சிக்ஸர் திரைவிமர்சனம்
சினிமாவில் நல்ல கதைகளை தாங்கி வரும் படங்களுக்கு மக்கள் நல் ஆதரவளிப்பார்கள் என்பது அண்மைகாலமாக நிரூபிக்கப்பட்டவருகிறது. அதில் எந்த நடிகர் நடித்திருந்தாலும் அப்படம் நல்ல வசூலை ஈட்டுகிறது. அப்படியான ரகமாக சிக்ஸர் வந்துள்ளது. வாருங்கள் சிக்ஸர் அடிக்க போகலாம்.
*🎬கதைக்களம்*🎬
படத்தின் நாயகன் வைபவ் சிவில் கள பொறியாளராக இருக்கிறார். அவரின் அப்பா இளவரசு அம்மா ஸ்ரீ ரஞ்சினி. வைபவ்க்கு மாலை 5.30 மணியாகிவிட்டால் நேரடியாக வீடு தான். பிரச்சனை என்னவெனில் அவரின் கண் தான்.
இப்படி அவர் வீட்டிற்கு செல்லும் போது ஒரு நாள் எதிர்பாராத விதமாக கடற்கரையில் கிடக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை. அப்போது ஒரு பெரும் போராட்டம் அங்கு நடக்க, வழக்கம் போல அதை போலிசார் கலைக்க முற்பட அதில் நிஜ போராளியாக செய்தி சானல் மூலம் பிரபலமாகிவிடுகிறார் வைபவ். ஹீரோயின் பல்லக் அங்கு தான் ஹீரோவை சந்திக்கிறார். பின் லவ், பிரேக் அப் என ஓடுகிறது.
போராட்ட பிரச்சனைக்கு காரணமாக இருக்கின்ற அரசியல் வாதி வைபவ் ஐ கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். இதற்கிடையில் கண் பிரச்சனையை மறைத்த வைபவ் காதலில் ஜெயித்தாரா, அரசியல் வாதியிடம் இருந்து தப்பினாரா என்பதே இந்த சிக்ஸர்.
*🌀படத்தை பற்றிய அலசல்*🌀
வைபவ் ஐ இதயம் முரளியாக நாம் கடைசியாக பேட்ட படத்தில் பார்த்திருப்போம். சரோஜா, மங்காத்தா, சென்னை 28 என பல படங்கள் மூலம் பிரபலமானவர் ஒரு முழு ஹீரோவாக அவர் மேயாத மான் படம் மூலம் தனக்க வெற்றி இடத்தை பிடித்தார். அவருக்கான ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.
தற்போது அவர் சிக்ஸர் படத்தில் களமிறங்கியுள்ளார். படத்தின் பெயருக்கேற்றார் போல அவர் 6 மணிக்கு மேல் அடித்தால் சிக்ஸர் தான். வழக்கம் போல அவருக்கான ஒரு சிம்பிளான ஹீரோயிசம் இப்படத்திலும். அதிலும் கடற்கரை போராட்ட காமெடி பலரையும் சிரிக்க வைத்தது.
ஹீரோவுடன் சதிஷ் காமெடியனாக கூட்டு சேர்ந்துள்ளார். இப்படத்தில் சதிஷ் காமெடி நல்ல என்ஜாய்மெண்ட். அதிலும் அவர் கவின், லோஸ்லியா, மோகன் வைத்யா, வனிதாவை வைத்து கமெண்ட் அடித்ததற்கு நல்ல வரவேற்பு. ஹீரோ, காமெடியன் காம்போ நல்ல ஒர்க்கவுட்.
செய்தி தொகுப்பாளராக ஹீரோயின் பல்லக் ஹீரோவுக்கு இணையாக கேரக்டரில் சேர்ந்துள்ளார். காதல் பிரேக் அப், அப்பாவித்தனமாக நம்புவதிலும் அவரிடம் ஒரு எதார்த்தமான ஒரு ஃபீல். இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் இப்படத்தில் ரியல் லவ் ஃபீல் போல தான்.
அப்பாவாக இளவரசும், அம்மாவாக ஸ்ரீ ரஞ்சனியும் செய்யும் காமெடியான விசயங்களும், ராதா ரவி செய்யும் காமெடிகளும் ஆங்காங்கே படத்தை நிறைக்கின்றன.
சேட்டா ரவுடியாக என்னமா ராமர் தனக்கே உரிய அந்த ஹிட் பாடலால் எண்ட்ரி ஆவது படத்தில் கூடுதல் ஃபன். கலக்கப்போவது யாரு புகழ் குரேஷி, ஒல்லியான ஒருவர் செய்யும் காமெடிகள் சிம்பிள்.
இயக்குனர் சாச்சி படத்தின் காட்சிகளை திட்டமிட்டு கொண்டு சென்றுள்ளார் என்பது நன்றாக தெரிகிறது. முதல் பாதி இயல்பாக செல்வதும், இரண்டாம் பாதி சீரியஸாக கொண்டுபோனதால் படம் இண்ட்ரஸ்டிங்க்.
வாழ்க்கையில் சில குறைகளை சகித்துகொள்வது, சில குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தான் வழி என ஹீரோயின் மூலம் சொல்லும் மெசேஜ் நிதர்சனமான உண்மை.
ஒளிப்பதிவாளர் காட்சிகளை காட்டிய விதமும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாடல்களும் படத்திற்கு பொருத்தமானது.
*👏🏻கிளாப்ஸ்*👏🏻
வைபவ்வின் கதை தேர்வு சரியான ஜாலி ரைட். 6 மணி பிரச்சனையை சமாளிக்கும் விதம் நன்று.
சதிஷ் ஹீரோ காம்போ காமெடி, சூப்பர் ஸ்டாரின் போராட்ட கருத்துக்கு கமெண்ட்ஸ், போராட்டத்தில் லைட் அடிக்கும் காட்சிகளுக்கு நல்ல கிளாப்ஸ்.
*💡பல்பஸ்*💡
படத்தில் என்னமா ராமர் காட்சிகளால் ஓவர் காமெடி போல ஒரு ஃபீல்..
மொத்தத்தில் சிக்ஸர் பெயருக்கேற்றார் போல மக்களிடமும் சிக்ஸர் அடிக்கும். சிரிப்புக்கு கியாரண்டி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக