EXCLUSIVE... வெளியானது 2.0 விமர்சனம்..!
#HIGHLIGHTS
துபாய் சென்சார் போர்டு மெம்பர் உமைர் சந்து சற்றுமுன்னர் ‘2.0’ படம் தனக்கு ஏற்படுத்திய அனுபவம் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் பகிர்ந்து வருவதை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் விமர்சனமாக இங்கே முன்வைக்கிறோம். வழக்கமான விமர்சனம் நாளை...
துபாய் சென்சார் போர்டு மெம்பர் உமைர் சந்து சற்றுமுன்னர் ‘2.0’ படம் தனக்கு ஏற்படுத்திய அனுபவம் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் பகிர்ந்து வருவதை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் விமர்சனமாக இங்கே முன்வைக்கிறோம். வழக்கமான விமர்சனம் நாளை...
’2.0’ படத்தை ஒரு ஆண்ட்ராய்டு புரட்சி என்றுதான் சொல்லவேண்டும். இதுநாள் வரை தென்னிந்திய சினிமாவின் ராஜாளியாக இருந்த ஷங்கரை இப்படம் ஒரு தரமான இந்திய ராஜாளியாகக் காட்டியுள்ளது. த்ரில்லிங்கான கதைக்கரு, யாரும் நினைத்துப்பார்க்கமுடியாத உயர்தரமான கற்பனை, உலகத்தரம் வாய்ந்த சவுண்ட் எஃபெக்ட்ஸ் என்று இந்தப்படம் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் ஒரு இந்தியப்படம்.
இப்படத்தின் திரைக்கதை முதல் காட்சியிலிருந்தே பார்வையாளர்களைக் கட்டிப்போட்டுவிடுகிறது. இறுதிக்காட்சி வரை தொய்வு என்ற ஒன்றுக்கே இடம் இல்லாமல் இக்கதையை பின்னியிருப்பது ஷங்கரின் சாமர்த்தியம். இன்னொரு பக்கம் இதுவரை உருவான இந்திய சயின்ஸ் ஃபிக்சன்களிலேயே பெஸ்ட் என்று மிக உறுதியாக இப்படத்தை சொல்லமுடியும். இனி உருவாகவிருக்கும் சயின்ஸ் ஃபிக்சனுக்கெல்லாம் ‘2.0’ ஒரு பாடப்புத்தகம்.
எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி, அக்ஷய் குமாரின் பாத்திரப்படைப்புகளும், இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இன்னும் சில கேரக்டர்களும் நம் மனதை விட்டு அகல பல ஆண்டுகள் ஆகும். வசூலிலும் இப்படம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை’ என்று 5 ட்விட்டர் பதிவுகளின் வாயிலாக ‘2.0’ குறித்து எழுதியிருக்கிறார் உமைர் சந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக