#வைகோ_திருமாவை_புறக்கணிக்கும்_திமுக.
திருமா என்ன பெரிய வாக்கு வங்கி வைத்திருக்க போகிறார். வைகோ என்ன பெரிய வாக்கு வங்கி வெச்சிருக்க போகிறார். கம்யூனிஸ்ட்களுக்கு என்ன வாக்கு வங்கி இருக்கிறது.
ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆளும் கட்சியின் மீது கடுப்பில் இருக்கிறார்கள். ஆகவே திமுக தனியாக நின்றாலே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக தலைமைக்கு எவனோ தப்பு தப்பா சொல்லி கொடுக்குறான்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஐம்பது ஓட்டு முதல் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள் பல.. கூட்டணியை கொஞ்சம் பலப்படுத்த கலைஞர் ஆலோசனை படி மெனக்கெட்டு இருந்தாலே திமுக இன்று ஆட்சயில் இருந்திருக்க வேண்டிய கட்சி..
மீண்டும் வரும் தேர்தல்களில் அதே கூட்டணி தவறை திமுக செய்யும் என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பாஜகவை வீழ்த்த இது போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுவது நல்லது. வரும் காலங்களில் சட்டமன்ற தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடர்ந்தால் அது மக்களுக்கு நல்லது.
சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ வைகோ திருமா போன்றவர்கள் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்பதை நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை.
தமிழர்களுக்கு நாடாளுமன்றத்தில் வலுவாக பேச வேண்டிய நிறைய முக்கியமான பிரச்சினைகள் இருக்கு..வைகோ திருமா போன்றவர்கள் அதை சிறப்பாகவும் வலுவாகவும் பேசுவார்கள்..
ஆயிரம் அரசியல் முரண்கள் இருப்பினும் திருமாவும் வைகோவும் அங்கீகரிக்கப் பட்ட இடங்களில் இந்தியா முழுக்க கேட்கும் உரிமை குரல்களாக இருப்பது காலத்தின் கட்டாயம்.
பாராளுமன்றத்தில் வைகோவும் திருமாவும் இருப்பது என்பது அதிமுகவின் நாற்பது எம்பிக்கள் இருப்பதை விட உயர்வானது. அதிலும் வைகோ மூத்த பாராளுமன்றவாதி. இருபத்து நான்கு ஆண்டு கால பாராளுமன்ற அனுபவம் கொண்டவர். மூத்த அரசியல் தலைவர்களோடு பயணித்தவர். ஐம்பது ஆண்டு கால போராட்ட மற்றும் கள அரசியல் அனுபவம். தமிழர் நலன்களுக்காக எல்லா பக்கங்களிலும் வலுவான குரலாக ஒலிப்பவர்.
திருமாவின் நாடாளுமன்ற அனுபவம் குறைவு எனினும் இன்றைக்கு திருமாவின் ஆளுமை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
ஆகவே மதிமுக கூட்டணியில் இல்லை சிறுத்தைகள் கூட்டணியில் இல்லை போன்ற எகத்தாளங்கள் திமுகவுக்கு அழிவையே தேடித்தரும். மக்கள் நலக்கூட்டணி ஒரு மொக்கை கூட்டணியாக இருந்திருக்கலாம்.
ஆனால் திமுகவின் இது போன்ற எகத்தாளங்களால் இங்கே என்ன காம்பினேசன் வேணும்னாலும் அமையலாம். திமுக ஒன்றும் வீழ்த்தப் பட முடியாத கட்சியாக இல்லை.
தொடர் வெற்றிகளை குவிக்கும் கட்சியும் இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முட்டை தான் கிடைத்தது. தனி ஒரு கட்சியாக முப்பத்தேழு தொகுதிகளில் வென்றது அதிமுக. பாமக மற்றும் பிஜேபி தலா ஒரு சீட் பெற்றது...
வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி விடலாம் திருமாவை மட்டுப் படுத்தி விடலாம் என்று கனவு காணுவீர்கள் என்றால் அல்லது இது தான் அரசியல் சாணக்கியத் தனம் என்பீர்கள் என்றால் தமிழ்நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமா உருப்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
வைகோவின் வயதால் அவர் நீண்ட காலம் அரசியலில் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் திருமாவுக்கு அந்த வாய்ப்பு இருக்கு.
ஒரு மாபெரும் கட்சியில் தகப்பனின் அடையாளத்தில் வெற்றியில் மற்றவர்கள் தயவில் ஜால்ராவில் வளர்ந்தவன் அல்ல திருமா..
அவன் சுயம்பு. துண்டுச் சீட்டு ஸ்டாலின்களை விட நூறு மடங்கு திறமையாளன். வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து அத்தனை அடிகளையும் வலிகளையும் தாங்கி தாண்டி வந்தவன். தமிழக அரசியல் வரலாற்றில் திருமா போன்ற தீர்க்க சிந்தனை உள்ளவர்கள் மேலே வர வேண்டும்.
எவன் தடுத்தாலும் காலம் கனியும் போது மேலே வருவான் எங்கள் திருமா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக