மக்களே உஷார்... நெருங்கி வரும் கஜா புயல் : பாதுகாப்பு குறிப்புகள் !!
🌀 மக்கள் புயலை கண்டு அஞ்ச வேண்டாம். பதற்றப்பட வேண்டாம். கஜா புயல் தீவிர புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பாதுகாப்பிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
🌀 கஜா புயல் பாம்பன் மற்றும் கடலூருக்கும் இடையே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
🌀 காலை 9.30 நிலவரப்படி கஜா புயல் நாகையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
🌀 இன்று அதிகாலை மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னைக்குட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. காலை சுமார் 9 மணியில் இருந்து சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
🌀 மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நாகையை நோக்கி நகர்கிறது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
🌀 வானொலி, தொலைக்காட்சி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலி மற்றும் சமூகவலைதள பக்கங்களை பின்பற்றவும்.
🌀 முதலில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டுப்பத்திரங்கள் போன்ற முக்கியமான ஆவணங்களை நீர் புகாத பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கவும்.
🌀 வீட்டிற்குள் இருக்கும் மக்கள் அமைதியாக இருப்பதுடன், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும். ஏழு நாட்களுக்கு உண்டான உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.
🌀 பேட்டரி, டார்ச் லைட், தீப்பெட்டி, கத்தி, கயிறு, குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டியை தயாராக வைத்திருக்கவும்.
🌀 மரங்களுக்கு கீழே வாகனங்களை நிறுத்த வேண்டாம். புயல் கரையை கடந்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம்.
🌀 வெளியில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான கட்டிடத்திலோ அல்லது அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திலோ தங்கவும்.
🌀 ஈரமாக இருப்பின் மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம்.
🌀 கேஸ் கசிவு ஏற்படாதபடி சிலிண்டரை ஆப் செய்து வைக்கவும்.
🌀 மழைவரும் சமயங்களில் வீட்டின் மேல் தளத்தில் (மொட்டை மாடி) நின்று வேடிக்கை பார்க்கக்கூடாது.
🌀 வீடுகளிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்லவும். மழை நின்ற பின்பு வெள்ளம் வடிந்த பின்பு அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்பாக செல்லவும்.
புயல் எச்சரிக்கை கூண்டு எண்ணின் விளக்கம் :
1 - காற்றழுத்த தாழ்வு பகுதி
2 - புயல் உருவாகியுள்ளது
3 - திடீர் காற்று மழை
4 - புயல் துறைமுகம் வழியே கடக்கும்
5 - இடது பக்கமாக கரையைக் கடக்கும்
6 - வலது பக்கமாக கரையைக் கடக்கும்
7 - கடுமையாகப் பாதிக்கப்படும்
8 - இடது பக்கம் மோசமான வானிலை நிலவும்
9 - வலது பக்கம் மோசமான வானிலை நிலவும்
10 - பெரும் பாதிப்பும், அழிவும் ஏற்படும்
11 - பேரழிவும் மோசமான வானிலை உச்சபட்ச எச்சரிக்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக