கோவில்பட்டியில் ஆம்காட் நிறுவனம் சார்பில் பாலித்தீன் ஒழிப்பை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு விழா வில் மதி அகடாமியின் இயக்குனர் த.புவனேஸ்வரி மகேந்திரனுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கி
அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பாராட்டு
கோவில்பட்டியில் பாலித்தீன் ஒழிப்பை வலியுறுத்தி ஆணி படுக்கையின் மீது யோகா செய்த தியாகராஜன் என்பவருக்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பாராட்டு தெரிவித்து ஊக்கத் தொகை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழைய பேரூந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் ஆம்காட் நிறுவனம் சார்பில் பாலித்தீன் ஒழிப்பை வலியுறுத்தி தியாகராஜன் என்பவர் ஆணி படுக்கையில் 71 ஆசனங்கள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ துவக்கி வைத்து, தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கப் பரிசாக ரூ.5,000/-த்தையும், ஆணி படுக்கையில் 71 ஆசனங்கள் நிகழ்த்தியமைக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பையும் வழங்கினார். மேலும் திருநெல்வேலி மதி அகடாமியின் இயக்குனர் த.புவனேஸ்வரி மகேந்திரனுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் பேசுகையில், மத்திய அரசு யோகா ஆசனத்தை அனைத்து மாநிலங்களிலும் ஊக்குவிக்கிறது. யோகா என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான ஆன்மிக அறிவியலாகும். நமது உணர்வு, உடல், மனது ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அருமையான கலையாகவும் யோகா அமைந்துள்ளது. தமிழகத்தில், அம்மாவின் அரசு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்கள் யோகா ஆசனத்தை அறிந்து கொள்ளும் விதமாக அனைத்து பாடநூல்களிலும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யோகா குறித்து அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது. யோகா செய்வதால் நமது உடலும் புத்துணர்வு பெற்று ஆரோக்கியமாக இருக்கவும், மனதும் அமைதி உண்டாகவும் வழிவகுக்கிறது எனவே, மாணவ, மாணவியர்கள் யோகா ஆசனத்தை செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றார்.
முன்னதாக கோவில்பட்டி மணியாச்சி விளக்கு அருகில் ஹைடெக் ஆவின் பாலகத்தினை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, திறந்து வைத்து, ஆவின் பொருட்களை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, பொது மேலாளர், ஆவின் தங்கையா, விற்பனை மேலாளர் சாந்தி, தலைவர், ஆம்காட் நிறுவனம் சி.வி..விக்ரம் சூரியவர்மா, பொது செயலாளர் ஜெ.பத்மநாதன், பொருளாளர் ஆடம்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முக்கிய பிரமுகர்கள் அய்யாதுரை பாண்டியன், விஜயபாண்டியன், ரமேஷ், ராமசந்திரன், வினோபாஜி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பாராட்டுக்கள்
பதிலளிநீக்கு