விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய பேரணியில் 7 இலட்சம் கலந்து கொண்டவர்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய பேரணியில் கலந்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பதை பற்றிய பல்வேறு யூகங்கள் வெளிப்பட்டு வருகிறது.. அறிவியல் கணக்கின் அடிப்படையில் பார்ப்பது நமக்கு சரியான விடை கொடுக்கம். கட்சி தோழர்கள் வாகணங்களை நிறுத்திய தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையில் இருந்து பேரணி துவங்கிய இடைமலைப்பட்டிபுதூர் 2கிமீ தூரம் அதாவது 2000மீட்டர். பேரணி துவங்கிய இடத்திற்கும் நிறைவு பெற்ற காவலர் குடியிருப்பு பகுதிக்கும் 2.2கிமீ அதாவது 2200மீட்டர். வாகண நிறுத்துமிடம் தொடங்கி நிறைவுடம் ஒருவர் வந்து சேர ஆகும் நேரம் 1.5 மணி நேரம். நேற்றைய பேரணி நடைப்பெற்ற நேரம் 4.5 மணி நேரத்திற்கும் மேல் அதாவது குறைந்தபட்சம் 3 பேட்ச் (batch) பங்கேற்று இருக்கிறார்கள். Crowd Strength Analysis Research - மக்கள் கூட்ட எண்ணிக்கை கணக்கீடு ஆராய்ச்சி யின்படி சற்று தாரளமான இடைவெளி இருந்தால் ஒரு சதுர மீட்டருக்கு 4.5 நபர்கள் இருப்பார்கள் என்றும் நெருக்கமாக இருந்நால் 6.5 நபர் இருப்பார்கள் என்று தெரிவிக்கிறது.
ஆக தேசம் காப்போம் பேரணியில் பங்கேற்றவர் எண்ணிக்கை மொத்த நீளம் : 4200மீட்டர் சாலை அகலம் : 8 மீட்டர் (சராசரி) 4200 X 8 = 33600 சதுர மீட்டர் 1 பேட்ச்க்கு 33600 X 5 பேர் = 168,000 பேர் 3 பேட்ச்க்கு 1,68000 X 3 = 5,04000 பேர். இது மிக்குறைவான அளவுகளின் அடிப்படையில் பேரணியில் கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றவர்களை மட்டுமே கணக்கில் எடுத்து கொண்டால் வருவது....
இதைத் தாண்டி பேரணி நிறைவு மேடைக்கு பின்புறம் 1கிமீ நீளத்திற்கும் அதிகமான மக்கள் திரள்.. கூட்டம் அதிமாக சேரந்துவிட்டது என திருச்சிக்கு வெளியிலும், ஆங்காங்கேயும் வாகணங்களை நிறுத்திவிட்டு பேரணி பகுதிக்கு நடந்து வந்து கொண்டே இருந்த கூட்டம்....... நகரின் உள்ளேயே வரவே முடியாமல் தவித்து நின்ற கூட்டம் இதெல்லாம் கணக்கெடுத்தால் அது பேரணியில் கலந்து கொண்ட எண்ணிக்கைக்கு ஈடாகும்.... வாய்ச்சவடால் கணக்காக இல்லாமல், நேர்மையான கணக்கெடுத்தாலே எந்தவகையிலும் 7இலட்சம் பேரு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக