காமச் சாமியார்களும், இந்துத்துவ அமைப்புகளும்
1. கேரளாவில் 'புல்லட் சாமியார்' என்ற பிரபலமாக அறியப்பட்டவர் சாமியார் ஶ்ரீஹரி. இவர் தொடர்ச்சியாக ஒரு பெண்ணுடன் பாலியல் வல்லுறவு கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வெடித்துக் கிளம்பிய அந்தப் பெண், சாமியாரின் ஆணுறுப்பைத் துண்டித்து எறிந்தார். இந்த சாமியாருக்கும், பாஜக மாநிலச் செயலாளர் கும்மனம் இராஜசேகரனுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. ஆனால், ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டபோது, இராஜசேகரன் தனக்கும் சாமியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நழுவிக் கொண்டார்.
2. மறைந்த காஞ்சி சங்கர மடச் சாமியார் ஜெயேந்திரன், தன்னை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாக எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதியதும், காஞ்சி சங்கர மடத்தில் இருந்து ஏராளமான ஆபாச குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டதும், ஒரு பிரபல நடிகையுடன் ஜெயேந்திரன் தொடர்புபடுத்திப் பேசப்பட்டதும் தமிழகம் அறிந்ததே. ஆனாலும், கடைசி வரை ஜெயேந்திரனுக்கு ஆதரவாக பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் செயல்பட்டன.
3. நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா பாலியல் உறவு கொள்ளும் காணொளி வெளிவந்து, தமிழகம் முழுவதும் அவரது பெயர் நாறிய பின்னும், அவர் அண்மையில் நடத்திய நிகழ்ச்சியில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
4. ஜோத்பூர் ஆசிரமத்தில் 16 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆஷ்ரம் பாபு, பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, மோடி, முரளி மனோகர் ஜோஷி, சிவ்ராஜ் சவுகான், ராமன் சிங் உள்ளிட்டோருக்கு நட்பு இருந்தது.
5. பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல சாமியார் ராம் ரஹிம் சிங்கிற்கும், பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. 2014 அரியானா தேர்தல் பிரச்சாரத்தின்போது ராம் ரஹிம் சிங்-ஐ பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். 1995ம் ஆண்டு அரியானா பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோதே, தான் சாமியாரைச் சந்தித்து வணங்கியதாகத் தெரிவித்தார். மோடியின் இந்தப் பேச்சிற்குப் பின்னர், அரியானா தேர்தலில் ராம் ரஹிம் சிங், பாஜகவுக்கு ஆதரவு அளித்தார். பின்னர் டெல்லி, பிஹார் சட்டமன்றத் தேர்தல்களின்போதும் ராம் ரஹிம் சிங்கின் ஆசிரம பக்தர்கள், பாஜகவுடன் இணைந்து பிரச்சாரம் செய்தார்கள். ராம் ரஹிம் சிங் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் இருந்த காலத்தில்தான் அவருடன் பாஜக நட்பு பாராட்டியது என்பது கவனிக்கத்தக்கது.
6. மறைந்த புட்டபர்த்தி சாய்பாபா மீது ஓரினச் சேர்க்கை வல்லுறவு புகார்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தன. ஏறக்குறைய 40க்கும் மேற்பட்டோர் அவர் மீது புகார் தெரிவித்தனர். ஆனாலும், அவருடன் வாஜ்பாய், அத்வானி, மோடி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் சந்திப்பு தொடர்ந்த வண்ணமாகத் தான் இருந்தது.
இந்துத்துவ அமைப்புகளுக்கும், காமச் சாமியார்களுக்குமான தொடர்பு, தொப்புள் கொடி உறவு போன்றது. இவர்கள் அரசியல் ரவுடிகள் என்றால், அவர்கள் ஆன்மீக ரவுடிகள்; இருவரையும் பிரித்துப் பார்க்க முடியாது.
ஆசிஃபா கொலையாளிகளைக் காக்க இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக