*வீரசக்கதேவி, கோட்டைக் கருப்பசாமி திருவிழாவும், 144 தடை உத்தரவும்… ஒற்றுமை வருமா..? பண்பாட்டின் அடையாளமாம் வழிபாட்டு உரிமை காக்கப்படுமா..? கோவில் விழாக்குழுவில் உறுப்பினராக இருந்தவர்கள் யார், யார்..? எத்தனை கிராமங்கள்..?*
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஜக்கம்மா கோவில் திருவிழா நடைபெறும்,
ஜக்கம்மா கோவில் திருவிழாவில் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சுற்றியுள்ள 96 கிராம மக்கள் இணைந்து வழிபாடுகளில் பங்கேற்று வந்தனர். ஆதி காலத்தில் உருவமற்ற ஜக்கம்மா கோவிலில், ஒரு தங்க முக்காலி மீது வட்டமான மூங்கில் கூடைப்பெட்டி அமைத்து, அதனையே மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். குத்துக்கல் மீது இரண்டு வாள் வைத்தும் வழிபாடு செய்துள்ளனர்.
கம்பளத்தார் மக்களின் குலதெய்வமான ஜக்கம்மாளுக்கு, எலுமிச்சம்பழம், மல்லிகைப் பூ, சர்க்கரைப் பொங்கல் அர்பணித்து, உருமி என்ற தேவதந்துவி இசை முழங்கி வழிபாடு செய்வது வழக்கம். கம்பு, கொழுக்கட்டை, தினைமாவு, புட்டு, துள்ளுமாவு, பழங்கள் படையலாக வைக்கப்படுகிறது. கரும்பு தோரணம், பழக்கூடை எடுத்தல் வழிபாட்டு முறைகளில் ஒன்றாக இருக்கிறது.
வேட்டைக்குச் செல்வது, போருக்குச் செல்வது, நல்லது, கெட்டது அனைத்தையும் அறிந்து கொள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் ஜக்கம்மாவிடம் வணங்கி முடிவுகளை எடுப்பார் என்று கட்டபொம்மு கும்மிப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
கம்பளத்து நாயக்கர், தொட்டி நாயக்கர் சமுதாய மக்கள் குடியிருக்கும் அனைத்துக் கிராமங்களிலும் ஜக்கம்மா கோவில் கட்டி, குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். தேவராட்டம், சேர்வையாட்டம், கும்மி, கட்டபொம்மன் நாடகம், வானவேடிக்கை, விருந்து இவைகள் ஜக்கம்மா திருவிழாவின் சிறப்பாக உள்ளது.
காளியின் அவதாரமாக ஜக்கம்மா கருதப்பட்டாலும், அசைவ உணவுகள், படையல்கள், விலங்குகள் பலியிடுவது கோவிலுக்கு உள்ளே அனுமதி கிடையாது. ஜக்கம்மாவின் வேறு பெயர்களாக, சகதேவி, சக்கம்மா, போயசம்மா, எல்லம்மா, ஜக்கும்மா, போலேரம்மா, பொம்மம்மா என்று அழைக்கின்றனர்.
பாஞ்சாலங்குறிச்சி ஜக்கம்மா கோவிலில் கம்பளத்து நாயக்கர் மக்கள் வழிபாட்டு முறைகளைச் செய்தாலும், அனைத்து சாதி மக்களும் ஜக்கம்மா தேவி அருள் பெற வழிபாட்டில் பங்கேற்கின்றனர். இது பாஞ்சாலங்குறிச்சியின் தனிச்சிறப்பு. கட்டபொம்மனின் படைத்தளபதிகளாக இருந்த ஊமைத்துரை, தானாபதி பிள்ளை, வெள்ளையத்தேவன், சுந்தரலிங்கம் உள்ளிட்டோரும் ஜக்கம்மா கோவிலில் வழிபாடு செய்து வந்துள்ளனர். வீரன் சுந்தரலிங்கம் வாரிசுகள் தங்களது கோட்டை கருப்பசாமியை வழிபாடு செய்யும் முன்பு, அம்மனுக்கு பூஜை செய்து விட்டு, அதன் பின்புதான் கொடை விழா நடத்தி வருகின்றனர்.
