மதுரை வந்தடைந்தது கள்ளழகர் தங்கக்குதிரை வாகனம்
வரும் 30-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
மே மாதம் 1-ந்தேதி சேஷ வாகனத்தில் தேனூர்மண்டபத்திலும் அன்று பிற்பகல் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து அழகர் காட்சி தந்தருள்கிறார். அன்று இரவு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி ராமராயர்மண்டபத்தில் நடைபெறுகிறது.
2-ந்தேதி அனந்தராயர்பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் சாமி காட்சிதருகிறார்.
3-ந்தேதி அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களிடம் விடைபெற்று மலைக்கு புறப்படுகிறார். அன்று மாலை அழகர் திருமலைக்கு வழிநடையாக கள்ளர்திருக்கோலத்தில் திரும்புகிறார்.
4-ந்தேதி அதிகாலை அப்பன்திருப்பதி,கள்ளந்திரி உள்ளிட்ட பல மண்டபங்களில் அழகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்று காலையில் 9.30 மணிக்குமேல் 10.30மணிக்குள் கள்ளழகர் அழகர்கோவிலை அடைந்து இருப்பிடம் சேருகிறார்.
5-ந்தேதி உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. மேலும் கள்ளழகர் எழுந்தருளும் 435 மண்டகப்படிகளும் தயார்நிலையில் உள்ளன.
திருவிழாவையொட்டி கள்ளழகர் எழுந்தருளும் தங்கக்குதிரை, கருடன், சேஷ வாகனங்கள் நேற்று காலை அழகர்கோவில் இருந்து வாகனங்களில் புறப்பட்டு மதுரைக்கு வந்தன.
இதில் வைகை ஆற்றில் இறங்கும் தங்க குதிரைவாகனம் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கும் கருட வாகனம் தேனூர் மண்டபத்திலும், சேஷ வாகனம் வண்டியூர் வீரராகவகபெருமாள் கோவிலிலும் தனித்தனியே போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுஉள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக