ராம்குமார் கரண்ட் ஷாக் வைத்துக் கொலை!
- அம்பலப்படுத்தும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!
ஸ்வாதி படுகொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், வாயை திறந்து ஏதோ ஒரு உண்மையை சொல்லிவிடக்கூடாது என்று கைதுசெய்யும்போதே கழுத்தறுத்த போலீஸ்... அவன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்துவிடுவான் என்பதால் மின்சாரம் பாய்ச்சி கொலைசெய்துவிட்டார்கள் என்பதை ஆரம்பித்திலிருந்தே நக்கீரனிஸத்துடன் ஓங்கி அடித்ததுபோல் சொல்லிவந்தது நக்கீரன் மட்டுமே! இப்போது, பிரேத பரிசோதனை அறிக்கையையும் வெளியிட்டு ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது நக்கீரன்.
அப்படி நடந்திருக்குமோ? இப்படி நடந்திருக்குமோ? என்று படிப்பவர்களை பார்த்து கேள்வி எழுப்பி குழப்பாமல்... அப்படித்தான் நடந்தது என்று உண்மையை துணிவுடன் சொல்லும் புலனாய்வு பத்திரிகை என்பதால்... 1 1/2 வருட தேடல் போராட்டத்திற்கு பிறகு ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜன், அன்புத்தம்பி திலீபன் மகேந்திரன் ஆகியோரின் பேருதவியால் ராம்குமாரின் 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'( பிரேத பரிசோதனை அறிக்கை) மற்றும் விசாரணை அதிகாரியும் திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டுமான தமிழ்ச்செல்வியின் விசாரணை அறிக்கைகளும் பிரத்யேகமாக கிடைத்தன.
நண்பர் என்பதால் டாக்டர் வீ.புகழேந்தியிடம் அந்த ஆவணங்களை அனுப்பி படித்துப்பார்த்து கருத்துகேட்டேன். அவரும் அவரது நண்பர் கோவை டாக்டர் ரமேஷும் படித்துப்பார்த்து பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பினார்கள். என்னதான், டாக்டர் வீ. புகழேந்தியும் டாக்டர் ரமேஷும் அனுபவம் வாய்ந்த சிறந்த மருத்துவர்களாக இருந்தாலும் அவர்கள் எம்.பி.பி.எஸ். மட்டுமே படித்த பொதுநல மருத்துவர்கள். கொலையா? தற்கொலையா? என்ற பிரேத பரிசோதனை அறிக்கையை படித்து ஒரு தடயவியல் பேராசிரியர் சொன்னால்தான் நீதிமன்ற விசாரணைக்கு உதவும் என்பதால் சென்னையிலுள்ள பிரபல ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சம்பத்குமாரிடம் கேட்டபோது...
"சந்தேகமே இல்லை...12 இடங்களில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இது, தற்கொலையே அல்ல; அப்பட்டமான படுகொலை" என்று ஓங்கி அடித்ததுபோல் சொன்னார் டாக்டர் சம்பத்குமார்.
இச்சூழலில், பொதுநல மருத்துவர் என்று கருதிய டாக்டர் வீ. புகழேந்தி சுயநல மருத்துவராகி, நக்கீரன் கொடுத்த ஆவணங்களை விகடனுக்கு விற்றுவிட்டார். அந்த ஆவணத்தைதான் நக்கீரன் இதழ் அச்சிற்கு செல்லும்முன் விகடன் வெப்ஸைட்டில் செய்தியாக வெளியிட்டார் நண்பர் விஜய ஆனந்த்.
அடுத்த இதழில்... ராம்குமார் கொலை செய்யப்பட்டதற்கு இன்னொரு அழுத்தமான காரணத்தையும் நக்கீரன் வெளியிட இருக்கிறது.
எது, எப்படியோ... விகடனாரே! ராம்குமார் படுகொலை என்பது மட்டுமல்ல ஸ்வாதியின் படுகொலையின் உண்மைக்குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க ஒரே பாதையில் ஒற்றுமையுடன் ஊடக அறத்துடன் பயணிப்போம்!
"ராம்குமார் சிறைப்படுகொலை உண்மையை அம்பலப்படுத்தவேண்டும் தம்பி"...என்று என்னை தொடர்ந்து இயக்கிக்கொண்டிருந்த அண்ணன்கள் நக்கீரன் கோபால் அவர்களுக்கும் பொறுப்பாசிரியர் Govi Lenin அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! நக்கீரன் இதழ் வெளியானதிலிருந்து தொடர்ந்து ஃபோன் செய்து உற்சாகப்படுத்தும் உள்ளங்களுக்கும் நன்றிகள்!!!
ராம்குமார் படுகொலை உண்மைகள் வெளிவராமல் ஸ்வாதி படுகொலை உண்மை வெளிவாராது.
-மனோ செளந்தர்
நக்கீரன் தலைமை செய்தியாளர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக