வெள்ளி, 31 மே, 2019

மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு

மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு

🏛மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி குடியரசுத் தலைவர் தற்போது ஓர் அறிக்கையினை  வெளியிட்டுள்ளார். அதன் விவரங்கள் வருமாறு

🔰 உள்துறை அமைச்சராக அமித் ஷா நியமனம்
🔰நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமனம் - கார்ப்பரேட் விவகாரங்களையும் கவனிப்பார்
🔰ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம்
🔰பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளித்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமனம்
🔰வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ் ஜெயசங்கர் நியமனம்
🔰ரயில்வே துறை மீண்டும் பியூஸ் கோயலுக்கு ஒதுக்கீடு - தொழில் மற்றும் வர்த்தகத்துறையும் ஒதுக்கீடு
🔰நிதின் கட்கரிக்கு தரைவழிப் போக்குவரத்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை ஒதுக்கீடு
🔰சதானந்த கவுடா உரத்துறை அமைச்சராக நியமனம்
🔰உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக ராம் விலாஸ் பஸ்வான் நியமனம்
🔰நரேந்திர சிங் தோமர் விவசாயத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமனம்
🔰சட்டத்துறை மற்றும் தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் நியமனம்
🔰சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக முக்தர் அப்பாஸ் நக்வி நியமனம்
🔰உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக ஹர்சிம்ரத் கவுர் பாதல் மீண்டும் நியமனம்
🔰தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம் - சுற்றுச் சூழல் துறையையும் கவனிப்பார்
🔰பெட்ரோலியத்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் நியமனம்
🔰நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பிரஹலாத் ஜோஷி நியமனம்
🔰சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை அமைச்சராக தவார் சந்த் கெலாட் நியமனம்
🔰ரமேஷ் பொக்ரியால் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம்
🔰பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக அர்ஜூன் முண்டா நியமனம்
🔰சுகாதாரத்துறை அமைச்சராக ஹர்சவர்தன் நியமனம்
🔰திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை மகேந்திரநாத் பாண்டேவுக்கு ஒதுக்கீடு
🔰கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக கிரிராஜ் சிங் நியமனம்
🔰பிரதமர் அலுவலகங்களுக்கான இணை அமைச்சராக (தனி பொறுப்பு) ஜிதேந்திரா சிங் நியமனம்
🔰தனிப் பொறுப்புடன் கூடிய விளையாட்டுத்துறை இணை அமைச்சராக கிரண் ரிஜிஜு நியமனம்
🔰தனிப் பொறுப்புடன் கூடிய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சராக பிரஹலாத் சிங் படேல் நியமனம்
🔰தனிப் பொறுப்புடன் கூடிய மின்சாரத்துறை இணை அமைச்சராக ஆர்.கே.சிங் நியமனம்
🔰தனிப்பொறுப்புடன் கூடிய கப்பல் போக்குவரத்துறை இணை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமனம்
🔰தரை வழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக வி.கே.சிங் நியமனம்
🔰வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக வி முரளிதரன் நியமனம்

புதன், 22 மே, 2019

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. மாணவர்களை சீராக்க பெற்றோர்களும் ஒத்துழைக்கலாமே.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. மாணவர்களை சீராக்க பெற்றோர்களும் ஒத்துழைக்கலாமே.

1.காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்.

2.பைக் ., செல்போன், ஸ்மார்ட்போன் பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

3.லோ ஹிப் , டைட் பேண்ட் அணிந்து வரக்கூடாது.

4.அரைக்ககை சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும் அது இறுக்கமாக, குட்டையாக இருக்கக்கூடாது.

5.தலைமுடி சீரான முறையில் வெட்டி இருக்க வேண்டும் போலீஸ் கட்டிங் மட்டுமே அனுமதி.

6.கருப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அனுமதி.

7.டக் இன் செய்யும் போது சட்டை வெளியே வரக்கூடாது மற்றும் சீரற்ற முறையில் டக் இன் செய்யக்கூடாது.

8.மேலுதட்டை தாண்டி முறுக்கு மீசை தாடி வைக்க கூடாது.

9.கைகளில் வளையம் கயிறு செயின் அணியக்கூடாது.

10.பிறந்தநாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வரவேண்டும்.

11.விடுமுறை எடுக்கும்போது பெற்றோர் ஆசிரியர் அனுமதி கையெழுத்து பெற்ற பின் மட்டுமே எடுக்க வேண்டும்.

என்ற 11 கட்டளைகள் பிறப்பித்து அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.


வெள்ளி, 17 மே, 2019

முக்கியமான தகவல் நிச்சயமாக உதவும்


முக்கியமான தகவல் நிச்சயமாக உதவும்

பள்ளி திறக்க இன்னும் 20 நாட்களை உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு இ சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள் ஆனால் அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனார் அதனால் பல தடவை அலைந்து வருகிறார்கள் மக்கள் கஷ்டம் அறிந்து இந்த தகவலை இங்கு என்னென்ன தேவை என பதிவு செய்கிறோம்

*முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

புகைப்படம்
குடும்ப அட்டை
ஆதார் அட்டை
மாற்றுச்சான்றிதழ்(TC)
மதிப்பெண் பட்டியல்(10,12)
ஜாதி,வருமானம் சான்றிதழ்
முதல் பட்டதாரி பத்திரம்
குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்வி சான்றிதழ்
தொலைப்பேசி(otp வரும் அதனால்)
அனைத்தும் அசல் மற்றும் நகல்

*ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
மாற்றுச்சான்றிதழ் (TC)அல்லது தந்தையின் மாற்றிச்சான்றிதழ் (அ) தந்தையின் ஜாதி சான்றிதழ்
புகைப்படம்
தொலைப்பேசி otp வரும் அதனால்
அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்

*வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
வருமான சான்று(payslip) + பான்கார்டு
தொலைப்பேசி otp வரும் அதனால்
புகைப்படம்
அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவை

*இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
தொலைபேசி otp வரும் அதனால்
புகைப்படம்
அனைத்தும் நகல் மற்றும் அசல்

இந்த செய்தி மற்றவர்களுக்கு பகிர்ந்து மக்களுக்கு உதவுங்கள் மேலும் அந்தந்த ஊர்களிலும் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கம் (society)லும் இந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க முடியும் இதன் மூலம் நீங்கள்  உங்களுடைய
அலைச்சல் குறைக்கலாம்...

சான்டிஸ்க் நிறுவனம் உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்டினை விற்பனைக்கு விடுத்துள்ளது


சான்டிஸ்க் நிறுவனம் உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்டினை விற்பனைக்கு விடுத்துள்ளது.

ஸ்மார்ட்போனின் மெமரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சான்டிஸ்க் நிறுவனம் 1 டி.பி. எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி. கார்டை உருவாக்கி உள்ளது.
புதிய மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் சாதனத்தில் அதிக மெமரி கொண்ட தரவுகளை சேமிக்க முடியும். முன்னதாக இந்த மைக்ரோ எஸ்.டி. கார்டு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இது அமேசான் தளத்தில் 31,540 ரூபாய்க்கு இந்த கார்டு விற்பனை செய்யப்படுகிறது.
இது உலகின் முதல் 1 டி.பி. எஸ்.டி. கார்டு ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே, கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என புகார் அளித்த பெண், அவர்களை தானே கொன்று புதைத்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.


வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே, கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என புகார் அளித்த பெண், அவர்களை தானே கொன்று புதைத்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

 மேலும் சடலங்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் ராஜா. 25 வயது இளைஞரான இவர், எலக்ட்ரிசீயனாக பணிபுரிந்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்து பெண்ணான தீபிகாவை 2 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார்.
ராஜா-தீபிகா தம்பதிக்கு பிரனீஷ் என்ற ஒரு வயது குழந்தை இருந்தது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி முதல் தனது கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் தீபிகா நேற்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில், போலீசர் உடனடியாக தீபிகாவிடமிருந்து விசாரணையை துவங்கினர்.
ராஜாவின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடலாம் என்ற அடிப்படையில் போலீசார் கேட்டபோது, தன் கணவர் செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார் என்று தீபிகா கூறியுள்ளார். மேலும் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீபிகாவை தீவிர விசாரணை செய்துள்ளனர். கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரனீசை கொலை செய்து, வீட்டின் அருகே உள்ள சாத்தூர் ஏரிக்கரையில் புதைத்துவிட்டதாக தீபிகா கூறியதாப போலீசார் தெரிவித்துள்ளனர். புதைத்த இடம் என்று கூறி ஒரு இடத்தையும் போலீசாரிடம் காண்பித்துள்ளார்.
அங்கு காவல் துணை கண்காணிப்பாளர் கலைசெல்வன் ஆய்வு மேற்கொண்டார். உடல்களை புதைத்ததாக தீபிகா கூறிய இடத்தில் இருந்து துர்நாற்றம் வரும் நிலையில், அங்கு தோண்டிப் பார்க்க போலீசார் முடிவுசெய்துள்ளனர். ஆற்காடு வட்டாட்சியர் சம்பவ இடத்தில் இன்று காலை விசாரணை மேற்கொண்டதால் அப்பகுதில் போலீசார் நிறுத்தப்பட்டனர்.
வேலூரில் இருந்து 3 பேர் கொண்ட தடயவியல் வல்லுநர்கள் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவக் குழு வருகைக்குப் பின்னர், இன்று பிற்பகலில் சடலங்களை தோண்டியெடுக்கும் பணி தொடங்கும்.
இதனிடையே, காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், கணவர் நாள்தோறும் குடித்துவிட்டுவந்து சித்திரவதை செய்ததாகவும், இதனால் வேறு வழியின்றி கொலை செய்ததாகவும் தீபிகா வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது. கணவனை கொலை செய்த பிறகு, கொலையாளியின் பிள்ளை என பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் குழந்தையையும் கொலை செய்ததாக தீபிகா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், கொலைக்கான காரணம், கொலை நடந்தது எப்படி மற்றும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கருவி குறித்து தீபிகாவிடமும், அவரது உறவினர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. கணவனையும் குழந்தையையும் கொன்று, 20 வயது பெண்ணான தீபிகா மட்டும் தனி ஆளாக சடலங்களை புதைத்திருக்க முடியாது என கருதும் போலீசார், இதற்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என்றும் விசாரித்து வருகின்றனர்.

வியாழன், 16 மே, 2019

1330 திருக்குறள்களை சாக்பீசில் எழுதி மாணவர் சாதனை...




1330 திருக்குறள்களை சாக்பீசில் எழுதி மாணவர் சாதனை...

     
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செம்மனூர் பகுதியை சேர்ந்தவர்  சந்தோஷ்குமார்.

அவர் அங்குள்ள  அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அவர் தற்போது பன்னிரண்டாம் வகுப்பிற்கு செல்ல உள்ளார்.

புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை  சந்தோஷ்குமாருக்கு சிறுவயது முதலே இருந்து வந்துள்ளது.

ஆனால் வறுமை காரணமாக அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்த நிலையில், தமிழ் மீது கொண்ட பற்றால் சந்தோஷ்குமார் சாக்பீஸில் 1330 திருக்குறள்களை எழுதி சாதனை படைத்துள்ளார்.

இதற்காக அவர் 1463 சாக்பீஸை பயன்படுத்தி உள்ளார்.

திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்புகளை வண்ண சாக்பீஸிலும் குறள்களை வெள்ளை சாக்பீஸிலும் சந்தோஷ்குமார் எழுதியுள்ளார்.

முன்பக்கம் குறளின் முதல் வரியும் பின்புறம் அடுத்த வரியும் வரும்படி அவர்  எழுதியுள்ளார். 

இதற்கு ஒரு நாளைக்கு 20 மணிநேரம் செலவிட்டதாகவும்,  8 நாட்களில் இதை முடித்ததாகவும் மாணவர் சந்தோஷ் தெரிவித்தார்.

அவரது முயற்சியை பாராட்டி சாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சதீஷ்குமாரை பலர் பாராட்டினர் வருகின்றனர்.

புதன், 15 மே, 2019

HelpLine Number Description

HelpLine Number Description
+91 9540161344. Air ambulance
100 Police
101 Fire
102 Ambulance
103 Traffic Police
1031 Anti Corruption Helpline
1033 Emergency Relief Centre on National Highways
104 State level helpline for Health
104 Hospital On Wheels
1066 Anti-poison
1070 Central Relief Commissioner for Natural Calamities
1070 Relief Commissioners of Central/State/Union territory
1071 Air Accident
1072 Train accident
1073 Road Accident
1073 Traffic Help Line
1077 Control room of District Collector/Magistrate
108 Disaster management
1090 Anti terror Helpline/Alert All India
1091 Women in Distress
1092 Earth-quake Help line service
1096 Natural disaster control room
1097 AIDS helpline
1097 AIDS help line service
1098 Child abuse hotline
1099 Central Accident and Trauma Services
1099 Catastrophe & Trauma service
112 General emergency Department of Telecommunications (DoT)
112 All in one Emergency Number
1251 LIC Of India
12727 Public Grievance Cell Telecom Circle HQs
1320, 131, 1321 Indian Railway General Enquiry
1322 For any theft or harassment, nuisance caused due to smoking or alcohol consumption on train
1322 Indian Railway Security Helpline
133 Railway Helpline for Arrival/Departure and Reservation services
139 Railway Enquiry
1407 Indian Airlines
1414 Air India ( Confirmation / Cancellation Enquiry)(Called Party)
1500 for any queries related to landline telephone, ISDN etc. Also accessible from CellOne, Excel & Tarang phones
1512 Railway
1551 Kisan Call Center
155200 Military Police Help Line
155233 Indian Oil Help Line
155255 / 1800 4254732 Insurance Regulatory and Development Authority (IRDA)
155313 Water Board
155333 Electricity Complaints
1580 Trunk booking
1581 Trunk assistance
1582 STD complaints
1583 National Directory Enquiry (NDQ) Service
1586 International trunk booking
1587 International trunk enquiry
1588 International Trunk delay information
1589 Telex complaints
1600 Free Phone Enquiry
1602 India Telephone Card Enquiry
166 / 1660-69 Billing complaint center
1671-73 Billing Complaint Center
1717 Weather Enquiry
1718 Maritime Search and Rescue control room of coastal guard
1800-11-0031 Drug de-addiction
1800-11-4000 National Consumer Helpline
1800-11-7800 MyGov Toll Free Number for MannKiBaat for ideas and suggestions
1800-111-139 IRCTC Help Line
1800-180-1104 National Health Helpline
1800-180-5522 Anti Ragging-Emails at helpline@antiragging.in
1800-3000-780 Mann Ki Baat on the toll-free number
181 Domestic abuse and sexual violence-Women's Helpline
1904 Indian Army Help Line
1906 LPG emergency helpline number
1910 Blood bank Information
1911 Dial a doctor
1913 Tourist Office (Govt.of India)
1916 Water Supply Complain
1918 Leased Circuits Fault Booking
1919 Eye Donation
1919 Eye bank information service
1947 Aadhar Card-UIDAI (Unique idenditification authority of india),1800-180-1947
1950 Election Commission of India
1951 Change number announcement (Hindi)
1952 Changed number announcement (English)
1953 Changed number announcement (Regional language)
1954 Changed number announcement (in case of shift)
1957 Sancharnet Internet Help desk service
1958 Leased Circuit Fault Booking (WTR)
1961 Aaykar Sampark Kendra (ASK)
197 Directory enquiry service
198 Telephone Complaint Booking

செவ்வாய், 14 மே, 2019

இரண்டு கத்திகள்... கொடூரத்தின் உச்சம்!! அழகான மனைவியை 59 முறை குத்தி சிதைத்த கணவன்...


இரண்டு கத்திகள்... கொடூரத்தின் உச்சம்!! அழகான மனைவியை 59 முறை குத்தி சிதைத்த கணவன்...


தனது மனைவி சந்தோஷமாக இருந்ததால் 2 கத்திகளால் 59 முறை, கொடூரமாக குத்திக் கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் அதிகபட்ச தண்டனையாக 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த லாரன்ஸ் பிராண்ட், இந்தியப் பெண்ணான 41 வயது ஏஞ்சலா மிட்டலை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கருதது வேறுபாடுகள் முற்றிய நிலையில் தொடர்ந்து குடும்பத்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு இருவருக்கும் சண்டை சச்சரவு முற்றிய நிலையில் லாரன்ஸ் ஏஞ்சலாவை சரமாரியாக, இரண்டுக் கத்திகளால் குத்தியதில் ஏஞ்செலா உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கணவர் லாரன்ஸ் கோபத்தில் ஒருகத்தியால் குத்தியதில், அந்தக் கத்தியே உடைந்து விட சமையலறையில் இருந்து இன்னொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் மீண்டும் குத்தியது தெரியவந்தது.

கொடூரமாக கொல்லப்பட்ட அந்தப் பெண், அவ்வளவு ஆவேசத்துடன் கொடூரமாகவே குத்தியும் அந்தப் பெண் உயிருக்குப் போராடியதும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மிகவும் கொடூரமான கொலை என்று தெரிவித்து ஆயுள் தண்டனை விதித்தார். மனைவி மிகவும் சந்தேகப்பட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக லாரன்ஸ் கூறியுள்ளார். பிரிட்டனில் ஆயுள் தண்டனை என்பது 16 ஆண்டுகள் 8 மாதங்கள் ஆகும் என கூறியுள்ளனர்.

வியாழன், 9 மே, 2019

தடையை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த பி.டி கத்திரி... வேடிக்கை பார்க்கிறதா மத்திய அரசு?!


தடையை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த பி.டி கத்திரி... வேடிக்கை பார்க்கிறதா மத்திய அரசு?!

இந்தியாவிற்குள் பி.டி கத்திரிக்காயைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் பன்னாட்டு நிறுவனங்களால் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டாலும், 2010-ம் ஆண்டு இந்தியாவில் பி.டி கத்திரிக்காய் பயிரிடத் தடை விதிக்கப்பட்டது. இன்று வரை அந்தத் தடை இருந்தாலும், 9 வருடங்கள் கடந்து இன்று இந்திய வயல்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது விவசாய ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரியானா மாநிலத்தின் ஃபாடேஹாபாத் மாவட்டத்தில் ஒரு விவசாயி சட்ட விரோதமாக
பி.டி கத்திரிக்காய் பயிரிட்டுத் தொடர்ச்சியாக விற்பனை செய்து வருவதையும் அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த விவசாயி பயிரிட்ட கத்திரிக்காய்களைப் பரிசோதனைக்காக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்விலும் பி.டி கத்திரிக்காய் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராகப் போராடும் குதார்தி கேட்டி அபியான் (Kudarti Kheti Abhiyan) என்ற அரியானா அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர் ராஜிந்தர் சவுத்ரி இது குறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, "இந்த விவகாரம் குறித்து மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee) மற்றும் மாநில வேளாண்துறையிடம் ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாநில அரசு உறுதி அளித்துள்ளது. இந்த பி.டி கத்திரிக்காய் ஒரு இடைத்தரகர் மூலம் அந்த விவசாயிக்கு விற்கப்பட்டுள்ளது. சில பெரிய நிறுவனங்களின் நடவடிக்கைகளால் அப்பாவி விவசாயிகள் தடை செய்யப்பட்ட இந்த கத்திரிக்காயை பயிரிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த விவசாயி மரபணு மாற்று விதைகள் விற்பனை நிறுவன இடைத்தரகரிடம் ஒரு நாற்று 8 ரூபாய் என்ற விதத்தில் 3,000 நாற்றுகளை வாங்கி இரண்டு இடங்களில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டதாகத் தெரிவித்தார். அந்த விவசாயி நிலத்தில் உள்ள பயிர்கள் அழிக்கப்பட வேண்டும். இதுபோல் வேறு விவசாயிகளிடம் தடை செய்யப்பட்ட பி.டி கத்திரிக்காய்களின் நாற்று விற்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்" என்கிறார்.

இதுபற்றி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வத்திடம் பேசினோம். "2010-ம் வருடம் தடை வாங்கினோம். 9-வருடங்கள் கழித்து நிலத்தில் இருக்கிறது. இதில் இருந்து மத்திய அரசு எந்த அளவிற்கு விழிப்புடன் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இக்குழு மான்சான்டோவுக்கு ஏஜென்ட்டாகத் தான் இருக்கிறது. இப்போது குற்றம் சாட்டியிருப்பது வெறும் வாய்ச்சொல் அல்ல, ஆதாரபூர்வமான அறிக்கையால் சொல்லியிருக்கிறோம். இதற்கு மேலும் மௌனம் காப்பது தவற்றுக்குத் துணை போவதாகத் தானே அர்த்தம். இது தவிர, இதற்கு முன்னர் சோளம், சோயா போன்ற பயிர்களுக்கும் புகார் கொடுத்திருக்கிறோம். அப்போது நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது கத்திரி உள்ளே நுழைந்திருக்காது. இனி மத்திய அரசும் சுற்றுச்சூழல் அமைச்சகமும் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். முன்னர் முதல்வர்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மரபணு விதைகளை எதிர்த்து நின்றனர். அதனால் தமிழகம் உட்பட 14 மாநிலங்கள் பி.டி கத்தரியைத் தடை செய்தது. 2010-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துக் கேட்பு நடத்தி தடை விதித்தார். ஆனால், இன்று பின் வாசல் வழியாகக் கள்ளத்தனமாக நுழைந்திருக்கிறார்கள். இப்போது பயன்படுத்தியிருக்கும் விதை மான்சான்டோவின் விதை தான் என்றாலும், கேள்வி எழுப்பினால் இல்லை என அந்த நிறுவனம், விலகிக் கொள்ளும். பி.டி கத்தரியைப் பரவலாக விதைக்க ஆரம்பித்து விட்டால் பாரம்பர்ய கத்திரி இனங்கள் இல்லாமல் போகும். மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதை மனிதனால் தடுக்கவா முடியும். முழுமையாகத் தடுக்க கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு இந்தியா முழுவதும் கத்திரிக்காய் உற்பத்தியை நிறுத்த வேண்டும். நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் உடனடியாக தலையிட வேண்டிய விஷயம்." என்றார்

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து பேசும் போது, "2000-ம் ஆண்டில் பல இடங்களில் சட்ட விரோதமாகப் பயிரிடப்பட்டு வந்தது. அதைக் காரணம் காட்டித் தான், 2002-ம் ஆண்டு பருத்தி அனுமதி கொடுக்கப்பட்டது. அதேபோலத் தான் இப்போது நடத்தப் பார்க்கிறார்கள். பி.டி கத்திரி வந்து விட்டதே இனி எப்படி தடுக்க முடியும் என அனுமதி கொடுக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் தடை செய்யப்பட்ட விதைகள் 9 வருடங்களுக்குப் பின்னர், இப்போது நிலத்தில் இருக்கிறது என்றால், முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டியது, மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு தான். ஆனால், இன்று நிரூபித்து, புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, மான்சான்டோவிற்கு ஆதரவான நிலையை அக்குழு எடுத்திருப்பதாகவே காட்டுகிறது. நேரடியாக இந்தியாவிற்குள் கொண்டு வராமல் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் அனுமதி கொடுக்கப்பட்டு இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதனை கார்ப்பரேட்டுகளின் செல்லப்பிள்ளையான இப்போதைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது. இதற்கு அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. விவசாயிகள் கத்திரி விதைகள் வாங்கும் போது கம்பெனி பெயரைப் பார்த்து வாங்க வேண்டும். இந்தியாவில் ஒரு விவசாயி பஸ் ஸ்டாண்டில் இருந்து மரபணு மாற்றுக் கத்திரி நாற்றுகளை வாங்கி விதைத்து விட முடிகிறது. அனுமதி இல்லாத ஒரு பொருளை மார்க்கெட்டில் உலவ விட்டிருக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த பி.டி கத்திரி நாற்று கம்பெனியிடம் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் துறை, மத்திய சுகாதார அமைச்சகம், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு ஆகிய துறைகளில் ஒன்று கூட இதுவரை வாய் திறக்கவில்லை. இது உள்ளே நுழைந்து விட்டால் அடுத்ததாக அனைத்து மரபணு மாற்று உணவுப் பொருட்கள் எல்லாமே உள்ளே நுழையும் வாய்ப்புகள் அதிகம். இதனை மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

இதுபற்றி பேசிய மரபணு மாற்று உணவு எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகை ரோகிணி பேசும் போது, "பி.டி கத்திரிக்காய்கள் சட்ட விரோதமாகப் பயிரிடப்படுவதற்கு அரசு நிறுவனங்களின் மெத்தனம் தான் காரணம். 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியை சந்தித்து பி.டி கத்திரி பற்றி எடுத்துச் சொன்னோம். நீண்ட நேர உரையாடலைக் கேட்ட பின்னர், அவர் ஏற்றுக் கொண்டு பி.டி கத்திரி எதிர்ப்போம் என அறிவித்தார். அதன் பின்னர் முதல்வராக வந்த ஜெயலலிதாவும் பி.டி கத்திரியை எதிர்த்தார். இந்தியாவில் தமிழகம் உட்பட 14 மாநிலங்கள் எதிர்த்தன. 9 வருடங்களுக்கு முன்னர் தடை வாங்கியிருந்தோம். இப்போது பின் வாசல் வழியாக பி.டி கத்திரி உள்ளே நுழைந்திருக்கிறது. இதனை உடனடியாக தடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளோம். இது ஒரு நாட்டின் உணவு சம்பந்தப்பட்ட விஷயம். இதனைத் தடுக்க வேண்டிய மத்திய அரசோ வேடிக்கை பார்க்கிறது வேதனையளிக்கிறது" என்றார்.

தடை செய்யப்பட்ட பி.டி கத்தரிக்காய் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். பி.டி கத்தரிக்காய் எங்கெல்லாம் பயிரிடப்படுகிறது என முழு வீச்சில் சோதனை நடத்திக் கண்டுபிடிக்க வேண்டும் என்று விவசாய நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோல் 2017-ம் ஆண்டு மரபணு மாற்றப்பட்ட சோயா, குஜராத்தில் பயிரிடப்படுவதாக மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தெற்கு ஆசியாவிலேயே வங்கதேசத்தில் முதன்முதலாக பி.டி கத்திரி அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது தோல்வியடைந்திருக்கிறது என யு.பி.ஐ.என்.ஜி அமைப்பு பி.டி விவசாயிகளைச் சந்தித்து நடத்திய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முடிவு இனி மத்திய அரசின் கைகளில் தான் இருக்கிறது.


*வீரசக்கதேவி, கோட்டைக் கருப்பசாமி திருவிழாவும், 144 தடை உத்தரவும்… ஒற்றுமை வருமா..? பண்பாட்டின் அடையாளமாம் வழிபாட்டு உரிமை காக்கப்படுமா..? கோவில் விழாக்குழுவில் உறுப்பினராக இருந்தவர்கள் யார், யார்..? எத்தனை கிராமங்கள்..?*

*வீரசக்கதேவி, கோட்டைக் கருப்பசாமி திருவிழாவும், 144 தடை உத்தரவும்… ஒற்றுமை வருமா..? பண்பாட்டின் அடையாளமாம் வழிபாட்டு உரிமை காக்கப்படுமா..? கோவில் விழாக்குழுவில் உறுப்பினராக இருந்தவர்கள் யார், யார்..? எத்தனை கிராமங்கள்..?*

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஜக்கம்மா கோவில் திருவிழா நடைபெறும்,
ஜக்கம்மா கோவில் திருவிழாவில் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சுற்றியுள்ள 96 கிராம மக்கள் இணைந்து வழிபாடுகளில் பங்கேற்று வந்தனர். ஆதி காலத்தில் உருவமற்ற ஜக்கம்மா கோவிலில், ஒரு தங்க முக்காலி மீது வட்டமான மூங்கில் கூடைப்பெட்டி அமைத்து, அதனையே மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். குத்துக்கல் மீது இரண்டு வாள் வைத்தும் வழிபாடு செய்துள்ளனர்.
கம்பளத்தார் மக்களின் குலதெய்வமான ஜக்கம்மாளுக்கு, எலுமிச்சம்பழம், மல்லிகைப் பூ, சர்க்கரைப் பொங்கல் அர்பணித்து, உருமி என்ற தேவதந்துவி இசை முழங்கி வழிபாடு செய்வது வழக்கம். கம்பு, கொழுக்கட்டை, தினைமாவு, புட்டு, துள்ளுமாவு, பழங்கள் படையலாக வைக்கப்படுகிறது. கரும்பு தோரணம், பழக்கூடை எடுத்தல் வழிபாட்டு முறைகளில் ஒன்றாக இருக்கிறது.
வேட்டைக்குச் செல்வது, போருக்குச் செல்வது, நல்லது, கெட்டது அனைத்தையும் அறிந்து கொள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் ஜக்கம்மாவிடம் வணங்கி முடிவுகளை எடுப்பார் என்று கட்டபொம்மு கும்மிப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
கம்பளத்து நாயக்கர், தொட்டி நாயக்கர் சமுதாய மக்கள் குடியிருக்கும் அனைத்துக் கிராமங்களிலும் ஜக்கம்மா கோவில் கட்டி, குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். தேவராட்டம், சேர்வையாட்டம், கும்மி, கட்டபொம்மன் நாடகம், வானவேடிக்கை, விருந்து இவைகள் ஜக்கம்மா திருவிழாவின் சிறப்பாக உள்ளது.
காளியின் அவதாரமாக ஜக்கம்மா கருதப்பட்டாலும், அசைவ உணவுகள், படையல்கள், விலங்குகள் பலியிடுவது கோவிலுக்கு உள்ளே அனுமதி கிடையாது. ஜக்கம்மாவின் வேறு பெயர்களாக, சகதேவி, சக்கம்மா, போயசம்மா, எல்லம்மா, ஜக்கும்மா, போலேரம்மா, பொம்மம்மா என்று அழைக்கின்றனர்.
பாஞ்சாலங்குறிச்சி ஜக்கம்மா கோவிலில் கம்பளத்து நாயக்கர் மக்கள் வழிபாட்டு முறைகளைச் செய்தாலும், அனைத்து சாதி மக்களும் ஜக்கம்மா தேவி அருள் பெற வழிபாட்டில் பங்கேற்கின்றனர். இது பாஞ்சாலங்குறிச்சியின் தனிச்சிறப்பு. கட்டபொம்மனின் படைத்தளபதிகளாக இருந்த ஊமைத்துரை, தானாபதி பிள்ளை, வெள்ளையத்தேவன், சுந்தரலிங்கம் உள்ளிட்டோரும் ஜக்கம்மா கோவிலில் வழிபாடு செய்து வந்துள்ளனர். வீரன் சுந்தரலிங்கம் வாரிசுகள் தங்களது கோட்டை கருப்பசாமியை வழிபாடு செய்யும் முன்பு, அம்மனுக்கு பூஜை செய்து விட்டு, அதன் பின்புதான் கொடை விழா நடத்தி வருகின்றனர்.
1958 ஆம் ஆண்டு வரை ஜக்கம்மா கோவில் பழைய இடத்தில்தான் இருந்துள்ளது. ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த ராமலிங்க அய்யர் முயற்சியால் புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஜக்கம்மா கோவில் கட்டுவதற்கு, கவர்னகிரி, வெள்ளாரம், ஆவரங்காடு, லட்சுமிபுரம், ஓட்டப்பிடாரம், குலசேகரநல்லூர், முப்புலிவெட்டி, கீழமுடிமன் உள்ளிட்ட பலகிராமங்களைச் சேர்ந்தவர்கள் மாட்டு வண்டிகள் மூலமாக ஓடை மண் அடித்தல், கற்களைக் கொண்டு வந்த சேர்த்தல் ஆகிய பணிகளைச் செய்துள்ளார்கள். மாட்டுவண்டி இல்லாதவர்கள் கொத்தனார், சித்தாள் வேலையை வீட்டுக்கு ஒருவர், இரண்டு நாட்கள் என்று வேலை செய்துள்ளனர். அப்பகுதியில் பணம் படைத்தவர்கள் நன்கொடை கொடுத்துள்ளனர். புதிதாக கட்டப்பட்ட ஜக்கம்மா கோவிலுக்கு முன்புறம் கவர்னகிரி சுற்று வட்டார மக்கள் வணங்கும் கோட்டை கருப்பசாமி பீடம் உள்ளது. இரண்டு கோவிலுக்கும் ஒரே நாளில் விழா நடைபெற்று வருவது சிறப்புக்குரியது. கட்டபொம்மன் வழிவந்த கம்பளத்து நாயக்கர் மக்கள் விக்கிரபாண்டி சாத்தா, செண்பககூத்து அய்யனார், செம்புக்குட்டி அய்யனார் உள்ளிட்ட காவல் தெய்வங்களை வணங்குகின்றனர். வீரன் சுந்தரலிங்கம் வழிவந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் கருப்பணசாமியை காவல் தெய்வமாக வணங்குகின்றனர். ஜக்கம்மா கோவில் கட்டி முடிக்கப்பட்டு, 1957 ஆம் ஆண்டு முதல் கோட்டைமேடு திருவிழா என்று சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக விழா நடைபெற்று வந்தது.
கடந்த 1974 ஆம் ஆண்டு, தமிழக அரசால் புதியதாக பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோடை கட்டப்பட்டு, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது கோட்டைக்கு சுற்றுச்சுவர் கட்டியவர்கள், சற்று தொலைவில் இருந்த கோட்டைக் கருப்பசாமி பீடத்தை வெளியில் அமைத்துக் கட்டி விட்டனர். கோவில் விழா நடக்கும் நாளில் கட்டபொம்மன் அரசு விழாவையும் அறிவித்து விட்டார்கள்.
ஆனாலும், ஜக்கம்மா கோவில் திருவிழா நடக்கும் போதுதான் கோட்டைக் கருப்பசாமி திருவிழாவும் நடக்கும், கோட்டையின் உள்ளே இருந்துதான் தண்ணீர் வசதிகள் செய்வார்கள், ஜக்கம்மா கோவிலில் இருந்துதான் கோட்டைக் கருப்பசாமி கோவிலுக்கு மின்சாரம் எடுப்பார்கள். வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருந்தாலும் ஒற்றுமையுடன் தான் விழா நடத்தி வந்தார்கள்.
முதலில் ஜக்கம்மா கோவிலுக்கு, திருசெந்தூர் முருகன் ஆலயத்தில் இருந்து ஜோதி எடுத்து வந்தார்கள், பின்னர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாரில் இருந்து ஜோதி வந்தது. பாளையங்கோட்டை அருகே கட்டபொம்மன் தப்பிச்சென்ற இடம் என்று அங்கிருந்தும் ஜோதி கொண்டு வந்தார்கள், கமுதி கோட்டைப் பகுதியில் இருந்தும் ஜோதி கொண்டு வரத்தொடங்கினர். நாளடைவில் கம்பளத்து நாயக்கர் மக்கள் வசிக்கும் விருதுநகர், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கிராமங்களில் இருந்தும் ஜோதி எடுத்து வரப்பட்டது. ஜோதி கொண்டு வரும் போது, ஒவ்வொருவர் கையிலும் வாள், அரிவாள், வேல்கம்பு உள்ளிட்ட ஆயுதங்களையும் வீரத்தின் அடையாளமாக கொண்டு வந்தனர். ஜோதி தொடக்க விழா, ஜோதி ஒப்படைக்கும் விழா என்று அரசு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்கள், அரசியல் தலைவர்களும் பங்கேற்று இளைஞர்களை உற்சாகப்படுத்தினர்.
வீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளான தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களும் தங்கள் பகுதிகளில் இருந்து கோட்டைக் கருப்பசாமி ஜோதி கொண்டு வரத்தொடங்கினர். இதனால் தேவையற்ற பதற்றங்கள் உருவாகத் தொடங்கியது.
ஆனாலும், ஜக்கம்மா கோவில் திருவிழா, வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு விழா, கோட்டைக் கருப்பசாமி கோவில் கொடைவிழா, கட்டக்கருப்பணன் சுந்தரலிங்கம் நினைவு விழா ஆகிய விழாக்கள் எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் சித்திரை மாத கடைசி வெள்ளி, சனி இரண்டு நாட்கள் நடைபெற்று வந்தது.
பகலில் வழிபாடு, இரவில் கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் சார்பில் கட்டபொம்மன் நாடகம், சிறுவர்கள் கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம், இன்னிசைக்கச்சேரி போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் சார்பில் நையாண்டி மேளம், கரகாட்டம் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சியும், இருதரப்பும் இணைந்து காலையில் ரேக்ளா மாட்டுவண்டிப் பந்தயமும் நடைபெற்று வந்தது.
வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம் குமாரப்பட்டி என்ற ஊரிலும் அதே நாட்களில் திருவிழா நடைபெற்று வருகிறது.
ஜக்கம்மா கோவிலுக்கு மட்டும் கட்டபொம்மு கும்மிப்பாடல்கள், நாடகங்கள் மூலம் வரலாறு இருக்கிறது, மற்றவர்கள் ஆவணப்படுத்தவில்லை.
கடந்த 2012 மே 11, 12 ஆகிய நாட்களில் வன்முறை நடைபெற்றதால் இரண்டு விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்து விட்டது காவல்துறை. 56வது ஆண்டு வழிபாட்டு விழாவில் தொடங்கிய பதற்றம் தற்போது 2019 ஆம் ஆண்டு 63வது ஆண்டு விழாவிலும் தொடர்கிறது.
2012 ஆம் ஆண்டு கோட்டைக் கருப்பசாமி விழாவை தடை செய்யும் முயற்சிகள் நடந்தபோது, கவர்னகிரி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தூர், கவர்னகிரி கிராமத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.மோகன் ஆகியோரின் முயற்சியால் விழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க வந்த கோட்டைக் கருப்பசாமி பக்தர்கள் மீது கற்கள், டியூப் லைட்டுகளை சிலர் கோட்டைக்கு உள்ளே இருந்து வீசியதால் வன்முறை வெடித்தது. எஸ்.பி.ராஜேந்திரன் தலைமையில் தடியடி நடத்தப்பட்டது. பூட்ஸ் காலுடன் கோட்டைக் கருப்பசாமி கோவில் பீடம் முன்பு, ஜக்கம்மா கோவில் உள்ளேயும் காவலர்கள் சென்றது சர்ச்சையை உண்டாக்கியது. அன்றைய வன்முறையில் எட்டு காவலர்கள், இருபது பக்தர்கள் காயமடைந்தனர்.
அதற்கு முந்தைய 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்டபொம்மன் ஜோதி ஊர்வலத்தில் அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. மோதல் சம்பவத்தில் ஏ.டி.எஸ்.பி.மார்ஸ்டன் லியோ, மற்றும் காவலர்கள்  படுகாயமடைந்தனர். விளாத்திகுளம் டி.எஸ்.பி. லயோலா இக்னேஷியஸுக்கு இடுப்பு முதுகு உள்ளிட்ட 3 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.
2012 ஆம் ஆண்டு நடந்த மோதலில் ஏ.டி.எஸ்.பி. சாமிதுரைவேலு, டி.எஸ்.பி. ராஜ கோபால் உள்பட 8 காவலர்கள் காயமடைந்தனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  இதில் காவல்துறையினரின் வாகனம், அரசுப் பேருந்து உள்பட இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள்   கடும் சேதமடைந்தன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து காவல்துறையின் சார்பில் விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் கொண்டு வரக் கூடாது என தடை போடப்பட்டது.
2012 ஆம் ஆண்டில் முதல்நாள் கோட்டை கருப்பசாமி கோவில் விழாவும், இரண்டாம் நாள் வீரசக்கதேவி ஆலய விழாவும் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு முதல் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 வரை கோட்டை கருப்பசாமிக்கு விழாவும், அதன் பிறகு வெள்ளி மதியம் முதல் சனிக்கிழமை இரவு வரை வீரசக்கதேவி ஆலய விழாவும் நடத்திட அனுமதி கொடுக்கப்பட்டது.
அதாவது இரண்டு நாட்கள் நடைபெற்ற கோட்டைக் கருப்பசாமி கோவில் திருவிழா நிகழ்ச்சிகள் இரண்டு மணி நேரம் மட்டுமே நடத்த முடியும்.
இந்தக் கட்டுப்பாடுகளால் பக்தர்களின் வழிபாட்டு முறைகள் பாதிக்கப்படுகிறது, தங்களின் வரலாற்று பண்பாட்டு அடையாளத்தை அழிக்கும் முயற்சி இதுவென்று இரண்டு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இந்தக் காலகட்டங்களில் மாண்புமிகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மாண்புமிகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரின் கைகளில் தான் காவல்துறை அமைச்சகம் இருந்தது. பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவோ, வருவாய்துறை மூலம் அனுமதி கொடுக்கவோ மூவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசியல் செல்வாக்கு காரணமாக வீரசக்கதேவி ஆலய வழிபாட்டிற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இரண்டு நாட்கள் விழா நடத்த அனுமதி கிடைத்துள்ளது.
இப்போது ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த கிராமத்தைச் சேர்ந்த, வாரிசுகளில் ஒருவரான மோகன் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். மோகனின் தந்தை குண்டன் பெருமாள் கோட்டைக் கருப்பசாமி, மாவீரன் சுந்தரலிங்கம் விழாக்களை ஒருங்கிணைந்து நடத்தியவர்.
கட்டபொம்மன் கோட்டையைக் கட்டிக்கொடுத்து, வீரன் சுந்தரலிங்கம் நினைவு மண்டபம் அமைத்து, குடியிருப்பு வசதிகளை செய்து கொடுத்த திமுக சார்பில் சண்முகையா வேட்பாளராக போட்டியிடுகிறார். சண்முகையாவின் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசப்பாண்டியன், கட்டபொம்மன் விழா மாட்டுவண்டிப் பந்தயம், வீரன் சுந்தரலிங்கம் விழாக்களுக்கு உதவிகள் செய்தவர்.
கட்டபொம்மன் கோட்டை கட்டப்படும்போது தளபதி சுந்தரலிங்கத்தின் பெயர் இரட்டடிப்பு செய்யப்படுவதாக அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு எதிராக எப்போதும்வென்றானில் கருப்புக் கொடி போராட்டம் நடத்திய, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் வால்போஸ்டர் ஒட்டிய சுந்தரராஜ் இன்றைய அமமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இருக்கின்றார் என்று ஒருதரப்பினர் அவரை அணுகி வருகின்றனர்.
தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளராகவும், வேட்பாளராகவும் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.மோகன் இருக்கிறார் என்று இன்னொரு தரப்பினர் அவரை அணுகி வருகின்றனர்.
ஆண்டாள் தெய்வத்திற்கு குரல் கொடுத்த, இந்துக்களின் பாதுகாவலர்களாக இருக்கும் கட்சி, வீரசக்கதேவிக்கும், கோட்டைக்கருப்பசாமிக்கும் குரல் கொடுக்கவில்லை.
இருதரப்பிலும் சிலர் அரசியல் செய்யவும் தொடங்கி விட்டனர், தேர்தலுக்கும், கோவில் நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இல்லை என்பதை தெரிந்து, வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது.
மீண்டும் கோட்டைமேடு திருவிழா, ஒற்றுமையுடன், பண்பாட்டு அடையாளங்களை நிலைநிறுத்தும் விதமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
சண்டை நடந்த இடங்களில் எல்லாம் வழிபாட்டு உரிமைகளைப் பறித்து, விழாக்களை தடை செய்வது என்றால், அதிக வன்முறைகள் நடக்கின்ற தேர்தலைத் தான் முதலில் தடை செய்ய வேண்டும்.
கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ள அரசுதான், தேர்தல் திருவிழாக்களில் ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் கூட்டத்தை சேர்க்கிறார்கள்.
எனவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இருதரப்பையும் கலந்து பேசி ஒற்றுமையாக விழாவை நடத்த வேண்டும் என்பது ஓட்டப்பிடாரம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தடை செய்யப்பட்டுள்ள கோட்டைக் கருப்பசாமி திருவிழா கவர்னகிரி, ஆவரங்காடு மக்களின் விழா மட்டுமல்ல, எத்தனை கிராமங்கள் இணைந்து விழாக் குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பதற்கு பழைய சான்றுகள் எடுத்துக்காட்டாக உள்ளன.
*கட்டக் கருப்பணன் சுந்தரலிங்கம் நினைவு விழாவும், கோட்டைக் கருப்பசாமி திருவிழாவும் பாஞ்சாலங்குறிச்சி விழா கமிட்டியார்*
கவர்னகிரி வி.சுப்பையா தலைவர்
*கோட்டைக் கருப்பசாமி விழாக் குழுவினர்*
எம்.சுப்பையா, நெல்லை மாவட்ட தெய்வேந்திர மகாஜன சங்கத் தலைவர்,
எல்.சீனி, ஓட்டப்பிடாரம் தாலுகா தலைவர்,
டாக்டர்.ஏ.பி.ராஜன், ஓட்டப்பிடாரம் தாலுகா செயலாளர்,
ஆ.ஜார்ஜ், ஓட்டப்பிடாரம் தாலுகா பொருளாளர்,
எம்.முத்தையா, ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,
பல்லாகுளம் உடையார், விளாத்திகுளம்  தாலுகா தலைவர்,
டி.வி.சுப்பையா, தத்தனேரி,
க.மாடசாமி, கல்வி இலாகா, தெற்கு ஆவரங்காடு,
எஸ்.முத்தையா, சங்கத் தலைவர், வடக்கு ஆவரங்காடு,
வன்னியன், கச்சேரி தளவாய்புரம்,
நிறைகுளத்தான், வெள்ளாரம்,
ஓ.தங்கராஜ், ஓட்டப்பிடாரம்,
எஸ்.பொன்னுசாமி, மேட்டூர்,
கே.எம்.சுப்பையா, முப்புலிபட்டி,
சண்முகம், மீனாட்சிபுரம்,
முத்தையா, நியூ ஆர்பர், கக்கரம்பட்டி,
எஸ்.அய்யாதுரை, டிரைவர், கொம்பாடி,
ஏ.செல்வராஜ், கொம்பாடி தளவாய்புரம்,
எம்.ஜெயபால், கல்லத்திக்கிணறு,
காசி, முறம்பன்,
எஸ்.முத்தையா, சுப்பிரமணியபுரம்,
மணிமுத்து, சிந்தலைக்கட்டை,
ஐயம்பெருமாள், பெரியநத்தம்,
கருப்பசாமி, வேலாயுதபுரம்,
செல்லக்குட்டி, சந்திரகிரி,
கே.சண்முகவேல், குமாரபுரம்,
ஆர்.வேல்சாமி, தலைவர், நியூ ஆர்பர், தூத்துக்குடி,
பி.முத்துச்சாமி, மேல வேலாயுதபுரம்,
டி.அருணாச்சலம், தலைவர், ஆர்பர்,
வீரபாண்டியன், தலைவர், பிரதர்ஸ் யூனியன், தூத்துக்குடி,
ராமசாமி, பி.எஸ்.சி. பி.டி., வேலாயுதபுரம்,
குருசாமி, சப் போஸ்ட் மாஸ்டர், வீரபாண்டியபுரம்,
எஸ்.முத்துகருப்பன், புரோக்கர், புதியம்புத்தூர்,
மிக்கேல், சுபேதார், சங்கரராஜபுரம்,
க.பொன்னுசாமி, ஓசநூத்து,
வெள்ளையன், குலசேகரநல்லூர்,
வேல்சாமி, ஆரைக்குளம்,
பழனிச்சாமி, குப்பனாபுரம்,
செல்லையன், கீழமங்கலம்,
காசி, மேலமங்கலம்,
டி.எம்.கருப்பசாமி, எச்.எம்., சில்லாங்குளம்,
வெங்கடாசலபதி, கப்பிகுளம்,
சுப்பையா, கைலாசபுரம்,
பேச்சிமுத்து, நாகம்பட்டி,
நாராயணன், பசுவந்தனை,
அய்யாத்துரை, ஆலிபச்சேரி,
கைலாசம், சொட்டம்பட்டி,
முத்தையன், கோயிந்தம்பட்டி,
இ.முனியசாமி, வண்டானம்,
ஆறுமுகம், கோட்டூர்,
கந்தன், அச்சங்குளம்,
எஸ்.பேச்சிமுத்து, எக்ஸ். வைஸ் பிரசிடெண்ட், முடிவைத்தானேந்தல்,
யேசேப்பு, எக்ஸ். பிரசிடெண்ட், ஜம்புலிங்கபுரம்,
பலவேசம், வடக்கு சிலுக்கன்பட்டி,
அய்யாப்பிள்ளை, கீழ தட்டாப்பாறை,
ப.ஆறுமுகம், புதுப்பச்சேரி,
சுடலைமாடன், செவல்குளம்,
மாரியப்பன், லக்கம்மாதேவி,
எம்.சுப்பிரமணியன், கன்னக்கட்டை,
காசி, கே.துரைச்சாமிபுரம்,
வேலு, சால்நாயக்கன்பட்டி,
செல்லையன், குமரெட்டியாபுரம்,
ராயப்பன், கீழமுடிமன்,
தி.சுடலைமுத்து, எப்போதும்வென்றான்,
சிவன் அனைத்தான், காட்டுநாயக்கன்பட்டி,
வெள்ளைச்சாமி, கீழசெய்தலை,
செல்லையா, கொல்லம்பரும்பு,
சுந்தரம், வேடநத்தம்,
செல்லச்சாமி, தெற்கு சக்கம்மாள்புரம்,
பொ.மூக்கன், தெற்கு காலாங்கரை,
மாடசாமி, வடக்கு காலாங்கரை,
துரைப்பாண்டி, எக்ஸ்.தலைவர், அய்யனடைப்பு,
கிருஷ்ணன், சம்படி,
சிலுவைமுத்து, சிவகளை, ஆவரங்காடு,
ஏ.செல்லையா, பொட்டல்,
எஸ்.சக்திவேல், பராக்கிரமபாண்டி,
ராமையா, மேலப்பாறைப்பட்டி,
முத்துச்சாமி, தலைவர், மில்க் யூனியன், கரிசல்குளம்,
வெள்ளைச்சாமி, மும்மலைப்பட்டி,
பூவையா, முடுக்கலாங்குளம்,
எஸ்.செல்லையா, எஸ்.ஆர்.ஓ., வெண்டர், பரும்புக்கோட்டை,
எஸ்.சுப்பையா, போஸ்ட் மாஸ்டர், கல்லூரணி,
பொன்மாடன், பாண்டவர்மங்கலம்,
கணபதி, ரோச் மேட்ச் பாக்டரி, கோவில்பட்டி,
ராசேந்திரன், ஆலம்பட்டி,
முருகாண்டி, திட்டங்குளம்,
இருளாண்டி, கருங்காலிபட்டி,
வெள்ளைச்சாமி, மேல ஈரால்,
ஜெயராஜ், ஆசிரியர், வாலம்பட்டி,
அய்யாதுரை, கரையடியூர்,
வெள்ளத்துரை, ஆறுமுகமங்கலம்,
பன்னீர், குரியன்பச்சேரி,
ஆண்டி, மூலக்கரை,
அந்தோணி, குருப்பங்குளம்,
மங்கப்பெருமாள், குப்பாபுரம்,
ஆழ்வார், காட்டுப்பச்சேரி,
சேட்டு, ராஜபதி,
தனுஸ்கோடி, முத்தையாபுரம்,
மேகலிங்கம், மேட்டுப்பட்டி,
சுப்பையா, பூசனூர்,
சண்முகம், கீழ அரசரடி தலைவர், துப்பாஸ்பட்டி,
ராமசாமி, அனந்தமாடன்பச்சேரி,
கருப்பசாமி, சாமிநத்தம்,
இஸ்ரவேல், ஆசிரியர், வாகைக்குளம்,
ஆ.முத்தையா, வத்தம்பட்டி,
மாசிலாமணி, பேரூரணி,
டி.கே.நல்லபெருமாள், போஸ்டல், சூப்பிரண்டெண்ட், திம்மராஜபுரம்,
சுப்பையா, போஸ்டல் இன்ஸ்பெக்டர், பொட்டலூரணி,

2019 மே 10, 11, வெள்ளி, சனிக்கிழமைகளில் விழா நடத்த வேண்டும். 144 தடை உத்தரவு போட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறை. அரசு நினைத்தால் திருவிழாவை சிறப்பாக நடத்த முடியும். மக்களும் ஒற்றுமையுணர்வுடன் ஒத்துழைக்க வேண்டும்.
கடந்த ஏழு ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட *வீரசக்கதேவி ஆலயத்திருவிழாவும், கோவில் கொடை நடத்த தடை செய்யப்பட்டுள்ள கோட்டைக் கருப்பசாமி திருவிழாவும் சிறப்பாக நடைபெற வேண்டும்.*

#தேர்தல்அரசியல் #வாழ்க_ஜனநாயகம்..!