சனி, 31 ஆகஸ்ட், 2019

தமிழகம் முழுவதும் நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு


தமிழகம் முழுவதும் நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு

Update on
Aug 31, 2019

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப் - 4 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை செப்டம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், வரைவாளர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வை நடத்தும் பணிகளில் சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப் படவுள்ளனர். நாளை நடைபெறும் இந்த தேர்வுக்கு 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு மையத்துக்கு பேனா மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

அவ்வாறு கொண்டு வரும் பொருட்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரவியலாது என அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வெழுத செல்வோருக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

சிக்ஸர் திரைவிமர்சனம்


சிக்ஸர் திரைவிமர்சனம்


சினிமாவில் நல்ல கதைகளை தாங்கி வரும் படங்களுக்கு மக்கள் நல் ஆதரவளிப்பார்கள் என்பது அண்மைகாலமாக நிரூபிக்கப்பட்டவருகிறது. அதில் எந்த நடிகர் நடித்திருந்தாலும் அப்படம் நல்ல வசூலை ஈட்டுகிறது. அப்படியான ரகமாக சிக்ஸர் வந்துள்ளது. வாருங்கள் சிக்ஸர் அடிக்க போகலாம்.

*🎬கதைக்களம்*🎬

படத்தின் நாயகன் வைபவ் சிவில் கள பொறியாளராக இருக்கிறார். அவரின் அப்பா இளவரசு அம்மா ஸ்ரீ ரஞ்சினி. வைபவ்க்கு மாலை 5.30 மணியாகிவிட்டால் நேரடியாக வீடு தான். பிரச்சனை என்னவெனில் அவரின் கண் தான்.

இப்படி அவர் வீட்டிற்கு செல்லும் போது ஒரு நாள் எதிர்பாராத விதமாக கடற்கரையில் கிடக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை. அப்போது ஒரு பெரும் போராட்டம் அங்கு நடக்க, வழக்கம் போல அதை போலிசார் கலைக்க முற்பட அதில் நிஜ போராளியாக செய்தி சானல் மூலம் பிரபலமாகிவிடுகிறார் வைபவ். ஹீரோயின் பல்லக் அங்கு தான் ஹீரோவை சந்திக்கிறார். பின் லவ், பிரேக் அப் என ஓடுகிறது.

போராட்ட பிரச்சனைக்கு காரணமாக இருக்கின்ற அரசியல் வாதி வைபவ் ஐ கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். இதற்கிடையில் கண் பிரச்சனையை மறைத்த வைபவ் காதலில் ஜெயித்தாரா, அரசியல் வாதியிடம் இருந்து தப்பினாரா என்பதே இந்த சிக்ஸர்.

*🌀படத்தை பற்றிய அலசல்*🌀

வைபவ் ஐ இதயம் முரளியாக நாம் கடைசியாக பேட்ட படத்தில் பார்த்திருப்போம். சரோஜா, மங்காத்தா, சென்னை 28 என பல படங்கள் மூலம் பிரபலமானவர் ஒரு முழு ஹீரோவாக அவர் மேயாத மான் படம் மூலம் தனக்க வெற்றி இடத்தை பிடித்தார். அவருக்கான ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.

தற்போது அவர் சிக்ஸர் படத்தில் களமிறங்கியுள்ளார். படத்தின் பெயருக்கேற்றார் போல அவர் 6 மணிக்கு மேல் அடித்தால் சிக்ஸர் தான். வழக்கம் போல அவருக்கான ஒரு சிம்பிளான ஹீரோயிசம் இப்படத்திலும். அதிலும் கடற்கரை போராட்ட காமெடி பலரையும் சிரிக்க வைத்தது.

ஹீரோவுடன் சதிஷ் காமெடியனாக கூட்டு சேர்ந்துள்ளார். இப்படத்தில் சதிஷ் காமெடி நல்ல என்ஜாய்மெண்ட். அதிலும் அவர் கவின், லோஸ்லியா, மோகன் வைத்யா, வனிதாவை வைத்து கமெண்ட் அடித்ததற்கு நல்ல வரவேற்பு. ஹீரோ, காமெடியன் காம்போ நல்ல ஒர்க்கவுட்.

செய்தி தொகுப்பாளராக ஹீரோயின் பல்லக் ஹீரோவுக்கு இணையாக கேரக்டரில் சேர்ந்துள்ளார். காதல் பிரேக் அப், அப்பாவித்தனமாக நம்புவதிலும் அவரிடம் ஒரு எதார்த்தமான ஒரு ஃபீல். இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் இப்படத்தில் ரியல் லவ் ஃபீல் போல தான்.

அப்பாவாக இளவரசும், அம்மாவாக ஸ்ரீ ரஞ்சனியும் செய்யும் காமெடியான விசயங்களும், ராதா ரவி செய்யும் காமெடிகளும் ஆங்காங்கே படத்தை நிறைக்கின்றன.

சேட்டா ரவுடியாக என்னமா ராமர் தனக்கே உரிய அந்த ஹிட் பாடலால் எண்ட்ரி ஆவது படத்தில் கூடுதல் ஃபன். கலக்கப்போவது யாரு புகழ் குரேஷி, ஒல்லியான ஒருவர் செய்யும் காமெடிகள் சிம்பிள்.

இயக்குனர் சாச்சி படத்தின் காட்சிகளை திட்டமிட்டு கொண்டு சென்றுள்ளார் என்பது நன்றாக தெரிகிறது. முதல் பாதி இயல்பாக செல்வதும், இரண்டாம் பாதி சீரியஸாக கொண்டுபோனதால் படம் இண்ட்ரஸ்டிங்க்.

வாழ்க்கையில் சில குறைகளை சகித்துகொள்வது, சில குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தான் வழி என ஹீரோயின் மூலம் சொல்லும் மெசேஜ் நிதர்சனமான உண்மை.

ஒளிப்பதிவாளர் காட்சிகளை காட்டிய விதமும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாடல்களும் படத்திற்கு பொருத்தமானது.

*👏🏻கிளாப்ஸ்*👏🏻

வைபவ்வின் கதை தேர்வு சரியான ஜாலி ரைட். 6 மணி பிரச்சனையை சமாளிக்கும் விதம் நன்று.

சதிஷ் ஹீரோ காம்போ காமெடி, சூப்பர் ஸ்டாரின் போராட்ட கருத்துக்கு கமெண்ட்ஸ், போராட்டத்தில் லைட் அடிக்கும் காட்சிகளுக்கு நல்ல கிளாப்ஸ்.

*💡பல்பஸ்*💡

படத்தில் என்னமா ராமர் காட்சிகளால் ஓவர் காமெடி போல ஒரு ஃபீல்..

மொத்தத்தில் சிக்ஸர் பெயருக்கேற்றார் போல மக்களிடமும் சிக்ஸர் அடிக்கும். சிரிப்புக்கு கியாரண்டி.

சாஹோ திரை விமர்சனம்


சாஹோ திரை விமர்சனம்

   
*சுருக்கமான விமர்சனம் ஒரு குழந்தை கையில் 300 கோடி குடுத்தா அது என்ன பண்ணும்?*



பாகுபலி என்றே ஒரே படத்தின் மூலம் ஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆனவர் பிரபாஸ். ஆனால், அதற்காக அவர் ஏதோ லக்கில் ஜெயித்தார் என்று சொல்ல முடியாது. தன் 5 வருட உழைப்பை பாகுபலிக்காக கொடுத்தார் பிரபாஸ். அப்படி மீண்டும் தன் PAN இந்தியா மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள பிரபாஸ் எடுத்த களமே சாஹோ, இது அவர் முயற்சிக்கு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.

*⭐கதைக்களம்*⭐

ராய்(ஜாக்கி ஷெரப்) உலகின் மிகப்பெரும் கேங்க்ஸ்டர், இவர் இந்தியாவில் காலடி எடுத்து வைக்க முயற்சி செய்யும் நேரத்தில் சிலரால் தாக்கப்பட்டு இறக்கின்றார். இதை தொடர்ந்து அவர்கள் இந்தியாவிற்குள் கொண்டு வந்த பல லட்சம் கோடி பணமும் எரிந்து நாசமாகின்றது.

அதே நேரத்தில் பணம் இன்னும் இருக்கின்றது, அதை எடுக்க வேண்டும் என்றால் ப்ளாக் பாக்ஸ் வேண்டும் என ராய் மகனாக வரும் அருண்விஜய் மற்ற கேங்ஸ்டர்களிடம் சொல்ல, அந்த ப்ளாக்பாக்ஸை எடுக்க பல கேங்ஸ்டர்கள் குறி வைக்கின்றனர், மேலும் அடுத்த ராய் யார் என்ற போட்டியும் தொடங்குகின்றது.

அப்போது பிரபாஸ் இந்த கேஸை கையில் எடுக்க, அதிரடியாக ஒரு திட்டத்தை தீட்டி அந்த ப்ளாக்பாக்ஸை பிரபாஸ் கைப்பற்ற, அதன் பின் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க, பிரபாஸ் யார், எதற்காக அந்த ப்ளாக்பாக்ஸை எடுத்தார், அதை வைத்து என்ன செய்யப்போகிறார் என்று கதை நீள்கின்றது.

*🎬படத்தை பற்றிய அலசல்*🎬

முதலில் பிரபாஸ் 5 வருடமாக இரண்டு படத்தில் நடித்த பிரபாஸ், அடுத்து மீண்டும் 3 வருடம் சாஹோவிற்கு கொடுக்க, அது அவருக்கு எந்த அளவிற்கு பயனை அளித்தது என்பது தான் கேள்விக்குறி, பாகுபலியில் இருந்த கிரேஸ் கொஞ்சம் கூட இதில் பிரபாஸிடம் இல்லை, ஒருவேளை தெலுங்கு ஆடியன்ஸிற்கு புடிக்குமா என்று தெரியவில்லை.

படம் பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்று மட்டுமே தான் இயக்குனர் சுஜித் நினைத்துள்ளாரே தவிர, படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்துவிட்டார் போல, அதிலும் படத்தின் முதல் பாதி, அட எப்படா இடைவேளை விடுவீர்கள் என்ற மனநிலைக்கு வந்த பிறகு வரும் ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் நிமிர வைக்கின்றது.

அதை விட ஷரதா கபூர் கொஞ்சம் கூட பிரபாஸிற்கு மேட்ச் இல்லை, இருவரின் கெமிஸ்ட்ரியும் நம்மை சோதிக்க தான் செய்கின்றது, குறிப்பாக சேஸிங் டைமில் டூயட் சாங் பாடுவது தியேட்டர் கேண்டினுக்கு நல்ல லாபம். ஒரு ஹீரோ என்றால் ஒரு முறையாவது தோற்க வேண்டும், பிறகு எழுந்து வரும் போது தான் நமக்கே விசில் அடிக்க தோன்றும்.

இதில் பிரபாஸ் 2000 பேரை கொள்கின்றார், அவர் மீது 10 ஆயிரம் புல்லட் சுடப்படுகின்றது, அதில் ஒரு புல்லட் மட்டுமே அவர் மீது படுகின்றது மொத்த படத்தில், இப்படி லாஜிக் பூ சுத்தலாம், ஆனால், இங்கு பூக்கடையே மாட்டியுள்ளனர்.

படத்தின் ஆறுதலான விஷயம் கிளைமேக்ஸ் காட்சிகள், அதன் ஆக்‌ஷன் காட்சிகள், அடுத்தடுத்து வரும் திருப்பம் இது படம் முழுவதும் இல்லாதது பெரிய மைனஸ், மேலும், ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல், மதியின் ஒளிப்பதிவு தனித்துவம்.

*👏🏻க்ளாப்ஸ்*👏🏻

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு

படத்தின் கிளைமேக்ஸ்

*💡பல்ப்ஸ்*💡

லாஜிக்கே இல்லாமல் சோர்வாக செல்லும் திரைக்கதை.

அருன்விஜய், ஜாக்கி ஷெரப், நீல்நிதின் முகேஷ் என பல பிரபலங்களை பெரியளவில் பயன்படுத்தாது.

மொத்தத்தில் ரூ 300 கோடி பணத்தை ஒரு குழந்தை கையில் கொடுத்தால் என்ன செய்யும் என்பதன் அவுட்புட் தான் இந்த சாஹோ.

புதன், 28 ஆகஸ்ட், 2019

பஹ்ரைனில் வணக்கம் கூறிய பாரத பிரதமர் மோடி





பஹ்ரைனில் வணக்கம்  கூறிய  பாரத பிரதமர் மோடி

பஹ்ரைன் வந்திருந்த பாரத பிரதமர் திரு. Narendra Modi அவர்கள் அதன் தலைநகரான மனாமாவில், 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கிருஷ்ணர் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு, கோவிலின் பராமரிப்பு பணிகளை துவங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பஹ்ரைன் வாழும் இந்திய முக்கிஸ்தர்களை சந்தித்தார். அப்போது பஹ்ரைனில் தமிழர்களுக்கு பல சமூக சேவைகளை முன்னெடுத்து வரும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. Senthil kumar G அவர்கள் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பிரதமர் அவர்கள் "வணக்கம்" என்று தமிழில் சொன்னார். பின் பிரதமருக்கு பதில் வணக்கம் சொல்லி "நல்லா இருக்கீங்களா" என்று கேட்டவுடன் அங்குள்ள அனைவரும் ஆச்சர்யம் கலந்த முகத்துடன் சிரிப்பலைகளை ஏற்படுத்தினர்.


சனி, 24 ஆகஸ்ட், 2019

*தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்தேறிய 50 நாள் வே(சா)தனை நிகழ்வுகள்.

*தூத்துக்குடி  மாவட்டத்தில் நடந்தேறிய 50 நாள் வே(சா)தனை நிகழ்வுகள்..!*

( நடந்துக் கொண்ட இருக்கும் குற்றச் சம்பவங்களும்.. கடந்து போகும் வழக்கு விசாரணைகளும்..)

28.6.19 ● தூத்துக்குடி புதிய எஸ்பி பதவி ஏற்பு.

29.6.19 ● புளியம்பட்டி அருகே கத்தியை காட்டி பெண்ணிடம் பணம் பறிப்பு.

30.6.19 ● திருச்செந்தூரில் ஆற்று மணல் திருட்டு.

02.7.19 ● தூத்துக்குடியில் இளம்பெண் படுகொலை

03.7.19 ● ஆத்தூரில் கஞ்சா விற்பனை.

03.7.19 ● தூத்துக்குடியில் பைக் திருட்டு.

03.7.19 ● தனியார் ஆலையில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.

04.7.19 ● குளத்தூரில் இளம் தம்பதியினர் ஆணவப் படுகொலை.

04.7.19 ● தூத்துக்குடியில் நிலமோசடி.

04.7.19 ● ஆத்தூரில் தனியார் நிறுவனத்தில் திருட்டு.

05.7.19 ● புளியம்பட்டியில் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு.

08.7.19 ● விளாத்திகுளத்தில் ஆசிரியர் படுகொலை.

08.7.19 ● தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு.

09.7.19 ● தூத்துக்குடியில் துறைமுகசபை ஊழியரிடம் வழிப்பறி.

09.7.19 ● தூத்துக்குடியில் பெண்ணிடம் செயின் பறிப்பு.

10.7.19 ● தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு.

10.7.19 ● ஓட்டப்பிடாரத்தில் வீடு புகுந்து திருட்டு.

10.7.19 ● தூத்துக்குடியில் மீனவர் கொலை.

11.7.19 ● தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு.

11.7.19 ● எட்டையபுரத்தில் மாணவியிடம் நகை பறிப்பு.

12.7.19 ● நாசரேத்தில் இரண்டு வீடுகளில் நகை பணம் திருட்டு.

12.7.19 ● தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு.

12.7.19 ● தூத்துக்குடியில் கதவை உடைத்து திருட்டு.

13.7.19 ● தூத்துக்குடியில்  நண்பருக்குள் சண்டை ஒருவருக்கு அரிவாள் வெட்டு.

13.7.19 ● தூத்துக்குடியில் பெண் அடித்து கொலை.

14.7.19 ● தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு.

14.7.19 ● நாசரேத்தில் முகமூடி கொள்ளையர்களால் முதியவருக்கு கத்திக்குத்து.

15.7.19 ● கயத்தாரில் மூதாட்டி கொலை.

15.7.19 ● தூத்துக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு.

16.7.19 ● சாத்தான்குளத்தில் தோட்டத்தில்  வாழைத்தார்கள் திருட்டு.

16.7.19 ● பேரூரணியில் பெண் தலையாரியை தாக்கி தாலி செயின் பறிப்பு.

19.7.19 ● சாத்தான்குளத்தில் வழக்கறிஞருக்கு இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல்.

19.7.19 ● கோவில்பட்டியில் இளம்பெண்ணிற்கு கத்திக்குத்து.

20.7.19 ● உடன்குடியில் தங்கக்கட்டி தருவதாக கூறி செயின் பறிப்பு.

20.7.19 ● குலசேகரன்பட்டினத்தில் ஓடும்பேருந்தில் பிக் பாக்கெட்.

20.7.19 ● தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் ஊழியர் குத்திக்கொலை.

21.7.19 ● திருச்செந்தூரில் பெட்ரோல் பங்கில் திருட்டு.

22.7.19 ● குலையன்கரிசலில் திமுக பிரமுகர் படுகொலை.

24.7.19 ● தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே ஒருவருக்கு கத்திக்குத்து.

25.7.19 ● முக்காணியில் பாத யாத்திரை சென்ற நபரிடம் வழிப்பறி.

26.7.19 ● திருச்செந்தூரில் மீனவர்களிடையே கத்திக்குத்து மோதல்.

26.7.19 ● விளாத்திகுளத்தில் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்.

26.7.19 ● பாஞ்சாலங்குறிச்சியில் 1.20 கிலோ கஞ்சா பறிமுதல்.

26.7.19 ● நாசரேத்தில் பெண் வழக்கறிஞரிடம் செயின் பறிப்பு.

27.7.19 ● அத்திமரப்பட்டியில் டிராக்டரில் டீசல் திருட்டு.

27.7.19 ● ஏரலில் வியாபாரியை வழிமறித்து பணம் பறிப்பு.

28.7.19 ● தூத்துக்குடியில் இளைஞர் படுகொலை.

29.7.19 ● தூத்துக்குடி கருங்குளத்தில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை.

30.7.19 ● தூத்துக்குடியில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு.

30.7.19 ● புதியம்புத்தூரில் பெண்ணிடம் நகை பறிப்பு.

31.7.19 ● தென்திருப்பேரையில் பெண் வெட்டிக்கொலை.

02.8.19 ● தூத்துக்குடியில் கோவில் பூட்டை உடைத்து திருட்டு.

02.8.19 ● தூத்துக்குடியில் கடல் அட்டைகள் பறிமுதல்.

04.8.19 ● நாசரேத்தில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை.

07.8.19 ● தூத்துக்குடி முடிவைதானேந்தலில் ஆசிரியரிடம் செயின் பறிப்பு.

08.8.19 ● சாத்தான்குளத்தில் இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல்.

09.8.19 ● தூத்துக்குடி பள்ளியின் உள்ளே நுழைந்து திருட்டு.

09.8.19 ● கோவில்பட்டியில் பெண் வெட்டிக் கொலை.

10.8.19 ● தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு.

11.8.19 ● தூத்துக்குடி தாளமுத்துநகரில் ஆடுகள் திருட்டு.

11.8.19 ● முறப்பநாடு அருகே வழக்கறிஞர் படுகொலை.

11.8.19 ● தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து பணம் கொள்ளை.

12.8.19 ● தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு.

12.8.19 ● திருச்செந்தூரில் பன்றிகள் திருட்டு.

12.8.19 ● செய்துங்கநல்லூரில் கள்ளச் சாராயம் விற்பனை.

12.8.19 ● தூத்துக்குடியில் வழக்கறிஞரின் காருக்கு தீ வைப்பு.

13.8.19 ● கடம்பூரில் டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளை.

14.8.19 ● ஆத்தூரில் கோவிலில் திருட்டு.

14.8.19 ● தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து.

 15.8.19 ● ஆத்தூரில் டாஸ்மாக் ஊழியரிடம் நகை பணம் கொள்ளை.

15.8.19 ● தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை.

17.8.19 ● திருச்செந்தூர் உதவி ஆய்வாளரிடம் ரூ 30 ஆயிரம் மோசடி.

17.8.19 ● தூத்துக்குடி மீனவர் வீட்டில் பணம் நகை திருட்டு.

18.8.19 ● ஆழ்வார்திருநகரியில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை.

19.8.19 ● கோவில்பட்டியில் பொறியாளர் மீது கொலை வெறி தாக்குதல்.

19.8.19 ● நாசரேத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு.

20.8.19 ● தூத்துக்குடி வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்.

21.8.19 ● கோவில்பட்டியில் பூட்டை உடைத்து திருட்டு.

21.8.19 ● காவல்நிலையம் அருகே ஒருவர்   படுகொலை.

21.8.19 ● ஆத்தூரில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்.

21.8.19 ● நாசரேத்தில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு.


வியாழன், 15 ஆகஸ்ட், 2019

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் காலமானார்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்


தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் காலமானார்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

August 16,2019

சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழக கிரிக்கெட் வீரருமான விபி சந்திரசேகர் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 15) காலமானார். முன்னதாக அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது.

57 வயதாகும் விபி சந்திரசேகருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். தமிழக கிரிக்கெட் வீரரான விபி சந்திரசேகர், இந்திய அணிக்காக 1988 முதல் 1990வரையிலான காலகட்டத்தில் விளையாடி இருக்கிறார்.

இன்னும் ஆறு நாட்களில் தன் 58வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். அவர் இந்திய அணிக்கு ஏழு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி 88 ரன்கள் எடுத்துள்ளார்.

எனினும், தமிழக அணிக்காக பெரிய அளவில் ரன் குவித்துள்ளார். 81 முதல் தர போட்டிகளில் 4,999 ரன்கள் குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 237 ஆகும். ரஞ்சி தொடரில் 56 பந்துகளில் சதம் அடித்து, விரைவாக சதம் அடித்தவர் என்ற சாதனையை நீண்ட நாள் தன் வசமாக வைத்திருந்தார்.

தன் ஓய்வுக்குப் பின் கிரிக்கெட் வர்ணனையாளர், பயிற்சியாளர் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்தார். தமிழக ரஞ்சி அணிக்கும் சில காலம் பயிற்சியாளராக இருந்தார். அதன் பின் இந்திய அணி தேர்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்தார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு முதல் மூன்று வருடங்கள் மானேஜராக பணியாற்றினார். டிஎன்பிஎல் தொடரில் விபி காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளரும் இவரே. தனி மனிதராக ஒரு அணியை வாங்கி நடத்துவது அத்தனை சுலபமல்ல என்றாலும், கிரிக்கெட் மீது கொண்ட வேட்கை காரணமாக அதை செய்து வந்தார் சந்திரசேகர்.

சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் பிற கிரிக்கெட் வீரர்கள் விபி சந்திரசேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்: இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!!



டி.என்.பி.எல். கிரிக்கெட்: இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!!

August 16,2019

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் கோபிநாத் ஆகியோர் களமிறங்கினர். இதில் கோபிநாத் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து கங்கா ஸ்ரீதர் ராஜூ 4 ரன்னிலும், விஜய் சங்கர் 1 ரன்னிலும் கேட்ச் ஆகினர். அதற்கு பின் கவுசிக் காந்தி 22 ரன்னிலும், சுஷில் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சசிதேவ் மற்றும் முருகன் அஸ்வின் அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். இதில் பொறுப்பாக ஆடிய சசிதேவ் 44 ரன்களிலும், அடுத்து வந்த ஹரிஷ்குமார் 1 ரன்னிலும், சித்தார்த் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. கடைசியில் முருகன் அஸ்வின் 28 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ஜெ.கவுசிக் மற்றும் அபினவ் 2 விக்கெட்டுகளும், ரோகித் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. பெரியசாமி பந்து வீச்சில், ஜெகதீசன் மற்றும் சதுர்வே டக் அவுட்டாகி வெளியேறினர். அதற்கு பின்  ஹரி நிஷாந் 4 ரன்னில் கேட்ச் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த சுமந்த் ஜெயின் மற்றும் அபினவ் அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். இதில் அபினவ் 21 ரன்னிலும், அடுத்து வந்த விவேக் 23 ரன்னிலும் கேட்ச் ஆகினர்.

அதற்கு பின், பொறுப்பாக ஆடிய சுமந்த் ஜெயின் 46 ரன்களிலும், முகமது 15 ரன்னிலும், ரோகி 2 ரன்னிலும், ஜெ.கவுசிக் ரன் எதுவும் எடுக்காமலும், ஆட்டமிழந்தனர்.

இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசியில் பிரணேஷ் மற்றும் சிலம்பரசன் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய பெரியசாமி 5 விக்கெட்டுகளை சாய்தார். மேலும் அலெக்சாண்டர் 2 விக்கெட்டுகளும், ஹரிஷ்குமார் மற்றும் விஜய் சங்கர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

திருப்பூரில் நடந்த இயற்கை திருமணம் ; இப்படி ஒரு நிகழ்வை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள

திருப்பூரில் நடந்த இயற்கை திருமணம் ; இப்படி ஒரு நிகழ்வை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள



சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடம்பரமாக, ஊரில் உள்ள பெரும் செல்வந்தர்கள் வீட்டில் நடக்கும் திருமணம்என்றால் நாம் ஆச்சரியமாக பார்ப்போம். அதுவும் சொகுசு காரில் வந்து இறங்குவது, வெளியூர் அல்லது பிரபலமான குழுவின் பாட்டுக்கச்சேரி, என தூள் பறக்கும் திருமணம் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.



ஆனால் திருப்பூரை சேர்ந்த ஒரு குடும்பம் இதையெல்லாம் செய்யாமல் முற்றிலும் இயற்கையான முறையில் திருமணம் செய்து நம்மை ஆச்சரியப்பட வைத்துவிட்டது.



ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இயற்கையாக விவசாயம் செய்யும் இவர் சாயபட்டறை கழிவுகளுக்கு எதிராக போராடியும் வருகிறார். மேலும் பிளாஸ்டிக் பை, கேரிபேக், கப் என சூழலை கெடுப்பதற்கு எதிராகவும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.



இவர் தன் மகள் கீதாஞ்சலிக்கு திருப்பூரை சேர்ந்த லோகேஷ்வரன் என்பவருக்க சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்தை முற்றிலும் இயற்கையாக, செய்து அசத்திவிட்டார்.



இவர் திருமணத்தில் உணவிற்காக வந்த காய்கறிகள் எல்லாம் தன் தோட்டம் இயற்கை விவசாயம் மூலம் விளைந்தது தான். மேலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்துவதால் அதன் சத்துக்கள் எல்லாம் போய்விடும் என்பதால் நேரடியாக மழை நீரை சேமித்துவைத்து அதை தான் உணவுதயாரிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தியுள்ளார்.



மேலும் திருமண விருந்தின் போது தண்ணீர் கொடுக்க பிளாஸ்டிக் கப்பிற்கு பதிலாக செம்பு கப்பை பயன்படுத்தியுள்ளார். இவர் வீட்டில் மட்டுமமல்ல இவருக்கு தெரிந்தவர்கள் வீட்டிலும் மழை நீரை சேமித்து வைக்க சொல்லி அதை சுமார் ரூ1.5 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.



மேலும் இந்த திருமணத்திற்கு வரும் குழந்தைகள் விளையாட பனை நுங்கு வண்டியை தயார் செய்து வைத்திருந்தார். இவரது திருமணத்திற்கு சென்றவர்கள் எல்லாம் இதை கண்டு பெரும் வியப்பிற்குள்ளாகிவிட்டனர்.


இவ்வாறு ஆரோக்கியத்தையும், உடல்நலனையும் கொண்டு நடந்த இந்த திருமணம் பலரை கவர்ந்துள்ளது. இந்த தகவல் வைரலாகி வருகிறது.