வெள்ளி, 30 நவம்பர், 2018

'2.0' திரை விமர்சனம்


'2.0' திரை விமர்சனம்

ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், லைகா போன்ற பிரபலங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த படம் என்றால் பிரமாண்டத்திற்கு பஞ்சம் இல்லா படமாக  இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் 2.0 உள்ளது. வெறுமே கிராபிக்ஸ் காட்சிகளை மட்டுமே இன்றி இன்றைய உலகிற்கு தேவையான கருத்தை மனதில் பதியும் வகையில் இப்படத்தை ஷங்கர் கொடுத்துள்ளார்.

செல்போன்களை மனிதர்கள் பயன்படுத்த தொடங்கிய பின்னர் அதிலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் போட்டிகளால் அளவுக்கு அதிகமான ரேடியேஷன்களால் பறவை இனமே அழியும் ஆபத்து உள்ளது. இந்த உண்மையை புரிந்து கொண்ட அக்சய் குமார் செல்போன்கள் பயன்படுத்துவதை குறைக்க போராடுகிறார். இதற்காக அரசிடம், மக்களிடமும் நீதிமன்றத்திலும் கோரிக்கை வைக்கிறார். ஆனால் அவருக்கு  அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் மனமுடைந்து செல்போன் டவரிலேயே தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின் பறவைகளின் ஆன்மாக்களுடன் தன்னுடைய ஆன்மாவை இணைத்து ஐந்தாம் சக்தியை உருவாக்கி அந்த சக்தி உதவியால் செல்போன்களுக்கு எதிராக அவர் தொடுக்கும் போரும், அந்த போரில் இருந்து மனிதர்களை காப்பாற்ற சிட்டியை தட்டி எழுப்பும் ரஜினிக்கும் இடையே நடக்கும் டெக்னாலஜி போர் தான் 2.0 கதை

இதுவரை வெளிப்படுத்தாத நடிப்பை தனது ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற மெனக்கெடல் ரஜினியின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. வசீகரன் கேரக்டர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், சிட்டி, ரோபோ வெர்ஷன் 2.0 கேரக்டர்களில் ரஜினி தனது நடிப்பை வெளுத்து வாங்கியுள்ளார். இறுதியில் சஸ்பென்ஸ் ஆக வரும் 3.0 ரஜினி, ரசிகர்களுக்கு கிடைத்த கூடுதல் போனஸ்

நாயகியை கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தாமல் கதைக்கும் சேர்த்தும் பயன்படுத்தும் இயக்குநர் ஷங்கர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் வசீகரனுக்கும், சிட்டிக்கும், 2.0 ரோபோவுக்கும் உதவி செய்யும் ரோபோ கேரக்டரில் எமிஜாக்சன் நடித்துள்ளார். ரோபோவுக்கும் காதல் வரும் என்ற உணர்வை அவர் வெளிப்படுத்திய விதம் சூப்பர்.

அக்சயகுமார் நடிப்பில் மிரட்டுகிறார். இடைவேளைக்கு பின்னர்தான் அக்சய் அறிமுகமாகிறார் என்றாலும், இரண்டாம் பாதியில் அவருடைய கேரக்டர் எடுத்துக்கொள்ளும் பங்கு மிக அதிகம். வயதான பறவைகளின் விஞ்ஞானி கேரக்டரில் நமது நெஞ்சை தொடும் அக்சய், அதன் பின் ராஜாளியாக மாறி செய்யும் அட்டகாசங்கள் சூப்பர்.

எந்திரன்' பட வில்லன் டேனியின் மகன் கேரக்டரில் நடித்திருக்கும் சுதன்ஷூ பாண்டேவுக்கு அதிக காட்சிகள் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியின் திருப்புமுனைக்கு காரணமான கேரக்டர் என்பதால் ரசிக்க முடிகிறது. அதேபோல் உள்துறை அமைச்சர் கேரக்டரில் நடித்திருக்கும் அதில்ஹுசைன் நடிப்பும் ஓகே

ஏ.ஆர்.ரஹ்மானின் உலகத்தர பின்னணி இசை இபபடத்தை தூக்கி நிறுத்துகிறது. அக்சயகுமாருக்கும், 2.0 ரோபோ ரஜினிக்கும் அவர் கம்போஸ் செய்துள்ள தீம் மியூசிக் இன்னும் காதுக்குள்ளே இருக்கிறது. இரண்டு பாடல்களும் படத்தின் காட்சிகளோடு வருவதால் பாடல்களால் படத்தின் விறுவிறுப்பு குறையவில்லை. நல்லவேளையாக 'இந்திரலோகத்து சுந்தரி' பாடலை படத்தின் இறுதியில் வைத்துள்ளனர்.

நீரவ்ஷாவின் கேமிராவும், அந்தோணியின் படத்தொகுப்பும் பாராட்டும் வகையில் உள்ளது. இருவருமே தங்களுடைய அதிகபட்ச உழைப்பை கொடுத்துள்ளனர்.

ஷங்கரால் இப்படி கூட கற்பனை செய்ய முடியுமா? என்ற அளவுக்கு உள்ளது ஒவ்வொரு காட்சியும். திடீர் திடீரென செல்போன்கள் பறப்பது, செல்போன்கள் சாலையில் ஊர்ந்து வருவது, ராணுவத்தால் கூட முறியடிக்க முடியாத செல்போனின் அட்டகாசங்கள், கிளைமாக்ஸில் கால்பந்தாட்ட மைதானத்தில் ரஜினி-அக்சய் மோதும் காட்சிகள் ஷங்கரின் உச்சகட்ட கற்பனை. மேலும் கற்பனையை விஷூவலாக காட்ட அவர் எடுத்திருக்கும் முயற்சிகள் அபரீதமானவை. ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கிட்டு ரசிகர்களுக்கு அனைத்து காட்சிகளையும் பெஸ்ட் ஆக கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.

இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்கு மட்டுமல்ல. பறவைகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உரியது குறிப்பாக மனித இனம் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் பறவைகள் நிச்சயம் வாழ வேண்டும் என்ற உண்மையை மிக ஆழமாக கூறியுள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜெயமோகனின் வசனம் அமைந்துள்ளது சிறப்பு

மொத்தத்தில் வெறும் டெக்னாலஜி, கிராபிக்ஸ் காட்சிகளை மட்டும் நம்பாமல் ரஜினியை சரியான வகையில் உபயோகித்தது, அழுத்தமான கருத்துடன் கூடிய திரைக்கதை அமைத்தது, பிரமாண்டமான 3டி காட்சிகள் என ஷங்கரின் பிரமாண்டமான விஷூவல் விருந்துக்காக அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான் '2.0

சிட்டுக்குருவி அழிவுக்கு செல்லிடப்பேசிகள் காரணமா! 2.0-வில் ஷங்கர் சொன்னது என்ன?



சிட்டுக்குருவி அழிவுக்கு செல்லிடப்பேசிகள் காரணமா! 2.0-வில் ஷங்கர் சொன்னது என்ன?


நடிகரும், எதிர்கால அரசியல் தலைவருமான ரஜினிகாந்தின் நடிப்பிலும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்திலும் வெளியாகியுள்ள திரைப்படம் 2.0. எந்திரனின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதுபோல், இப்போ வரும், வந்துகொண்டே இருக்கிறது என்ற சில ஆண்டுகளாக கூறப்பட்டுவந்த படம் ஒருவழியாக 29-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவிலேயே அதிக செலவில் உருவான படம் என்பதுடன், ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் முதல்முறையாக நடித்த தமிழ்படம், ஆஸ்கார் தமிழர் ஏ.ஆர்.ரகுமான், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, கலை இயக்குநர் முத்துராஜ் என மிகப் பெரிய கூட்டணியுடன் உருவாக்கப்பட்டதுதான் இந்த 2.0.

படத்தின் தலைப்புக்கு கீழே, இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். அதற்கேற்ப படத்தின் கதை அமைந்துள்ளது. முந்தைய எந்திரன் படம் போல், முழுக்க முழுக்க ரோபோ சாகசங்களாக இருக்குமோ என்று படத்துக்குச் சென்றால் நமக்கு ஆச்சரியம்தான் மிஞ்சும். ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டம் என்பதை தாண்டி முதலில் நமது மனதை ஆக்கிரமிப்பது அவரின் சமூக அக்கறை கொண்ட கருத்துகள்தான். அவரது படங்கள் சமூகத்தில் பெருவாரியாக விவாதிக்கப்படும். அதுதான் ஒரு திரைப்படமும் செய்ய வேண்டிய ஒன்று.

அவரது முதல் படமான ஜென்டில்மேன் முதல், 2.0 படம் வரை ஏதாவது சமூக பிரச்னைகளை எடுத்துக் கொண்டு அவர் தனது படத்தில் அதுகுறித்து விமர்சனம் செய்திருப்பார். அதுபோன்ற பிரச்னைகளுக்கு உரிய தீர்வையும் முன்வைத்திருப்பார். இந்தப் படத்தில் அவர் முக்கியமான விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, செல்லிடப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிட்டுக்குருவி இனங்கள் அழிவை சந்திக்கின்றன என்று பறவை ஆர்வலர்கள் வாதம் முன்வைத்தனர். ஆனால், செல்லிடப்பேசி கோபுரங்களால் சிட்டுக் குருவி இனங்களுக்கு பாதிப்பு இல்லை என்று மற்றொரு தரப்பில் கூறப்பட்டது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

உண்மையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, அதிகாலை பொழுது விடியும்போது பறவைகளின் சப்தங்களைக் கேட்டே கண்விழித்திருப்போம். ஆனால், இப்போது அந்த சப்தங்களை இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களில்கூட அதிகம் கேட்க முடிவதில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை. அதற்கு செல்லிடப்பேசி கோபுரங்கள் மட்டுமே முழு காரணமாக இருக்கும் என்று கூறிவிட முடியாது என்கிறபோதும், அவையும் காரணமாக இருக்கலாம் என்றால் அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.



எந்தவொரு தொழில்நுட்பமும் நமக்கு நன்மையை முதலில் தரும் என்கிறபோதும், அதில் சில தீமைகளும் அடங்கியே இருக்கும். செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான், அலுவலகம், வீடுகள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட அளவு கதிர்வீச்சு வெளியிடப்பட வேண்டும் என்று அரசே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அவை சில நிறுவனங்களால் மீறப்படுவதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சரி, இதற்கும், 2.0 படத்துக்கும் என்ன சம்பந்தம்.
2.0 படத்தில் அக்ஷய் குமார் பறவை ஆர்வலாக நடித்திருக்கிறார். பறவைகளை பாதுாக்க அவர் எடுக்கும் முடிவில் தான் படம் தொடங்குகிறது.

தற்கொலை செய்துகொள்ளும் அக்ஷய், அதன்பிறகு அமானுஷ்ய சக்தியாக அவதாரம் எடுக்கிறார். பறவை இனங்களை பாதுகாக்க ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறார் என்றே கூறலாம். ஆனால், அதனால் பெருவாரியான மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதால், அரசு உயர்மட்ட ஆலோசனைக் குழுவை கூட்டி விவாதிக்கிறது. அதேநேரத்தில், பல பிரபலங்கள் கொல்லப்படுவதால், விஞ்ஞானி வசீகரனின் (ரஜினி) ஆலோசனையை ஏற்று, சிட்டி ரோபோவை களமிறக்குகிறது அரசு. அப்போது, அந்த அமானுஷ்யத்தை கட்டுப்படுத்தி விட முடிகிற போதிலும், மீண்டும் உருவெடுத்து விடுகிறது. அதைத்தொடர்ந்து, 2.0 ரோபோ களமிறக்கப்பட யார் ஜெயித்தார்கள் என்பதே கதை.

மக்களிடம் இருந்து செல்லிடப்பேசிகளை கவர்ந்திழுத்து அக்ஷய் குமார் மிகப் பெரிய பறவை உருவமாக மாறுவது. பிரபல செல்லிடப்பேசி விற்பனையாளரையும், முக்கிய நபரையும் செல்லிடப்பேசியாலே கொலை செய்வது என பல காட்சிகளில் விஎஃப்எக்ஸ் ஜாலம் நிரம்பியிருக்கிறது. படத்தின் முதல்பாதியில் இயக்குநர் ஷங்கரின் கற்பனை வளமும், இயக்கமும் ரசிகர்களை திரையில் கட்டிப்போடுகிறது. முப்பரிமாணத்தில் (3d) வெளிவந்திருக்கும் படம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதுவித அனுபவத்தை இந்தப் படம் தரும்.

கபாலி, காலா என்ற அரசியல் படங்களில் நடித்துவந்த ரஜினி, 2.0 மூலம் தனது ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். திரையில் ரஜினியின் அசாதாரண உழைப்பு புருவத்தை உயர்த்த வைக்கிறது. எமி ஜாக்சன் (நிலா ரோபோ) வசீகரனின் உதவியாளராக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜெயமோகனின் வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன. நீரவ் ஷாவின் கேமரா கோணங்களும், ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும் படத்துக்கு பக்க பலமாக அமைந்துவிடுகிறது. பக்ஷசி ராஜனாக வரும் அக்ஷய் குமாரின் பிளாஷ் பேக் காட்சிகள் ரசிகர்களின் கண்களை கலங்கடித்துவிடும். அவர் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்? என்பதையும், அதற்கான காரணத்தையும் திரைக்கதையில் அழகாக இணைத்திருக்கிறார் ஷங்கர்.

விளையாட்டு அரங்கில் நடைபெறும் படத்தின் இறுதிக்காட்சியில் விஎஃப்எக்ஸ் கலைஞர்களின் உழைப்பு மிளிர்கிறது. பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியிருந்தாலும், பேட் மேன், ஸ்பைடர் மேன் போன்ற ஆங்கில படங்களைப் போல சாகச காட்சிகளை மட்டும் பதிவு செய்யாமல், பறவைகளையும் மற்ற உயிர்களைப் போல பாதுகாப்போம் என்ற கருத்தை பதிவு செய்ததற்காகவே இந்தப் படம் ரசிகர்களின் கவனத்தை பெறும் என்பதில் சந்தேகமில்லை. Thanks dinamami

புதன், 28 நவம்பர், 2018

2.0 திரை விமர்சனம்


2.0 திரை விமர்சனம்

#Shankar #Rajinikanth #Akshay Kumar #Amy Jackson #A.R.Rahman #2.0 (Enthiran 2)
தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை ஒவ்வொரு முறையும் அடுத்துக்கட்டத்திற்கு எடுத்து செல்பவர்கள் தான் ரஜினியும் ஷங்கரும், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்தால் அந்த வளர்ச்சியை சிவாஜி, எந்திரனில் பார்த்து இருப்போம், தற்போது அடுத்தக்கட்டமாக உலகமே வியக்கும் 2.0 ஒரு படைப்பை இருவரும் கொடுக்க, ரசிகர்களுக்கு இப்படம் செம்ம விருந்தானதா? பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே அக்ஷய் குமார் செல்போன் டவரில் தூக்கு போட்டு இறக்கின்றார். அதை தொடர்ந்து அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து செல்போன்களும் தொலைந்து போகிறது.
இந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்று ஆராய்ச்சிக்குழு அரசாங்கத்தின் கீழ் ஆராய்ச்சி செய்யும் போதே பல செல்போன் உரிமையாளர்களும், டெலிகாம் மினிஷ்டரும் இறந்து போகின்றனர்.
அதை தொடர்ந்து வேறு வழியில்லாமல் சிட்டியை மீண்டும் கொண்டு வர, சிட்டி அக்ஷய் குமார் திட்டங்களை முறியடித்ததா? என்பதை செம்ம மெசெஜுடனும் பிரமாண்ட காட்சிகளுடன் காட்டியுள்ளார் ஷங்கர்.
படத்தை பற்றிய அலசல்
ஷங்கர் இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றே ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் வேலை செய்வார் போல. ஒரு படத்தில் பிரமாண்டம் இருக்கலாம், ஆனால், படமே பிரமாண்டமாக இருக்க முடியும் என்றால் அது ராஜமௌலி, ஷங்கர் என்ற ஒரு சிலருக்கே சாத்தியம்.
மொபைல், நெட்வொர்க் வளர்ச்சி நம் வாழ்வில் எத்தனை ஆபத்துகளை தருகிறது, அதை விட நம் சுற்றுச்சூழலை அது எவ்வாறு பாதிக்கின்றது, பறவையின் அழிவு, மனித இனத்தின் அழிவிற்கான தொடக்கம் என்ற நல்லா கான்செப்டை தன் ஸ்டைலில் சொல்லி அசத்தியுள்ளார்.
அதிலும் ஏதோ விட்டாலாச்சாரியார் படத்தில் வரும் ஆவிக்கதை போல் இல்லாமல், இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றவாரு ஆரோ, பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி என்று கூறி எளிதில் மக்களுக்கு புரியும் படி கூறியுள்ளார், ஆனால், நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், லாஜிக் இல்லாத மேஜிக் தானே படமே, என்று கொண்டாடலாம்.
சரி கதை, ஷங்கர், பிரமாண்டம் இருக்கட்டும், சூப்பர் ஸ்டார் படத்தில் எப்படி என்று கேட்பது புரிகிறது, வசீகரன் கதாபாத்திரம், வாய்ஸ் மிகவும் மோசமான அதுவும் ஆங்கில வார்த்தைகளில் அத்தனை தடுமாற்றம் இருக்க, அட என்னடா இது சூப்பர் ஸ்டார் இப்படி ஆகிட்டார் என பேச, சிட்டி எண்ட்ரீ கொஞ்சம் எழுந்து உட்கார வைத்தது, அதை தொடர்ந்து 2.0 சிட்டி அதகளம் செய்ய, 3.0 சிட்டி வர தியேட்டரே கொண்டாட ஆரம்பித்துவிட்டது.
இந்த நம்பர் 1, நம்பர் 2 இந்த போட்டியில் எல்லாம் நான் இல்லை, நான் எப்போதும் ஒன்லி ஒன் என இந்த வயதிலும் பஞ்ச் அடித்து இளம் ஹீரோக்களை அலற விடுகின்றார், அக்ஷய் குமார் அட இவர் படத்தில் இருக்கிறாரா, இல்லையா? என்று கேட்கும் அளவிற்கு செல்ல இடைவேளைக்கு பிறகு வரும் அவரின் ப்ளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது, வயதான கதாபாத்திரம் என்பதால் ஜெயபிரகாஷ் வாய்ஸும் அப்படியே பொருந்தி நிற்கின்றது.
எமி ஜாக்ஸன் வெறுமென வந்துபோகும் கதாபாத்திரம் தான் பெரிதாக ஒன்றுமில்லை, படத்திற்காக உழைத்த கிராபிக்ஸ் டீமை எழுந்து நின்று பாராட்டலாம், அதுவும் 3டி டெக்னாலாஜியின் டைட்டில் கார்டிலேயே நம்மை இழுத்து விடுகின்றனர், கிளைமேக்ஸில் புல்லட் பறப்பது, பறவை அருகில் வருவது என அட இது தமிழ் படம் தானா, இல்லை ஹாலிவுட் படத்திற்கு வந்துவிட்டமோ என்று எண்ண வைக்கின்றது.
இப்படி படம் முழுவதும் பிரமாண்டாம், காட்சிக்கு காட்சி ஆச்சரியம் என்று இருந்தாலும், ஷங்கரின் வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகள் மாறவே இல்லை, அதாவது வித்தியாசமாக ஒருவரை கொலை செய்வதில் அவருக்கு அப்படி என்ன ஆசையோ, இந்தியன், அந்நியன், ஐ-யை தொடர்ந்து இதிலும் தொடர்கின்றது. அதுமட்டுமின்றி ஏதோ பொட்டிக்கட்டைக்கு போய் டீ வாங்கிட்டு வருவது போல் அசால்ட்டாக தடை செய்யப்பட்ட ஆராய்ச்சி கூடத்திற்கு செல்வது எல்லாம் உச்சக்கட்ட லாஜிக் மீறல்.
படத்தின் டெக்னிக்கல் டீமிற்கு அடுத்த வருடம் அனைத்து விருதுகளும் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை, முத்துராஜின் கலை, ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் இன்ஜினியரிங், நீரவ்ஷோவாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங், எல்லாத்திற்கும் மேலாக ரகுமானின் பின்னணி இசை என அனைத்தும் தரம்.
க்ளாப்ஸ்
படத்தின் கதை, திரைக்கதை ஐ படத்தில் விட்டதை இதில் பிடித்துவிட்டார் ஷங்கர்.
படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னிக்கல் டீம்.
பிறகு என்ன சூப்பர் ஸ்டார் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் ஸ்டைலில் விளையாண்டுள்ளார். அக்ஷய் குமார் கஷடமான மேக்கப் போட்டும் அவர் காட்டிய மிரட்டல் எக்ஷ்பிரஷன்
படத்தில் வரும் குட்டி குட்டி வசனம், மனுஷனுக்கு தற்போது தேவை டிவி, சினிமா, சாப்பாடு, மொபைல், நாலும் பேருக்கு நல்லதுனு எதுவுமே தப்பில்லை என்று ரஜினியிடமே ரோபோ சொல்வது என சுவாரஸ்யம் தான்.
பல்ப்ஸ்
படத்தில் எல்லையற்ற லாஜிக் மீறல்கள், சூப்பர் ஹீரோ படம் மன்னித்து விடலாம் என்றாலும், ப்ரோபசர் போரோ மகன் நெகட்டிவ் எனர்ஜியை வெளியே விடும் காட்சியெல்லாம் காதில் பூ சுற்றல் தான்.
அக்ஷய் குமார் கதாபாத்திரம் அத்தனை கொடூரமாக காட்டிவிட்டு ப்ளாஷ்பேக்கில் அவரை அவ்வளவு சாதுவாக காட்டுவது கொஞ்சம் முரண்.
மொத்தத்தில் படம் முடிந்ததும் மொபலை எடுக்கலாமா வேண்டாமா என்ற ஒரு வகை எண்ணத்தை நமக்கே தோன்ற வைத்த ஷங்கரின் இந்த பாசிட்டிவ் எனர்ஜியே 2.0 விட 3.0 மீது எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கின்றது.
நன்றி சினி உலகம்.

EXCLUSIVE... வெளியானது 2.0 விமர்சனம்..!


EXCLUSIVE... வெளியானது 2.0 விமர்சனம்..!

#HIGHLIGHTS
துபாய் சென்சார் போர்டு மெம்பர் உமைர் சந்து சற்றுமுன்னர் ‘2.0’ படம்  தனக்கு ஏற்படுத்திய அனுபவம் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் பகிர்ந்து வருவதை படத்தின் எக்ஸ்க்ளூசிவ்  விமர்சனமாக இங்கே முன்வைக்கிறோம். வழக்கமான விமர்சனம் நாளை...
துபாய் சென்சார் போர்டு மெம்பர் உமைர் சந்து சற்றுமுன்னர் ‘2.0’ படம்  தனக்கு ஏற்படுத்திய அனுபவம் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் பகிர்ந்து வருவதை படத்தின் எக்ஸ்க்ளூசிவ்  விமர்சனமாக இங்கே முன்வைக்கிறோம். வழக்கமான விமர்சனம் நாளை...

’2.0’ படத்தை ஒரு ஆண்ட்ராய்டு புரட்சி என்றுதான் சொல்லவேண்டும். இதுநாள் வரை தென்னிந்திய சினிமாவின் ராஜாளியாக இருந்த ஷங்கரை இப்படம் ஒரு தரமான இந்திய ராஜாளியாகக் காட்டியுள்ளது. த்ரில்லிங்கான கதைக்கரு, யாரும் நினைத்துப்பார்க்கமுடியாத உயர்தரமான கற்பனை, உலகத்தரம் வாய்ந்த சவுண்ட் எஃபெக்ட்ஸ் என்று இந்தப்படம் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் ஒரு இந்தியப்படம்.

இப்படத்தின் திரைக்கதை முதல் காட்சியிலிருந்தே பார்வையாளர்களைக் கட்டிப்போட்டுவிடுகிறது. இறுதிக்காட்சி வரை தொய்வு என்ற ஒன்றுக்கே இடம் இல்லாமல் இக்கதையை பின்னியிருப்பது ஷங்கரின் சாமர்த்தியம். இன்னொரு பக்கம் இதுவரை உருவான இந்திய சயின்ஸ் ஃபிக்சன்களிலேயே பெஸ்ட் என்று மிக உறுதியாக இப்படத்தை சொல்லமுடியும். இனி உருவாகவிருக்கும் சயின்ஸ் ஃபிக்சனுக்கெல்லாம் ‘2.0’ ஒரு பாடப்புத்தகம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி, அக்‌ஷய் குமாரின் பாத்திரப்படைப்புகளும், இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இன்னும் சில கேரக்டர்களும் நம் மனதை விட்டு அகல பல ஆண்டுகள் ஆகும். வசூலிலும் இப்படம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை’ என்று 5 ட்விட்டர் பதிவுகளின் வாயிலாக ‘2.0’ குறித்து எழுதியிருக்கிறார் உமைர் சந்து.

செவ்வாய், 27 நவம்பர், 2018

வைகோ_திருமாவை_புறக்கணிக்கும்_திமுக

#வைகோ_திருமாவை_புறக்கணிக்கும்_திமுக.

திருமா என்ன பெரிய வாக்கு வங்கி வைத்திருக்க போகிறார். வைகோ என்ன பெரிய வாக்கு வங்கி வெச்சிருக்க போகிறார். கம்யூனிஸ்ட்களுக்கு என்ன வாக்கு வங்கி இருக்கிறது.

ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆளும் கட்சியின் மீது கடுப்பில் இருக்கிறார்கள். ஆகவே திமுக தனியாக நின்றாலே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக தலைமைக்கு எவனோ தப்பு தப்பா சொல்லி கொடுக்குறான்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஐம்பது  ஓட்டு முதல் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள் பல.. கூட்டணியை கொஞ்சம் பலப்படுத்த கலைஞர் ஆலோசனை படி மெனக்கெட்டு இருந்தாலே திமுக இன்று ஆட்சயில் இருந்திருக்க வேண்டிய கட்சி..

மீண்டும் வரும் தேர்தல்களில் அதே கூட்டணி தவறை திமுக செய்யும் என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பாஜகவை வீழ்த்த இது போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுவது நல்லது. வரும் காலங்களில் சட்டமன்ற தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடர்ந்தால் அது மக்களுக்கு நல்லது.

சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ வைகோ திருமா போன்றவர்கள் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்பதை நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை.

தமிழர்களுக்கு நாடாளுமன்றத்தில் வலுவாக பேச வேண்டிய நிறைய முக்கியமான பிரச்சினைகள் இருக்கு..வைகோ திருமா போன்றவர்கள் அதை சிறப்பாகவும் வலுவாகவும் பேசுவார்கள்..

ஆயிரம் அரசியல் முரண்கள் இருப்பினும் திருமாவும் வைகோவும் அங்கீகரிக்கப் பட்ட இடங்களில் இந்தியா முழுக்க கேட்கும் உரிமை குரல்களாக இருப்பது காலத்தின் கட்டாயம்.

பாராளுமன்றத்தில் வைகோவும் திருமாவும் இருப்பது என்பது அதிமுகவின் நாற்பது எம்பிக்கள் இருப்பதை விட உயர்வானது. அதிலும் வைகோ மூத்த பாராளுமன்றவாதி. இருபத்து நான்கு ஆண்டு கால பாராளுமன்ற அனுபவம் கொண்டவர். மூத்த அரசியல் தலைவர்களோடு பயணித்தவர். ஐம்பது ஆண்டு கால போராட்ட மற்றும் கள அரசியல் அனுபவம். தமிழர் நலன்களுக்காக எல்லா பக்கங்களிலும் வலுவான குரலாக ஒலிப்பவர்.

திருமாவின் நாடாளுமன்ற அனுபவம் குறைவு எனினும் இன்றைக்கு திருமாவின் ஆளுமை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

ஆகவே மதிமுக கூட்டணியில் இல்லை சிறுத்தைகள் கூட்டணியில் இல்லை போன்ற எகத்தாளங்கள் திமுகவுக்கு அழிவையே தேடித்தரும். மக்கள் நலக்கூட்டணி ஒரு மொக்கை கூட்டணியாக இருந்திருக்கலாம்.

ஆனால் திமுகவின் இது போன்ற எகத்தாளங்களால் இங்கே என்ன காம்பினேசன் வேணும்னாலும் அமையலாம். திமுக ஒன்றும் வீழ்த்தப் பட முடியாத கட்சியாக இல்லை.

தொடர் வெற்றிகளை குவிக்கும் கட்சியும் இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முட்டை தான் கிடைத்தது. தனி ஒரு கட்சியாக முப்பத்தேழு தொகுதிகளில் வென்றது அதிமுக. பாமக மற்றும் பிஜேபி தலா ஒரு சீட் பெற்றது...

வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி விடலாம் திருமாவை மட்டுப் படுத்தி விடலாம் என்று கனவு காணுவீர்கள் என்றால் அல்லது இது தான் அரசியல் சாணக்கியத் தனம் என்பீர்கள் என்றால் தமிழ்நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமா உருப்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வைகோவின் வயதால் அவர் நீண்ட காலம் அரசியலில் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் திருமாவுக்கு அந்த வாய்ப்பு இருக்கு.

ஒரு மாபெரும் கட்சியில் தகப்பனின் அடையாளத்தில் வெற்றியில் மற்றவர்கள் தயவில் ஜால்ராவில் வளர்ந்தவன் அல்ல திருமா..

அவன் சுயம்பு. துண்டுச் சீட்டு ஸ்டாலின்களை விட நூறு மடங்கு திறமையாளன். வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து அத்தனை அடிகளையும் வலிகளையும் தாங்கி தாண்டி வந்தவன். தமிழக அரசியல் வரலாற்றில்  திருமா போன்ற தீர்க்க சிந்தனை உள்ளவர்கள் மேலே வர வேண்டும்.
எவன் தடுத்தாலும் காலம் கனியும் போது மேலே வருவான் எங்கள் திருமா..

பாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள்.

பாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள்.
-நக்கீரன் இதழ்

1.இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

2.இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?

3.இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

4.இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?

5.இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

6.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

7.இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

8.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

9.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

10.இந்திய வரலாற்றில் ராணுவ வீரர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று புகார் செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

11.இந்திய வரலாற்றில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளான குற்றவாளியை பாதுகாக்க மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?

12.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி செய்தியாளர்களைச் சந்தித்து புகார் கூறியதை கேட்டிருக்கிறீர்களா?

13.இந்திய வரலாற்றில் சாலைகளில் கிடந்த பசு சாணத்தை திண்ணும்படி தாழ்த்தப்பட்ட மக்களை கட்டாயப்படுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா?

14.இந்திய வரலாற்றில் மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியை பாதுகாக்க, நீதிமன்றக்கூண்டில் ஏறி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறாரா?

இந்த 14 கேள்விகள் இப்போது பரபரப்பாக உலா வருகின்றன. சமூகவலைத்தளங்களில் பரவும் இந்தக் கேள்விகள் அனைத்தும் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய சரித்திரத்தில் இடம்பெற்றவை.
அனைத்து நிகழ்வுகளிலும் பா.ஜ.க. அரசுக்கும், பாஜக ஆட்களுக்கும் தொடர்பு உண்டு.

திங்கள், 19 நவம்பர், 2018

அதுக்கு செலவு செய்யுறதுனா நம்ம ஆளுங்க தான் ‘ டாப்’


அதுக்கு செலவு செய்யுறதுனா நம்ம ஆளுங்க தான் ‘ டாப்’

சமீபத்தில் டியூரெக்ஸ் குளோபல் அமைப்பு செக்ஸ் குறித்த சர்வே நடத்தியது. இதில் இந்தியா உட்பட 42 உலக நாடுகளை சேர்ந்த 33,000 பேர் பங்கெடுத்தனர். இதில், 80% பேர் செக்ஸ் வைத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்த நிலையில், மூன்றில் இரண்டு பங்கினர் செக்ஸ் கோளாறுகள், சந்தேகங்களை வெளிப்படுத்த சங்கோஜப்படுவதாக கூறி இருந்தனர்.
செக்ஸ் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 59% பேர் பெண்ணுறுப்பு ரீதியான உறவு என்றும். 45% பேர் ஆண், பெண் மத்தியிலான உடல் ரீதியான இணைப்பு என்றும், 40% பேர் முத்தமிட்டுக் கொள்வது என்றும் பதில் அளித்துள்ளனர்.
செக்ஸ் குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 82% பேர் பெற்றோரிடம் என்றும். 61% பேர் நண்பர்களிடம் என்றும் கூறியுள்ளனர். ஒரே நபருடன் உறவு வைத்துக் கொள்கிறீர்களா? என்ற கேள்விக்கு 28% பேர் ஒரே ஒரு துணையுடன் என்றும், 63% சதவீதத்தினர் பலருடன் உறவு வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் பணம் கொடுத்து செக்ஸ் வைத்துக் கொள்வதில் இந்தியர்களே முதல் இடத்தில் இருக்கிறார்கள். இதில் இந்தியர்கள் 42% உள்ளனர்.உலக அளவில் இதன் சதவீதம்38. சுய இன்பத்தில் பெண்கள் 68% பேரும், ஆண்கள் 73% பேரும் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

செக்ஸ் மிகவும் திருப்தி என்று 72% பேர் பதில் அளித்துள்ளனர்.கருத்தடைக்கு 73% பேர் ஆணுறை என்றும், 25% பேர் மாத்திரைகள் என்றும், 13% பேர் காலண்டர் நாள் குறித்து வைத்து உடலுறவில் ஈடுபடுகிறோம் என்றும் பதில் அளித்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட பாதி பேர் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவதில்லை என்று அதிர்ச்சியளித்துள்ளனர். புறநகர் பகுதியை விட நகர்புற மக்கள் அதிகம் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்றும் இதில் தெரிய வந்துள்ளது.

ஞாயிறு, 18 நவம்பர், 2018

புயலை விட சாதி கோரமானது!

ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நந்தீஷ் (25). பட்டியல் வகுப்பை சேர்ந்த இவரும் அதே ஊரை சேர்ந்த சுவாதியும் (21) 4 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். நந்தீஷின் சாதியை காரணம் காட்டி, சுவாதியின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். மிரட்டலுக்கு பயப்படாமல் சுவாதி நந்தீஷை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுவாதி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நந்தீஷை வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காத நந்தீஷின் தந்தை நாராயணப்பா, 'சாதி பிரச்சினை வரும்' எனக்கூறி சுவாதியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். உடனடியாக சுவாதியின் தந்தை சீனிவாசனை சந்தித்து, தன் மகனுக்கு சுவாதியை திருமணம் செய்து தருமாறு 'பெண் கேட்டு'ள்ளார்.

அதற்கு சுவாதியின் தந்தை சீனிவாசன் சாதி பெயரைச் சொல்லி திட்டி, பெண் தர மறுத்துவிட்டார்.மேலும் சுவாதியை அடித்து, வெளியே செல்ல விடாமல் வீட்டில் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டில் சுவாதி வீட்டை விட்டு வெளியேறி, நந்தீஷை திருமணம் செய்துள்ளார். திரும்பவும் ஊருக்குப் போனால் பெரிய பிரச்சினையாகும் என்பதால் இருவரும் 'தலைமறைவு' வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

ஓசூர் பேருந்து நிலையம் அருகே 'ரகசியமாக' வாடகை வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சட்டப்படி நந்தீஷூம் - சுவாதியும் தங்களது திருமணத்தை சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி ஓசூருக்கு வந்த‌ நடிகர் கமல்ஹாசனை சுவாதி பார்க்க விரும்பியுள்ளார். காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, நந்தீஷ் அவரை கமல் ஹாசன் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.








அங்கு சுவாதியின் உறவினர்கள் கிருஷ்ணன் (26), வெங்கட் ராஜ்(25) ஆகியோர் புதுமண தம்பதியை பார்த்து, அவர்களிடம் பேச்சுக்கொடுத்து கொண்டே சுவாதியின் தந்தைக்கு தகவல் கொடுத்தன‌ர். அதற்காகவே காத்திருந்த சுவாதியின் தந்தை சீனிவாசன் (40), பெரியப்பாக்கள் அஸ்வதப்பா(45), வெங்கடேஷ் (43) சாமிநாதனின் (30) வாடகை காரை எடுத்துக்கொண்டு வந்தனர்.

முதலில் கோபமாக சண்டை போட்ட சுவாதியின் தந்தை சீனிவாசன், ''காரில் ஏறுங்கள். போலீஸ் ஸ்டேசனுக்கு போகலாம்''என குண்டுகட்டாக நந்தீஷையும் சுவாதியையும் காரில் ஏற்றியுள்ளனர். ஒரு கட்டத்தில் கோபம் முற்றி கண்ணீர் விட்டு அழுவதைப் போல நடித்த சீனிவாசன், இருவரையும் ஏற்றுக்கொள்கிறேன். வீட்டுக்கு வந்துடுங்க எனவும் கெஞ்சியுள்ளார். இதனை நம்பி நந்தீஷூம் - சுவாதியும் பயணித்த நிலையில், கார் நைஸ் ரோடு வழியாக கர்நாடகாவுக்குள் நுழைந்தது.

இதனால் சந்தேகமடைந்த நந்தீஷ், 'எதுக்கு இந்த பக்கம்?' என கேட்டிகிறார். அதற்கு சீனிவாசன், ''ராம்நகர் பக்கத்துல பெரிய அனுமான் கோயில் இருக்கு. அங்கு போய் பூஜை பண்ணிட்டு, முறைப்படி கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்''என ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதனை நந்தீஷூம், சுவாதியும் நம்பாத நிலையில் மீண்டும் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. அப்போது காரில் இருந்த சீனிவாசன், வெங்கடேஷ், அஸ்வதப்பா, கிருஷ்ணன், வெங்கட் ராஜ் உள்ளிட்டோர் கூர்மையான ஆயுதங்களால் நந்தீஷ் - சுவாதியை அடித்துள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு கொண்டு சென்று, 'பிரிந்து போய்விடுமாறு' மீண்டும் நந்தீஷையும், சுவாதியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதற்கு மறுத்த நிலையில் இருவரையும் ஆயுதங்களால் தலை பகுதியில் வெட்டி, கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரையும் அடையாளம் காண முடியாதவாறு, அவர்களின் முகங்களை தீயிட்டு பொசுக்கியுள்ளனர். அதிலும் சுவாதியை மொட்டை அடித்து, அவரது அடிவயிறு பகுதியை சிதைத்துள்ளனர். இருவரின் கை, கால் லுங்கி துணியால் கட்டி சிம்சா ஆற்றில் வீசிவிட்டு, ஊர் திரும்பியுள்ள‌னர்.

அம்பேத்கர் டி -ஷர்ட்

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி நந்தீஷின் தம்பி சங்கர், தனது அண்ணனையும் அண்ணியையும் காணவில்லை. சுவாதியின் தந்தை சீனிவாசன் மீது சந்தேகம் இருப்பதாக ஓசூர் போலீஸில் புகார் அளித்தார். இதனை வழக்கம்போல போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை. கட‌ந்த 13-ம் தேதி நந்தீஷின் உடல் அழுகிய நிலையில் கர்நாடக‌ ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பிறகு, 14-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

நந்தீஷின் முகம் அடையாளம் காண முடியாத நிலையில், அவர் அணிந்திருந்த நீல நிற டி - ஷர்ட் துப்பு துலக்க உதவியது. அதில் டாக்டர் அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்டு, 'சூடகொண்டப்பள்ளி, ஜெய்பீம்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து பெலகாவாடி போலீஸ் கிருஷ்ணகிரி போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில், மறுநாள் (15-ம் தேதி) நந்தீஷின் சடலம் மிதந்த அதே இடத்தில் சுவாதியின் சடலமும் மிதந்தது.

இதை உறுதி செய்த போலீஸார் நந்தீஷ் - சுவாதியை கடத்தி கொலை செய்ததாக சுவாதியின் தந்தை சீனிவாசன்(40), பெரியப்பா வெங்கடேஷ் (43), மற்றொரு பெரியப்பா அஸ்வதப்பா (45) உறவினர் கிருஷ்ணன் (26), உறவினர் வெங்கட் ராஜ் (25), கார் உரிமையாளர் சாமி நாதன் (30) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சீனிவாசன்,வெங்கடேஷ், கிருஷ்ணா ஆகிய 3 பேரை பிடித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அத்தனை பேரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புரிந்துகொள்ள முடியவில்லை

இந்த சம்பவத்தை தொடர்ந்து எழும் வழக்கமான கண்டன முழக்கங்களை பார்க்க சலிப்பாக இருக்கிறது. அறிக்கைகள், கள ஆய்வுகள், விசாரணைகள், சட்ட நடவடிக்கைகள் எல்லாம் அலுப்பூட்டுகின்றன. சாதி ரீதியான தாக்குதல்கள் அன்றாட நடவடிக்கைகளாக மாறிவிட்ட சூழலில் அதை தினமும் எழுதுவதும், பேசுவதும் விரக்தியை தருகிறது. கழிவிரக்கம், ஆதரவு குரல், தொலைக்காட்சி விவாதம், கண்டன ஆர்ப்பாட்டம், நீதிமன்ற முறையிடல், புதிய சட்டத்துக்கான கோரிக்கை என எல்லாமே அந்த நேரத்துக்கான கண் துடைப்போ என எண்ண வைக்கிறது.

சாதி ரீதியாக மனித தன்மையற்ற முறையில் எளிய மனிதன் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், 'ஒற்றுமை அவசியம்' என முழங்கும் குரல்களை ஏற்கும் மனநிலை இல்லாமல் போகிறது. களத்தின் எதார்த்தத்தை உணராமல், கனவு தேசத்தை கட்டியெழுப்பவதில் மும்முரமாக இருக்கும் தலித் கட்சிகளை நேசிக்க முடியாமல் போகிறது. எதனோடும் ஒப்பிடவே முடியாத வலியை சந்திக்கும் பாதிக்கப்பட்டவனையும், நிதம்நிதம் வதம் செய்யும் பாதிப்பை ஏற்படுத்துவனையும் ஒன்றாக அமர்த்தி, உரையாட அழைக்கும் புதிய குரல்களை ஆதரிக்க முடியாமல் போகிறது.

என்ன செய்தால் இந்த கொலைகள் எல்லாம் நிற்கும்? எப்படி கொல்லப்படுபவர்களை காப்பது? எப்படி சொன்னால் கொலையாளிகளுக்கு புரியும்? புரியாதவர்களுக்கு எப்படி புரிய வைப்பது? பலியிடப் படுவதற்காகவே நேர்ந்து விட்டவர்களா ஒடுக்கப்பட்டவர்கள்? மனசாட்சி உள்ள மனிதர்களால் தினந்தினம் கொலைகளை கண்டும், எப்படி மிக‌ சாதாரணமாக கடந்து போக முடிகிறது?

இத்தனைகளை கொலைகள், வீடு எரிப்புகள், பலாத்காரங்கள், வன்முறை சம்பவங்கள் என தினந்தினம் பார்த்துக்கொண்டு இருக்கும், 'தலித் தலைவர்களால்' ஏன் இந்த சம்பவங்களுக்கு எதிராக கிளர்ந்தெழ முடியவில்லை. எதிர் தாக்குதல் குறித்து முழக்கம் எழுப்பியவர்கள், ஏன் மவுனமாக இருக்கிறார்கள்? எதையுமே புரிந்துக்கொள்ள முடியவில்லை.

எதுவுமே சாத்தியப்படாத நிலையில், எல்லாவற்றையும் மீண்டும் தொடக்கத்தில் இருந்தே தொடங்கி பார்க்க வேண்டும். எவரும் கைக்கொடுக்காத நிலையில், மக்கள் தமக்கு தாமே கைக்கொடுத்துக்கொள்ள வேண்டும். முக தாட்சண்யம் கடந்த நீண்ட விவாதத்தை, நிறுத்திவிட்ட செயல்பாட்டை, மரபான குணாம்சத்தை, கற்க வேண்டிய பாடத்தை தயக்கமின்றி கற்க வேண்டும். சரியோ, தவறோ எதையும், எதற்கும் நிகர் செய்ய வேண்டும். தீர்வு வரும்வரை நிறுத்தக்கூடாது.

எங்கிருந்து வருகிறது வெறி?

சாதி வெறியில், பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த சீனிவாசனின் முகத்தை பார்த்தேன். கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால், ஒட்டிப்போன முகம், நோஞ்சான் போன்ற உடல்வாகு பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கடும் வறுமையும், அறியாமையும், இறுக்கமும் நிறைந்திருக்கிறார். 'பொசுக்'னு இருக்கும் இந்த மனிதருக்கு எங்கிருந்து சாதி வெறி வந்தது? சாதி எப்படி இந்த சாதாரண மனிதரிடம் இவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது? அறிவியல் வளர்ந்த இந்த 21-ம் நூற்றாண்டிலும் எப்படி இன்னும் முட்டாளாகவே இருக்கிறார்? பெற்ற மகளை,சக மனிதரை, துள்ள துடிக்க கொல்லும் மன நிலையை எங்கிருந்து பெற்றார் என யோசிக்கவே முடியவில்லை.

ஏராளமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், பார்வையில் பலம் வாய்ந்ததாக பட்டவற்றை எல்லாம் புயல் புரட்டி போட்டுவிடுகிறது. பார்வையில் படாத, மக்களின் மனங்களில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதியை எந்த புயலாலும் புரட்டி போட முடிவதே இல்லை.

புயலை விட சாதி கோரமானது!

வெள்ளி, 16 நவம்பர், 2018

மதி நியூஸ் 17/11/18

மதி நியூஸ்  17/11/18 !

கஜா புயலின் பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்வு.

கஜா புயல் : படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் - தமிழக முதல்வர் பழனிசாமி.

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது.
வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு.

கஜா புயல் நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியிடம், தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் உறுதி : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டதற்காக முதல்வருக்கு பிரதமர் பாராட்டு.

தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தமிழக முதலமைச்சரிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி.

கஜா புயல்பாதிப்புகள் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.புயல் பாதிப்பை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.14ம் தேதி நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்.

சபரிமலை வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் நாளை அல்லது திங்களன்று மனுதாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு - தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்.

செப்டம்பர் , அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை மேல்நிலை துணைத் தேர்வுகள் ரத்து - தமிழக அரசு.

சபரிமலை கோயிலை சுற்றி 144 தடை.

பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க காவல்துறை உதவி இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - தமிழக முதலமைச்சர்.

நாகை - ஷகீல் அக்தர், திருவாரூர் - தாமரைக் கண்ணன், தஞ்சை - ரவி ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் - தமிழக முதல்வர்.

ராமநாதபுரம் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி.

காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்.

பாதிப்படைந்த ரயில்வே பகுதிகளை சீரமைக்க காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு நியமனம் - தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.

கஜா புயல் வலு குறைந்தது : மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.

மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது, அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு தந்திட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் ஆகியவற்றில் நாளை (நவம்பர் 17) வழக்கம் போல தேர்வுகள் நடக்கும்.

வேலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.

கஜா புயல் மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.

தமிழகத்தில் புயல் பாதிப்பை கணக்கிட குழு ஒன்றினை மத்திய அரசு உடனடியாக அனுப்ப வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்.

கஜா புயல் மட்டுமின்றி தமிழகத்தில் அரசியல் புயலையும் விரட்டி அடித்து முதல்வர் சிறப்பாக பணியாற்றி வருகிறார் - அமைச்சர் தங்கமணி.

கொசுக்கள் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளதால் மக்களுக்கு இலவசமாக கொசுவலை வழங்க வேண்டும்.கஜா புயலுக்கு மத்தியில் அரசியல் புயலை யாரும் கிளப்ப வேண்டாம் - தமிழிசை சவுந்தரராஜன்.

மீ - டூ புகாரில் சிக்கினார் நடிகர் விஷால் - பெண் பரபரப்பு வீடியோ வெளியீடு.

கஜா புயலால் மூணாறில் வெள்ளம்.

அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாயஎச்சரிக்கை.

நவம்பர் 20: தமிழகத்தில் கன மழை பெய்யும் - பிரதீப் ஜான் , தமிழ்நாடு வெதர்மேன்.

அரசை பாராட்டிய ஸ்டாலினுக்கு நன்றி , அரசின் பணியை பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.ஊடகங்களுக்கு நன்றி, ஊடகங்களின் ஈடுபாடு பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறது - அமைச்சர் உதயகுமார்

புயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை புயலால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன் - முதல்வர் பழனிசாமி.

தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நடக்கவிருந்த அரசு சட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு - டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு.

மீனவ கிராமங்களில் கஜா புயல் பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது - அமைச்சர் ஜெயக்குமார்.

மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.விரைவாக இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.முதலமைச்சர் உத்தரவின் பேரில் இரவு முதலே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.

கஜா புயல் எதிரொலி : கடலூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை,திருவாரூர்,திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 216 குடிசைகள் முழுவதுமாகவும், 1471 குடிசைகள் பாதி அளவும் சேதம் அடைந்துள்ளது.

கல்லணை, மேட்டூர், அமராவதி உள்பட 11 அணைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? - பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர் அறிக்கை தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

கஜா புயல் எதிரொலி திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காற்றாற்று வெள்ளம்.

தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்.

கஜா புயலுக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
20 இடைத்தேர்தலும் ஜனநாயக முறையில் நடந்தால் திமுக வெற்றி பெறும் - தூத்துக்குடியில் திமுக எம்பி கனிமொழி பேட்டி.

கஜா புயல் தொடர்பான தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் வாழ்த்தியது வரவேற்கத்தக்கது.குறை உள்ளபோது அதனை சுட்டிக்காட்டுவதும் சிறந்த பணியை மேற்கொள்ளும்போது அதனை வாழ்த்துவதும் அரசிற்கு உற்சாகத்தை தரும் - அமைச்சர் செல்லூர் ராஜூ.

தொலைத்தொடர்பு கோபுரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது - பட்டுக்கோட்டை மக்களை தொடர்பு கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளதால் உறவினர்கள் தவிப்பு - ஜியோ சேவை மட்டும் இயங்குகிறது

கஜா புயலால் 111 கி.மீ வேகத்தில் காற்று வீசியுள்ளது : நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பு , புயல் காரணமாக மொத்தமாக 12,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.81, 948 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்.

புதுக்கோட்டை புயல் பாதிப்பு குறித்த தகவல்களை பகிர்ந்து உதவி கோர அழையுங்கள் : 📞04322 222207.. ☎1077.. WhatsApp 9500589533 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பேச 📞04322 221658.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை-வேதாரண்யம் சாலை மட்டுமே தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் பலத்த காற்று காரணமாக சென்னை - திருச்சியில் விமான சேவை பாதிப்பு : சென்னையில் இருந்து 36 பயணிகளுடன் திருச்சி சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை திரும்பியது.

கஜா புயலால் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளதால், மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையாக சீராக 2 நாட்கள் ஆகும் - மின்வாரிய அதிகாரிகள் தகவல்.

கேரளா : பெரியவாரையில் தற்காலிக தரைப்பாலம் மழை நீரில் அடித்து செல்லப்பட்டதால் மூணாறு - உடுமலைப்பேட்டை சாலை துண்டிப்பு.

கஜா புயல் பாதிப்புகளால் தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல்: திருச்செங்கோட்டில் ரூ.486 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

தேனி : மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியது.

அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.

வியாழன், 15 நவம்பர், 2018

தேசம் காப்போம் மாநாடு




தேசம் காப்போம் மாநாடு

ஏன்? எதற்கு?

#சனாதனமா? #சனநாயகமா?

#சனாதனம் என்றால் என்ன?

சனாதனம் என்பது பழமைவாதத்தைக் குறிக்கும். ஆனால் பழமைவாதம் என்பது காலத்தால் பழமையானது என்று மட்டுமே பொருளாகாது. மாறாக, தற்போதைய காலச் சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத, புதிய மாற்றங்களைத் துளியும் ஏற்காத, ஒரு அடிப்படைவாத கருத்தியலைக் குறிக்கும்.

இந்தச் சமூகக் கட்டமைப்பில், இன்றைக்கு பெரும்பான்மை என்னும் எண்ணிக்கை வலிமையைப் பெற்றதாகவும் காலத்தால் மிகவும் பழமையானதாகவும் ஐதீகம், பாரம்பரியம், நம்பிக்கைவாதம் என்னும் பெயரில் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாகவும் விளங்குவது இந்து மதமே ஆகும்.

இந்து மதம் என கடந்த சில நூற்றாண்டுகளாக அறியப்படுகிற இவ்வமைப்பானது, இஸ்லாம் கிறித்துவம் அல்லாத பல்வேறு இந்திய மதங்கள் அல்லது சமயங்கள், சிறிய சிறிய கலாச்சாரக் குழுக்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கலவையே ஆகும். குறிப்பாக சைவம், வைணவம், போன்ற மதங்கள் ஆதிகாலத்தில் ஒரே அமைப்பாக அல்லது இந்து மதமாக இருக்கவில்லை. தனித்தனி மதங்களாகவே இயங்கி வந்தன.

அதாவது சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் போன்ற பல்வேறு கலாச்சாரக் குழுக்களாக அல்லது மதங்களாக இயங்கி வந்தன. இத்தகைய அமைப்புகளின் கூட்டமைப்பாகத்தான் இன்று இந்து மதம் என்கிற ஒரு அமைப்பு உருப்பெற்று புதிய பரிமாணங்களைக் கொண்ட பேரமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

ரிக், யஜீர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வகை வேதங்களையும் மனுஸ்மிருதி என்கிற வர்ணாஸ்ரமக் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கியதே வைதீக மதமாகும். இது ஒரு குறிப்பிட்ட வர்ணப் பிரிவினருக்கு மட்டுமே உரியதாகும். அதாவது, பார்ப்பனர்கள் என்னும் சமூகப் பிரிவினருக்கும் மட்டுமே உரிய மதமாக இது இயங்கி வந்தது என அறிய முடிகிறது.

வேதங்கள் மற்றும் மனுஸ்மிருதி கோட்பாடு ஆகியவற்றின் தாக்குதலுக்குள்ளான பல்வேறு கலாச்சார அமைப்புகள், சைவம் மற்றும் வைணவம் உள்ளிட்ட பெருமத அமைப்புகள் போன்ற யாவும் காலப்போக்கில் ஒன்றுக்குள் ஒன்று கரைந்து இன்று இந்து மதம் என்கிற ஒரு புது வடிவத்தைப் பெற்று இயங்குகிறது. எனினும் இதற்கான கோட்பாடுகள் வேத மதங்களின் அடிப்படைக் கருத்தியலே ஆகும். இத்தகைய வைதீகப் பழமைவாத அடிப்படைவாதமே சனாதனம் என்பதாகும்.

பிராமணர், ஷத்திரியர், வைசியர், மற்றும் சூத்திரர் என்கிற நான்கு வர்ண கோட்பாடுகளும் அவற்றில் நிலவும் சாதிப் பிரிவுகளும் வருணம் மற்றும் சாதி ஆகியவற்றின் அடிப்படையிலான உயர்வு - தாழ்வு என்கிற பாகுபாடுகளும் தான் சனாதனம் ஆகும்!

தொட்டால் தீட்டு, நெருங்கினால் தீட்டு, கண்டாலே தீட்டு என்கிற சமூகக் கொடுமைகளை காலங்காலமாய் நடைமுறைப்படுத்திய அவலங்கள் தான் சனாதனம்!

ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனியான வாழிடங்கள், தனித் தனியான தொழில்கள், தனித் தனியான சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள், தனித் தனியான திருமண உறவுகள் மற்றும் ஈமச்சடங்குகள் உள்ளிட்ட கலாச்சார நடைமுறைகள், போன்றவற்றை நிலைப்படுத்தி தக்கவைத்துக் கொண்டிருப்பது தான் சனாதனம்!

வருண அடிப்படையில், சாதி அடிப்படையில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த குலத் தொழில்களை மீறக்கூடாது என்பதை வற்புறுத்தும், மீறினால் தண்டிப்பதும் தான் சனாதனம்!

நான்கு வருணங்களைத் தாண்டியுள்ள சமூகப் பிரவினரிடமிருந்து, அதாவது அந்த வருணங்களுக்கு உட்படாத பூர்வீகக் குடிமக்களிடமிருந்து, நிலம், கல்வி, மற்றும் அதிகாரம் போன்றவற்றைப் பறித்து அல்லது மறுத்து அவர்களைத் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்குவதும் தான் சனாதனம்!

குழந்தை திருமணத்தை நியாயப்படுத்துவதும், விதவை மறுமணத்தை தடுப்பதும், கணவன் இறந்ததும் மனைவியை உடன்கட்டை ஏற்றிப் படுகொலை செய்வது போன்ற நடவடிக்கைகளும் தான் சனாதனம்!

மாதவிடாய் காலத்திலும், கர்ப்பக் காலத்திலும் பெண்களை ஒதுக்கி வைத்து ஆணாதிக்கப் போக்குகளை நிலைப்படுத்துவதும், பெண்களைத் தாழ்மைப் படுத்துவதும் தான் சனாதனம்!

விரும்பிய மதத்தைத் தழுவுவதையோ, விரும்பியக் கடவுளை வழிபடுவதையோ அனுமதிக்காமல் தடுப்பதும், மீறினால் மதம் மாறியவர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவதும் தான் சனாதனம்! அத்துடன், இந்து மதத்துக்கு அல்லது தாய் மதத்துக்குத் திரும்புங்கள் என்று அச்சுறுத்துவதும் கும்பலாய்க் கூடிப் படுகொலைகள் செய்வதும் தான் சனாதனம்!

பசுமாட்டின் மீதும் புனிதம் கற்பித்து, பசுக்கறி, மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று வீட்டுக்குள் புகுந்து அடித்துக் கொலை செய்வதும், மாட்டு வணிகத்தில் ஈடுபடுவோரைக் கொடூரமாகத் தாக்குவதும் தான் சனாதனம்!

லவ் ஜிஹாத், நாடகக் காதல் என்கிற பெயரால், காதல் திருமணங்களுக்கு எதிராக, வறட்டு கௌரவத்தால் பெற்றப் பிள்ளைகளையே காட்டுமிராண்டித் தனமாக ஆவணக் கொலைகள் செய்வதும் தான் சனாதனம்!

முஸ்லீம், கிறித்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை விதைப்பதும் அரசியல் ஆதாயம் கருதி வெறுப்பு அரசியலைப் பரப்புவதும் தான் சனாதனம்!

இந்து - முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தியதற்காக, இந்து மதத்தின் அதிதீவிர பற்றாளரான காந்தியடிகளையே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்ததும் தான் சனாதனம்!

ராமர் கோயிலை கட்டுவோம் என்னும் பெயரில் 400 ஆண்டுகால பழமை வாய்ந்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியது தான் சனாதனம்!

இந்துக்களுக்காக இருந்தாலும் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் கல்புர்க்கி, கௌரிலங்கேஷ் ஆகிய சனநாயக சக்திகளை சுட்டுப் படுகொலை செய்ததும் தான் சனாதனம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர், தோழர் ரவிக்குமார் உட்பட இன்னும் 34 பேரை இந்திய அளவில் படுகொலை செய்யப்போவதாகப் பட்டியல் வைத்திருப்பது தான் சனாதனம்!

பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அகண்ட பாரதம் என்கிற இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுத்துவதும் தான் சனாதனம்!

ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்கிற பெயரில் பன்மைத்துவத்தைச் சிதைக்கும் போக்குகளும் இவற்றுக்கு இடம் கொடுக்காத இன்றைய அரசியலைப்புச் சட்டத்தை அடியோடு மாற்றிவிட்டு மீண்டும் மனுஸ்மிருதியையே அரசியலமைப்புச் சட்டமாக்க வேண்டுமென்று துடிப்பதும் தான் சனாதனம்!

இத்தகைய சனாதனம் மிகவும் கொடிய பயங்கரவாத கருத்தியலாகும். இது இந்திய தேசத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். சனாதனப் பயங்கரவாதம் என்னும் இக்கருத்தியல் மென்மேலும் வலிமை பெற்றால், இங்கே சனநாயகத்திற்கு பாதுகாப்பு இருக்காது. புரட்சியாளர் அம்பேத்கர் வரையறுத்து வழங்கியுள்ள அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பாதுகாப்பு இருக்காது. ஒட்டுமொத்தத்தில் இந்திய தேசத்திற்கே பாதுகாப்பு இருக்காது.

எனவே, இத்தகைய சனாதன பயங்கரவாத கருத்தியலிலிருந்தும் அதனைப் பரப்பி ஆதிக்கம் செலுத்திவரும் சனாதனிகளிடமிருந்தும் இத்தேசத்தைப் பாதுகாக்க வேண்டியது அனைத்துச் சனநாயகச் சக்திகளின் தவிர்க்க முடியாத கடமையாகும். இத்தகைய பொறுப்புணர்விலிருந்தே அனைத்து முற்போக்கு சனநாயக சக்திகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 'தேசம் காப்போம்' என்னும் இந்த அறைகூவலை விடுக்கிறது.

சனாதனமா? சனநாயகமா? என்னும் இந்த அறப்போராட்டத்தில் சனநாயகமே வெல்லும் என்கிற வகையில், நாடு தழுவிய அளிவில் மதசார்பற்ற சனநாயக சக்திகளை அரசியல் களத்தில் ஒருங்கிணைப்பதற்காகவே இம்மாநாடு!

சனாதனத்தை வேரறுப்போம்! - புரட்சிகர சனநாயகத்தை வென்றெடுப்போம்!

- #முனைவர்_தொல்_திருமாவளவன்

மக்களே உஷார்... நெருங்கும் கஜா புயல் : பாதுகாப்பு குறிப்புகள் !!


மக்களே உஷார்... நெருங்கி வரும் கஜா புயல் : பாதுகாப்பு குறிப்புகள் !!

🌀 மக்கள் புயலை கண்டு அஞ்ச வேண்டாம். பதற்றப்பட வேண்டாம். கஜா புயல் தீவிர புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பாதுகாப்பிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

🌀 கஜா புயல் பாம்பன் மற்றும் கடலூருக்கும் இடையே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

🌀 காலை 9.30 நிலவரப்படி கஜா புயல் நாகையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

🌀 இன்று அதிகாலை மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னைக்குட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. காலை சுமார் 9 மணியில் இருந்து சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

🌀 மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நாகையை நோக்கி நகர்கிறது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

🌀 வானொலி, தொலைக்காட்சி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலி மற்றும் சமூகவலைதள பக்கங்களை பின்பற்றவும்.

🌀 முதலில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டுப்பத்திரங்கள் போன்ற முக்கியமான ஆவணங்களை நீர் புகாத பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கவும்.

🌀 வீட்டிற்குள் இருக்கும் மக்கள் அமைதியாக இருப்பதுடன், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும். ஏழு நாட்களுக்கு உண்டான உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

🌀 பேட்டரி, டார்ச் லைட், தீப்பெட்டி, கத்தி, கயிறு, குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டியை தயாராக வைத்திருக்கவும்.

🌀 மரங்களுக்கு கீழே வாகனங்களை நிறுத்த வேண்டாம். புயல் கரையை கடந்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம்.

🌀 வெளியில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான கட்டிடத்திலோ அல்லது அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திலோ தங்கவும்.

🌀 ஈரமாக இருப்பின் மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம்.

🌀 கேஸ் கசிவு ஏற்படாதபடி சிலிண்டரை ஆப் செய்து வைக்கவும்.

🌀 மழைவரும் சமயங்களில் வீட்டின் மேல் தளத்தில் (மொட்டை மாடி) நின்று வேடிக்கை பார்க்கக்கூடாது.

🌀 வீடுகளிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்லவும். மழை நின்ற பின்பு வெள்ளம் வடிந்த பின்பு அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்பாக செல்லவும்.

புயல் எச்சரிக்கை கூண்டு எண்ணின் விளக்கம் :

1 - காற்றழுத்த தாழ்வு பகுதி
2 - புயல் உருவாகியுள்ளது
3 - திடீர் காற்று மழை
4 - புயல் துறைமுகம் வழியே கடக்கும்
5 - இடது பக்கமாக கரையைக் கடக்கும்
6 - வலது பக்கமாக கரையைக் கடக்கும்
7 - கடுமையாகப் பாதிக்கப்படும்
8 - இடது பக்கம் மோசமான வானிலை நிலவும்
9 - வலது பக்கம் மோசமான வானிலை நிலவும்
10 - பெரும் பாதிப்பும், அழிவும் ஏற்படும்
11 - பேரழிவும் மோசமான வானிலை உச்சபட்ச எச்சரிக்கை

செவ்வாய், 13 நவம்பர், 2018

“பேட்ட” படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியானது.


“பேட்ட” படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து எப்போது படம் வெளியீடு என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் வரும் பொங்கலுக்கு படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

யாழ் வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை அதிர்ச்சியில் ஆழ்த்திய தொல். திருமாவளவன்!


யாழ் வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை அதிர்ச்சியில் ஆழ்த்திய
தொல். திருமாவளவன்!

ஈழ அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது, சிதறிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு ஜனநாயக வழியில் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லும் ஒரு தலைமை தற்போது தேவை என தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
தொல். திருமாவளவன், அதற்கு ஏற்ற வகையில் இந்த மண்ணில் இன்று எனது கண்ணுக்கு தெரிந்த தலைமையாக நீதியரசர் விக்னேஸ்வரனை பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மரநடுகையும் மலர் கண்காட்சியும் நேற்று (10.11.2018) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எனது கல்லூரி பருவத்தில் இருந்து ஈழத்தமிழரின் விடுதலை போராட்டத்துக்கு என்னால் இயன்ற வரை தொடர்ந்து பங்களிப்பு செய்து வந்துள்ளேன். 8 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இங்கு வந்துள்ளேன். ஈழ போராட்ட களத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள்.

தமிழக மண்ணில் இன்று அரசியல் வெற்றிடம் உள்ளது என விவாதம் நடக்கிறதோ அதேபோல் ஈழ மண்ணில் அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்.

அரசில் இல்லாமல் சமூக தொண்டு ஆற்றுவது என்பது கண்துடைப்பு. எமது அனைத்து நடவடிக்கைகளிலும், அசைவிலும் அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அந்த புரிதல் எமது இளைஞர்களுக்கு தேவை. இளம் தலைமுறையினர் அந்த விழிப்புணர்வினை பெற்றாக வேண்டும்.

பகைவர்களின் அசைவுகளில் கொள்கைப்பகைவர்களின் அசைவுகளில் அரசியல் உள்ளது. அதில் விழிப்புணர்வை பெற்று அரசியலில் மேலோங்கி அதை நாம் பசுமைப்படுத்த வேண்டும். பசுமை என்பது எழுச்சி, வலிமை என்று பொருள் படும்.

ஈழத்தில் இன்று அரசியல் தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. தந்தை செல்வா காலத்தில் அகிம்சை வழியில் போராடக்கூடிய அரசியல் தலைமை வலுப்பெற்றது. பின்னர், பல கட்சிகள் உருவாகின.நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்றன. 1970 களின் பின்னர் கருவி ஏந்தி போராடக்கூடிய அரசியலை நோக்கி எம்மைஇட்டுச் சென்றது. மொழியை காப்பதற்கான உணர்ச்சி தான் இன உணர்ச்சியை எமக்கு மேலோங்கச்செய்தது. அந்த உணர்வு தான் எமக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இங்கு பெரும்பான்மை தேசிய வாதம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற சொற்றொடர் மாவீரர் நாளான கார்த்திகை 27 இல் அண்ணன் பிரபாகரனின் உரையில் இடம்பெறும் கட்டாயம் இடம் பெறும். இந்த 3 சொற்தொடரும் வலுவான அரசியலை கொண்டுள்ளது.

சிங்கள என்பது மொழிவழி மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகிறது. பௌத்தம் என்பது மதவழி தேசியத்தின் ஆதிக்கத்தை உருவாக்குவது. பேரினவாதம் சிங்களவர்கள் பௌத்தர்களாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் பெரும்பான்மை சமூகமாக இருக்கிறார்கள் என்பது.

எனவே அந்த சொற்றொடரில் ஆதிக்கம் இருக்கிறது. எம்மீதான ஒடுக்குமுறை உள்ளது. பெரும்பான்மை தேசியவாத அரசியல் உள்ளது. இதில் இருந்து சிறுபான்மை சமூகமாகிய தமிழர்களின் உரிமைகளை காப்பது அல்லது விடுதலையை வென்றெடுப்பது என்பதை உணர்த்துவதற்கு நாம் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என மாவீரர் நாள் உரையில் தவறாமல் பதிவு செய்து வந்தார்.

மேலும் அவர் இந்திய அரசை விமர்சிப்பதில்லை. அந்த பேரரசு எமது விடுதலைக்கு தேவை என்பதை உணர்ந்து மாவீரர்நாள் உரை கவனமாக ஆற்றினார்.

ஆனால் இந்திய அரசு, இலங்கை அரசு, அதற்கு ஆதரவான அமெரிக்கா சீனா போன்ற பேரரசுகள் எமது கோரிக்கைகளை எந்த அளவு ஏற்றார்கள் எமது அவலக்குரல்களுக்கு எந்தளவு மதிப்பளித்தார்கள், உலக நாடுகள் ஒன்றிணைந்து இயங்கும் ஐநா பேரவை எந்த அளவு எமது கண்ணீரை துடைக்க முன்வந்தது. நாம் கொட்டிய இரத்த கறைகளை துடைக்க முன்வந்தது என்பதை நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

எம்முன்னால் இருக்கும் சவால் சிதறிக்கிடக்கும் எமது தமிழ் சமூகத்தை ஒருங்கிணைப்பது என்பது முதன்மையானது. தாயகத்தில் ஒரு பங்கு, புலம்பெயர் நாடுகளில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ள தமிழ் சமூகம் ஒரு பங்கு என தமிழர்கள் தேசிய இனம் என்ற அடிப்படையில் நாம் ஒரே அடையாளத்தை கொண்டிருந்தாலும் ஒருங்கிணைந்து இருக்கிறோமா ஒருமித்த கருத்தில் இயங்குகிறோமா என்பது எம் முன்னால் இருக்கும் சவாலாகவுள்ளது.

எனவே சிதறிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான அறிவான ஒரு தலைமை, பகைவர்களை தெளிவாக புரிந்து அவர்களின் ராஜதந்திரங்களுக்கு ஈடுகொடுத்து முறியடிக்கும் தலைமை, ஆயுதம் ஏந்தி போராட வாய்ப்பில்லை என்ற நிலையில் இந்த நாடாளுமன்ற ஜனநாயக வழியில் போராடுவதற்கு ஏற்ற ஒரு தலைமை, சமரசம் இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லும் ஒரு தலைமை எமக்கு தேவைப்படுகிறது.

அதற்கு ஏற்ற வகையில் இந்த மண்ணில் இன்று எனது கண்ணுக்கு தெரிந்த தலைமையாக விக்னேஸ்வரனை பார்க்கிறேன். நான் இதை ஒரு சார்பாக கூறுவதாக எண்ண வேண்டாம் எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் கள அனுபவம் உள்ளது.

தமிழ்த் தேசியத்தை வெறும் மொழி இன உணர்ச்சியாக பார்ப்பவன் அல்ல நான். மொழி தூய்மையில் இருந்து மட்டும் தமிழ் தேசியம் பிறந்துவிடாது. இன பற்று இன வெறியில் இருந்து தமிழ் தேசியம் பிறந்துவிடாது. இவை எல்லாம் அடிப்படை உணர்வுகள்.

மொழி உணர்வு தேவை,
உணர்வு என்பது முற்றும் போது
பற்றும் நிலையாக மாறுகிறது. அது மொழி பற்றாக மாறி மேலும் வலிமையடையும் போது மொழி வெறியாக மாறுகிறது. மொழி வெறி என்பது இன்னும் ஒரு மொழி மீது வெறுப்பில் இருந்து மொழி வெறி உருவாகிறது.

எமது மொழியை நாம் நேசிக்கிறோம் என்பது அவசியமானது. மொழி பற்று என்பது எம்மை போர்க்குணத்துக்கு இட்டுச்செல்லும் வழி. ஆனால் அது அடுத்தகட்டததை நோக்கி நகரும் போது கோட்பாட்டு அடிப்படையில் இயங்குவதாக உள்ளது.

தமிழ் தேசியம் எனும் சொற்றொடருக்குள் பிரபாகரன் தமது விடுதலை கருத்துக்களை முன்னெடுத்தார். சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற சொற்றொடரில் சிங்களத்துக்கு மாற்று தமிழ், பௌத்தத்துக்கு மாற்று இந்து, பேரினவாதத்துக்கு மாற்று சிறுபான்மைவாதம் என அவர் கணிக்கவில்லை.

சிறுபான்மை தேசிய இனமாக தமிழ் சமூகம் இருப்பதாக சொன்னார். ஆனால் தமிழ் சமூகத்தை இந்து சமூகமாக எந்தவொரு இடத்திலும் அடையாளப்படுத்தவில்லை என்பதை நாம் அரசியல் ரீதியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். தமிழ் தேசியம் என்பது மதம் சார்ந்தது அல்ல, சமய சடங்குகளோடு கொடுக்கக்கூடியது அல்ல மாறாக மக்களின் உரிமைகளோடும் மக்களின் வாழ்விடத்தின் உரிமைகளோடு, பாதுகாப்புடன் தொடர்புடையது. அதனால் தான்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற மூன்று சொற்தொடருடன் கோரிக்கை முன்வைத்தார்கள்.

எமக்கு என தாயகம் உள்ளது அது வடக்கு கிழக்கு மாகாணம், எமக்கென தேசியம் உள்ளது அது நாம் பேசும் மொழி வழி தமிழ்தேசியம், எமக்கென இறையாண்மை உள்ளது அது தான் நாம் கட்டமைக்க விரும்பும் தன்னாட்சி நிர்வாகம். இந்த புரிதலில் இருந்து இந்த இயக்கம் தான் நீண்ட நெடுங்காலம் போராடியது.

அதில் இழப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் இது எந்த காலத்திலும் ஈடுசெய்ய முடியாது. ஆனால் அது சர்வதேச பிரச்சனையாக மாறியுள்ளது. உலகநாடுகள் எமக்கு எதிராக இருந்ததை நாம் மறந்து விட முடியாது.

ஈழத்தமிழரின் இந்த விடுதலை போராட்டம் தமிழ் தேசிய விடுதலை போராட்டம் சர்வதேச அரங்கில் விவாதிக்கப்படக்கூடிய ஒன்றாக மாறிவிட்ட நிலையில் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறாமல் இனி நம்மால் அந்த இலக்கை நோக்கி ஒரு அங்கும் முன்னேற முடியாது. ஈழத்தில் இருப்பவர்கள் பயங்கரவாதிகள் என்ற பொதுக்கருத்தை உலக அரங்கில் ஏற்படுத்திவிட்டார்கள்.

இந்த கருத்தை அழிக்க வேண்டும். தமிழர்கள் அமைதியை ஜனநாயகத்தை விரும்புகிறோம் வாழ்வுரிமையை விரும்புகிறோம் எமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும், பௌத்த கலாசார முயற்சிகளை தடுக்க வேண்டும் ,என்ற கோரிக்கையை உலக அரங்கில் உரத்து சொல்வதற்கு நாடாளுமன்ற ஜனநாயக பாதையில் வெளிப்படையாக இயங்கும் ஒரு தலைமை தேவைப்படுகிறது.

தமிழ் நாட்டில் வெற்றிடத்தை நிரப்ப நடிகர்கள் ஓடிவருகிறார்கள் இந்த நிலை தமிழகத்தில் இருப்பது தான் வேதனைக்குரியது.

ஈழத்தில் தற்போது பிரபாகரன் இல்லை தந்தை செல்வா இல்லை
வேறு தலைமைகள் இல்லை,
இயக்க தலைமைகள் இல்லை வெற்றிடத்தை நிரப்பக்கூடிய கேள்வி உருவாகும் போது விடை கிடைக்கவில்லை. நேர்மையான தூய்மையான தலைமை தேவை.

இளம்தலைமுறையினருக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் அரசியல் ரீதியில் நாடாளுமன்ற ஜனநாயக வழியில் நடத்திச்செல்லவேண்டும், உலகில் எந்த தேசத்திலும் இனி ஆயுத போராட்டம் வெற்றியளிக்காது. ஆயுத போராட்டம் இன்னுமொரு பேரரசின் துணையுடன் தான் தொடங்க வேண்டும்.

எந்த அரசு வந்தாலும் அதாவது ரணிலோ மகிந்தவோ மைத்திரயோ ஆட்கள் தான் வேறு அவர்களின் கோட்பாடு ஒன்று தான் அதை மறக்கக்கூடாது. அவர்கள் பின்னால் பேரரசு இயங்குகிறது. இந்திய அரசின் ஈழத்தமிழர் தொடர்பான வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சர்வதேசத்துடன் இணக்கமா இருந்து மானத்தை இழக்காமல்
உரிமைகளை இழக்காமல்
நிலத்தை, இறையாண்மையை மீட்க எப்படி போராடப்போகின்றோம்?
அடுத்த தலைமுறையை எவ்வாறு வழிநடத்தப்போகிறோம் என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டும். இன்று எனது நம்பிக்கைக்கு உரிய நட்சத்திரம் விக்னேஸ்வரன் என நான் நம்புகிறேன். அவர் ஒரு தளிர் மாபெரும் விருட்சம் என்ற அளவு மாறுவது வரலாற்றுத் தேவை என நான் விரும்புகிறேன்.

தமிழ் தேசிய அரசியலை அடைகாத்து செல்வதற்கு இப்போது வெற்றிடம் உள்ளது. அதை நிரப்பும் தேவையை உணர்ந்து கடந்த கால கசப்புகளை மறந்து நமக்கிடையிலான விமர்சனங்களை தவிர்த்து தமிழ் சமூகத்தை ஒருங்கிணைக்க முயலவேண்டும்.

எமது ஆற்றாமையாலும் இயலாமையாலும் பகைவரை விட்டுவிட்டு நமக்குள் நம்மவர்களை விமர்சித்துக்கொண்டிருக்கிறோம்.
10 ஆண்டுகளில் இதைதான் செய்துள்ளோம்.

சிங்கள பேரினவாதத்துக்கு துணைபோனவர்கள் யார், எமக்கு எதிராக அணிதிரண்டவர்கள் யார், எமது கொள்கை பகைவர்கள் யார் என்பதை அறிய நாம் இன்னும் நுழையவில்லை அது மிக அவசியமானது.

தமிழ் தேசியம் என்பது எமது வாழ்வுரிமையுடனும் அடுத்த தலைமுறையின் பாதுகாப்புடன் தொடர்புடையது.

பேரரசுகளின் ஒடுக்கு முறையில் இருந்து விடுதலை பெறும் போராட்டத்துடன் தொடர்புடையது. வெறும் மொழி உணர்வுடன் பார்க்காது தொலைதூர பார்வையில் எமது சந்ததியின் பாதுகாப்பை உறுதி படுத்தக்கூடிய ஒரு அரசியல் என்பதை உணர்ந்து முன்னெடுத்து செல்வோம்.

விடுதலை சிறுத்தை என்பது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தாக்கத்தில் இருந்து உருவானது என்றும் தழிழீழ மக்களின் நலனுக்காக இருக்கும். ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும் என மேலும் தெரிவித்தார்.

ThanksIBC TAMIL

வியாழன், 8 நவம்பர், 2018

தியேட்டருக்கே போகவேண்டாம்... ஆத்திரத்தில் பாக்கியராஜ் வெளியிட்ட 'சர்கார்' படத்தின் முழுக்கதை


*தியேட்டருக்கே போகவேண்டாம்... ஆத்திரத்தில் பாக்கியராஜ் வெளியிட்ட 'சர்கார்' படத்தின் முழுக்கதை*

_நேற்று முதல் அனைத்து மீடியா நபர்களையும் அழைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தன் தரப்பு நியாயத்தைச் சொல்கிறேன் என்கிற பெயரில் இயக்குநர் கே. பாக்கியராஜை கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார். பதிலுக்கு பாக்கியராஜ் சும்மா இருப்பாரா? அவர் பார்க்காத திரைக்கதையா?? என்ன நடந்துச்சுன்னா... என்று துவங்கி சந்தடி சாக்கில் 'சர்கார்' படத்தின் முழுக்கதையையும் வெளியிட்டுவிட்டார்._

அவர் வெளியிட்டிருக்கும் 'சர்கார்' கதை இதுதான்.

விஜய் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர். தமிழர். ஒரு பெரிய மல்டி நேஷனல் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பவர். அப்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வருகிறார் விஜய்.
ஆர்வத்துடன் ஓட்டுப் போட வந்த விஜய்க்கு பெரும் ஏமாற்றம். கையில் அடையாள அட்டை வைத்திருந்தும் அவருடைய ஓட்டை அவருக்கு முன்பாகவே யாரோ ஒரு இந்தியனோ, தமிழனோ போட்டுவிட்டு போய்விட்டான். இதனால் கோபப்படுகிறார் விஜய். அதிகாரிகளிடம் சண்டையிடுகிறார். ஆனாலும் ஓட்டளிக்க முடியவில்லை.

இதனால் கோபமடையும் இவர் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். போராடுகிறார். அந்தத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இடையில் அத்தேர்தல் ரத்தானதால் அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார் விஜய்.

"தேர்தலில் நிற்பதும், பிரச்சாரம் செய்வதும், செலவு செய்வதும் எத்தனை பெரிய கஷ்டம் தெரியுமா. இப்போ போட்ட காசெல்லாம் போச்சு.. யார் தருவா.. உனக்கு அரசியலை பத்தி என்ன தெரியும்..? என்று அவர்களெல்லாம் விஜய்யின் தன்மானத்தைச் சீண்டிவிட.. இப்போது விஜய் அதே தொகுதியில் துணிச்சலாக சுயேட்சையாக நிற்க முடிவெடுக்கிறார். இதுதான் இடைவேளை போர்ஷன் என்கிறார்கள்.

இதற்குப் பின் அதே தொகுதியில் தேர்தல் பிரச்சாரம். விஜய்யைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்கும் சூழ்ச்சிகள். எதிர்ப்புகள்.. அடிதடி. கலாட்டா.. இது எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு களத்தில் நின்று வெற்றியும் பெற்று விடுகிறார் விஜய்.

அதிசயத்திலும் அதிசயமாக தமிழக சட்டமன்றத்தில் அப்போது தொங்கு சட்டசபை உருவாகிவிடுகிறது. ஒரேயொரு உறுப்பினர் ஆதரவு இருந்தால்தான் ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலைமை. இப்போது அந்த ஒரேயொரு சுயேட்சை உறுப்பினர் சாட்சாத் நம்ம விஜய்தான்.

விஜய்யிடம் இரு தரப்பினரும் ஆதரவு கேட்கிறார்கள். எப்படியாவது நம்ம கட்சி ஆட்சியில் இருந்தால் போதும் என்று நினைக்கும் இரு கட்சியினருமே விஜய்யையே முதல்வராக்கவும் சம்மதம் கொடுக்கிறார்கள். "விஜய் முதல்வரானால் போதும். நாங்கள் அவருக்குக் கீழ் அமைச்சர்களாக இருந்து கொள்கிறோம்." என்று இரு கட்சிகளின் தலைவர்களும் சொல்லிவிடுகிறார்கள்.

ஆனால் விஜய் கடைசி டிவிஸ்ட்டாக "நான் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு நினைச்சுத்தான் இந்தத் தேர்தலில் நின்றேன். முதலமைச்சராகணும் என்று நினைக்கவில்லை.

 இப்போது முதல்வராக ஆனேன் என்றால் என்னால் உங்களை வைத்துக் கொண்டு நல்லது செய்ய முடியாது. அதனால் நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன். அப்போதுதான் இந்த ஆட்சியின் குற்றம், குறைகளைச் சொல்லி திருத்த முடியும். ஆகவே, நல்லதொரு எதிர்க்கட்சி உறுப்பினராக எனது தொகுதி மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன்." என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.

நன்றி.சுபம்.
Dailyhunt

வெள்ளி, 2 நவம்பர், 2018

சர்கார் படத்தை வெளியிட தடை : உயர்நீதிமன்றம் அடுத்த அதிரடி


சர்கார் படத்தை வெளியிட தடை : உயர்நீதிமன்றம் அடுத்த அதிரடி

இணையதளங்களில் டி.டி.எச், கேபிள் டிவி, குறுந்தகடு போன்றவற்றில் இப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காப்புரிமை சட்டத்துக்கு எதிராக, 37 இணையதள சேவை நிறுவனங்களில் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்புள்ளதாக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் மனுதாரர் ஜோதி.
காப்புரிமை

மேலும் காப்புரிமை சட்டத்துக்கு முரணாக 3710 இணையதளங்களில் இப்படத்தை வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

மேலும் சென்னையில் உள்ள 5 கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் வெளியிட வாய்ப்புள்ளதாக வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் இணைதளங்களில் இப்படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து சர்கார் படம் இம்மாதம் 6 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.