1958 ஆம் ஆண்டு வரை ஜக்கம்மா கோவில் பழைய இடத்தில்தான் இருந்துள்ளது. ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த ராமலிங்க அய்யர் முயற்சியால் புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஜக்கம்மா கோவில் கட்டுவதற்கு, கவர்னகிரி, வெள்ளாரம், ஆவரங்காடு, லட்சுமிபுரம், ஓட்டப்பிடாரம், குலசேகரநல்லூர், முப்புலிவெட்டி, கீழமுடிமன் உள்ளிட்ட பலகிராமங்களைச் சேர்ந்தவர்கள் மாட்டு வண்டிகள் மூலமாக ஓடை மண் அடித்தல், கற்களைக் கொண்டு வந்த சேர்த்தல் ஆகிய பணிகளைச் செய்துள்ளார்கள். மாட்டுவண்டி இல்லாதவர்கள் கொத்தனார், சித்தாள் வேலையை வீட்டுக்கு ஒருவர், இரண்டு நாட்கள் என்று வேலை செய்துள்ளனர். அப்பகுதியில் பணம் படைத்தவர்கள் நன்கொடை கொடுத்துள்ளனர். புதிதாக கட்டப்பட்ட ஜக்கம்மா கோவிலுக்கு முன்புறம் கவர்னகிரி சுற்று வட்டார மக்கள் வணங்கும் கோட்டை கருப்பசாமி பீடம் உள்ளது. இரண்டு கோவிலுக்கும் ஒரே நாளில் விழா நடைபெற்று வருவது சிறப்புக்குரியது. கட்டபொம்மன் வழிவந்த கம்பளத்து நாயக்கர் மக்கள் விக்கிரபாண்டி சாத்தா, செண்பககூத்து அய்யனார், செம்புக்குட்டி அய்யனார் உள்ளிட்ட காவல் தெய்வங்களை வணங்குகின்றனர். வீரன் சுந்தரலிங்கம் வழிவந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் கருப்பணசாமியை காவல் தெய்வமாக வணங்குகின்றனர். ஜக்கம்மா கோவில் கட்டி முடிக்கப்பட்டு, 1957 ஆம் ஆண்டு முதல் கோட்டைமேடு திருவிழா என்று சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக விழா நடைபெற்று வந்தது.
கடந்த 1974 ஆம் ஆண்டு, தமிழக அரசால் புதியதாக பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோடை கட்டப்பட்டு, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது கோட்டைக்கு சுற்றுச்சுவர் கட்டியவர்கள், சற்று தொலைவில் இருந்த கோட்டைக் கருப்பசாமி பீடத்தை வெளியில் அமைத்துக் கட்டி விட்டனர். கோவில் விழா நடக்கும் நாளில் கட்டபொம்மன் அரசு விழாவையும் அறிவித்து விட்டார்கள்.
ஆனாலும், ஜக்கம்மா கோவில் திருவிழா நடக்கும் போதுதான் கோட்டைக் கருப்பசாமி திருவிழாவும் நடக்கும், கோட்டையின் உள்ளே இருந்துதான் தண்ணீர் வசதிகள் செய்வார்கள், ஜக்கம்மா கோவிலில் இருந்துதான் கோட்டைக் கருப்பசாமி கோவிலுக்கு மின்சாரம் எடுப்பார்கள். வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருந்தாலும் ஒற்றுமையுடன் தான் விழா நடத்தி வந்தார்கள்.
முதலில் ஜக்கம்மா கோவிலுக்கு, திருசெந்தூர் முருகன் ஆலயத்தில் இருந்து ஜோதி எடுத்து வந்தார்கள், பின்னர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாரில் இருந்து ஜோதி வந்தது. பாளையங்கோட்டை அருகே கட்டபொம்மன் தப்பிச்சென்ற இடம் என்று அங்கிருந்தும் ஜோதி கொண்டு வந்தார்கள், கமுதி கோட்டைப் பகுதியில் இருந்தும் ஜோதி கொண்டு வரத்தொடங்கினர். நாளடைவில் கம்பளத்து நாயக்கர் மக்கள் வசிக்கும் விருதுநகர், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கிராமங்களில் இருந்தும் ஜோதி எடுத்து வரப்பட்டது. ஜோதி கொண்டு வரும் போது, ஒவ்வொருவர் கையிலும் வாள், அரிவாள், வேல்கம்பு உள்ளிட்ட ஆயுதங்களையும் வீரத்தின் அடையாளமாக கொண்டு வந்தனர். ஜோதி தொடக்க விழா, ஜோதி ஒப்படைக்கும் விழா என்று அரசு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்கள், அரசியல் தலைவர்களும் பங்கேற்று இளைஞர்களை உற்சாகப்படுத்தினர்.
வீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளான தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களும் தங்கள் பகுதிகளில் இருந்து கோட்டைக் கருப்பசாமி ஜோதி கொண்டு வரத்தொடங்கினர். இதனால் தேவையற்ற பதற்றங்கள் உருவாகத் தொடங்கியது.
ஆனாலும், ஜக்கம்மா கோவில் திருவிழா, வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு விழா, கோட்டைக் கருப்பசாமி கோவில் கொடைவிழா, கட்டக்கருப்பணன் சுந்தரலிங்கம் நினைவு விழா ஆகிய விழாக்கள் எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் சித்திரை மாத கடைசி வெள்ளி, சனி இரண்டு நாட்கள் நடைபெற்று வந்தது.
பகலில் வழிபாடு, இரவில் கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் சார்பில் கட்டபொம்மன் நாடகம், சிறுவர்கள் கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம், இன்னிசைக்கச்சேரி போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் சார்பில் நையாண்டி மேளம், கரகாட்டம் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சியும், இருதரப்பும் இணைந்து காலையில் ரேக்ளா மாட்டுவண்டிப் பந்தயமும் நடைபெற்று வந்தது.
வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம் குமாரப்பட்டி என்ற ஊரிலும் அதே நாட்களில் திருவிழா நடைபெற்று வருகிறது.
ஜக்கம்மா கோவிலுக்கு மட்டும் கட்டபொம்மு கும்மிப்பாடல்கள், நாடகங்கள் மூலம் வரலாறு இருக்கிறது, மற்றவர்கள் ஆவணப்படுத்தவில்லை.
கடந்த 2012 மே 11, 12 ஆகிய நாட்களில் வன்முறை நடைபெற்றதால் இரண்டு விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்து விட்டது காவல்துறை. 56வது ஆண்டு வழிபாட்டு விழாவில் தொடங்கிய பதற்றம் தற்போது 2019 ஆம் ஆண்டு 63வது ஆண்டு விழாவிலும் தொடர்கிறது.
2012 ஆம் ஆண்டு கோட்டைக் கருப்பசாமி விழாவை தடை செய்யும் முயற்சிகள் நடந்தபோது, கவர்னகிரி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தூர், கவர்னகிரி கிராமத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.மோகன் ஆகியோரின் முயற்சியால் விழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க வந்த கோட்டைக் கருப்பசாமி பக்தர்கள் மீது கற்கள், டியூப் லைட்டுகளை சிலர் கோட்டைக்கு உள்ளே இருந்து வீசியதால் வன்முறை வெடித்தது. எஸ்.பி.ராஜேந்திரன் தலைமையில் தடியடி நடத்தப்பட்டது. பூட்ஸ் காலுடன் கோட்டைக் கருப்பசாமி கோவில் பீடம் முன்பு, ஜக்கம்மா கோவில் உள்ளேயும் காவலர்கள் சென்றது சர்ச்சையை உண்டாக்கியது. அன்றைய வன்முறையில் எட்டு காவலர்கள், இருபது பக்தர்கள் காயமடைந்தனர்.
அதற்கு முந்தைய 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்டபொம்மன் ஜோதி ஊர்வலத்தில் அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. மோதல் சம்பவத்தில் ஏ.டி.எஸ்.பி.மார்ஸ்டன் லியோ, மற்றும் காவலர்கள் படுகாயமடைந்தனர். விளாத்திகுளம் டி.எஸ்.பி. லயோலா இக்னேஷியஸுக்கு இடுப்பு முதுகு உள்ளிட்ட 3 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.
2012 ஆம் ஆண்டு நடந்த மோதலில் ஏ.டி.எஸ்.பி. சாமிதுரைவேலு, டி.எஸ்.பி. ராஜ கோபால் உள்பட 8 காவலர்கள் காயமடைந்தனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் காவல்துறையினரின் வாகனம், அரசுப் பேருந்து உள்பட இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடும் சேதமடைந்தன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து காவல்துறையின் சார்பில் விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் கொண்டு வரக் கூடாது என தடை போடப்பட்டது.
2012 ஆம் ஆண்டில் முதல்நாள் கோட்டை கருப்பசாமி கோவில் விழாவும், இரண்டாம் நாள் வீரசக்கதேவி ஆலய விழாவும் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு முதல் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 வரை கோட்டை கருப்பசாமிக்கு விழாவும், அதன் பிறகு வெள்ளி மதியம் முதல் சனிக்கிழமை இரவு வரை வீரசக்கதேவி ஆலய விழாவும் நடத்திட அனுமதி கொடுக்கப்பட்டது.
அதாவது இரண்டு நாட்கள் நடைபெற்ற கோட்டைக் கருப்பசாமி கோவில் திருவிழா நிகழ்ச்சிகள் இரண்டு மணி நேரம் மட்டுமே நடத்த முடியும்.
இந்தக் கட்டுப்பாடுகளால் பக்தர்களின் வழிபாட்டு முறைகள் பாதிக்கப்படுகிறது, தங்களின் வரலாற்று பண்பாட்டு அடையாளத்தை அழிக்கும் முயற்சி இதுவென்று இரண்டு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இந்தக் காலகட்டங்களில் மாண்புமிகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மாண்புமிகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரின் கைகளில் தான் காவல்துறை அமைச்சகம் இருந்தது. பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவோ, வருவாய்துறை மூலம் அனுமதி கொடுக்கவோ மூவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசியல் செல்வாக்கு காரணமாக வீரசக்கதேவி ஆலய வழிபாட்டிற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இரண்டு நாட்கள் விழா நடத்த அனுமதி கிடைத்துள்ளது.
இப்போது ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த கிராமத்தைச் சேர்ந்த, வாரிசுகளில் ஒருவரான மோகன் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். மோகனின் தந்தை குண்டன் பெருமாள் கோட்டைக் கருப்பசாமி, மாவீரன் சுந்தரலிங்கம் விழாக்களை ஒருங்கிணைந்து நடத்தியவர்.
கட்டபொம்மன் கோட்டையைக் கட்டிக்கொடுத்து, வீரன் சுந்தரலிங்கம் நினைவு மண்டபம் அமைத்து, குடியிருப்பு வசதிகளை செய்து கொடுத்த திமுக சார்பில் சண்முகையா வேட்பாளராக போட்டியிடுகிறார். சண்முகையாவின் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசப்பாண்டியன், கட்டபொம்மன் விழா மாட்டுவண்டிப் பந்தயம், வீரன் சுந்தரலிங்கம் விழாக்களுக்கு உதவிகள் செய்தவர்.
கட்டபொம்மன் கோட்டை கட்டப்படும்போது தளபதி சுந்தரலிங்கத்தின் பெயர் இரட்டடிப்பு செய்யப்படுவதாக அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு எதிராக எப்போதும்வென்றானில் கருப்புக் கொடி போராட்டம் நடத்திய, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் வால்போஸ்டர் ஒட்டிய சுந்தரராஜ் இன்றைய அமமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இருக்கின்றார் என்று ஒருதரப்பினர் அவரை அணுகி வருகின்றனர்.
தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளராகவும், வேட்பாளராகவும் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.மோகன் இருக்கிறார் என்று இன்னொரு தரப்பினர் அவரை அணுகி வருகின்றனர்.
ஆண்டாள் தெய்வத்திற்கு குரல் கொடுத்த, இந்துக்களின் பாதுகாவலர்களாக இருக்கும் கட்சி, வீரசக்கதேவிக்கும், கோட்டைக்கருப்பசாமிக்கும் குரல் கொடுக்கவில்லை.
இருதரப்பிலும் சிலர் அரசியல் செய்யவும் தொடங்கி விட்டனர், தேர்தலுக்கும், கோவில் நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இல்லை என்பதை தெரிந்து, வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது.
மீண்டும் கோட்டைமேடு திருவிழா, ஒற்றுமையுடன், பண்பாட்டு அடையாளங்களை நிலைநிறுத்தும் விதமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
சண்டை நடந்த இடங்களில் எல்லாம் வழிபாட்டு உரிமைகளைப் பறித்து, விழாக்களை தடை செய்வது என்றால், அதிக வன்முறைகள் நடக்கின்ற தேர்தலைத் தான் முதலில் தடை செய்ய வேண்டும்.
கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ள அரசுதான், தேர்தல் திருவிழாக்களில் ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் கூட்டத்தை சேர்க்கிறார்கள்.
எனவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இருதரப்பையும் கலந்து பேசி ஒற்றுமையாக விழாவை நடத்த வேண்டும் என்பது ஓட்டப்பிடாரம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தடை செய்யப்பட்டுள்ள கோட்டைக் கருப்பசாமி திருவிழா கவர்னகிரி, ஆவரங்காடு மக்களின் விழா மட்டுமல்ல, எத்தனை கிராமங்கள் இணைந்து விழாக் குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பதற்கு பழைய சான்றுகள் எடுத்துக்காட்டாக உள்ளன.
*கட்டக் கருப்பணன் சுந்தரலிங்கம் நினைவு விழாவும், கோட்டைக் கருப்பசாமி திருவிழாவும் பாஞ்சாலங்குறிச்சி விழா கமிட்டியார்*
கவர்னகிரி வி.சுப்பையா தலைவர்
*கோட்டைக் கருப்பசாமி விழாக் குழுவினர்*
எம்.சுப்பையா, நெல்லை மாவட்ட தெய்வேந்திர மகாஜன சங்கத் தலைவர்,
எல்.சீனி, ஓட்டப்பிடாரம் தாலுகா தலைவர்,
டாக்டர்.ஏ.பி.ராஜன், ஓட்டப்பிடாரம் தாலுகா செயலாளர்,
ஆ.ஜார்ஜ், ஓட்டப்பிடாரம் தாலுகா பொருளாளர்,
எம்.முத்தையா, ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,
பல்லாகுளம் உடையார், விளாத்திகுளம் தாலுகா தலைவர்,
டி.வி.சுப்பையா, தத்தனேரி,
க.மாடசாமி, கல்வி இலாகா, தெற்கு ஆவரங்காடு,
எஸ்.முத்தையா, சங்கத் தலைவர், வடக்கு ஆவரங்காடு,
வன்னியன், கச்சேரி தளவாய்புரம்,
நிறைகுளத்தான், வெள்ளாரம்,
ஓ.தங்கராஜ், ஓட்டப்பிடாரம்,
எஸ்.பொன்னுசாமி, மேட்டூர்,
கே.எம்.சுப்பையா, முப்புலிபட்டி,
சண்முகம், மீனாட்சிபுரம்,
முத்தையா, நியூ ஆர்பர், கக்கரம்பட்டி,
எஸ்.அய்யாதுரை, டிரைவர், கொம்பாடி,
ஏ.செல்வராஜ், கொம்பாடி தளவாய்புரம்,
எம்.ஜெயபால், கல்லத்திக்கிணறு,
காசி, முறம்பன்,
எஸ்.முத்தையா, சுப்பிரமணியபுரம்,
மணிமுத்து, சிந்தலைக்கட்டை,
ஐயம்பெருமாள், பெரியநத்தம்,
கருப்பசாமி, வேலாயுதபுரம்,
செல்லக்குட்டி, சந்திரகிரி,
கே.சண்முகவேல், குமாரபுரம்,
ஆர்.வேல்சாமி, தலைவர், நியூ ஆர்பர், தூத்துக்குடி,
பி.முத்துச்சாமி, மேல வேலாயுதபுரம்,
டி.அருணாச்சலம், தலைவர், ஆர்பர்,
வீரபாண்டியன், தலைவர், பிரதர்ஸ் யூனியன், தூத்துக்குடி,
ராமசாமி, பி.எஸ்.சி. பி.டி., வேலாயுதபுரம்,
குருசாமி, சப் போஸ்ட் மாஸ்டர், வீரபாண்டியபுரம்,
எஸ்.முத்துகருப்பன், புரோக்கர், புதியம்புத்தூர்,
மிக்கேல், சுபேதார், சங்கரராஜபுரம்,
க.பொன்னுசாமி, ஓசநூத்து,
வெள்ளையன், குலசேகரநல்லூர்,
வேல்சாமி, ஆரைக்குளம்,
பழனிச்சாமி, குப்பனாபுரம்,
செல்லையன், கீழமங்கலம்,
காசி, மேலமங்கலம்,
டி.எம்.கருப்பசாமி, எச்.எம்., சில்லாங்குளம்,
வெங்கடாசலபதி, கப்பிகுளம்,
சுப்பையா, கைலாசபுரம்,
பேச்சிமுத்து, நாகம்பட்டி,
நாராயணன், பசுவந்தனை,
அய்யாத்துரை, ஆலிபச்சேரி,
கைலாசம், சொட்டம்பட்டி,
முத்தையன், கோயிந்தம்பட்டி,
இ.முனியசாமி, வண்டானம்,
ஆறுமுகம், கோட்டூர்,
கந்தன், அச்சங்குளம்,
எஸ்.பேச்சிமுத்து, எக்ஸ். வைஸ் பிரசிடெண்ட், முடிவைத்தானேந்தல்,
யேசேப்பு, எக்ஸ். பிரசிடெண்ட், ஜம்புலிங்கபுரம்,
பலவேசம், வடக்கு சிலுக்கன்பட்டி,
அய்யாப்பிள்ளை, கீழ தட்டாப்பாறை,
ப.ஆறுமுகம், புதுப்பச்சேரி,
சுடலைமாடன், செவல்குளம்,
மாரியப்பன், லக்கம்மாதேவி,
எம்.சுப்பிரமணியன், கன்னக்கட்டை,
காசி, கே.துரைச்சாமிபுரம்,
வேலு, சால்நாயக்கன்பட்டி,
செல்லையன், குமரெட்டியாபுரம்,
ராயப்பன், கீழமுடிமன்,
தி.சுடலைமுத்து, எப்போதும்வென்றான்,
சிவன் அனைத்தான், காட்டுநாயக்கன்பட்டி,
வெள்ளைச்சாமி, கீழசெய்தலை,
செல்லையா, கொல்லம்பரும்பு,
சுந்தரம், வேடநத்தம்,
செல்லச்சாமி, தெற்கு சக்கம்மாள்புரம்,
பொ.மூக்கன், தெற்கு காலாங்கரை,
மாடசாமி, வடக்கு காலாங்கரை,
துரைப்பாண்டி, எக்ஸ்.தலைவர், அய்யனடைப்பு,
கிருஷ்ணன், சம்படி,
சிலுவைமுத்து, சிவகளை, ஆவரங்காடு,
ஏ.செல்லையா, பொட்டல்,
எஸ்.சக்திவேல், பராக்கிரமபாண்டி,
ராமையா, மேலப்பாறைப்பட்டி,
முத்துச்சாமி, தலைவர், மில்க் யூனியன், கரிசல்குளம்,
வெள்ளைச்சாமி, மும்மலைப்பட்டி,
பூவையா, முடுக்கலாங்குளம்,
எஸ்.செல்லையா, எஸ்.ஆர்.ஓ., வெண்டர், பரும்புக்கோட்டை,
எஸ்.சுப்பையா, போஸ்ட் மாஸ்டர், கல்லூரணி,
பொன்மாடன், பாண்டவர்மங்கலம்,
கணபதி, ரோச் மேட்ச் பாக்டரி, கோவில்பட்டி,
ராசேந்திரன், ஆலம்பட்டி,
முருகாண்டி, திட்டங்குளம்,
இருளாண்டி, கருங்காலிபட்டி,
வெள்ளைச்சாமி, மேல ஈரால்,
ஜெயராஜ், ஆசிரியர், வாலம்பட்டி,
அய்யாதுரை, கரையடியூர்,
வெள்ளத்துரை, ஆறுமுகமங்கலம்,
பன்னீர், குரியன்பச்சேரி,
ஆண்டி, மூலக்கரை,
அந்தோணி, குருப்பங்குளம்,
மங்கப்பெருமாள், குப்பாபுரம்,
ஆழ்வார், காட்டுப்பச்சேரி,
சேட்டு, ராஜபதி,
தனுஸ்கோடி, முத்தையாபுரம்,
மேகலிங்கம், மேட்டுப்பட்டி,
சுப்பையா, பூசனூர்,
சண்முகம், கீழ அரசரடி தலைவர், துப்பாஸ்பட்டி,
ராமசாமி, அனந்தமாடன்பச்சேரி,
கருப்பசாமி, சாமிநத்தம்,
இஸ்ரவேல், ஆசிரியர், வாகைக்குளம்,
ஆ.முத்தையா, வத்தம்பட்டி,
மாசிலாமணி, பேரூரணி,
டி.கே.நல்லபெருமாள், போஸ்டல், சூப்பிரண்டெண்ட், திம்மராஜபுரம்,
சுப்பையா, போஸ்டல் இன்ஸ்பெக்டர், பொட்டலூரணி,
2019 மே 10, 11, வெள்ளி, சனிக்கிழமைகளில் விழா நடத்த வேண்டும். 144 தடை உத்தரவு போட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறை. அரசு நினைத்தால் திருவிழாவை சிறப்பாக நடத்த முடியும். மக்களும் ஒற்றுமையுணர்வுடன் ஒத்துழைக்க வேண்டும்.
கடந்த ஏழு ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட *வீரசக்கதேவி ஆலயத்திருவிழாவும், கோவில் கொடை நடத்த தடை செய்யப்பட்டுள்ள கோட்டைக் கருப்பசாமி திருவிழாவும் சிறப்பாக நடைபெற வேண்டும்.*
#தேர்தல்அரசியல் #வாழ்க_ஜனநாயகம்..!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக