திங்கள், 2 செப்டம்பர், 2019

தமிழக வரலாற்றில் முதன் முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் நிகழ்வு நடைபெற உள்ளது.


தமிழக வரலாற்றில் முதன் முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் நிகழ்வு நடைபெற உள்ளது.


 சீனா-இந்தியா இடையேயான இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27, 28, ஆகிய இரண்டு நாட்கள் சீனா சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு வாஞ்சையோடு அழைத்துவிட்டும் வந்தார் மோடி. இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்ற சீன அதிபர் அடுத்த மாதம் 11-ம் தேதி இந்தியாவுக்கு வர இருக்கிறார். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை டெல்லியில் வைத்து சந்தித்து பேசுவது தான் வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. 9-வது நாளாக தொடரும் மேதா பட்கரின் பட்டினிப்போராட்டம்..! சீன அதிபரை பிரதமர் மோடி சந்திப்பதற்காக மத்திய அரசு அதிகாரிகள் சென்னை, விசாகப்பட்டிணம், ஐதராபாத், பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களை பட்டியலிட்டனர். அதில் மோடி தேர்ந்தெடுத்தது சென்னையை ஒட்டி உள்ள மாமல்லபுரம். பல்வேறு புராதாண சின்னங்களும், பல்லவர் கால சிலைகளும் உள்ளதாலும், கடற்கரை நகர் என்பதாலும் மாமல்லபுரத்தை பேச்சுவார்த்தை நடத்த டிக் அடித்துள்ளார் மோடி. மேலும் கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் ராணுவக் கண்காட்சி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. அக் 11,12-ம் தேதிகளில் சீன அதிபரும், இந்தியப் பிரதமரும் சந்தித்து பேசுவதை எப்படியும் உலக நாடுகளின் ஊடகங்கள் ஒளிபரப்பும். அப்போது தமிழகம் அனைத்து நாட்டு தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும்.இலங்கையுடன் சீனா நெருக்கமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், இலங்கைக்கு சில மறைமுக சமிஞ்கைகளை காட்டவே அந்நாட்டை ஒட்டியுள்ள தமிழகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற மோடி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக