திங்கள், 9 ஏப்ரல், 2018

சூரியனுக்கு மனிதனின் முதல் பயணம்!- ஜூலையில் தொடங்குகிறது நாசா

சித்தரிப்புப்படம் சூரியனுக்கு மனிதனின் முதல் பயணம், வரும் ஜுலை தொடங்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது. 
பூமியில் உள்ள உயிர்களுக்கு ஆதாரமாய் திகழ்வது சூரியன். பூமி உள்பட ஞாயிறு மண்டலத்தில் உள்ள (( Solar System)) கோள்கள் அனைத்தும் சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் இயங்கி வருகின்றன.

நிலவுக்கும், சந்திர கிரகத்துக்கும் செயற்கை கோளை அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்த மனிதன், சூரியனை ஆராய்ச்சி செய்ய இதுவரை எந்த கோளையும் அனுப்பியதில்லை.

சுமார் 5,505 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட சூரியனை நெருங்குவது என்பதே கற்பனை செய்துகூட பார்க்க முடியாததாக இருந்தது.

இப்போது இதையும் கடக்க மனிதன் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான். சூரியனுக்கு மனிதனின் முதல் பயணம் என்று கருதப்படும் நாசாவின் பார்க்கர் சோலார் பிரோப் ((Parker Solar Probe)) ஜூலை 31- ஆம் தேசி விண்ணில் ஏவப்பட இருக்கிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து இது  ஏவப்படுகிறது.

எங்கு?

சூரியனைச் சுற்று பல்வேறு வாய்வுகள் நிறைந்துள்ளன. இவையே சூரிய வளிமண்டலம் எனப்படுகிறது. இதில் கரோனா ((the corona)) எனப்படும் இதன் வெளிப்புற அடுக்கை தான் பார்க்கர் புரோப் ஆய்வு செய்கிறது.

படம்: நாசா இணையதளம்

பூமியில் இருந்து 3.8 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள, இதுவரை மனதினால் நெருங்க முடியாத பகுதியாக இருந்த கரோனா பகுதியில் தான் ஆய்வு செய்யப்போகிறது நாசா.

எப்படி?

சூரியனின் வெப்பத்தை தாங்கும், வெப்பநிலை பாதுகாப்பு அம்சம்((thermal protection system)) தான் இந்த விண்கலத்தின் தனிச்சிறப்பு.  இதன்மூலம் கடுமையான வெப்பத்தைத் தாங்க இயலும்.

படம்: நாசா டிவிட்டர்

என்ன பயன்?

இதன்மூலமாக தொடர்ந்து சூரியனில் இருந்து வெளிப்படும் மர்மப் பொருள் பற்றியும், அதனால் பூமி மற்றும் விண்வெளியின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிய முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மேலும் இதன்மூலம் பல அடிப்படை அறிவியல் கருத்துக்கள் தெளிவாக புரியும் என்கிறார்.

தற்போது இதற்கான சேதனைகளை  நாசா நடத்தி வருகிறது. மனிதனின் கால் பதியாத இடம் இனி எங்குமில்லை எனலாம்.

சித்தரிப்புப்படம்

சூரியனுக்கு மனிதனின் முதல் பயணம், வரும் ஜுலை தொடங்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.
பூமியில் உள்ள உயிர்களுக்கு ஆதாரமாய் திகழ்வது சூரியன். பூமி உள்பட ஞாயிறு மண்டலத்தில் உள்ள (( Solar System)) கோள்கள் அனைத்தும் சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் இயங்கி வருகின்றன.

நிலவுக்கும், சந்திர கிரகத்துக்கும் செயற்கை கோளை அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்த மனிதன், சூரியனை ஆராய்ச்சி செய்ய இதுவரை எந்த கோளையும் அனுப்பியதில்லை.
சுமார் 5,505 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட சூரியனை நெருங்குவது என்பதே கற்பனை செய்துகூட பார்க்க முடியாததாக இருந்தது.
இப்போது இதையும் கடக்க மனிதன் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான். சூரியனுக்கு மனிதனின் முதல் பயணம் என்று கருதப்படும் நாசாவின்
பார்க்கர் சோலார் பிரோப்
((Parker Solar Probe)) ஜூலை 31- ஆம் தேசி விண்ணில் ஏவப்பட இருக்கிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து இது  ஏவப்படுகிறது.
எங்கு?
சூரியனைச் சுற்று பல்வேறு வாய்வுகள் நிறைந்துள்ளன. இவையே சூரிய வளிமண்டலம் எனப்படுகிறது. இதில் கரோனா ((the corona)) எனப்படும் இதன் வெளிப்புற அடுக்கை தான் பார்க்கர் புரோப் ஆய்வு செய்கிறது.
படம்: நாசா இணையதளம்
பூமியில் இருந்து 3.8 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள, இதுவரை மனதினால் நெருங்க முடியாத பகுதியாக இருந்த கரோனா பகுதியில் தான் ஆய்வு செய்யப்போகிறது நாசா.
எப்படி?
சூரியனின் வெப்பத்தை தாங்கும், வெப்பநிலை பாதுகாப்பு அம்சம்((thermal protection system)) தான் இந்த விண்கலத்தின் தனிச்சிறப்பு.  இதன்மூலம் கடுமையான வெப்பத்தைத் தாங்க இயலும்.
படம்: நாசா டிவிட்டர்
என்ன பயன்?
இதன்மூலமாக தொடர்ந்து சூரியனில் இருந்து வெளிப்படும் மர்மப் பொருள் பற்றியும், அதனால் பூமி மற்றும் விண்வெளியின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிய முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மேலும் இதன்மூலம் பல அடிப்படை அறிவியல் கருத்துக்கள் தெளிவாக புரியும் என்கிறார்.
தற்போது இதற்கான சேதனைகளை  நாசா நடத்தி வருகிறது. மனிதனின் கால் பதியாத இடம் இனி எங்குமில்லை எனலாம். நன்றி Tamil Eenadu India

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக