புதன், 15 ஏப்ரல், 2020

மதி செய்திகள் 15.04.2020

மதி செய்திகள் 15.04.2020


*☯தமிழக தலைமை செயலாளருடன் மத்திய அரசு ஆலோசனை*

*ஆலோசனையில் உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி உள்ளிடோர் பங்கேற்பு*

*ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குறித்து மத்திய அரசு ஆலோசனை*

*☯ஆயிரக்கணக்கானோர் குவிந்த மொத்த காய்கறிச் சந்தை..!*
_வியாபாரிகள் மட்டும் காய்கறி வாங்க அனுமதி_

திருச்சியில் மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



திருச்சியில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க 8 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டன. அத்துடன் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பால் பண்ணை அருகே காய்கறி மொத்த வியாபாரம் செய்யப்படும் என்றும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மட்டும் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு பொதுமக்கள் ஏராளமானோர் மொத்த காய்கறி சந்தையில் குவிந்தனர். இதனால், பழைய பால்பண்ணை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

வியாபாரிகளும், பொதுமக்களும் முகக் கவசம் அணியாததுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



மேலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மொத்த காய்கறி சந்தை செயல்படும் இடம் குறுகலாக இருப்பதால், சில்லரை விற்பனை சந்தைகளை போன்று மொத்த விற்பனை சந்தையையும் தனித் தனி இடங்களில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

*☯நியூயார்க்கில் கரோனா வைரஸுக்கு பலி எண்ணிக்கை 10,000 கடந்தது*

நியூயார்க்கில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 -ஐ கடந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கரோனா வைரசின் மையமாக உள்ளது. நியூயார்க்கில் பரவி வரும் கரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் அந்த மாகாண அரசு ஈடுபட்டுள்ளது.

நியூயார்க்கில் மட்டும், சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் நியூயார்க்கில் கரோனா வைரஸ் பாதிப்பு 10,000-ஐ கடந்து இருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “ நியூயார்க்கில் பரிசோதனை செய்யப்படாத நிலையில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஏராளானமானவர்கள் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ்ஸுக்கு நியூயார்க்கில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 ஆக இருக்கலாம்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்தி 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்

*☯மேகாலயாவில் கொரோனா பாதித்த ஒரே ஒரு நபரும் உயிரிழப்பு!*

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த ஒரே ஒரு நபரும் இன்று (ஏப்., 15) உயிரிழந்தார். வட கிழக்கு மாநிலங்களில் அசாமை தொடர்ந்து இது இரண்டாவது உயிரிழப்பாகும்.

வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. இது வரை அம்மண்டலத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேகாலயா மாநிலத்தில், முதன் முதலாக திங்களன்று பெத்தானி மருத்துவமனையின் 69 வயது மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சை பலனின்றி இன்று அம்மருத்துவமனயில் உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனையை சீல் வைத்த அதிகாரிகள், மற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளை தனிமைப்படுத்தி உள்ளனர்.

அம்மருத்துவரின் தொடர்பாளர்கள் யார் யாரென விசாரித்து வருகின்றனர். அவரது மருமகன் நியூயார்க்கில் இருந்து மார்ச் 16-ம் தேதி டில்லி வந்துள்ளார். அங்கிருந்து மணிப்பூரின் இம்பால் மற்றும் மேகலயாவின் ஷில்லாங்கிற்கு பயணித்துள்ளார். அவரை ஏப்ரல் 7 வரை தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை. இருப்பினும் அவர் மூலம் தொற்று பரவியிருக்கலாம் என விசாரிக்கின்றனர். மேகாலயாவில் ஊரடங்கு பகுதியளவு தளர்த்தப்பட்டிருந்தது. கொரோனாவால் முதல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, முழு ஊரடங்கை முதல்வர் அமல்படுத்தியுள்ளார்.

*☯#BREAKING கொரியர் நிறுவனங்கள் செயல்படலாம்*

*ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி; அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்கலாம்*

*- மத்திய அரசு*

*☯#BREAKING கடலூர்: ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்ததில் மேலும் 2 பேர் உயிரிழப்பு*

*ஏற்கனவே சந்திரகாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாயக்கிருஷ்ணன், சுந்தர் ஆகியோர் உயிரிழப்பு*

*☯#BREAKING தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு*

*1,56,314 வாகனங்கள் பறிமுதல்*

*ரூ.82,32,644 அபராதம் வசூல்*

*- தமிழக காவல்துறை*

*☯தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்தித்த அமைச்சர் நிலோபர் கபில்... அதில் ஒருவருக்கு கொரோனா..!*

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை அமைச்சர் நிலோபர் கபில் சந்தித்த நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய வாணியம்பாடியை சேர்ந்த ‌8 பேரை மருத்துவமனையில் சேர்த்த அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 52 பேரை தனியார் கல்லூரி மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். பரிசோதனை முடிவில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுடைய உறவினர்களான 12 பேருக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 40 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் ஆறு நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 9-ஆம் தேதி அமைச்சர் நிலோபர் கபில், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து 40 பேரை குறைந்தபட்சம் 14 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்காமல் அனுப்பியது குறித்து கேள்வி எழுந்த நிலையில், அனைவருக்கும் கடந்த 11-ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 13ஆம் தேதி வந்த ஆய்வின் முடிவில் அவர்களில் வாணியம்பாடி கோட்டை பகுதியை சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்ட பெண்ணை வழியனுப்பி வைத்த இரண்டு நாட்களுக்கு பிறகு, அதாவது கடந்த 11-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிலோபர் கபில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

*☯அசாம் மாநிலத்தில் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டதால், மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.*

_கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு நேற்றோடு நிறைவு பெற்றது. இந்நிலையில் மே 3-ம் தேதி வரை தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை மது விற்பனை செய்ய அசாம் அரசு அனுமதி வழங்கியுள்ளது._

_இரண்டு வாரங்கள் கழித்து தற்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், ஏராளமானோர் மது வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். மதுக்கடைகளில் தனிமனித இடைவெளியுடன் மட்டுமே மது வாங்க வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் மதுபானம் மட்டுமே விற்கப்படும் போன்ற சில விதிமுறைகளின் படி மதுக்கடைகளில் வியபாரம் நடபெற்று வருகிறது._

*☯சென்னையில் சாலையோரம் கிடந்த 2 மாத ஆண் குழந்தை - காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்*

சென்னையில் சாலையோரம் கிடந்த 2 மாத ஆண் குழந்தையை காவல்துறையினர் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை அடையாறு பத்மநாபன் நகரின் சாலையோரத்தில் துணியில் சுற்றியபடி ஆண் குழந்தை ஒன்று கிடப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற சாஸ்திரி நகர் காவல்துறையினர் 2 மாத ஆண் குழந்தையை கண்டெடுத்தனர்.

செங்கல்பட்டில் ஊரடங்கு உத்தரவை ...

தொடர்ந்து குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் அண்ணா நகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், குழந்தையை வீசி சென்றவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

*☯“ஊரடங்கு விதிகள் தளர்வு” : யார் யாருக்கு அனுமதி? ; யாருக்கு அனுமதி இல்லை ? - மத்திய அரசு அறிவிப்பு!*

_*ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.*_

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 377 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமானதைத் தொடர்ந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதன்படி ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

*“ஊரடங்கு விதிகள் தளர்வு” : யார் யாருக்கு அனுமதி? ; யாருக்கு அனுமதி இல்லை ? - மத்திய அரசு அறிவிப்பு!*

*யார் யாருக்கு அனுமதி ?*

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.

கட்டுமானப்பணிகள் மற்றும் வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளும் தொடங்க அனுமதி.

50% தொழிலாளர்களுடன் தேயிலை, காபி தோட்டங்கள் இயங்க அனுமதி.

100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு அனுமதி.

நெடுஞ்சாலைகளில் உள்ள மெக்கானிக் ஷாப்புகள், தாபாக்கள் இயங்க அனுமதி.

33% ஊழியர்களுடன் அரசு அலுவலங்கள் இயங்க அனுமதி.

தச்சுவேலை, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக் போன்ற தொழிலில் ஈடுபடுவோருக்கு அனுமதி.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம்.

கொரியர் சேவைகள் தொடரலாம்.

*“ஊரடங்கு விதிகள் தளர்வு” : யார் யாருக்கு அனுமதி? ; யாருக்கு அனுமதி இல்லை ? - மத்திய அரசு அறிவிப்பு!*

*யாருக்கு அனுமதி இல்லை ?*

நாடுமுழுவதும் மதுக்கடைகளை திறக்க அனுமதி இல்லை.

பொது போக்குவரத்து சேவைகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள், மால்கள், வணிக வளாகங்கள் இயங்க தடை.

அனைத்து வழிபாடு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது.

சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க தடை.

அதுமட்டுமின்றி, தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கவும்உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

*☯ஆசியாவில் இந்தியா மிக மோசம்.. இன்னும் 1 வாரத்தில் இரட்டிப்பு ஆகும்.. பகீர் கொரோனா புள்ளி விவரம்!*

டெல்லி: இந்தியாவில் தற்போது பரவும் வேகத்தில் கொரோனா பரவினால் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் கேஸ்களில் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

கொரோனா பரவலை உலகம் முழுக்க தீவிரமாக கண்காணித்து வரும் ஜான் ஹாப்கின்ஸ் கோவிட் டிராக்கர் (John Hopkins Covid Tracker) மற்றும் மத்திய அரசின் சுகாதாரத்துறை இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பரவல் குறித்த [புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எவ்வளவு வேகத்தில் கொரோனா பரவுகிறது என்று இந்த புள்ளி விவரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது மத்திய அரசின் புள்ளி விவரத்தின் படி மொத்தம் 11,439 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 390 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்

*வேகம் எப்படி உள்ளது*
கடந்த இரண்டு நாட்களில் இந்தியாவில் கொரோனா 24% உயர்ந்துள்ளது. அதற்கு முன் உள்ள இரண்டு நாட்களில் கொரோனா 28% ஆக பரவியது. இது கொஞ்சம் குறைந்துள்ளது. இந்தியாவில் தினமும் சராசரியாக 1010 பேர் வீதம் கொரோனா காரணமாக கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகிறது.

*இரட்டிப்பு ஆகிறது*
ஆம் இந்தியாவில் வாரத்திற்கு ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பு ஆகிறது. இதற்கு முன் 4 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா இரட்டிப்பு அடைந்த நிலையில் தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது. இது கொஞ்சம் ஆறுதல் அளிக்க கூடிய விஷயம். ஆனாலும் இந்தியா ஆசியாவில் இருக்கும் மற்ற நாடுகளை விட மிக மோசமாக இதில் பின் தங்கி உள்ளது.

*☯#BREAKING அரசியல் கட்சியினர் உணவு, நிவாரணம் வழங்க அரசு விதித்த தடைக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு*

*- சென்னை உயர்நீதிமன்றம்*

*☯நேரடியாக நிவாரணப் பொருட்கள் வழங்கினால் நோய் தொற்று ஏற்படும் என அரசு தெரிவித்திருந்தது*

*உரிய கட்டுப்பாடுகளுடன் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்*

*☯எலெக்ட்ரீஷியன் பிளம்பர் ஆகிய அத்தியாவசியமாக பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு அனுமதி*

*ரயில் விமானம் மெட்ரோ சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மே 3ஆம் தேதி வரை இயங்காது*

*பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்க மத்திய அரசு உத்தரவு*

*திரையரங்குகள் வணிக வளாகங்கள் அரசியல் நிகழ்வுகள் வழிபாட்டுத்தலங்கள் பொதுக் கூட்டத்திற்கு தடை தொடரும்*

*ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நகரங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி*

*☯விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள் பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி*

*100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிகளை தொடரலாம் மத்திய அரசு அறிவிப்பு*

*144 தடை உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது*

*☯கொரோனா  ஊரடங்கு உத்தரவால், ஏப்ரல்-மே மாதங்களில் வீடுகளில் மின்சாரப் பயன்பாடுகள் அதிகரிக்க கூடும்.*  *வருமானமின்றித் தவித்து வரும் இந்தச் சூழலில், தமிழக அரசு மின்சாரக் கட்டணம் செலுத்துவதிலிருந்து சலுகைகள் மற்றும் விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்*
*தமிழச்சி தங்கபாண்டியன்*

*☯இனி 10-ம் வகுப்புப் பாடங்கள் தினந்தோறும் பொதிகை சேனலில் ஒளிபரப்பு*

பத்தாம் வகுப்பு பாடங்கள், இன்று (ஏப்ரல் 15) முதல் டிடி பொதிகை சேனலில் தினமும் காலை 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பப் படுகிறது.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் 14-க்குப் பிறகு தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் மீண்டும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பல்வேறு பாடங்களைக் கற்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இணையவழிக் கற்றல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு, மேலும் பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை சேனலில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பாடங்களை எடுக்கின்றனர். இன்று (புதன்கிழமை) முதல் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ஏற்கெனவே கல்வித் தொலைக்காட்சி மூலம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

*☯நிஜமுகம் செய்திகள்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக