வியாழன், 12 ஏப்ரல், 2018

மதி நியூஸ் 12/04/18 !

 மதி நியூஸ் 12/04/18 !

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.டெல்டா மாவட்ட விவசாயிகள் ஜூன் 1 முதல் தங்களது விவசாய பணிகளை தொடங்க வழிவகை செய்ய வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை.

காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டம் தொடரும்.டெல்டா விவசாயிகள் விழிப்புடன் உள்ளனர். மத்திய , மாநில அரசுகள் மீது விவசாயிகள் கோபத்தில் உள்ளனர் - முக.ஸ்டாலின்.

 அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய போவதாகத்  கேசி.பழனிசாமி அறிவிப்பு.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் முடித்திருக்க உத்தரவிடக்கோரிய வழக்கு : இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று தெரிவிக்க, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

வன்முறையை தூண்டும் விதத்தில் போராடும் பாரதிராஜா, சீமான், அமீர் உள்ளிட்டோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - நாகையில் ஹெச்.ராஜா பேட்டி.

காவிரி வாரியம் அமைக்க வேண்டும் என்று வீட்டுச்சுவரில் எழுதிவிட்டு ஈரோடு அருகே இளைஞர் தீக்குளித்த சித்தோடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் தீக்குளித்து உயிரிழந்தார்.

காவிரி போராட்டங்களை 16ம் தேதிக்குள் நிறுத்தாவிட்டால், தமிழக வாகனங்களை கர்நாடக எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம் - வாட்டாள் நாகராஜ்.

நாடு முழுவதும் பாஜக எம்.பிக்கள் உண்ணாவிரதம் - தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி அலுவல் பணிகளை மேற்கொண்டவாறே உண்ணாவிரதம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடல் கடந்த வர்த்தகத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.500க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள் 125 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.சோழர்கள் ஆண்ட பகுதியில் நீங்கள் இந்த அளவுக்கு கூடியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன் - பிரதமர் மோடி.

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதிக்க கோரி ஆலை முன்பு வேலை செய்யும் ஊழியர்கள், தொழிலாளர்கள், ஒப்பந்தகாரர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம்.

எங்களின் நோக்கம் சொற்பொழிவாற்றுவது இல்லை கவனிப்பது.கனவு காணவேண்டும் என்ற கலாமின் விருப்பப்படி இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல கனவு காணுவோம் : பிரதமர் மோடி.

உலக அளவில் GoBackModi ஹாஷ்டெக் டிரெண்டிங்கில் முதலிடம்.

இனி காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ளக்கூடாது என முக.ஸ்டாலினுக்கு சீர்காழி காவல்துறை சம்மன் : போலீசாரின் சம்மனை வாங்க மறுத்து ஸ்டாலின் தொடர்ந்து நடைபயணம்.

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் கறுப்புக் கொடி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடும் போராளிகளை வணங்குகிறேன். காவிரிக்காக போராடும் அனைவரும் உயர்ந்தவர்கள் தியாகிகள் : நடிகர் சத்யராஜ்.

நடிகர் ரஜினிகாந்த் உடன், அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ் சந்திப்பு.

சென்னை மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு.

தமிழகத்தில் முதல்முறையாக ராணுவ கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தமிழகத்தில் தொழில்புரிய எளிய நடைமுறைகளுக்கான திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.பிரதமரின் மேக் இன் இந்தியா கனவை ராணுவ கண்காட்சி நிறைவேற்றும்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமையாவிடில் , மழைக்கால கூட்டத் தொடரும் முடக்கப்படும் - அதிமுக எம்பி மைத்ரேயன் எச்சரிக்கை.

தமிழகத்தில் ராணுவ காரிடார் அமைக்க நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

காவிரி விவகாரம்: பாமரர்களும், பண்டிதர்களும் இந்த காலதாமதம் கர்நாடக தேர்தலுக்கானது என நம்ப துவங்கிவிட்டனர் - பிரதமரை குறிப்பிட்டு கருப்பு சட்டை அணிந்து கமல்ஹாசன் வீடியோ பதிவு.

பிரதமர் வருகையை எதிர்த்து சென்னை ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன், வேல்முருகன் கைது.

சென்னையில் திமுக எம்எல்ஏ மா. சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது.

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு.

காவல்துறை பாதுகாப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் வீரர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து மும்பை கிளம்பினர்.

பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி விமான நிலையம் முற்றுகையிட்ட இயக்குனர்கள் பாரதிராஜா , அமீர் , ராம் , கவுதமன் , வெற்றிமாறன் கைது.

அவரவர் விரும்பிய வடிவில் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.திட்டமிட்டபடி ஈரோட்டில் போராட்டம் இருப்பதால் கருப்புக்கொடி காட்டுவதில் பங்கெடுக்கவில்லை - டிடிவி தினகரன்.

பாதுகாப்புத்துறை வளர்ச்சியில் தமிழகம் 20%க்கும் மேல் பங்காற்றி வருகிறது.பாதுகாப்பு வளர்ச்சியில் இந்த வருடம் தமிழகத்தின் பங்கு 25% ஆக இருக்கும் - தமிழக முதலமைச்சர்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க அழைக்கிறேன்.ராணுவத் தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளோம் - அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த மோடியை தற்போதுள்ள ஆட்சியாளர்கள் ஆதரிக்கின்றனர் - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

இயற்கைப் பேரிடரின் போது தமிழர்களை காப்பாற்றாத ராணுவத்துக்கு எதற்கு கண்காட்சி ? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கன்டெய்னர் லாரிகள் 24 மணி நேரம் வேலை நிறுத்தம்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கிமலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை, எஸ்டிபிஐ , ஆம் ஆத்மி , தமிழக பேரியக்க கட்சி தொண்டர்கள் கைது.

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்கே. சூரப்பா பதவி ஏற்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி மத்திய சிறையில் 2 வது நாளாக உண்ணாவிரத போராட்டம்.

ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 41 ராக்கெட் மூலம் ஐஆர்என்எஸ்எஸ் 1 ஏ செயற்கை கோள் அதிகாலை விண்ணில் ஏவப்பட்டது.

காவிரி தண்ணீர் தராத கர்நாடகாவை கண்டித்து தஞ்சையில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு பெயர் பலகை மற்றும் கதவுகளில் தார் அடித்து தமிழ் தேசிய கட்சியினர் போராட்டம்.

தேனி மாவட்டம் போடி தேவர் சிலையிலிருந்து வள்ளுவர் சிலை வரை அனைத்திந்திய பெருமன்றம் சார்பாக பிரதமர் மோடி தமிழக வருகையை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஊர்வலம்.

கோவையில், பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட துண்டுச்சீட்டுகளை கட்டி புறாக்களை பறக்கவிடும் திமுகவினர் போராட்டம்.

திருச்சி திருவெறும்பூரில் இளம்பெண் உஷா உயிரிழந்த சம்பவத்தில் கைதான போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன்.

குரங்கணி தீ விபத்து தொடர்பாக டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டருக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

சிதம்பரம்: சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி, நடைபயணத்தை கைவிட வேண்டும் என ஸ்டாலினுக்கு காவல்துறை சம்மன், சம்மனை வாங்க ஸ்டாலின் மறுப்பு.

காமன்வெல்த் 74 கிலோ ஆடவர் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுஷில்குமார் தங்கம் வென்றார்.

காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா அடுத்த 2 ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் : சிஎஸ்கே அறிவிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக