செவ்வாய், 3 ஏப்ரல், 2018

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திடுக:குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது என்ன?

புதுதில்லி:
தலித் மக்களைப் பாதுகாக்கும் கேடயங்களில் ஒன்றாக திகழும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை மாற்றி அமைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்தியாவில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர் புகார் அளித்தால், அந்த வழக்கில் விசாரணையின்றி யாரையும் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் தலித் மக்களுக்கு எதிராக தீர்ப்பு அளித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 (அதாவது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்) இன் கீழ் அளிக்கப்படும் புகார்களுக்கு முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும் என்றும் விசாரணையின்றி யாரையும் கைது செய்யக் கூடாது என்றும் அப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தலித் மக்களுக்கு எதிராக தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

ஒவ்வொரு 15 நிமிடமும்
நம் நாடு முழுவதும் மூலை முடுக்கெங்கிலும் தலித் மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறைத் தாக்குதல்களை ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஆறு தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். என தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (National Crime Records Bureau- NCRB) தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தான், உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த பாலியல் வன்புணர்வு வழக்குகள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் 2007 முதல் 2017 ஆம் ஆண்டுகள் வரை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளாக தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் 66 சதவீதம் உயர்ந்துள்ளது மத்திய பாஜக அரசின் ஆட்சியில் கடந்த 3-4 ஆண்டுகளில் இந்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

தலித் மக்கள் உரிமைகளைப் பெற போராடுவதற்கு பதிலாக மத்திய அரசு முன் வைத்த வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மேற்குறிப்பிட்ட தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலித் மக்களுக்கு எதிராக வன்முறையை தொடுத்த குற்றவாளி மீது ஏற்கெனவே எந்தவொரு வழக்குகளும் இல்லையெனில், அவருக்கு முன் ஜாமீன் வழங்க அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் இரட்டை முகம் வெளிப்பட்டுள்ளது. அதாவது, நீதிமன்றத்திற்குள் ஒரு முகத்தையும், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் முன்பு மற்றொரு முகத்தையும் காட்டிக் கொண்டிருப்பது வெளியானதும் ஒருவித நன்மையே.

10 ஆண்டுகளில்
தலித் மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் இத்தகைய வன்முறைகள் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. 2014 இல் 47,064 வன்முறை தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்திய தலித் மக்கள் தொகையில் 20 சதவீதமாக வாழும் உத்தரப்பிரதேச தலித் மக்கள் மீதும் அவர்கள் வீடுகளின் மீதும் 17 சதவீதம் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

இந்திய தலித் மக்கள் தொகையில் 6 சதவீதமாக உள்ள ராஜஸ்தானில் 17 சதவீத வன்முறைகளும், பீகாரில் 5 வன்முறை தாக்குதல்களில் 2 தலித்துகள் மீது நிகழ்கின்றன என தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2016 ஆம் ஆண்டு தகவல் கூறுகிறது. தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களில் தண்டனை விகிதங்கள் என்பவை மிக மோசமான நிலையில் உள்ளன. ஆந்திராவில் தண்டனை விகிதம் 3.2 சதவீதத்திற்கு குறைவாகவும், இமாச்சலப் பிரதேசத்தில் 3.2 சதவீதமும், ஒடிசாவில் 3.3 சதவீதமும், தெலுங்கானாவில் 6.5 சதவீதமும் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 7.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என 2016 ஆம் ஆண்டு வெளியான என்சிஆர்பி(NCRB)-யின் தகவல்கள் கூறுகின்றன.

சட்டத்தின் தோல்வி
நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியிருந்தாலும், என்சிஆர்பியின் 2016 தகவலின்படி, தலித் மக்களுக்கு எதிரான 11024 வழக்குகளில், குற்றவாளிகள் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டும் முடிக்கப்பட்டுள்ளன. இதில் 495 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. 4119 வழக்குகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய மிக மோசமான தண்டனை விகிதங்கள் சட்டத்தின் தோல்வியையே சுட்டிக் காட்டுகிறது. மேலும் தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் பொய்யானதா அல்லது அவை ஜோடிக்கப்பட்ட ஒன்றா என குறிப்பிடுவது அவசியமில்லாததாகிவிட்டது.
இதில், தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை வழக்குகளில், காவல்துறையினர் போதிய ஒத்துழைப்பு வழங்காதது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவமானம் மற்றும் சமூகத்தில் களங்கம் ஏற்படுவது, உயர்சாதியினரின் மிரட்டல்களுக்கு அஞ்சுவது என இது போன்ற பல காரணங்களால் ஒருசில வழக்குகளே பதியப்படுகின்றன. இதில் பல புகார் அளிக்கப்படாமலே போய்விடுகின்றன.

சட்டப்படி இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. மிகப்பெரும் எண்ணிக்கையிலான வன்முறைத் தாக்குதல்களை இந்தியா முழுவதும் வாழும் தலித் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 இன் படி தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை சம உரிமைகளை அவர்கள் பெற முடியாமல், சமூகத்தில் ஒரு இழிநிலையையே அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் நிகழும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளை ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் நீங்கள் படித்திருக்கலாம். இச்சம்பவங்கள் எண்ணற்ற வகையில் இருந்தாலும், சில சம்பவங்கள் காட்டுமிராண்டித்தனமாகவும் மனிதாபிமானமற்ற வகையிலும் நிகழ்த்தப்படுகின்றன. அதற்கு உதாரணமாக சில சம்பவங்கள்:
ராஜஸ்தான் மாநிலத்தில் 3 தலித்துகள் நிலப்பிரச்சனை காரணமாக டிராக்டர் ஏற்றி நசுக்கிக் கொல்லப்பட்டனர்.

1.கிரேட்டர் நொய்டாவில உள்ள தான்கவுரில் ஒரு தலித் குடும்பம் (பெண்கள் உட்பட), காவல்துறையினரால் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக சாலையில் நிற்க வைக்கப்பட்டனர்.

2.இருசக்கர வாகனத்தை திருடியதாக தலித் மக்கள் மீது நிர்ப்பந்தம் காரணமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

3.மத்தியப் பிரதேச மாநிலம் சஹாடார்பூரில் தலித் மணமகன் ஒருவர், தனது திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட காரை பயன்படுத்தியதற்காக தாக்கப்பட்டார்.

4.முதல்வரின் வருகைக்காக குஷிநகரில் வாழும் தலித் மக்களுக்கு குளிப்பதற்கு சோப்பும் ஷாம்பும் உள்ளாட்சி நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது

மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் எதுவும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் நடக்கவில்லை. இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் அதிலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும்.

இந்த தீர்ப்பினால், தலித் சமூகத்தினர் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில் அமைதியின்மை, பாதுகாப்பற்ற உணர்வு உருவாகியிருப்பது வெளிப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், இது ஒரு தேசிய பேரிழப்பாகக் கூட மாறும்.

எனவே, இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து தலித் மக்களுக்கு உதவ வேண்டும் எனவும் தற்போது இருக்கிற நெருக்கடிகளை களைய வேண்டும் எனவும் இந்த மனுவின் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தீக்கதிர்...

Thanks
தீக்கதிர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக