ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

மதுரை வந்தடைந்தது கள்ளழகர் தங்கக்குதிரை வாகனம்


மதுரை வந்தடைந்தது கள்ளழகர் தங்கக்குதிரை வாகனம்


 வரும் 30-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

மே மாதம் 1-ந்தேதி சேஷ வாகனத்தில் தேனூர்மண்டபத்திலும் அன்று பிற்பகல் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து அழகர் காட்சி தந்தருள்கிறார். அன்று இரவு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி ராமராயர்மண்டபத்தில் நடைபெறுகிறது.

2-ந்தேதி அனந்தராயர்பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் சாமி காட்சிதருகிறார்.

3-ந்தேதி அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களிடம் விடைபெற்று மலைக்கு புறப்படுகிறார். அன்று மாலை அழகர் திருமலைக்கு வழிநடையாக கள்ளர்திருக்கோலத்தில் திரும்புகிறார்.

4-ந்தேதி அதிகாலை அப்பன்திருப்பதி,கள்ளந்திரி உள்ளிட்ட பல மண்டபங்களில் அழகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்று காலையில் 9.30 மணிக்குமேல் 10.30மணிக்குள் கள்ளழகர் அழகர்கோவிலை அடைந்து இருப்பிடம் சேருகிறார்.

5-ந்தேதி உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. மேலும் கள்ளழகர் எழுந்தருளும் 435 மண்டகப்படிகளும் தயார்நிலையில் உள்ளன.

திருவிழாவையொட்டி கள்ளழகர் எழுந்தருளும் தங்கக்குதிரை, கருடன், சேஷ வாகனங்கள் நேற்று காலை அழகர்கோவில் இருந்து வாகனங்களில் புறப்பட்டு மதுரைக்கு வந்தன.

இதில் வைகை ஆற்றில் இறங்கும் தங்க குதிரைவாகனம் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கும் கருட வாகனம் தேனூர் மண்டபத்திலும், சேஷ வாகனம் வண்டியூர் வீரராகவகபெருமாள் கோவிலிலும் தனித்தனியே போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுஉள்ளது.

புதன், 25 ஏப்ரல், 2018

பொறியியல் கலந்தாய்வுக்கு 42 உதவி மையங்கள்...

பொறியியல் கலந்தாய்வுக்கு 42 உதவி மையங்கள்...

அதிகமான வேலைவாய்ப்பை வழங்குவதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பொறியியல் நிறுவனங்களும் முன்னணியில் இருக்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் பேருக்கு மேல் பொறியியல் படிப்பில் சேர்கின்றனர். இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு இணையம் வழியே நடக்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பம் மே 3-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.


``அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு மே 3-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம். விண்ணப்பம் செய்வதற்கு உதவியாக 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்.

இனி, மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே பொறியியல் கல்லூரியையும், படிப்பையும் தேர்வு செய்துகொள்ளலாம். ஆன்லைனின் விண்ணப்பம் செய்வதற்கான முறைப்படி அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் 29-ம் தேதி வெளியிடப்படுகிறது.

விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படும். மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கான தேதி முடிவான பின்பு ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஆன்லைன் வழியே கலந்தாய்வு நடத்தப்படும். ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்களுக்காக, தமிழ்நாடு முழுவதும் 42 பொறியியல் கலந்தாய்வு உதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன.



மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையங்கள்
1சென்னைஅண்ணா பல்கலைக்கழகம்கிண்டி2அரியலூர்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிஅரியலூர்
3கோவைஅரசு தொழில்நுட்பக்கல்லூரிகோவை
4கோவைஅண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம்கோவை
5கோவைகோயமுத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரிகோவை
6கடலூர்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிபண்ரூட்டி
7கடலூர்அண்ணாமலை பல்கலைக்கழகம்சிதம்பரம்
8திண்டுக்கல்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிதிண்டுக்கல்
9தருமபுரிஅரசு பொறியியல் கல்லூரிதருமபுரி
10ஈரோடுசாலை போக்குவரத்து தொழில்நுட்பக் கல்லூரிபெருந்துறை
11ஈரோடுபெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரிபெருந்துறை
12காஞ்சிபுரம்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகாஞ்சிபுரம்
13காஞ்சிபுரம்எம்.ஐ.டி கல்லூரிகுரோம்பேட்டை சென்னை
14கன்னியாகுமரிபல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிநாகர்கோவில்
15கிருஷ்ணகிரிஅரசு பொறியியல் கல்லூரிபர்கூர்
16கரூர்கரூர் அரசு கலைக்கல்லூரிதந்தோணிமலை
17மதுரைஅண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம்மதுரை
18மதுரைதியாகராஜர் பொறியியல் கல்லூரிமதுரை
19நாமக்கல்திருவள்ளூர் அரசு கலைக்கல்லூரிராசிபுரம்
20நாகப்பட்டினம்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி திருக்குவளை
21பெரம்பலூர்பெரம்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகீழகனவை
22புதுக்கோட்டைபுதுக்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரிஅறங்தாங்கி
23ராமநாதபுரம்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிபுலங்குடி
24சேலம்அரசு பொறியியல் கல்லூரிசேலம்
25சிவகங்கைஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி காரைக்குடி
26தஞ்சாவூர்பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிபட்டுக்கோட்டை27தஞ்சாவூர்அரசு பொறியியல் கல்லூரிசெங்கிப்பட்டி
28நீலகிரிநீலகிரி அரசு கலைக்கல்லூரிஉதகமண்டலம்
29தேனிஅரசு பொறியியல் கல்லூரிபோடிநாயக்கனூர்
30திருவள்ளூர்முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரிஆவடி
31திருவாரூர்அரசு பாலிடெனிக் கல்லூரிவலங்கைமா
32திருவண்ணாமலைபல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிஆரணி
33திருப்பூர்சிக்கண்ணா நாயக்கர் அரசு கலைக்கல்லூரிகொங்கணகிரி
34திருநெல்வேலிஅண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம்திருநெல்வேலி
35திருநெல்வேலிஅரசு பொறியியல் கல்லூரிதிருநெல்வேலி
36தூத்துக்குடிவி.ஒ.சி பொறியியல் கல்லூரிதூத்துக்குடி
37 திருச்சிபல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,பாரதிதாசன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி வளாகம்திருச்சி
38திருச்சிஅரசு பொறியியல் கல்லூரிஶ்ரீரங்கம்
39வேலூர்வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரிவேலுர்
40விழுப்புரம்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகாகுப்பம், விழுப்புரம்
41விழுப்புரம்பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிதிண்டிவனம்
42விருதுநகர்வி.எஸ்.வி.என் பாலிடெக்னிக் கல்லூரிரோசல்பட்டி 

பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 500 ரூபாய், தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 250 ரூபாய் பதிவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் வழியாகச் செலுத்தலாம். உதவி மையத்துக்குச் செல்லும் முன், மாதிரி விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்தால், ஆன்லைனில் பதிவு செய்யும்போது எளிதாக இருக்கும்.

இந்த உதவி மையங்களில் ஜூன் முதல் வாரத்தில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அப்போது கல்லூரி பற்றிய தகவல் கையேடு வழங்கப்படும். ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வுநடைபெறும்.


100 சதவிகிதம் சுக பிரசவம் நடக்கும் ஒரே நாடு இது தான் ...


100 சதவிகிதம் சுக பிரசவம் நடக்கும் ஒரே நாடு இது தான் ...

சவூதியில் உள்ள அணைத்து பெண்களுக்கும் சுக பிரசவம் மட்டும் தான் ஆகும், சர்ஜெரி செய்ய சவுதியில் அனுமதி இல்லை - இது எப்படி சாத்தியம் சவுதியில் மட்டும் ..!!!!
சவுதியில் அரை மணி நேரத்தில் சுக பிரசவம் செய்து கையில் குழந்தையை தந்து விடுவார்கள் உடனே வீட்டிற்கு செல்லலாம் நம்ம ஊர் ல மாதிரி பத்து நாள் ஹாஸ்பிடலில் படுக்க தேவை இல்லை எல்லாம் பணத்திற்காக தான்
சவுதியில் தனியார் மருத்துவமனையில் சர்ஜெரி செய்தால் உடனே சவூதி அரசு அந்த ஹாஸ்பிடலின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடும்
(தவிர்க்க முடியாதா சூழலில் மட்டும் தகுந்த ஆதாரம் சமர்ப்பித்த பின்னே சர்ஜரி செய்யப்படும் நூற்றில் ஒருவருக்குத்தான் இவ்வாறு நிகழும் )
இந்தியாவில் மட்டும் ஏன் வயிற்றை கிழித்து பணம் சம்பாதிக்கிறார்கள்
எல்ல உயிரினங்களும் இயற்கையான முறையில் தான் சுக பிரசவம் ஆகிறது
ஏன் மனிதனுக்கு மட்டும் முடியாதா ??? எல்லாம் வியாபார தந்திரம்
குழந்தை பிறக்க ஒரு வழியை ஒரு உறுப்பை கொடுத்துள்ளான் இறைவன். அதை விட்டு விட்டு வயிற்றை கிழித்து குறுக்கு பாதையில் குழந்தையை தாயின் வயிற்றை கிழித்து எடுப்பது இயற்கைக்கு மாறான விஷயம் இல்லையா .??

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

மதி நியூஸ் 24/04/18

மதி நியூஸ்  24/04/18

ஜம்மு - காஷ்மீர் : புல்வாமா அருகே பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர், ஒரு காவலர் உயிரிழப்பு.

மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதே சரியான முறையாகும் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு.

மருத்துவ மேற்படிப்பில் 50% உள் ஒதுக்கீடு கோரும் வழக்கில் தமிழக அரசின் இடைக்கால கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

கிராம புறங்களில் பணி புரிந்த மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது - உச்ச நீதிமன்றம்.

குட்கா வழக்கிற்கு மூடுவிழா நடத்த அதிமுக அரசு முயற்சி விசாரணை அதிகாரிகளை மாற்றி, கோப்புக​​ளை மறைப்பதாகவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புகார்.

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

பட்டுக்கோட்டை அருகே மகள் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 4 ஆயுள்தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் உத்தரவு.

தினகரன், வெற்றிவேல் உள்ளிட்டோர் ஈபிஎஸ் அணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்துவதாக எனக்கு தகவல் - திவாகரன்.

நானும் எனது மகன் ஜெயானந்தும் ஈபிஎஸ் அணியில் இணையவுள்ளதாக வெளியான செய்தி தவறு - திவாகரன்.

அசராம் பாபு மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை ஆசிரியர்கள் 19 பேர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

குரல் மாதிரி சோதனைக்காக நிர்மலாதேவியின் குரல் மாதிரியை சென்னையில் உள்ள குரல் ஒப்பீடு ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது சிபிசிஐடி.

உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளுகின்றன - அமிதாப் கந்த், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ராகுல்காந்தி தமிழகத்தில் முழுமையாக சுற்றுப்பயணம் மேற்கொள்வார் - திருநாவுக்கரசர்.

முக.ஸ்டாலினால் எப்போதும் முதல்வராக முடியாது - தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

பிரதமரின் வாக்குறுதிப்படி ரூ.15 லட்சம் டெபாசிட் எப்போது ? ஆர்.டி.ஐ.க்கு பதில் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு.

ஊழலின் மொத்த உருவமே திமுக தான். அரசியல் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலில் காணாமல் போவார் : அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக நாளிதழில் வெளியான கட்டுரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது.யாரோடு கூட்டணி என்பது குறித்து அதிமுக தலைமை தான் முடிவெடுக்கும் : மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்.

ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு பேலன்ஸ் தொகையையும், டெபாசிட் தொகையையும் திருப்பித் தர வேண்டும் : அந்நிறுவனத்திற்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நாளை உண்ணாவிரதம்.

திரிபுராவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக அகில் பாரத் விகாஷ் இயக்கத்தின் தலைவர் மனோஜ் கோஷ் கைது.

தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்.

கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல 4-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு.

புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டு மோசடியில் ஈடுபட்ட, கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் தற்காலிக மருத்துவர் விவேக் கைது.

சென்னை போரூரில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பரமசிவம்(45) கைது.

ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சவுரவ் கோஷலுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஓராண்டுக்கு மட்டும் விலக்கு - இந்திய மருத்துவ கவுன்சில்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் : பாதாமி தொகுதியில் போட்டியிட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வேட்புமனு தாக்கல் செய்தார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சேலம் மாநகர போலீசுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தகவலை தொடர்ந்து போலீசார் பல்கலைக்கழகத்தில் விசாரணை.

சென்னை பல்லாவரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது செங்கல்பட்டு நீதிமன்றம்.

பிரதமரை கொல்லப்போவதாக தொலைபேசி உரையாடல், கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மீண்டும் கைது.

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

கருக்கலைப்பு சம்பவங்களுக்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி.

சென்னை அடையாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் மணீஷ் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.

வேலூர் : குடியாத்தம் அருகே நாகல் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த 23 பேர் மீட்பு.

அரசு நிர்ணயம் செய்த பள்ளிக் கட்டண விபரம்


அரசு நிர்ணயம் செய்த பள்ளிக் கட்டண  விபரம்

LKG கட்டணம்                    -  3750
UKG கட்டணம்                    -  3750
1-ம் வகுப்பு கட்டணம்       -  4550
2-ம் வகுப்பு கட்டணம்       -  4550
3-ம் வகுப்பு கட்டணம்       -  4550
4-ம் வகுப்பு கட்டணம்       -  4550
5-ம் வகுப்பு கட்டணம்       -  4550
6-ம் வகுப்பு கட்டணம்       -  5050
7-ம் வகுப்பு கட்டணம்       -  5050
8-ம் வகுப்பு கட்டணம்       -  5050
9-ம் வகுப்பு கட்டணம்       -  6300
10-ம் வகுப்பு கட்டணம்      -  6300

10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்:-

மாவட்ட ஆட்சியர்,
பள்ளிகல்வி இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்,
முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,
மாவட்ட கல்வி அலுவலர்,
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்

மேற்படி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.

மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG  யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

மதி நியூஸ் 20/04/18 !

மதி  நியூஸ் 20/04/18 !

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - திருச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

தாய்மையை, பெண்மையை களங்கப்படுத்தும் வகையில் யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

பெண்களின் உடை பற்றி 8ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், வரும் காலங்களில் மாற்றப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

ஒப்பந்த பணிகளுக்கு சான்று வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக ரயில்வே அதிகாரி தோட்டா சிவக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை - சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

எஸ்சி , எஸ்டி சட்டத்தில் விசாராணை அதிகாரி தொடர்பான விதிகள் 6,7-ஐ பின்பற்ற அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் டிஜிபி உரிய உத்தரவு பிறப்பிக்க மதுரை கிளை உத்தரவு : வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989ல் கூறப்பட்டுள்ள விதிகளை பின்பற்றி விசாராணை நடத்த ஆணை.

மெரினாவில் அரசு அனுமதியுடன் கடைசியாக எப்போது போராட்டம் நடந்தது ? - வரும் 24ல் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பேராசிரியை விவகாரத்தில் அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது காழ்ப்புணர்ச்சி காரணமாக குறை கூறி வருகிறார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ.

தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் ஏப்ரல் 25-ம் தேதி எண்ணப்படுகிறது - தேர்தல் அதிகாரி விஜயராகவன் அறிவிப்பு.

ஊடகத்துறையில் உள்ள பெண்களை தவறாக பேசுவது கண்டிக்கத்தக்கதுசமுதாயத்தில் ஆண், பெண் சமம்; பெண்கள் தாழ்ந்தவர் என்று பேசுவது கண்டிக்கத்தக்கது.ஆளுநர் அதிகாரம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை - தம்பிதுரை எம்பி.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களை வைத்து தான், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் பொதுக்குழு தேர்வு செய்ய முடியாது - கோவையில் கேசி.பழனிசாமி பேட்டி.

ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் கூறிய கருத்து மிகவும் தவறானது, கண்டிக்கத்தக்கது - நடிகர் ஆனந்த்ராஜ்.

நீலகிரி : ஊட்டி அவலாஞ்சி சாலையில் கனமழையால் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் - நடிகர் விஷால்.

திருவள்ளூர் வேப்பம்பட்டில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, சிறுமியின் பெரியப்பா சுரேஷ் கைது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இந்த ஆண்டு தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை.

வேலூர் : சேம்பாக்கத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சதீஷ்-க்கு 13 ஆண்டு கடுங்காவல் தண்டனை - மகளிர் சிறப்பு நீதிமன்றம்.

நாமக்கல் : லஞ்சம் பெற்ற வீடியோ வெளியான விவகாரத்தில், ராசிபுரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜன் ஆயுத படைக்கு மாற்றம்.

வியாழன், 19 ஏப்ரல், 2018

காமச் சாமியார்களும், இந்துத்துவ அமைப்புகளும் 1. கேரளாவில் 'புல்லட் சாமியார்' என்ற பிரபலமாக அறியப்பட்டவர் சாமியார் ஶ்ரீஹரி. இவர் தொடர்ச்சியாக ஒரு பெண்ணுடன் பாலியல் வல்லுறவு கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வெடித்துக் கிளம்பிய அந்தப் பெண், சாமியாரின் ஆணுறுப்பைத் துண்டித்து எறிந்தார். இந்த சாமியாருக்கும், பாஜக மாநிலச் செயலாளர் கும்மனம் இராஜசேகரனுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. ஆனால், ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டபோது, இராஜசேகரன் தனக்கும் சாமியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நழுவிக் கொண்டார். 2. மறைந்த காஞ்சி சங்கர மடச் சாமியார் ஜெயேந்திரன், தன்னை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாக எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதியதும், காஞ்சி சங்கர மடத்தில் இருந்து ஏராளமான ஆபாச குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டதும், ஒரு பிரபல நடிகையுடன் ஜெயேந்திரன் தொடர்புபடுத்திப் பேசப்பட்டதும் தமிழகம் அறிந்ததே. ஆனாலும், கடைசி வரை ஜெயேந்திரனுக்கு ஆதரவாக பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் செயல்பட்டன. 3. நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா பாலியல் உறவு கொள்ளும் காணொளி வெளிவந்து, தமிழகம் முழுவதும் அவரது பெயர் நாறிய பின்னும், அவர் அண்மையில் நடத்திய நிகழ்ச்சியில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார். 4. ஜோத்பூர் ஆசிரமத்தில் 16 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆஷ்ரம் பாபு, பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, மோடி, முரளி மனோகர் ஜோஷி, சிவ்ராஜ் சவுகான், ராமன் சிங் உள்ளிட்டோருக்கு நட்பு இருந்தது. 5. பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல சாமியார் ராம் ரஹிம் சிங்கிற்கும், பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. 2014 அரியானா தேர்தல் பிரச்சாரத்தின்போது ராம் ரஹிம் சிங்-ஐ பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். 1995ம் ஆண்டு அரியானா பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோதே, தான் சாமியாரைச் சந்தித்து வணங்கியதாகத் தெரிவித்தார். மோடியின் இந்தப் பேச்சிற்குப் பின்னர், அரியானா தேர்தலில் ராம் ரஹிம் சிங், பாஜகவுக்கு ஆதரவு அளித்தார். பின்னர் டெல்லி, பிஹார் சட்டமன்றத் தேர்தல்களின்போதும் ராம் ரஹிம் சிங்கின் ஆசிரம பக்தர்கள், பாஜகவுடன் இணைந்து பிரச்சாரம் செய்தார்கள். ராம் ரஹிம் சிங் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் இருந்த காலத்தில்தான் அவருடன் பாஜக நட்பு பாராட்டியது என்பது கவனிக்கத்தக்கது. 6. மறைந்த புட்டபர்த்தி சாய்பாபா மீது ஓரினச் சேர்க்கை வல்லுறவு புகார்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தன. ஏறக்குறைய 40க்கும் மேற்பட்டோர் அவர் மீது புகார் தெரிவித்தனர். ஆனாலும், அவருடன் வாஜ்பாய், அத்வானி, மோடி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் சந்திப்பு தொடர்ந்த வண்ணமாகத் தான் இருந்தது. இந்துத்துவ அமைப்புகளுக்கும், காமச் சாமியார்களுக்குமான தொடர்பு, தொப்புள் கொடி உறவு போன்றது. இவர்கள் அரசியல் ரவுடிகள் என்றால், அவர்கள் ஆன்மீக ரவுடிகள்; இருவரையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆசிஃபா கொலையாளிகளைக் காக்க இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

காமச் சாமியார்களும், இந்துத்துவ அமைப்புகளும்

1. கேரளாவில் 'புல்லட் சாமியார்' என்ற பிரபலமாக அறியப்பட்டவர் சாமியார் ஶ்ரீஹரி. இவர் தொடர்ச்சியாக ஒரு பெண்ணுடன் பாலியல் வல்லுறவு கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வெடித்துக் கிளம்பிய அந்தப் பெண், சாமியாரின் ஆணுறுப்பைத் துண்டித்து எறிந்தார். இந்த சாமியாருக்கும், பாஜக மாநிலச் செயலாளர் கும்மனம் இராஜசேகரனுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. ஆனால், ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டபோது, இராஜசேகரன் தனக்கும் சாமியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நழுவிக் கொண்டார்.

2. மறைந்த காஞ்சி சங்கர மடச் சாமியார் ஜெயேந்திரன், தன்னை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாக எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதியதும், காஞ்சி சங்கர மடத்தில் இருந்து ஏராளமான ஆபாச குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டதும், ஒரு பிரபல நடிகையுடன் ஜெயேந்திரன் தொடர்புபடுத்திப் பேசப்பட்டதும் தமிழகம் அறிந்ததே. ஆனாலும், கடைசி வரை ஜெயேந்திரனுக்கு ஆதரவாக பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் செயல்பட்டன.

3. நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா பாலியல் உறவு கொள்ளும் காணொளி வெளிவந்து, தமிழகம் முழுவதும் அவரது பெயர் நாறிய பின்னும், அவர் அண்மையில் நடத்திய நிகழ்ச்சியில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

4. ஜோத்பூர் ஆசிரமத்தில் 16 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆஷ்ரம் பாபு, பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, மோடி, முரளி மனோகர் ஜோஷி, சிவ்ராஜ் சவுகான், ராமன் சிங் உள்ளிட்டோருக்கு நட்பு இருந்தது.

5. பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல சாமியார் ராம் ரஹிம் சிங்கிற்கும், பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. 2014 அரியானா தேர்தல் பிரச்சாரத்தின்போது ராம் ரஹிம் சிங்-ஐ பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். 1995ம் ஆண்டு அரியானா பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோதே, தான் சாமியாரைச் சந்தித்து வணங்கியதாகத் தெரிவித்தார். மோடியின் இந்தப் பேச்சிற்குப் பின்னர், அரியானா தேர்தலில் ராம் ரஹிம் சிங், பாஜகவுக்கு ஆதரவு அளித்தார். பின்னர் டெல்லி, பிஹார் சட்டமன்றத் தேர்தல்களின்போதும் ராம் ரஹிம் சிங்கின் ஆசிரம பக்தர்கள், பாஜகவுடன் இணைந்து பிரச்சாரம் செய்தார்கள். ராம் ரஹிம் சிங் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் இருந்த காலத்தில்தான் அவருடன் பாஜக நட்பு பாராட்டியது என்பது கவனிக்கத்தக்கது.

6. மறைந்த புட்டபர்த்தி சாய்பாபா மீது ஓரினச் சேர்க்கை வல்லுறவு புகார்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தன. ஏறக்குறைய 40க்கும் மேற்பட்டோர் அவர் மீது புகார் தெரிவித்தனர். ஆனாலும், அவருடன் வாஜ்பாய், அத்வானி, மோடி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் சந்திப்பு தொடர்ந்த வண்ணமாகத் தான் இருந்தது.

இந்துத்துவ அமைப்புகளுக்கும், காமச் சாமியார்களுக்குமான தொடர்பு, தொப்புள் கொடி உறவு போன்றது. இவர்கள் அரசியல் ரவுடிகள் என்றால், அவர்கள் ஆன்மீக ரவுடிகள்; இருவரையும் பிரித்துப் பார்க்க முடியாது.

ஆசிஃபா கொலையாளிகளைக் காக்க இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

மதி நியூஸ் 17/04/18

மதி நியூஸ்   17/04/18 

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ 5000லிருந்து ரூ 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

ஜம்மு - காஷ்மீர் : ஷோபியானில் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு பயங்கரவாதிகள் ஓட்டம்.

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் கடிதம்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் - திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்.

திரைத்துறைக்கு தனிவாரியம், வரி விலக்கு அளிப்பது குறித்து திரைத்துறையினருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எஸ்பி.வேலுமணி, கேசி.வீரமணி பேச்சுவார்த்தை.

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு பற்றி முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாக பாடபுத்தகங்கள் வழங்கப்படும்.தனியார் பள்ளிகள் மட்டும் கட்டணம் செலுத்தி புத்தகங்கள் வாங்கும் நிலை உள்ளது : அமைச்சர் செங்கோட்டையன்.

பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர் விசாரணை நடத்த குழு அமைத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்.பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன் ? -முக.ஸ்டாலின்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், பொதுமக்களின் உணர்வுகளை புரிந்து, முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் : அமைச்சர் கடம்பூர் ராஜூ.

சென்னை சேப்பாக்கம் கலசமகாலில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனி செயலாளராக பணியாற்றிய ராமலிங்கத்திடம் விசாரணை.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது : உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்.

அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் 2 ஆம் நாளாக ஏடிஎஸ்பி மதி 2 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார் : விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

காவிரி விவகாரத்தில் ஒரு தலைபட்சமாக கருத்து தெரிவித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவிற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் முக்கிய புள்ளி என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் : உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்.

நேபாளத்தில் இந்திய தூதரக அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு - சக்தி குறைந்த குண்டு வெடித்ததால் யாருக்கும் பாதிப்பில்லை என தகவல்.

பேராசிரியை நிர்மலாதேவியின் செல்போனில் பெண்கள் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை.

வட இந்தியாவில் உபி, மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பீகார் மாநிலங்களில் பணம் இல்லாமல் ஏடிஎம்கள் மூடல் : தமிழகத்தில் வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளிலும் பணம் கிடைப்பதில் சிக்கல்.

தேவைக்கு அதிகமான பணம் புழக்கத்திலும், வங்கியிலும் உள்ளது.வழக்கத்துக்கு மாறாக பண தேவை அதிகரித்துள்ளதால் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு பேராசிரியர் நிர்மலாதேவியுடன் தொடர்பில் உள்ள முக்கிய புள்ளிகள் சிக்குகிறார்கள்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், ஆளுநர் வெளிப்படையான நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

ரஜினியை விமர்சிக்கும் கலையுலகினர் தமிழ் கலைஞர்கள் கன்னடத்தில் நடிக்கக் கூடாது எனக்கூற தயாரா ? முன்பு பாஜகவை பார்த்த கண்ணாடியால் தற்போது காங்கிரஸை பார்க்கிறார் வைகோ - பொன். ராதாகிருஷ்ணன்.

தமிழர், தெலுங்கர், கன்னடர் என பிரித்துப் பார்க்க வேண்டாம் - நடிகர் ஆனந்தராஜ்.

கர்நாடக மாநிலத்தில் மே 12ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.

ஈரோடு : தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு ஒடாநிலை மணிமண்டபத்தில் தீரன் சின்னமலை திருஉருவச் சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மரியாதை செலுத்தினர்.

விஜய்சேதுபதி தயாரித்துள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை' படம் பிரான்சில் நடைபெற்ற துளுஸ் திரைப்பட விழாவில் 2 விருதுகளை பெற்றது.

பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம்.வளர்ந்த நாடுகளில் கூட சிறுவர்கள் செல்போனில் இணையதளம் பயன்படுத்த அனுமதியில்லை : வைகோ.

தேனி, பெரியகுளம் கும்பக்கரை அருவியில், நீர்வரத்து சீராக இருப்பதால் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்தது வனத்துறை.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 262- வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முக.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆந்திரபிரதேச மாநில பாஜக தலைவர் கே. ஹரிபாபு தனது ராஜினாமா கடிதத்தை அமித்ஷாவிடம் அளித்தார்.

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரியை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி ஆனால் யானையை கருணைக்கொலை செய்ய பக்தர்கள் சிலர் கடும் எதிர்ப்பு.

‘கோச்சடையான்’ படத்துக்கு வாங்கிய கடனை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும்: மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் கமீல் பாட்ஷா மீது வழக்குப்பதிவு : லஞ்சம் வாங்கியதாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 5 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

ஆசிஃபாவின் மரணம் குறித்து கேட்கும் போதே மனம் கலங்குகிறது ஆசிஃபாவின் மரணத்திற்கு காரணமானவர்களை பார்த்தால் ஆத்திரம் தான் வருகிறது.பெண் குழந்தைகளை வளர்க்க பாடம் எடுக்க வேண்டும்.ஆசிஃபா விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது - நடிகர் விஜய் சேதுபதி.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.பிக் நியூஸ் 17/04/18 !

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ 5000லிருந்து ரூ 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

ஜம்மு - காஷ்மீர் : ஷோபியானில் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு பயங்கரவாதிகள் ஓட்டம்.

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் கடிதம்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் - திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்.

திரைத்துறைக்கு தனிவாரியம், வரி விலக்கு அளிப்பது குறித்து திரைத்துறையினருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எஸ்பி.வேலுமணி, கேசி.வீரமணி பேச்சுவார்த்தை.

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு பற்றி முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாக பாடபுத்தகங்கள் வழங்கப்படும்.தனியார் பள்ளிகள் மட்டும் கட்டணம் செலுத்தி புத்தகங்கள் வாங்கும் நிலை உள்ளது : அமைச்சர் செங்கோட்டையன்.

பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர் விசாரணை நடத்த குழு அமைத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்.பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன் ? -முக.ஸ்டாலின்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், பொதுமக்களின் உணர்வுகளை புரிந்து, முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் : அமைச்சர் கடம்பூர் ராஜூ.

சென்னை சேப்பாக்கம் கலசமகாலில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனி செயலாளராக பணியாற்றிய ராமலிங்கத்திடம் விசாரணை.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது : உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்.

அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் 2 ஆம் நாளாக ஏடிஎஸ்பி மதி 2 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார் : விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

காவிரி விவகாரத்தில் ஒரு தலைபட்சமாக கருத்து தெரிவித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவிற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் முக்கிய புள்ளி என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் : உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்.

நேபாளத்தில் இந்திய தூதரக அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு - சக்தி குறைந்த குண்டு வெடித்ததால் யாருக்கும் பாதிப்பில்லை என தகவல்.

பேராசிரியை நிர்மலாதேவியின் செல்போனில் பெண்கள் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை.

வட இந்தியாவில் உபி, மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பீகார் மாநிலங்களில் பணம் இல்லாமல் ஏடிஎம்கள் மூடல் : தமிழகத்தில் வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளிலும் பணம் கிடைப்பதில் சிக்கல்.

தேவைக்கு அதிகமான பணம் புழக்கத்திலும், வங்கியிலும் உள்ளது.வழக்கத்துக்கு மாறாக பண தேவை அதிகரித்துள்ளதால் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு பேராசிரியர் நிர்மலாதேவியுடன் தொடர்பில் உள்ள முக்கிய புள்ளிகள் சிக்குகிறார்கள்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், ஆளுநர் வெளிப்படையான நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

ரஜினியை விமர்சிக்கும் கலையுலகினர் தமிழ் கலைஞர்கள் கன்னடத்தில் நடிக்கக் கூடாது எனக்கூற தயாரா ? முன்பு பாஜகவை பார்த்த கண்ணாடியால் தற்போது காங்கிரஸை பார்க்கிறார் வைகோ - பொன். ராதாகிருஷ்ணன்.

தமிழர், தெலுங்கர், கன்னடர் என பிரித்துப் பார்க்க வேண்டாம் - நடிகர் ஆனந்தராஜ்.

கர்நாடக மாநிலத்தில் மே 12ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.

ஈரோடு : தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு ஒடாநிலை மணிமண்டபத்தில் தீரன் சின்னமலை திருஉருவச் சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மரியாதை செலுத்தினர்.

விஜய்சேதுபதி தயாரித்துள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை' படம் பிரான்சில் நடைபெற்ற துளுஸ் திரைப்பட விழாவில் 2 விருதுகளை பெற்றது.

பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம்.வளர்ந்த நாடுகளில் கூட சிறுவர்கள் செல்போனில் இணையதளம் பயன்படுத்த அனுமதியில்லை : வைகோ.

தேனி, பெரியகுளம் கும்பக்கரை அருவியில், நீர்வரத்து சீராக இருப்பதால் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்தது வனத்துறை.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 262- வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முக.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆந்திரபிரதேச மாநில பாஜக தலைவர் கே. ஹரிபாபு தனது ராஜினாமா கடிதத்தை அமித்ஷாவிடம் அளித்தார்.

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரியை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி ஆனால் யானையை கருணைக்கொலை செய்ய பக்தர்கள் சிலர் கடும் எதிர்ப்பு.

‘கோச்சடையான்’ படத்துக்கு வாங்கிய கடனை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும்: மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் கமீல் பாட்ஷா மீது வழக்குப்பதிவு : லஞ்சம் வாங்கியதாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 5 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

ஆசிஃபாவின் மரணம் குறித்து கேட்கும் போதே மனம் கலங்குகிறது ஆசிஃபாவின் மரணத்திற்கு காரணமானவர்களை பார்த்தால் ஆத்திரம் தான் வருகிறது.பெண் குழந்தைகளை வளர்க்க பாடம் எடுக்க வேண்டும்.ஆசிஃபா விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது - நடிகர் விஜய் சேதுபதி.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

காஷ்மீரில் ஆசிஃபா என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை

கோவிலில் வைத்து வன்புணர்வு.. காஷ்மீர் சிறுமி மரணத்தில் நடந்தது என்ன?

காஷ்மீரில் ஆசிஃபா என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை
காஷ்மீர்: காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் சில கொடூரர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த கொலை சம்பவமும், அந்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டதும் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் இருக்கிறது. மிகவும் தாமதமாகவே இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது.
அந்த சிறுமி கொல்லப்பட்டதை விட அதை வைத்து பாஜக கட்சியினர் செய்யும் மோசமான அரசியலும், இந்துத்துவா குற்றவாளிகளை காப்பற்ற துடிக்கும் அவர்களின் எண்ணமும் அதிக அருவெறுப்பை தருகிறது.
யார் இவர்
முகமது யூசுப் புஜ்வாலா, நசீமா பிபி ஆகிய தம்பதிகளுக்கு பிறந்தவர்தான் அந்த 8 வயது நிரம்பிய சிறுமி பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார். முஸ்லிம்கள் அதிகம் வாழும் காஷ்மீரின், கத்துவா பகுதியில் வசித்து வந்தார். முஸ்லிம்களில் ஆடு, மாடு, குதிரை மேய்த்து பிழைப்பு நடத்தும் குஜ்ஜார் இனத்தை சேர்ந்தவர்கள் இவர்கள்.
மகள் காணவில்லை
கடந்த ஜனவரி 10 தேதி மதியம் சிறுமி காட்டில் விடப்பட்ட குதிரைகளை தேடி சென்று இருக்கிறார். சரியாக மாலை 6 மணிக்கு மேல் குதிரைகள் மட்டுமே வீடு திரும்பி இருக்கிறது. இரவு நேரம் ஆக, ஆக சிறுமி வீட்டிற்கு வரவே இல்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை புஜ்வாலா தொடங்கி அந்த பகுதியில் வசிக்கும் சில ஆண்கள் சேர்ந்து சிறுமியை தேடி சென்று இருக்கிறார்கள்.
போலீஸ்
ஆனால் இரவு முழுக்க தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து மறுநாள் காலையில் இருந்து இரண்டு நாட்கள் 20க்கும் அதிகமான நபர்கள் சேர்ந்து அந்த சிறுமியை காட்டில் தேடியுள்ளார். அப்போதும் கிடைக்காத காரணத்தால் அந்த சிறுமியை பற்றி மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீஸ் இதை விசாரிக்காமல், ''அந்த சிறுமி ஏதாவது பையனுடன் ஓடிப்போய் இருப்பார், எந்த பையன் ஊரில் காணவில்லை'' என்று பாருங்கள் என்று கிண்டல் செய்து இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவனே குற்றவாளி
ஆனால் குஜ்ஜார் இன மக்கள் இதை விடுவதாக இல்லை. போலீசுக்கு எதிராக உடனே தெருவில் இறங்கினார்கள். மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அந்த சிறுமியை தேடுவதற்கு தனிப்படை அமைத்தது. இந்த படையில் தீபக் காஜூரியா என்ற போலீஸ் இடம்பெற்று இருந்தார். அவரும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்தான்.
5 நாட்களுக்கு பின்
குற்றவாளியே போலீஸ் குழுவில் இருந்ததால், அந்த சிறுமி கண்டுபிடிக்கப்படவே இல்லை. இதையடுத்து, சிறுமியின் பக்கத்து வீட்டு நபர்கள், மாடு மேய்க்கும் போது, அந்த சிறுமியின் உடலை கண்டுபிடித்துள்ளனர். சரியாக 5 நாட்களுக்கு பின் சிறுமி உடல் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. சிறுமியின் கால், கைகள் உடைந்து, மண்டையோடு சிதைந்து, உடல் முழுக்க ரத்தமாக, கீறல்களுடன் கிடந்துள்ளார். உடல் நீல நிறத்தில் மாறி இருக்கிறது.
விசாரணை ஆணையம்
இதையடுத்து பொறுமையாக 23ம் தேதி குற்றவாளிகளை பிடிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 6 நாட்களுக்கு பின்தான் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்படி சாஞ்சி ராம் என்ற 60 வயது முன்னாள் அரசு ஊழியரையும், சுரேந்திர வர்மா, ஆனந்த் துட்டா, திலக் ராஜ், தீபக் காஜூரியா என்ற நான்கு போலீஸ்களையும், விஷால் என்ற சாஞ்சி ராமின் மகனையும், பர்வேஷ் என்ற அவரின் நண்பரையும் கைது செய்தது.
யார் இவர்கள்
மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் 2 பேர் 18 வயது நிரம்பாத சிறுவர்கள். 4 பேர் போலீஸ்கள். ஒருவர், சிறுமி வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி. இவர்கள் எல்லோரும் பாஜக காட்சியிலும், ஆர்எஸ்எஸ், ஹிந்துத்துவா அமைப்பிலும் இருப்பவர்கள். வழக்கை விசாரித்த தீபக்தான் இதை இவ்வளவு நாள் திசை திருப்பி இருக்கிறார்.
கோவிலில் வைத்து
அந்த சிறுமியை குதிரை மேய்க்கும் போது கடத்தி இருக்கிறார்கள். கோவிலில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். ஆனால் பின் வன்புணர்வு செய்ய அந்த சிறுவர்கள் விரும்பியதால், வன்புணர்வு செய்து கொலை செய்து இருக்கிறார்கள். 4 நாட்கள் கொடுமைப்படுத்திவிட்டுதான் கொன்று இருக்கிறார்கள். இத்தனையும் நடந்தது பாஜக கட்சியினர் அதிகம் மதிக்கும் ஒரு இந்து கோவிலில் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம்
ஜம்முவில் இந்துக்கள் அதிகம் வசிக்கிறார்கள். காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் கத்துவா பகுதியில் இரண்டு விதமான மக்களும் இருக்கிறார்கள். இந்துக்களின் நிலத்தில் முஸ்லிம்களின் கால்நடைகள் மேய்வது பிரச்சனை ஆகியுள்ளது. இந்த முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டவே இந்துத்துவா ஆட்கள் அந்த சிறுமியை கடத்தி உள்ளனர். பின் மனம் மாறி கொலை வரை சென்றுள்ளது.
பாஜகவின் இழிவான அரசியல்
ஆனால் இந்த சம்பவம் இதோடு முடியவில்லை. இதை பற்றி பேசிய பாஜக கட்சியை சேர்ந்த ராஜீவ் ஜாஸ்ரோட்டியா, இது சிறுமியின் குடும்ப விஷயம் என்றார். குற்றவாளிகளை கைது செய்வதை எதிர்த்து ஹிந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தியது. இதில் இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு குற்றவாளிக்கு ஆதரவாக கோஷமிட்டனர். பிரதமர் மோடி இது பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை, ஐபிஎல் போட்டிக்காக ராஜிவ் சுக்லாவை சந்தித்த பாஜக எம்பிக்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை.
கடைசியில் கூட இப்படி
எல்லாம் முடிந்த பின்பும் பெரிய பிரச்சனை தொடங்கியது. சிறுமியின் உறவினர்கள் அவர்களுக்கு சொந்தமான பகுதியில் சிறுமியின் உடலை எரிக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அங்கு வந்த ஹிந்துத்துவா அமைப்பினர், ஆசிஃபாவின் உடலை அந்த பகுதியில் எரித்தால் எல்லோரையும் கொலை செய்வோம் என்று மிரட்டி இருக்கிறார்கள். இதனால் அந்த சிறுமியின் உடலை 7 கிமீ தூரம் கொண்டு சென்று வேறு கிராமத்தில் எரித்து இருக்கிறார்கள்.

வியாழன், 12 ஏப்ரல், 2018

மதி நியூஸ் 12/04/18 !

 மதி நியூஸ் 12/04/18 !

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.டெல்டா மாவட்ட விவசாயிகள் ஜூன் 1 முதல் தங்களது விவசாய பணிகளை தொடங்க வழிவகை செய்ய வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை.

காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டம் தொடரும்.டெல்டா விவசாயிகள் விழிப்புடன் உள்ளனர். மத்திய , மாநில அரசுகள் மீது விவசாயிகள் கோபத்தில் உள்ளனர் - முக.ஸ்டாலின்.

 அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய போவதாகத்  கேசி.பழனிசாமி அறிவிப்பு.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் முடித்திருக்க உத்தரவிடக்கோரிய வழக்கு : இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று தெரிவிக்க, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

வன்முறையை தூண்டும் விதத்தில் போராடும் பாரதிராஜா, சீமான், அமீர் உள்ளிட்டோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - நாகையில் ஹெச்.ராஜா பேட்டி.

காவிரி வாரியம் அமைக்க வேண்டும் என்று வீட்டுச்சுவரில் எழுதிவிட்டு ஈரோடு அருகே இளைஞர் தீக்குளித்த சித்தோடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் தீக்குளித்து உயிரிழந்தார்.

காவிரி போராட்டங்களை 16ம் தேதிக்குள் நிறுத்தாவிட்டால், தமிழக வாகனங்களை கர்நாடக எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம் - வாட்டாள் நாகராஜ்.

நாடு முழுவதும் பாஜக எம்.பிக்கள் உண்ணாவிரதம் - தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி அலுவல் பணிகளை மேற்கொண்டவாறே உண்ணாவிரதம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடல் கடந்த வர்த்தகத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.500க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள் 125 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.சோழர்கள் ஆண்ட பகுதியில் நீங்கள் இந்த அளவுக்கு கூடியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன் - பிரதமர் மோடி.

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதிக்க கோரி ஆலை முன்பு வேலை செய்யும் ஊழியர்கள், தொழிலாளர்கள், ஒப்பந்தகாரர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம்.

எங்களின் நோக்கம் சொற்பொழிவாற்றுவது இல்லை கவனிப்பது.கனவு காணவேண்டும் என்ற கலாமின் விருப்பப்படி இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல கனவு காணுவோம் : பிரதமர் மோடி.

உலக அளவில் GoBackModi ஹாஷ்டெக் டிரெண்டிங்கில் முதலிடம்.

இனி காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ளக்கூடாது என முக.ஸ்டாலினுக்கு சீர்காழி காவல்துறை சம்மன் : போலீசாரின் சம்மனை வாங்க மறுத்து ஸ்டாலின் தொடர்ந்து நடைபயணம்.

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் கறுப்புக் கொடி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடும் போராளிகளை வணங்குகிறேன். காவிரிக்காக போராடும் அனைவரும் உயர்ந்தவர்கள் தியாகிகள் : நடிகர் சத்யராஜ்.

நடிகர் ரஜினிகாந்த் உடன், அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ் சந்திப்பு.

சென்னை மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு.

தமிழகத்தில் முதல்முறையாக ராணுவ கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தமிழகத்தில் தொழில்புரிய எளிய நடைமுறைகளுக்கான திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.பிரதமரின் மேக் இன் இந்தியா கனவை ராணுவ கண்காட்சி நிறைவேற்றும்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமையாவிடில் , மழைக்கால கூட்டத் தொடரும் முடக்கப்படும் - அதிமுக எம்பி மைத்ரேயன் எச்சரிக்கை.

தமிழகத்தில் ராணுவ காரிடார் அமைக்க நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

காவிரி விவகாரம்: பாமரர்களும், பண்டிதர்களும் இந்த காலதாமதம் கர்நாடக தேர்தலுக்கானது என நம்ப துவங்கிவிட்டனர் - பிரதமரை குறிப்பிட்டு கருப்பு சட்டை அணிந்து கமல்ஹாசன் வீடியோ பதிவு.

பிரதமர் வருகையை எதிர்த்து சென்னை ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன், வேல்முருகன் கைது.

சென்னையில் திமுக எம்எல்ஏ மா. சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது.

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு.

காவல்துறை பாதுகாப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் வீரர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து மும்பை கிளம்பினர்.

பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி விமான நிலையம் முற்றுகையிட்ட இயக்குனர்கள் பாரதிராஜா , அமீர் , ராம் , கவுதமன் , வெற்றிமாறன் கைது.

அவரவர் விரும்பிய வடிவில் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.திட்டமிட்டபடி ஈரோட்டில் போராட்டம் இருப்பதால் கருப்புக்கொடி காட்டுவதில் பங்கெடுக்கவில்லை - டிடிவி தினகரன்.

பாதுகாப்புத்துறை வளர்ச்சியில் தமிழகம் 20%க்கும் மேல் பங்காற்றி வருகிறது.பாதுகாப்பு வளர்ச்சியில் இந்த வருடம் தமிழகத்தின் பங்கு 25% ஆக இருக்கும் - தமிழக முதலமைச்சர்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க அழைக்கிறேன்.ராணுவத் தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளோம் - அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த மோடியை தற்போதுள்ள ஆட்சியாளர்கள் ஆதரிக்கின்றனர் - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

இயற்கைப் பேரிடரின் போது தமிழர்களை காப்பாற்றாத ராணுவத்துக்கு எதற்கு கண்காட்சி ? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கன்டெய்னர் லாரிகள் 24 மணி நேரம் வேலை நிறுத்தம்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கிமலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை, எஸ்டிபிஐ , ஆம் ஆத்மி , தமிழக பேரியக்க கட்சி தொண்டர்கள் கைது.

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்கே. சூரப்பா பதவி ஏற்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி மத்திய சிறையில் 2 வது நாளாக உண்ணாவிரத போராட்டம்.

ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 41 ராக்கெட் மூலம் ஐஆர்என்எஸ்எஸ் 1 ஏ செயற்கை கோள் அதிகாலை விண்ணில் ஏவப்பட்டது.

காவிரி தண்ணீர் தராத கர்நாடகாவை கண்டித்து தஞ்சையில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு பெயர் பலகை மற்றும் கதவுகளில் தார் அடித்து தமிழ் தேசிய கட்சியினர் போராட்டம்.

தேனி மாவட்டம் போடி தேவர் சிலையிலிருந்து வள்ளுவர் சிலை வரை அனைத்திந்திய பெருமன்றம் சார்பாக பிரதமர் மோடி தமிழக வருகையை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஊர்வலம்.

கோவையில், பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட துண்டுச்சீட்டுகளை கட்டி புறாக்களை பறக்கவிடும் திமுகவினர் போராட்டம்.

திருச்சி திருவெறும்பூரில் இளம்பெண் உஷா உயிரிழந்த சம்பவத்தில் கைதான போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன்.

குரங்கணி தீ விபத்து தொடர்பாக டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டருக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

சிதம்பரம்: சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி, நடைபயணத்தை கைவிட வேண்டும் என ஸ்டாலினுக்கு காவல்துறை சம்மன், சம்மனை வாங்க ஸ்டாலின் மறுப்பு.

காமன்வெல்த் 74 கிலோ ஆடவர் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுஷில்குமார் தங்கம் வென்றார்.

காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா அடுத்த 2 ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் : சிஎஸ்கே அறிவிப்பு.

புதன், 11 ஏப்ரல், 2018

ராம்குமார் கரண்ட் ஷாக் வைத்துக் கொலை! - அம்பலப்படுத்தும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!

ராம்குமார் கரண்ட் ஷாக் வைத்துக் கொலை!
- அம்பலப்படுத்தும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!

ஸ்வாதி படுகொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார்,  வாயை திறந்து ஏதோ ஒரு உண்மையை சொல்லிவிடக்கூடாது என்று கைதுசெய்யும்போதே கழுத்தறுத்த போலீஸ்... அவன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்துவிடுவான் என்பதால் மின்சாரம் பாய்ச்சி கொலைசெய்துவிட்டார்கள் என்பதை ஆரம்பித்திலிருந்தே நக்கீரனிஸத்துடன் ஓங்கி அடித்ததுபோல் சொல்லிவந்தது நக்கீரன் மட்டுமே! இப்போது, பிரேத பரிசோதனை அறிக்கையையும் வெளியிட்டு ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது நக்கீரன்.

அப்படி நடந்திருக்குமோ? இப்படி நடந்திருக்குமோ?  என்று படிப்பவர்களை பார்த்து கேள்வி எழுப்பி குழப்பாமல்... அப்படித்தான் நடந்தது என்று உண்மையை துணிவுடன் சொல்லும் புலனாய்வு பத்திரிகை என்பதால்... 1 1/2 வருட தேடல் போராட்டத்திற்கு பிறகு ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜன், அன்புத்தம்பி திலீபன் மகேந்திரன் ஆகியோரின் பேருதவியால் ராம்குமாரின் 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'( பிரேத பரிசோதனை அறிக்கை)  மற்றும் விசாரணை அதிகாரியும் திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டுமான தமிழ்ச்செல்வியின் விசாரணை அறிக்கைகளும் பிரத்யேகமாக கிடைத்தன.

நண்பர் என்பதால் டாக்டர் வீ.புகழேந்தியிடம் அந்த ஆவணங்களை அனுப்பி படித்துப்பார்த்து கருத்துகேட்டேன். அவரும் அவரது நண்பர் கோவை டாக்டர் ரமேஷும் படித்துப்பார்த்து பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பினார்கள். என்னதான், டாக்டர் வீ. புகழேந்தியும் டாக்டர் ரமேஷும் அனுபவம் வாய்ந்த சிறந்த மருத்துவர்களாக இருந்தாலும் அவர்கள் எம்.பி.பி.எஸ். மட்டுமே படித்த பொதுநல மருத்துவர்கள்.  கொலையா? தற்கொலையா? என்ற பிரேத பரிசோதனை அறிக்கையை படித்து ஒரு தடயவியல் பேராசிரியர் சொன்னால்தான் நீதிமன்ற விசாரணைக்கு உதவும் என்பதால் சென்னையிலுள்ள பிரபல ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் பேராசிரியர்  டாக்டர் சம்பத்குமாரிடம் கேட்டபோது...
"சந்தேகமே இல்லை...12 இடங்களில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இது, தற்கொலையே அல்ல; அப்பட்டமான படுகொலை" என்று ஓங்கி அடித்ததுபோல் சொன்னார் டாக்டர் சம்பத்குமார்.

இச்சூழலில், பொதுநல மருத்துவர் என்று கருதிய டாக்டர் வீ. புகழேந்தி சுயநல மருத்துவராகி, நக்கீரன் கொடுத்த ஆவணங்களை விகடனுக்கு விற்றுவிட்டார். அந்த ஆவணத்தைதான் நக்கீரன் இதழ் அச்சிற்கு செல்லும்முன் விகடன் வெப்ஸைட்டில் செய்தியாக வெளியிட்டார் நண்பர் விஜய ஆனந்த்.
 அடுத்த இதழில்... ராம்குமார் கொலை செய்யப்பட்டதற்கு இன்னொரு அழுத்தமான காரணத்தையும் நக்கீரன் வெளியிட இருக்கிறது.

எது, எப்படியோ... விகடனாரே! ராம்குமார் படுகொலை என்பது மட்டுமல்ல ஸ்வாதியின் படுகொலையின் உண்மைக்குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க ஒரே பாதையில் ஒற்றுமையுடன் ஊடக அறத்துடன் பயணிப்போம்!

"ராம்குமார் சிறைப்படுகொலை உண்மையை அம்பலப்படுத்தவேண்டும் தம்பி"...என்று என்னை தொடர்ந்து இயக்கிக்கொண்டிருந்த அண்ணன்கள் நக்கீரன் கோபால் அவர்களுக்கும்  பொறுப்பாசிரியர்  Govi Lenin அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! நக்கீரன்  இதழ் வெளியானதிலிருந்து தொடர்ந்து ஃபோன் செய்து உற்சாகப்படுத்தும் உள்ளங்களுக்கும் நன்றிகள்!!!

ராம்குமார் படுகொலை உண்மைகள் வெளிவராமல் ஸ்வாதி படுகொலை உண்மை வெளிவாராது.
                 -மனோ செளந்தர்
      நக்கீரன் தலைமை செய்தியாளர் 

எடப்பாடியாருக்கு ஆபத்து…! நெல்லையப்பா காப்பாத்து..!

எடப்பாடியாருக்கு ஆபத்து…! நெல்லையப்பா காப்பாத்து..!

இந்த அழைப்பிதழ் முதல்வர் எடப்பாடியார் கவனத்துக்கும் சென்றிருக்கும். ஆனால், இதில் ஒரு ரகசியத்தை நெல்லை மக்கள் கிசுகிசுக்கிறார்கள். இந்தக் குடமுழுக்கு விழாவின் பின்னணியில் திகழும் அந்த நபர், தினகரன் ஆதரவாளர் என்றும், எடப்பாடி அரசு கவிழ வேண்டும் என்பதற்காகத்தானே இந்த நாளில் செய்கிறோம் என்று வீம்புக்குக் கூறியதாகவும் ஒரு பேச்சு உலா வருகிறது...!
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் குடமுழுக்கு விழா குறித்த தேதியில் நிகழ்த்தப் பட்டால், நாட்டை ஆள்பவர்க்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் ஜோதிடர்களும் சாஸ்திர விற்பன்னர்களும்!
குடமுழுக்கு விழா குறித்து தேதி அறிவிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப் பட்ட நிலையில், இந்தத் தகவல்களால் ஏற்பட்ட குழப்பத்தில், கும்பாபிஷேக தேதியில் மாற்றம் வருமா என்று எதிர்பார்க்கிறார்கள் அன்பர்கள் பலர்! சைவ ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜோதிடர்கள் உள்ளிட்டோர் குடமுழுக்கு விழா தேதியை தேதியை மாற்ற வலியுறுத்துகின்றனர்.
நெல்லையப்பர் கோவிலில் என்று பாலாலயம் ஆனதோ, அன்றிலிருந்தே குழப்பங்கள்தான். பாலாலயம் ஆனதே குழப்பத்தில்தான் என்பதால், எல்லாவற்றிலுமே நீடிக்கிறது குழப்பம்.
தற்போது குறிக்கப்பட்டுள்ள தேதியன்று கும்பாபிஷேகம் நடத்தினால் நாட்டு மக்களுக்கும்,அரசு செய்யும் ஆட்சிக்கும், ஆட்சியாளருக்கும், மக்களுக்கும் மிகப் பெரிய ஆபத்தும் கேடும் உள்ளது என்று ஆதீனங்களும்,ஜோதிட வல்லுநர்களும் அடித்துக் கூறுகின்றனர்.
நெல்லைக்கு பெயர் வருவதற்குக் காரணமே நெல்லை வேலியிட்டுக் காத்த நெல்லையப்பர்தான்! இந்தக் கோயிலில் பாலாலயம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. தற்போது வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறப் போவதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பக்தர்கள் தரப்பில் திருப்பணி 10.சதவீதம் கூட நடைபெறாத நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதா என கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு வழிகளில் பக்தர்கள் தரப்பில் இருந்து ஆட்சேபணைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து கும்பாபிஷேக தேதி குறித்துக் கொடுத்தவரிடம் பேசினோம். ஏன் இத்தனை குழப்பங்களிந்த தேதியில் என்று! சித்திரை மாதத்தில் எந்த தேதியும் சிறப்பாக இல்லை. அதனால் இருக்கும் தேதிகளில் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தேதியை குறித்துக் கொடுத்தோம் என்று கூறினார். அடுத்து வரும் வைகாசி மாதத்தில் வைக்கலாமே என்றபோது, அது, மல மாதம் என்பதால், இந்த வருட வைகாசி மாதத்தில் குடமுழுக்கு வைபோகம், சுபகாரியங்கள் நடத்தக் கூடாது என்றார்.
திருப்பணிகளே நிறைவு பெறவில்லை, இந்நிலையில் ஏன் கும்பாபிஷேகத்துக்கு இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள்; அடுத்து வரும் ஆனி, ஆவணி மாதங்களில் வைத்துக் கொள்ளலாம் அல்லவா என்று கேட்ட போது, திருக்கோயில் நிர்வாகத்தினர் தரப்பில் ஆனித் திருவிழா நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும், எனவே, அதற்கு முன்னதாக அவசியம் குடமுழுக்கு நடத்தியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், எனவே வேறு வழியின்றி சித்திரை மாதத்தில் வரும் ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய தேதியை குறித்துக் கொடுத்ததாகவும் கூறினார்.
சொல்லப் போனால், நெல்லையப்பர் திருக்கோவிலில் பன்னிரண்டு மாதங்களுமே திருவிழாக்களின் மாதங்கள்தான். இப்படி, பக்ஷ உத்ஸவம், மாச உத்ஸவம், சம்வத்ஸர உத்ஸவம் நடக்கும் பெரிய திருக்கோயில்களில், திருப்பணிகளை பகுதி பகுதியாக முடித்து, சில சந்நிதிகளைச் சேர்த்து பாலாலயம் செய்து, திருப்பணி நிறைவுற்றதும் பகுதி பகுதியாக கும்பாபிஷேகம் செய்து வைப்பார்கள். திருவரங்கம் திருக்கோயில் உள்ளிட்ட பெரும்பாலான பெரிய கோயில்களிலும் இப்படித்தான் நடந்தது.
நெல்லையப்பர் கோயிலில் 2004 குடமுழுக்கிற்கு முன்னர் நடந்த பாலாலயமும் கூட இவ்வாறு பகுதி பகுதியாகவே நடந்தது. ஆனால் இம்முறை வெகு ரகசியமாக இரவோடு இரவாக அவசர அவசரமாக பாலாலயம் நடைபெற்றது. அதுவும், கோவிலின் பிரதான மூலஸ்தானம் தவிர்த்து ஏனைய சந்நிதிகள் முழுவதும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, கோவில் திருவிழா காலங்களையும் தடை செய்து விட்டு, தற்போது ஆனித் திருவிழாவின் பெயரில் அவசரப்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறார் நெல்லை திருக்கோயில்கள் வழிபடுவோர் சங்க பொதுச் செயலாளர் கயிலை கண்ணன்.
அவர் இந்த பிரச்னை குறித்து மேலும் தெரிவித்த போது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டத்தில் அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி பாலாலயம் செய்து மூன்று மாதத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என வெளிப்படையாக அறிவித்தார் அப்போதே அதற்கு பக்தர்கள், முன்னாள் திருப்பணிக் குழுவினர் உட்பட பலர் ஆட்சேபித்தனர். அந்த எதிர்ப்புக் குரல்களை எல்லாம் செவி மடுக்காமல், தாம் நினைத்தபடியே பாலாலயம் நடத்தி, நான்கு மாதத்திற்குள் கும்பாபிஷேகம் செய்ய மல்லுக்கு நிற்கிறார்கள். ஏன் இந்த அவசரம் என்று தெரியவில்லை.
இப்படி செய்ய முயற்சி செய்தால், உள்ளூர் பட்டர்கள், திருப்பணிக் குழுவினர், பொதுமக்களின் எதிர்ப்பு வரும் என்று அதிகாரிகள் முன்னதாகவே நினைத்துக் கொண்டு, இந்தக் கோயிலுக்கு சம்பந்தமே இல்லாத, வெளிநபரான தூத்துக்குடி சிவஶ்ரீ செல்வம் பட்டர் உதவியுடன் பாலாலயத்தை நடத்தியுள்ளார்கள். அவருக்கு உறுதுணையாக, நெல்லையப்பர் கோயில் பட்டியலில் இல்லாத பிச்சையா பட்டர் இருந்திருக்கிறார். அதுவும், முதல் நாள் மாலை கோயிலுக்கு பக்தர்கள் எல்லாரும் வந்து தரிசனம் முடித்துவிட்டு சென்றபோது, அவர்களுக்கே எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை, நோட்டீஸ் போர்டில் கூட ஒரு அறிவிப்பை ஒட்டவில்லை. மறுநாள் காலையில் பார்க்கும் போது, சந்நிதிகளுக்கு பாலாலயம் ஆகியிருக்கிறது என்று ஆதங்கப் படுகிறார்கள் பக்தர்கள்.
நெல்லையப்பர் கோவில் பன்னிரண்டு மாதங்களும் திருவிழா நடைபெறும் கோவில் என்பதை அறிந்தும் கோவில் கொடிமரம் உட்பட அனைத்து சந்நிதிகளையும் ஒரே நாளில் பாலாலயம் செய்து கொடுத்துள்ளார் செல்வம் பட்டர். ஆனால் இன்று வரை, கொடிமரத்தில் எந்தவித திருப்பணியும் நடைபெறவில்லை. இதுவரை திருப்பணி நடைபெறாத கொடிமரத்தையும் சேர்த்து ஏன் பாலாலயம் செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் பக்தர்கள்.
நெல்லையப்பரைப் போல், நெல்லை வாழ் மக்களின் உணர்வு பூர்வமான தெய்வமான அன்னை காந்திமதி அம்பாள் சந்நிதியிலும் சுவாமி நெல்லையப்பர் சந்நிதியிலும் திருப்பணிகள் முறையாக நடந்தனவா என்றால் இல்லை என்று அடித்துக் கூறுகிறார்கள் பக்தர்கள்.
பக்தர்கள் இது குறித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து, கேள்விகள் சிலவற்றை முன்வைக்கின்றனர்.
திருப்பணிக் கமிட்டி அமைக்காமல் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று பக்தர்கள் கூறிய போது, கமிட்டி அமைக்காமல் தற்போது பணம் பிரிப்பதற்காக உபய திருப்பணி கமிட்டி அமைத்ததன் ரகசியம் என்ன?
இந்த கமிட்டி பணம் பிரிக்க அனுமதி வழங்கியது யார்? இவர்கள் பிரிக்கும் பணம் யார் யாருக்கு பங்கு? உபய திருப்பணி கமிட்டி எதற்கு ?
பன்னிரண்டு மாதங்களும் திருவிழா நடக்கும் கோவில் இயல்பையே முடக்குமாறு பாலாலயம் செய்த தூத்துக்குடி சிவஶ்ரீ செல்வம் பட்டரின் அவசரம், இதன் பின்னணியை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தூண்டுகிறது. மேலும் கோவில் பட்டர்கள் கும்பாபிஷேகப் பொறுப்பினை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பின்னரும் செல்வம் பட்டரையே தற்போது சர்வ சாதகமாக நியமித்திருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. திருப்பணிகள் முறையாக முழுமையாக முடியாத நிலையில் கும்பாபிஷேகம் செய்வது சரிதானா என்று பக்தர்கள் மனம் நொந்து கூறுகின்றனர்.
வரும் ஏப்ரல் 27 அன்று அன்று கும்பாபிஷேகம் நடந்தால் நாட்டுக்கும் அரசுக்கும் அரசு ஆட்சி செய்பவர்களுக்கும் பெரும் கேடு வரும் என்று சாஸ்திரங்கள் குறித்திருப்பதை அறிந்தும், இதனை பிரபல ஜோதிடர்கள் சொல்லி சுட்டிக் காட்டியும் கூட ஏன் இந்த தேதியில் வைத்தார்கள்?
தருமை ஆதீனமும் கூட தம்முடைய கடுமையான ஆட்சேபத்தை கோவில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் பிரமுகர்களிடம் தெரிவித்ததாக தருமை ஆதீன வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அறநிலையத்துறை இந்த தேதியில் கும்பாபிஷேகம் நடந்தால் மட்டுமே ஆனித் திருவிழா நடைபெறும் எனத் தெரிவித்ததாகவும், அதற்கு அவசரமாகவும் சிந்திக்காமலும் பாலாலயம் செய்து விட்டு இப்போது சிந்திப்பது பலனில்லை எனவும், திருவிழா முக்கியமா நாட்டு நலன் முக்கியமா என ஆதீனம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிகிறது.
அதற்கு திருக்கோயில் நிர்வாகம், தாங்கள் நிர்ணயித்த தேதியை மாற்றாமல் அதிகாலை 4.40 முதல் 5.10 வரையாக இருந்த கும்பாபிஷேக நேரத்தை காலை 9.25 முதல் 10.15 வரை என மாற்றம் செய்யலாம் என ஆலோசித்ததாகவும், அதற்கும் ஆதீனம் தன் ஆட்சேபத்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த திட்டத்தையும் கைவிட்ட நிர்வாகம், தாங்கள் முன்னர் யோசித்த அதே நேரத்திலேயே கும்பாபிஷேகம் நடத்த முடிவு எடுத்து, அழைப்பிதழையும் அச்சடித்து அனைவருக்கும் வழங்கிவிட்டது.
இந்த அழைப்பிதழ் முதல்வர் எடப்பாடியார் கவனத்துக்கும் சென்றிருக்கும். ஆனால், இதில் ஒரு ரகசியத்தை நெல்லை மக்கள் கிசுகிசுக்கிறார்கள். இந்தக் குடமுழுக்கு விழாவின் பின்னணியில் திகழும் அந்த நபர், தினகரன் ஆதரவாளர் என்றும், எடப்பாடி அரசு கவிழ வேண்டும் என்பதற்காகத்தானே இந்த நாளில் செய்கிறோம் என்று வீம்புக்குக் கூறியதாகவும் ஒரு பேச்சு உலா வருகிறது…!
எப்படியாய் இருந்தால் என்ன… எடப்பாடியாருக்கு ஆபத்து… எங்களைக் காப்பாத்து நெல்லையப்பா… இதுதான் இப்போதைய பிரார்த்தனையாக இருக்கிறது நெல்லையப்பரை தரிசிக்க வரும் பக்தர்களிடம்!

மதி நியூஸ் 11/04/18 !

மதி நியூஸ் 11/04/18 !

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி இரயில் மீது ஏறி போராடிய பாமக தொண்டர் மின்சாரம் தாக்கி ஒருவர்பலி.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் எந்த சூழலிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கு வாய்ப்பில்லை -உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன்.

உள்ளாட்சி வார்டு மறுவரையறை பணிகளை விரைந்து முடித்து, விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வேலுமணி.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணு உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது.

ஸ்டெர்லைட் ஆலையால் பெரும் பாதிப்பு இருக்கிறது மக்கள் பெரும் பாதிப்படைந்திருக்கிறார்கள்.உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் : நல்லகண்ணு.

எங்களை விட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.தமிழகத்தில் காவிரி பிரச்சனை இருக்கும் போது ஐபிஎல் போட்டியை அனுமதிக்கக் கூடாது : முக.ஸ்டாலின்.

இறைச்சிக்காக மாடுகளை விற்கலாம் மத்திய அரசு புதிய வரைவு.

அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தியில் இந்தியா முக்கிய சக்தியாக விளங்கும்.மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அரசு ஊக்குவிக்கிறது - பிரதமர் மோடி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, முழுஅடைப்பு போராட்டத்தை தொடர்ந்து, காவிரி உரிமை மீட்பு பயணத்தை நடத்தி வருகிறோம் : திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

காவிரி விவகாரத்தில் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்படுகிறது - அன்புமணி ராமதாஸ்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது.

காவல் துறையினர் மீதான தாக்குதல் வன்முறையின் உச்சகட்டம் - ஐபிஎல் போட்டி எதிர்ப்பு போராட்டம் குறித்து நடிகர் ரஜினி.

வன்முறையை ஏற்க முடியாது ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது - அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் நிஜாம் பாக்கு நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமானவரி சோதனையின் போது கணக்கில் வராத ரூ.3 கோடி பறிமுதல்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகளுடன் ஆலோசித்தே வழக்குகளை ஒதுக்க வேண்டும் என தொடரப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு. 4 வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தனது தரப்பு வாதங்களை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக தஷ்வந்த் தரப்பு மனுவில் புகார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஜெ தீபா நாளை ஈரோடு ரயில் நிலையம் முன்பு தீபா பேரவை நாளை கண்டன ஆர்ப்பாட்டம்.

காமன்வெல்த் டபுள் டிராப் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டிக்கும் விதமாக தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மஜீத் தெருவில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்.

ரஜினி கருத்து அரசியல் அறியாமையை காட்டுகிறது - நடிகர் அமீர்.

ரஜினியின் கருத்து கர்நாடக பாசத்தை காட்டுகிறது - தமீமுன் அன்சாரி.

தமிழகத்தில் முதன்முறையாக பாதுகாப்புத்துறை சார்பில் 800 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ராணுவ தளவாட கண்காட்சி இன்று தொடங்கியது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து
திருப்பத்தூர் அஞ்சலம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 300 பேர் கைது.

பாமக போராட்டத்தின் எதிரொலி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி டோல்கேட்டின் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அண்ணாபல்கலை கழக துணைவேந்தராக எம்கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கிண்டியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்.

பாமக சார்பில் இன்று முழுஅடைப்பு : கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் வழியாக தமிழகத்துக்கு இயக்கப்படும் கர்நாடக அரசுப் பேருந்துகள் நிறுத்தம்.

ரூ.2 கோடி வங்கி உத்திரவாதம் அளிக்க உத்தரவிட்டு “காளி” படத்திற்கு விதித்த இடைக்காலத் தடை நீக்கம் - உயர்நீதிமன்றம்.

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

மதி நியூஸ்* 10/04/18 !

மதி நியூஸ்*  10/04/18 !

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முற்றிலுமாக முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் 12-ம் தேதி உண்ணாவிரதம்.

சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி அனைத்து சாலைகளிலும் போராட்டம் போராட்டக்காரர்களா ? ரசிகர்களா ? எனத்தெரியாமல் அதிரடி படையினர் தடியடி.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தொடர் போராட்டம் ஏ. குமரெட்டியாபுரம் கிராம மக்கள் திட்டவட்டமாக அறிவிப்பு.

காவிரி போராட்டத்தின் காரணமாக ரசிகர்கள் வராததால் காலியாக கிடக்கும் சேபாக் மைதானம் ஐ.பி.எல் நிர்வாகம் அதிர்ச்சி.

பிரதமர் மோடி சென்னை வந்தால் இதைவிட மிகப்பெரிய போராட்டம் நடக்கும் : சீமான்.

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு, எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது - துணை சபாநாயகர் தம்பிதுரை.

கடலூரில் இருந்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் பேரணியாக சென்று ராஜ்பவனில் ஏப்.13ஆம் தேதி 12.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன்,தமிமுன் அன்சாரி, கருணாஸ் , மணியரசன் அமீர் உள்ளிட்டோர் கைது.

திட்டமிட்டபடி சென்னையில் தான் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் - ராஜீவ் சுக்லா.

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க மத்திய உள்துறை செயலாளரை சந்தித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கோரிக்கை.

ஐபிஎல் போட்டியை அரசு நிறுத்தாவிட்டால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு பேரணியாக சென்ற விசிகவினர் கைது.

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாலஜா சாலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் போராட்டம்.

காவிரி விவகாரம் மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் நாளை பாமக சார்பில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு - வேல்முருகன் அறிவிப்பு.

ஸ்டெர்லைட் ஆலை புதுப்பிக்கும் மனுவுக்கு அனுமதி மறுப்பு : தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாழ்த்து.

காமன்வெல்த் : பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமல், அமல்ராஜ் , சத்தியன்-க்கு தலா ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை டி.டி.கே சாலையில் கிரிக்கெட் வீரர்கள் வரும் வழியில் தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பு.

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கிழித்து சென்னை அண்ணா சாலையில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்.

ஐபிஎல் போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு கருப்பு பேட்ஜ் அளித்த ரஜினி ரசிகர்கள் 50 பேர் கைது.

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை சேப்பாக்கம் மைதானம் முன்பு எம்.எல்.ஏ. கருணாஸ் சாலை மறியல்.

காவல்துறையில் அனுமதி பெற்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம் - இயக்குநர் பாரதிராஜா.

தமிழரின் ஆதி பண்பாடான விவசாயம் அழிக்கப்படுகிறது.இது காவிரிக்கு ஆதரவான போராட்டம், காவல்துறைக்கு எதிரான போராட்டம் அல்ல - கவிஞர் வைரமுத்து.

கல் எறிவது போன்ற வன்முறை போராட்டத்தை ஏற்க முடியாது என பாரதிராஜா திட்டவட்டம்.

காவிரி மேலாண்மை அமைக்காததை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் அண்ணா சாலையில் போராட்டம்.

திங்கள், 9 ஏப்ரல், 2018

சூரியனுக்கு மனிதனின் முதல் பயணம்!- ஜூலையில் தொடங்குகிறது நாசா


சூரியனுக்கு மனிதனின் முதல் பயணம்!- ஜூலையில் தொடங்குகிறது நாசா

சித்தரிப்புப்படம் சூரியனுக்கு மனிதனின் முதல் பயணம், வரும் ஜுலை தொடங்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது. 
பூமியில் உள்ள உயிர்களுக்கு ஆதாரமாய் திகழ்வது சூரியன். பூமி உள்பட ஞாயிறு மண்டலத்தில் உள்ள (( Solar System)) கோள்கள் அனைத்தும் சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் இயங்கி வருகின்றன.

நிலவுக்கும், சந்திர கிரகத்துக்கும் செயற்கை கோளை அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்த மனிதன், சூரியனை ஆராய்ச்சி செய்ய இதுவரை எந்த கோளையும் அனுப்பியதில்லை.



சுமார் 5,505 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட சூரியனை நெருங்குவது என்பதே கற்பனை செய்துகூட பார்க்க முடியாததாக இருந்தது.

இப்போது இதையும் கடக்க மனிதன் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான். சூரியனுக்கு மனிதனின் முதல் பயணம் என்று கருதப்படும் நாசாவின் பார்க்கர் சோலார் பிரோப் ((Parker Solar Probe)) ஜூலை 31- ஆம் தேசி விண்ணில் ஏவப்பட இருக்கிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து இது  ஏவப்படுகிறது.

எங்கு?

சூரியனைச் சுற்று பல்வேறு வாய்வுகள் நிறைந்துள்ளன. இவையே சூரிய வளிமண்டலம் எனப்படுகிறது. இதில் கரோனா ((the corona)) எனப்படும் இதன் வெளிப்புற அடுக்கை தான் பார்க்கர் புரோப் ஆய்வு செய்கிறது.


படம்: நாசா இணையதளம்

பூமியில் இருந்து 3.8 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள, இதுவரை மனதினால் நெருங்க முடியாத பகுதியாக இருந்த கரோனா பகுதியில் தான் ஆய்வு செய்யப்போகிறது நாசா.

எப்படி?

சூரியனின் வெப்பத்தை தாங்கும், வெப்பநிலை பாதுகாப்பு அம்சம்((thermal protection system)) தான் இந்த விண்கலத்தின் தனிச்சிறப்பு.  இதன்மூலம் கடுமையான வெப்பத்தைத் தாங்க இயலும்.


படம்: நாசா டிவிட்டர்

என்ன பயன்?

இதன்மூலமாக தொடர்ந்து சூரியனில் இருந்து வெளிப்படும் மர்மப் பொருள் பற்றியும், அதனால் பூமி மற்றும் விண்வெளியின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிய முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மேலும் இதன்மூலம் பல அடிப்படை அறிவியல் கருத்துக்கள் தெளிவாக புரியும் என்கிறார்.

தற்போது இதற்கான சேதனைகளை  நாசா நடத்தி வருகிறது. மனிதனின் கால் பதியாத இடம் இனி எங்குமில்லை எனலாம்.

சித்தரிப்புப்படம்

சூரியனுக்கு மனிதனின் முதல் பயணம், வரும் ஜுலை தொடங்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.
பூமியில் உள்ள உயிர்களுக்கு ஆதாரமாய் திகழ்வது சூரியன். பூமி உள்பட ஞாயிறு மண்டலத்தில் உள்ள (( Solar System)) கோள்கள் அனைத்தும் சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் இயங்கி வருகின்றன.


நிலவுக்கும், சந்திர கிரகத்துக்கும் செயற்கை கோளை அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்த மனிதன், சூரியனை ஆராய்ச்சி செய்ய இதுவரை எந்த கோளையும் அனுப்பியதில்லை.
சுமார் 5,505 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட சூரியனை நெருங்குவது என்பதே கற்பனை செய்துகூட பார்க்க முடியாததாக இருந்தது.
இப்போது இதையும் கடக்க மனிதன் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான். சூரியனுக்கு மனிதனின் முதல் பயணம் என்று கருதப்படும் நாசாவின்
பார்க்கர் சோலார் பிரோப்
((Parker Solar Probe)) ஜூலை 31- ஆம் தேசி விண்ணில் ஏவப்பட இருக்கிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து இது  ஏவப்படுகிறது.
எங்கு?
சூரியனைச் சுற்று பல்வேறு வாய்வுகள் நிறைந்துள்ளன. இவையே சூரிய வளிமண்டலம் எனப்படுகிறது. இதில் கரோனா ((the corona)) எனப்படும் இதன் வெளிப்புற அடுக்கை தான் பார்க்கர் புரோப் ஆய்வு செய்கிறது.
படம்: நாசா இணையதளம்
பூமியில் இருந்து 3.8 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள, இதுவரை மனதினால் நெருங்க முடியாத பகுதியாக இருந்த கரோனா பகுதியில் தான் ஆய்வு செய்யப்போகிறது நாசா.
எப்படி?
சூரியனின் வெப்பத்தை தாங்கும், வெப்பநிலை பாதுகாப்பு அம்சம்((thermal protection system)) தான் இந்த விண்கலத்தின் தனிச்சிறப்பு.  இதன்மூலம் கடுமையான வெப்பத்தைத் தாங்க இயலும்.
படம்: நாசா டிவிட்டர்
என்ன பயன்?
இதன்மூலமாக தொடர்ந்து சூரியனில் இருந்து வெளிப்படும் மர்மப் பொருள் பற்றியும், அதனால் பூமி மற்றும் விண்வெளியின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிய முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மேலும் இதன்மூலம் பல அடிப்படை அறிவியல் கருத்துக்கள் தெளிவாக புரியும் என்கிறார்.
தற்போது இதற்கான சேதனைகளை  நாசா நடத்தி வருகிறது. மனிதனின் கால் பதியாத இடம் இனி எங்குமில்லை எனலாம். நன்றி Tamil Eenadu India

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

*காமன்வெல்த் 2018 : துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு இரு பதக்கங்கள்,


*காமன்வெல்த் 2018 : துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு இரு பதக்கங்கள்,*

*ஆஸ்திரேலியா காமன்வெல்த் 2018 ல் 10 மீட்டர் தூர துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மானு பேகர் தங்கமும், ஹீனா சிந்து வெள்ளியும் வென்றுள்ளனர்.*

*காமன்வெல்த் 2018 போட்டியில் நான்காம் நாளான நேற்று  பளுதூக்கும் போட்டியில் பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றது தெரிந்ததே.*

*தற்போது இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளது.*

*10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் தூரப் பிரிவில் இன்று போட்டி நடந்தது.*

*இதில் இந்தியாவை சேர்ந்த 16 வயதே ஆன மானு பேகர் தங்கப் பதக்கம் வென்றார்.*

*மற்றொரு இந்திய வீராங்கனை ஹீனா சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.*

*இன்றைய போட்டிகளில் இதுவரை இந்தியா இரு தங்கப் பதக்கம் வென்றுள்ளது.*

உங்கள் போனுக்குள் ஓர் உளவாளி! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

ஜூனியர் விகடன்Mar,28th 2018   
அலசல்

உங்கள் போனுக்குள் ஓர் உளவாளி! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

தென் தமிழகத்தின் ஒரு மாநகரில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெண் அவர். சமீப நாள்களாக அவருக்கு ஒரு பிரச்னை. அவ்வப்போது அவர் மொபைல் போனில் திடீரென சில குரல்கள் கேட்கின்றன. 

‘‘இன்னிக்கு கோயிலுக்குப் போகணும்னு சொன்னியே... இன்னுமா கிளம்பலை?’’ என்று அது கேட்கும். ஆம்... அன்று அவர் கோயிலுக்குப் போக வேண்டும் என்று தன் தோழியுடன் பேசியபோது சொல்லியிருந்தார். அதைத்தான் அந்தக் குரல் சொன்னது. இப்படியாக, ‘பால் கொதிக்கிறது’, ‘மொட்டை மாடியில் துணி காய்ந்துவிட்டது’ என அவரின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை அவருக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது அந்த மொபைல் குரல்.

முதலில், அது ஏதோ பேய் அல்லது ஆவியின் வேலை என்றுதான் அவர் நினைத்திருக்கிறார். ஆனால், போகப் போக அந்தக் குரல் விரசமான விஷயங்களையெல்லாம் பேசத் தொடங்கியது. அந்தப் பெண்ணின் பல அந்தரங்க அடையாளங்களை யெல்லாம் குறிப்பிட்டுப் பேசியது. ‘எந்நேரமும் தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள்’ என்ற உணர்வு அவருக்கு அதீத பயத்தைத் தந்தது. ஒரு கட்டத்தில் இந்த விஷயங்களை மறைக்கவும் தெரியாமல், வெளியில் சொல்லவும் முடியாமல் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது. தீர்வு தெரியாமல் ஒருமுறை தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறார்.



ஒருநாள் ஃபேஸ்புக்கில் ‘தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்’ எனும் குழுவின் சைபர் க்ரைம் விழிப்புஉணர்வு பிரசாரங்களைப் பார்த்து அவர்களைத் தொடர்பு கொள்கிறார். ‘‘முதலில் அந்த மொபைலை எறிந்துவிட்டு, புது மொபைலை வாங்குங்கள்’’ என்கிறார்கள் அவர்கள். ஆனால், வாங்கிய இரண்டாவது மொபைலிலும் அதே பிரச்னை. அடுத்து மூன்றாவது. அதிலும் பிரச்னை தீரவில்லை.

‘‘உங்கள் கணவருக்கு உங்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருக்க வாய்ப்புண்டா?’’ என்ற கேள்விக்கு, ‘‘என் கணவர் அப்படிப்பட்டவர் இல்லை’’ என்று பதிலளிக்கிறார். பல கேள்விகளைக் கேட்டு இறுதியாக, ‘‘மொபைல்களை எந்தக் கடையில் வாங்கினீர்கள்?’’ என்று கேட்டபோது, ‘‘மூன்று மொபைல்களையுமே தெரிந்த பையன் கடையில்தான் வாங்கினேன்” என்றார் அந்தப் பெண்.

தங்களிடமிருந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணின் மொபைலில் ‘ஸ்பை ஆப்’ (Spy App) இருப்பதை உறுதி செய்தனர் ‘தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்’ குழுவினர். பிறகு வேறு கடையில் புது மொபைல் வாங்கப்பட்டு, அதில் ஸ்பை ஆப் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தபிறகு, பிரச்னையிலிருந்து விடுபட்டிருக்கிறார் அந்தப் பெண். தனக்குத் தெரிந்த பையனே இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளான் என்பது தெரிந்தும், அவன்மீது எந்தப் புகாரும் கொடுக்கமுடியாத சூழல். அதை நிரூபிப்பதற்கு ஆதாரங்களும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தன் மானமும் சுயமரியாதையும் போய்விடும் என்கிற பயம்.

இந்தச் சம்பவம், ஒரு பெருங் கடலின் சிறு துளி மட்டுமே. இன்றைய தேதியில் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த உளவாளி செயலிகள் (Spy Apps) இந்தியாவுக்குள் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டின் ராணுவம், தனியாக ஒரு சைபர் ஆர்மியை ஏற்படுத்தி எதிரி நாடுகளைக் கண்காணித்த காலம் போய், இப்போது வீடுகளுக்குள்ளும் உறவுகளுக் குள்ளும் இவை ஊடுருவியுள்ளன. ‘‘உங்கள் அன்புக்குரியவர்களைக் கண்காணிக்க எங்கள் ‘ஸ்பை ஆப்’பை பயன்படுத்துங்கள். உங்கள் காதலுக்குரிய வர்களைப் பத்திரமாகப் பாதுகாத்திடுங்கள். தொடர்புக்கு...’’ என்று வந்த ஒரு குறுந்தகவலில் தொடங்கிய இந்தத் தேடல், பல அதிர்ச்சி கரமான விஷயங்களைக் கட்டவிழ்த்து விட்டது.



‘ஸ்பை ஆப்’ என்பது என்ன?

உங்களின் மொத்த செயல்பாடுகளையும் கண்காணிக்கும் உளவாளி. இந்த உளவாளியை உங்களைக் கண்காணிக்க வைப்பது மிகச் சுலபம். உங்கள் மொபைலில் உங்களுக்குத் தெரியாமல் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்யவேண்டும், அவ்வளவே! இதை உங்கள் போனைக் கையில் எடுத்துத்தான் செய்ய வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை. உங்கள் கூகுள் அக்கவுன்ட்டின் பாஸ்வேர்டு யாருக்காவது தெரிந்தால், இணையதளத்திலிருந்தே உங்கள் போனுக்குள் ‘ஸ்பை ஆப்’பை இன்ஸ்டால் செய்துவிடலாம். 

இந்த ஸ்பை ஆப் உங்கள் மொபைலில் இருப்பதே உங்களுக்குத் தெரியாது. அதற்கான எந்த அடையாளங் களையும் அறிகுறிகளையும் அது காட்டாது. நீங்கள் யாருடன் என்ன பேசுகிறீர்கள், என்ன மெசேஜ் அனுப்புகிறீர்கள், இ-மெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஸ்கைப் எனச் சகலத்திலும் உங்களின் செயல்பாடுகளையும்  இந்த ஸ்பை ஆப் கண்காணிக்க முடியும்; அதைக் கட்டுப்படுத்தவும் முடியும். உச்சமாக, உங்கள் மொபைல் கேமராவை உங்களுக்கே தெரியாமல் இயக்கி, நீங்கள் இருக்கும் இடத்தையும், உங்களையும் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால், மொபைலில் கேமரா இயங்கிக் கொண்டிருப்பதற்கான எந்த அறிகுறிகளும் உங்களுக்குத் தெரியாது. அதேபோல், உங்கள் மொபைலின் மைக்கை இயக்கி உங்களைச் சுற்றி நடக்கும் உரையாடல்களையும் தெளிவாகக் கேட்க முடியும்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மட்டுமே சாத்தியமாகிக் கொண்டிருந்த இந்த விஷயங்களை இன்று எவரும் பெற்றுவிட முடியும். செலவு, சில ஆயிரங்கள் மட்டுமே!



‘‘இந்த ஸ்பை ஆப்களின் ஆரம்பம் ஒரு நல்ல நோக்கம்தான். குழந்தைகளைக் கண்காணிக்க பெற்றோர்களுக்கு இது உதவும் என்ற அடிப்படையில் தான் வந்தன’’ என்கிறார், ‘தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்’ குழுவைச் சேர்ந்த வினோத். ‘‘பல நிறுவனங்கள், தங்களின் பணியாளர்களை இதன்மூலம் கண்காணித்தன. தங்கள் நிறுவன ரகசியங்களை அவர்கள் எங்காவது சொல்லிவிடுவார்களோ என்பதைக் கண்காணிக்க இது பயன்படுத்தப்பட்டது. இன்றும் குழந்தைகளையும் நிறுவனங்களையும் முன்னிறுத்தியே இந்த ஸ்பை ஆப்களுக்கு விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், இன்று அது அதற்காக மட்டுமே பயன்படுகிறதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை.

காதலர்கள் ஒருவரையொருவர் கண்காணிக்கிறார் கள். சந்தேகப்படும் கணவர்கள், மனைவியைக் கண்காணிக்கிறார்கள். குறிப்பாக, வெளிநாட்டு வேலையிலிருக்கும் பலர், தங்கள் மனைவிக்கே தெரியாமல் இந்த ஆப்களை போனில் இன்ஸ்டால் செய்து வைத்து அவர்களைக் கண்காணிக்கிறார்கள். இது குடும்ப உறவுக்குள் பெரிய பிளவுகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு நாளும் இப்படி நூற்றுக் கணக்கான புகார்கள் எங்களுக்கு வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த நம் நாட்டில் சரியான சட்டங்களும் இல்லை, அதுகுறித்த தொழில்நுட்ப முன்னெடுப்புகளும் இல்லை. இந்த டிஜிட்டல் உலகில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, வேறு தீர்வு எதையும் சொல்ல முடியவில்லை’’ என்று ஆதங்கத்துடன் பேசுகிறார் வினோத்.



உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த ஸ்பை ஆப்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தனிச் சட்டங்கள் ஏதுமில்லை. இது, முழுக்க முழுக்க ‘தனிநபர் உரிமை’ (Right to Privacy) சட்டத்தின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. இவற்றை விற்கும் நிறுவனங்களும், ‘எங்கள் விற்பனை சட்டபூர்வமானதே. இதை உபயோகிப்பவர்களும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உபயோகிக்க வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டு விடுகின்றன. இதுகுறித்து கோவையைச் சேர்ந்த சைபர் க்ரைம் வழக்கறிஞர் சத்யநாராயணனிடம் பேசினோம்.

‘‘தனிநபர் சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் அரசியல் சட்ட அமைப்பைக் கொண்டது இந்தியா. அரசு கொண்டு வந்த ஆதார் கார்டு திட்டமே கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தது இதன் அடிப்படையில் தான். ஆனால், இங்குதான் ஸ்பை ஆப்கள் மூலம் தனிமனிதர்களின் அந்தரங்கங்கள் வரை சூறை யாடப்படும் அவலம் நிலவுகிறது. ஒருவர், தன் குழந்தைகளையோ அல்லது துணையையோ அவர்களின் அனுமதியுடன் கண்காணிக்க இந்த ஸ்பை ஆப்களைப் பயன்படுத்துவது சட்டபூர்வ மானதுதான். ஆனால், இங்கு அப்படி நடப்பவர்கள் மிகக்குறைவு.

ஸ்பை ஆப்களை உபயோகிப்பவர்கள் பலரும் மிக மோசமான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது ‘தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000’தான். அதில் தனிமனித சுதந்திரம் மற்றும் உரிமைகள் குறித்துப் பேசுவது மொத்தமே ஆறு பிரிவுகள் மட்டுமே. அதே சமயம், ஒரு நிறுவனம் தன் பணியாளர்களை இந்த ஆப்களின் மூலம் கண்காணிப்பது சட்டபூர்வமானதாகத்தான் இருக்கிறது. இந்தச் சட்டங்களில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.இன்றைய உலகில் லத்தி, துப்பாக்கிகளுடன் நிற்கும் போலீஸ் மட்டுமே மக்களைப் பாதுகாத்திட முடியாது. எதிரிகள் வேறு ரூபங்களை எடுத்துவிட்டனர். அவர்களை எதிர்கொள்ள நாமும் மாற வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். இந்த மாற்றத்தை எவ்வளவு விரைவுபடுத்த முடியுமோ, அவ்வளவு நல்லது’’ என்று எச்சரிக்கிறார் சத்யநாராயணன்.



உலகமே மொபைலின் தொடு திரையில் சுருங்கிவிட்ட இந்த டிஜிட்டல் உலகில், மனித மனங்களைப் பாழ்படுத்தும் சூழல்கள் பெருகிவிட்ட நிலையில், அறம் சார்ந்த வாழ்வு மட்டுமே இதற்கான தீர்வாக இருக்கமுடியும்.

- இரா.கலைச்செல்வன்

அசிங்க வியாபாரம்!

‘‘தங்கள் போனில் இப்படிப்பட்ட ஆப் இருக்கிறதா என்பதைப் பெண்கள் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். ஏனெனில், இதில் நடக்கும் இன்னும் பல விஷயங்களை என்னால் வெளிப்படையாகச் சொல்லவே முடியாது. இந்த ஸ்பை ஆப்களின் மிக முக்கிய அபாயமே, இதைக் கொண்டு போனின் கேமராவை இயக்க முடியும் என்பதுதான். பல பெண்களின் அந்தரங்கங்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து, அதை வியாபாரம் செய்வது பெரியளவில் நடக்கிறது. இவற்றை வைத்து, பெண்களை மிரட்டும் சம்பவங்களும் நடந்துள்ளன. இது குறித்து போலீஸில் புகார் கொடுக்கக்கூட பெண்கள் முன்வருவதில்லை. அவர்களால் இதுகுறித்த சரியான ஆதாரங்களைத் திரட்ட முடிவதில்லை என்பது ஒரு பிரச்னை. அப்படி ஒரு புகார் கொடுத்தால், சமூகத்தில் தங்களின் பெயர் பாதிக்கப்படும் என்கிற பயம் இன்னொரு பிரச்னை. இதனால், வெளியில் சொல்லமுடியாமல் பல பெண்கள் தவிக்கிறார்கள்’’ என்கிறார், ‘தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்’ குழுவைச் சேர்ந்த வினோத்.

வெறும் 4,000 ரூபாய்!

நமக்கு வந்த ஒரு குறுந்தகவலில் இருந்த நம்பரைக் கொண்டு சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் ஒரு ‘ஸ்பை ஆப்’ நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். முதலில் பேசிய ஒரு பெண், அந்த ஆப்பின் சிறப்புகளை விளக்கிவிட்டு, ‘‘ஒரு மொபைலில் இதை இன்ஸ்டால் செய்ய 20,000 ரூபாய் ஆகும்’’ என்று சொன்னார். இந்த ‘ஆப்’பின் சட்ட அனுமதிகள் குறித்துக் கேட்டதற்கு, ‘‘எங்கள் நிறுவனத்தின் தலைவர் உங்களிடம் அதை விளக்குவார்’’ என்று சொல்லிட்டு ‘கட்’ செய்தார். பின்னர், பல தடவை அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்த்தும், அது ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்றே வந்தது.

டெல்லியில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்குத் தொடர்புகொண்டு பேசினோம். ‘‘எங்களுடையது அரசு பதிவுபெற்ற நிறுவனம்தான். சட்டரீதியில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. வேண்டுமென்றால், நீங்கள் இதை வாங்கி உபயோகிப்பது குறித்து உங்கள் சட்ட ஆலோசகரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். எங்களிடம் 4,000 ரூபாயிலிருந்து பேக்கேஜ்கள் தொடங்குகின்றன’’ என்று சொன்னார்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

‘ஸ்பை ஆப்’கள் நமக்கே தெரியாத பெயர்களில் நம் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். ‘Settings’ என்ற பெயரிலோ, ‘Tools’ என்ற பெயரிலோ இந்த ஆப் இன்ஸ்டால் ஆகியிருந்தால், உங்களுக்கு எப்படி சந்தேகம் வரும், சொல்லுங்கள்.

சில அறிகுறிகளை வைத்து உங்கள் போனில் ஸ்பை ஆப் இருப்பதை உறுதி செய்யலாம்.

* உங்கள் போனை ஆஃப் செய்யும்போது வழக்கத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்; ஆஃப் ஆன பிறகும் சில நொடிகள் அதன் திரை ஒளிரும்.
* நீங்கள் பயன்படுத்தாமலே திடீரென மொபைலின் திரை ஒளிரும்.
* எந்தப் பயன்பாடும் இல்லாமலே திடீரென போன் சூடாகும்.
* வழக்கத்தைவிட வேகமாக மொபைலின் பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடும்.
* மொபைல் டேட்டா பயன்பாடும் வழக்கத்தைவிட அதிகமாகியிருக்கும்.
* உங்களுக்கு வரும் மெசேஜ்களை நீங்கள் படிக்காமலேயே, தானாகவே படிக்கப்பட்ட மெசேஜாக மாறியிருக்கும். அதை ‘ஸ்பை ஆப்’ பயன்படுத்தி யாரோ படித்திருப்பார்கள்.
* போன் அழைப்புகளைப் பேசும்போது பின்னணியில் தேவையற்ற சத்தங்கள் எழும்.
* உங்களுடைய ‘Location’ உங்களுக்கே தெரியாமல் ‘ஆன்’ ஆகியிருக்கும். உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிப்பதற்காக மொபைலின் ஜி.பி.ஆர்.எஸ் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால், மொபைலில் எந்த ஆப் அதிக டேட்டாவைப் பயன்படுத்துகிறது என்று பார்த்து ‘ஸ்பை ஆப்’ இருப்பதை உறுதி செய்யலாம். ‘ஆன்டி வைரஸ்’ சாஃப்ட்வேர்கள் போலவே ‘ஆன்டி ஸ்பை வேர்’களும் கிடைக்கின்றன. இதற்கு உதவ இணையதளங்களும் இருக்கின்றன. நம்பிக்கையானதுதானா என்று பார்த்துப் பயன்படுத்த வேண்டும்.           

பெயர் தான் தமிழ்நாடு தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் இது சுடுகாடு 1000 ஆண்டு சோழர் காலத்தில் பறிபோகாத காவிரி...

பெயர் தான் தமிழ்நாடு தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் இது சுடுகாடு 1000 ஆண்டு சோழர் காலத்தில் பறிபோகாத காவிரி...

*200 ஆண்டு வெள்ளையர்களின் ஆட்சியில் பறிபோகாத காவிரி.*

*வெறும் 50 ஆண்டு திராவிட ஆட்சியில் பறிபோனது காவிரி...

முதல் துரோகம்.
------------------------------
கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம்.

இரண்டாவது துரோகம்.
-------------------------------------------
இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் திராவிட கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.

மூன்றாவது துரோகம்..
------------------------------------------
3.) 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் காவேரி நீர் உரிமை பிரச்சனை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார் கருணாநிதி

வேறு ஒன்றும் இல்லை சர்க்காரியா கமிஷன் எனும் கத்தி /துப்பாக்கி தான் இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்..

நான்காவது துரோகம்
----------------------------------------
4.)  காவேரி பிரச்சனையின் மூலாதாரமே கருணாநிதிதான். கர்மவீரர் காமராஜ் காலத்தில் கர்நாடக அரசு அணைகள் கட்டவில்லை காவேரி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது . அந்த ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே உருவானது. இந்த ஒப்பந்தப்படி காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசு ஒரு அணையைப் புதிதாகக் கட்ட சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகும் முன்பு நீட்டிக்க வேண்டும் என்பதே அனைவரும் ஒப்புக்கொண்டது .அதனை நீட்டிக்க முயற்சி எடுக்கவில்லை திராவிட கருணாநிதி .அதன் விளைவு கி.பி.1892-ம் ஆண்டு போடப்பட்ட முதல் ஒப்பந்தம் கருணாவின் அலட்சியத்தால் காலாவதியானது .இது தான் 219 ஆண்டு கால காவேரி நதி பங்கிட்டு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை பறிபோக முதன்மை காரணமாய் அமைந்து விட்டது

இப்படி கர்நாடகா கடந்த 40 வருடங்களில் முக்கியமாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் - அணைகள் கட்டியதை - ஹேமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட அணை ,கபினி ஆற்றில் 19 டி.எம்.சி கொள்ளளவு அணை - ஹேரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை - தடுக்காத கருணாநிதி தமிழர் நலன் /திராவிடர் நலன் குறித்து கவலை கொண்டது இல்லை

ஐந்தாவது துரோகம் .
---------------------------------------
5.காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளி யிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும். ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது மத்திய காங்கிரஸ் அரசு .இதை கெஜட்டில் ஏன் வெளியிடவில்லை ? என்று மத்திய அரசை அந்த நேரம் உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி கட்சியாக பதவி சுகங்களை ஏகத்திற்கும் அனுபவித்து வந்த திமுக இது குறித்து துளி கூட கவலைப்படவேயில்லை . இது கருணாநிதியின் ஐந்தாவது துரோகம் .

மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட நீதி மன்றம் மூலம் சாதித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான்

ஆறாவது துரோகம்
-------------------------------------
காவேரி பிரச்சனையில் .காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (மத்திய அரசின் கெஜட்) வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தேவ கௌடா கோரிக்கை விடுத்தார் -அதில் தேவ கௌடா சாதித்தார் .அப்பேற்பட்ட தமிழின விரோதி இந்திய பிரதமராக பதவி வகிக்க ஆதரவுக்கரம் நீட்டியவர் இந்த கருணாநிதி தான்.இது கருணாநிதியின் ஆறாவது துரோகம்

மிக பெரிய ஏழாவது துரோகம்
--------------------------------------------------------
இது எல்லாவற்றையும் முழுங்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு கருணாநிதி செய்த மாபெரும் துரோகம் இதோ - 1998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி திமுக ஆட்சியின் போது , சென்னையில் முதல்வர் கருணாநிதி ,பிரதமர் தலைமையில் ஆன காவேரி ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசின் வரைவு அறிக்கையை விவாதிக்க கூட்டம் கூட்டினார் . அதில் காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தாத பட்சத்தில் ,பிரதமர் தலைமையிலான காவேரி ஆணையமே, கர்நாடக அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதிகாரம் சம்பந்தப்பட்ட ஷரத்து இருந்தது .அதனை கருணாநிதி நீக்கி விட்டார் .

காரணம் அவரின் குடும்பத்தார் கர்நாடகாவில் வாங்கி குவித்துள்ள அளவற்ற/ கணக்கற்ற சொத்துக்கள் மற்றும் அவரது  ஊடகங்கள்  தான் .

அந்த ஷரத்து இருந்தால் இப்போது உச்சமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்காததை சுட்டிக்காட்டி அதன் அணைகளை மத்திய அரசு கையகப்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள்  இருந்திருக்கும் . அதனை இரக்கமின்றி அடைத்தவர் கருணாநிதி தான்.
இது கருணாநிதியின் ஏழாவது துரோகம் .

எட்டாவது துரோகம்
----------------------------------------
ஏற்கனவே ஒரு காங்கிரஸ் முதல்வர் (கண்ணனின் பெயர் கொண்டவர்) கர்நாடகாவில் ஆட்சி செய்தபோது ,ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி காவேரியில் சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தர சம்மதம் தெரிவித்தார் .அப்போது காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த கருணாநிதி டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் சொல்லி காவேரியில் தண்ணீர் திறந்து விட்டால் ,ஜெயலலிதா புகழ் கூடிவிடும் .நான் சிறுமைப்படவேண்டி நிற்கும் நிலை வரும் என சொல்லி அதனை தடுத்து விட்டார் .இதனை அந்த காங்கிரஸ் முதல்வர் தனது சுயசரிதையில் தேதி முதற்கொண்டு சொல்லி உண்மையை புட்டு புட்டு வைத்து விட்டார்
இது கருணாநிதியின் எட்டாவது துரோகம்

ஒன்பதாவது  துரோகம்
--------------------------------------------
இந்திய பிரதமர்கள் வி பி சிங், நரசிம்மராவ் ,குஜ்ரால் ,தேவ கௌடா, வாஜிபாய் ஆகியோர் அமைச்சரவையில்   பங்கு பெற்றார் ,, அதன் பிறகு மன்மோகன் சிங் ஆட்சியில் இவர் ஆதரவு இல்லை என்றால் ஆட்சியே இருக்காது
மிரட்டி மிரட்டி எத்தனையோ பதவிகள் வாங்கினார் கருணாநிதி , ஆனால் அப்போதும் கூட ,காவேரி பிரச்சனைக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர் தான் கருணாநிதி . தனது மகனுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சோனியா காந்தி அரசில் ( மன்மோகன் சிங் பொம்மை பிரதமர் ) நல்ல பசையான துறைகளை வாங்க நேரடியாக டெல்லி சென்றவர் அப்போதே மத்திய நீர்வளத்துறையை கேட்டு பெற்றிருந்தால் இந்நேரம் கருணாநிதி காவிரி பிரச்சனை தீர்த்ததற்காக உலக புகழ் பெற்றிருப்பார் . ஆனால் அவர் அதை செய்ய வில்லை இது கருணாநிதியின் ஒன்பதாவது  துரோகம்

பத்தாவது துரோகம்
-------------------------------------
காவிரி வழக்கை வாபஸ் பெற்றால் ..தானே பிரச்சனையை சுமுகமாக முடித்து நியாயமான நீரைத்தருகிறேன்  என இந்திரா சொன்னார். கூட்டணி ஆசைக்காக ( ஊழல் பாதுகாப்புக்காக?)  அதனை ஏற்று திமுக வழக்கை வாபஸ் பெற்றது. இது கருணாநிதியின் ஒன்பதாவது  துரோகம்

கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் ஏமாற்றுவது தெரிந்தும் 35  ஆண்டுகளாக பெரும்பாலும் காங் கூட்டணிக்கே வாக்களித்து வந்துள்ளனர் விவசாயிகள்.

இப்படி அடுக்கடுக்காக காவேரி நதி நீர் விஷயத்தில் துரோகங்கள் செய்தவர் இந்த கருணாநிதி தான் .

தமிழகத்தில் காவேரி பாய்ந்த கழனிகள் எல்லாம் வறண்ட பாலைவனங்களாக மாற துரோகங்கள் செய்து தனது குடும்பத்தின் சொத்துக்களை  பல பல மடங்காக பெருக்கியவர் கருணாநிதி தான் .

காவேரி பாய்ந்த நிலத்தை கருக வைத்த அரசியல்வாதி இவர்தான்  .ஆம் இவரின் துரோகங்களை தமிழர்கள் குறிப்பாக திருவாரூர் ,தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட இன்னும் அறியாதது தமிழகத்தின் சாபக்கேடு தான்,

இவர்கள் மக்கள் உயிரை பற்றியோ பிரச்சனைக்கு  நிரந்தர தீர்வையோ விரும்பாதவர்கள்.

ஏமாற்றுவதற்கு அங்கீகாரம் கொடுத்தபின் ஏமாளி போராடுவது அபத்தம். அதன்மூலம் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் கொடுக்காமலிருக்கும் உரிமையை நிரந்தரமாக வழங்கிவிட்டோம்.

இன்றும் தமிழகத்தில். நூற்றுக்கணக்கான இந்திரா, ராஜீவ் சிலைகள் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிக்கின்றன. ஆனாலும் எதிர்காலத்தில் சோனியா ராகுலுக்கும் சிலைவைத்து வணங்கப்போகிறான் மான மிகு தமிழன்  வீராணம் ? கூவத்தை மணக்கவைத்த கருணாவுக்கும்தான்....

இவ்வளவு துரோகத்தையும் செய்து விட்டு அவர் மகன் உத்தமன் வேஷம் போடுகிறார் ,, என்றால் தமிழ் மக்களின் அறியாமையை என்ன வென்று சொல்லஅனைவரும் ஒன்று திரள்வோம் .

சனி, 7 ஏப்ரல், 2018

ஸ்டெர்லைட் வேதிப்பெருட்களின் குணம்தான் என்ன?

ஸ்டெர்லைட் வேதிப்பெருட்களின் குணம்தான் என்ன?

க.ஆனந்தன், தூத்துக்குடி.
                                                                                                                                                      சமீப காலமாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தான் வெளியேற்றும் கழிவுகள், அதிலுள்ள வேதிப் பொருட்கள், அதன் பின் விளைவுகள் ஆகியன பற்றி உண்மைக்கு புறம்பாக அல்லது பாதி உண்மைகள் அல்லது வேண்டுமென்றே திரித்து கூறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆகவே, இதுகுறித்த உண்மைகளை விளக்க வேண்டியுள்ளது.

தாதுப் பொருள்: ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு தாதுப்பொருள், கடல் மார்க்கமாக வெளிநாடுகளிலிருந்து ஆண்டிற்கு 12 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் பெயர் காப்பர் கான்சண்ட்ரேட். கரித்துகள் போன்றிருக்கும். சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட கனிமத்தை வறுத்து மிகவும் சிறிய துகள்களாக அரைக்கப்பட்டு வருகிறது.
இந்தத் துகள்கள் 100 மைக்ரோ மீட்டர் அளவுக்கும் குறைவாக அரைக்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் 100 என்றால் 10 மைக்ரோ மீட்டர் துகளும் இருக்கும். அதற்கு குறைவான துகள்களும் இருக்கும். துகள் அளவு குறையக் குறைய சரக்கு கொண்டு வருவது லாபகரமாக இருக்கும்.

2.5 மைக்ரோ மீட்டர் முதல் 10 மைக்ரோ மீட்டர் வரையிலான துகள்கள் சுவாசத்தின் மூலமாக நுரையீரலில் சென்று தங்கிவிடும். அதன் பின் வெளியில் வராது. இவை எஸ்.பி.எம். எனப்படும் தூசு – மாசு ஆக (பார்ட்டிகுலேட்) வகைப்படுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பாவில், ஒன்பது நாடுகளில் 2013 ஆம் ஆண்டு 3,12,944 பேர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த வகை மாசுகளில் (பார்ட்டிகுலேட்) பாதுகாப்பான அளவு என்ற ஒன்று கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.

அதன் படி 10 மைக்ரோ மீட்டர் அளவுள்ள தூசின் அளவு காற்றில் ஒரு கனமீட்டரில் 10 மைக்ரோகிராம் (1மைக்ரோ கிராம் என்பது ஒரு மில்லி கிராமில் ஆயிரத்தில் ஒரு பங்கு) அதிகரித்தால் 23 சதவீதம் புற்று நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கிறது.
இந்த துகள்களில் 2.5 மைக்ரோ மீட்டர் அளவுள்ளவை அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தும். இவை நுரையீரலில் தங்கி வினையாற்றும். ஆகவே, இந்த வகை துகள்கள் ஒரு கனமீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் என்ற அளவில் அதிகரித்தால் அவை 36 சதவீதம் நுரையீரல் புற்று நோய் ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆண்டிற்கு 12 லட்சம் டன் தாது சுமார் 1 லட்சம் லாரிகளில் சாலை வழியாக சுமார் 25 கி.மீ.தூரம் எடுத்துச் செல்லப்படுகிறது. அப்பொழுது காற்றில் பரவும் மாசுகளை சுவாசிப்பவர் நிலைமை என்ன என்பது குறித்து மத்திய – மாநில மாசுக்கட்டுபாட்டு வாரியங்கள் எவ்வித முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடும் செய்யவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. தற்போது இரண்டு மடங்கு உற்பத்தி அதிகரிப்பு என்றால் இந்த மாசுபடுதல் இரட்டிப்பாகலாம். அல்லது நான்கு மடங்குக்கூட ஆகலாம்.

கந்தக-டை-ஆக்ஸைடு: தாதுப் பொருளில் அதிகபட்சமாக 36 சதவீதம் தாமிரம் உள்ளது. சுமார் 33 சதவீதம் கந்தகம் உள்ளது. சிலிக்கேட் ஆக்ஸைடுகள் மற்றும் இரும்பு மீதம் உள்ளது. ஆகவே, முதலில் தாமிர ஆலையில் இந்த தாது உருக்கப்படும் போது தாமிரம் மாட்டி எனப்படும் அசுத்தமான தாமிரமாக பிரிகிறது. ஸ்லாக் எனப்படும் கழிவுகள் அடியில் பிரிந்து விடும். கந்தகம் காற்றில் உள்ள ஆக்சிஜனோடு சேர்ந்து கந்தக-டை-ஆக்ஸைடாக மாறும். இது கண் எரிச்சலை உருவாக்கும். மனிதத் தோலை துளைத்து புண்ணாக்கும். சுவாசித்தால் நுரையீரல் செயல்பாடு பாதிக்கும். மிக அதிகமாக சுவாசிக்க நேர்ந்தால் மரணம் சம்பவிக்கும். இதனை மேலும் ஒரு ஆக்ஸிஜன் ஏற்றி, சல்பர் ட்ரை ஆக்ஸைடாக மாற்றி, அதனை கந்தக அமிலமாக மாற்றுவார்கள்.

இவற்றில் ஒவ்வொரு வேதிப் பொருளுமே மிகவும் அதிகமாக அரிப்புத் தன்மை கொண்ட பொருளாகும். இந்த வாயு செல்லும் வழிகள் எல்லாம், பெரும்பாலும் குறிப்பிட்ட எஃகு(மைல்டு ஸ்டீல்) பயன்படுத்தப்பட்டிருக்கும். இதர இரும்பை பயன்படுத்தினால், அவை மிக விரைவில் அரிக்கப்பட்டுவிடும். அந்தளவிற்கு அரிக்கும் தன்மை கொண்டவை.
காப்பர் உருக்காலையின் உப பொருளான கந்தக-டை-ஆக்ஸைடு பயன்படுத்தப்பட்டு கந்தக அமிலம் தயாரிக்கப்படுகிறது. நளொன்றிற்கு 3600 டன் கந்தக அமிலம் தயாரிக்கப்படுகிறது என்றால், நாளொன்றிற்கு கிட்டத்தட்ட 2340 டன் அளவிற்கு கந்தக-டை-ஆக்ஸைடு உற்பத்தியாகும்.

கந்தக அமிலம் உற்பத்தி ஆகும் தொழிற்சாலை மிக மோசமான அரிப்புத் தன்மை கொண்ட அமிலத்தால் பல சமயம் நின்று விடும் தன்மை கொண்டது. அது எங்குமே தொடர்ந்து ஓடும் தன்மை கொண்டது கிடையாது. அப்படி காப்பர் உருக்காலைக்கு அடுத்து உள்ள கந்தக அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலை படுத்துவிட்டால் அப்பொழுது காப்பர் உருக்காலையிலிருந்து வரும் கந்தக-டை-ஆக்ஸைடு நிலை என்னவாகும்?

கந்தக-டை-ஆக்ஸைடு வாயு என்பதால் சேமித்து வைக்க முடியாது. மேலும்,காப்பர் உருக்காலையை நினைத்த போது நிறுத்த முடியாது. அதன் வெப்பநிலை போன்ற பல காரணிகளால் அதனை துவக்குவதும் நிறுத்துவதும் அமிலத் தொழிற்சாலை போன்று செய்ய முடியாது. இங்குதான் வருகிறது பிரச்சனை. கந்தக அமிலம் பிளாண்ட் மீண்டும் துவக்கப்படும் வரையில் இந்த கந்தக-டை-ஆக்ஸைடு காற்றில்தான் திறந்து விடப்படும். அதுவே பல சமயங்களில் கண் எரிச்சல் தொண்டைக் கமறல் போன்றவற்றிற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

கந்தக-டை-ஆக்ஸைடு பாதிப்புகள்:
கந்தக-டை-ஆக்ஸைடு தோளில் அரிப்பு ஏற்படுத்தும், கண், மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் போன்றவற்றை பாதிக்கும். அதிகமான கந்தக-டை-ஆக்ஸைடு நுரையீரல் குழாய்களில் வீக்கம் ஏற்படுத்தும், மூச்சுவிட சிரமம் ஏற்படுத்தும், குறிப்பாக உழவு வேலை போன்ற கடினமான உடலுழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு.
இதன் காரணமாக மூச்சை இழுத்து விடும் போது வலி ஏற்படுத்தி இருமல் உண்டாக்கும்.

தொடர்ந்து ஆஸ்துமா பாதிக்கும். குழந்தைகள் கந்தக-டை-ஆக்ஸைடு சுவாசிக்க நேர்ந்தால் அவர்களுக்கு இளம் வயதிலேயே ஆஸ்துமா தாக்கும்.
புளோரின்ஃபுளோரைடு : பாஸ்பாரிக் அமில தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் இந்த வாயு எரிச்சலுட்டும் தன்மை கொண்டது. மூச்சுத் திணறல் ஏற்படும். இது கடலில் உள்ள பவளப் பாறைகளை அழிக்கும் தன்மை கொண்டது.

ஆர்சனிக்:கிறிஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து சிகிச்சை முறையில் ஆர்சனிக் விஷம் பற்றி குறிப்பு உள்ளது. வரலாற்றில் மிக நீண்ட காலத்திற்கு விஷம் வைத்து கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள் ஆர்சனிக். நெப்போலியனை சிறை வைத்த போது, அந்த சிறையின் சுவர்களில் ஆர்சனிக் பூச்சு இருந்தது. நெப்போலியன் இறப்பிற்கு அதுவும் ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

மிகக் குறைந்த அளவில் இருந்தாலே இந்த வேதிப் பொருள் பல நோய்களை உருவாக்க வல்லது. நமது உடல் செல்லில் உள்ள மைட்டோகாண்ட்ரியா என்ற பகுதிதான் சக்தி மையம் (எனர்ஜி சென்டர்). ஆர்சனிக் அந்த மையத்தை தாக்கி அழித்து விடும். ஆகவே, செல் உணவு கிடைக்காமல் அழிந்து போகும். இந்த வகையில் உயிரையே மெல்லக் குடிக்கும் விஷமாகும் இது.

இது ஒரு புற்று நோய் தூண்டும் பொருள் (கார்சினோஜினிக்). தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தால் இது உடலில் புற்று நோய் வருவதற்கான காரணியாக அமையும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தண்ணீரில் 10 கோடியில் 5 பங்கு (0.05பிபிஎம்) என்பதே உலக சுகாதார நிறுவனம் அனுமதித்துள்ள ஆர்சனிக் அளவு (டி.எல்.வி). ஆனால், 2005 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தால் சுற்று வட்டார கிணறுகளில் ஆர்சனிக் அளவு கூடியுள்ளதா என்பதை ‘நீரி’ அமைப்பு மாதிரி எடுத்து பரிசோதித்த போது, 10 கோடியில் 8 பங்கு – அதாவது அனுமதிக்கப்பட்டதை விட அரை மடங்கு அதிகமாக இருந்தது.

மேலும், இந்த ஆலையின் மண்ணை பரிசோதித்த போது அது ஒரு கோடியிலேயே 1320 பங்கு இருந்ததாக (132 பிபிஎம்) ‘நீரி’ அறிக்கை தெரிவிக்கிறது. மழை நேரங்களில் தண்ணீர் இந்த தொழிற்சாலை வழியாக ஓடி வெளியில் வரும் போது, இந்த விஷப் பொருட்களையும் ஏற்றி வரும். அது பல இடங்களில் பரவுகிறது. ஆக, கழிவுகளை அவர்கள் ஆலை வளாகத்திலேயே கொட்டி வைத்திருப்பது என்பது, மழை வரும்வரை காத்திருக்கிறோம் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

காரீயம் : தற்போது குழாய்கள்கூட காரீயம் இல்லாமல் இருக்க வேண்டும் என பிளாஸ்டிக் குழாய்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். காரீயம் புற்று நோயைத் தூண்டுகிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்ததாலேயே காரீயம், மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து விலக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் நீரி தீர்ப்பு பற்றி குறிப்பிடும் போது, காரீயம் அளவு அதிகமாக உள்ளதாக ‘நீரி’ அறிக்கையை சுட்டி காட்டியுள்ளது.

காட்மியம்: சிறுநீரகங்களை தாக்கி செயலிழக்கச் செய்யும் தன்மை வாய்ந்த தனிமம். இது பத்து லட்சத்தில் 0.5 பங்கு வரையிலும் அனுமதிக்கப்பட்ட அளவு. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் ‘நீரி’ சோதனையில் காட்மியம் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக இருந்ததாக தெரிவிக்கிறது.