திங்கள், 12 ஆகஸ்ட், 2019

திருப்பூரில் நடந்த இயற்கை திருமணம் ; இப்படி ஒரு நிகழ்வை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள

திருப்பூரில் நடந்த இயற்கை திருமணம் ; இப்படி ஒரு நிகழ்வை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள



சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடம்பரமாக, ஊரில் உள்ள பெரும் செல்வந்தர்கள் வீட்டில் நடக்கும் திருமணம்என்றால் நாம் ஆச்சரியமாக பார்ப்போம். அதுவும் சொகுசு காரில் வந்து இறங்குவது, வெளியூர் அல்லது பிரபலமான குழுவின் பாட்டுக்கச்சேரி, என தூள் பறக்கும் திருமணம் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.



ஆனால் திருப்பூரை சேர்ந்த ஒரு குடும்பம் இதையெல்லாம் செய்யாமல் முற்றிலும் இயற்கையான முறையில் திருமணம் செய்து நம்மை ஆச்சரியப்பட வைத்துவிட்டது.



ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இயற்கையாக விவசாயம் செய்யும் இவர் சாயபட்டறை கழிவுகளுக்கு எதிராக போராடியும் வருகிறார். மேலும் பிளாஸ்டிக் பை, கேரிபேக், கப் என சூழலை கெடுப்பதற்கு எதிராகவும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.



இவர் தன் மகள் கீதாஞ்சலிக்கு திருப்பூரை சேர்ந்த லோகேஷ்வரன் என்பவருக்க சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்தை முற்றிலும் இயற்கையாக, செய்து அசத்திவிட்டார்.



இவர் திருமணத்தில் உணவிற்காக வந்த காய்கறிகள் எல்லாம் தன் தோட்டம் இயற்கை விவசாயம் மூலம் விளைந்தது தான். மேலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்துவதால் அதன் சத்துக்கள் எல்லாம் போய்விடும் என்பதால் நேரடியாக மழை நீரை சேமித்துவைத்து அதை தான் உணவுதயாரிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தியுள்ளார்.



மேலும் திருமண விருந்தின் போது தண்ணீர் கொடுக்க பிளாஸ்டிக் கப்பிற்கு பதிலாக செம்பு கப்பை பயன்படுத்தியுள்ளார். இவர் வீட்டில் மட்டுமமல்ல இவருக்கு தெரிந்தவர்கள் வீட்டிலும் மழை நீரை சேமித்து வைக்க சொல்லி அதை சுமார் ரூ1.5 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.



மேலும் இந்த திருமணத்திற்கு வரும் குழந்தைகள் விளையாட பனை நுங்கு வண்டியை தயார் செய்து வைத்திருந்தார். இவரது திருமணத்திற்கு சென்றவர்கள் எல்லாம் இதை கண்டு பெரும் வியப்பிற்குள்ளாகிவிட்டனர்.


இவ்வாறு ஆரோக்கியத்தையும், உடல்நலனையும் கொண்டு நடந்த இந்த திருமணம் பலரை கவர்ந்துள்ளது. இந்த தகவல் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக