செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

இந்தியாவில் ‘போக்கோ எக்ஸ்2’ செல்போன் இன்று மதியம் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.


இந்தியாவில் ‘போக்கோ எக்ஸ்2’ செல்போன் இன்று மதியம் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

‘போக்கோ எக்ஸ்2’ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கேமராவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் அறிமுகமாகவுள்ளது. போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல், 6.67-இன்ச் அளவிலான முழு எச்டி டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.



விலை:

இதன் ஆரம்ப விலை ரூ.15,999-ல் தொடங்குகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டது. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ் 2 செல்போன் ரூ.16,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட செல்போன் ரூ. 19,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கலர்:

இந்த செல்போன் அட்லாண்டீஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள், ரெட் ஆகிய கலர்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

20எம்பி + 2எம்பி டூயல் செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஸ், VLOG மோட், 960fps ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பின்புற கேமரா அமைப்பிற்கான 4K வீடியோ பிடிப்பு போன்றவைகள் உள்ளன. செல்ஃபி கேமராவை பொருத்தவரை பனோரமா செல்ஃபி மோட் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன.

விற்பனை மற்றும் சலுகை:

போலி சான்றிதழ் மூ‌லம் அரசு ‌பணியில் சேர்ந்த மனைவி: வெளிச்சத்திற்கு கொண்டு ‌வந்த கண‌வர்..!

இந்தியாவில் இன்று மதியம் 12 மணிமுதல் ஃபிளிப்கார்ட்டில் போக்கோ எக்ஸ் 2 செல்போன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த செல்போனை ஐசிஐசிஐ வங்கி கார்டு மூலமாகவோ இ.எம்.ஐ மூலமாகவோ செல்போன் வாங்குவோருக்கு உடனடியாக 1000 சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக