புதன், 22 ஏப்ரல், 2020

அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய அமெரிக்கர் நியமனம்; டிரம்ப் அறிவிப்பு

*அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய அமெரிக்கர் நியமனம்; டிரம்ப் அறிவிப்பு*

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக இந்திய அமெரிக்கரான சுதர்சனம் பாபு என்பவரை அதிபர் டொனால்டு டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதன்படி, 6 ஆண்டுகள் அவர் இந்த பதவியில் நீடித்திடுவார்.

கடந்த 1986ம் ஆண்டு தமிழகத்தின் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பும், கடந்த 1988ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை தொழில்நுட்பம் (தொழிற்சாலை உலோக பிரிவியல், வெல்டிங்) பிரிவிலும் படித்து பட்டம் பெற்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டமும் பெற்றுள்ளார்.

அவர், இன்டர்டிசிபிளினெரி ரிசர்ச் மற்றும் கிராஜுவேட் கல்விக்கான பிரெடிசன் மைய இயக்குனராக இருந்து வருகிறார். தயாரிப்பு மற்றும் உலோக பிரிவியலில் 21 வருட அனுபவம் கொண்டவராகவும் உள்ளார்.

சுதர்சனம் பாபு, அமெரிக்க அறிவியல் வாரியத்தின் உறுப்பினரான 3வது இந்திய அமெரிக்கராவார். அவருக்கு முன் அரிசோனா பல்கலைக்கழகத்தின் சேதுராமன் பஞ்சநாதன் மற்றும் வெர்மோன்ட் பல்கலைக்கழகத்தின் சுரேஷ் வி. கரிமெல்லா ஆகிய இருவரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக