புதன், 26 பிப்ரவரி, 2020

நண்பர்களுடன் வெறிதீர செய்துவிட்டு இரவில் வீடு திரும்பிய மனைவி: கணவன் பரபரப்பு வாக்குமூலம்!

                                      

நண்பர்களுடன் வெறிதீர செய்துவிட்டு இரவில் வீடு திரும்பிய மனைவி: கணவன் பரபரப்பு வாக்குமூலம்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரில் உள்ள வர்ஷினி நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் குமாரவேல். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஆறு வயதில் வர்ஷினி, நான்கு வயதில் ராகுல் என பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி பூட்டிக்கிடந்த வீட்டுக்குள்ளிருந்து வீட்டு வாசற்படி வழியே ரத்தம் வழிந்து வெளியே ஓடி உள்ளது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பண்ருட்டி டிஎஸ்பி நாகராஜன் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விரைந்து வந்து பூட்டியிருந்த வீட்டை திறந்து  பார்த்தபோது குமாரவேல் மனைவி ராஜேஸ்வரி தலை நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கணவர் குழந்தைகள் யாரும் அங்கு இல்லை. இதையடுத்து நெய்வேலி இந்திராநகர் வசிக்கும் ராஜேஸ்வரியின் தாயார் சுசீலா அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.
விசாரணையில் காடாம்புலியூர்  சேர்ந்த வாடகை கார் ஓட்டும் டிரைவர் குமரவேலுக்கும், ராஜேஸ்வரிக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். சில ஆண்டுகள் காடாம்புலியூரில் வசித்து வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி வர்ஷா நகரில் குடியேறினர் என தெரிய வந்தது.


அந்த வீட்டில் கிடந்த செல்போனை கண்டெடுத்த போலீசார் அந்த போனிலிருந்து எண்களை கண்காணித்து தலைமறைவான ராஜேஸ்வரி கணவர் குமரவேலுவை காடாம்புலியூர் பகுதியில் தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

குமாரவேல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என் மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்கள் இருவருக்கும் சமீபகாலமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் என்னிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றாள். அங்கிருந்து எனக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதன் பிறகு சமாதானமாக போனாம். ராஜேஸ்வரி விருப்பபடி பண்ருட்டி வர்ஷா நகரில் குடியேறினோம். இங்கு வந்த பிறகும் என் மனைவி திருந்தவில்லை.

என் மனைவி செல்போனில் டிக்டாக் மூலம் பாடியும் நடித்தும் மிமிக்கிரி செய்து வெளியிட்டு அதன்மூலம் பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தார். அதை நான் பலமுறை கண்டித்தேன். அவள் கேட்கவில்லை. காதலர் தினத்தன்று நான் கார் சவாரி சென்று விட்டேன். அதை சாதகமாக்கிக் கொண்டு ஆண் நண்பர்களுடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். இது பற்றி அவரிடம் எச்சரித்தேன். நம் குழந்தைகள் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்ற தவறான பழக்கத்தை நிறுத்துமாறு கூறினேன்.

இதனால் இருவருக்கும் வாய் சண்டை ஏற்பட்டது. அதன் பின் ராஜேஸ்வரி தூங்கி விட்டார். கோபம் தணியாமல் இருந்த நான், இரவு பதினொரு மணிக்கு மேல் பக்கத்தில் இருந்த குழவிக் கல்லை எடுத்து ராஜேஸ்வரி தலையில் போட்டுவிட்டு, அதோடு அங்கிருந்து இரும்பு ராடை எடுத்து தலையில் தாக்கினேன். ராஜேஸ்வரி அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் இறந்து போனார்.

அதையடுத்து  என் குழந்தைகளை அழைத்துக்கொண்டு காடாம்புலியூர் சென்றுவிட்டேன் போலீசார் என்னை காடாம்புலியூர் இல்   தேடி வந்து கைது செய்தனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதே நேரத்தில் போலீசார் தரப்பில் கேட்டபோது, குமரவேல் - ராஜேஸ்வரி காதலித்து திருமணம் கொண்ட பிறகும் குமரவேலு திருநங்கை ஒருவரிடம் பழக்கம் இருந்துள்ளது. இது விஷயமாக ராஜேஸ்வரி குமரவேலிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவரும் விவாகரத்து வரை சென்று மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். ராஜேஸ்வரி டிக் டாக் மூலம் மிமிக்ரி செய்து வெளியிட்டு இருப்பது உண்மை. எது எப்படி இருந்தாலும், இரண்டு சிறு குழந்தைகள் இப்போது தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தின் சிதைவு கண்முன்னே நடந்துள்ளது. ராஜேஸ்வரியின் தாயார் சுசிலாவின் புகாரின்பேரில் குமரவேல் கைது செய்து சிறைக்கு அனுப்பி அனுப்பியுள்ளோம் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

ட்ரம்ப் - மோடி சந்திப்பில் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் என்ன?


    ட்ரம்ப் - மோடி சந்திப்பில் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் என்ன?


ட்ரம்ப் -மோடி சந்திப்பு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தொற்றிக்கொண்ட பரபரப்பு அதிகார வட்டாரங்களில் சூடுபிடித்துக்கொண்டே இருக்கிறது.

 வர்த்தகர்கள், பாதுகாப்பு நிபுணர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், புலனாய்வு அதிகாரிகள் என அனைவரும் திங்கட்கிழமை இந்தியாவுக்கு வரும் ட்ரம்புக்காக தொடர்ச்சியாக உழைக்கிறார்கள்.

பல எதிர்பார்ப்புகளை விதைத்திருக்கும் இந்த சந்திப்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் என்ன?

*1. சந்திப்புக்கான தயார்நிலை*

ட்ரம்ப் மோடி சந்திப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே, நூற்றுக்கணக்கான ரகசிய கண்காணிப்பு முகமைகள் இந்தியாவின் புலனாய்வுத்துறையுடனும், சிறப்புப் பாதுகாப்புக் குழுவுடனும் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகிறார்கள். ட்ரம்ப பயன்படுத்தவிருக்கும் சிறப்பு போயிங் 747-உடன், குண்டுவெடிப்புகளில் பாதிக்காத காரும் அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

*2. பொருளாதார பங்கீட்டு ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்பு*

1980-இல் இருந்து இந்திய அமெரிக்க உறவுக்கான அடிப்படை விஷயம் என்பது பொருளாதார உடன்பாடுகள்தான். சமீப காலங்களில், அமெரிக்காவின் கட்டுப்பாடுகளும் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவும் அந்த பொருளாதார உடன்படிக்கைகள் தொடர்வதற்கு வாய்ப்புகள் அளிக்குமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

பலரும் எதிர்பார்த்த limited Free Trade Agreement என்னும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திடப்போவதில்லை. சுலபமான முதலீடுகள் மற்றும் தொழிற்துறை சார்ந்தவர்களின் இடப்பெயர்வு குறித்த விஷயங்களில் ஒப்பந்தம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

*3. பாதுகாப்பு*

2000-ஆம் ஆண்டில் இருந்து, இந்தியாவுக்கான பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு அமெரிக்காவாக இருந்து வருகிறது. 10 பில்லியன் டாலர் மதிப்புக்கொண்ட மொத்தம் 8 முதல் 10 பிரதான ஆயுதம் பெறும் முடிவுகளில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.

F21 காம்பேட் வகை ஜெட் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா வலியுறுத்தும். இந்தியாவின் பாரம்பரியமான பாதுகாப்பு முறையுடன் தொழில்நுட்ப ரீதியாக ஒன்றுபடுவதில் அமெரிக்காவுக்கு சிக்கல் நிலவுகிறது.
எனினும் இரு தரப்பும் தங்களுக்கு இடையிலான கடந்தகால கசப்புகளை புறந்தள்ளிவிட்டு, ஆசியக் கண்டத்தில் எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பான உறவுமுறைக்கு அடித்தளமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*4. எல்லைப் பிரச்சனைகளில் இரு நாடுகளின் நிலைப்பாடு*

காஷ்மீர் விஷயத்தில் தலையிட முயன்ற அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்கனவே பெரிய நோ சொல்லிவிட்டது. பாகிஸ்தானுடன் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சனை என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. ஆஃப்கானிஸ்தான் மீதான குறிப்பிடத்தக்க ஆற்றலையும் அமெரிக்கா செலுத்தத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் - இந்தியா இடையிலான பிரச்சனையில் எடுக்கக்கூடிய சில முடிவுகளும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

*5. இந்திய - அமெரிக்க உறவு : சாமான்யருக்கான பலன்கள்...*

மெக்சிக்க நாட்ட்டினருக்குப் பிறகு, அமெரிக்காவின் இருக்கும் அடுத்த வெளிநாட்டு இனக்குழு இந்தியர்கள்தான். பொருளாதாரம், அரசு, கல்வி, அரசியல் என அனைத்து தளங்களிலும் இயங்குபவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்தியர்கள் அமெரிக்காவின் 1 சதவிகித மக்கள்தொகையாகவே இருந்தாலும், அவர்களின் அரசியல் சார்ந்த, வாக்கரசியல் சார்ந்த பங்களிப்பு முக்கியமானது. விசா முதல் தேசியவாதம் வரை புதிய சவால்களைச் சந்தித்துவரும் இந்திய வம்சாவளி மக்கள், இந்த சந்திப்பை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

#தேசம்காப்போம்பேரணி - #தீர்மானங்கள்


#தேசம்காப்போம்பேரணி - #தீர்மானங்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 22.02 .2020இன்று திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் பேரணியின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுக!

மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக இருப்பதோடு இந்திய மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகளில் முஸ்லிம்களைத் தவிர மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க இந்த திருத்தச் சட்டம் வகை செய்கிறது. இந்த அப்பட்டமான பாகுபாட்டை ஐநா மனித உரிமை கவுன்சிலின் செயலாளரும், ஐநா பொதுச் செயலாளரும், ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்களும் கண்டித்துள்ளனர். இந்த திருத்தச் சட்டம் மதரீதியான வன்முறைக்கு வழிகோலும் என்று பல்வேறு நாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது இதை ஆதரித்து வாக்களித்த பல அரசியல் கட்சிகள் இப்போது தமது நிலையை மாற்றிக் கொண்டு இதை எதிர்க்கின்றன. பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், ஏஜிபி ஆகியவை இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால் அந்தக் கட்சிகள் யாவும் இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றன.

பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், தெலுங்கானா முதலான மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இந்த சட்டத்தை எதிர்த்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும்பாலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் ’இந்த சட்டத்தைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை’ என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இது மக்களாட்சியின்மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. மக்களின் உணர்வுகளையும், மாநில அரசுகளின் தீர்மானங்களையும் மதித்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த மாபெரும் பேரணியின்மூலம் வலியுறுத்துகிறது.

2. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடவடிக்கையைக் கைவிடுக!

2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலத்தில் இந்தியா முழுவதும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்காக 3941 கோடி ரூபாயை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒதுக்கி இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பைப் போன்றது அல்ல. இது குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் 2003 இன் கீழ் நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளும்போது ஒருவரது குடியுரிமை தொடர்பான சந்தேகம் கணக்கெடுப்பு செய்யும் அலுவலருக்கு ஏற்பட்டால் அவரை சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று அவர் குறிக்க வேண்டும். இதை 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்ட விதிகள் குறிப்பிடுகின்றன. அதன் விதி 4, துணை விதி 4 இவ்வாறு சந்தேகக் குடிமகன் என்று குறிப்பதற்கு அதிகாரம் அளிக்கிறது. அவ்வாறு குறிக்கப்பட்டவர்களுக்கு அதன் பின்னர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டுமென்றும் அந்த விதி கூறியுள்ளது.

ஒருவரை சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று எதன் அடிப்படையில் தீர்மானிப்பது என்பதைப் பற்றி குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளில் எதுவும் கூறப்படவில்லை. கணக்கெடுப்பு செய்யும் அலுவலருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்கிற எந்த ஒரு அலுவலரும் எவரை வேண்டுமானாலும் சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று அறிவித்துவிட முடியும். அப்படி அறிவிக்கப்பட்டவர் தனது குடியுரிமையை நிரூபிக்க பல ஆண்டுகள் போராடியாகவேண்டும். அப்படி போராடியும் அவரால் தனது குடியுரிமையை நிரூபிக்கப்பட முடியவில்லையென்றால் அவர் திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்படுவார். அதுதான் இப்போது அஸ்ஸாமில் நடந்திருக்கிறது. இப்படி சந்தேக குடிமகன் என்று அறிவிக்கப்பட்டவர்களை அடைத்து வைப்பதற்காக நாடுமுழுவதும் சிறைச்சாலைகள் கட்டுமாறு 2014 ஆம் ஆண்டிலிருந்து மூன்று முறை மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. ஏற்கனவே அஸ்சாமில் பல தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஆயிரக் கணக்கானோர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் உணவு, மருத்துவம் முதலான வசதிகள் வழங்கப்படாததால் ஒவ்வொரு நாளும் உயிர் இழந்து கொண்டிருக்கிறார்கள்.

அஸ்சாமில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி நடவடிக்கையின் முடிவில் அந்த மாநில மக்கள் தொகையில் சுமார் 6 சதவீதம் பேர் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். அதே விகிதத்தில் இந்தியா முழுவதும் குடியுரிமை பறிக்கப்பட்டால் சுமார் 8 கோடி பேர் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். அவர்களையெல்லாம் அடைத்து வைப்பதற்கு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான தடுப்பு முகாம்கள் தேவைப்படும். அஸ்ஸாமில் மூவாயிரம் பேரை அடைத்து வைப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு 46.51 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. அதே விகிதத்தில் பார்த்தால் இந்தியா முழுதும் கட்டப்பட வேண்டிய 26658 தடுப்பு முகாம்களுக்கு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமான இந்தியாவின் ஜிடிபியில் சுமார் 9 சதவீதமாகும். உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கும், 100 நாள் வேலை திட்டத்துக்கும், மதிய உணவு திட்டத்துக்கும், ஆரம்பக் கல்விக்கும் ஒதுக்கீடு செய்வதற்கு பணம் இல்லை என்று பட்ஜெட்டில் அவற்றுக்கான நிதியைக் குறைத்திருக்கும் மத்திய அரசு இந்த நாட்டு மக்களின் குடியுரிமையைப் பறிப்பதற்காக எத்தனை லட்சம் கோடி வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறது.

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் எனப் பல்வேறு மாநில அரசுகள் அறிவித்துள்ளன. எனவே தமிழக அரசும் இங்கே என்.பி.ஆர் கணக்கெடுப்பை மேற்கொள்ளமாட்டோம் என அறிவிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த மாபெரும் பேரணியின்மூலம் வலியுறுத்துகிறது. என்.பி.ஆர் நடவடிக்கையைக் கைவிட்டு பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசை இந்தப் பேரணியின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.

3. தேசிய குடிமக்கள்
பதிவேடு (என்.ஆர்.சி) திட்டத்தைரத்து செய்க!

தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி) குறித்து இதுவரை விவாதிக்கவே இல்லை என்று பிரதமர் அப்பட்டமாகப் பொய் சொல்கிறார். ஆனால், ’நாடு தழுவிய என்.ஆர்.சியைக் கொண்டுவருவோம்’ என மத்திய உள்துறை அமைச்சர் மீண்டும் மீண்டும் பேசி வருகிறார். தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்) எடுக்கப்பட்டு விட்டால் அதன் அடுத்தகட்டம் தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிப்பதுதான். ஏனென்றால் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதா இல்லையா என்பதை இறுதியாகத் தீர்மானிப்பது தேசிய குடியுரிமைப் பதிவேடு தான். எனவே இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக தேசிய குடியுரிமைப் பதிவேட்டை என்.ஆர்.சி- தயாரித்து தான் ஆக வேண்டும். அதற்காக விசாரணை ஆணையங்களை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். அந்த விசாரணை ஆணையங்களின் மூலமாகவும் ஒருவர் தமது குடியுரிமையை நிரூபிக்க தவறினால் அவரை அடைத்து வைப்பதற்கு தடுப்பு முகாம்களையும் நாடு முழுவதும் கட்டியாக வேண்டும். தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கப்பட்டு விட்டால் இந்த இரண்டு நடவடிக்கைகளையும் தடுக்கவே முடியாது.

’இப்போது தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரிப்பதைப் பற்றி நாங்கள் பேசவில்லை’ என்று பிரதமர் சொல்வது எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். எனவே பிரதமரோ அல்லது பாஜக அரசின் அமைச்சர்களோ சொல்வதை இந்த நாட்டு மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை.

இந்த தேசிய குடியுரிமைப் பதிவேட்டை (என்.பி.ஆர்) தயாரிக்க மாட்டோம் என்று மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்த நடவடிக்கையை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்த மாபெரும் பேரணியின்மூலம் வலியுறுத்துகிறோம்.

4. இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாத்திடுக!

உத்தரகாண்ட் மாநில அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 8 .2 .2020 அன்று அதிர்ச்சிதரும் தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. ‘இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என எந்த ஒரு கட்டாயமும் அரசாங்கத்துக்கு இல்லை’ எனவும் , ‘ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் மிகக்குறைவாக அரசுப் பணிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தாலும்கூட அந்தப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு கட்டாயம் எதுவும் இல்லை ‘ என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. எஸ்சி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. கடந்த 26.09.2018 அன்று ஜர்னைல் சிங் என்பவரின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புக்கும், கடந்த 10.05.2019 அன்று பி.கே.பவித்ரா வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கும் இப்போது அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு முரண்பட்டதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவம் குறித்த உறுப்பு 14 க்கும் இது எதிராக உள்ளது.

இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய தேவை நீதித்துறைக்கும் இல்லை, அரசுக்கும் இல்லை என்று இந்தத் தீர்ப்பின்மூலம் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இப்போது பாராளுமன்றத்திடமே இருக்கிறது. இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்ட மசோதா ஒன்றை உடனடியாகப் பாராளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும். அதை சட்டமாக்கி நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் அதைப் பாதுகாப்பதற்கு ஏதுவாக அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணையில் அதைச் சேர்க்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு ஒன்றை உடனடியாக மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக தற்போது பின்பற்றப்படும் ‘கொலேஜியம்’ முறை குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளாக வருவதற்கு வழிவகுத்துள்ளது. இது சமவாய்ப்பை மறுக்கிறது. எனவே சமத்துவத்தை உறுதிசெய்வதாகவும், தற்போது பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருக்கிற தலித்துகள், பெண்கள் ஆகிய பிரிவினர் தமக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு வழிசெய்வதாகவும் நீதிபதிகள் நியமன முறை ஒன்றைப் புதிதாக உருவாக்கவேண்டும் என இந்த மாபெரும் பேரணியின் மூலம் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

தொல். திருமாவளவன்
நிறுவனர்- தலைவர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி

சனி, 22 பிப்ரவரி, 2020

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய பேரணியில் 7 இலட்சம்கலந்து கொண்டவர்கள்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய பேரணியில் 7 இலட்சம் கலந்து கொண்டவர்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய பேரணியில் கலந்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பதை பற்றிய பல்வேறு யூகங்கள் வெளிப்பட்டு வருகிறது..  அறிவியல் கணக்கின் அடிப்படையில் பார்ப்பது நமக்கு சரியான விடை கொடுக்கம்.  கட்சி தோழர்கள் வாகணங்களை நிறுத்திய தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையில் இருந்து பேரணி துவங்கிய இடைமலைப்பட்டிபுதூர் 2கிமீ தூரம் அதாவது 2000மீட்டர்.   பேரணி துவங்கிய இடத்திற்கும் நிறைவு பெற்ற காவலர் குடியிருப்பு பகுதிக்கும் 2.2கிமீ அதாவது 2200மீட்டர்.  வாகண நிறுத்துமிடம் தொடங்கி நிறைவுடம் ஒருவர் வந்து சேர ஆகும் நேரம் 1.5 மணி நேரம்.   நேற்றைய பேரணி நடைப்பெற்ற நேரம் 4.5 மணி நேரத்திற்கும் மேல் அதாவது குறைந்தபட்சம் 3 பேட்ச் (batch)  பங்கேற்று இருக்கிறார்கள்.  Crowd Strength Analysis Research  - மக்கள் கூட்ட எண்ணிக்கை கணக்கீடு ஆராய்ச்சி யின்படி   சற்று தாரளமான இடைவெளி இருந்தால் ஒரு சதுர மீட்டருக்கு 4.5 நபர்கள் இருப்பார்கள் என்றும் நெருக்கமாக இருந்நால் 6.5 நபர் இருப்பார்கள் என்று தெரிவிக்கிறது. 



ஆக தேசம் காப்போம் பேரணியில் பங்கேற்றவர் எண்ணிக்கை  மொத்த நீளம் :    4200மீட்டர் சாலை அகலம் :      8 மீட்டர் (சராசரி) 4200 X 8 =    33600 சதுர மீட்டர் 1 பேட்ச்க்கு 33600 X 5 பேர் = 168,000 பேர் 3 பேட்ச்க்கு 1,68000 X 3 = 5,04000 பேர்.  இது மிக்குறைவான அளவுகளின் அடிப்படையில் பேரணியில் கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றவர்களை மட்டுமே கணக்கில் எடுத்து கொண்டால் வருவது.... 



இதைத் தாண்டி பேரணி நிறைவு மேடைக்கு பின்புறம் 1கிமீ நீளத்திற்கும் அதிகமான மக்கள் திரள்.. கூட்டம் அதிமாக சேரந்துவிட்டது என திருச்சிக்கு வெளியிலும், ஆங்காங்கேயும் வாகணங்களை நிறுத்திவிட்டு பேரணி பகுதிக்கு நடந்து வந்து கொண்டே இருந்த கூட்டம்....... நகரின் உள்ளேயே வரவே முடியாமல் தவித்து நின்ற கூட்டம் இதெல்லாம் கணக்கெடுத்தால் அது பேரணியில் கலந்து கொண்ட எண்ணிக்கைக்கு ஈடாகும்....  வாய்ச்சவடால் கணக்காக இல்லாமல், நேர்மையான கணக்கெடுத்தாலே எந்தவகையிலும் 7இலட்சம் பேரு.


செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

இந்தியாவில் ‘போக்கோ எக்ஸ்2’ செல்போன் இன்று மதியம் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.


இந்தியாவில் ‘போக்கோ எக்ஸ்2’ செல்போன் இன்று மதியம் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

‘போக்கோ எக்ஸ்2’ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கேமராவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் அறிமுகமாகவுள்ளது. போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல், 6.67-இன்ச் அளவிலான முழு எச்டி டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.



விலை:

இதன் ஆரம்ப விலை ரூ.15,999-ல் தொடங்குகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டது. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ் 2 செல்போன் ரூ.16,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட செல்போன் ரூ. 19,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கலர்:

இந்த செல்போன் அட்லாண்டீஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள், ரெட் ஆகிய கலர்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

20எம்பி + 2எம்பி டூயல் செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஸ், VLOG மோட், 960fps ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பின்புற கேமரா அமைப்பிற்கான 4K வீடியோ பிடிப்பு போன்றவைகள் உள்ளன. செல்ஃபி கேமராவை பொருத்தவரை பனோரமா செல்ஃபி மோட் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன.

விற்பனை மற்றும் சலுகை:

போலி சான்றிதழ் மூ‌லம் அரசு ‌பணியில் சேர்ந்த மனைவி: வெளிச்சத்திற்கு கொண்டு ‌வந்த கண‌வர்..!

இந்தியாவில் இன்று மதியம் 12 மணிமுதல் ஃபிளிப்கார்ட்டில் போக்கோ எக்ஸ் 2 செல்போன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த செல்போனை ஐசிஐசிஐ வங்கி கார்டு மூலமாகவோ இ.எம்.ஐ மூலமாகவோ செல்போன் வாங்குவோருக்கு உடனடியாக 1000 சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 15 பிப்ரவரி, 2020

தமிழக பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்புகள்..!

தமிழக பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்புகள்..!

1. கீழடியில் அருங்காட்சிகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு.

2. பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு.

3. தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

4. தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

5. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.

6. சென்னை - பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

7. உயர் கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு.

8. சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு.

9. சமூக நலன் மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.5,935 கோடி ஒதுக்கீடு.

10. வேளாண்மைத்துறைக்கு 11,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

11. கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.

12. பொதுப்பணித்துறை, நீர்பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு.

13. அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.

14. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

15. போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

16. மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

17. சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு.

18. கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

19. இந்து சமய அறநிலையத்துறைக்கு 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

20. பொதுப்பணித்துறை - கட்டட பணிகளுக்காக 1,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

21. சமூக நலன் துறைக்கு 2,535 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

22. அரசுப்பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு.

23. மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க ரூ.966 கோடி ஒதுக்கீடு.

24. காவல்துறைக்கு ரூ. 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

25. சிறைச்சாலை துறைக்கு ரூ.392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

26. அரசு பள்ளிகளில் உயர்தர பரிசோதனை கூடங்கள் அமைக்க ரூ.520 கோடி ஒதுக்கீடு.

27. வரும் நிதியாண்டில் ரூ.59,209 கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டம்.

28. கிராம உள்ளாட்சி வளர்ச்சிக்கு ரூ.6754 கோடி ஒதுக்கீடு.

29. 2,298 கோடி மதிப்பிலான அணைக்கட்டு திட்டத்திற்கு 300 கோடி ஒதுக்கீடு.

30. ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதியை மேம்படுத்த ரூ.9.80 கோடி ஒதுக்கீடு.

31. தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.

32. ரூ.77.94 கோடியில் நெல்லை கங்கை கொண்டானில் உணவு பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு.

33. கிராமபுறங்களில் வாழ்வாதாரத்தை பெருக்க முதலமைச்சரின் 5 ஆண்டுகால கிராம தன்னிறைவு திட்டம் அறிமுகம்.

34. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1364 நீர்ப்பாசன பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

35. ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.3,041 கோடி ஒதுக்கீடு.

36. கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

37. மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

38. கைத்தறித்துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு.

39. பள்ளி சீருடை, பாடப்புத்தகங்கள், காலணி வழங்க ரூ.1,018 கோடி ஒதுக்கீடு.

40. முதலைமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

41. வரும் நிதியாண்டில் 1,12,876 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்.

42. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.

43. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு.

44. உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.

45. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு திட்டத்திற்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு.

46. நடப்பாண்டில் 10,276 சீருடைபபணியாளர்கள் பணியமர்த்தப்படுவர்.

47. சென்னை - குமரி தொழில் மண்டல வழித்தட திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

48. அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.

49. மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 52 கிமீ தூர மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

50. கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க 75 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு.

51. அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக கூடுதலாக நடப்பாண்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

52. டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்காக ரூ. 959 கோடி ஒதுக்கீடு.

53. சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.76 கோடி ஒதுக்கீடு.

54. சரபங்கா நீரேற்று திட்டத்திற்காக கூடுதலாக ரூ.350 கோடி ஒதுக்கீடு.

55. பெருந்துறை, குருக்கால்பட்டி ஆகிய இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

56. பொது விநியோக திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.

57. அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.

58. சென்னையில் விரிவான வெள்ள பேரிடர் தடுப்பு திட்டத்தை 3 ஆயிரம் கோடியில் செயல்படுத்த உலகவங்கி மற்றும் ஆசிய வங்கியிடம் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.

59. சென்னை பேரிடர் மேலாண்மைக்காக 1,360 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

60. தூத்துக்குடி அருகே, ரூ.49,000 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும்.

61. 525 மின்சார பேருந்துகள் வாங்க ரூ.960 கோடி ஒதுக்கீடு.

62. குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை முன்கூட்டியே அடைந்து தமிழகம் சாதனை - ஓபிஎஸ்.

63. அரசுப்பணியாளர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் வழங்குவதற்காக 173.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

64. அரசுப்பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக 342 மற்றும் 306 கோடி ருபாய் ஒதுக்கீடு.

65. ஏழை மாணவர்கள் உயர்கல்வியை பெறும் வகையில் முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக் கட்டணச் சலுகைகள் வழங்க 506 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

அச்சுறுத்தும் ஆன்லைன் ரம்மி. விழித்து கொள்வது எப்போது

அச்சுறுத்தும் ஆன்லைன் ரம்மி.
விழித்து கொள்வது எப்போது ?

சமீபத்தில் என்னை சந்தித்த ஒரு நபரிடம் பேசிய போது அவர் சொன்ன செய்தியே இந்தக் கட்டுரை எழுத காரணம் .

இந்தியாவில் இணைய வசதி இலவசம் அல்லது அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்த பின் நாம் சமூக வலைத்தளங்களில் செயல்படும் நேரம் அதிகரித்த பின்னர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்களை கடந்து வந்திருப்போம்.

விளையாட்டாக தொடங்கியிவர்கள் அதனை எப்படி நிறுத்துவது என தெரியாமல் தவித்து வருகின்றனர். பொழுது போக்கிற்காக ஆரம்பித்து ரம்மி விளையாடுவதே முழு நேர வேலையாக மாறிப் போயுள்ளது.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இதனை விளையாடுகின்றனர் என்பது கவலைக்குரிய விசயம்.

திரைப்பட நடிகர்கள் விளம்பரம் செய்வதாலேயே அவற்றை நம்பி விளையாடுவது மிகத்தவறு. ஈமு கோழி வியாபாரத்தை மறக்க வேண்டாம்.

நடிகர்களை அடுத்து நம்மை போன்ற சாதாரண மனிதர்களை வைத்து நான் அவ்வளவு ஜெயித்தேன் இவ்வளவு ஜெயித்தேன் எனக்கூறி மூளை சலவை செய்கின்றனர். நீங்கள் எத்தனை MLM வியாபாரிகளை பாரத்துள்ளீர்கள் என யோசனை செய்து பார்க்கவும் .

ஆன்லைன் விளையாட்டுகள் நீங்கள் துவங்கும் போது ஒரு சிறிய தொகை நீங்கள் ஜெயிப்பது போல செய்து பின்னர் அதன் விஸவரூபத்தை காட்டும் . பெரிய மீனை பிடிக்க நாம் சின்ன புழுவை தூண்டிலில் மாட்டுவதில்லையா?

ஆன்லைன் சூதாட்ட தளங்கள் அதிகரிப்பது அதன் மூலம் அவர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதையும் மக்கள் அதிக அளவில் பணம் இழக்க துவங்கி விட்டனர் என்பதையும் காண்பிக்கிறது .

ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து தப்பிப்பது எப்படி?

🎯 விளையாட்டிற்காகவும் , சிறு தொகை தானே என்றும் எக்காரணம் கொண்டும் இதை தொடங்க வேண்டாம்.

🎯 பொழுது போக்க என கூறி விளையாடி வருபவர்கள் முதலில் ஸ்மார்ட் போனிலிருந்து வெளியேறுங்கள். பஞ்ச பாண்டவர்கள் நாடிழந்து பர தேசம் போனது சூதாட்டத்தால் தான் என்பதை மறக்க வேண்டாம்.

🎯 உங்கள் நண்பர்கள் இதை விளையாடி வந்தால் வரை மீட்கும் பொறுப்பு உங்களுடையதே.

🎯 நம்மை தேடி வரும் பிரட்சனைகளையே சமாளிக்க முடியாமல் தவிக்கும் போது , ஆன்லைனில் சூதாடுவது பிரட்சினை எனும் ஆப்பை தேடிப் போய் உட்கார்வது போல்தான்.

நேரம், பணம் , உறவுகள் என அனைத்தையும் இழக்க வாயப்புள்ள ஆன்லைன் சூதாட்டம் உங்கள் நிம்மதிக்கு. எதிரி என்பதை மறக்க வேண்டாம்.