தமிழகம் முழுவதும் நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு
Update on
Aug 31, 2019
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப் - 4 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை செப்டம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், வரைவாளர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வை நடத்தும் பணிகளில் சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப் படவுள்ளனர். நாளை நடைபெறும் இந்த தேர்வுக்கு 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு மையத்துக்கு பேனா மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
அவ்வாறு கொண்டு வரும் பொருட்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரவியலாது என அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வெழுத செல்வோருக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக