அச்சுறுத்தும் ஆன்லைன் ரம்மி.
விழித்து கொள்வது எப்போது ?
சமீபத்தில் என்னை சந்தித்த ஒரு நபரிடம் பேசிய போது அவர் சொன்ன செய்தியே இந்தக் கட்டுரை எழுத காரணம் .
இந்தியாவில் இணைய வசதி இலவசம் அல்லது அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்த பின் நாம் சமூக வலைத்தளங்களில் செயல்படும் நேரம் அதிகரித்த பின்னர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்களை கடந்து வந்திருப்போம்.
விளையாட்டாக தொடங்கியிவர்கள் அதனை எப்படி நிறுத்துவது என தெரியாமல் தவித்து வருகின்றனர். பொழுது போக்கிற்காக ஆரம்பித்து ரம்மி விளையாடுவதே முழு நேர வேலையாக மாறிப் போயுள்ளது.
ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இதனை விளையாடுகின்றனர் என்பது கவலைக்குரிய விசயம்.
திரைப்பட நடிகர்கள் விளம்பரம் செய்வதாலேயே அவற்றை நம்பி விளையாடுவது மிகத்தவறு. ஈமு கோழி வியாபாரத்தை மறக்க வேண்டாம்.
நடிகர்களை அடுத்து நம்மை போன்ற சாதாரண மனிதர்களை வைத்து நான் அவ்வளவு ஜெயித்தேன் இவ்வளவு ஜெயித்தேன் எனக்கூறி மூளை சலவை செய்கின்றனர். நீங்கள் எத்தனை MLM வியாபாரிகளை பாரத்துள்ளீர்கள் என யோசனை செய்து பார்க்கவும் .
ஆன்லைன் விளையாட்டுகள் நீங்கள் துவங்கும் போது ஒரு சிறிய தொகை நீங்கள் ஜெயிப்பது போல செய்து பின்னர் அதன் விஸவரூபத்தை காட்டும் . பெரிய மீனை பிடிக்க நாம் சின்ன புழுவை தூண்டிலில் மாட்டுவதில்லையா?
ஆன்லைன் சூதாட்ட தளங்கள் அதிகரிப்பது அதன் மூலம் அவர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதையும் மக்கள் அதிக அளவில் பணம் இழக்க துவங்கி விட்டனர் என்பதையும் காண்பிக்கிறது .
ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து தப்பிப்பது எப்படி?
🎯 விளையாட்டிற்காகவும் , சிறு தொகை தானே என்றும் எக்காரணம் கொண்டும் இதை தொடங்க வேண்டாம்.
🎯 பொழுது போக்க என கூறி விளையாடி வருபவர்கள் முதலில் ஸ்மார்ட் போனிலிருந்து வெளியேறுங்கள். பஞ்ச பாண்டவர்கள் நாடிழந்து பர தேசம் போனது சூதாட்டத்தால் தான் என்பதை மறக்க வேண்டாம்.
🎯 உங்கள் நண்பர்கள் இதை விளையாடி வந்தால் வரை மீட்கும் பொறுப்பு உங்களுடையதே.
🎯 நம்மை தேடி வரும் பிரட்சனைகளையே சமாளிக்க முடியாமல் தவிக்கும் போது , ஆன்லைனில் சூதாடுவது பிரட்சினை எனும் ஆப்பை தேடிப் போய் உட்கார்வது போல்தான்.
நேரம், பணம் , உறவுகள் என அனைத்தையும் இழக்க வாயப்புள்ள ஆன்லைன் சூதாட்டம் உங்கள் நிம்மதிக்கு. எதிரி என்பதை மறக்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக