக கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவரும், தற்போது சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவருமான சிவகுமார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரை சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி திருநீலபிரசாத் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, சிவகுமாரை வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் மற்ற 5 பேரின் நீதிமன்ற காவலும் அன்றுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது. குட்கா முறைகேடு வழக்கில் மேலும் ஒரு அரசு அதிகாரி கைது செய்யப்பட்டிப்பது அரசியல் வட்டாரத்திலும், அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிவகுமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி, பல நாட்களுக்கு பின்னர் அவரை கைது செய்துள்ளனர். எனவே அடுத்தடுத்து மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.  ஏற்கனவே 5 பேரை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதேபோல் சிவகுமாரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிவகுமார்தான், சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது, அவரே சிபிஐயால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடிகுட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு வக்கீல் வாதிடுகையில், பாண்டியன் மாதம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார். மேலும் அவர் 5 நட்சத்திர விடுதிகளில் தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. செந்தில் முருகனும் லஞ்சம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள். எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், இருவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். மேலும் சம்மன் அனுப்பினால், ஆஜராக தயாராக உள்ளனர் என்று வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக