திங்கள், 30 செப்டம்பர், 2019

திருப்பதி திருக்குடைகள் கவுனி தாண்டின! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


திருப்பதி திருக்குடைகள் கவுனி தாண்டின!
லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஏழுமலையானை எப்போதும் நீங்காதிருக்கும் ஆதிசேஷன் அம்சம்தான் திருக்குடைகள். பெருமாளுக்கு உகந்த அஷ்ட மங்கள பொருட்களில் ஒன்றான திருக்குடைகள், திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, ஹிந்து தர்மார்த்த சமிதியின் சார்பில் தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன் சமர்ப்பிக்கப்படுகின்றன.


திருக்குடைகள் தரிசித்தால் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடிகள் விலகும். நாட்டில் சுபிட்சம் பெருகும், மழை பெய்யும், வியாபாரம் அபிவிருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆண்டுக்கான, திருப்பதி திருக்குடை ஊர்வல தொடக்க விழா சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் நேற்று காலை 10.31 மணிக்கு தொடங்கியது. விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்ரி வரவேற்றார். விசாகா ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்ரா சரஸ்வதி மகா சுவாமி மற்றும் விசாகா ஸ்ரீ சாரதா பீடம் உத்தர பீடாதிபதி ஸ்வத்மனந்தேந்த்ர சரஸ்வதி சுவாமி ஆகியோர் அருளாசி வழங்கி, திருக்குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.


விசுவ இந்து பரிசத் – தமிழ்நாடு நிறுவனரும், இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலருமான வேதாந்தம், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினரும் உளுந்துார்பேட்டை எம்எல்ஏவுமான குமரகுரு, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் சிறப்பு அழைப்பாளர் சேகர்ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் தொடங்கி, என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை விழியாக திருக்குடை ஊர்வலம் சென்றது. வழிநெடுக லட்சக்கணக்கான பக்தர்கள், விரதமிருந்து, குடும்பத்துடன் தரிசித்தனர். திருக்குடைகள் மீது பூக்களை, மாலைகளை வீசி, தொட்டு வணங்கி, தங்கள் பிரார்த்தனைகளை செலுத்தினர். தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 5.45 மணிக்கு யானை கவுனியை திருக்குடைகள் தாண்டின.


திருக்குடைகள், அக்டோபர் 2ம் தேதி, மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானுார் சென்றடைகிறது. அக்டோபர் 3ம் தேதி திருமலையில் மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

கோவில்பட்டியில் ஆம்காட் நிறுவனம் சார்பில் நடந்த பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு விழாவில் மதி அகடாமியின் இயக்குனர் த.புவனேஸ்வரி மகேந்திரனுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கி அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பாராட்டு




கோவில்பட்டியில் ஆம்காட் நிறுவனம் சார்பில் பாலித்தீன் ஒழிப்பை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு விழா வில் மதி அகடாமியின் இயக்குனர் த.புவனேஸ்வரி மகேந்திரனுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கி 
அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பாராட்டு

கோவில்பட்டியில் பாலித்தீன் ஒழிப்பை வலியுறுத்தி ஆணி படுக்கையின் மீது யோகா செய்த தியாகராஜன் என்பவருக்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பாராட்டு தெரிவித்து ஊக்கத் தொகை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழைய பேரூந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் ஆம்காட் நிறுவனம் சார்பில் பாலித்தீன் ஒழிப்பை வலியுறுத்தி தியாகராஜன் என்பவர் ஆணி படுக்கையில் 71 ஆசனங்கள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  துவக்கி வைத்து, தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கப் பரிசாக ரூ.5,000/-த்தையும், ஆணி படுக்கையில் 71 ஆசனங்கள் நிகழ்த்தியமைக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பையும் வழங்கினார். மேலும் திருநெல்வேலி மதி அகடாமியின் இயக்குனர் த.புவனேஸ்வரி மகேந்திரனுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் அமைச்சர் பேசுகையில், மத்திய அரசு யோகா ஆசனத்தை அனைத்து மாநிலங்களிலும் ஊக்குவிக்கிறது. யோகா என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான ஆன்மிக அறிவியலாகும். நமது உணர்வு, உடல், மனது ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அருமையான கலையாகவும் யோகா அமைந்துள்ளது. தமிழகத்தில், அம்மாவின் அரசு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்கள் யோகா ஆசனத்தை அறிந்து கொள்ளும் விதமாக அனைத்து பாடநூல்களிலும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யோகா குறித்து அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது. யோகா செய்வதால் நமது உடலும் புத்துணர்வு பெற்று ஆரோக்கியமாக இருக்கவும், மனதும் அமைதி உண்டாகவும் வழிவகுக்கிறது எனவே, மாணவ, மாணவியர்கள் யோகா ஆசனத்தை செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றார்.


முன்னதாக கோவில்பட்டி மணியாச்சி விளக்கு அருகில் ஹைடெக் ஆவின் பாலகத்தினை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, திறந்து வைத்து, ஆவின் பொருட்களை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, பொது மேலாளர், ஆவின் தங்கையா, விற்பனை மேலாளர் சாந்தி, தலைவர், ஆம்காட் நிறுவனம் சி.வி..விக்ரம் சூரியவர்மா, பொது செயலாளர் ஜெ.பத்மநாதன், பொருளாளர் ஆடம்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முக்கிய பிரமுகர்கள் அய்யாதுரை பாண்டியன், விஜயபாண்டியன், ரமேஷ், ராமசந்திரன், வினோபாஜி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 28 செப்டம்பர், 2019

பாலித்தீன் ஒழிப்பை வலியுறுத்தி ஆணி படுக்கையில் யோகா : அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பாராட்டு


பாலித்தீன் ஒழிப்பை வலியுறுத்தி ஆணி படுக்கையில் யோகா : அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பாராட்டு

கோவில்பட்டியில் பாலித்தீன் ஒழிப்பை வலியுறுத்தி ஆணி படுக்கையின் மீது யோகா செய்த தியாகராஜன் என்பவருக்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பாராட்டு தெரிவித்து ஊக்கத் தொகை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழைய பேரூந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் ஆம்காட் நிறுவனம் சார்பில் பாலித்தீன் ஒழிப்பை வலியுறுத்தி தியாகராஜன் என்பவர் ஆணி படுக்கையில் 71 ஆசனங்கள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  துவக்கி வைத்து, தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கப் பரிசாக ரூ.5,000/-த்தையும், ஆணி படுக்கையில் 71 ஆசனங்கள் நிகழ்த்தியமைக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பையும் வழங்கினார். மேலும் திருநெல்வேலி மதி அகடாமியின் இயக்குனர் த.புவனேஸ்வரி மகேந்திரனுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




விழாவில் அமைச்சர் பேசுகையில், மத்திய அரசு யோகா ஆசனத்தை அனைத்து மாநிலங்களிலும் ஊக்குவிக்கிறது. யோகா என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான ஆன்மிக அறிவியலாகும். நமது உணர்வு, உடல், மனது ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அருமையான கலையாகவும் யோகா அமைந்துள்ளது. தமிழகத்தில், அம்மாவின் அரசு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்கள் யோகா ஆசனத்தை அறிந்து கொள்ளும் விதமாக அனைத்து பாடநூல்களிலும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யோகா குறித்து அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது. யோகா செய்வதால் நமது உடலும் புத்துணர்வு பெற்று ஆரோக்கியமாக இருக்கவும், மனதும் அமைதி உண்டாகவும் வழிவகுக்கிறது எனவே, மாணவ, மாணவியர்கள் யோகா ஆசனத்தை செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றார்.

முன்னதாக கோவில்பட்டி மணியாச்சி விளக்கு அருகில் ஹைடெக் ஆவின் பாலகத்தினை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, திறந்து வைத்து, ஆவின் பொருட்களை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, பொது மேலாளர், ஆவின் தங்கையா, விற்பனை மேலாளர் சாந்தி, தலைவர், ஆம்காட் நிறுவனம் சி.வி..விக்ரம் சூரியவர்மா, பொது செயலாளர் ஜெ.பத்மநாதன், பொருளாளர் ஆடம்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முக்கிய பிரமுகர்கள் அய்யாதுரை பாண்டியன், விஜயபாண்டியன், ரமேஷ், ராமசந்திரன், வினோபாஜி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் தேர்வு


தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் தேர்வு

* ரூபா குருநாத் ஐசிசி முன்னாள் தலைவர்  ஸ்ரீனிவாசனின் மகள் ஆவார்

* தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ரூபா குருநாத் என்பது குறிப்பிடத்தக்கது
#RupaGurunath | #TNCA 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஶ்ரீமுத்தாரம்மன் திருகோவில் தசரா திருவிழா கொடியேற்றம்


குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஶ்ரீமுத்தாரம்மன் திருகோவில் தசரா திருவிழா கொடியேற்றம்

புரட்டாசி மாதம்12 ம் தேதி 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 07.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெரும்
அதன் பின்னர் காலை 8.00 மணியில் இருந்து கோவில் வளாகத்தில் திருகாப்பு கட்டப்படும்
29.09.19 ஞாயிறு   1ம் திருநாள்
30.09.19 திங்கள்   2ம் திருநாள்
01.10.19 செவ்வாய்3ம் திருநாள்
02.10.19 புதன்         4ம் திருநாள்
03.10.19 வியாழன்  5ம் திருநாள்
04.10.19 வெள்ளி    6ம் திருநாள்
05.10.19 சனி           7ம் திருநாள்
06.10.19 ஞாயிறு.   8ம் திருநாள்
07.10.19 திங்கள்     9ம் திருநாள்
08.10.19 செவ்வாய் 10ம் திருநாள்
10ம் திருவிழா (செவ்வாய்க்கிழமை) அன்று இரவு 10.30மணிக்குஅம்பாள் சிம்மவாகனத்தில் சென்று குலசேகரன்பட்டினம் கடற்கரை வளாகத்தில் இரவு 12.00 மணிக்கு *மகிஹாசூரசம்ஹாரம்* நடைபெறும்.
09.10.2019 திருவிழா அன்று அதிகாலை 03.00 மணிக்கு அம்பாள் சப்பரத்தில் குலசை திருவிதிஉலா வந்து மாலை 5.30 மணிக்கு கொடி இறக்கப்பட்டு அதன் பின்னர் திருகாப்பு களைக்கப்படும் அதன் பின்னர் சிறப்பு அபிசேகம் மற்றும் தீபாதாரனை பெற்று தசரா திருவிழா நிறைவுபெறும்

இந்தியாவில் வேறு எங்கும் கான முடியாத ஆண்டுக்கு ஒருமுறை நடை பெறும் இந்த தசரா திருவிழாவை கான அனைவரையும் அன்புடன்... அழைக்கிறோம்

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி இன்று சங்கரன்கோவிலில் முழு கடையடைப்பு


சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க  கோரி இன்று  சங்கரன்கோவிலில் முழு கடையடைப்பு!!

ஆட்டோக்கள் ஓடவில்லை விசைத்தறி கூடங்கள் மூடல் , வியாபாரிகள், பொதுமக்கள், பேரணியாக சென்று வட்டாச்சியரிடம் மனு அளிக்கின்றனர்

புதன், 11 செப்டம்பர், 2019

வறுமை பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடமுங்க


வறுமை பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடமுங்க.. !

 September 11, 2019: இந்தியா, உலகம், பொருளாதாரம்.

*டெல்லி: உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம். World Poverty Clock என்ற அமைப்பின் புள்ளி விவரத்தை மேற்கோள்காட்டி The Spectator Index என்கிற ட்விட்டர் பக்கத்தில் உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.*

அதன் விபரம்;

1.நைஜீரியா 15.7℅

2.காங்கோ 10℅

3.இந்தியா 8℅

4.எத்தியோப்பியா 4.6℅

5.தான்சானியா 3℅

6.வங்கதேசம் 2.3℅

7.தென்னாப்பிரிக்கா 2.3%;

8.இந்தோனேசியா 2.1%;

9.ஏமன்- 1.6%; 10.பிரேசில் 1.1%;

11.சீனா- 0.9%;

12.பாகிஸ்தான் 0.3%;

13அமெரிக்கா- 0.3% ;

14.மெக்சிகோ- 0.35


ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

500மீ தொலைவில் லேண்டர்...


500மீ தொலைவில் லேண்டர்...

நிலவின் மேற்பரப்பில் தகவல்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலவில் தரையிறங்க வேண்டிய இடத்திலிருந்து 500மீ தொலைவில் லேண்டர் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், லேண்டர் சேதமின்றி முழுமையாக இருப்பதை ஆர்பிட்டர் கருவி படம் பிடித்துள்ளதாகவும், அப்படம் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  

சனி, 7 செப்டம்பர், 2019

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார்



மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார்


*ராம் ஜெத்மலானிக்கு வயது 95. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாகிஸ்தானில் பிறந்த இவர் இந்தியா - பாக் பிரிவினையின் போது, இந்தியாவில் குடியேறினார். 17 வயதில் பாம்பே பல்கலைக்கழகத்தில் இவர் எல்எல்பி பட்டம் பெற்று வழக்கறிஞரானர். அப்போது தொடங்கிய இவரின் வழக்கறிஞர் பயணம் 2017 வரை நீடித்தது.ராம் ஜெத்மலானி மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். பாஜக மறைந்த தலைவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1996-2000 வரை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்துள்ளார். அதன்பின் 2004ல் இவர் லக்னோ தொகுதியில் வாஜ்பாயை எதிர்த்து நின்று போட்டியிட்டார். ஆனால் மீண்டும் 2010ல் இவர் பாஜகவில் சேர்ந்தார். அதன்பின் ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார். ராம் ஜெத்மலானி பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவராகவும் இருந்தவர். முக்கிய வழக்குகள் பலவற்றில் இவர் ஆஜராகி வாதம் செய்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் 7 தமிழர்களுக்காக இவர் 2011ல் சென்னை ஹைகோர்ட்டில் ஆஜர் ஆனார். பாஜக மூத்த உறுப்பினர் அத்வானியின் ஹவாலா வழக்கு, 2 ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்காக ஆஜர் ஆனார்.ஜெகன் மோகன் ரெட்டி சிபிஐ வழக்கு, எடியூரப்பா பண மோசடி வழக்கு, ஆசாரம் பாபு பாலியல் குற்ற வழக்கு, லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கு, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு ஆகிய வழக்குகளில் இவர் ஆஜர் ஆகி இருக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இவர் ஆஜர் ஆகி செய்த வாதங்கள் நாடு முழுக்க பிரபலம். இந்த நிலையில் கடந்த 2017ல் இவர் வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதே போல் அரசியல் வாழ்க்கை, பொது வாழ்க்கை இரண்டில் இருந்தும் ஓய்வு பெற்று வீட்டில் நாட்களை கழித்துக் கொண்டார். கடந்த சில நாட்களாக இவர் உடல் நலக்குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் இன்று காலை வயோதிகம் மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக காலமானார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் உடலுக்கு இன்று முக்கிய அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 5 செப்டம்பர், 2019

ஒரு நல்ல ஆசிரியர் இப்படி தான் இருக்கணும்


ஒரு நல்ல ஆசிரியர் இப்படி தான் இருக்கணும்!


🌺பல பள்ளிகளில் ஆசிரியர் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டாலும் பல மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு அதை படிப்பதில்லை. சில ஆசிரியைகள் படிக்கும் முறையை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி சொல்லி தருகிறார்கள். அப்படியான ஒரு ஆசிரியைதான் புவனேஸ்வரி.


🌺இவர் கற்பிக்கும் முறைக்காகவே இவரிடம் மாணவ மாணவிகள் விரும்பி பயில்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்கள் மூலம் இந்த ஆசிரியை மிகவும் பிரபலமானார். இயற்கை முறை விவசாயத்தை விரும்பும் புவனேஸ்வரி தான் மட்டுமல்லாது அதை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு கற்று கொடுக்கிறார்.

🌺பல கிடைக்காத பாரம்பரிய விதைகளை சேகரித்து வைத்திருக்கும் இவர் தனது மாணவ மாணவிகளுக்கு அதை கொடுக்கிறார். ஒவ்வொரு நாளும் வேறு வேறு விதைகளை மாணவ மாணவிகளுக்கு கொடுத்து அதை வீட்டில் வளர்க்க சொல்கிறார்.


🌺அதில் ஒரு காயோ பழமோ ஆசிரியைக்கு கொடுக்க வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு அன்பு கட்டளை இட்டுள்ளார். மாணவ மாணவிகள் சிறு வயதல்லவா இந்த வயதில் இது போல விசயங்களை ஆர்வமாக செய்வார்கள் விவசாயம் வளரும் நாடு செழிக்கும் என்ற அடிப்படையில் அதை சொல்லி கொடுக்கிறார்.

🌺மேலும் இயற்கை உரம் தயாரிப்பது பற்றியும் பயிற்சி அளிக்கிறார். இவர் மாணவ மாணவிகளுக்கு கரும்பலகையில் கணக்கு பாடம் எடுத்த அழகே மிகவும் சிறப்பாக இருந்தது. சில நாட்களுக்கு முன் வைரலாக வாட்ஸப், பேஸ்புக் , டுவிட்டர் போன்றவற்றில் இந்த வீடியோ பரவி இந்த ஆசிரியரை உலகறிய செய்தது. அன்பாக எளிமையாக இவர் சொல்லிக்கொடுத்த விதம் அனைவரையும் கவர்ந்தது.


🌺இவர், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையிலுள்ள கலைமகள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது அன்பான எளிமையான ஆசிரியப்பணியை பல தன்னார்வ அமைப்புகள் பாராட்டி இவருக்கு சிறந்த ஆசிரியைக்கான விருதுகள் வழங்கி பாராட்டியுள்ளது.

புதன், 4 செப்டம்பர், 2019

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணி நேரத்தில் 110 பேர் என்கவுண்டர்...!!!

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணி நேரத்தில் 110 பேர் என்கவுண்டர்...!!!

நான் பதவிக்கு வந்தால் இந்த அயோக்கியர்கள் அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவேன் அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன். ஆயிரம் பேராகட்டும், பத்தாயிரம் பேராகட்டும் எனக்குக் கவலையில்லை"

என்று தேர்தலின் போதே வெளிப்படையாகக் கூறி, பல மடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு வந்து அடுத்த 24 மணி நேரத்தில் 110 போதை மருந்து விற்பனையாளர்களைச் சுட்டுத் தள்ளியதன் விளைவு...!!!

ஆயிரக்கணக்கான ரவுடிகளும், போதைமருந்து வியாபாரிகளும் இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு போய் காணும் இடங்களில் எல்லாம் போலீசிடமும், ராணுவத்திடமும் சரணடைகிறார்கள்...!!!

வித்தியாசமான ஒரு தலைவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஜூலை 1-ந்தேதி பதவியேற்ற ரோட்ரிகோ டுடேர்தே. ( Rodrigo Duterte )

"பொருளாதாரம் பற்றி எனக்குத் தெரியாது.
இந்த நாட்டின் அறிஞர்களும், பொருளாதார நிபுணர்களும் அடங்கிய குழுவிடம் அந்த பொறுப்பை விட்டு விடுவேன்.
என் பொறுப்பு லஞ்சம், கொலை, கொள்ளை, போதை மருந்து விற்பனை ஆகியவற்றை அடியோடு ஒழித்து பெண்கள் சுதந்திரமாக நடமாடக் கூடிய ஒரு பத்திரமான நாட்டை உருவாக்குவதே."

போதை மருந்தை உற்பத்தி செய்பவர்கள்,
விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்கள் அத்தனை பேருக்கும் நான் எமனாக இருப்பேன்...!!!

சட்டமன்றங்களோ, மனித உரிமை அமைப்புகளோ என்ன சொன்னாலும் அதை நான் பொருட்படுத்தப் போவதில்லை. மக்கள் எனக்கு அளிக்கும் ஆறு ஆண்டுக் கால அவகாசத்தில் முதல் ஆறு மாதத்திலேயே, பிலிப்பைன்ஸ் நாட்டை உலகிலேயே அமைதியான, பத்திரமான இடமாக்குவதே என் லட்சியம்...!!!

அவரது இந்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டு தான் பிலிப்பைன்ஸ் மக்கள் தங்கள் ஜனாதிபதியாக டுடேர்தே யை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்...!!!

இந்த டுடேர்தையை அவரது மக்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள்…?

கேட்கவே வித்தியாசமாக இருக்கும் அவரது பின்னணி நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று...!!!

71 வயதாகும் டுடெர்தே, பிலிப்பைன்ஸில்
நாட்டுப்புறத்தில், எளிய குடும்பத்தில் பிறந்தவர். தட்டுத்தடுமாறி, உருண்டு புரண்டு எப்படியோ ஒரு வக்கீல் பட்டம் பெறும் அளவிற்கு படித்து விட்டார்...!!!

5-6 ஆண்டுகள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தவர், பின்னர் அரசியலில் நுழைந்தார். தனது ஏரியாவான மின்டனாவோவில், Davao என்கிற ஊரின் மேயராகப் பொறுப்பேற்றார். மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் அந்த ஊர் மக்களால் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
டுடெர்தே, 22 ஆண்டுகளுக்கு அவரது மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டு மேயர் பதவியில் இருந்தார்...!!!

போதை மருந்து வியாபாரிகளும், சூதாட்ட கிடங்குகளும், ரவுடிகளுமாக நிறைந்திருந்த ஊரை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். குறிபார்த்து சுடக்கூடிய ஷார்ப் ஷூட்டர்களை தன் காவல் படையில் சேர்த்துக் கொண்டார். பல சமயம் அவரே தனது மோட்டார் பைக்கில், இரவு நேரங்களில் ரோந்து வருவார். கண்ணில் படும் போதை வியாபாரிகள்,
ரவுடிகள் அனைவரும் குறி பார்த்து சுடப்பட்டு
கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நடுத்தெருவில் வேட்டையாடப்பட்டனர். தப்பிக்க முயன்றவர்கள், பிடிபட்ட பிறகு நரக வேதனைக்கு உள்ளாயினர்...!!

*அவரது பதவிக் காலத்தில் சுமார் 1400 பேர் என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்*. *விளைவு ஊர் சுத்தமாகியது*. *டுடெர்தேயின் புகழ் பிலிப்பைன்ஸ் நாடு முழுவதும் பரவியது*...!!!

உலகிலேயே பத்திரமான ஊர்களில் 4வது இடமாக மின்டனாவோ-Davao நகரம் பெயர் பெற்றது...!!!

சொந்த ஊரில் அவர் நிகழ்த்திய சாதனைகளின் விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய அரசில் அமைச்சராக சேரும்படி அவருக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. குறைந்த பட்சம் 4 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்தகைய அழைப்புகளை நிராகரித்தார் டுடெர்தே...!!!

*இறுதியில், என்ன தோன்றியதோ தெரியவில்லை கடந்த ஆண்டு 2015 ல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் நிற்கப் போவதாக அறிவித்தார்*...!!!

*அவரது அறிவிப்பை கேட்டதுமே பிலிப்பைன்ஸ் நாடே பரபரப்பினால் பற்றிக் கொண்டது. கருப்பு சந்தைக்காரர்கள், லஞ்ச ஊழல் சக்கரவர்த்திகள், அரசியல்வாதிகளின் பின்னால் நிற்கும் ஊடகங்கள் அத்தனையும் அவரின் நெகடிவ் பக்கத்தை விரிவாக்கி காண்பித்தன*. *மக்களை பயமுறுத்தின*...!!!

*டுடெர்தே சட்டத்தை மதிக்க மாட்டார்.*

*நீதிமன்றங்களை மதிக்க மாட்டார்.*

*சட்டவிரோதமான கொலைகள் நிகழும்*.

*மனித உரிமைகள் நசுக்கப்படும், என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது*...!!!

*தன் பங்குக்கு டுதெர்தே நேரிடையாகவே இதை உறுதிசெய்வது போல் பேசினார்*. *ஆறு மாதங்களில் அத்தனை கொடியவர்களும் சுட்டுக் கொல்லப்படுவார்கள்*. *அவர்கள் பிணங்கள் சமுத்திரத்தில் விட்டுக் கடாசப்படும் என்றெல்லாம் பேசினார்*...!!!

*பரபரப்பாக நிகழ்ந்த தேர்தலின் முடிவில் எதிர் வேட்பாளரான* *அன்றைய ஜனாதிபதியை விட இரண்டு மடங்கு ஓட்டு பெற்று வெற்றி* பெற்றார்
டுடெர்தே*...!!!

*ஜூலை 1 பதவி ஏற்றார்*.
*முதல் தகவல் 110 போதை மருந்து விற்பனையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்*. *ஆயிரக்கணக்கான போதை மருந்து விற்பனையாளர்களும், ரவுடிகளும், முன்னாள் குற்றவாளிகளும் போலீசில் சரணடந்தனர்*...!!!

*இன்னமும் களையெடுப்பு முடியவில்லை கவலைப்படாமல் சுடுங்கள்*.
*நாட்டை சுத்தம் செய்யுங்கள்*.
*உங்கள் செயலின் விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன். என்று காவல் படைக்கும், ராணுவத்திற்கும் உறுதி அளித்திருக்கிறார்*...!!!

*இதையே நம் இந்தியாவில்  நடைமுறைபடுத்தபட்டு இருந்தாள்*

உயரம் குறைவான ஆட்சியர், இவரின் செயல்பாடு உயர்ந்தது



உயரம் குறைவான ஆட்சியர், இவரின் செயல்பாடு உயர்ந்தது

ஆர்த்தி டோக்ரா அசரவைக்கும் மாவட்ட கலெக்டர்!...
உயரத்தில் குறைவானவரே!
ஆனால் செயல்களில் உயர்ந்தவர்!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்த்தி டோக்ராவின் உயரம் மூன்றரை அடிதான்! ஆனால், சட்டத்துக்குப் புறம்பான எந்தக் காரியமும் ஆர்த்தியின் ஆட்சிப் பணியில் நடைபெற்றதில்லை. ஜோத்பூரிலிருந்த ஆர்த்தியை ஆஜ்மீர் மாவட்டத்துக்கு  மாறுதலாகியுள்ளார்.

 ஆட்சியர் மாற்றப்பட்டது குறித்து தகவல் பரவ, அதை எதிர்த்து ஜோத்பூர் மக்கள் மாவட்ட அலுவலகத்தில் குவிந்தனர். ஆட்சியரைச் சந்தித்து 'இங்கிருந்து போகக் கூடாது' என மன்றாடினார்கள். 'அரசு பணியில் இதுவும் ஓர் அங்கம்தான்' என்றவாறு மக்களைச் சமாதானப்படுத்தினார் ஆர்த்தி.
⬇⬇⬇

சந்திரயான் 2ல் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் நிலவு சுற்றுப் பாதை மேலும் குறைப்பு

சந்திரயான் 2ல் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் நிலவு சுற்றுப் பாதை மேலும் குறைப்பு

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் நிலவு சுற்றுப் பாதை இன்று அதிகாலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டது.

இஸ்ரோ நிறுவனம் அனுப்பிய சந்திரயான் 2 கடந்த மாதம் 20ந் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு, அதன் நிலவு சுற்றுப்பாதை நேற்று குறைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.42 மணிக்கு லேண்டரின் சுற்றுப் பாதையை மேலும் குறைக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

9 வினாடிகளுக்கு எஞ்சின் இயக்கப்பட்டதாகவும், இந்தப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தற்போது விக்ரம் கலம் குறைந்தபட்சம் 35 கிலோ மீட்டர், அதிகபட்சமாக 101 கிலோ மீட்டர் தொலைவில் இயங்கி வருகிறது.

இதன் மூலம் 7ந் தேதி விக்ரம் கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.


செவ்வாய், 3 செப்டம்பர், 2019

கல்வி அமைச்சர் அவர்கள் பின்லாந்து பயணம் ஏன்.?

கல்வி அமைச்சர் அவர்கள் பின்லாந்து பயணம் ஏன்.?
_______________________

உலகின் சிறந்த கல்வி முறை! பின்லாந்தின்!

முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளிய பின்லாந்து...
தரமான கல்வியில் முதலிடம்!...
‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’(OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும்.
மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகள் பின் வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது...
அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது...
😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்..,
இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி..,
மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை...
😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...
👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...
👊இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...
👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...
👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...
👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...
👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...
👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...
👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...
💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...
👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...
👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...
👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...
👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...
👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...
👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...
👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...
👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...
👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...
👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...
😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...
✅அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...
😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...
👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...
👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...
👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...
👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...
👊ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது...
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...
👏இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...
👏மதிக்கத்தக்க மனநிலை.
👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...
👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...
👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...
அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..
👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...
👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...
👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...
👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...
👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்...
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது...
நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்...
தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...
👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...
👏👏👏👏👏👏👏👏
இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...
பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...
குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...
முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...
ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….
01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.
02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.
03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.
04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.
05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.
06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.
07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.
09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.
10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.
11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.
12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.
13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.
14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.
15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...
முதலில் நாம் மாற வேண்டும்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...
மாற்றம் ஒன்றே மாறாதது...
நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.
பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.
குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!.

திங்கள், 2 செப்டம்பர், 2019

தமிழக வரலாற்றில் முதன் முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் நிகழ்வு நடைபெற உள்ளது.


தமிழக வரலாற்றில் முதன் முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் நிகழ்வு நடைபெற உள்ளது.


 சீனா-இந்தியா இடையேயான இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27, 28, ஆகிய இரண்டு நாட்கள் சீனா சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு வாஞ்சையோடு அழைத்துவிட்டும் வந்தார் மோடி. இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்ற சீன அதிபர் அடுத்த மாதம் 11-ம் தேதி இந்தியாவுக்கு வர இருக்கிறார். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை டெல்லியில் வைத்து சந்தித்து பேசுவது தான் வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. 9-வது நாளாக தொடரும் மேதா பட்கரின் பட்டினிப்போராட்டம்..! சீன அதிபரை பிரதமர் மோடி சந்திப்பதற்காக மத்திய அரசு அதிகாரிகள் சென்னை, விசாகப்பட்டிணம், ஐதராபாத், பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களை பட்டியலிட்டனர். அதில் மோடி தேர்ந்தெடுத்தது சென்னையை ஒட்டி உள்ள மாமல்லபுரம். பல்வேறு புராதாண சின்னங்களும், பல்லவர் கால சிலைகளும் உள்ளதாலும், கடற்கரை நகர் என்பதாலும் மாமல்லபுரத்தை பேச்சுவார்த்தை நடத்த டிக் அடித்துள்ளார் மோடி. மேலும் கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் ராணுவக் கண்காட்சி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. அக் 11,12-ம் தேதிகளில் சீன அதிபரும், இந்தியப் பிரதமரும் சந்தித்து பேசுவதை எப்படியும் உலக நாடுகளின் ஊடகங்கள் ஒளிபரப்பும். அப்போது தமிழகம் அனைத்து நாட்டு தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும்.இலங்கையுடன் சீனா நெருக்கமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், இலங்கைக்கு சில மறைமுக சமிஞ்கைகளை காட்டவே அந்நாட்டை ஒட்டியுள்ள தமிழகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற மோடி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இன்று முதல் செல்லிடப்பேசி செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்

இன்று முதல் செல்லிடப்பேசி செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது விவரங்களை செல்லிடப்பேசி செயலி மூலம் தாங்களே திருத்தம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப். 1) முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை தாங்களே திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி voter helpline mobile என்ற செல்லிடப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர், பிறந்த தேதி, முகவரி,புகைப்படம், பாலினம் ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். திருத்தம் செய்யப்பட்ட விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்பட்டு அக்டோபர் 15-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மட்டும் 1950 என்ற இலவச அழைப்பு எண் மூலமும், வாக்காளர் உதவி மையம், வாக்காளர் பதிவு அலுவலகம், இ-சேவை மையம் ஆகியவற்றின் மூலமும், அந்தந்த வாக்குச் சாவடிகளில் நவம்பர் 2, 3, 9, 10 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்கள் மூலமும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.



தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி ஆனந்தனின் மகளும் மருத்துவருமான தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவில் மிகச்சிறிய பொறுப்பிலிருந்து படிப்படியாக வளர்ந்து தமிழக பாஜக தலைவரானவர். 2014ம் ஆண்டு முதல் மாநில பாஜக தலைவராக இருந்துவருகிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு கனிமொழியிடம் தோற்றார். தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவில் மிகத்தீவிரமாக உழைத்தும் அவருக்கான அங்கீகாரமும் இடமும் அளிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவரது ஆதரவாளர்களிடம் இருந்துவந்தது. நிர்மலா சீதாராமன் மட்டும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சராக்கப்படும்போது, பாஜகவிற்காக கடுமையாக உழைத்து படிப்படியாக உழைத்து உயர்ந்திருக்கக்கூடிய தமிழிசைக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கருத்து, மக்களவை தேர்தலுக்கு பின் பரவலாக இருந்தது. இந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.*